Friday, September 29, 2006

70,000 சேவை மையங்கள்: அன்னை நாட்டின் பணியில் ஆர்.எஸ்.எஸ்

புஜ் (குஜராத்) பூகம்பத்தில் அழிந்த கிராமங்களின் புனரமைப்பு, தீன்சுகியா (அஸ்ஸாம்) வனவாசி மாணவர்களுக்காக அடர்ந்த காடுகளில் 'ஏகல் வித்யாலயா' எனப்படும் ஓராசிரியர் பள்ளிகள், தீண்டாமை மற்றும் சாதீய ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை வளர்த்தல், பெங்களூர் சேரி மக்களுக்காக மருத்துவமனைகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம சுகாதாரத் திட்டங்கள், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தால் உயிரிழந்தோரின் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் காப்பகங்கள் - இப்படி எத்தனை எத்தனையோ.. செய்தி ஊடகங்களின் காமராக்களின் வெளிச்சத்திலோ, செய்தித் தாள்களின் பக்கங்களிலோ பெரிதாக இடம் பெறாமால், அமைதியாக இது போன்ற ஏறக்குறைய 70,000 சேவை மையங்களை நாட்டின் மூலை முடுக்குகளெங்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அது சார்ந்த சங்க பரிவார, இந்து இயக்கங்கள் நடத்தி வருகின்றன.

என்னுடைய போன பதிவைப் பார்த்த சிலர் இது பற்றிக் கேள்விகள் கேட்க, சில ஆர்.எஸ்.எஸ். நண்பர்களை அணுகினேன். இந்த வீடியோவைப் பார்க்குமாறு ஒருவர் பணித்தார் -
http://video.google.com/videoplay?docid=-1013666219441914390

(சுமார் 40 நிமிட வீடியோ, டாகுமென்டரி போல இருக்கிறது. கூகிள் வீடியோ ப்ளேயர் மற்றும் இந்த வீடியோ இரண்டையும் manually டவுன்லோட் செய்து, பிறகு பார்த்தால் தடங்கல் இல்லாமல் பார்க்கலாம்)

இந்த வீடியோவில் இடம்பெறும் சமூகத்தொண்டுகள் சங்க மற்றும் இந்து அமைப்புகள் வீசி வரும் சேவை என்னும் பேரொளியின் சிறு கீற்றுகளே. இந்திய மத்திய அரசு விரோதம் தேசவிரோதமாக மாறித் தலைவிரித்தாடும் வடகிழக்கு மாநிலங்களில், அங்கு வாழும் மக்களும் பாரதப் பண்பாட்டின் பங்குதாரர்களே என்ற விழிப்புணர்வை ஊட்டி, அவர்களை தேசியக் கலாசாரத்தில் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை சங்க, இந்து இயக்கங்கள் செய்து வருகின்றன (இதற்கு நேர்மாறான விஷயத்தை அங்குள்ள மிஷநரிகள் செய்து வருகின்றன என்பது வெட்கமும், வேதனையும் தரும் விஷயம்).

வீடியோவில் இடம்பெறும் பெங்களூரில் உள்ள "நெலே" (கன்னடத்தில் "இருப்பிடம்") எனப்படும் அனாதைச் சிறார் காப்பகங்கள், ராஷ்ட்ரோத்தான பரிஷத் சேரிகளில் நடத்தும் இரவுப் பள்ளிகள், ஏழை மக்களுக்கு உதவும் பரிஷத்தின் ரத்த வங்கி - இவற்றுடன் ஒன்றிரண்டு வருடங்களாக எனக்கு நேரடித் தொடர்பு உள்ளது. ஆத்மார்த்தமாக சேவை செய்யும் இவர்களுக்கு சில சிறு சிறு உதவிகள் செய்யும் வாய்ப்புக் கிடைத்து வருவது நான் செய்த பாக்கியம். கோவிலுக்குப் போவதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு விடுமுறை நாட்களில் இந்த சேவை மையங்களுக்குச் சென்று வருகிறேன். இதுவும் தெய்வ ஆராதனைக்கு ஒப்பானதே என்ற சிந்தனையை என்னுள் விதைத்ததே இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கங்கள் தாம். ஆர்.எஸ்,எஸ். ஸ்வயம்சேவகர்கள் எல்லார் மனதிலும் இதே சிந்தனை இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

சொல்லப்போனால், நாட்டின் பல பகுதிகளில் பல பெயர்களில் இயங்கும் இந்து கல்வி, சுகாதார, சேவை நிறுவனங்களில் முக்கால்வாசி சங்கம் மற்றும் சங்கத்தின் உந்துசக்தியால் உருவான இயக்கங்கள் நடத்துபவை என்ற விஷயம் கூட பல பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் சேவை என்பதை ஒரு சமூகக் கடமையாகக் கருதும் இந்த இயக்கங்கள் விளம்பரம் பற்றித் துளியும் கவலைப் படுவதில்லை, அக்கறை கொள்வதில்லை என்பதே இதற்குக் காரணம்.

சென்னை மற்றும் தமிழகத்தின் பல நகரங்களில் இயங்கும் விவேகானந்த வித்யாலயா பள்ளிகள், கர்நாடகத்தின் புகழ்பெற்ற மலைவாழ் மக்கள் புனரமைப்பு இயக்கமான "விவேகானந்த கிரிஜன கல்யாண கேந்திரா", ஜார்கண்ட் வனவாசிகளின் நல்வாழ்வில் இணைந்துவிட்ட "விவேகானந்தா மெடிகல் மிஷன்", பல நகரங்கள், கிராமங்களில் பிற்பட்ட மக்கள் வாழும் சேரி மற்றும் பஸ்திகள் தோறும் தன் பெயரைப் பதித்துள்ள "சேவா பாரதி".. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆர்.எஸ்.எஸ். சேவை என்று என்ன பெரிதாகக் கிழித்துவருகிறது என்று கேட்பவர்களுக்காக இந்தப் பதிவைப் போடுகிறேன்.

Monday, September 25, 2006

R.S.S. வகுப்புவாத-இயக்கமல்ல: பாதிரியார்-ஆய்வு-முடிவுகள்

" ஆர். எஸ்.எஸ் கண்டிப்பாக பாசிச, அடிப்படைவாத, இனவாத இயக்கம் அல்ல, ஆனால் அதை முழுமையான தேசியவாத இயக்கம் என்றும் சொல்ல முடியாது" என்று கேரளத்தைச் சேர்ந்த கிறிஸ்தவப் பாதிரியார் டாக்டர். வின்சென்ட் கூடங்குளம் தனது முனைவர் பட்டத்திற்காக ஆர். எஸ்.எஸ். இயக்கம் பற்றி செய்த ஆராய்ச்சிகளில் தெரிவிக்கிறார். இந்தக் கருத்துக்கள் சும்மா வெகுஜன அபிப்பிராயத்தையும் ஊடகச் செய்திகளையும் மட்டும் கணக்கில் கொள்ளாமல், நிரூபிக்கப் பட்ட உண்மைகளின் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் என்பதால் முக்கியத்துவம் பெறுகின்றன. இப்படிப்பட்ட ஒரு ஆராய்ச்சிக்கு அனுமதியும், உதவியும் அளித்த கிறிஸ்தவக் கல்வி அமைப்புக்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவை.

முழு விவரங்கள் இங்கே.

"When I broached the idea of writing a book on my research findings on the RSS, some of my co-religionists cautioned me that the RSS men would beat me up if I wrote something against them. I have in my assessment of the RSS tried to be as objective as possible. It is of immense satisfaction to me that my book is well-received in the church and RSS circles," said Fr. Kundukulam in an interview at the Pontifical Seminary.

ஆர். எஸ். எஸ். இயக்கத்தினர் கருத்து சுதந்திரத்திற்கு வழங்கும் மரியாதைக்கும், மாற்றுக் கருத்துக்கள் உண்மைகளின் அடிப்படையில் கூறப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளும் நல்ல பண்பிற்கும் இது சான்று. அடிப்படைவாதம், பாசிசம் போன்ற விஷயங்கள் இந்திய, இந்து மதப் பண்பாட்டில் பொருளற்றவை என்றும் அவர் ஆணித்தரமாகச் சொல்லுகிறார்.

The ideology of the RSS and the way in which it is interpreted by the Sangh leaders borrowing modern terminology have no camparison to the sense in which the term fundamentalism was used in America. So also, fascism and Nazism do have distinct meanings in the socio-political contexts that prevailed in Italy and Germany which have no bearing in the Indian context.

ஆர். எஸ்.எஸ். பழமைவாத இயக்கம் அல்ல என்றும், காலத்திற்கேற்றாற்போல தன் கருத்துக்களில் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது என்றும் கூறும் அவர், சமூக சேவை என்ற விஷயத்தை மிஷநரிகளிடம் கற்றுக் கொண்டு, அதில் வியக்கத்தக்க அளவில் ஆர்.எஸ். எஸ் இயக்கங்கள் சாதனை புரிந்துள்ளதாகவும் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

One admirable aspect of the RSS, Fr Kundukulam says, is its flexibility to move with the times and to adopt the best from other socio-cultural-religious movements. It learnt the rudiments of social work from the missionary organisations of the church and mass mobilisation techniques from the communists.

மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் ஒழுக்கம், சேவை மனப்பான்மை, இளைஞர்களுக்கு அவர்கள் தரும் பயிற்சி இவை பற்றியும் உயர்வாகக் கூறுகிறார்.

He admires the RSS for the dedication and discipline of its cadres, the simple life style of its pracharaks, the moral teaching it imparts to the younger generation in its daily sakhas, and the voluntary labour put in by its cadres at critical times such as natural calamities.

இன்னொரு முக்கியமான கருத்து - தங்கள் எண்ணிக்கை பலத்திற்கேற்ற முக்கியத்துவம் அரசியல் மற்றும் சமூக விஷயங்களில் கிடைக்கவில்லை என்று உளவியல் ரீதியாக இந்து சமுதாயம் கருதுவாகவும், ஆர். எஸ்.எஸ்.-ன் வளர்ச்சிக்கு இதுவே காரணம் (மற்ற மதங்களின் பேரில் இந்துக்கள் சிலருக்கு துவேஷம் இருப்பதனால் அல்ல) என்றும் அவர் கூறுகிறார்.

Indian society, Fr Kundukulam feels, is in a "vicious circle" with the majority Hindu community suffering from a "psychological inferiority complex" on account of its failure to have a proportionate say in the governance of the country in spite of its numerical superiority and the minorities always suspicious of the majority community.

கடைசியாக சொல்வது ரொம்ப முக்கியமானது - சிறுபான்மை அடிப்படைவாதம் சங்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரியும் என்பது அது.

The growth of minority fundamentalism would only strengthen the RSS.

Saturday, September 23, 2006

நவராத்திரி - பாரதி எழுத்தில்

"நவராத்திரி - ஒன்பது இரவுகள் சக்தியைப் பூஜிக்கிறோம். காஷ்மீரம் முதல் கன்யாகுமரி வரை வேதத்தை நம்பும் கூட்டத்தார் அனைவரும் பராசக்தியை வணங்கி அருள்பெற முன்னோர் அமைத்த நல்ல ஏற்பாடு" என்று ஒரு கட்டுரையில் பாரதி கூறுகிறார். சக்தி தாசரான பாரதி, அற்புதமான இந்தத் திருநாளை அன்னையை அகத்தில் இருத்தி வழிபடுவதற்கு உகந்த பருவமாகக் கண்டதில் ஆச்சரியமில்லை.

ஒருமுறை நவராத்திரியின்போது, தன் மகள் தங்கம்மாவும், அவள் தோழிகளும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அன்னை பராசக்தியின் பேரில் "நவராத்திரிப் பாட்டு" என்ற அழகிய பாடலை எழுதிக் கொடுத்தார். அந்தப் பாடல் இதோ -


உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி (உஜ்ஜயினீ)

உஜ்ஜய காரண சங்கர தேவி
உமா ஸரஸ்வதி ஸ்ரீமாதா ஸா (உஜ்ஜயினீ)

வாழி புனைந்து மஹேசுர தேவன்
தோழி, பதங்கள் பணிந்து துணிந்தனம் (உஜ்ஜயினீ)

சத்ய யுகத்தை அகத்திலிருத்தி
திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி (உஜ்ஜயினீ)


"உஜ்ஜயினீ" என்ற தேவியின் திருப்பெயரின் பொருள் "மேன்மேலும் வெற்றி பெறுபவள்" என்பது. வெற்றி தருபவள் என்றும் கொள்ளலாம். அன்னை காளீயின் அருள் பெற்ற விக்கிரமாதித்தன் (குப்த வம்சத்து அரசன்), தான் புதிதாக அமைத்த தலைநகரத்திற்கு அன்னையின் இப்பெயரைச் சூட்டினான். மத்தியப் பிரதேசத்தில் க்ஷிப்ரா நதிக்கரையில் இருக்கும் பழம்பெருமை வாய்ந்த ""உஜ்ஜைன்" என்ற இந்த நகரம் 52 சக்தி பீடங்களில் ஒன்று. "சக்தி.. நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி. கம்பனும், காளிதாசனும், விக்கிரமாதித்தனும் வனங்கிய தெய்வம்" என்றும் இன்னொரு கட்டுரையில் பாரதி குறிப்பிடுகிறார்.

