தமிழில் எழுத வேண்டும் என்று எண்ணி எப்படி என்று தெரியாமல் முழிப்பவர்களுக்க்காக இந்த வலைப்பூவை (web log) மடலவிழ்க்கிறேன். How to write Tamil blogs?
ஒன்றும் பிரமாதமில்லை. வழக்கமாக செய்வது போல ஒரு blogger id உருவாக்கிக் கொள்ளுங்கள் - இந்த வலைத்தளத்திலேயே அதை செய்யலாம். பிறகு ஆங்கிலத்திற்குப் பதிலாக, தமிழில் டைப் செய்ய வேண்டியது - அவ்வளவு தான் - இதற்கான வழிமுறைகளுக்கு இங்கே பாருங்கள்!. ஏற்கனவே முரசு அஞ்சல் போன்ற தமிழ் மென்பொருள்களைப் பயன் படுத்தியிருந்தால் இது இன்னும் எளிது.. இல்லையென்றால் ஒரு புதிய கீ-போர்ட் அமைப்பைக் கற்றுக் கொண்டு விடலாம் மிக எளிதாக !
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்
- பாரதி
ரொம்ப நன்றி.. இத வெச்சு இப்ப தமிழ்ல எழுத ஆரம்பிச்சுட்டேன்!
ReplyDelete