Thursday, February 28, 2008

தமிழ் எழுத்துலக சகாப்தம் சுஜாதா மறைந்தார்

மனது கனக்கிறது செய்தியறிந்து. தமிழ்ப் படைப்புலகத்தின் இணையற்ற சாதனையாளர் ஒருவர் மறைந்து விட்டார்.
நான் முதல் முதலில் தமிழ்ப் பத்திரிகை படிக்க ஆரம்பித்தது குமுதத்தில் ரத்தம் ஒரே நிறம் வந்து கொண்டிருந்த போது, அதற்கான படங்களைப் பார்த்துத் தான்... அப்போது ஆரம்பித்த வாசக பந்தம் இன்று வரை தொடர்கிறது.. இனிமேலும் தொடரும்.

நான், என் மனைவி, என் தங்கைகள், என் பெற்றோர், என் பாட்டி, என் 6 வயது மகள் (அவள் முதலில் பார்த்துப் படிக்க முயன்ற தமிழ்ப் புத்தகம் பூக்குட்டி) அனைவரும் படித்து, ரசிக்கும் ஒரு எழுத்தாளர் என்றால் அது சுஜாதா மட்டும் தான் - வேண்டுமானால் வால்மீகி முனிவரை சேர்த்துக் கொள்ளலாம். அப்பேர்ப்பட்ட ஆகிருதியும், எளிமையும், பன்முகத்தன்மையும், வர்ண ஜாலங்களும் கலந்த படைப்புகள் அவருடையவை.

கற்றதும் பெற்றதும் பகுதியில் மருத்துவமனையில் தனது இருதய சிகிச்சை தினங்களை எழுதுகையில் மருத்துவர் முதல் நர்ஸ் வரை ஒவ்வொருவரும் என்னை இப்படி கவனித்துக் கொள்கிறார்களே, இதற்காக என்ன பேறு செய்திருந்தேனோ என்று நெகிழ்ந்து போய் "நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன்" என்ற பாசுரத்தை சொல்வார். அந்த இரண்டும் அரங்கன் அருளால் அவரிடம் பரிபூர்ணமாக இருந்தது. சுஜாதாவைப் படிப்பவர்கள் பாக்கியசாலிகள்.

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் ஆறுதல்கள்.

Friday, February 22, 2008

நீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்

பிப்ரவரி 7, 2008 திண்ணை இதழில் ஜெயமோகன் எழுதியிருக்கும் “நீதியும் நாட்டார் விவேகமும் ....“ என்ற கட்டுரை குறித்து சில விமரிசனங்கள்.

// ஜெ.மோ: இவற்றில் உச்சம் திருவள்ளுவர் என்றும் சமண மரபில் ஆச்சாரிய குந்தகுந்தர் என்றும் குறிப்பிடப்படும் சமண முனிவரால் எழுதப்பட்ட 'திருக்குறள்' //

திருவள்ளுவரின் சமயப் பார்வை பற்றிய ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் சைவம், வைணவம் இவற்றை உள்ளடக்கிய (இன்று இந்துமதம் என்றழைக்கப் படும்) வேத சமயத்தினர், சமணர் அல்லது பௌத்தர் ஆகிய மூன்று தரப்பிற்கும் பல்வேறு வலுவான ஆதாரங்கள் வைக்கப் படுகின்றன. இந்நிலையில் முடிந்த முடிபாக இவ்வாறு ஜெயமோகன் எழுதியிருப்பது சரியானதன்று. சமண மறுமலர்ச்சி பற்றி முழங்கும் தருண் சாகர் போன்ற ஜைன ஆசாரியர்கள் தான் தங்கள் பிரசார மேடைகளில் எல்லாம் “குந்தகுந்தர் தான் திருவள்ளுவர்” என்று பேசி வருகிறார்கள். சமீப காலங்களில் இந்த rhetoric அதிகமாகியுள்ளது என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் ஆய்வு நோக்குள்ள ஒரு எழுத்தாளரின் இத்தகைய நிலைப்பாடு வியப்பூட்டுகிறது.நீதி என்ற கருத்தியல் அடிப்படையை மட்டுமே கொண்டு திருவள்ளுவரின் “சமணத்” தன்மையை ஜெயமோகன் முன்னிறுத்துவதாகத் தெரிகிறது. ஆனால் திருவள்ளுவர் கண்டிப்பாக ஏன் சமணராகவும் (பௌத்தராகவும்) இருந்திருக்கவே முடியாது, அவர் இந்து/வேத சமயத்தினராக மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் கருத்தியல் மட்டுல்ல, குறள் நேரிடையாகக் குறிப்பிடும் பருப்பொருள் உண்மைகள், உவமானங்கள், கூறுபொருள்கள் இவை அனைத்தின் மூலமும் உறுதி செய்யப் படுகின்றன.

