Monday, January 15, 2007

உலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்

மகர சங்க்ராந்தி என்ற பெயரில் பாரத நாடு முழுதும் கொண்டாடும் திருநாள் பொங்கல். பருவ மாற்றத்தை சூரியதேவனின் வடக்கு முகப் பயணபாக உருவகித்த நம் முன்னோர் இந்த இயற்கைத் திருவிழாவைப் பெரும் களிப்புடன் கொண்டாடும் மரபை உருவாக்கினர். தமிழகமும், ஆந்திரமும், கர்நாடகமும் அறுவடைத் திருநாள் கொண்டாடும் இதே நாளில் தான் பஞ்சாபிய உழவர்களும் "லோஹ்ரி" என்ற தங்கள் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். வட மாநிலங்கள் முழுவதும் மக்கள் நதிகளில் நீராடி ஞாயிறு போற்றுவதைப் பார்க்கலாம். உலகம் முழுதும் வாழ்ந்த பாகன் (pagan) மதங்கள் ஒரு காலத்தில் கொண்டாடி வந்த சூரியத் திருநாளின் மரபுகளோடு இயைவதால் உலகின் ஆதித் திருநாளாகவும் ஆகிறது.

தமிழகத்தில் வெல்லம், பால், புத்தரிசி என்றால் மகாராஷ்டிரத்தில் எள்ளும், வெல்லமும் (Til-Gul), கர்னாடகத்தில் எள்ளு, பெல்லா. எல்லா இடங்களிலும் கரும்பு உண்டு. எல்லாமே இனிப்பானவை தான். இப்படிப் பலவிதமான கொண்டாடும் முறைகள் வானவில் திருவிழாவாக இதைக் கொண்டாடினாலும் பண்டிகையின் கருப் பொருள் ஒன்றே தான்.

கதிரோனின் கவின் ஒளி கண்டு
கண் கூசி நின்றிடவில்லை
காயத்ரி மந்திரம் சொல்லிற்று நம் வேதம்.

காவிரி நாடனின் திகிரியைக்
கதிரோனின் பரிதிச் சக்கரமாகக் கண்டு
ஞாயிறு போற்றிற்று நம் காவியம்.

பெற்று வளர்த்த பூமித் தாயை
நிலமென்னும் நல்லாள் என்று
போற்றி வணங்கியது நம் தெய்வீக மரபு.

இயற்கையின் வர்ண ஜாலங்களில் எல்லாம்
இறைமையை உணர்த்திற்று
நம் சமயம், கலாசாரம்.



பிரபஞ்சம் முழுவதும், இயற்கை முழுவதும் வியாபித்திருக்கும் சக்தியை வியந்து போற்றி அதன் உணர்வில் ஒன்று படுதல் என்பது தான் பொங்கல் பண்டிகையின் கருப் பொருள் . அதன் தத்துவ, கலாசாரப் பின்னணி இந்து ஆன்மிக, ஞான, பக்தி மரபில் தான் உள்ளது.

சகோதரர் திரு. ஜோ கத்தோலிக்கர்கள் பொங்கல் கொண்டாடுவதைப் பற்றி எழுதியிருக்கிறார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. .. தான் பொங்கல் கொண்டாடுவது சாத்தானின் தூண்டுதலால் என்று கிறித்தவ இறையியலை யாராவது முன் நிறுத்தினால் இல்ல இல்ல அது இந்துப் பண்டிகையே இல்லங்க என்று சொல்லிக் குழப்பலாம் என்றோ என்னவோ பொங்கல் இந்துப் பண்டிகையே அல்ல என்று அந்தப் பதிவில் ஜல்லி யடிக்கிறார். மதம் வேறு, கலாசாரம் வேறு என்று அவர் கூறுவதை முழுமையாக ஒப்புக் கொள்ள முடியாது. இரண்டுக்கும் நடுவில் உள்ள எல்லை மிகவும் நெகிழ்ச்சித் தன்மை உடையது. மதம் மாறிவிட்டாலும், அவரது கிறித்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கலாசாரக் கூறுகளை விடாமல் கடைப் பிடிப்பது மிகவும் பாரட்டுக்குரிய விஷயம். இந்திய தேசியத்தை வலுப்படுத்தும் இந்த கலாசாரப் போக்கு வரவேற்கத் தக்கது.

இந்து பண்டிகை என்பதற்காக அல்ல "தமிழர் திருநாள்" என்பதற்காக பொங்கல் கொண்டாட வேண்டும் என்று ஒரு கருத்து போகிறது. வங்காளத்தில் உள்ள இந்துக்கள் அல்லாதவர்களும் துர்கா பூஜாவை இதே போல் கொண்டாடுகின்றனர், மகாராஷ்டிர விநாயக சதிர்த்தி, ஆந்திர உகாதியும் இப்படியே.. பல மாநிலங்களில் தீபாவளி, ஹோலி, தசராவையும் அந்த மண்ணின் திருவிழாக்கள் என்று அங்கங்கே உள்ள இந்துக்கள் அல்லாதவர்களும் கொண்டாடுகின்றனர்.. எனவே, இது பொங்கல் பண்டிகைக்கு மட்டும் உரியதான தனித்தன்மை அல்ல. அப்படியானால் இவை எதுவுமே இந்துப் பண்டிகைகள் அல்ல என்று ஆகி விடுமா? கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சகோதரர் திரு. நல்லடியார் எழுதியிருப்பது இதற்கு நேர்மாறானது. மிக இறுக்கமான, வெறித்தனமான சில இஸ்லாமியக் கருத்துக்களை முன்வைத்து ஏன் முஸ்லீம்கள் பொங்கல் கொண்டாடக் கூடாது என்று ரொம்ப மெனக்கெட்டு வாதிடுகிறார். இதே சிந்தனைப் போக்கில் போனால் முஸ்லீம்கள் ஏன் திருக்குறள் படிக்கக் கூடாது, ஏன் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடக் கூடாது, ஏன் "சத்யமேவ ஜயதே" என்று பொறித்த இந்திய தேசியச் சின்னத்தை மதிக்கக் கூடாது (எனது பழைய வந்தே மாதரம் பதிவில் இவை பற்றி விரிவாக) என்றெல்லாம் மிக எளிதாக கருத்துக்கள் எடுத்து வைக்கலாம். முஸ்லீம்கள் மத்தியில் இத்தகைய போக்கு பரவுவது மிகவும் கவலைக்குரியது. கண்டிக்கப் பட வேண்டியது.

இந்துக் கலையான யோகா இன்று உலகம் முழுவதும் அதன் பயன்களுக்காகப் பலராலும் பயிலப் படுகிறது. இந்து மருத்துவமான ஆயுர்வேதமும் அப்படியே. இத்தாலிய/அமெரிக்க உணவான பிட்சாவை சாப்பிட்டு நான் இத்தாலியனாகவோ/அமெரிக்கனாகவோ, சீன நூடுல்சை சாப்பிட்டு சீனனாகவோ ஆகிவிட மாட்டேன். அது போலத் தான் இதுவும். ஆனால், நான் பாதுகாப்பாக உணர்வதற்காக அது சீன உணவே அல்ல என்று சொன்னால் எப்படிருக்கும்?? அது போலத் தான் பொங்கல் இந்துப் பண்டிகை அல்ல என்ற வாதங்கள்!

பொங்கல் இந்துப் பண்டிகை தான். அதனை அப்படி அழைத்தே கிறித்தவர்கள் கொண்டாடினால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது.

"இந்து" என்ற சொல்லோடு தொடர்புடைய எந்த உயர்வான விஷயமும் இருக்க முடியாது, அது மோசமானது என்று பிரிட்டிஷ் காலனிய காலங்களிலிருந்து பரப்பப் பட்டு வரும் துவேஷப் பிரசாரம் தான் இதன் பின்னணியில் உள்ளது. இந்து மதத்தின் மேலான, அற்புதமான விஷயங்களையெல்லாம் (யோகா, பாரம்பரிய இசை, பரதம் முதலான நடனங்கள், சிற்பம், இலக்கியம்) தனித்தனியாகப் பிய்த்து இவற்றையெல்லாம் அனாதையாக்கி சிறு சிறு குழுக் கலாசாரம் என்று அடையாளப் படுத்துவது.. அதே சமயம் சாதி வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள், பிற்போக்குத் தனம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி இது தான் இந்து மதம் என்று முத்திரை குத்தித் திட்டிக் கொண்டிருப்பது! இந்தப் பிரசாரத்தினால் மூளைச் சலவை செய்யப் பட்ட மன நிலையின் வெளிப்பாடு தான் "பொங்கல் இந்துப் பண்டிகை அல்ல" என்பது..

பொங்கல் தமிழர் திருநாளாம். அதாவது இந்தியாவில், தென்கோடியில் வேறு எதோடும் சம்பந்தமில்லாமல் தமிழர் என்று ஒரு கூட்டம் மட்டும் அதைக் கொண்டாடுமாம்.. பக்கத்து மாநிலங்கள் கூட அதைக் கொண்டாடுவதில்லையாம் ! அது வேறு பண்டிகை சங்கராந்தியாம்.

ஆனால், கிறிஸ்துமஸ் ? அது உலகத் திருநாள்! ரம்ஜான்? அதுவும் உலகத் திருநாள் (மலேசியாவில் ஹரி ராய பூஸா என்ற பெயரில் அது கொண்டாடப் பட்டால் கூட!!) இந்து மதத்தின் கூறுகளைத் தனிமைப் படுத்தி அவற்றுக்கு சின்னத் தனம் தரும் அரசியல் இது என்பது தெளிவாகப் புரிகிறதல்லவா? இந்து மதம் உலக மதம். இந்துப் பண்டிகைகள் உலகப் பண்டிகைகளே.





உலகம் முழுதும் சுற்றி இந்து தர்மத்தின் ஆன்மீக ஒளியை சுடர்விடச் செய்த ஞான சூரியன் சுவாமி விவேகானந்தர் பிறந்ததும் பொங்கல் திருநாள் அன்று தான். என்ன பொருத்தம்!

"செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியே
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக!"

மங்கலம் நல்கும் இம்மறைமொழி கொண்டு
எங்கள் உலகோர் பொங்கிடும் பொங்கல்!

உங்கள் வீட்டிலும், எங்கள் வீட்டிலும்
பொங்குக பொங்கல்! தங்குக செல்வம்!

வறுமை ஒழிக, வான்மழை பொழிக !
பொறுமைக் குணத்தைப் புவியோர் போற்றுக!

உழவும் தொழிலும் ஓங்கி வளர்க !
கழுகுக் கரசன் கனிவுடன் வாழ்த்து.

அனைவருக்கும் இனிய உலகத் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்!

66 comments:

  1. பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Anonymous8:54 PM

    excellent post...

    ReplyDelete
  3. Romba sirantha karuthukal. vazthugal.

    ReplyDelete
  4. எழில், அனானி,எஸ்.ஐ, கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  5. ஜடாயு அய்யா,

    அற்புதமான போஸ்ட். நன்றி.
    உங்களுக்கும்,உங்கள் குடும்பத்துக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    பாலா

    ReplyDelete
  6. பொங்கலோ பொங்கல்

    பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    மிக நல்ல சிந்தனைகள்.

    ReplyDelete
  7. அப்புடிப் போடு,

    பொங்கலையும் முதுகெலும்பில்லாத இந்துக்கள் secularize செய்கின்றனர் அல்லது செய்யப் பார்க்கின்றனர்.

    ஏதோ இந்த "சிறுபான்மையினர்" பிரிந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில். சன் டீவியிலும் செய்திக்குச் செய்தி தமிழர் திருநாளாம் பொங்கலை ஒரூ பொதுப் பண்டிகையாக மக்கள் கூடிக் கொண்டாடினர் என்றெல்லாம் ஜல்லிகள் அடித்தார்கள்.

    எதற்காக இந்த வெக்கங்கெட்ட செயல் ?
    ஏன் இந்துக்கள் பண்டிகை என்று சொல்ல வாய் வரமாட்டேன் என்கிறது ?

    பெருமையுடன் சொல்லவேண்டும் நாம் இந்துக்கள், இது நம் பண்டிகை என்று.

    இது அரவிந்தனின் பதிவில் எழுதிய பின்னூட்டம். அதுவே இங்கும் பொருத்தமாக உள்ளது.

    ReplyDelete
  8. Anonymous11:41 PM

    ஜடாயு,

    பாகன் மதத்தில் கொண்டாடப்பட்டிருப்பதால், அதன் தொடர்ச்சிதான் "மகர சங்கராந்தி" என்று சொல்ல வருகிறீர்களா?

    தமிழர் பொங்கலுக்கும், மகர சங்கராந்திக்கும் கிட்டத்தட்ட ஒரே நாளில் வருவது தவிர, பெரிதும் ஒற்றுமை இருப்பதாக தெரியவில்லையே? ஏன்?

    ReplyDelete
  9. இன்பம் பொங்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!

    //செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியே
    எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக//

    ஜ்யோதிர் கமய

    //வறுமை ஒழிக, வான்மழை பொழிக !
    பொறுமைக் குணத்தைப் புவியோர் போற்றுக!//

    பொறுமை போற்றும் குணம் நிச்சயம் எல்லாரும் வேளாண் மக்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்!

    நல்ல பொங்கல் கவிதை,ஜடாயு சார்!
    எளிமையாக இயல்பாக கவிதை எழுதறீங்க!
    அது சரி, எங்கே நம் கண்ணன் பாட்டுக் கவிதை? என்று கண்ணன் கேட்கச் சொன்னான் :-))))

    ReplyDelete
  10. Congratulations! Very informative. //இந்து மதத்தின் மேலான, அற்புதமான விஷயங்களையெல்லாம் (யோகா, பாரம்பரிய இசை, பரதம் முதலான நடனங்கள், சிற்பம், இலக்கியம்) தனித்தனியாகப் பிய்த்து இவற்றையெல்லாம் அனாதையாக்கி சிறு சிறு குழுக் கலாசாரம் என்று அடையாளப் படுத்துவது.. அதே சமயம் சாதி வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள், பிற்போக்குத் தனம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி இது தான் இந்து மதம் என்று முத்திரை குத்தித் திட்டிக் கொண்டிருப்பது! இந்தப் பிரசாரத்தினால் மூளைச் சலவை செய்யப் பட்ட மன நிலையின் வெளிப்பாடு தான் "பொங்கல் இந்துப் பண்டிகை அல்ல" என்பது.. // அழகான, ஆணித்தரமான கருத்துக்கள். உங்கள் சிந்தனைகள் எப்போதும் போல் "எம் தந்தையர் நாடு எனும் போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே" என்று ஒருமைப்பாடு சிந்தனைகள். ஜெய் ஹிந்த!

    ReplyDelete
  11. // பாகன் மதத்தில் கொண்டாடப்பட்டிருப்பதால், அதன் தொடர்ச்சிதான் "மகர சங்கராந்தி" என்று சொல்ல வருகிறீர்களா? //

    அதில் சந்தேகம் என்ன? winter solastice எனப்படும் இந்த பருவநிலை மாற்ற நாள் உலகின் எல்லா பண்டைய இயற்கை வழிபாட்டு சமயங்களில் இருந்தது. அது தான் சங்க்ராந்தியாக ஆனது. "சங்க்ராந்தி" (சங்கராந்தி என்பது தவறு) என்பதற்கு இயக்கம், இடமாற்றம் என்று பொருள்.

    // தமிழர் பொங்கலுக்கும், மகர சங்கராந்திக்கும் கிட்டத்தட்ட ஒரே நாளில் வருவது தவிர, பெரிதும் ஒற்றுமை இருப்பதாக தெரியவில்லையே //

    இதற்குப் பெயர் தான் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது ! விவசாயத்திற்கும், ஜோசியத்திற்கும் உள்ள தொடர்பு எல்லாருக்கும் தெரிந்தது. ஜோசியத்தின் மூலமாக பழைய வானசாஸ்திர அறிவு மக்களை எட்டியது இதற்குக் காரணமாக இருக்கலாம். அதனால் சூரியனின் ராசி சஞ்சாரம், மழை, உழவு இவற்றுக்கு அதோடு உள்ள தொடர்பு இவற்றை தமிழகம் மட்டுமல்ல, பாரதநாடு முழுதும் உள்ள விவசாயிகள் அறிந்திருந்தனர். அதனால் தான் இந்த நாளின் கீழ்க்கண்ட விஷயங்கள் எல்லா மாநிலப் பண்டிகைகளீலும் உண்டு..
    - அறுவடைத் திருநாள்
    - சூரியனைப் போற்றுதல்
    - புது தானியத்தை கலத்தில் இட்டுப் பொங்கும் வழக்கம் கர்நாடகம், ஆந்திராவில் உள்ளது (தமிழ் நாட்டில் இருப்பதுபோல இந்தயா முழுதும் அதே மாதிரி பானை வைத்தால் தான் அது ஒற்றுமை என்று சொல்லுவீர்களா?)
    - மாடுகளை இந்த நாளில் வழிபடுதல்
    - ஜல்லிக் கட்டு போன்று மாடுகள் நெருப்பைத் தாண்டும் "கிச்சு ஹஸிவுது" என்னும் விளையாட்டு கர்நாடகத்தில் பிரபலம்.

    ReplyDelete
  12. பாலா, சிவா, வஜ்ரா - மிக்க நன்றி. பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. // //செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியே
    எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக//

    ஜ்யோதிர் கமய
    //

    கண்ணபிரான், இது அந்த மந்திரம் அல்ல. "தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோ ன: ப்ரசோதயாத்" என்னும் காயத்ரி மந்திரத்தின் நேரடி மொழியாக்கம்..
    அதுவும் என்னுடையதல்ல.

    நம் முண்டாசுக் கவிஞன் பாரதியுடையது. பாஞ்சாலி சபதத்தில் மாலை னேர வருணனை என்ற பகுதியில் இந்த மந்திரத்தை அழகாக அமைத்து பாரதி பாடியிருக்கிறார்!

    // நல்ல பொங்கல் கவிதை,ஜடாயு சார்!
    எளிமையாக இயல்பாக கவிதை எழுதறீங்க! //

    தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

    // அது சரி, எங்கே நம் கண்ணன் பாட்டுக் கவிதை? என்று கண்ணன் கேட்கச் சொன்னான் :-)))) //

    வருகிறேன், வருகிறேன்.. நேரமே நேரமே நீ எங்கே? :))

    ReplyDelete
  14. // உங்கள் சிந்தனைகள் எப்போதும் போல் "எம் தந்தையர் நாடு எனும் போதினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே" என்று ஒருமைப்பாடு சிந்தனைகள். ஜெய் ஹிந்த! //

    கண்ணன் ஐயா, மிக்க நன்றி. தங்களது இந்தச் சான்றிதழும் ஆசிகளும் என் சிந்தனைகளுக்கு இன்னும் வலு சேர்க்கும். ஊக்கம் அளிக்கும்.

    ReplyDelete
  15. ////இல்ல இல்ல அது இந்துப் பண்டிகையே இல்லங்க என்று சொல்லிக் குழப்பலாம் என்றோ என்னவோ பொங்கல் இந்துப் பண்டிகையே அல்ல என்று அந்தப் பதிவில் ஜல்லி யடிக்கிறார்.//

    ஜடாயு,
    மன்னிக்கவும் .நான் சொல்லாததை அல்லது நினைக்காததை நீங்களாக கற்பனை பண்ணினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

    உள்நோக்கம் வைத்து பேசுவது,எழுதுவது என் வழக்கம் அல்ல.

    உங்களிடம் அனுமதி வாங்கித் தான் நான் பொங்கல் கொண்டாட வேண்டுமென்று ஒன்றும் அவசியம் இல்லை .

    ReplyDelete
  16. தீபாவளியன்று பெண்களும் குழந்தைகளும் குழுமும் கடைவீதிகளில் குண்டு வைத்து அந்தக் காபிர்களைக் கொல்வதுபோல், பொங்கலின் போது பொதுஇடத்தில் குண்டு வைக்காமல் இருக்கிறார்களே என்று எண்ணி நிம்மதியடைந்தேன்- அரவிந்தன் நீலகண்டனின் பதிவைப்பார்க்கும் வரை.

    தோப்பில் முகமது மீரானின் "கடலோர கிராமத்தின் கதை"யில் மதராசாவின் கரும்பலகையில் தமிழில் எழுதியதால், "காபிர்" மொழியில் எழுதியதற்காக அக்மார்க் இஸ்லாமிய வாத்தியார் அடிக்க வருவார். அதுபோலவே நல்லடியாரும் காபிர்களின் பண்டிகையை முஸ்லீம்கள் கொண்டாடக்கூடாது என ஒரு தீவிர இஸ்லாமிஸ்டின் வஹாபித்தன நேர்மையுடன், அபு முஹை போன்ற "மென்மையான மார்க்க அறிஞர்களின்" ஆதரவுடன், கூறியிருக்கிறார். புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

    சட்டியில் இருப்பது அகப்பையிலே; புத்தியில் இருப்பது வார்த்தையிலே.

    பொங்கல் வாழ்த்துக்கள் ஜடாயு. (உங்களுக்கு மரபுக்கவிதை நன்றாக வருகிறது).

    ReplyDelete
  17. ///பெருமையுடன் சொல்லவேண்டும் நாம் இந்துக்கள், இது நம் பண்டிகை என்று.///

    மிகவும் கேவலமான சிந்தனை...

    தமிழர் திருநாள் என்று எல்லோரும் கொண்டாடினால் ஆர்.எஸ்.எஸ் கு ஏன் எரியுது ? இந்து அல்லாதவர்கள் கொண்டாட கூடாது என்பது மாதிரி இருக்கு...

    ReplyDelete
  18. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    http://kailaasam.blogspot.com/2007/01/blog-post.html

    ReplyDelete
  19. ஜோ / Joe said...

    // மன்னிக்கவும் .நான் சொல்லாததை அல்லது நினைக்காததை நீங்களாக கற்பனை பண்ணினால் அதற்கு நான் பொறுப்பல்ல. //

    ஜோ, நீங்கள் உங்கள் பதிவில் எழுதியதை அப்படியே கீழே தருகிறேன்.
    ---------

    "என்ன தம்பி! நாங்க தானே உங்களுக்கு தரணும் ..நீங்க எப்படி பொங்கல் போட்டீங்க?"..கொஞ்ச நேரம் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

    "ஏன்?"

    "இல்ல..நீங்க கிறிஸ்தவங்களாச்சே"

    "அதுக்கு !. பொங்கல் இந்து பண்டிகைன்னு உங்களுக்கு யார் சொன்னது? பொங்கல் .உழவர் திருநாள் ..அது மட்டுமல்ல ..தமிழர் திருநாள்.. உங்கள பத்தி தெரியாது ..நாங்கள்ளாம் தமிழர்கள் "

    கொஞ்சம் வியப்பாக பார்த்தார் ..அவரிடம் அதிகம் பேசாத என்னிடம் அவர் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார் .

    ------

    சிரத்தையுடன் பொங்கல் கொண்டாடும் ஒரு தமிழ் இந்துவின் தமிழ் உணர்வுகளைக் கேள்வியாக்குவது போல கேலி செய்து, "பொங்கல் இந்துப் பண்டிகைன்னு யார் சொன்னது" என்றும் கேட்டிருக்கிறீர்கள்.

    // உள்நோக்கம் வைத்து பேசுவது,எழுதுவது என் வழக்கம் அல்ல. //

    வாழைப்பழத்தில் ஊசி அல்ல, சிலுவையே ஏற்றுகிறீர்கள்! நடத்துங்க.

    // உங்களிடம் அனுமதி வாங்கித் தான் நான் பொங்கல் கொண்டாட வேண்டுமென்று ஒன்றும் அவசியம் இல்லை //

    அப்படி நான் எங்கே சொன்னேன்? தாராளமாகப் பொங்கல் கொண்டாடுங்கள். ஆனால் மேலே சொன்ன அரசியல், மற்றும் போலி கலாசார உணர்வோடு அல்ல. உண்மையான உள்ளத்தோடு இயற்கையின் அழகையும் தெய்வீகத்தையும் வாழ்த்து வணங்கிக் கொண்டாடுங்கள். அதைத் தான் சொல்ல வருகிறேன்.

    ReplyDelete
  20. செந்தழல் ரவி said...
    //
    ///பெருமையுடன் சொல்லவேண்டும் நாம் இந்துக்கள், இது நம் பண்டிகை என்று.///

    மிகவும் கேவலமான சிந்தனை...
    //

    நாங்கள் இந்துக்கள் என்று பெருமையுடன் சொல்வதே உங்களைப் பொறுத்தவரை கேவலமான சிந்தனையா ரவி? சபாஷ்!

    // தமிழர் திருநாள் என்று எல்லோரும் கொண்டாடினால் ஆர்.எஸ்.எஸ் கு ஏன் எரியுது ? //

    அது தமிழர் திருநாள் அல்ல என்று யார் சொன்னது? தமிழர், தெலுங்கர், கன்னடர் எல்லாருக்கும் திருநாள் தான்! இப்படித் "தமிழர் திருநாள்" என்று சொல்லிக் குறுக்கி இதை லோக்கல் பண்டிகையாகக் கீழிறக்கும் அரசியலைத் தான் சாடுகிறேன்.

    // இந்து அல்லாதவர்கள் கொண்டாட கூடாது என்பது மாதிரி இருக்கு... //

    அல்லவே அல்ல. ஏனென்றால் இது இயற்கையைப் போற்றும் உன்னதத் திருநாள் - இந்து சிந்தனை, இந்து ஆன்மிகம், இந்து மக்கள் உருவாக்கி வளர்த்தெடுத்த திருநாள்.. யோகம் போல, பரதம் போல. இந்த உண்மையை வேண்டுமென்றே மறைத்துத் திரிக்கப் பார்க்கும் போக்கைக் கண்டிக்கத் தான் இந்தப் பதிவு.

    ReplyDelete
  21. மிக்க நன்றி விஷ்வா அவர்களே. உங்கள் பதிவில் நல்லடியாருக்கு அளித்திருந்த பதிலைப் படித்தேன். மிக மென்மையாக, தெளிவான முறையில் தங்கள் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  22. //சிரத்தையுடன் பொங்கல் கொண்டாடும் ஒரு தமிழ் இந்துவின் தமிழ் உணர்வுகளைக் கேள்வியாக்குவது போல கேலி செய்து, "பொங்கல் இந்துப் பண்டிகைன்னு யார் சொன்னது" என்றும் கேட்டிருக்கிறீர்கள். //

    அவர் சிரத்தையுடன் பொங்கல் கொண்டாடுவது பற்றி எனக்கு எதுவும் இல்லை .ஆனால் நான் பொங்கல் கொண்டாடுவது பற்றி "நீங்க கிறிஸ்தவங்களாச்சே" -ன்னு அவர் கேலி பண்ணும் போது அது இந்துக்களுக்கு மட்டும் உரியதல்ல என புரிய வைப்பதில் தவறு இல்லை.

    பொங்கல் தமிழர்களின் திருநாள் .இந்துக்கள் அவர்கள் முறைப்படி கொண்டாடுகிறார்கள் .நான் என் முறைப்படி கொண்டாடுகிறேன் .இப்படி கொண்டாடினால் தான் பொங்கல் என்று சொல்ல நீர் யார் ?

    ReplyDelete
  23. // பொங்கலின் போது பொதுஇடத்தில் குண்டு வைக்காமல் இருக்கிறார்களே என்று எண்ணி நிம்மதியடைந்தேன்- அரவிந்தன் நீலகண்டனின் பதிவைப்பார்க்கும் வரை.
    //

    ஆம், நானும் படித்தேன். மிகவும் வருத்தம் தரும் செய்தி.

    // சட்டியில் இருப்பது அகப்பையிலே; புத்தியில் இருப்பது வார்த்தையிலே. //
    :))

    // பொங்கல் வாழ்த்துக்கள் ஜடாயு. (உங்களுக்கு மரபுக்கவிதை நன்றாக வருகிறது). //

    மிக்க நன்றி அருணகிரி.

    ReplyDelete
  24. ஜடாயு,

    பொங்கல் வாழ்த்துக்கள்.

    நல்ல பதிவு. நல்ல கருத்துக்கள்.

    இந்துமதத்தின் சூரிய நகர்வு, சூரியன் - விவசாயி தொடர்பு, சூரியன் மழை, பயிர் சாகுபடித் தொடர்பு, மழை-வெயில்- வானிலை - வானசாஸ்திரத் தொடர்பு... எல்லாவற்றுக்குமான நன்றி நவிலும் மகர ஸங்கராந்தி - பொங்கல் பண்டிகை இந்தியப் பாரம்பரியப் பண்டிகை. இந்தியப் பாரம்பரிய வாழ்வியல் சனாதன தருமம். பொங்கல் பண்டிகை சனாதன தருமத்தின் கொண்டாட்டங்களில் ஒன்று.

    சனாதன தருமம் தமிழர்களின் தினசரி வாழ்வியல் முறை எனவே தமிழர்கள் பண்டிகை என்பதில் தவறேதும் இல்லை.

    பாரத தருமமான சனாதனத்தில் இருந்து சுயநலம் / பயம் போன்ற காரண காரியங்களுக்காக விலகி இந்து இறை மறுக்கும் பகுத்தறிவு, சிஎஸ்.ஐ, மற்றும் வஹாபியிஸத்தில் மூழ்கி முத்தெடுப்பவர்கள் எக்ஸ்பிரஷன்ஸ் & செலிப்ரேஷன்ஸ் ஆஃப் சனாதன தருமம் என்பதில் சனாதன தருமத்தினைப் பிரிக்க / மறைக்க /மறுக்க முயல்வதென்பது தீக்கோழியின் மறைந்துகொள்ளும் செயலாகவே ஆகிறது.

    நல்லடியாரின் கருத்தில் இருக்கும் நேர்மையைப் பாராட்டலாம். பொய்யான பசப்பு வார்த்தைகள் இல்லாமல் அவரது மனதைப் பதிவு செய்திருப்பது அவர்மாதிரியான சிந்தனையாளர்களது சிந்தனையின் போக்கை அறிந்துகொள்ள உதவுகிறது.

    கையிலும் கழுத்திலும் சிலுவையோடும், உடலில் பச்சைகுத்தப்பட்ட சிலுவையோடும் இந்துமதத்தில் இருக்கும் விக்கிரக ஆராதனை என்பது பேய்கள் வழிபாடு என்பவர்கள் வைக்கும் பொங்கலை விடவும் போலித்தனமான நன்றி செலுத்தல் இருக்க முடியாது.

    இவர்களுக்கு பொங்கலை விட போகிதான் சிறப்பானது. மனக்குப்பைகளைக் களைவதை வலியுறுத்தும் போகிப் பண்டிகை கொண்டாடட்டும்.

    அன்புடன்,

    ஹரிஹரன்

    ReplyDelete
  25. ஹரிஹரன்,

    அருமையான கருத்துக்களைப் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி, பொங்கல் வாழ்த்துக்கள்.

    // நல்லடியாரின் கருத்தில் இருக்கும் நேர்மையைப் பாராட்டலாம். பொய்யான பசப்பு வார்த்தைகள் இல்லாமல் அவரது மனதைப் பதிவு செய்திருப்பது அவர்மாதிரியான சிந்தனையாளர்களது சிந்தனையின் போக்கை அறிந்துகொள்ள உதவுகிறது. //

    சரியான வாதம்.

    // கையிலும் கழுத்திலும் சிலுவையோடும், உடலில் பச்சைகுத்தப்பட்ட சிலுவையோடும் இந்துமதத்தில் இருக்கும் விக்கிரக ஆராதனை என்பது பேய்கள் வழிபாடு என்பவர்கள் வைக்கும் பொங்கலை விடவும் போலித்தனமான நன்றி செலுத்தல் இருக்க முடியாது. //

    மதமாற்றி கிறித்தவர்களின் பொங்கல் பாசம் போலித்தனமானது என்பதை இதைவிட மண்டையில் அடிக்கிற மாதிரி சொல்லமுடியாது.

    ReplyDelete
  26. //
    நாங்கள் இந்துக்கள் என்று பெருமையுடன் சொல்வதே உங்களைப் பொறுத்தவரை கேவலமான சிந்தனையா ரவி? சபாஷ்!
    //

    சரி, நான் கேவலப்படுகிறேன்.
    -ஒரு சராசரி இந்து.

    இது தான் இந்துக்களின் பிரச்சனை.

    நாம் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதில் கேவலப்படவேண்டுமாம். ஏன் ? செந்தழல் விளக்குவாரா ?

    ReplyDelete
  27. ஜடாயு,

    ஜோவுக்கு அருமையான பதில்களை அளித்திருக்கிறீர்கள். ஆபிரகாமிய மதங்களைக் குறித்து கூறுகையில் 'பாலைவன சூழலில்' உதித்ததாக கூறியுள்ளீர்கள். ஆனால் உண்மையில் பிரச்சனை வெறும் சுற்றுச்சூழலைப் பொறுத்ததல்ல. நமது ராஜஸ்தான் பாலைவனம் சார்ந்த மரபுகள் நீரையும் மண்ணையும் தாயாக வணங்குபவைதாம். ஆனால் ஆபிரகாமிய மதங்களின் வக்கிர இறைவனின் தோற்றம் நமது மனித மனதின் அடியாழத்தில் உறங்கும் பாதாள லோக அசுர பிரக்ஞையாக உள்ளது. பாலைவனங்களில் தோன்றிய அழகிய தாய் தெய்வ வழிபாடுகள் உண்டு அவற்றினை அழித்த அடிமன அழுக்கின் தேவனே ஆபிரகாமியத்தின் தேவன்.

    ReplyDelete
  28. Anonymous3:23 PM

    அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாவை மட்டுமே வணங்க வேண்டும். படைத்தவனை அன்றி அவனது படைப்புக்களை வணங்குபவன் அறிவீனன். நரகத்தை தரும் காஃபீர்களின் செயல்களிலிருந்து விடுபடுங்கள். இறை வழியாம் இஸ்லாத்திற்கு திரும்புங்கள். இங்கே மறுக்கப்பட்டவை சுவனத்தில் பன்மடங்காய் கிடைக்கும்.