இரண்டாம் அடியில் வரும் "உஜ்ஜய" என்ற சொல்லுக்கு உத்பத்தி, சிருஷ்டி என்று பொருள் கொள்ளலாம். எல்லா சிருஷ்டிக்கும் காரணனான சங்கரனின் தேவி என்று தேவியைப் புகழ்கிறார்.

"ஸா" என்பதன் பொருள் "அவள்" (சம்ஸ்க்ருதத்தில்). இப்படி எழுவாய்ச் சொல்லிலேயே (pronoun) சம்ஸ்க்ருதத்தைப் பயன்படுத்தி இருப்பது சிறப்பு, தமிழ் மணிப்ரவாள நடையில் அபூர்வம். அது மட்டுமல்ல "ஸா" என்பது பரதேவதையின் பெயர்களில் ஒன்றான மந்த்ர அக்ஷரமும் கூட.

"மஹேசுர தேவன் தோழி" என்பதும் அழகிய சொல்லாட்சி. சத்ய யுகத்தை நிலைநிறுத்தும் திறன் வேண்டி பாடல் முடிகிறது.

அனைவருக்கும் நவராத்ரி வாழ்த்துக்கள்.

Saturday, September 16, 2006

தமிழ் உபநிஷத்-நூல்கள் - தெய்வீக-ஞானத் தேடல்கள்

உண்மையின் முகம் பொன்மயமான திரையால் மறைக்கப் பட்டுள்ளது. சூரியதேவா! சத்திய நிஷ்டை உடைய நான் அந்த உண்மையைக் காண்பதற்காக மறைப்பை விலக்குவாய்!”
- ஈசாவாஸ்ய உபநிஷதம் 15

“ஏவப் பட்ட மனம் யாருடைய விருப்பத்தால் செல்கிறது? முக்கியப் பிராணனைச் செலுத்துவது யார்? யாருடைய சங்கல்பத்தால் வாக்கு பேசப் படுகிறது? கண்களையும் காதுகளையும் எந்த தேவன் செயல்படுத்துகிறான்?”
- கேன உபநிஷதம் 1.1

“ நசிகேதா, தெளிந்த நீரில் விடப்பட்ட தெளிந்த நீர் எவ்வாறு அதுவாகவே ஆகிறதோ அவ்வாறு உண்மையை உணர்கின்றவன் ஆன்ம வடிவாகவே ஆகிறான்”
- கட உபநிஷதம் 2.1.15


சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் சுவாமி ஆசுதோஷானந்தர் விளக்கவுரையுடன் பதிப்பித்திருக்கும் உபநிஷத நூல்கள் இத்தகைய தெய்வீக ஞானத் தேடல்களை தெள்ளிய தமிழில் வெளிக்கொணர்கின்றன.

“வேத காலச் சிந்தனையின் மணிமகுடமாகத் திகழ்பவை உபநிஷதங்கள். அறுதி உண்மையைப் பற்றிய ஆராய்ச்சியில் மனித மனத்தால் தொடக்கூடிய எல்லையை உபநிஷதங்கள் தொட்டுவிட்டன என்றே உலகின் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்” என்று நூல்களின் முன்னுரை கூறுகிறது.
பன்னரும் உபநிஷத நூலெங்கள் நூலே
பாரினில் ஏதொரு நூல் இது போலே?
என்று வியந்தார் மகாகவி பாரதி. சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, ஸ்ரீ அரவிந்தர், ஜெர்மானிய தத்துவ அறிஞர் ஷோபன்ஹேர், அறிவியல் அறிஞர் ஜகதீஷ் சந்திர போஸ், ஓஷோ ரஜனீஷ் போன்று பல்வேறுபட்ட சிந்தனையாளர்களும் உபநிஷதங்களின் சிந்தனைச் செறிவு பற்றிக் கூறிச் சென்றிருக்கிறார்கள் என்பதே இதற்குச் சான்று.

“உபநிஷத்” என்ற சொல்லுக்கு அருகில் அமர்தல் என்று பொருள். குருவும் சீடனுமாக அருகமர்ந்து ஞானத் தேடல்களை முன்னெடுத்துச் சென்ற வேத ரிஷிகளின் அனுபூதியில் வெளிப்பட்ட நூல்களே உபநிஷதங்கள். பின்னர் இவை தொகுக்கப் பட்டு ஞான காண்டம் என்று வழங்கும் வேதப் பிரிவாக ஆயின. அடிப்படையில் இவை அற்புதமான கவிதைகள் - பெரும்பாலான உபநிஷதங்களின் நடையும் கவிதை மொழியிலேயே உள்ளது.

வேதாந்த தத்துவ மரபின் அறுதிப் பிரமாணமாக அமைந்த பிரஸ்தானத் திரயம் என்ற மூன்று நூல்களில் உபநிஷதங்களே முதன்மையானவை (மற்ற இரண்டு பகவத்கீதை, பிரம்ம சூத்திரங்கள்). வேதாந்த தத்துவம் முகிழ்ச்சியடைந்த நிலையில் கீதையில் வெளிப்படுவதாகவும், அதன் பரிணாம வளர்ச்சியை (evolution) உபநிஷதங்களின் வாயிலாகவே அறிய முடியும் என்றும் சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். உபநிஷதங்களின் மேன்மையைத் தன் ஆழ்ந்த உரைகள் மூலம் வெளிக்கொணர்ந்து, அவற்றை வேதாந்த ஞான மரபின் மூல நூல்களாக்கியவர் சங்கரர். அவரைத் தொடர்ந்து வேதாந்த தேசிகர், மத்வர் உள்ளிட்ட பற்பல வேதாந்த ஆசாரியார்களும் தங்கள் தத்துவப் பிரிவுகளை நிலைநாட்டும் விதமாகப் பல்வேறு உரைகளை எழுதிச் சென்றிருக்கிறார்கள்.
“வேதத் திருவிழியாள், அதில் மிக்க பல் உரையென்னும் கரு மையிட்டாள்”
என்று கலைமகள் துதியில் பாரதி கூறுகிறார். அளவோடு இடும் கண்மை கண்களின் அழகை எடுத்துக்காட்டும், ஆனால் அதிகமாகிவிட்டாலோ கண்களை பயங்கரமாக்கி விடும் அல்லவா? நம் வேதநூல்கள் விஷயத்திலும் இது பொருந்தும் என்று உணர்த்தவே பாரதி இப்படிப் பாடியிருக்கலாம் என்று தோன்றுகிறது!

உபநிஷதங்களுக்கு எழுதப் பட்ட மரபு சார்ந்த உரைகள், பெரும்பாலும் தத்துவச் சிக்கல்களையும், சிடுக்குகளையுமே முன்னிறுத்தி எழுதப் பட்டன. அதனால், பல இடங்களில், இயல்பாகவே பொருள் விளங்கும் மந்திரங்கள் கூட சுற்றி வளைத்து வரும் தர்க்கம் (convoluted logic) மூலம் உரை எழுதுபவரது தர்க்க வலைக்குள் சிக்க வைக்கப் பட்டன. “த்வைதத்திலிருந்து அத்வைதம் வரை எல்லா விதமான படிப்படியான தத்துவங்கள், கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் முதலிய யோகங்கள் எல்லாமே உபநிஷதங்களில் இருக்கின்றன. மேலும், இவை அனைத்திற்குள்ளும் இழையோடிக் கொண்டிருக்கும் ஒருமையும் உபநிஷங்களில் இருக்கிறது” என்று சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.

மரபு சார்ந்த உரைகளில் ஒன்றிரண்டைக் கூடப் படித்து ஒப்பு நோக்குவது என்பது எந்தக் கொம்பனையும் அயர வைக்கும் சமாசாரம். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலில் வரும் முழு நேர தர்க்க சாஸ்திரிகளுக்கு வேண்டுமானால் அது சாத்தியமாகலாம். ஆனாலும், எல்லாவற்றையும் கேள்வி கேட்க வேண்டும், ஆராய வேண்டும் என்ற தளையற்ற ஞானத் தேடலை முன்னெடுத்துச் செல்ல இந்த எல்லா உரைகளுக்கும், சித்தாந்தங்களுக்கும் முக்கியமான வரலாற்றுத் தேவை இருக்கிறது என்றே கருதுகிறேன்.

பல்வேறு பட்ட பணிகளுக்கிடையிலும் உபநிஷதங்களைக் கற்க முயன்று கொண்டிருக்கும் என் சொந்த அனுபவத்தில் உபநிஷத்துகளின் மையக் கருத்துக்களுக்கு நேராகச் செல்லும் உரைகளே தொடக்கத்தில் பெரிதும் துணை புரிந்தன. ஓரளவு சம்ஸ்கிருத ஞானம் இருந்ததால் பல மந்திரங்களின் பொருளை ஆரம்ப தளத்தில் உணர்ந்து அனுபவிப்பதற்கு எளிய பொழிபெயர்ப்புகளே போதுமானதாக இருந்தன. ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சுவாமி ப்ரபவானந்தர், சுவாமி கம்பீரானந்தர் முதலியோரது ஆங்கில உரைகள் முதன்முதலாக உபநிஷதம் படிப்பவர்களும் எளிதாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில் எழுதப் பட்டவை.

சுவாமி ஆசுதோஷானந்தரின் இந்தத் தமிழ் உரைகளும் அதே வகையைச் சார்ந்தவை. “தத்துவப் பின்னல்களைக் கருத்தில் கொள்ளாமல் இறைவன் என்ற மாபெரும் சக்தியிடம் நாம் தொடர்பு கொள்கிறோம் என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுக்கப் பட்டுள்ளது… இலக்கண நியதிகளுக்கும் மொழிபெயர்ப்பில் முக்கிய இடம் அளிக்கவில்லை” என்று முன்னுரையிலேயே இதைச் சொல்லி விடுகிறார். தமிழில் இதற்கு முன் வெளிவந்த உபநிஷத மொழியாக்கங்கள் பெரும்பாலும் வைதீக தமிழ் நடையிலேயே இருந்தன (“அண்ணா” உரை எழுதி ரா.கி. மடம் வெளியிட்ட பழைய “உபநிஷத் ஸாரம்” நூல்கள் ஒரு உதாரணம்). சம்ஸ்கிருத சொற்பிரயோகம் மட்டுமல்ல, பொருளை விளக்கும் முறையிலும் வைதீக தமிழ் நடை ஒரு குறிப்பிட்ட அமைப்பைப் பின்பற்றும். ஆனால், இந்த நூல்களின் தமிழ் நடை ஒரு சராசரி தமிழ் வாசகனை மனதில் கொண்டிருக்கிறது. பொருள் விளக்கங்களும் தெளிவான, அச்சுறுத்தாத மொழி நடையைப் பின்பற்றுகின்றன.

நூல் அமைப்பும் சிறப்பாக இருக்கிறது. ஒவ்வொரு உபநிஷத நூலின் முன்னுரையிலும் உபநிஷதங்கள் பற்றிய பொது அறிமுகம் இணைக்கப் பட்டுள்ளது. அது தவிர, குறிப்பிட்ட உபநிஷதம் பற்றிய சிறப்பு அறிமுகமும் தரப்படுகிறது. ஒவ்வொரு மந்திரத்திற்கும் சம்ஸ்கிருத மூலம், தமிழ் வடிவம், வார்த்தைக்கு வார்த்தை பொருள், பொழிப்புரை, திரண்ட பொருள் விளக்கம் என்ற ரீதியில் நூல் அமைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு உபநிஷத நூலையும் தனித் தனியாகப் படிப்பதற்கும் இது ஏதுவாகும்.

உபநிஷதங்கள் 108 என்று சம்பிரதாயமாக அறியப்பட்டாலும், வேதாந்த தத்துவத்தில் “முக்கிய உபநிஷதங்கள்” என்று அறியப்படுபவை 10. இவற்றில் 8 உபநிஷதங்கள் இந்த வரிசையில் வெளிவந்துள்ளன.

ஈசாவாஸ்ய உபநிஷதம் (ஒளிக்கு அப்பால்)
கேன உபநிஷதம் (எல்லாம் யாரால்?)
கட உபநிஷதம் (மரணத்திற்குப் பின்னால்)
ப்ரச்ன உபநிஷதம் (அறிவைத் தேடி)
முண்டக உபநிஷதம் (நிழலும் நிஜமும்)
மாண்டூக்ய உபநிஷதம் (ஒன்றென்றிரு)
ஐதரேய உபநிஷதம் (மிஞ்சும் அதிசயம்)
தைத்திரீய உபநிஷதம் (வாழ்க்கையை வாழுங்கள்)

சாந்தோக்ய உபநிஷதம், ப்ருஹதாரண்ய உபநிஷதம் – இந்த இரண்டு உபநிஷதங்களும் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்ப்போம்.

ஒவ்வோரு உபநிஷதமும் தனக்கே உரிய தனித்தன்மையையும் அழகும் கொண்டிருக்கிறது. கட உபநிஷதம் மரணதேவனிடத்திலேயே சென்று மரணத்திற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று வினவும் நசிகேதன் என்ற என்ற சிறுவனின் ஞான தாகத்தை விளக்குகிறது. முண்டக உபநிஷதம் பல தளங்களில் ஞானத் தேடலை முன்வைக்கிறது. “ஒரு மரத்தில் பொன்மயமான சிறகுகள் உள்ள ஒரே மாதிரியான இரு பறவைகள்” என்று ஜீவனுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் முண்டக உபநிஷத உவமை மிகவும் ஆழமானது. ஐதரேய உபநிஷதம் கருவில் உயிர் உருவாவது பற்றிப் பேசுகிறது. தைத்திரீய உபநிஷதம் ஐந்து படிநிலைகள் (அன்னம், ப்ராணன், மனம், விக்ஞானம், ஆனந்தம் என்கிற ஐந்து கோசங்கள்) பற்றிய தியானம், ஒவ்வொரு படிநிலையையும் தன் தவத்தால் ப்ருகு தானே உணர்தல் ஆகியவை பற்றிக் கூறுகிறது. சில உபநிஷதங்களில் அழகிய, சிறிய கதைகளும் உள்ளன.

முண்டக உபநிஷதத்தில் வேத நூலறிவு, வேதாந்த விசாரம் என்பது கூட மற்ற எல்லா உலகியல் அறிவுத் துறைகளையும் போலத் தான், இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டதே மேலான ஞானம் என்று கூறப்படுகிறது. இப்படி, தங்கள் தத்துவ அறிவின் எல்லையத் தாங்களே உணர்த்தி, மனிதன் அவற்றையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்ற கருத்தையும் வேத ரிஷிகள் உணர்த்தினர்.

உபநிஷதங்கள் பேசும் தத்துவ விஷயங்கள் சாதாரண, பாமர மனிதனுக்கானவையா என்று கேட்கலாம். இது உபநிஷதங்களிலேயே விவாதிக்கப் படுகிறது.

“எதைப் பற்றி பலரால் கேட்க முடியவில்லையோ, கேட்டும் பலரால் எதனை அறிய முடியவில்லையோ, அந்த ஆன்மாவைப்பற்றி உபதேசிப்பவரும் அபூர்வம், கேட்பவரும் அபூர்வம். அத்தகைய அபூர்வமான ஒருவரைப் பின்பற்றி அதனை அறிபவரும் அபூர்வம்”
- கட உபநிஷதம் 1.2.7


ஆனால், சுவாமி விவேகானந்தர் “உறங்கிக் கொண்டிருக்கும் பாரத நாடு முழுவதையும் விழித்தெழச் செய்யும் சக்தி உபநிஷதங்களில் உள்ளது, உலகம் முழுவதற்குமான ஆன்ம ஞானம் அவற்றில் உள்ளது” என்றார். வேதாந்த தத்துவங்கள் வெறும் புத்தக ஞானம் அல்ல, அவை நடைமுறையில் மனிதனுடைய முன்னேற்றத்திற்கும், நல்வாழ்வுக்கும் வேண்டிய வழிகாட்டுதலை அளிப்பவை என்றே சுவாமிஜி கருதினார். “உறங்கும் ஆன்மாவை விழித்தெழச் செய்யுங்கள்; பின்னர் சக்தி வரும், பெருமை வரும், உலகில் மேன்மையானவைகள் எல்லாம் தாமே வரும்” என்றார். உபநிஷதங்களைக் கற்பவர்கள் இதை மனதில் கொள்ளவேண்டும்.

நூல் முன்னுரையில் ஒரு வார்த்தை என்ற தலைப்பில் ஆசிரியர் சொல்கிறார் :
“உபநிஷதங்கள் ரிஷிகளின் அனுபவ உண்மைகள். வெறும் நூலறிவு கொண்டோ, சம்ஸ்கிருதப் புலமை கொண்டோ அவற்றின் உண்மையான பொருளை அறிந்து கொள்வது சாத்தியம் அல்ல. உண்மையான சாதனை வாழ்வில் ஈடுபட்டு, மனம் தூய்மை பெற்று நாம் இறைவனை நோக்கி முன்னேற முன்னேற இவற்றின் உட்பொருள் மேன்மேலும் ஆழமாக நமக்குப் புரியும். மீண்டும் மீண்டும் படித்து, மந்திரங்களின் பொருளை ஆழமாகச் சிந்தித்து, ஆன்மீக சாதனைகளிலும் ஈடுபட்டால் தான் உபநிஷதங்களை உண்மையாகப் புரிந்து கொள்ள முடியும்; அவற்றின் அற்புதத்தில் ஆழ்ந்து மனம் மகிழ முடியும்….. பொருள் புரியவில்லை என்பதற்காகச் சோர்ந்து விடாமல் புரிந்த மந்திரங்களின் பொருளை ஆழ்ந்து சிந்தித்து சாதனைகளில் உயர்வடைய முயற்சிக்க வேண்டும்”

ஞான வாழ்க்கை வாழும் சுவாமிஜியின் இந்த அறிவுரையையும் மனதில் கொண்டு நூல்களைப் படிக்க வேண்டும். உபநிஷதங்கள் ஆன்ம நூல்கள், அறிவு நூல்கள் மட்டுமல்ல.

இவ்வளவு அழகிய இந்தப் பதிப்பு மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது (எல்லா உபநிஷத நூல்களும் சேர்த்து, ரூ. 150 சொச்சம்). புத்தகங்களை இணையம் மூலமும் பெறலாம், http://www.sriramakrishnamath.org

உலகு புகத் திறந்த வாயில்

பழைய சொல்லாடல் ஒன்று அளிக்கும் ஆச்சரியமான புதிய பரிமாணங்களுக்கு இது ஒரு உதாரணம் என்று நினைக்கிறேன்.

புற நானூற்றில் வேள் எவ்வி என்ற மன்னனைப் புகழ்ந்து வெள்ளெருக்கிலையார் பாடிய கையறு நிலைப் பாடலில் இந்த சொல்லாடல் வருகிறது -

நோகோ யானே தேய்காமாலை
பிடி அடி அன்ன சிறுவழி மெழுகித்
தன் அமர் காதலி புல்லின்மேல் வைத்த
இன்சிறு பிண்டம் யாங்கு உண்டனன்கொல்
உலகுபுகத் திறந்த வாயில்
பலரோடு உண்டல் மரீஇயோனே.

உலகத்தோர் அனைவரும் பசி என வந்தாலும் அவர்கள் புகும் வகையில் திறந்தே கிடக்கும் பெரிய வாயிலை உடையவன் வேள் எவ்வி. அவன் தனியே உண்டு அறியாதவன். பலர் சூழ உண்பவன். இத்தகைய வள்ளல் இன்று இல்லை.

யானையின் அடியைப் போல வட்டமாகத் தரையை மெழுகி தருப்பைப் புல் பரப்பி அவனுக்குப் படையலாய் ஈம உணவை அவன் மனைவி வைக்கிறாள். பலரோடு உண்ட எவ்வி எவ்விதம் இன்று தனித்து உண்ணுவான்? இக்காட்சி என் உயிரைக் கொல்லுகிறதே!

(நன்றி : எஸ்.சிவகுமார் எழுதிய கொங்குதேர் வாழ்க்கை, யுனைடெட் ரைட்டர்ஸ் பதிப்பு)

இன்றைய சூழலில் உலகு புகத் திறந்த வாயில் என்று சொன்னால் பன்னாட்டு நிறுனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்துக் கொண்டிருக்கும் சீனாவும் liberlaised பொருளாதாரம் நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நம் பாரதமும் தான் உடனடியாக நினைவுக்கு வருகின்றன.

ஒரு வித்தியாசத்தைக் கவனியுங்கள். தன் செல்வச் செழிப்பை உலகுடன் பகிர்ந்து கொள்ள சங்க காலத் தமிழ் மன்னன் தன் கதவைத் திறந்து வைக்கிறான். ஆனால் செல்வம் வேண்டி நாம் உலகுக்குக் கதவு திறக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் அறிவுரை கூறுகிறார்கள். வேள் எவ்வியின் "திறந்த வாயிலில்" புகுந்தது இரவலர்களின் உலகம். ஆனால், நாம் திறந்திருக்கும் வாயிலில் புகுபவர்கள் உலகின் பெரும் செல்வங்களுக்குச் சொந்தக் காரர்கள்!

"உலகின் எல்லாத் திசைகளிலிருந்தும் மேலான எண்ணங்கள் நம்மை வந்தடையட்டும்" என்று முரசறைந்த ரிக்வேத ரிஷிகளின் பாரம்பரியம் நம்முடையது. ஆனால் இன்று "உலக" கலாச்சாரத் தாக்குதலின் பெருவெள்ளத்தில் இந்தப் பாரம்பரியமே சிக்கித் தத்தளிப்பது போலத் தோன்றுகிறது.

"உலகெங்கிலுமிருந்து என் அறைக்குள் காற்று வரட்டும்.. ஆனால் அது அடியோடு என்னைப் பரத்தி விட முடியாது (Let the winds from all over sweep into my room.. I will not be swept off my feet) என்று காந்திஜி சொன்னார்.

இந்த உறுதி நடைமுறையில் சாத்தியம் என்றால், சுவாமி விவேகானந்தர் சொன்னதைக் கடைபிடிக்க வேண்டும் -
"பாரத நாடே, உன் ஒரு கை உன் நெஞ்சின் மீது உறுதியாக இருக்கட்டும், அது ஒருபோதும் விலகக் கூடாது. மற்றொரு கையால் கிடைப்பவை எல்லாவற்றையும் முடிந்தவரை அள்ளிக் கொள்"

உலகு புகத் திறந்த நம் வாயில் எதற்கும் கொஞ்சம் ஒருக்களித்தே இருக்கட்டும்.

Wednesday, September 06, 2006

சங்கரர்-காட்டிய-வழியில் ஜாதி-ஒழிப்பு: Dalit panthers தலைவர்

தலித்துக்களும், சாதி இந்துக்களும் ஒன்றிணைந்து சாதியை ஒழிக்கப் போராட வேண்டும். ஆதிசங்கரர் காட்டிய இந்த வழி இடைக் காலத்தில் தொடர்பிழந்து விட்டது.. " என்று மகாராஷ்டிரத்தின் தலித் சிறுத்தைகள் (Dalit Panthers) கட்சித் தலைவர், புகழ் பெற்ற தலித் மக்கள் தலைவர் நாம்தேவ் தஷால் கூறியிருக்கிறார் - டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸுதர்ஷனுடன் ஒரே மேடையில் பேசி, ஒரு நூலையும் அவர் வெளியிட்டுள்ளார். “நான் கட்சி மாற்றிவிட்டேன் என்று இடது சாரி நண்பர்கள் அலறுவார்கள், எனக்குக் கவலையில்லை. என் நோக்கம் தேச ஒற்றுமையையும், சமூக ஒற்றுமையையும் வளர்ப்பது தானே அன்றிக் குலைப்பது அல்ல. ஒவ்வொரு சாதியும் இன்னொரு சாதியைத் தூற்றிக் கொண்டிருந்தால் அது எப்படி சாத்தியம்?” என்றும் கேட்டுள்ளார்.

சாதீய கொடுமைகளால் தன் இளமைப் பருவத்தைத் தொலைத்த தஷால், தன் வாழ்க்கை முழுவதையும் தலித் மக்களின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்தவர். ஆர். எஸ்.எஸ் இயக்கம் சமுதாய ஒருமைக்காக ஆற்றிய பங்களிப்பையும் இந்த விழாவில் அவர் பாராட்டினார். கம்யூனிஸ சித்தாந்தத்தையும் சாடிய அவர், பெரும்பாலான கம்யூனிஸ தலைவர்கள் இன்றும் உயர்சாதி மனப்பான்மையுடன் தான் இயங்குகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். தீண்டாமை மற்றும் சாதிக் கொடுமைகளுக்கு எதிரான போரில் ஆர்.எஸ்.எஸ் இய்க்கத்தின் பேரில் தான் பெரும் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் சொல்லுகிறார். "ஸர்வஸ்மின்னபி பஷ்யாத்மானம், ஸர்வத்ர உத்ஸ்ருஜ பேதக்ஞானம்" - எல்லா உயிர்களிலும் ஒன்றாய் உறையும் ஆத்மாமைப் பார். வேற்றுமைகளைக் காணும் மனப்போக்கை (பேதக்ஞானம்) உதறித் தள்ளு என்பது தான் சங்கரரின் உபதேசம். அதை எல்லாருக்கும் நினைவூட்டிய நாம்தேவுக்கு நன்றி. இந்து சமுதாயம் உருப்படுவதற்கான சரியான பாதை இது.