இது குறித்து யுகமாயினி என்ற இலக்கிய சிற்றிதழில் ஜாவா குமார் என்பவர் எழுதிய கட்டுரையை இதன் இறுதியில் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன். இந்தக் கட்டுரை இத்தகைய முக்கிய ஆதாரங்களை சுருக்கமாகத் தொட்டுக் காண்பிக்கின்றது. .

// ஜெ.மோ: சமணர்களால் உருவாக்கப்பட்ட நீதி அதுவரை இந்திய சமூகத்தில் இல்லாதிருந்த பல முக்கியமான அம்சங்களைக் கொண்டிருந்தது. ஒன்று அதற்கு மானுடமளாவிய ஒரு நோக்கு இருந்தது. அடிப்படை விழுமியங்களையாவது அனைத்துமானுடருக்கும் சமமாக வைக்க அதனால் இயன்றது. இரண்டு, வன்முறை சாராமல் மனிதனின் கருணையையும் அகச்சான்றையும் நம்பியே பேசும் நீதியை அவை முன்வைத்தன. //

நீதி என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இட்டுச் செல்லுவது, வழிநடத்துவது என்று பொருள். அதனால் தான் நீதி நூல்கள் தத்துவ விவாதங்களாகவோ அல்லது தேடல்களாகவோ அல்லாமல் வெளிப்படையான அறவுரைகளாவும், இதைச் செய், இதைச் செய்யாதே என்று கட்டளையிடும் உபதேசங்களாகவும் உள்ளன. ஆனால், இந்த நீதியின் ஊற்றுக் கண்ணாக தர்மம் என்கிற கோட்பாடு (principle) உள்ளது. நீதிகளை (morals, ethics) உருவாக்குபவர்கள் அவற்றின் உண்மைத் தன்மையை தர்மம் என்ற உரைகல்லில் உரைத்தே உறுதி செய்ய வேண்டும். தர்மம் என்கிற மாறாத உண்மையின் கனி தான் நீதி என்பது.

இந்த தர்மம், மானுட அறம் என்கிற கோட்பாடு வேத ரிஷிகளாலேயே முதன்முதலில் எடுத்துரைக்கப் பட்டது. ரிக்வேத சம்ஹிதைகளிலேயே உலகின் மாறாத நியதி தர்மம் என்ற கருத்து உள்ளது. உபநிஷதங்கள் இதனை தங்கள் தத்துவப் பின்புலத்தில் வளர்த்தெடுக்கின்றன. உதாரணமாக, பிரகதாரண்ய உபநிஷத்தில் தர்மம் பற்றிய மிக விரிவான உரையாடல்கள் உள்ளன. பின்னர் இதிகாசங்கள் வாழ்க்கைச் சம்பவங்கள், கதைகள் மூலம் அறம் பற்றிய பல பரிமாணங்களை வெளிக் கொணர்கின்றன.