    பூமியையும், சூரியனையும் வணங்கும் காஃபீர்களே உங்கள் அழிவு நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்று இறுதி வேதம் கூறுவதை அறிவீர்களா?

    பொங்கல் பானைக்கு பொட்டு வைக்கும் அவிவேகிகளே, அல்லா ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்பதை அறியுங்கள்.

    ஆமீன்.

    ReplyDelete
  29. உலகத் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்!


    பொங்கல் உலகத் திருநாள் என்பது மிக மிக உண்மை.

    க்ரிகோரியன் காலண்டரைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டதால் நமது பிறந்த நாட்கள் முதல் எழவு நாட்கள்வரை எல்லாவற்றையும் யூரோப்பிய குழப்பக் காலண்டரின்படி பின்பற்றுகிறோம். கிரிகோரியன் காலண்டரைப் பின்பற்றாத க்ரேக்க ஆர்தடாக்ஸ் சர்ச்சை பொறுத்தவரை ஜனவரி 14ல்தான் புது வருடம் பிறக்கிறது. அதாவது நமது பொங்கல் திருநாள்தான் அவர்களது வருட ஆரம்பம். காரணம், இவர்கள் பாகன்களின் பஞ்சாங்கத்தை பின்பற்றுவதுதான்.

    வேண்டுமானால் ஜோ அவர் கொண்டாடியது ஹிந்துப் பொங்கல் இல்லை, க்ரேக்க ஆர்தடாக்ஸ் சர்ச் கொண்டாடும் புதுவருடம் என்று சொல்லி சமாளிக்கலாம். ஆனால், அதற்கப்புறம் அவரது சர்ச்சிற்குள் விடுவார்களோ என்னவோ?

    அனைவருக்கும் பாகன்களின் பண்டிகையான, ஹிந்துக்களின் பண்டிகையான, தமிழர்களின் பண்டிகையான, கன்னடர்களின் பண்டிகையான, ஆப்பிரிக்கர்களின் பண்டிகையான, பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  30. வறுமை ஒழிக

    அது சரி. வறுமை ஒழிந்தால் காம்ரேடுகள் கட்சிக்கு கூலிகள் கிடைப்பர்களா?

    அறுவடை செய்யத்தான் ஆத்மாக்கள் கிடைக்குமா?

    ஜிஹாத் நடத்த சிறுமதியாக்கப்பட்டவர் கிடைப்பாரா?

    பாரதி, இப்படியெல்லாம் சொன்னால் உன்னை அசுரன் போன்ற புர்ஜிக்காரர்கள் ஏன் எதிர்க்கமாட்டார்கள்?

    ReplyDelete
  31. ஜடாயு அவர்களே,

    அது தங்கள் கவிதை என்பது தெரியும். பாரதீயராகிய நீங்களும் பாரதிதானே.

    பேனாவில் கலைமகளின் அருளை நிரப்பி... ம்ம்ம், சரியில்லை, கம்ப்யூட்டரில் கலைமகள் ஃபான்ட்டை உபயோகப்படுத்தும் நீங்களும் பாரதிதான்.

    ReplyDelete
  32. Anonymous4:30 PM

    உலகம் முழுதும் சுற்றி இந்து தர்மத்தின் ஆன்மீக ஒளியை சுடர்விடச் செய்த ஞான சூரியன் சுவாமி விவேகானந்தர் பிறந்ததும் பொங்கல் திருநாள் அன்று தான்.

    Think always: “I am ever-pure, ever-knowing, and ever-free. How can I do anything evil? Can I ever be befooled like ordinary people with the insignificant charms of lust and wealth?” Strengthen the mind with such thoughts. This will surely bring real good.

    ReplyDelete
  33. Anonymous4:31 PM

    இயற்கையின் வர்ண ஜாலங்களில் எல்லாம்
    இறைமையை உணர்த்திற்று
    நம் சமயம், கலாசாரம்.


    “After so much tapasya, austerity, I have known that the highest truth is this: "He is present in all beings. These are all the manifested forms of Him. There is no other God to seek for! He alone is worshipping God, who serves all beings.”

    ReplyDelete
  34. Anonymous4:35 PM

    தான் பொங்கல் கொண்டாடுவது சாத்தானின் தூண்டுதலால் என்று கிறித்தவ இறையியலை யாராவது முன் நிறுத்தினால் இல்ல இல்ல அது இந்துப் பண்டிகையே இல்லங்க என்று சொல்லிக் குழப்பலாம் என்றோ என்னவோ பொங்கல் இந்துப் பண்டிகையே அல்ல என்று அந்தப் பதிவில் ஜல்லியடிக்கிறார்.


    Bless people when they revile you. ... Hold fast to the real Self. Think only pure thoughts, and you will accomplish more than a regiment of mere preachers. Out of purity and silence comes the word of power.

    ReplyDelete
  35. Anonymous4:37 PM

    மங்கலம் நல்கும் இம்மறைமொழி கொண்டு எங்கள் உலகோர் பொங்கிடும் பொங்கல்!

    Take up five ideas in your life and try to live it. By doing this you will accomplish more than reading an entire library.”

    ReplyDelete
  36. Anonymous4:41 PM

    சகோதரர் திரு. நல்லடியார் எழுதியிருப்பது இதற்கு நேர்மாறானது. மிக இறுக்கமான, வெறித்தனமான சில இஸ்லாமியக் கருத்துக்களை முன்வைத்து ஏன் முஸ்லீம்கள் பொங்கல் கொண்டாடக் கூடாது என்று ரொம்ப மெனக்கெட்டு வாதிடுகிறார்

    Mind you, this is life’s experience: if you really want the good of others, the whole universe may stand against you and cannot hurt you. It must crumble before your power of the Lord Himself in you if you are sincere and really unselfish.

    ReplyDelete
  37. Anonymous4:44 PM

    பொறுமைக் குணத்தைப் புவியோர் போற்றுக!

    The disciple must have great power of endurance. Life seems comfortable; and you find the mind behaves well when everything is going well with you. But if something goes wrong, your mind loses its balance. That is not good. Bear all evil and misery without one murmur of hurt, without one thought of unhappiness, resistance, remedy, or retaliation. That is true endurance; and that you must acquire.

    ReplyDelete
  38. நீலகண்டன், பாலைவனம் பற்றி தங்கள் பதிவில் நான் இட்டிருந்தது தவறான புரிதல் என்று உணர்கிறேன். சரியான புரிதல் அளித்ததற்கு நன்றி.

    ReplyDelete
  39. ம்யூஸ், வருக வருக. தெளிவிக்கும் கருத்துக்களை மேலும் இதுபோல் தருக.

    // அது தங்கள் கவிதை என்பது தெரியும். பாரதீயராகிய நீங்களும் பாரதிதானே. //
    :))

    // பேனாவில் கலைமகளின் அருளை நிரப்பி... ம்ம்ம், சரியில்லை, கம்ப்யூட்டரில் கலைமகள் ஃபான்ட்டை உபயோகப்படுத்தும் நீங்களும் பாரதிதான். //

    ரொம்ப சமத்காரமான வார்த்தைகள். அருமை!

    ReplyDelete
  40. விவேகானந்தரின் அமுத மொழிகளை அற்புதமாக இங்கே இட்டுச் சென்றிருக்கும் அனானி !
    தங்களுக்குக் கோடி வந்தனங்கள்.
    ஓம் நமோ நாராயணாய!

    பதிவின் வரிகளுக்குப் பொருத்தமான மேற்கோள்களை அருமையாக அளித்துள்ளீர்கள். நீங்கள் விவேக சிந்தனையில் எவ்வளவு தோய்ந்தவர் என்பதை இது காட்டுகிறது.

    அறியாமலேயே உள்மனதில் இருந்து சுவாமிஜியின் வார்த்தைகளின் கருத்துப் பிரதிகளாக வந்து விழுந்திருப்பது போல சுட்டியிருக்கிறீர்கள்! மிகவும் பாக்கியவானாக உணர்கிறேன்.

    ReplyDelete
  41. // ..அது இந்துக்களுக்கு மட்டும் உரியதல்ல என புரிய வைப்பதில் தவறு இல்லை. //

    ஆம், இத்தகைய தெய்வீக சிந்தனைகள், விழாக்கள் இந்துக்கள் என்று இப்போது தங்களை அழைத்துக் கொள்பவர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும் உரியன. உடன்படுகிறேன்.

    // பொங்கல் தமிழர்களின் திருநாள் .இந்துக்கள் அவர்கள் முறைப்படி கொண்டாடுகிறார்கள் .நான் என் முறைப்படி கொண்டாடுகிறேன் .இப்படி கொண்டாடினால் தான் பொங்கல் என்று சொல்ல நீர் யார் ? //

    நீங்கள் பர்சனலாக இதை எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது.

    நீங்கள் பொங்கல் கொண்டாடியது மிகவும் நல்லது. முறையில் நான் தவறு காணவில்லை. அதன் பின்னுள்ள போலி கிறித்தவ அரசியல் மழுப்பலைத் தான் கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  42. //நாம் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வதில் கேவலப்படவேண்டுமாம். //

    வஜ்ரா அவர்களே...நான் அப்படி சொல்லவில்லை...நாம், நமது பண்டிகை, என், எனது பண்டிகை, அடுத்தவருக்கு இல்லை, அஸ்க்கு புஸ்க்கு என்ற சிந்தனையைத்தான் சாடினேன். தமிழர் திருநாள் மட்டும்தான் அனைவரும் கொண்டாடும் திருநாளாக இருக்கிறது. அதுக்கும் இந்துத்துவ முலாம் பூசி, என்ன கொடுமை அய்யா !!!

    மதம் என்பது என்ன ? இந்த(து) மதத்தை நீங்கள் எத்தனை ஆண்டுகளாக சார்ந்திருக்கிறீர் ? ஆயிரம் ஆண்டுகள் ? இரண்டாயிரம் ஆண்டுகள் ? ஒரு மூன்றாயிரம் ஆண்டுகள் ? அதற்கு முன் யார் அய்யா நீர் ? சூரியனையும், பாம்பையும், கடலையும் வழிபட்ட காட்டுமிராண்டி கூட்டம் தானே ? நபிகளை வணங்குபவர் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக அதை சார்ந்திருக்கிறார், கிறிஸ்தவ மதத்தில் உள்ளவர் ( இந்தியாவில்) நானூறு ஆண்டுகளாக சார்ந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்...

    இந்த இரண்டு பிரிவினரும் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதே காட்டுமிராண்டி கூட்டம் தானே ? பயந்து நடுங்கவைக்கும் அத்தனையும் அவனுக்கு தெய்வம். பாம்பு தெய்வம். அது முட்டையும் பாலும் சாப்பிட்டு புத்துக்குள்ள இருக்கு. அதை புத்து மாரியம்மன்னு சொல்லிட்டீங்க. ஏன்யா, ஐந்தறிவு கூட இல்லாத பாம்பு எப்படிய்யா உனக்கு தெய்வம் ? மண்டையில கொஞ்சமாவது மசாலா இருந்தா யோசிக்க மாட்டாயா ? க்வாண்டம் பிஸிக்ஸை பற்றி பேசுகிறாய்..பிக் பாங் தியரி, டார்வின் பரிணாம வளர்ச்சி எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கு...கிருஷ்னர் மலையை தூக்கியதுக்கு ஆதாரம் இருக்கா ? ஒருத்தன் வாங்கய்யா...எவராவது ஒருத்தர் விளக்கம் சொல்லுங்க...பொங்கலாம் போகியாம்...