Monday, September 04, 2006

வ-ந்-தே மா-த-ர-ம் பற்றி - விரிவான கட்டுரை

வந்தே மாதரம் பாடலின் அமர வரலாறும், பாடல் மறுப்பின் பின் நிற்கும் தேச விரோத விஷ விருட்சங்களும்

(திண்ணை இதழில் வெளிவந்தது)

வந்தே மாதரம் என்றுயிர் போம் வரை
வாழ்த்துவோம் முடி தாழ்த்துவோம்
எந்தம் ஆருயிர் அன்னையைப் போற்றுதல்
ஈனமோ அவமானமோ?
- மகாகவி பாரதி

“வந்தே மாதரம் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது; அதனால் முஸ்லீம்கள் இந்தப் பாடலைப் பாடக் கூடாது” என்பதாக சில ஹைதராபாத் இமாம்களும் [1] , ஜும்மா மசூதியின் ஷாஹி இமாம் புகாரியும் [2] ஃபத்வா, அறிக்கை விட்டபோது, இவர்கள் ஜிகாதி மதவெறியர்கள், மறைமுக தீவிரவாத ஆதரவாளர்கள், இப்படித் தான் சொல்லுவார்கள், இவர்கள் பேச்சைப் பெரிதுபடுத்தக் கூடாது என்றே எண்ணினேன்.

ஏனென்றால், நாட்டின் மிகப் பெரும்பான்மையான தேசபக்த முஸ்லீம்கள் வந்தே மாதர கீதத்தைப் பாடுவதிலும் ஏற்றுக்கொள்வதிலும் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை. ஏ. ஆர். ரஹ்மான் உணர்ச்சிப் பெருக்குடன் பாடிய “வந்தே…. மாதரம் – தாய் மண்ணே வணக்கம்” என்ற பாடல் சுதந்திரப் பொன்விழா ஆண்டில் நாடு முழுதும் மக்களின் தேசபக்தி உணர்வுகளை எழுப்பிற்று. ராணுவத்திலும், மற்ற அரசுத் துறைகளிலும் இருக்கும் பொறுப்பு மிக்க முஸ்லிம் தலைவர்களும், மாட்சிமை பொருந்திய நமது தேசியப் பாடல் பற்றி எதிர்மறைக் கருத்து எதுவும் சொல்லவில்லை.

ஆனால் சமீபத்திய இரண்டு விஷயங்கள் மிகவும் கவலையளிக்கின்றன – 1) மேற்சொன்ன இமாம்களை பெருவாரியான முஸ்லீம் தலைவர்களும், அமைப்புகளும் கடுமையாகக் கண்டித்திருக்க வேண்டும், ஆனால் மௌனம் சாதிக்கிறார்கள். மெதுவாக இந்தக் கருத்து முஸ்லீம் சமூகத்தில் பரவி வருகிறதோ என்று தோன்றுகிறது 2) காங்கிரஸ், SP கட்சிகளின் அபாயகரமான நிலைப்பாடு – “வந்தே மாதரம் பாடுவதில் கட்டாயம் எதுவும் இல்லை, விரும்பினால் பாடலாம்” என்று அர்ஜுன் சிங் பாராளுமன்றத்தில் வெட்கமில்லாமல் வாதிடுகிறார். இந்தியக் குடிமக்கள் தேசத்திற்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை, விரும்பினால் தாராளமாக தேசத்துரோகம் செய்யலாம் என்று அரசு அமைச்சரே சொல்வதற்கு இணையானது இது (பார்க்க [3]).
வந்தே மாதரம் பாட மறுக்கும் சிந்தனைப் போக்குக்குப் பின் எத்தகைய தேச விரோத விஷம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்.

வரலாற்றுப் பின்னணி:

வந்தே மாதரம் என்பது ஒரு சாதாரணப் பாடல் மட்டுமல்ல. நமது தேசிய எழுச்சியின் அடையாளம் அது. ஒன்றுபட்ட புதிய பாரதத்தின் மலர்ச்சியை கட்டியம் கூறி அறிவித்த போர் முரசம். சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒவ்வொரு தேசபக்தனின் உயிர்மூச்சாக இருந்த மந்திரச் சொல். நமது தேசபக்தி பாரம்பரியத்தின் ஆன்மாவும், இதயமுமான கீதம் அது.

வந்தே மாதர கீதத்தின் முழு வரலாறு பற்றி அறிய, பார்க்க [4]. சில முக்கியமான குறிப்புக்கள்:

1) இந்தப் பாடல் ஆனந்த மடம் என்கிற நாவல் உருவாவதற்கு முன்பே பங்கிம் சந்திர சட்டோபாத்தியரால் எழுதப் பட்டது, பின்னர் இந்த நாவலில் அவரால் சேர்க்கப் பட்டது. 1875-ம் ஆண்டு துர்கா பூஜை விடுமுறைக்காக, பங்கிம் கல்கத்தா நகரிலிருந்து தமது சொந்த ஊரான கந்தலபதா என்ற சிறிய அழகிய கிராமத்துக்குச் சென்றார். தேசம் பற்றிய சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த அவர் மனத்தை சுற்றிலும் இருந்த பசும் வயல்களும், நதிகளும் கொள்ளை கொண்டன. அந்தத் தருணத்தில் அவரது கவிதையுள்ளத்தில் “ஸுஜலாம், ஸுபலாம்” என்று தொடங்கும் இந்த அமர கீதம் உதயமாயிற்று.

2) 1896 கல்கத்தா காங்கிரஸ் மகாசபையில் “வந்தே மாதரம் நமது தேசிய கீதம்” என்று ரவீந்திர நாதத் தாகூர் முன்மொழிந்தார். இந்த சபையில், அவரே இந்தப் பாடலை உணர்ச்சிப் பெருக்குடன் பாடினார். 1905 வங்கப் பிரிவினையை எதிர்த்து நடந்த போராட்டமே சுதந்திரப் போரின் முக்கியத் திருப்புமுனை. இந்த சமயம், வங்கம் முழுதும் சாதி, மத பேதம் மறந்து அனைத்து மக்களும் வந்தே மாதரம் என்று முழங்கினர். நாடு முழுவதும் இதன் எதிரொலியாக தேசபக்திச் சுடர் பரவியது. எந்த அரசும், கட்சியும், குழுவும் அறிவிக்காமலேயே, மக்கள் தாங்களாகவே வந்தே மாதரத்தை தேசிய கீதமாக ஏற்றுக் கொண்டனர். இந்த வருடம் தொடங்கி, ஒவ்வொரு வருடமும், காங்கிரஸ் மகாசபைகளில் வந்தே மாதரம் அதன் முழுமையான வடிவில் பாடப்பட்டது. இப்பொழுது நாம் பாடும் “தேஷ்” ராகத்தில் அமைந்த இசை அமைப்பு இதே காலகட்டத்தில் தேசபக்தரும். ஹிந்துஸ்தானி இசை மேதையுமான விஷ்ணு திகம்பர் பலூஸ்கரால் உருவாக்கப் பட்டது.

3) 1910-களில் முஸ்லீம் லீக் பெருவளர்ச்சி கண்டது. நாடு முழுவதும் முஸ்லீம் பிரிவினைவாதம் பூதாகாரமாகத் தலைதூக்கத் தொடங்கியது. 1923-ம் ஆண்டு காகிநாடா காங்கிரஸ் மகாசபைக்குத் தலைமை தாங்கியவர் மௌலானா முகமது அலி. வழக்கம் போல இந்தப் பாடலை இசைப்பதற்காக பலூஸ்கர் எழுந்தபோது “நிறுத்துங்கள்.. பாடல் இசைப்பது இஸ்லாமுக்கு எதிரானது” என்று மௌலானா குறுக்கிட்டார். மொத்த சபையும் திடுக்கிட்டது. ஆனால், பலூஸ்கர் அயரவில்லை, “இருக்கலாம், ஆனால் இது மசூதியோ, முஸ்லீம் சமயக் கூட்டமோ அல்ல. காங்கிரஸ் மகாசபை. இந்தக் கூட்டத்திற்கு ஊர்வலமாக நாம் வந்த வழியெங்கும் சங்கீதம் இசைத்ததே, அப்போது ஒன்றும் சொல்லாத தலைவர் , இப்போது நான் நமது தேசிய கீதத்தைப் பாடுவதை ஏன் தடுக்க வேண்டும்? நான் பாடியே தீருவேன்” என்று முழங்கிய பலூஸ்கர் வந்தே மாதர கீதத்தைப் பாடி முடித்தார்.

முதன் முதலில் வந்தே மாதரத்திற்கான இஸ்லாமிய எதிர்ப்பு எப்படி ஆரம்பித்தது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. 1923 வரை வந்தே மாதரம் பாடி வந்த முஸ்லீம்களிடம், திடீரென்று 1923-ல் ஒரு மௌலானா “இசை” இஸ்லாமுக்கு எதிரானது என்று காரணம் காட்டி அதை எதிர்க்கிறார்! இத்தகைய பிரசாரம் இந்த வருடம் உருவானதன் நோக்கம் வேண்டுமென்றே முஸ்லீம்களிடம் பிரிவினை எண்ணத்தை விதைப்பது. பாரதப் பண்பாடு, கலாசாரம், தேசபக்தி எல்லாமே இஸ்லாமுக்கு எதிரானது என்ற கருத்தை மெல்ல மெல்ல உருவாக்கி தேசப் பிரிவினைக்கு வித்திடுவது. வேண்டுமென்றே இதை இஸ்லாமிய சமய நம்பிக்கை என்ற போர்வையில் செய்வது. இல்லையென்றால், இவ்வளவு நாள் எல்லா முஸ்லீம்களும் பாடி வந்த தேசபக்திப் பாடல் திடீரென்று எப்படி “இஸ்லாமுக்கு எதிரானதாக” ஆகும்?? 1923-ம் ஆண்டு, குர்-ஆனில் “வந்தே மாதரம் பாடுவது தவறு” என்று புதிதாக ஒரு அத்தியாயம் சேர்க்கப் பட்டதா என்ன?

4) இப்படி ஆரம்பித்த இந்த எதிர்ப்பு தேச விரோத, பிரிவினைவாத முஸ்லீம் தலைவர்களால் வேண்டுமென்றே தூபம் போட்டு வளர்க்கப் பட்டது. முக்கியமாக, முஸ்லீம் லீக் கட்சி இதில் முன் நின்றது. முதலில் இசை, பிறகு பாடல் வரிகள், பிறகு துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி பற்றி குறிப்பு, ஆனந்த மடம் நாவலின் கதைக் கரு என்பதாக ஒவ்வொன்றாகக் காரணம் காட்டப் பட்டது. அநியாய ஆட்சிக்கெதிரான போராட்டம் “ஆனந்த மடம்” நூலின் கதைக்கரு. வங்காளத்தின் சில மாகாணங்களை ஆண்ட முஸ்லீம் கொடுங்கோல் மன்னர்களை எதிர்த்து “பைராகிகள்” என்ற புரட்சிப் படையினர் தொடுத்த போர் கதைக் களம். இது சில கொடுங்கோல் மன்னர்களுக்கெதிரான மக்கள் போரே தவிர, இஸ்லாமுக்கு எதிரான சமயப் போர் அல்ல - இந்த அடிப்படையில் தான் ராணி துர்காவதி, வீர சிவாஜி, குரு கோவிந்த சிங் போன்ற மன்னர்கள் அந்தக் கால கட்டத்திலும், இன்றும் சுதந்திர வீரர்கள் என்றே அறியப்படுகின்றனர். ஆனால் தேச விராதிகள் இஸ்லாமுக்கு எதிரானது என்பதாக இதைச் சித்தரித்தனர்.

5) 1930-களில், காங்கிரஸ் முஸ்லீம் பிரிவினைவாதத்தை ஏற்கும் நிலைக்குத் தள்ளப் பட்டது. அபுல் கலாம் ஆசாத், சுபாஷ் சந்திர போஸ், ஆசார்ய நரேந்திர தேவ் அடங்கிய குழு தேசிய கீதத்தைப் பரிசீலிப்பதற்காக அமைக்கப் பட்டு, இந்தப் பாடலின் முதல் பத்தி எல்லாரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருப்பதால், முதல் பத்தியை தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தது. காந்திஜியும் இதை ஆதரித்தார். 1947-ல் நாட்டைத் துண்டாடுவதற்கு முன்பு, தேசபக்தியின் அடித்தளமாக இருந்த இந்தப் பாட்டைத் துண்டாடுவது நடந்தேறியது! இதன் பிறகு, எல்லா காங்கிரஸ் கூட்டங்களிலும், தேசிய கீதமாக ஏற்கப்பட்ட முதல் பத்தி பாடப் பட்டு வந்தது.