ந வை ராஜ்யம் ந ச ராஜா ஆஸீத், ந ச தண்டோ ந தாண்டிக:
தர்மேணைவ ப்ரஜா: ஸர்வே ரக்ஷந்தி ஸ்ம பரஸ்பரம்


“அரசும் இல்லை அரசனும் இல்லை; தண்டனைகளும் இல்லை, தண்டிப்பவனும் இல்லை.
மனிதர்கள் அனைவரும் தர்மத்தினாலேயே தங்களை பரஸ்பரம் பாதுகாத்துக் கொண்டனர்”

என்கிற மகாபாரத சுலோகம் குறள் கூறும் “அறம்” என்ற கருத்துடன் முழுதும் ஒன்றுபடுகிறது. “என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பிலதனை அறம்” என்று வள்ளுவர் கூறுவது நீதி என்ற கருத்தாக்கத்திற்கும் அப்பாற்பட்ட உலகின் இருத்தலுக்குக் காரணமாகிய இந்த தர்மம் பற்றியே, இதனையே, “ஜகத ஸ்திதி காரணம்” (உலகின் இருத்தலுக்குக் காரணமாகிய தர்மம்) என்று சங்கரர் தன் உரை ஒன்றில் கூறுகிறார்.தர்மோ ரக்ஷதி ரக்ஷித: (தர்மத்தைக் காப்பவரை தர்மம் காக்கும்) - விசுவ ஹிந்து பரிஷத் சின்னம்

இந்து மதம், பௌத்தம், சமணம் ஆகிய மூன்று மதங்களும் தர்மம் என்கிற இந்த அடிப்படைக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்பவை தான். அதனோடு கூட, ஒவ்வொரு மதத்தின் இறையியலிலும் இந்த சொல்லுக்கான சிறப்புப் பொருள்களும், விளக்கங்களும் அளிக்கப் படுகின்றன. அதனால் தான் இப்போது தலாய் லாமா உள்ளிட்ட பல சமயத் தலைவர்கள் இந்த மூன்று மதங்களையும் பொதுவாகக் குறிக்க கிழக்கத்திய மதங்கள் (eastern religions) என்பதற்குப் பதிலாக தர்ம மதங்கள் (Dharmic religions) என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

எனவே சமணம் தான் மானுடம் அளாவிய அறக் கோட்பாட்டையே “உருவாக்கியது” என்பது முற்றிலும் பிழைபட்ட புரிதல்.

// பேராரசுக்குரிய நீதி எப்போதும் தண்டனைகளால் அடிக்குறிப்பிடப்பட்டது. வாளால் பரப்பபடுவது, ரத்தத்தால் நிறுவப்படுவது.
வணிகநீதி இந்திய நிலப்பகுதியில் இரு பெரும் மதங்களின் குரலாக ஒலித்தது. பௌத்தம் சமணம் இரண்டுமே அடிப்படையில் வைசியர்களின் மதங்கள். பின்னர் தொழில்செய்யும் சூத்திரர்களின் மதங்களாக அவை வளர்ந்தன. பௌத்தமும் சமணமும் வணிகத்திற்கு இன்றியமையாத அடிப்படை நெறிகளை இந்திய நிலப்பகுதி முழுக்கக் கொண்டு சென்றன. //

“தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம்” (அடக்குபவைகளில் தண்டனையாகவும், வெற்றியை நாடுபவர்களிடத்தில் நீதியாகவும் நான் இருக்கிறேன்) என்று கீதையில் (10.38) கிருஷ்ணன் கூறுகிறார்.

வணிக நெறி என்பது அரசிற்குக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அரசனால் நிர்வகிக்கப் பட்ட ஒன்றாகவே இருந்ததே அன்றி அதற்கு எதிரான, மாற்றான ஒன்றாக இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தங்கள் பயணங்களில் கொள்ளைக் காரர்களாலும், வழிப்பறிகளாலும் தாக்கப் பட்ட இந்திய வணிகர்கள் அவர்களை எதிர்த்துப் போராடவுமில்லை, கருணையினால் மன்னித்து விட்டுவிடவும் இல்லை. மாறாக தங்களைக் காக்க வேண்டி மன்னனிடமே சென்று முறையிட்டனர். சம்ஸ்கிருத நாடகங்களிலும், சங்க இலக்கியத்திலும் இதற்கான சான்றுகள் பல உள்ளன. சட்டமும், தண்டனைகளும் நீதியின் ஒரு முக்கியமான அங்கம் என்பதை அவர்கள் தெளிவாகவே உணர்ந்திருந்தனர்.