    அதற்க்காக ஆத்திகவாதிகள் அத்துனைவரையும் நான் வெறுத்து சொல்லவில்லை...அவரவர் நம்பிக்கை அவருக்கு...மத்தவருக்கு உள்ளன்போடு உதவனும் என்னும் மனப்பாங்கு ஊற்றெடுக்கும் உள்ளம் தானய்யா கடவுள். அந்த உள்ளத்தை கையெடுத்து வணங்குறேன்...கண்ட உயிரற்ற கல்லையும் அல்ல...

    இங்கே நாத்திகம் வலியுறுத்த வரவில்லை நான், 'மதம்' பிடித்த சில ஜந்துக்கள் மனிதரை பிரிக்க எந்தெந்த வழிகளில் முயலுகிறன்றதே என்ற ஆற்றாமையில் எழுதுவது...

    யாரையும் தனிப்பட்ட தாக்குதல் செய்ய இந்த பின்னூட்டம் போடவில்லை ஜடாயு, மற்றும் வஜ்ரா. நான் புண்படுத்தியிருந்தால் பெருந்தன்மையுடன் மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கை ( உரிமையோடு )எப்போதும் உண்டு எனக்கு.

    ReplyDelete
  43. Anonymous7:21 PM

    அருணகிரி
    கடலோர கிரமத்தின் கதையில் காபிராக சொல்லப்படும் மொழி ஆங்கிலம்(பக்கம்72,73), தமிழ் அல்ல.உம்ம இஸ்லாமிய வெறுப்பு என்ன சொல்ல

    ReplyDelete
  44. பொங்கல் என்பது உழைத்தவனின் திருவிழா. இதில் இந்து கிறிஸ்துவர் முஸ்லிம் என்று குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு இருக்கின்ற மக்களைப் பிரித்துப் பார்க்கும் ஜடாயு போன்றவர்கள் அரக்க இனத்தைச் சார்ந்தவராக இருப்பார் போலிருக்கிறது. வாலி் எழுதிய "வானும் நீரும் கடலும் இங்கே பொதுவில் இருக்குது. மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது. பிரி்த்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனித இதயமே" என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. ஒரு நாட்டின் இறையாண்மைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் மக்களுக்கிடையில் சண்டையைத் தூண்டி விடுவது தேச துரோகம் என்று தெரியுமா ஜடாயு? சட்டம் கிடக்கட்டும். மனிதம் இருக்கிறதா உங்களிடம்? சட்டத்தை வளைக்கும் வித்தகர்களையும் அமைச்சராக்கிப் பார்க்கும் பின்புலத்திலிருந்து வந்தவர் தானே நீங்கள். மனிதமாவது, மண்ணாங்கட்டியாவது.. ச்சே...

    ReplyDelete
  45. Anonymous5:09 AM

    பாம்பு தெய்வம். அது முட்டையும் பாலும் சாப்பிட்டு புத்துக்குள்ள இருக்கு. அதை புத்து மாரியம்மன்னு சொல்லிட்டீங்க. ஏன்யா, ஐந்தறிவு கூட இல்லாத பாம்பு எப்படிய்யா உனக்கு தெய்வம் ? மண்டையில கொஞ்சமாவது மசாலா இருந்தா யோசிக்க மாட்டாயா ? க்வாண்டம் பிஸிக்ஸை பற்றி பேசுகிறாய்..பிக் பாங் தியரி, டார்வின் பரிணாம வளர்ச்சி எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கு...கிருஷ்னர் மலையை தூக்கியதுக்கு ஆதாரம் இருக்கா ? ஒருத்தன் வாங்கய்யா...எவராவது ஒருத்தர் விளக்கம் சொல்லுங்க...பொங்கலாம் போகியாம்.../

    செந்தழல் ரவி,

    மரத்தில் செய்த சிலுவையை தெய்வம்னு நட்டு வெச்சு கும்புடுகிறாயே? அறிவே இல்லாத அந்த மரம் எப்படி தெய்வம்?கோவாவில் சேவியரின் பிணத்தை சுற்றி வந்து கும்பிடுகிறீர்களே, அது எல்லாம் எப்படி தெய்வமாகிறது? பாம்புக்காவது ஐந்தறிவு இருக்கிறது.செத்த பிணத்துக்கு என்ன அறிவு இருக்கிறது? அதை ஏன் கும்பிடுகிறாய்?

    கிருஷ்ணர் மலையை தூக்கியதற்கு ஆதாரம் கேட்கிறாயே?முதலில் ஏசு செத்து அதன் பின் உயிரோடு வந்தார் என்பதற்கு ஆதாரம் கொடு.செத்தவன் எப்படிய்யா உயிரோடு வருவான்?இதெல்லாம் பகுத்தறிவாளன் நம்பும் நம்பிக்கையா? ஆதாரம் காட்டு பார்க்கலாம். அப்புறம் குருடனுக்கு கண் வந்தது, செத்தவனை உயிர்பித்தது இதுக்கெல்லாம் ஆதாரம் வைத்திருக்கிறாயா? கிறிஸ்துமஸ் அன்று வடதுருவத்தில் இருந்து மான்கள் மீதேறி உலகில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்துவ குழந்தைக்கும் கிஃப்ட் கொண்டு வருகிறார் சாண்டாக்ளாஸ் என உங்கள் பாதிரியார்கள் கயிறு திரிக்கிறார்களே?அதுக்கும் ஆதாரம் கொடு பார்க்கலாம்.

    அப்புறம் மேரிக்கு கன்னி கழியாமலே குழந்தை பிறந்தது என்பது மூளையுள்ளவன் நம்பும் நம்பிக்கையா?இதுக்கு என்ன ஆதாரம் நீ வைத்திருக்கிறாய்? சொல்லு

    ReplyDelete
  46. செந்தழல் ரவி said...

    // பாம்பு தெய்வம். அது முட்டையும் பாலும் சாப்பிட்டு புத்துக்குள்ள இருக்கு. அதை புத்து மாரியம்மன்னு சொல்லிட்டீங்க. ...//

    இந்தப் பின்னூட்டத்தை நான் பதிப்பிப்பதற்கு முன்பே அனானி ஒருவர் வந்து அதற்கு பதில் அளிக்கிறார். என்ன நடக்கிறது இங்கே?

    ReplyDelete
  47. செந்தழல் ரவியின் பாம்பு பற்றிய கேள்விக்கு அதே ரீதியில் பதிலடி தந்த அனானிக்கு நன்றி.

    மேலும், இந்த பால், முட்டை சமாசாரம் ஒரு கிராமப்புற வழக்கம் தான். அது இந்து மதத் தத்துவம் அல்ல. ஆழ்வார், நாயன்மார் திருமுறைகளில் எங்காவது பாம்புக்கு முட்டை போடுவது பற்றி உள்ளதா?

    கண்ணன் மலையைத் தூக்குதல் என்பது புராணம் கூறும் அதீத உருவகம். மூன்றாவது கண், அமுதத்திற்காகக் கடல் கடைதல் போன்று. இந்திய கலாசார, இலக்கிய மரபு பற்றி கொஞ்சம் ஞானம் உள்ளவனுக்குக் கூட இந்த புரிதல் உண்டு. இது பற்றி நீலகண்டனின் "புராணங்கள்- என்றும் வாழும் அதி யதார்த்தம்" பதிவுகளில் அழகாக எழுதியிருக்கிறார்.

    செந்தழல், அதென்ன "ஒருத்தன் வாங்கய்யா" மாதிரி சவடால்கள்? இங்கே நடப்பது தெருச்சண்டை அல்ல, அறிவார்ந்த விவாதம் என்பதை நினைவில் கொள்ளவும்.

    // இந்த(து) மதத்தை நீங்கள் எத்தனை ஆண்டுகளாக சார்ந்திருக்கிறீர் ? ஆயிரம் ஆண்டுகள் ? இரண்டாயிரம் ஆண்டுகள் ? ஒரு மூன்றாயிரம் ஆண்டுகள் ? அதற்கு முன் யார் அய்யா நீர் ? சூரியனையும், பாம்பையும், கடலையும் வழிபட்ட காட்டுமிராண்டி கூட்டம் தானே ? //

    அன்று அல்ல, இன்றும் அதே சூரியனையும், கடலையும் வணங்கும் கூட்டம் தான் ஐயா நாங்கள்!

    உலகின் கண்ணான, சகல சக்திகளின் உறைவிமான சூரியனை வழிபடுபவன் காட்டுமிராண்டியாம் !! அப்படியானால் "ஞாயிறு போற்றுதும்" என்ற சிலம்பும், சங்க இலக்கியங்களும் காட்டுமிராண்டித் தனமானவை தானோ?

    "பரிதியே பொருள் யாவிற்கும் முதலே
    பானுவே பொன்செய் பேரோளித் திரளே
    கருது நின்னை வணங்கிட வந்தோம்"
    என்று பாடிய பாரதியும் காட்டுமிராண்டியா?

    "அலைகடலே பள்ளி எழுந்தருளாயே" என்று சொன்ன திருவாசக மணிவாசகர் காட்டுமிராண்டியா?
    இயற்கையில் பிரபஞ்ச தரிசனம் காணும் இந்திய சமய மரபே காட்டுமிராண்டித் தனமாம் !

    // நபிகளை வணங்குபவர் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக அதை சார்ந்திருக்கிறார், கிறிஸ்தவ மதத்தில் உள்ளவர் ( இந்தியாவில்) நானூறு ஆண்டுகளாக சார்ந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்... //

    ஆனால், என்றோ சிலுவையில் மடிந்த யூதர் ஒருவரைக் கடவுளாக வழிபடுவது நாகரீகம்! தன் தேவதூதனை ஏற்றுக் கொள்ளாதவனைப் படுகொலை செய்யச் சொல்லும் அராபியக் கடவுளை வணங்குவது நாகரீகம்!

    அற்புதம் செந்தழல் ரவி அவர்களே!
    அந்த அப்பட்டமான அச்சு அசல் ஆபிரகாமிய முத்திரை இந்தியாவில் பிறந்து வளர்ந்த உங்களிடம் எப்படி ஒட்டிக் கொண்டு விட்டது பாருங்கள் !

    ReplyDelete
  48. ஜடாயு, பார் யுவர் கைண்ட் இண்பர்மேஷன், நான் சாமியக்கும்புடுறத நிறுத்தி வருஷக்கணக்காச்சு...

    அதானால எனக்கு எந்த முத்திரைடும் குத்தமுடியாது...!!!

    ///அறிவார்ந்த விவாதம் என்பதை நினைவில் கொள்ளவும்///

    இது காமெடி !!!

    ReplyDelete
  49. // பொங்கல் என்பது உழைத்தவனின் திருவிழா. இதில் இந்து கிறிஸ்துவர் முஸ்லிம் என்று குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு இருக்கின்ற மக்களைப் பிரித்துப் பார்க்கும் ஜடாயு போன்றவர்கள் அரக்க இனத்தைச் சார்ந்தவராக இருப்பார் போலிருக்கிறது. //

    திருவடியான் அவர்களே,

    பொங்கலை லோக்கல் பண்டிகையாக்கும் அரசியலை எதிரித்து அது தமிழ்-இந்திய-இந்து மரபு வழங்கிய உலகத் திருநாள் என்று தானே எழுதினேன்? இதில் மக்களைப் பிரித்துப் பார்த்தல் எங்கே வந்தது?

    // ஒரு நாட்டின் இறையாண்மைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் மக்களுக்கிடையில் சண்டையைத் தூண்டி விடுவது தேச துரோகம் என்று தெரியுமா ஜடாயு? சட்டம் கிடக்கட்டும். மனிதம் இருக்கிறதா உங்களிடம்? //

    ஐயா, சண்டையை நான் எங்கே தூண்டினேன்? என் பதிவை இன்னொரு முறை நிதானமாகப் படித்துப் பாருங்கள். இந்த நாட்டின் தேசிய கலாசாரத்தை சிறு-குழு கலாசாரமாக்கத் திரிக்கும் போக்கை எதிர்ப்பது தேச ஒருமைப்பாட்டு சிந்தனை, தேச விரோதம் அல்ல.

    இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழறிஞர் நா.கண்ணன் அவர்கள் இந்தப் பதிவுக்கு அளித்த பின்னூட்டத்தைப் பாருங்கள். ஒருமைப் பாட்டுச் சிந்தனை என்று கூறியுள்ளார்.

    // சட்டத்தை வளைக்கும் வித்தகர்களையும் அமைச்சராக்கிப் பார்க்கும் பின்புலத்திலிருந்து வந்தவர் தானே நீங்கள். //

    அது என்ன பின்புலம்? இது போன்ற தனிமனித தாக்குதல்களை தயவு செய்து தவிர்க்கவும்.

    ReplyDelete
  50. Anonymous10:36 AM

    ஜடாயு,
    ரவி வெறிபிடித்த கிறுத்துவர் இல்லை என்று தெரிகிறது. சமயபுரத்தில் போய் மொட்டை போட்டிருக்கிறேன் என்பவர் குடும்பம் இந்திய/இந்து மரபுகளை மதிக்கும் குடும்பமாகத்தான் இருக்க வேண்டும். ஆகையால் அரைகுறை புரிதல் கொண்ட இவர் போன்றவர்களுக்கு பக்குவமாகத்தான் நம் தரப்பு நியாயங்களை உணர்த்த வேண்டும். ஜ்யார்ஜ் சுதர்ஷன் மாதிரி இவர்களும் மாறலாம் நாளை.

    ReplyDelete
  51. இந்தப் பதிவில் சொல்லியிருக்கும் கருத்தோடும் நல்லடியார் அவரது பதிவில் சொல்லியிருக்கும் கருத்தோடும் செந்தழல் ரவி சொல்லியிருக்கும் கருத்தோடும் எனக்கு உடன்பாடு இல்லை என்று மட்டுமே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அப்படிச் சொல்வதால் என்னை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் கவலையில்லை.

    ReplyDelete
  52. Anonymous11:38 AM

    ஜடாயு
    அருமையான பதிவு.

    ""இந்து" என்ற சொல்லோடு தொடர்புடைய எந்த உயர்வான விஷயமும் இருக்க முடியாது, அது மோசமானது என்று பிரிட்டிஷ் காலனிய காலங்களிலிருந்து பரப்பப் பட்டு வரும் துவேஷப் பிரசாரம் தான் இதன் பின்னணியில் உள்ளது."

    இது இது இதுதான் மூலகாரணம்.

    மற்றபடி நல்லடியார் போன்றவர்கள் தங்கள் மனப்போக்கை வெளிப்படையாகச் சொல்வதைப் பாராட்டலாம். அதில் அதிக அபாயம் இல்லை. ஆனால் ஜோவினைப் போல் ஏசுவைத் தொழுது, பொங்கல் கொண்டாடுவோம் என்பவர்தான் உண்மையில் அபாயமானவர்கள். அடையாளம் தெரியாதபடி செல்களுக்குள் உட்புகுந்து அழிக்கும் புற்றுநோய் போன்றது இன்கல்ட்சுரேஷன் என்ற கிறுத்துவ ஸ்ட்ராட்டஜி. உலகின் பாகன் வழிபாடுகளை இப்படி அழித்து வளர்ந்ததுதான் கிறுத்துவம்.

    சில நூற்றாண்டுகளுக்குப்பின் பொங்கலே கிறுத்துவத் திருநாளாக மாறிவிடும்.

    யாருக்காவது சந்தேகம் இருந்தால்: http://home.earthlink.net/~pgwhacker/ChristianOrigins/

    ஆக
    தெரிந்த எதிரிகளை விட தெரியாத, முகம் காட்டிக் கொள்ளாத எதிரிகள் ஆபத்தானவர்கள்.

    கதிரேசன்

    ReplyDelete
  53. Anonymous12:38 PM

    ஜடாயு,

    நல்ல கருத்துக்கள்....ஆனால் செக்யூலர் ஜெல்லிக்கு எதிர்ப்பாக இருப்பதால் எல்லோருக்கும் கசக்கத்தான் செய்யும் என்ன செய்வது.

    ReplyDelete
  54. ஜடாயு,

    Belated பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

    என்ன, பொங்கல் 'ஹைஜாக்' குறித்து காரசார விவாதம் போல் தெரிகிறது ;-)

    என்னளவில், இது இந்துப் பண்டிகையாக இருந்தாலும்(இயற்கையைப் போற்றுவதால் அனைவரும் கொண்டாடலாம் !

    இந்த காலகட்டத்தில், இந்துவாக இருந்தாலும் கேவலமில்லை, கிறித்துவராக இருந்தாலும் கேவலமில்லை, இஸ்லாமியராக இருந்தாலும் கேவலமில்லை. நல்ல மனிதனாக இருப்பது தான் கேவலம் போல் தோன்றுகிறது !!!!!!!

    From Swami Vivekananda:

    It is impossible to find God outside of ourselves. Our own souls contribute all of the divinity that is outside of us. We are the greatest temple. The objectification is only a faint imitation of what we see within ourselves.

    This is the gist of all worship --to be pure and to do good to others. He who sees Siva in the poor, in the weak, and in the diseased, really worships Siva, and if he sees Siva only in the image, his worship is but preliminary. He who has served and helped one poor man seeing Siva in him, without thinking of his caste, creed, or race, or anything, with him Siva is more pleased than with the man who sees Him only in temples.

    //விவேகானந்தரின் அமுத மொழிகளை அற்புதமாக இங்கே இட்டுச் சென்றிருக்கும் அனானி !
    தங்களுக்குக் கோடி வந்தனங்கள்.
    ஓம் நமோ நாராயணாய!
    //
    என்ன, வீர சைவரிடமிருந்து பலமான நாராயண வந்தனம் :)))

    Last but not the least, Pl. read my recent (9) postings on Thiruppavai, when you have the time. Expecting your comments !

    என்றென்றும் அன்புடன்
    பாலா

    ReplyDelete
  55. மிக்க நன்றி, வாழ்த்துக்கள் enRenRum-anbudan.BALA !

    // நல்ல மனிதனாக இருப்பது தான் கேவலம் போல் தோன்றுகிறது !!!!!!! //

    // He who sees Siva in the poor, in the weak, and in the diseased, really worships Siva, and if he sees Siva only in the image, his worship is but preliminary. //

    சுவாமிஜியில் மொன்மொழிகளீல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இது.

    // என்ன, வீர சைவரிடமிருந்து பலமான நாராயண வந்தனம் :))) //

    நான் அப்பேர்ப்பட்ட வீர சைவன் எல்லாம் அல்ல :)) திரு, நா.கண்ணன் பதிவில் இட்ட பின்னூட்டங்களில் சைவக் காழ்ப்பு இருந்தது போல் தோன்றியதால் அதைச் சுட்டிக் காட்டும்படியாயிற்று. அதிலும் விவேகானந்தரின் வேதாந்த சிந்தனைகளையே முன் நிறுத்தினேன்.

    ReplyDelete
  56. Varadhan என்பவர் அனுப்பிய பின்னூட்டம் இது. சில சொற்கள் தகாதவையாக இருந்ததால், நீக்கங்களுடன் இந்தப் பின்னூட்டத்தைப் பதிப்பிக்கிறேன்.

    -----

    ஜடாயு

    மிக ஆழமான அறிவுச் செறிவான கட்டுரை. அழகான தமிழ். தேர்ந்தெடுத்தச் சொற்கள். உங்கள் கட்டுரைகளைப் படிப்பதே பேரின்பம்.

    இங்கே வெந்தழல் ரவி என்ற கிறித்துவ வெறியர் ஒருவர் உங்களைக் கீழ்த்தரமாக ஒருமையில் தாக்கியதைக் கண்டிக்கிறேன். ரவி ஒரு அரைவேக்காட்டுக் கூமுட்டை. கத்தோலிக்க கிறித்துவத்தின் புரட்டுக்களை நீங்கள் கிழித்திருப்பதால் வந்த ஆத்திரத்தில் ****** அரைவேக்காட்டின் ஆவேச உளறல் அது. நீங்கள் எழுதியதின் சாரத்தைப் புரிந்து கொள்ளும் அறிவோ, சிந்தனைத் திறனோ இந்த **** **** கிடையாது. தான் ஒரு அரை லூசு என்பதை மீண்டும் மீண்டும் தனது அபத்தப் பின்னூட்டங்களால் நிரூபித்து வருகிறார் இந்த வெட்டி ரவி. அவரது அறிவுத் திறன் அவ்வளவுதான், மத வெறி கண்ணை மறைத்து வெறித்தனமாக எழுத வைத்துள்ளது. இப்பொழுது மீண்டும் வந்து தான் கிறிஸ்துவனே அல்லன் மனிதன் என்றெல்லாம் மீண்டும் ஜல்லி அடிக்க வருவார் பாருங்கள்.


    கத்தோலிக்க கிருத்துவ மதம் ஒரு குள்ள நரிக்குரிய நயவஞ்சகமும், நஞ்சும், சாகசமும் உடையது. இந்துக்களின் பாரம்பரிய பண்டிகைகளையும், பழக்க வழக்கங்களையும் மாற்ற வேண்டிய தேவை இல்லை என்று அவர்களை பொட்டு வைக்க பூ வைக்க, பொங்கல் வைக்க, தேர் திருவிழா நடத்த அனுமதித்து வஞ்சகமாக அவர்களது அப்பாவித்தனத்தை பயன்படுத்தி மதம் மாற வைக்கும் ஒரு சாத்தானின் கூட்டம் கத்தோலிக்க மதம். அந்த சாத்தானின் ஊளைதான் ஜோவினுடையது.


    கத்தோலிக்க மதம் இந்துப் பெயர்களைக் கூட மாற்ற வேண்டாம் என்று முருகன், உமாமஹேஸ்வரன், நாராயணன் போன்ற பெயர்களை அப்படியே வைத்துக் கொண்டு மதம் மாறச் சொல்லுகிறது. ராஜசேகர் ரெட்டி, ஐஏஎஸ் உமாசங்கர் போன்றோர் உதாரணங்கள். நாளைக்கு உமாசங்கரும், நாராயணனும் இந்து மதப் பெயர்கள் அல்ல தமிழ் பெயர்கள் அதனால்தான் நாங்கள் வைத்திருக்கிறோம் என்று சாதிப்பார்கள். ஏற்கனவே பரதநாட்டியத்திற்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமில்லை என்றும், யோகாவுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தமில்லையென்றும் இந்த சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன.



    பொங்கல், தீபாவளி, போகி, விந்யாக சதுர்த்தி எல்லாமே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்துக்களால் கொண்டாடப் பட்டு வரும் பாரம்பரியமான இந்துப் பண்டிகைகளே.

    படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டுமானால் பிறை பார்த்து ரம்சானைக் கொண்டாடுவானேன்? நல்லடியார் போன்ற தீவீரவாதிக்கள் இனிமேல் பிறை நிலாவைப் பார்க்காமலேயே ரம்சான் கொண்டாட வேண்டியதுதானே ? படைத்தவனை மட்டும் வணங்க வேண்டுமானால் எதற்காக மேற்கு பக்கம் பார்த்து தொழுவானேன் ? படைத்தவன் என்ன மேற்கு பக்கம் மட்டுமா இருக்கிறான் ? அல்லாவுக்கு என்ன பக்க வாதமா ? கிறுக்குத் தனமா இல்லை ? எல்லா இடத்திலும் ஒரு பிறையை போடுகிறீர்களே அது என்ன படைத்தவனா ? இயற்கையா ? நல்லடியார் போன்ற தீவீரவாதிகள் போலித்தனமில்லாமல் தங்களது மதவெறியை பரப்பியுள்ளனர். ஆனால் ஜோ **** எல்லாம் வெட்கம் கெட்டுப் போய் பொங்கல் கொண்டாடி விட்டு வாய் கூசாமல் அது இந்துப் பண்டிகை இல்லை என்று சொல்ல முடிகிறது, வெட்கம் கெட்ட பிறவிகள். பொங்கல் வைத்துக் கொண்டாடலாம் என்று எந்த பைபிளில் சொல்லப் பட்டுள்ளது ஜோ சொல்ல முடியுமா ? ஜடாயு இந்துப் புராணங்களில் இருந்தும் இலக்கியங்களில் இருந்தும் இவ்வளவு உதாரணம் கொடுத்தாரே, ஒரு உதாரனம் உன்னால் கொடுக்க முடியுமா ? எங்கே ஏசுவோ, அல்லது கன்னி மரியாளோ எங்கேயாவது பொங்கல் கொண்டாடச் சொல்லியிருக்கிறார்களா ? அப்புறம் எப்படி அது கிறிஸ்துவ பண்டிகை ஆகிறது. கேக்கறது கேனையன்னா, பொங்கலும் தீபாவளியும் உங்களுக்கு கிறித்துவ பண்டிகை ஆகி விடுமா ?


    மக்களை எந்தெந்த வழிகளில் ஏமாற்றி மதம் மாற வைக்க முடியுமோ அந்தந்த வகைகளில் எல்லாம் முயற்சி செய்யும் நச்சுப் பாம்புகள் இந்த கிருத்துவ வெறியர்கள். அந்த போலித்தனத்தை நீங்கள் துகிலுரிந்து காட்டும் பொழுது இவர்களுக்கு கட்டுக்கடங்காத வெறியும் கோபமும் உங்கள் மீது வருகிறது.

    -------

    ReplyDelete
  57. Varadhan,

    நீங்கள் சொல்லியதில் சில மதமாற்றத் திருகுதாளங்கள் பற்றிய கருத்துடன் மட்டும் உடன்படுகிறேன். நல்லடியாருக்கு நீங்கள் கேட்டிருக்கும் கேள்வியும் சரியானதே.

    செந்தழல் ரவி மதவெறியர் அல்ல, அதனை ஊக்குவிப்பவரும் அல்ல என்றே அறிகிறேன். அனவருடனும் நட்பாக இருக்க விரும்பும் ஒரு நல்ல மனிதர். இந்து, இந்திய கலாசாரம், பண்பாடு, மரபுகள் மீது மரியாதையும் அன்பும் கொண்டவர். தனது ஊரான திருக்கோவிலூர் கோவில் பெருமைகளை மிக அழகாக அவர் சொன்னதாக ஒரு டோண்டு பதிவில் ம்யூஸ் எழுதியிருந்ததைப் படித்திருக்கிறேன்.

    அவரை அரைவேக்காடு என்றெல்லாம் நீங்கள் வசை பாடியிருப்பதையும் வன்மையாககக் கண்டிக்கிறேன். இணையத்தில் பதிவு எழுதுவது என்பது ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவது போன்றது அல்ல, அதனால் தகவல், புரிதல் பிழைகள் வருவது சகஜம். பல பதிவர்கள் எண்ணிக்கை அளவுக்கு உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துவது இல்லை என்பதும் நிதர்சனம்.

    தவறுகளைச் சுட்டிக் காட்டினால் ஏற்றுக் கொள்ளும் மனப்ப்பான்மை உள்ளவர் ரவி என்பது இது தொடர்பான நீலகண்டன் பதிவில் அவர் இட்ட பின்னூட்டத்தில் வெளியாகிறது.

    ReplyDelete
  58. //மேலும், இந்த பால், முட்டை சமாசாரம் ஒரு கிராமப்புற வழக்கம் தான். அது இந்து மதத் தத்துவம் அல்ல.//
    ஜடாயு, திருவாசகமும் தேவாரமும் எந்த அளவு இந்து தருமமோ அந்த அளவுக்கு பாம்பு புற்றுக்கு முட்டையும் பாலும் கொடுப்பதும் இந்து தருமம் தான். In fact மதமாற்றிகளின் ரிப்போர்ட்களை பாருங்கள். அவர்கள் முதலில் அழித்தொழிக்க ஆத்திரப்படுவதும் தமது மிகப்பெரிய எதிரியாக காண்பதும் நம் தருமத்தின் இந்த பரிமாணங்களைத்தாம். 'ஆதி தேவோ ஆரிய தேவதா' எனும் சந்தியா ஜெயினின் நூலில் இத்தன்மைகளை எல்லாம் ஆவணப்படுத்தியுள்ளார். இவைதான் இன்றளவும் மிசிநரிகளால் வன்முறையுடன் தாக்கப்படுகின்றன. இவற்றினை காப்பாற்றுவது நம் தலையாயக் கடமை. வேலன் வெறியாட்டத்தையும் ஊனுணவையும் ஏற்கும் நம் இறையின் ஓர் முகம் அந்தணர் மந்திரமும் ஏற்கும். நம் தருமத்தின் சிறப்பே இதுதான்.

    ReplyDelete
  59. //கத்தோலிக்க கிருத்துவ மதம் ஒரு குள்ள நரிக்குரிய நயவஞ்சகமும், நஞ்சும், சாகசமும் உடையது. இந்துக்களின் பாரம்பரிய பண்டிகைகளையும், பழக்க வழக்கங்களையும் மாற்ற வேண்டிய தேவை இல்லை என்று அவர்களை பொட்டு வைக்க பூ வைக்க, பொங்கல் வைக்க, தேர் திருவிழா நடத்த அனுமதித்து வஞ்சகமாக அவர்களது அப்பாவித்தனத்தை பயன்படுத்தி மதம் மாற வைக்கும் ஒரு சாத்தானின் கூட்டம் கத்தோலிக்க மதம். அந்த சாத்தானின் ஊளைதான் ஜோவினுடையது. //
    இத்தாலியில் இந்து துறவி ஒருவர் கத்தோலிக்க பாதிரி உடையணிந்து இந்து தருமம் குறித்து போதனைகள் செய்த போது காவல்துறைக்கு புகார் போனதாம். 'மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ணி மதத்தை பரப்ப பார்க்கிறாய். உள்ளே தள்ளிவிடுவோம் என எச்சரித்து அனுப்பினார்களாம். ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோ நல்ல முக்கியமான (மிரர், இல்லஸ்ட்ரேடட் வீக்லி, அல்லது இண்டியன் எக்ஸ்பிரஸ் எது என்று மறந்துவிட்டது) பத்திரிகையில் படித்த ஞாபகம். இந்த சமாச்சாரத்தை தேடி கண்டுபிடித்தால் நலம். இதே principle ஐ நாமும் பயன்படுத்த வேணும்.

    ReplyDelete
  60. //இதே principle ஐ நாமும் பயன்படுத்த வேணும்.//

    ஒருபக்கம் இந்துமதம் எல்லாத்தையும் உள்வாங்கியதுன்னு சொல்றீங்க இன்னொருபக்கம் இப்படிச் சொன்னா எப்படி.

    இந்துமதம் எல்லாத்தையும் உள்வாங்கியதாகவே இருக்கட்டும். மத்தவங்களப் போல மாறிட்டா வித்தியாசம் இல்லாமப் போயிடும்.

    ReplyDelete
  61. //It is impossible to find God outside of ourselves. Our own souls contribute all of the divinity that is outside of us. We are the greatest temple. The objectification is only a faint imitation of what we see within ourselves.

    This is the gist of all worship --to be pure and to do good to others. He who sees Siva in the poor, in the weak, and in the diseased, really worships Siva, and if he sees Siva only in the image, his worship is but preliminary. He who has served and helped one poor man seeing Siva in him, without thinking of his caste, creed, or race, or anything, with him Siva is more pleased than with the man who sees Him only in temples.//

    hats off.
    இந்தமாதிரியான தத்துவார்த்தமான இந்துக் கருத்துக்களை ஏன் நம்ம பதிவர்கள் பரவலாக இடுவதில்லை? விவேகானந்தர் சொல்லும் வெளி விஷயங்களில் மட்டுமே இந்துமதத்தை தூக்கிப்பிடிக்கும் பலருக்கும் வெள்ளை ஆடையில் பைபிளையும் சிலுவையையும் தூக்கிக்கொண்டலையும் மக்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

    ReplyDelete
  62. Anonymous6:22 AM

    ஜடாயு

    முதலில் இந்த ரவி என்னும் மூடன் உங்களை ஒருமையில் விளித்தற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்

    நான் இப்பொழுது அரவிந்தன் பதிவில் இட்டுள்ள பின்னூட்டம் இங்கும் பொருந்தும் ஆதலால் இங்கும் இடுகிறேன்
    **********************************


    அரவிந்தன்

    மீண்டும் ஒரு அற்புதமான கட்டுரை. ஏதோ ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் உத்தியோகத்தில் இருப்பதனாலேயே தன்னை அதி மேதாவிகளாக நினைத்துக் கொண்டு எழுதித் திரியும் விடலைகளுக்கு உங்கள் பதில் நிச்சயம் மண்டையில் ஏறப் போவது இல்லை. இது போன்ற சிறு பையன்களுக்கு பையில் நாலு காசு சேர்ந்தவுடனே எதையும் புரிந்து கொள்ளாமல், படித்துத் தெரிந்து கொள்ள மனம் வணங்காமல் எதையும் ஏளனமாகவும், எடுத்தெறிந்தும் கூசாமல் பேச வைக்கிறது. அறியாமை, கர்வம், துடுக்குத்தனம், இந்து மதத்தின் மேல் இருக்கும் ஆறாத காழ்ப்பு, பாரம்பரிய செல்வங்கள் வரலாறு குறித்த ஞானம் இன்மை போன்ற அனைத்துக் கீழ்த்தரமான குணாதிசயங்களும் ரவி போன்ற சிறுவர்களிடம் பொதுவாக நிலவி வருகிறது. இவர் அது போன்ற சீரழிந்து வரும் சமுதாயத்தில் ஒரு முகம் அவ்வளவுதான். இவர்களுக்கு இது என்று இல்லை தன் வேலை பார்க்கும் துறையில் கூட எதையும் ஆழ்ந்து புரிந்து கொள்ளும் சக்தி பொதுவாக இருக்காது. இது போன்ற பல இளைஞர்களை நான் அன்றாடம் சந்திக்கிறேன். காலத்தின் போக்கில் அடி பட்டு மிதி பட்டு ஒரு சிலர் உணர்வார்கள், ஒரு சிலர் என்றுமே திருந்தாமாலேயே, திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் போயென்ன லாபம் என்று மறைந்து விடுவார்கள்.