6) ஆனால், தேச விரோதிகள் அப்போதும் எதிர்ப்பை நிறுத்தவில்லை. முதல் பத்தியும் இஸ்லாமுக்கு எதிரானது என்ற பிரசாரம் தொடர்ந்து வந்தது. 1947 பிரிவினை, வன்முறை மற்றும் பயங்கரங்கள் இன்னும் மறக்கப் படாத நிலையில், 1950ல் இந்தியக் குடியரசு பற்றிய தீர்மானம் தொடர்பான சர்ச்சைகளில் தேசிய கீதம் பற்றியும் விவாதிக்கப் பட்டது. அப்போது பிரதமராக இருந்த நேருவும், வேறு சிலரும் ராணுவ இசைக் குழுக்களில் (military bands) இசைப்பதற்கு வந்தே மாதரம் கடினமானது என்று சொத்தைக் காரணம் கூறினர். இதைப் பொய்யாக்கும் வகையில், மாஸ்டர் கிருஷ்ணா ராவ் பாரத பாரம்பரிய இசையின் அடிப்படையில் வந்தே மாதரத்திற்கான கம்பீரமான ராணுவ மெட்டை அமைத்து அதை ராணுவ இசைக் குழுக்களை இசைக்க வைத்தார்!

7) இங்கிலாந்தின் 5-ம் ஜார்ஜ் மன்னரை வரவேற்பதக்காகத் தான் எழுதிய பாட்டு என்று ரவீந்திர நாதத் தாகூரே ஒப்புக் கொண்ட “ஜன கண மன” என்ற பாடலின் முதல் பத்தியும் 1930-களில் பிரபலமாகி வந்தது (இது முற்றிலும் உண்மை, முதல் அடியில் வரும் “ஜன கண மன அதி நாயக” என்ற வரியும், 6-ம் அடியில் வரும் “ஜய ராஜேஷ்வர” என்ற தொடரும் இதை உறுதி செய்கிறது). வந்தே மாதரம் சொன்னவர்களை சிறையில் அடைத்த பிரிட்டிஷ் அரசு, இந்தப் பாடலை மக்கள் பாடுவதை ஊக்குவித்துப் பரிசளித்து வந்தது என்பதே இதற்கு அத்தாட்சி. நாட்டைப் போற்றி எழுதப் பட்டதாக இன்று நம்பப் படும் இந்த ஒரு பாடல் தான் வரலாற்றில் “மன்னன்” என்றும் “நாயகன்” என்றும் பாரத தேசத்தை ஆண்பாலில் விளிக்கும் முதலும் முடிவுமான பாடலாக இருக்கும்! 100 ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் வழங்கி வரும் எல்லா தேசபக்திப் பாடல்களுமே “அன்னை” “தாய்” “பாரத மாதா” என்று தான் தேசத்தை உருவகிக்கின்றன! ஏன், தாகூரே எழுதிய வேறு பல தேசபக்திப் பாடல்களுமே தேசத்தை அன்னை என்று தான் அழைக்கின்றன (உ-ம்: “அயி புவன மன மோகினி” என்ற தாகூரின் மிகப் பிரபலமான பாடல்).

8) இப்படித் தான் நாட்டின் இயல்பான தேச பக்தி உணர்வுடன் ஒட்டாத, தொடர்பில்லாத “ஜன கண மன” பாடல் தேசிய கீதமாயிற்று. இதை ஆவணப் படுத்தும் அரசியல் சாசனம், இந்த தேசிய கீதத்திற்கு சரிநிகரான, சிறிதும் குறையாத மதிப்புடன், தேசியப் பாடலாக “வந்தே மாதரம்” இருக்கும் என்றும் கூறுகிறது. ஆகாசவாணியிலும், தூர்தர்ஷனிலும், தினந்தோறும் வந்தே மாதரம் ஒலி/ஒளி பரப்பப் படுவதற்கும் காரணம் இது தான். வந்தே மாதரம் இன்றும் ஒவ்வொரு தேசபக்தனின் இதயகீதமாகவே இருந்து வருகிறது.

வந்தே மாதர கீதத்தின் ஆதார சுருதி :

நம்மைத் தாங்கி வளர்க்கும் இந்த பூமியைப் பெண்மையின், தாய்மையின் உருவமாகக் கருதி போற்றுவது தொன்றுதொட்டு வரும் பாரதப் பண்பாட்டின் கூறுகளில் ஒன்று. “இந்த பூமி என் தாய், நான் அவள் அன்பு மகன்” (மாதா பூமி: புத்ரோSஹம் ப்ருதிவ்யா) என்று வேத ரிஷி உரைத்தார். “நிலமென்னும் நல்லாள்” என்று குறள் கூறுகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட தேசிய மறுலர்ச்சியில், பாரதத்தின் பழம்பெருமைகளைப் பற்றிய பெருமிதமும், இதன் தொடர்ச்சியாகவே, இந்த பாரத தேசம் என் தாய் என்னும் உணர்வும் பிறந்தது. தாயன்பும், தாய் மண்ணின் மீதான பாசமும் இயற்கையாக, ரத்தத்தோடு ஊறிய உணர்ச்சிகள் – இந்த உணர்ச்சிகளே நாடு முழுமைக்குமான தேச பக்தியாக முகிழ்த்து எழுந்தன! இந்த எழுச்சியின் முழுமையான வெளிப்பாடாகவே “வந்தே மாதரம்” என்ற அமர கீதம் சுதந்திரப் போராட்ட காலத்தில் அறியப் பட்டது, இன்றும் அறியப் படுகிறது. இந்தப் பாடலின் அடிப்படை உணர்ச்சி தாய்ப்பாசத்தையும், இயற்கையின் மீதான நன்றியுணர்வையும், தேசபக்தியையும் பாரதப் பண்பாட்டிற்கு உகந்த வகையில் ஒன்றிணைப்பது தான். எந்த விதமான சமய தத்துவமும் அல்ல.

ஒரு சமயம் இந்தப் பாடலின் ஆங்கில மொழியாக்கத்தைப் படித்த எனது சில அமெரிக்க நண்பர்கள் இயற்கையையும் தாய்மையையும் போற்றும் உன்னதமான உணர்வுகள் இந்தப் பாடலின் அடிநாதமாக இருப்பதை வியந்து பாராட்டினார்கள்.

நாம் தேசியப் பாடலாக ஏற்றுள்ள முதல் பத்தியின் மொழியாக்கம் -

“தாயே வணங்குகிறோம்
இனிய நீர்
இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்

வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்”

(முழுப்பாடல்: திண்ணையில் ஜடாயுவின் மொழியாக்கம் - http://www.thinnai.com/?module=displaystory&story_id=30308151&format=html)

இந்த முதல் பத்தி மட்டுமே தேசியப் பாடலாக ஏற்கப் பட்டுள்ளதால், மற்ற வரிகள் பற்றிய சர்ச்சைக்குக் கூட இடமில்லை. இருந்தாலும் கடைசி அடியில் வரும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி பற்றிய குறிப்புக்கள் எதிர்ப்பாளர்களால் சுட்டிக் காட்டப் படுகின்றன. வலிமை, செல்வம், கல்வி இவற்றின் உருவகமாகவே இந்தத் தேவியர் இங்கு குறிப்பிடப் பட்டனர். பாரதியின் பாஞ்சாலி சபதத்தில்
“தேவர்கள் பூச்சொரிந்தார் ஓம்
ஜய ஜய பாரத சக்தி என்றே”
என்று வருகிறது. பெண்மை, சக்தி, தாய்மை – போற்றுதலுக்குரிய இவை அனைத்தையும் ஒன்றாகக் கண்ட சிந்தனையே இவற்றில் தென்படுகிறது. பாரத வரைபடத்தின் நடுவில் சிங்கத்தை அரவணைத்தபடி புன்முறுவல் பூக்கும் தேவி வடிவில் வரையப் பட்ட “பாரத மாதா” சித்திரங்கள் இதே உணர்வை ஓவியத்தின் வாயிலாக வெளிப்படுத்த எண்ணிய ஒரு அழகிய முயற்சி, அவ்வளவு தான். இதை உருவ வழிபாடு என்று கொச்சைப் படுத்துவது கலையுணர்வு இல்லாமையின் அடையாளம். முதன் முதலில், பாரத அன்னை ஓவியம் தீட்டியவர் ரவீந்திரநாதத் தாகூரின் சகோதரரும், வங்கத்தின் பெரும்புகழ் பெற்ற ஓவியருமான அவனீந்திரநாதத் தாகூர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

எதிர்ப்பு வாதத்தின் விபரீத பரிமாணங்கள்:

தேசியப் பாடலின் மொழியாக்கத்தைப் பார்த்தோம். மண்டையை உடைத்துக்கொண்டு தேடினாலும், இதில் இஸ்லாமுக்கு எதிராக என்ன இருக்கிறது என்று புரியவில்லை. முகமது நபி தேவதூதர் இல்லை என்றும், அல்லா கடவுள் இல்லை என்றும் ஏதாவது இருக்கிறதா? “மாதரம்” (தாயே) என்ற சொல் தான் இருக்கிறதே தவிர கடவுள், தெய்வம் என்று எந்தச் சொற்களும் கூட இல்லை. இது ஒரு சமய சார்புடைய பாடல் என்று கருதுவதற்கு முகாந்திரமே இல்லை.

அப்படியானால், “தாயை வணங்குவது” என்பதே இஸ்லாமிற்கு எதிரானதா? இஸ்லாம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்றல்லவா பாரதப் பண்பாடு கூறி வருகிறது? ஒருவேளை, பெண்மையையும், இயற்கையையும் போற்றுவது இஸ்லாமிற்கு எதிரானதா? “அல்லா” என்ற ஒற்றைச் சொல்லில் அடங்கும் ஆண் கடவுள் மற்றும் தெய்வீகம் பற்றிய ஒரு குறுகிய அராபியக் கருத்து மட்டுமே (சமய அடிப்படையில் மட்டுமல்ல, எந்த அடிப்படையிலும்) போற்றுதலுக்கும், வணங்குதலுக்கும் உரியதா? இது ஒரு காட்டுமிராண்டித் தனமான, வெறித்தனமான நிலைப்பாடு அல்லவா? கொஞ்சம் சிந்தியுங்கள் - “இஸ்லாமுக்கு எதிரானது” என்று இமாம்கள் கூறும் இந்த சொத்தை வாதத்தை வைத்து வந்தே மாதரம் பாட மறுப்பவர்களை அங்கீகரித்தால் எதையெல்லாம் அங்கீகரிக்க வேண்டும்?

1) வந்தே மாதரத்திற்குக் கூறியது அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் பொருந்தும். “நீராரும் கடலுடுத்த நில மடந்தை” (“ஸமுத்ர வஸனே தேவி” என்ற பூமி ஸ்துதியின் பொருளும் இதே) என்று பூமித்தாயைத் தானே அதில் போற்றுகிறோம்? “தரித்த நறும் திலகமுமே” - திலகம் வைத்துக் கொள்வது இஸ்லாமிற்கு எதிரானதில்லையா? “அத்திலக வாசனை போல்” என்று தமிழ்த்தாயை இந்தப் பாடல் போற்றுகிறதே? “வந்தே” என்ற சொல்லுக்கு ஈடானது “வாழ்த்துதுமே” என்ற தமிழ்ச் சொல். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழ் நாட்டு இமாம்களும், மௌல்விகளும்? உடனடியாக, முஸ்லீம்கள் யாரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஃபத்வா விட வேண்டாமா? சிறுபான்மை சேவக தி.மு.க. அரசு உடனே அதை ஏற்றுக்கொண்டு “ஆமாம், ஆமாம், முஸ்லீம்கள் பாட வேண்டாம்” என்று சொல்லி தன் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்த வேண்டாமா? நாகூர் ரூமி உடனே இதற்கு வக்காலத்து வாங்கி பல அரபு மேற்கோள்களுடன் ஒரு புத்தகம் எழுத வேண்டாமா?

2) தமிழ் மறை என்று நாம் எல்லாரும் ஏற்றுக்கொண்ட திருக்குறள்? “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” என்பது இஸ்லாமிற்கு எதிரானது, அதை மாற்றி “அலிஃப் முதல எழுத்தெல்லாம் அல்லாஹு முதற்றே உலகு” என்று மாற்றித் தான் படிப்போம் என்றாலும் மற்ற குறள்களை என்ன செய்வது? “தீதின்றி வாழும் திரு”, “செய்யவள்”, “தாமரையினாள்” – லட்சுமியைப் பற்றி எத்தனை இடங்களில் வருகிறது? இஸ்லாமுக்கு எதிரான இந்த நூலை முஸ்லீம்கள் படிக்க வேண்டும் என்று அரசு கட்டாயப் படுத்தலாமா - கூடவே கூடாது ! திருக்குறளே இல்லாத தமிழ்ப்பாட நூல்களில் சிலம்பும், கம்பராமாயணமும், திருமுறைகளும் எதற்கு? தூக்கு இவை எல்லாவற்றையும் !

