Saturday, April 14, 2007

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக் கவிதை

சித்திரையும் வந்தது நற்சீர்கள் கொண்டு
சிறுமைகள் பொசுங்கிடுக! சீலம் வெல்க!

இத்தரை மேல் மாந்தரெலாம் இன்னல் தீர்ந்து
இன்பங்கள் பல பெற்று இனிது வாழ்க!

"சத்துவ சன்மார்க்க வழி வாழ்வோர்க்கென்றும்
சத்தியமாய் வெற்றி தரும் சர்வஜித்து" -

தத்துவமாய் இஃதுரைக்கும் தமிழர் ஆண்டில்,
தமிழன்புக் கழுகரசன் கூறும் வாழ்த்து!

5 comments:

  1. அன்பர் ஜடாயு, உங்களுக்கு எனதினிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. Anonymous9:11 PM

    Hi Jatayu,

    Good Kavidhai. Translation of Jatayu as Kazhugarasan is superb.

    Sriram K

    ReplyDelete
  3. //சத்துவ சன்மார்க்க வழி வாழ்வோர்க்கென்றும்
    சத்தியமாய் வெற்றி தரும் சர்வஜித்து//

    அழகான வரிகள்!
    சன்மார்க்கத்துக்கு சர்வஜித்தாகவே (அனைத்திலும் வெற்றியாகவே) மலரட்டும் புத்தாண்டு!

    உங்கட்கும், குடும்பத்தார்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜடாயு சார்.

    ReplyDelete
  4. Anonymous11:53 AM

    ஜடாயு அய்யா,
    தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தாருக்கும் சர்வஜித் புத்தாண்டு வாழ்த்துக்கள்.கவிதை அற்புதம்.

    பாலா

    ReplyDelete
  5. பாலா, கேஆரெஸ், ஸ்ரீராம், மாசிலா..
    அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete