Monday, September 25, 2006

R.S.S. வகுப்புவாத-இயக்கமல்ல: பாதிரியார்-ஆய்வு-முடிவுகள்

" ஆர். எஸ்.எஸ் கண்டிப்பாக பாசிச, அடிப்படைவாத, இனவாத இயக்கம் அல்ல, ஆனால் அதை முழுமையான தேசியவாத இயக்கம் என்றும் சொல்ல முடியாது" என்று கேரளத்தைச் சேர்ந்த கிறிஸ்தவப் பாதிரியார் டாக்டர். வின்சென்ட் கூடங்குளம் தனது முனைவர் பட்டத்திற்காக ஆர். எஸ்.எஸ். இயக்கம் பற்றி செய்த ஆராய்ச்சிகளில் தெரிவிக்கிறார். இந்தக் கருத்துக்கள் சும்மா வெகுஜன அபிப்பிராயத்தையும் ஊடகச் செய்திகளையும் மட்டும் கணக்கில் கொள்ளாமல், நிரூபிக்கப் பட்ட உண்மைகளின் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் என்பதால் முக்கியத்துவம் பெறுகின்றன. இப்படிப்பட்ட ஒரு ஆராய்ச்சிக்கு அனுமதியும், உதவியும் அளித்த கிறிஸ்தவக் கல்வி அமைப்புக்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவை.

முழு விவரங்கள் இங்கே.

"When I broached the idea of writing a book on my research findings on the RSS, some of my co-religionists cautioned me that the RSS men would beat me up if I wrote something against them. I have in my assessment of the RSS tried to be as objective as possible. It is of immense satisfaction to me that my book is well-received in the church and RSS circles," said Fr. Kundukulam in an interview at the Pontifical Seminary.

ஆர். எஸ். எஸ். இயக்கத்தினர் கருத்து சுதந்திரத்திற்கு வழங்கும் மரியாதைக்கும், மாற்றுக் கருத்துக்கள் உண்மைகளின் அடிப்படையில் கூறப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளும் நல்ல பண்பிற்கும் இது சான்று. அடிப்படைவாதம், பாசிசம் போன்ற விஷயங்கள் இந்திய, இந்து மதப் பண்பாட்டில் பொருளற்றவை என்றும் அவர் ஆணித்தரமாகச் சொல்லுகிறார்.

The ideology of the RSS and the way in which it is interpreted by the Sangh leaders borrowing modern terminology have no camparison to the sense in which the term fundamentalism was used in America. So also, fascism and Nazism do have distinct meanings in the socio-political contexts that prevailed in Italy and Germany which have no bearing in the Indian context.

ஆர். எஸ்.எஸ். பழமைவாத இயக்கம் அல்ல என்றும், காலத்திற்கேற்றாற்போல தன் கருத்துக்களில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது என்றும் கூறும் அவர், சமூக சேவை என்ற விஷயத்தை மிஷநரிகளிடம் கற்றுக் கொண்டு, அதில் வியக்கத்தக்க அளவில் ஆர்.எஸ். எஸ் இயக்கங்கள் சாதனை புரிந்துள்ளதாகவும் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

One admirable aspect of the RSS, Fr Kundukulam says, is its flexibility to move with the times and to adopt the best from other socio-cultural-religious movements. It learnt the rudiments of social work from the missionary organisations of the church and mass mobilisation techniques from the communists.

மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் ஒழுக்கம், சேவை மனப்பான்மை, இளைஞர்களுக்கு அவர்கள் தரும் பயிற்சி இவை பற்றியும் உயர்வாகக் கூறுகிறார்.

He admires the RSS for the dedication and discipline of its cadres, the simple life style of its pracharaks, the moral teaching it imparts to the younger generation in its daily sakhas, and the voluntary labour put in by its cadres at critical times such as natural calamities.

இன்னொரு முக்கியமான கருத்து - தங்கள் எண்ணிக்கை பலத்திற்கேற்ற முக்கியத்துவம் அரசியல் மற்றும் சமூக விஷயங்களில் கிடைக்கவில்லை என்று உளவியல் ரீதியாக இந்து சமுதாயம் கருதுவாகவும், ஆர். எஸ்.எஸ்.-ன் வளர்ச்சிக்கு இதுவே காரணம் (மற்ற மதங்களின் பேரில் இந்துக்கள் சிலருக்கு துவேஷம் இருப்பதனால் அல்ல) என்றும் அவர் கூறுகிறார்.