3) தேசியக் கொடியில் புத்த மதத்தின் சக்கரம் இருக்கிறது. தேசியச் சின்னத்தில், சிங்கம், எருது, குதிரை – அது போக “சத்யமேவ ஜயதே” என்ற வேத வாக்கியம் வேறு. முதலில் சின்னங்களைப் போற்றுவது என்பதே இஸ்லாமுக்கு எதிரானது – அதிலும் இதெல்லாம் உருவ வழிபாட்டுக் காஃபிர்களின் சின்னங்கள். எனவே, தேசிய சின்னங்களைப் போற்றுவது இஸ்லாமுக்கு எதிரானது!

4) இப்படி, இந்த இமாம்கள் கூறும் “இஸ்லாமுக்கு எதிரான” விஷயங்களுக்கு ஆமாம் ஆமாம் என்று தலையாட்டி பாராளுமன்றத்தில் பேசும் அர்ஜின் சிங், இந்த தேசத் துரோகத்துக்கு வக்காலத்து வாங்கி திண்ணையில் கட்டுரை எழுதிய கற்பக விநாயகம் – இந்தக் காஃபிர்கள் உயிரோடு இருப்பதே இஸ்லாமுக்கு எதிரானது அல்லவா? அர்ஜுன் சிங்கும், க.வி.யும் ஜிகாதிகளின் கையால் மரணத்தை ஏற்றுக் கொண்டு ஜஹன்னும் (இஸ்லாமிய நரகம்) போகத் தயார் தானா?

இதெல்லாம் விபரீதமான கற்பனை போலத் தோன்றலாம். வந்தே மாதரத்தை எதிர்க்கும் இமாம்களிடம் போய் இதில் வரும் ஒவ்வொரு கேள்வியையும் கேட்டுப் பாருங்கள் – பதில்கள் எப்படி வருகின்றன என்று. பாரதப் பண்பாடு என்பதே இஸ்லாமுக்கு எதிரானது என்ற முடிவில் தான் அது வந்து நிற்கும். ஏழாம் நூற்றாண்டு அராபியப் பாலைவனத்தின் கற்பனைகளுக்கு எட்டாத எந்த விஷயத்தையும் “இஸ்லாமுக்கு எதிரானது” என்ற ஒற்றை வாதத்தின் மூலம் அவர்கள் நிராகரிப்பார்கள் (ஆனால் அதி நவீன துப்பாக்கிகள், வெடி மருந்துகள், எறி குண்டுகள், ராக்கெட்டுகள் எல்லாம் இஸ்லாமிற்கு எதிரானவை அல்ல –அவையெல்லாம் ஜிகாதில் துணை புரிவதற்காக அல்லாவால் அனுப்பப் பட்டவை!!)

இந்த தேச விரோத சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்:

இப்படி ஜிகாதி இஸ்லாமிய மத வெறியர்கள் (சுருக்கமாக, இஸ்லாமிஸ்டுகள்) ஆட்சேபம் தெரிவிப்பதற்கெல்லாம் அரசும், சமுதாயமும் வளைந்து கொடுத்தால் அது அவர்களை மகிழ்விக்கும், வழிக்குக் கொண்டு வரும் என்று நினைப்பது இமாலயத் தவறு. பாரதம் போன்ற ஷரியத் சட்டம் நடைமுறையில் இல்லாத ஒரு சுதந்திர நாட்டில், இஸ்லாமிஸ்டுகளை உண்மையில் கோபப் படுத்துவது நம் கருத்துக்களோ, நடைமுறைகளோ அல்ல. அந்தக் கருத்துக்களையும், நடைமுறைகளையும் அடக்கி, ஒடுக்கி, அழிக்கும் அதிகாரம் தம்மிடம் இல்லை என்பது தான்! ஏனென்றால், இஸ்லாமிஸ்டுகளின் உண்மையான நோக்கம் ஷரியத் சட்டப்படி இயங்கும் ஒரு அரசை உருவாக்கி அதில் அதிகாரம் செலுத்துவது. அப்படி ஆனவுடன் எதைத் தடை செய்யலாம், எதை அனுமதிக்கலாம் என்பதை அவர்களே முடிவு செய்யும் அதிகாரம் வரும், அப்போது மட்டுமே அவர்கள் திருப்தியடைவார்கள்.

The real gripe Jihadi Islamists have in non-Muslim countries isabout power, not any matters of religious belief or custom.

“ஒரு பாடலைப் பாடினால் தான் தேசபக்தனா – இல்லை என்றால் கிடையாதா” என்று வெற்று வாதம் செய்யும் அறிவு ஜீவிகளும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பாடலைப் பாட மறுப்பதற்காகக் கூறும் காரணம் பகுத்தறிவின் (rationality) பால் பட்டதல்ல. மாறாக குருட்டு நம்பிக்கை (irrationality)யின் உச்சக் கட்டமான மதவெறி மற்றும் அதிகார வெறி சார்ந்தது.

தேசபக்த முஸ்லீம்கள் இதை உணர வேண்டும். பாரதப் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தோடு இஸ்லாமியக் கருத்தியலைப் பிணைக்கும் முயற்சிகளை அவர்கள் ஊக்குவிக்க வேண்டும். இதற்கு எதிராக, வேண்டுமென்றே பாரதப் பண்பாட்டிற்கு எதிரானதாக இஸ்லாமிய சமயக் கோட்பாடுகள் அனைத்தையும் சித்தரிக்கும் சூழ்ச்சிகளையும், நாச வேலைகளையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் சட்டப்படி, வந்தே மாதர கீதத்திற்கு எதிராகப் பேசுவது “தேசிய சின்னங்களை அவமதித்தல்” என்ற சட்டப் பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம். இந்தக் குற்றம் புரிந்த இமாம்களையும், மௌல்விகளையும் பிடித்துச் சிறையிலடைத்துத் தண்டிக்க வேண்டும். அவர்களுக்கு நேர்முக, மறைமுக ஆதரவு அளிக்கும் தேச விரோதிகளை சமுதாயம் இனங்கண்டு புறக்கணிக்க வேண்டும்.

வெந்தே போயினும் நொந்தே மாயினும்
நந்தேசத்தர் உவந்தே சொல்வது
வந்தே மாதரம்!
- மகாகவி பாரதி


[1] ஹைதராபாத் இமாம்கள் அறிக்கை: http://timesofindia.indiatimes.com/articleshow/1629373.cms
[2] இமாம் புகாரி அறிக்கை: http://timesofindia.indiatimes.com/articleshow/1910451.cms
[3] அரசியல் கட்சி நிலைப்பாடுகள்:
http://timesofindia.indiatimes.com/articleshow/1913479.cms
http://timesofindia.indiatimes.com/articleshow/1906196.cms
http://timesofindia.indiatimes.com/articleshow/1914104.cms
[4] வந்தே மாதரம் – மூலம், மொழிபெயர்ப்புகள், வரலாறு : http://www.freeindia.org/vmataram/

விளையாட்டு பற்றி சில சீரியஸ் சிந்தனைகள்

தீவிரவாதம் போன்ற தீவிர விஷயங்களையும் விளையாட்டுத் தனமாக அணுகுவது நம் சமூக நடைமுறையாகிவிட்ட நிலையில், ஆனந்த விகடன் (3.8.06) இதழில் குழந்தை நாடகக் கலைஞர் வேலு சரவணன் விளையாட்டுகள் பற்றி எழுதியிருந்தது தீவிர சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது. இவர் கூறும் சில மையமான கருத்துக்கள்:

· விளையாட்டுகள் வெறும் பொழுதுபோக்கு என்பது தான் நம் மூளையில் உறைந்திருக்கிறது. அன்போ, நன்றியோ, ஈரமோ, வீரமோ எதுவாக இருந்தாலும் குழந்தைகள் தங்கள் விளையாட்டுகள் மூலமே கற்றுக்கொள்கிறார்கள்..
· “அமெரிக்க ஜனாதிபதிகளின் நாடு பிடிக்கிற பேராசைக்கும், அதனால் எத்தனை உயிர்களையும் விலை பேசுகிற வன்முறைக்கும் அமெரிக்கக் குழந்தைகளின் விளையாட்டுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது.. “ என்று நோம் சாம்ஸ்கி கூறுகிறார்.
· ஆடுவதற்குப் பெயர் தான் விளையாட்டு.. நாமோ விளையாட்டைப் பார்க்கிற விஷயமாக மாற்றி விட்டோம்
· [நம் மூதாதையர்கள்] சேர்த்து வைத்த மரபான விளையாட்டுச் செல்வங்களை எல்லாம் குழி தோண்டிப் புதைத்து விட்டோம். மனமகிழ் விளையாட்டுக்கள், உடல் வள விளையாட்டுக்கள் என்று குழந்தைகளுக்கான விளையாட்டுகளை இரண்டு வகையாகப் பிரித்தார்கள் தமிழர்கள்..
· பெரியவர்களுக்கான உலகத்தில், பொருளாதாரப் போட்டியில்.. எதிரியை வீழ்த்தும் சூழ்ச்சியில், பொறாமையும், வஞ்சமுமே நிரம்பி வழிகின்றன. அந்த உலகத்தில் குழந்தைகளையும் கொண்டுவந்து விடுவது நம் தலையில் நாமே நெருப்பு வைத்துக் கொள்வதற்குச் சமம்


இந்தக் கருத்துக்களைப் படித்த பின் எனக்குத் தோன்றிய சில விஷயங்கள்:

உளவியல் ரீதியாக விளையாட்டுக்கும், மன வளர்ச்சிக்கும் உள்ள ஆழமான தொடர்பை நாம் சாதாரணமாக உணர்வதில்லை. சமீபத்தில் என் நாலரை வயது மகளுக்கு முதன் முதலாக கூடைப் பந்து விளையாட்டை அறிமுகப் படுத்தச் செய்த முயற்சிகள் இதை எனக்கு விளக்கின. கடையிலிருந்து வாங்கி வந்த toy basketஐ வீட்டு வாசல் தூணில் பொருத்தும்போது குழந்தையின் உயரத்தைவிட சற்று அதிக உயரத்தில் வேண்டுமென்றே பொருத்தினேன்; ஓரளவுக்காவது “சேலஞ்ச்” வேண்டும், குதிக்க வேண்டும் என்பதற்காக. ஆர்வத்தோடு ஓடி வந்த என் மகள் நான்கைந்து முறை எம்பிப் பார்த்தாள். ம்ஹூம்.. கூடைக்குள் பந்து போகமாட்டேனென்கிறது.. “ஒரு நிமிஷம்” என்று உள்ளே ஓடியவள், ஒரு சின்ன ஸ்டூலைக் கொண்டுவந்து போட்டு அதன் மேல் ஏறி நின்று கூடைக்குள் பந்தைப் போட்டு விட்டு என்னைப் பார்த்து “பார்த்தியா, போட்டு விட்டேன்” என்று புன்னகைக்கிறாள்! என்ன செய்வது? ஒரு பக்கம் சிரிப்பு வருகிறது.. “ஆகா.. என்ன துரிதமான problem solving திறமை! ” என்று கணினி வயப்பட்ட என் மனம் இன்னொரு பக்கம் களிக்கிறது.