திருக்குறளில் வணிகம் என்று ஒரே ஒரு அதிகாரம் உள்ளது, ஆனால் மன்னனைப் பற்றியும் அரசாட்சி பற்றியும் பற்பல அதிகாரங்கள் உள்ளன. “ஒறுத்தல்” (தண்டனை) என்கிற சொல் பல இடங்களில் புழங்குகிறது - “கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர்” என்பதில் உள்ளது போல.

முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப் படும்.

வானோக்கி வாழும் பயிர் என்ப மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.

அந்தணர் நூற்கும், *அறத்திற்கும்* ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

இப்படி மன்னனே சமுதாய நலனுக்கு அச்சாணி என்று அறுதியிடும் குறட்பாக்களை சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வகையில் குறள் மகாபாரதம் கூறும் அதே நீதிக் கருத்துக்களை, விவாதப் பின்புலங்கள் தவிர்த்து அவற்றின் சுருக்கமான வடிவில் வைக்கிறது என்பதே சரியான முடிவாக இருக்கும். அதன் பார்வை எந்த சமண நூலையும் விட மகாபாரதத்திற்குத் தான் மிக நெருக்கத்தில் உள்ளது.

“சொல்லக் கொடாத சுயோதனன் பின் ஏன்
கொல்லக் கொடுத்தான் குமரேசா - மெல்லவே
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
கொல்லப் பயன்படும் கீழ்”


என்பது குமரேச வெண்பா என்னும் நூலில் உள்ள ஒரு பாடல். முதல் இரண்டு அடிகளில் ஒரு உதாரணம், சம்பவம் அல்லது கதையையும் (இவை பெரும்பாலும் இதிகாச, புரானங்களில் இருந்தே இருக்கும்) அடுத்த இரண்டு அடிகளில் குறட்பாவின் மூல வடிவையும் கொண்டு அமைந்த நூல் இது. இதே போன்று சிவசிவ வெண்பா என்றும் ஒரு நூல் இருக்கிறது. குறட்கருத்துக்களுக்கு வாழும் உதாரணங்களாக இந்த நூலாசிரியர்கள் காட்டுவது இந்து புராணங்களையும், கதையாடல்களையும் தான், சமணத்தில் பல குறட்பாக்களுக்கு உதாரணமே கிடைத்திருக்காது.

மேலும் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று வாழ்க்கைப் பயன்களையும் (த்ரிவர்கம்) ஒருங்கே பேசும் குறள் எப்படி வாழ்க்கையை நிராகரிக்கும் சமண அறவியலின், பொருளை மையமாகக் கொண்ட வணிக நீதியின் குரலாக மட்டும் இருக்க முடியும்? இந்தியப் பண்பாட்டின் முக்கிய அம்சமான இந்த பரந்து பட்ட அறக்கோட்பாட்டையும், அதனை எடுத்தோதும் திருக்குறளையும் இப்படிக் குறுக்குவதே செயற்கையானதும், ஒற்றைப் படை சிந்தனைப் போக்கும் ஆகும்.

பிற்சேர்க்கை:
யுகமாயினி : டிசம்பர் 2007 இதழ் (பக்கங்கள் 20-24): ஜாவா குமார் எழுதியுள்ள கட்டுரை.