    நேற்று பாருங்கள், டோண்டு சார் பதிவில் இந்த அபிஷ்டு உளறி வைத்திருப்பதை, முதலில் வேஷ்டி கட்டியிருப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று லூசுத்தனமாக உளறினார். அதன் பின் நான் சீனிவாச சாஸ்திரி பற்றிக் கூறியதும் உடனே யார் சாஸ்திரி, எனக்கு மேஸ்திரி தான் தெரியும், சாஸ்திரி யார் கொடுத்த பட்டம் என்றெல்லாம் மேலும் மேலும் அடுக்கடுக்காக உளறிக் கொட்டியுள்ளார். ஏதோ ஒரு சினிமாவில் ஒரு தற்குறி பேசும் வசனத்தைக் கேட்டுக் கொண்டு உளறிய உளரல் அது. சாஸ்திரி பண்டிட் என்பதெல்லாம் அந்தக் காலக் கட்டதில் எப்படி பயன்படுத்தப் பட்டன, சீனிவாச சாஸ்திரி யார் என்பது போன்ற எவ்விதமான அறிவும் கிஞ்சித்துக் கிடையாது ஆனால் எதையெடுத்தாலும் கேள்வி கேட்கவும் ஏடாகூடமாகவும் லூசுத்தனமாகவும் எழுத மட்டும் தெரியும். இது போன்ற பிறவிகளை உங்கள் கட்டுரை திருத்துமானால் மகிழ்ச்சியே. ஆனால் இவர் இந்து மதத்தில் மேல் உமிழும் விஷத்தைப் பார்த்தால் வெறும் விடலைத் தனமான சண்டியர்த்தன உளறல் மட்டுமல்லவோ, தான் சார்ந்த கத்தோலிக்க மதத்தின் விஷமப் பிரச்சாராமோ , அப்பாவி வேடம் போட்டுக் கொண்டு காழ்ப்புணர்வை காறி உமிழ்கிறாரோ என்ற சந்தேகமும் கடுமையாக ஏற்படுகிறது.

    ஏன் பஜ்ரங்தள் ஆட்களுக்கு ஆங்கிலம் தெரியாதா ? அமெரிக்காவில் வந்து பார் எத்தனை எத்தனை பெரிய பெரிய விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், உன்னைப் போல (அரைகுறை டெஸ்டிங் வேலைக்கே இந்த கர்வம்)அல்லக்கை அல்லாத பெரும் பெரும் கம்பெனி சி இ ஓக்களும் இந்து சபைகளில் உறுப்பினராக இருப்பதைப் பார். முதலில் அடக்கத்தைக் கற்றுக் கொள்.

    இறுதியாக ஒன்று, பொங்கல் தீபாவளி போன்று நூற்றுக்கணக்கான பண்டிகைகள், இயற்கையை வணங்க எங்கள் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்து இந்து மதத்தின் வேர்களாக விரிந்து இருப்பது. இதைப் போய் இது பொதுப் பண்டிகை, கிறிஸ்துவப் பண்டிகை என்று எந்த நாயோ, ஐயாவோ ஜல்லி அடிக்குமானால், அந்த நாய்களை செருப்பால் அடிக்க வேண்டும். விளக்குமாறு பிய்ந்து போகும் அளவுக்கு அடிக்க வேண்டும். ஏண்டா அல்லக்கைகளா நாங்கள் என்ன ரம்சானையு, கிறிஸ்மஸ்ஸையும், இந்துப் பண்டிகை என்று சொல்லுகிறோமா, தாராளமாகப் பொங்கல் கொண்டாடு ஆனால் அது இந்துக்களின் பாரம்பரியப் பண்டிகை என்ற உணர்வை மதித்து விட்டுக் கொண்டாடு.


    பாம்புக்கு ஏன் புற்றில் பால் கொடுக்கிறார்கள் என்பதன் தாத்பர்யம் உன் அரைகுறை அறிவுக்கு எங்கே ஏறப் போகிறது ? பாம்பு என்பது வயல்களில் விவசாயிகளின் தோழன், அங்கே திரியும் எலிகளைக் கொன்று விவசாயிகளின் பயிர்களை நாசமாக்காமல் காக்கும் தெய்வம், அதற்கு விவசாயிகள் செலுத்தும் நன்றி அது. ஆனால் வீட்டுக்குள் நுழைந்தால் அன்றி அனாவசியமாக யாரும் அதைக் கொல்ல மாட்டார்கள். உனக்கு விஞ்ஞானமும் தெரியாது ஆன்மீகமும் தெரியாது அச்சு பிச்சென்று உளற மட்டும் தெரியும். இந்தப் பொறுக்கித் தனத்தையெல்லாம் வேறு இடத்தில் வைத்துக் கொள்.

    வரதன்

    ReplyDelete
  63. Anonymous9:17 AM

    உலகம் முழுவது ஹிந்துத்துவா பரவி இஸ்லாமியர்களும் கிருத்துவர்களும் அழிய வேண்டும் என்று நீங்கள் நம்புவதாக செந்தழல் ரவி கருதுகிறார்.

    கிருத்துவ மதம் அழிய வேண்டும் என்று நீங்கள் நினைப்பதாக அவர் நினைப்பது அவரை கோபம் கொள்ளச் செய்துவிட்டது.

    என்றாவது அவர் உலகம் முழுவதும் கிருத்துவம் பரவ வேண்டும் என்று பாசத்தோடு (!) செயல்படும் சகோதரர்களை எதிர்த்து கண்டதுண்டா?

    இந்த அன்பு சகோதரர்களின் புனித போரை எதிர்க்கும் ஆர் எஸ் எஸ், பஜ்ரங்க்தள், மற்றுமிருக்கின்ற ஓரிரு மனித நேயர்களை கிண்டல் செய்வதைத் தவிர அவரது புரட்சி வேறு எங்கும் பரவுவதை கண்டதுண்டா?


    எதன் அடிப்படையில் அவரை ஒரு மனித நேயம் உள்ளவர் என்று உங்களால் தீர்மானிக்க முடிந்தது?

    ReplyDelete
  64. ஜடாயு,

    இன்றைக்கு இந்து என்பது ஒரு அடையாளம், தமிழர் என்பது ஒரு அடையாளம்.

    பொங்கல் என்பது ஒரு இந்து பண்டிகை என்று சொல்வதற்கு உங்களுக்கு இருக்கிற உரிமைகளை விட, தமிழர் பண்டிகை என்று கூறுவதற்கு எங்களுக்கு அதிக உரிமை இருக்கிறது. (தமிழனுக்கு என்று ஒரு பண்டிகை இருப்பது உங்களுக்கு ஏன் இடிக்கிறது.?)

    இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவதாலேயே அது இந்துப் பண்டிகை என்று ஆகிவிடாது. ( நான் இங்கு இந்து மதம் என்பதை சனாதன நிறுவன மதத்தை மட்டுமே கூறுகிறேன். இதைப் பின்பற்றுபவர்கள் சிறுபான்மையினர்தான். மீதம் இருப்பவர்கள் பாகன்கள் அல்லது மதமற்றவர்கள். இவர்களுக்கும் சேர்த்து இந்து என்ற அடையாளத்தை ஆங்கிலேய நிர்வாகம் வழங்கிவிட்டது குழப்பங்களை உண்டாக்குகிறது.)

    கிறித்தவத்தைப் போலவே சனாதன மதமும் (இந்து) பாகன் (மதமற்ற மக்களின்) மரபுகளை உள்வாங்கியே வளர்ந்து வந்துள்ளது. ஆகவே, பொங்கல் என்பது தமிழர் பண்டிகை, மதமற்ற பெருங்குடி தமிழ் மக்களின் பண்டிகை. சனாதனம் அதனை இலேசாக உள்வாங்கி வைத்திருக்கிறது. மீதியை நீங்கள் பதிவு போட்டு உள்வாங்கிக்கொண்டிருக்கிறீர்கள்.

    --
    ஞாயிறு அசுரன்.

    ReplyDelete
  65. முழு பதில் இங்கு உள்ளது:
    http://pakutharivu.blogspot.com/2007/01/blog-post.html

    ReplyDelete
  66. அனானிமஸ் எழுதினார்: "அருணகிரி
    கடலோர கிரமத்தின் கதையில் காபிராக சொல்லப்படும் மொழி ஆங்கிலம்(பக்கம்72,73), தமிழ் அல்ல.உம்ம இஸ்லாமிய வெறுப்பு என்ன சொல்ல"

    இல்லை அனானிமஸ், காபிர் மொழியான தமிழை கரும்பலகையில் எழுதியதற்காக மாணவன் ஒருவனை மதராசாவில் பிரம்பு முறியும்வரை மோதினார் அடிப்பது இரண்டாவது அத்தியாயத்திலேயே வந்துள்ளது. ஒருவேளை தோப்பில் முகமது மீரானுக்கும் இஸ்லாமிய வெறுப்போ?

    அதனை அப்படியே பதிகிறேன், படித்துக்கொள்ளுங்கள்:
    -----------------------------------
    "எலப்ப! எலப்ப! ஐதுருஸு போடுல தமிழ் எழுதினான்"

    "என்னா?" மோதினார் நடுங்கினார். செய்யக்கூடாத பாவத்தைச் செய்ததைக் கேட்டது போல ஒரு நடுக்கம். மோதீனின் கண்கள் நெருப்பைக் கக்கின. "இறைவனின் திருவேதத்திலுள்ள வசனங்களை எழுதும் போர்டில் காபிர்களின் மொழியை எழுதுவதா?"

    "எங்கலே அவன்" மோதின் அலறினார்.

    ஐதுரூஸ் ஒரு மூலையில் கோழிக்குஞ்சைப்போல் பயந்து நின்றான். ஒன்றிரண்டு பையன்கள் சேர்ந்து அவன் கையை இழுத்தனர். "இங்கயிருக்கான்"

    "வாலே, பண்ணி" மோதின் துள்ளினார்.

    "நான் எழுதல்ல"

    "எழுதுனான், வாப்பாண எழுதுனான்" எல்லாக்குழந்தைகளும் உரக்க சாட்சி சொன்னார்கள்.

    எங்கல கம்பு" மோதினின் கண்கள் பற்றி எரிந்தன. வாரியில் மாட்டியிருந்த நீண்ட கம்பை எடுத்துகொடுத்தார்கள் மாணவர்கள். மோதின் கம்பை வாங்கினார்.

    "வாலெ, ஷைத்தானே !"

    "குர்ஆன் எழுதுற போடுல என்னலெ எழுதுனா?" மோதின் ஐதுரூஸின் கையைப் பிடித்தார்.

    "இல்லை எலப்ப, நான் எழுதல்லெ"

    "ஹமுக்கு!" மோதின் பல்லைக் கடித்தார். கம்பு உயர்ந்தது. பலமாக அவனுடைய தொடையிலும், உடம்பின் எல்லாப்பகுதிகளிலும் அடி விழுந்தது. ஐதுரூஸ் தரையில் கிடந்து அடிபட்ட பாம்பு போல் நெளிந்தான்.

    "அல்லோ! வாப்போ!! நான் இனி எழுத மாட்டேன்"

    மோதினுக்கு ஹால் இளகியது. விட மனமில்லை. பேரைக்கம்பு ஒடியும்வரை அடித்தார்.
    ----------------------------------

    போதுமா அனானிமஸ் அவர்களே?

    ReplyDelete