Competitive sports என்னும் “போட்டிக்காகவே விளையாட்டு” என்ற கருத்து தான் மக்கள் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. விளையாட்டு என்பது வெறித்தனமான போர் என்பதாக ஆகிவிட்டது. NDTV-ல் cricket controversies என்ற பெயரில் நிகழ்ச்சி கொடிகட்டிப் பறக்கிறது! Posh area என்று சொல்லப் படும் மேல்தட்டு ஏரியாக்களில் குழந்தைகள் வெளியில் விளையாடுவதையே பார்க்க முடியாது.. பக்கத்து வீட்டுப் பசங்களெல்லாம் சேர்ந்து போக்குவரத்தை மறிக்கும் வகையில் சாலைக்கு நடுவில் ஸ்டம்ப் கட்டி, அக்கம்பக்கத்து வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த சுகமெல்லாம் அந்தக் காலத்தோடேயே போச்சு! சாஃப்ட்வேரர்களின் குழந்தைகளுக்கெல்லாம் விளையாட்டில் கூட விளையாட்டுத் தனம் இருக்கப் படுமா? இலக்குகள் (targets), செயலாற்றங்கள் (performance) எல்லாம் உண்டு. தெருவில் கிரிக்கெட் விளையாடினால் சும்மா உடற்பயிற்சி, சந்தோஷம், நட்பு அவ்வளவுதான்.. இதெல்லாம் வருமா? உயர்தர கோட்சுகள் பயிற்சியளிக்கும் அகாடமிகளில் சேர்ந்து விளையாட்டையும் “படிக்க வேண்டும்” ! நடுத்தரக் குடும்பத்துக் குழந்தைகள் பாடு இந்த விஷயத்தில் ஓரளவு பரவாயில்லை, ஆனால் மைதானங்கள் இருந்த இடங்களெல்லாம் அடுக்கு மாடிக் குடியிருப்புகளாக மாறிக் கொண்டிருக்கும் நம் நகரங்களில் சாதாரணக் குடும்பத்துக் குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்களே இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

மைதான விளையாட்டுகளுக்கான வசதிகளும் வாய்ப்புகளும் அருகி வரும் சூழலில், வீட்டுக்குள் தனியாக விளையாடும் விளையாட்டுக்கள் பிரபலமடைந்து வருவதில் வியப்பே இல்லை. அமெரிக்க குழந்தைகளின் விடியோ கேம் மோகம் அதீதமானது.. Playstation, X-Box, Gameboy என்று கேம் ஆர்வலர்களின் பசிக்குத் தீனி போட அதி நவீன 3-D பெட்டிகள் இருக்கின்றன; இப்போது நம் நகரங்களில் சாஃப்ட்வேரர்கள் போன்ற வசதி வாய்ந்த குடும்பத்துப் பிள்ளைகளும் இந்தப் பெட்டிகளை வாங்கி விளையாடுவதில் பெரும் ஆர்வம் காட்டுகிறார்கள். The Shrek போன்ற படங்களில் வருவது போன்ற அதி அற்புதமான 3D கிராபிக்ஸ் விந்தைகள் வளர்ந்தவர்களையே கட்டிப் போடும் திறன் கொண்டவை என்றால் குழந்தைகள் பற்றிச் சொல்லவா வேண்டும்? ஒரு காலத்தில் ஹாலிவுட் படங்களில் மட்டுமே சாத்தியமான இந்த விந்தைகள் மேற்சொன்ன விளையாட்டுப் பெட்டிகளிலேயே கிடைக்கும் போது மயங்காதவர் யார்? பயங்கரமான வன்முறை, போட்டி மனப்பான்மை, எதிரியைத் தாக்கி அழிக்கும் வெறி, அதற்கான வழிமுறைகள் வகுக்கும் தந்திரம் போன்றவை தான் முக்கால்வாசி வீடியோ விளையாட்டுகளின் கருப் பொருள்கள். சதுரங்கம் என்ற நம் பாரம்பரிய விளையாட்டும் அடிப்படையில் போர் சார்ந்தது தான்; ஆனால், அதில் பகுப்பாய்வுத் திறன் (Analytical skills), கூர்மையான நினைவுத் திறன், பலவிதமான சாத்தியக் கூறுகளையும் மனதிற்குள்ளேயே உருவாக்கிப் பார்த்தல் போன்ற மன வளர்ச்சிக்கான அற்புதமான கூறுகள் இருக்கின்றனவே தவிர வீடியோ கேம்களில் இருப்பது போன்று “காட்சிப் படுத்தப் பட்ட வன்முறை” (graphic violence) என்பது இல்லை. உழைப்பும் சிந்தனையும் தேவைப் படுகிற சதுரங்கத்தை ஓரங்கட்டி, சினிமாத் தனமான வன்முறை கலந்த வீடியோ கேம்கள் வளர்வது துரதிர்ஷ்டவசமானது.

“எனக்கு விளையாட்டில் ரொம்ப ஆர்வம் உண்டு சார்” என்று ஒரு இளைஞரோ, நடுத்தர வயது ஆசாமியோ சொன்னால், ஆகா பரவாயில்லையே இந்த வயதிலும் விளையாடுகிறாரே என்றெல்லாம் (பெரும்பாலும்) எண்ணி விடக் கூடாது.. “ஆர்வம்” என்று அவர் சொன்னதன் உட்பொருள் என்னவென்றால், “மனிதர் மணிக்கணக்காக உட்கார்ந்து டெஸ்ட் மேட்ச் உட்பட சகல மேட்சுகளையும் சளைக்காமல் பார்ப்பவர், ஸ்போர்ட்ஸ் தொடர்பான எல்லா புள்ளி விவரங்கள், சர்ச்சைகளையெல்லாம் விரல் நுனியில் வைத்திருப்பவர். ஸ்போர்ஸ் பற்றி மணிக்கணக்கில் பேசுவார்” என்பது தான். விளையாட்டு என்பது சினிமா போல “பார்த்து ரசிக்கும்” விஷயமாகத் தான் பெரும்பாலோருக்கு இருக்கிறது.. பல பெரியவர்களைப் பீடித்திருக்கும் இந்தப் பைத்தியம் கொஞ்சம் கொஞ்சமாக சிறுவர்களையும் தொற்றி வருகிறது.. தான் விளையாடும் விளையாட்டின் நுட்பங்களைக் கற்றுக் கொள்ளும், அறியும் நோக்கத்தோடு மேட்ச் பார்ப்பதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால், ஒரு மனிதனின் ஆளுமை (personality) பரிணமித்து வளரும் அந்த இளம் வயதில், மணிக்கணக்கில் தொலைக்காட்சி முன் அமர்ந்து பொழுதுபோக்குக்காக ஆட்டங்களைப் பார்ப்பது உடல் ஆரோக்கியத்தையும் வளர்க்காது, மன ஆற்றலையும் வளர்க்காது; தொந்தியையும், சோம்பேறித் தனத்தையும் தான் வளர்க்கும். சினிமாவாவது 3 மணி நேரத்தில் முடிந்து விடும், ஆனால் பல விளையாட்டுப் போட்டிகள் (குறிப்பாக கிரிக்கெட்) மணிக் கணக்கில், நாள் கணக்கில் ஓடுகின்றன; இவற்றைப் பார்ப்பது, பாடப் புத்தகங்கள் படிப்பது இதிலேயே பொழுது கழிவதால், அறிவை விசாலமாக்கும் மற்ற புத்தகங்கள் படிக்கும் பழக்கம் பதின் வயது (teen age) இளைஞர்களிடையே பெருமளவு குறைந்து வருகிறது. இந்த வயதில் புத்தகம் என்னும் அற்புதத்தை அனுபவித்து அறிந்தவர்கள், அப்போது படித்த புத்தகங்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாக்கின என்பதை உணர்வார்கள். இப்படி புத்தகம் படிக்காமல் டி.வி.யில் மேட்ச் பார்த்து வளர்ந்த பல மந்தமான ஆசாமிகளை பணியிலோ, வேறு விதமாகவோ சந்திக்கும்போது அவர்களிடத்தில் இருக்கும் இந்த ஊனம் வெளிப்படையாகவே தெரிவதைப் பார்த்திருக்கிறேன்.

நம் மரபு சார்ந்த விளையாட்டுக்கள் பலவும் அனேகமாக அழிந்து விட்டன. கபடி, கோகோ போன்ற ஓரளவு பிரபலமான விளையாட்டுக்கள் கூட mainstream sportsஆல் வெகுவாக ஓரங்கட்டப் பட்டு வருகின்றன. கிராமத்துக் காட்டான் இளைஞர்கள் தான் கபடி, கோகோ விளையாடுவார்கள், ஜென்டில்மேன்கள் விளையாடத் தக்கது கிரிக்கெட், டென்னிஸ் போன்றவை தான் என்ற கருத்தும் வேரூன்றி விட்டது. இந்த முக்கிய விளையாட்டுக்களின் கதியே இப்படியென்றால், அதிகம் அறியப் படாத சிறு விளையாட்டுக்கள் ? தொலைக்காட்சியின் வெகுவான பரவலால், இப்போது விளிம்பு நிலை மக்களும், கிராமப் புறத்தவர்களும் கூட கிரிக்கெட் ஆடுவது தான் ஜன்ம சாபல்யம் என்னும் எண்ணத்தில், பழைய விளையாட்டுக்களை எல்லாம் கை கழுவி வருகிறார்கள். பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், பரமபதம், தாயம் போன்ற உலக முன்னோடிகளான நமது மரபு சார்ந்த மனமகிழ் விளையாட்டுக்கள் மறக்கப் பட்டு, அதே போன்ற மேற்கத்திய கலாசாரத்தின் பழைய விளையாட்டுக்கள், புதிய புதிய லேபில்களுடன் நமது வீடுகளுக்குள் இறக்குமதியாகின்றன. விளையாட்டுக்களின் கருப் பொருள் ஒன்றாக இருக்கலாம், ஆனால் அதை நமது மரபு சார்ந்த வடிவில் விளையாடும்போது, விளையாட்டோடு கூட மொழி, கலாசாரம் பற்றிய கல்வியும் புகட்டப் படுகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இது பற்றிய விழிப்புணர்வை நாடு முழுவதும் பரப்பும் இயக்கங்கள் உடனடி அவசியம்.

விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சமூக அளவில் விளையாட்டுக்களின் தாக்கம் பெரியது, அது உணரப் படவேண்டும்.

Saturday, September 02, 2006

திண்ணை கட்டுரை : 24 ஆகஸ்ட் 06

இந்தக் கட்டுரையை வெளியிட்ட திண்ணை இதழுக்கு நன்றி.

எண்ணங்கள் - இந்துக்களின் நற்குணத் திரிபு, இஸ்ரேலின் தார்மீகப் போர், அரபு-அமெரிக்க பெண் உளவியலாளர், ஜிகாதுக்கு எதிராக முஸ்லீம் பெண்கள்

சின்னக் கருப்பனுடைய கருத்துக்களுக்கும், ஸ்ரீராமனை முன் வைத்து அவர் கூறிய தவறான உதாரணத்திற்கும் வந்த எதிர்வினைகள் தெளிவான, குழப்பமற்ற சிந்தனையின் வெளிப்பாடுகளாக இருந்தன. மலர்மன்னன், நேசகுமார், அனல் தூங்கும் கண்ணன் (யார் இந்தப் புது ஆள்?), வஜ்ரா ஷங்கர் - ஜிகாதி தீவிரவாதம் பற்றி இவ்வளவு துணிச்சலாகவும், தீர்க்கமாகவும், தெளிவாகவும் எழுதுபவர்களது எண்ணிக்கை தமிழ் இணையச் சூழலில் அதிகரித்து வருவது நல்ல, ஆரோக்கியமான அறிகுறி. இவர்கள் அனைவருக்கும் நன்றி, பாராட்டுக்கள்.

கொடிய மத வெறியனும், கொள்ளைக் காரனுமான கோரி முகமதுவை பலமுறை மன்னித்து விட்ட பிரித்வி ராஜனைப் பற்றி இரண்டு மூன்று கட்டுரையாளர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். நற்குணத் திரிபு (வடமொழியில் “ஸத்குண விக்ருதி”) என்பதற்கு மிகச் சரியான உதாரணம் இந்தப் பிரித்வி ராஜன். பகைவனையும் மன்னிக்க வேண்டும் என்ற நற்பண்பைப் பாத்திரம் அறியாது கடைப்பிடித்து, பாரதம் முழுவதும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிமைப் படுவதற்கு ஒரு விதத்தில் வழிவகுத்தது அவன் செயல். இந்த பிரித்வியை ஒரு வழியாகத் தோற்கடித்த கோரி அவனை எப்படி நடத்தினான்? அவனது கண்களைப் பிடுங்கி, நாய் போல காபூல் நகர வீதிகளில் தெருத் தெருவாக இழுத்துச் சென்று, சித்திரவதை செய்து கொன்றான் ! காஃபிர் ப்ரித்விராஜன் மீதான ஜிகாதிகளின் வெறுப்பு அப்படியும் அடங்கவில்லை. இன்றும் கூட, ஆப்கானிஸ்தானில் காண்டஹர் அருகே உள்ள பிருத்விராஜனின் பாழடைந்த சமாதிமீது காலால் எட்டி உதைத்து விட்டுத் தான் அங்கு போகும் ஒவ்வொரு பயணியும் கோரியின் சமாதியைப் பார்க்கச் செல்லவேண்டும் என்பதாக ஒரு பழக்கமே உள்ளது (பார்க்க)


தீயவர்களை அழிப்பதில் இது போன்று எந்த விதமான தொய்வுக்கும் இடம் கொடுக்கலாகாது என்பதை மகாபாரத கிருஷ்ணனின் யுத்த தர்மத்தை உதாரணம் காட்டியிருந்த விளக்கங்களும் நன்றாக இருந்தன. கௌரவர்கள் மட்டுமல்ல, ஜராசந்தன், சிசுபாலன், நரகன், காலயவனன் போன்று அநியாயங்கள் புரிந்த அக்கிரமக் கார கொடுங்கோல் அரசர்கள் பலரை அழித்து ஒழிப்பதற்கும் இந்த நெறிமுறையையே கிருஷ்ணன் கையாண்டான். சாணக்கியர், கிருஷ்ண தேவராயர், சத்ரபதி சிவாஜி, குரு கோவிந்த சிங் போன்று தர்மத்தைக் குழப்பமில்லாமல் புரிந்து கொண்ட மாவீரர்களும் இந்த “கிருஷ்ண நீதி”யையே கடைப்பிடித்தார்கள். இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான நமது தற்போதைய போரில் தேவைப்படுவதும் இதுவே.