Indian society, Fr Kundukulam feels, is in a "vicious circle" with the majority Hindu community suffering from a "psychological inferiority complex" on account of its failure to have a proportionate say in the governance of the country in spite of its numerical superiority and the minorities always suspicious of the majority community.

கடைசியாக சொல்வது ரொம்ப முக்கியமானது - சிறுபான்மை அடிப்படைவாதம் சங்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரியும் என்பது அது.

The growth of minority fundamentalism would only strengthen the RSS.

26 comments:

  1. Matter புதுசா இருக்கு.

    அது சரி! இந்தியால பார்த்தா உங்கள் இந்த பக்கங்கள் வெள்ளையாகவும், US-ல பார்த்தா உங்க பக்கங்கள் dark color-லையும் தெரியுது?

    ReplyDelete
  2. சீனு ஐயா, வருகைக்கு நன்றி.

    // இந்தியால பார்த்தா உங்கள் இந்த பக்கங்கள் வெள்ளையாகவும், US-ல பார்த்தா உங்க பக்கங்கள் dark color-லையும் தெரியுது? //

    ம்.. புரியவில்லையே. சரி! அதெப்படி இவ்வளவு சீக்கிரம் இரண்டு இடங்களிலும் போய் பக்கங்களைப் பார்த்தீர்கள்? வாயு-வேகம் மனோ வேகமா இல்லை ஏதாவது speicific server வழியாக நுழைந்து பார்த்தீர்களா?

    ReplyDelete
  3. நல்ல பதிவு.

    ஆர்கனைஸரிலோ எங்கோ படித்திருந்தேன்.

    அதை பதிவாக போட்டதற்கு நன்றி

    ReplyDelete
  4. நன்றி ஜயராமன் ஸார்.

    // ஆர்கனைஸரிலோ எங்கோ படித்திருந்தேன் //

    நீங்கள் ஆர்கனைஸர் பத்திரிகை படிப்பது அறிந்து மகிழ்ச்சி :))

    ReplyDelete
  5. Anonymous10:02 PM

    நல்ல பதிவு. லூசுகள் படித்து நம்பி மகிழ்வர்.

    ReplyDelete
  6. ஜடாயு, நீங்கள் அமெரிக்காவில் இருப்பதாக ஊகித்திருந்தேன் ஆனால் பெங்களூரில் இருப்பது இப்போதுதான் தெரிந்தது.

    RSS பற்றி அறியும் ஆர்வம் உங்கள் பதிவை படித்ததும் அதிகரிக்கிறது.

    நம் மத சார்பற்ற அரசியல் கட்சிகள், இணைய இஸ்லாமிஸ்ட்கள், BJP உடன் கூட்டு வைக்காத போது திராவிட கழகங்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் RSS ஒரு பெரிய தீவிரவாத இயக்கம் என வெள்ளை அடிக்கிறார்களே அதெல்லாம் பொய் என தெரிந்தாலும், இது போல் வெளிநாட்டிலிருந்தும் அவர்களை பற்றி ஒரு நியுட்ரல் ஆய்வு RSS மேல் உள்ள மதிப்பை அதிகப் படுத்துகிறது

    ReplyDelete
  7. //வாயு-வேகம் மனோ வேகமா இல்லை ஏதாவது speicific server வழியாக நுழைந்து பார்த்தீர்களா?//

    speicific server வழியாக. It is a US Server through RDC. But still I can see two different templates, one through India (WhitE) and another through US server (Dark Green dotted one).

    ReplyDelete
  8. நன்றி கால்கரி சிவா அவர்களே.

    இந்தியாவில் மீடியாவின் துஷ்பிரசாரம் ஆர். எஸ். எஸ்-ஐப் பற்றி உண்மைக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத விஷயங்களின் அடிப்படையிலானது. சங்கம் சார்ந்து இயங்கும் பல சேவை அமைப்புகளின் பணியை நேரடியாக பெங்களூரில் நான் பார்த்திருக்கிறேன். மீடியா உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்திற்கு நேர்மாறாக இருந்தது அது.

    ReplyDelete
  9. சீனு அவர்களே, template இரண்டு விதமாகத் தெரிவது குறித்துக் கூறியதற்கு நன்றி. எழுத்துக்களைப் படிப்பதில் பிரசினை இருக்காது என்று நம்புகிறேன்.