* * * * * * * * * * *
“இஸ்ரேல் என்ற தேசமே உலக வரைபடத்தில் இருக்கக் கூடாது (மஹ்மூத் அஹ்மதெஞ்சாத் சொன்னது) , யூதர்கள் என்ற இனமே உலகில் இருக்கக் கூடாது (அடால்ஃப் ஹிட்லர் சொன்னது)” என்று தான் பாலஸ்தீன போராளிகளும், ஹெஸ்புல்லாவும், அரபு நாடுகளில் பெரும்பான்மையானவர்களும், ஏன் உலகெங்கும் இருக்கும் இஸ்லாமிஸ்டுகளும் நினைக்கிறார்கள். இப்படிப் பட்டவர்களிடம் இஸ்ரேல் நடந்து கொள்வதைத் தவிர வேறு எந்த மாதிரி நடந்து கொள்ள முடியும்?? ஏழாம் நூற்றாண்டின் காட்டுமிராண்டுத் தனமான இந்த யூத இன வெறுப்பு இன்று வரை தொடர்ந்து, இன்றைய இஸ்லாமின் மத நம்பிக்கைகளில் ஒன்றாகவே ஆகிவிட்டது! ஏறக்குறைய அரை நூற்றாண்டுகளாகத் தான் இஸ்ரேல் இஸ்லாமிய தீவிரவாதத்தைத் தாக்கி வருகிறது, அதுவும் 20 நூற்றாண்டுகளுக்கும் ஏராளமான கொடுமைகளுக்கும் பின் திரும்பப்பெற்ற தன் சின்னஞ்சிறிய தேசத்தையும், அதன் இறையாண்மையையும் காப்பாற்றிக் கொள்வதற்காக! ஆனால் இஸ்ரேலை அனாவசியத்துக்குப் போரில் இறங்கும் ஆக்கிரமிப்பு சக்தியாக சித்தரிப்பதே ஊடகங்களுக்கும், பல “அறிஞர்”களுக்கும் வழக்கமாகி விட்டது. “லெபனானின் அப்பாவிப் பெண்கள், குழந்தைகள் குண்டடி பட்டுச் சாகிறார்கள்” என்று திரும்பத் திரும்பச் சொல்லி உலகத்தின் அனுதாபத்தைப் பெற முயற்சிக்கும் இஸ்லாமிஸ்டுகளின் தந்திரங்களில் இதுவும் ஒன்று. மும்பையிலும், கோவையிலும், தில்லியிலும், காஷ்மீரிலும், லண்டனிலும், பாலி (Bali)யிலும், மாட்ரிட்டிலும், நியூ யார்க்கிலும், ஜெருசலத்திலும் – போரில் அல்ல, சாலைகளிலும், ரயில்களிலும், விமானங்களிலும், உணவகங்களிலும், கடைகளிலும், வீடுகளிலும், விடுதிகளிலும் ஜிகாதிகள் கொன்று குவித்த அப்பாவிப் பெண்கள், குழந்தைகள் எத்தனை, எத்தனை? பங்களா தேஷிலும், பாகிஸ்தானிலும் ஜிகாதிய அரசு ஆதரவுடன் அங்கு வாழ்ந்த இந்துப் பெண்களின் கற்பு சூறையாடப் பட்டதே, அந்த அரக்கத் தனங்கள் பற்றி ஊடகங்கள் இதே அளவு “அனுதாபமூட்டும் வகையில்” செய்தி வெளியிட்டனவா? இஸ்ரேலுக்கு நேர்ந்தது போல இவர்களுக்கும் நேர்ந்து, ஜிகாதி தீவிரவாத்தின் கோரப் பிடியால் பீடிக்கப் பட்டு அழிந்தால் தான் இவர்களுக்குப் புத்தி வரும்!

இஸ்ரேல் லெபனான் தாக்குதலைத் தொடங்கியதும், “உலக மக்களை நோக்கி இஸ்ரேலியப் பிரதமர் ஆற்றியிருக்க வேண்டிய உரை” என்ற தலைப்பில் யூத எழுத்தாளர் ஒருவர் எழுதியிருக்கும் சிறிய கட்டுரை (பார்க்க) இஸ்ரேலின் தார்மீக நிலைப்பாட்டை இன்னும் தெளிவாக விளக்குகிறது “.. இந்தத் தாக்குதலில் தயங்க மாட்டோம், மன்னிப்பு கேட்க மாட்டோம், பின்வாங்க மாட்டோம்.... ஆயிரக் கணக்கில் எங்கள் மக்கள் கொல்லப் பட்டபோது நீங்கள் இப்படி வெகுண்டெழுந்ததாக நினைவில்லை.. தீவிரவாத்தில் கொல்லப்பட்ட எங்கள் இளைஞர்களின் உடல் உறுப்புக்களை நாங்கள் TV காமிரா முன்பு திரும்பத் திரும்பக் காட்டுவதில்லை என்பதாலா? என்ன செய்வது? இத்தகைய பெரும் துக்கத்தையும் அமைதியாகவே அனுசரிப்பது எங்கள் வாழ்க்கை முறை… ஆனால் எங்கள் எதிரிகளின் குழந்தைகளின் சிதைந்த உடல்களைப் பார்த்து நாங்கள் கூரை மேல் ஏறி ஆட்டம் போட்டுக் களிப்பதில்லை – எங்கள் உண்மையான துக்கத்தையும் அனுதாபத்தையும் தெரிவிக்கிறோம். அப்படி ஆட்டம் போடுவது எங்கள் எதிரிகளின் அரக்கத்தனமான வழிமுறை. இன்றைக்கு எங்களை எதிர்த்திருக்கிறவர்கள் நாளை உங்களையும் எதிர்க்கக் கூடும். அவர்களது கொலைவெறித் தாக்குதலை ஏற்கனவே நீங்கள் அனுபத்திருக்கிறீர்கள். இன்னும் அனுபவிக்கப் போகிறீர்கள்”. கடைசி வரிகள் பாரதத்திற்காகவே சொல்லப்பட்டது போல் இருக்கின்றன. முழுக் கட்டுரையையும் படித்துப் பாருங்கள். அதீத தற்காப்பு உணர்வு (இது கசப்பான வரலாற்றினால் கற்ற சரியான பாடம்) என்பதைத் தவிர எந்த வெறித்தனமான கருத்தாக்கமும் இஸ்ரேலின் நிலைப்பாட்டில் இல்லை.

* * * * * * * * * * *
அல்-ஜஜீரா தொலைக்காட்சியில் வந்த லாஸ் ஏஞ்சலீஸில் வாழும் அரபு வம்சாவளியைச் சேர்ந்த பெண் உளவியலாளர் வஃபா சுல்தான் கருத்து (பார்க்க: இந்தக் கட்டுரை வெளியாகும்போதும் இந்த video link வேலை செய்யும் என்று நம்புகிறேன்). இவர் முன்வைக்கும் கருத்து அரபு உலகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வாழும் எல்லா முஸ்லீம்களும் நிச்சயம் சிந்தித்துப் பார்க்க வேண்டியது. இந்தப் பேட்டியிலிருந்து சில துளிகள் –
· இப்போது நடப்பது இரண்டு வேறுபட்ட நாகரீகங்களுக்கோ, சமயங்களுக்கோ இடையிலான போர் அல்ல. இரண்டு காலகட்டங்களுக்கு இடையிலானது – இருள் சூழ்ந்த இடைக்காலத்திற்கும் (middle ages), 21-ம் நூற்றாண்டிற்கும் இடையேயான யுத்தம். காட்டுமிராண்டித் தனத்திற்கும் பண்பாட்டிற்கும் இடையேயான யுத்தம். பெண்களை மிருகங்களாக நடத்தும் மனப்பான்மைக்கும் அவர்களை மனித உயிர்களாகப் பார்க்கும் மனப்பான்மைக்குமான யுத்தம்
· எந்த ஆன்மீக, supernatural விஷயங்களிலும் நம்பிக்கையில்லாத என் போன்றவர்களை ஏன் சமய விரோதியாக இஸ்லாம் பார்க்க வேண்டும்? நீங்கள் கற்களை நம்புவதில் ஒரு பிரசினையும் இல்லை, அவற்றை எங்கள் மீது எறியாமலிருக்கும் வரை!
· யூதர்கள் ஹோலோக்லாஸ்ட் என்ற பேரழிவிலிருந்து வெளிவந்து தங்கள் அறிவுத் திறத்தாலும், செயல் திறமையாலும், உழைப்பாலும் தங்களுக்கான உயர் இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். கொலை வெறியினாலோ, தீவிரவாதத்தாலோ, “ஐயோ, எங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்” என்று கத்திக் கூப்பாடு போட்டோ அல்ல.
· (ஜெர்மானியர் தங்களுக்கு இழைத்த கொடுமைக்குப் பழிவாங்குவதற்காக) எந்த யூத இளைஞனும் தற்கொலைப் படை அமைத்து ஜெர்மனி வீதிகளில் வெடித்துச் சிதறுவதில்லை. எந்த புத்த மதத்தவரும் இஸ்லாமை அவமதிக்கவில்லை. இஸ்லாமிய வெறியர்கள் தான் பாமியான் புத்தர் சிலைகளைத் தகர்த்து!
இந்தப் பேட்டிக்கு நடுவிலேயே, அரபிய சமய அறிஞர் ஒருவர், இந்தப் பெண்ணைப் பார்த்து, “நீ ஒரு சமயத் துரோகி, உனக்கு ஷரியத் படி தண்டனை வழங்க வேண்டும்” என்று திட்டியதும் நடந்தது!

* * * * * * * * * * *

ஜிகாதி தீவிரவாதப் போக்குகளைக் கட்டுப் படுத்துவதில் முஸ்லீம் பெண்கள் மிக முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பெண்மைக்கே உரிய இயல்பான குணங்களான அன்பு, பொறுமை, கருணை போன்ற மனிதப் பண்புகளும், ஆண்களுக்கே உரித்தான குழு சார்ந்த வெறித்தனம் இல்லாமலிருப்பதும், மதவெறியினால் பாதிக்கப் படாத சுய சிந்தனையை பெண்களிடத்தில் இயல்பாக வளரத் துணைபுரியும். பங்களாதேஷின் இந்துக்களுக்கு இழைக்கப் பட்ட வன்கொடுமைகளைப் பற்றி, எல்லா மிரட்டல்களுக்கும் துணிந்து தஸ்லீமா நஸ்-ரீன் என்ற பெண் எழுத்தாளர் எழுதி வருவது குறிப்பிடத் தக்கது (இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்த இந்த அச்சுறுத்தலுக்குள்ளான எழுத்தாளருக்கு ஆறு மாத விசா மட்டும் வழங்கி இந்திய அரசு அவரைத் துரத்த முயற்சிப்பது அராஜகம், அது தனிக்கதையாக எழுத வேண்டியது).

பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் கூட பல இஸ்லாமிய சமுதாயங்களில் மறுக்கப்பட்டு வந்திருக்கின்றன. இவற்றையும் மீறி தங்கள் துறைகளில் சாதனை படைக்கும் முஸ்லீம் பெண்கள் மனித ஆற்றலையும், மனித நம்பிக்கையையும் பறைசாற்றும் நட்சத்திரங்கள்! தங்கள் கல்வியறிவினால் பெற்ற தன்னம்பிக்கையினால் உந்தப் பெற்ற இத்தகைய முஸ்லீம் பெண்கள் ஏற்கனவே பல இடங்களில் தங்கள் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் பெண்களுக்கெதிரான தீமைகளை எதிர்த்துப் புறப்பட்டு விட்டார்கள். ஜிகாத் தீவிரவாதத்தைக் கனன்று எரியச் செய்துகொண்டிருக்கும் முல்லா, மௌல்வி, இமாம், காஜி கும்பல்கள் இந்தப் பெண்கள் எழுச்சியைச் சகியாமல் கிலி பிடித்துப் போயிருக்கின்றன. சமய, சமூக சீர்திருத்தத்திற்கான வாய்ப்பாக இதைப் பார்க்காமல், இந்தப் பெண்கள் எழுச்சியை பரவாமல் அடக்குவது எப்படி என்பதிலேயே இந்தக் கும்பல்கள் தங்கள் புத்தியைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன. இஸ்லாமிய அமைப்புக்குள்ளேயே ஜிகாத் என்ற அரக்கத் தனமான வன்முறை சார்ந்த கோட்பாட்டுக்கு எதிரான போரை முஸ்லீம் பெண்கள் தான் முன்னெடுத்துச் செல்வார்கள். இவர்கள் மீது தான் உலகம் பெரும் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் வைத்திருக்கிறது.