    இதற்காக template-ஐ மாற்றி இன்னும் பெரிய ப்ளாக்கர் பாதிப்பில் மாட்டிக்கொள்ள வேண்டுமா என்று யோசிக்கிறேன்.

    ReplyDelete
  10. சிறந்த பதிவு!
    ஒரு சேவை அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் சேவை தொடரட்டும்!!!

    அன்புடன்,
    இந்தியன்.

    ReplyDelete
  11. ஜடாயு,

    //கடைசியாக சொல்வது ரொம்ப முக்கியமானது - சிறுபான்மை அடிப்படைவாதம் சங்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரியும் என்பது அது.//

    இதுவும் போலி sickularistகளும் சங்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் துனை தான்.

    நீங்கள் இங்கே சொல்லி வைத்தீர்கள்..அங்கே லக்கிலுக் அதை சரி என்று நிருபித்து வைத்தார்.

    ReplyDelete
  12. ம்...காலபோக்கில் ஆர்.எஸ்.எஸ் ஸின் எந்தெந்த கொள்கைகள் மாறியுள்ளன என்று போட்டிருக்கலாம் ஜடாயு அவர்களே...இயற்கை பேரழிவுகளின் போது அவர்கள் செய்யும் சேவை நல்ல பெயரை பெற்று தந்திருக்கிறது என்பது உண்மை.

    சிறுபான்மை அடிப்படைவாதம் இவர்கள் வளர்ச்சிக்கு துணை நிற்கிறது என்பது உண்மைதான். ஆனால் சிறுபான்மை அடிப்படை வாதம் வளருவதற்கும் காரணமும் இவர்கள் தான்.They complement each other.

    கிறிஸ்தவ மிஷனரிகளிடம் இருந்து எந்த சேவையை இவர்கள் கற்றார்கள் என்று தெரியவில்லை.தாழ்த்தப்பட்ட மக்களிடம் எந்த அளவிற்கு இவர்கள் நெருங்கியுள்ளார்கள் என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி சமுத்ரா அவர்களே.

    // இதுவும் போலி sickularistகளும் சங்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் துனை தான். //

    சரியாகச் சொன்னீர்கள். லக்கிலுக் போன்ற செக்யூலர் ஆசாமிகள் போடும் கூப்பாடுகள் தான் சங்கத்திற்கு விளம்பரங்கள்.

    இவ்வளவு எதிர்ப்புக்கள் இருந்தும் இன்னும் அடிப்படையில் ஒரு பாசிடிவ் இயக்கமாகவே ஆர்.எஸ்.எஸ். இருந்து வருவது குறிப்பிடத் தக்கது.

    ReplyDelete
  14. வருகைக்கு நன்றி முத்து தமிழினி அவர்களே.
    // காலபோக்கில் ஆர்.எஸ்.எஸ் ஸின் எந்தெந்த கொள்கைகள் மாறியுள்ளன என்று போட்டிருக்கலாம் ஜடாயு அவர்களே //

    பாதிரியார் ஆய்வு முழுதும் இன்னும் வெளிவரவில்லை - அதனால் அவர் எவற்றைக் குறிப்பிடுகிறார் என்பத்ஜு தெளிவாக இல்லை.

    சில விஷயங்கள் - காந்தியின் முஸ்லீம் appeasement-ஐ எதிர்த்தாலும், அவரது சுதேசி, கிராம பொருளாதாரம், எளிய வாழ்க்கை முதலிய காந்தீய சிந்தனைகளப் போற்றி சங்கம் ஏற்றுக் கொண்டது. பல தலித், வனவாசி மக்களை இந்துப் பாரம்பரியத்தில் இணைத்தது. நாடு முழுவதும் இருக்கும் எல்லா துறவிகளையும் கூட்டி அவர்கள் வாயிலாகவே தீண்டாமைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது.. அம்பேத்கரைப் போற்றி அவரது சமரசக் கொள்கைகளை ஏற்றது - இப்படிப் பலது சொல்லலாம்.

    // ஆனால் சிறுபான்மை அடிப்படை வாதம் வளருவதற்கும் காரணமும் இவர்கள் தான்.They complement each other //

    இது தவறு. முதலில் முஸ்லீம்-லீக் தான் ஆரம்பித்தது. காங்கிரஸ் அதை எதிர்ப்பதை விட்டு appeasement வழியில் போனது. இந்து ஒருங்கிணைப்பு என்பதைத் தான் ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தி வந்திருக்கிறதே அன்றி, அடிப்படைவாதத்தை அல்ல. அதன் தலைவர்களில் பெரும்பாலோர் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள்.

    // கிறிஸ்தவ மிஷனரிகளிடம் இருந்து எந்த சேவையை இவர்கள் கற்றார்கள் என்று தெரியவில்லை //

    இதுவும் பாதிரியார் கருத்து. இப்போதைய புள்ளிவிவரங்கள் படி சங்கம் மற்றும் இந்து மதம் சார்ந்த அமைப்புகள் கல்வி, சுகாதாரம் மற்றூம் சமூக சேவையில் பெரும்பங்கு வகிக்கின்றன - இது பெரிதாக விளம்பரப் படுத்தப் படாததாலும், distributed ஆக இருப்பதாலும் பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை, ஆனால் ஆராய்ச்சியில் தெளிவாகத் தெரிந்துள்ளது.

    இதற்கான தூண்டுதல் மிஷிநரிகளிடம் இருந்து ஓரளவு வந்திருக்கலாம். ஆனால், விவேகனானந்தர், சகோதரி நிவேதிதா போன்றவர்களின் சமூக விழிப்புணர்வுக் கருத்துக்களே முக்கிய சக்தி என்று நான் நினைக்கிறேன்.

    // தாழ்த்தப்பட்ட மக்களிடம் எந்த அளவிற்கு இவர்கள் நெருங்கியுள்ளார்கள் என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று //

    சங்கம் பற்றி தலித் தலைவர்: என்னுடைய பழைய பதிவு ஒன்றைப் பாருங்கள் - http://jataayu.blogspot.com/2006/09/dalit-panthers.html

    இது பற்றி முடிந்தால் ஒரு விரிவான தனிப்பதிவு போடுகிறேன் - சில ஆர்.எஸ்.எஸ். நண்பர்களின் உதவியுடன். தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் சங்கத்தைப் பற்றி எதிர்மறைப் பார்வையை உருவாக்கியிருக்கின்றன. ஆனால், நாட்டின் பல பகுதிகளில் சங்கம் தலித்துகளின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டுள்ளது என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  15. // ஆனால் அந்த பாதர் சொல்றாரு சேவை செய்றத நாம மிசிநரிகிட்ட இருந்து கத்துட்டோ மா? இதுக்கு பெயர்தான் typical Christian arrogance and ignorance. //

    அரவிந்தன், உங்க கோபம் புரியுது. சேவை என்ற கருத்து நம்ம இந்து தர்மத்தில் பழங்காலம் முதல் இருக்கிறதே - "யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை, யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி" என்று திருமூலர் சொல்லவில்லையா?

    ஆனால் "rudiments of social work" அப்படின்னு தான் பாதர் சொல்றார். ஒரு ஸ்தாபன அமைப்பாக வெகு காலம் கல்வி, சுகாதார சேவைகளை செய்து வந்ததில் மிசநரிகளுக்கு அனுபவம் அதிகம் என்பதை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். திட்டமிடுதல் logistics, நன்கொடை வசூலித்தல், சேவை அமைப்பு நிர்வாகம், விளம்பரம் தேடுதல் (!!!) - இவற்றில் சிலவற்றை நாம் கண்டிப்பாக மிசநரிகளிடல் இருந்து கற்றால் அதில் தவறொன்றும் இல்லை. ஒரு தொழில்நுட்பத்தைக் கற்பது போன்றது தான் இது.

    இந்த விஷயங்களில் இன்னும் கொஞ்சம் முன்னேறினால், சங்கம் மற்றும் இந்து அமைப்புகளின் சேவையின் வீச்சு இன்னும் அதிகமாக உணரப் படும்.

    ReplyDelete
  16. //
    ஆனால் சிறுபான்மை அடிப்படை வாதம் வளருவதற்கும் காரணமும் இவர்கள் தான்.They complement each other
    //

    வினாயகர் சதுர்த்தி, துர்கா பூஜா போன்ற பூஜைகளிலும் கூட்டுப் பிரார்த்தனைகளிலும், ஜன்மாஷ்டமி கூட்டுப் பிரார்த்தனைகளிலும் சிறுபான்மையினர் அழிந்து தூய இந்து ஆட்சி மலரவேண்டும் என்று யாரும் வேண்டுவதில்லை.

    ஆனால், ரமலான் கூட்டுப் பிரார்த்தனை, சாதாரண வெள்ளிக்கிழமை ஜுமா பிரார்த்தனையில் காபிர் இந்துக்கள் அழிந்து தூய இஸ்லாமிய ஆட்சி மலரவேண்டும் என்று பிரார்த்திக்கின்றனர். அதை எதிர்ப்பதை விடுத்து சிறுபான்மையினர் என்ற காரணாத்திற்காக அவர்களை அரவணைத்துச் செல்லவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட இடது சாரி சிந்தனையாளர்கள் உள்ளனர்.

    எது தீவிரவாதம்...Who compliments whome here..?

    ReplyDelete
  17. Anonymous1:22 PM

    ஜாதி வெறி பிடித்து அலையும் திராவிடக் கொழுந்துகளுக்கு RSS பற்றி தவறான கருத்து இருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

    பாலா

    ReplyDelete
  18. சேவை, தர்மம் போன்றவை இந்து மதத்தில் புதியவை அல்ல. அது ஆதாம் ஏவாள் போன்றவர்கள் தோன்றுவதற்கு முன்னமே இருந்தது.
    கிறித்துவ மிஷினரிகளும், இஸ்லாமிய ஜகாத்தும் தான் கண்டுபிடித்தன என ஜல்லியடித்து வெற்றிக் கண்டுவிட்டார்கள்.

    தேவை ஒரு பி.ஆர்.

    ஏகல் பற்றிய ஒரு கருத்தருங்கில் கலந்து கொண்டேன் அதைப் பற்றிய செய்திகள் எங்கும் காணாம். ஆனால் அன்னை தெரசாவின் சேவைகளை சிலிர்த்து சொல்லும் ஊடகங்களும் சௌதி மன்னரின் "தயாள" குணத்தை சிலாக்கிக்கும் இணைய இஸ்லாமிஸ்ட்களும் இங்கு அதிகம்

    ReplyDelete
  19. அது எப்படி சார் சீரியசா முகத்தை வைத்துக் கொண்டு ஒரு சிரிப்புப் பதிவை எழுதினீர்கள்?

    கீழே பார்ப்பன ஜால்ராக்களின் தொல்லை அதை விட ஜோர்!

    ReplyDelete
  20. RSS- என்ற ஒரு மாபெரும் இயக்கத்தினைப் பற்றி ஊடகங்கள் கூறுவதனைத்தும் கற்பனையே. அவர்களின் தன்னலமற்ற பொதுச் சேவையை இயற்கை சீரழிவுகளுடனான அந்த கடினமான நாட்களில் அருகிலிருந்தே பார்த்து, அனுபவித்தவன் என்ற முறையில், அவர்களின் நோக்கத்தில் எந்த குற்றத்தையும் காண முடியவில்லை. செத்த பிணங்களிடமிருந்தும், அவர்களின் உறவினர்களிடுருந்தும் காசு பிடுங்கிய மற்றைய சில 'சேவை' அமைப்பின ரவுடிகளிமிருந்து முற்றிலும் மாறுபட்டது அவர்கள் சேவை. அந்த ரவுடிகளே rss அமைப்பினர் பணியிலிருந்த இடங்களுக்கு வர அஞ்சி ஓடிய காட்சிகளும் மனதிலிருந்து மறையாது. அவர்கள் விட்ட கண்ணீர் நிஜம். ஒரு நாள் கூத்தோடு நின்றுவிடவில்லை அவர்கள் பணி. சீரமைப்புப் பணிகளும் முற்றிலும் முடியும் வரை தங்கியிருந்து உதவி, மக்கள் தங்கள் குடும்பதினராகவே எண்ணும் படி வைத்தது அவர்கள் பணி. இவர்களுக்கு எந்த வித பணமுடிப்பகளும் கிடையாது. எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. அங்கு வந்த அனைவரும் சாதாரண நிலையிலிருக்கும் மத்திய தர மக்களே. அங்கு சாதி, மத பேதம் இருக்கவில்லை. எந்த பிரதிபலனும் எதிர்பாராத அந்த சேவை மனப்பான்மை நம்போன்ற சாதாரண ஜனங்களுக்கு சாத்தியமில்லை. அங்கு கற்றுத் தரப்படும், ஆன்மிகத்துட இணைந்த, உடற் பயிற்சியே, உடலாலும், மனதாலும் அவர்களை உறுதியாக்கியிருக்கும் என் நினைக்கிறேன். அவ்வாறு வந்து சேவை செய்தவர்களில் படித்த, பார்ப்பன இளைஞர்களும், இளைஞிகளும் அடக்கம்.

    rss-ல் இருந்து பின்பு 'திருந்தி' விட்டதாக கூறும் ராஜாவனஜ் அவர்கள் அந்த இயக்கத்தை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடே பல பதிவுகளிட்டு வருகிறார். அவரே rss-ல் இருந்த காலத்தில் எப்பொழுதாவது வன்முறை செய்யவும், மற்ற சமூகதினரை அவதூறாக பேசி மற்ற நாச காரியங்களுக்கு திட்டமிட்டனரா? என்பது போன்ற விவரங்களையும் மனசாட்சிக்கு பயந்து விளக்குவாரா?

    ReplyDelete
  21. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கிருஷ்ணா அவர்களே.

    // எந்த பிரதிபலனும் எதிர்பாராத அந்த சேவை மனப்பான்மை நம்போன்ற சாதாரண ஜனங்களுக்கு சாத்தியமில்லை //

    உண்மை. ஒத்துக் கொள்கிறேன்.

    // அவ்வாறு வந்து சேவை செய்தவர்களில் படித்த, பார்ப்பன இளைஞர்களும், இளைஞிகளும் அடக்கம். //

    உண்மை. உண்மை. அவர்கள் கழிப்பறைகள் கூடக் கட்டியதாக அரவிந்தன் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார்.

    // அவரே rss-ல் இருந்த காலத்தில் எப்பொழுதாவது வன்முறை செய்யவும், மற்ற சமூகதினரை அவதூறாக பேசி மற்ற நாச காரியங்களுக்கு திட்டமிட்டனரா? என்பது போன்ற விவரங்களையும் மனசாட்சிக்கு பயந்து விளக்குவாரா? //

    சரியான கேள்வி. அவரது பதிவில் போய் இதைப் பின்னூட்டமாகப் போடுகிறேன். என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

    ReplyDelete
  22. // அது எப்படி சார் சீரியசா முகத்தை வைத்துக் கொண்டு ஒரு சிரிப்புப் பதிவை எழுதினீர்கள்? //

    நன்றி விடாது கருப்பு அவர்களே.

    சில சமயம் உண்மை கசப்பாக இருப்பது போல, சில சமயம் காமெடி போலவும் இருந்து விடுகிறதே! என்ன செய்வது?

    ReplyDelete
  23. "இதற்கான தூண்டுதல் மிஷிநரிகளிடம் இருந்து ஓரளவு வந்திருக்கலாம். ஆனால், விவேகனானந்தர், சகோதரி நிவேதிதா போன்றவர்களின் சமூக விழிப்புணர்வுக் கருத்துக்களே முக்கிய சக்தி என்று நான் நினைக்கிறேன்"

    ஸமூக ஸேவை என்பதே தங்களுடைய கண்டுபிடிப்புத்தான் என்கிற கிருத்துவ ப்ரோப்பகாண்டாக்களின் வெற்றியையே இந்தக் கருத்தும் விளக்குகின்றது. மதத்தை அமைப்புரீதியாக மாற்றியதிலிருந்து, ப்ரஹ்மச்சரியம் முதலான விஷயங்களை மற்ற உலகத்தோற்கும் பரப்பிய புத்த மதத்தினர் கைக்கொண்ட விஷயம் அல்லவா பொதுஜன ஸேவை என்பது. நோயாளிகளுக்கும், ஸமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்களுக்கும் உதவுவதை உயர்வான ஆன்மீகப் பயிற்சியாக பரப்பியது இவர்கள் அல்லவோ.

    புத்த மதத்திலிருந்து இவற்றை தன்வயப்படுத்திக்கொண்டு, ஆனால், அதன் தன்னலமற்ற தன்மையை மட்டும் விலக்கிவைத்துவிட்டு, கிருத்துவர்களாக மாற உறுதி அளிப்பவர்களுக்கு மட்டும் ஸேவை செய்துவரும் இவர்களின் பணியை ஸ்வாமி விவேகானந்தர், ஸகோதரி நிவேதிதா தூண்டிய ஸேவைகளுக்கு நிகராக்கவே முடியாது.

    இயேஸு பிரானே ஒரு புத்தமதப் பிரிவைச் சேர்ந்தவர் என்று அறுதி செய்யும் ஆதாரங்கள் கிடைத்துள்ளபோது, மக்களை கொன்றழித்து சடலங்களின் எரியூட்டலில் குளிர்காயும் ரோமானிய தத்துவங்களோடு தங்களை அடையாளம் காண்போர் செய்யும் செயல்களை எல்லாம் ஸேவை என்றே கூற முடியாது.

    ஆயுர்வேதத்தின் பல கருத்துக்களை கொடுத்தவர்கள் ஜைனர்கள். இதற்குக் காரணம் நோயாளிகளுக்குத் தொண்டு செய்வது ஒரு மிகப்பெரிய ஸேவை என்று ஜைனர்கள் கருதியதால்தான்.

    இன்னும் சொல்லப்போனால் ஒரு ஹிந்துவின் அன்றாடக் கடமையாகச் சொல்லப்படும் விஷயங்களில் எளியவருக்கு உதவுவதும், விலங்கு பறவைகளுக்கு உணவிடுவதும் ஒன்று. அன்றாடம் செய்யவேண்டிய செயலை புத்த, ஜைன மதத் துறவியர் தம் கர்மங்களாகக் கொண்டனர்.

    எல்லா விதத்திலும் நிஜமான ஸமூக ஸேவை என்பது பரத கண்டத்தின் இயல்பு. பிறரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் இந்த ஸமுதாயம் இருப்பதாக நம்புவது மிஷநரிகளின் மனச்சலவையின் விளைவு.

    ReplyDelete
  24. ஆனால் சிறுபான்மை அடிப்படை வாதம் வளருவதற்கும் காரணமும் இவர்கள் தான்.

    முத்து,

    இது வழக்கமான ஜல்லிதானே முத்து. இந்தியாவில் சிறுபான்மை அடிப்படைவாதம் ஏற்படக்காரணம் ஆர் எஸ் எஸ் என்றால் மற்ற நாடுகளிலும் இதே தீவிரவாதம் ஏன் ஏற்படுகின்றது? அங்கும் ஆர் எஸ் எஸ்சிற்கு எதிராகத்தான் குண்டு வெடிக்கிறார்களாமா?

    எப்போது ஒரு குழுவானது தன்னுடைய கருத்து மட்டுமே சரியானது, மற்றவை எல்லாம் தவறானவை என்று நம்ப ஆரம்பிக்கின்றதோ அத்தகைய குழுவினால் எங்கும் அடிப்படைவாதம்தான் பயிலவும், பேசவும் முடியும்.

    ReplyDelete
  25. கோவையில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஏகபட்ட பனம் வசூலிக்க முடிகிறது.

    பெரிய வியாபாரங்களில இருக்கும் மக்கள் கோவை கலவரங்கள் மற்றும் குண்டுவெடிப்புகளுக்கு பின்னர் தான் சங்கத்துக்கு பனம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.அதுவரை அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லையே....

    ஸோ குண்டுவெடிப்புகள், கலவரங்கள் நடக்க யார் காரனம்?

    கோவை கமிஷ்னராக ரா.கி ஐ.பி.ஸ் "அரசியல் தலையீடு இல்லாமல்" என்னை பனியாற்றவிட்டால் கோவையில் அமைதியை திரும்ப கொண்டு வருகிறேன் என்று சொன்னால் என்ன அர்த்தம் ?

    சென்சிடிவான விஷயங்களில் அப்போதைய அரசு வோட்டுவங்கி அரசியல் செய்ததற்க்கு இதுவே சாட்சி.

    ReplyDelete
  26. RSS சேவை அமைப்பா?
    இலங்கையில் இருக்கும் எனக்கு இன்றுதான் தெரிகிறது...

    ஆனால் உங்களுக்கு தெரியாதது...
    இங்கு RSS தான் றோவுக்கு கிளை நடத்துகிறது...

    அதுவும் 'சேவை' போல...

    ReplyDelete