அன்புள்ள யுகமாயினி ஆசிரியருக்கு,
தங்களின் சமீபத்திய இதழில் திரு.இந்திராபார்த்தசாரதியின் கட்டுரை ஒன்றில் கீழ்க்காணும் இந்தப்பகுதி என் கவனத்தை ஈர்க்க இதை எழுதுகிறேன்.
" இன்னொரு வகையான வன்முறையும் உண்டு. புத்த ஜாதகத்தில் வழங்கிய ராமாயணக்கதை, ஹிந்து மதத்துப் புனித காவியம் ஆவதுபோல, சமணத் துறவியாக வள்ளுவருக்கு, ஜடா முடியை அணிவித்து, திருமேனி முழுவதும் திருநீற்றைப் பூசியிருப்பது போல், தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சீவக சிந்தாமணியும் பல நூல்களும் தப்பித்திருப்பது, அவை செய்த அதிர்ஷம் என்றுதான் சொல்லவேண்டும். இன்னொரு சமணராகிய தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தை வைதிக மதத்துச் சட்ட திட்டங்களுக்குள் கொண்டுவர உரையாசிரியர்கள் எவ்வாறு முயல்கிறார்கள் என்பது கருத்து வன்முறையின் வேறொரு முகம். "

மேலே திரு.இபா சொல்ல முனைவது 'வைதிகமதத்தினர் (அது என்ன மதம் என்று தெரியவில்லை) சமணரான திருவள்ளுவரை சைவராக வலிந்தேற்றித் திருநீற்றைப் பூசி விட்டனர்' என்று கொள்கிறேன்.

திருநீறுதான் திரு.இபாவின் பிரச்னை என்றால், வைணவமரபில் வந்த பரிமேலழகரே (இவரை காஞ்சி உலகளந்தபெருமாள் கோயில் பட்டரென்பர்) கடவுள்வாழ்த்துப் பகுதியில் வரும் 'எண்குணத்தான்' என்ற குறிப்புக்கு உரையெழுதுகையில் 'சிவாகமங்களில் குறிப்பிடப்படுவது போல' என்று சொல்வதால் வள்ளுவருக்குத் திருமண்ணைவிட திருநீறு பொருத்தமே. எனவே இங்கே வைணவமரபினர்தாம் வள்ளுவருக்குத் திருநீறு பூசினர் என்று திரு.இபா சொல்லியிருந்தால் தெளிவாயிருக்கும்.

அது கிடக்கட்டும். விஷயத்துக்கு வருகிறேன்.

திருக்குறளை வைத்து வள்ளுவரைச் சமணரென்பதற்கு யாதொரு அடிப்படையும் இல்லை. ஆய்ந்து நோக்கின் திருக்குறள் பெயரிலாப் பெருவழியான இந்துஞானமரபின் அறநூலே! இத்திறக்கில் அடியேன் கடந்த சில வருடங்களாக இணையத்தில் பல குழுமங்களில் பல சமண அறிஞர்களுடனும் வாதிட்டு இக்கருத்தை நிறுவியுள்ளேன். விரிவஞ்சி விடுத்து சாரமான சில சான்றுகளை மட்டும் கீழே தருகிறேன்.

1. அத்திநாத்தி வாதம் என்ற சமணர்தம் ஆதாரக் கோட்பாட்டினைச் சுட்டும் ஒரு பாவினைக் கூட திருக்குறள் நெடுகத் தேடினாலும் கிட்டாது. மேலும் நாயன்மார்களும் ஆழ்வார்களும் 'உளது இலது' என்று முரண்படும் இந்த ஆதார நம்பிக்கையைத் தாக்கினரே அன்றி சாதாரணச் சமணர்களை அல்ல.

2. பொதுவாய் சமணத்திற்குச் சான்றாய்ச் சுட்டப்படும் 'அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர் செகுத்து உண்ணாமை நன்று' என்ற (குறள் 259) குறளில் வேட்டலை உயர்வுநவிர்ச்சியிலே குறிப்பிட்டிருக்கிறாரே அன்றி சமணர் ஏற்காத வேள்விகளைச் சாடவில்லை என்பது பிறிதோரிடம் (குறள் 413) 'செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றோரொடு ஒப்பர் நிலத்து' என்று சொல்வதன் மூலம் அறியலாம். 'அவியுணவின் ஆன்றோர்' (Havis consuming celestials) என்ற சொல்லாட்சியும் இங்கே உயர்வுநவிர்ச்சியிலே சொல்லப்பட்டிருப்பதன் மூலம் வள்ளுவர் வேதவேள்விகளுக்கு எதிரானவர் அல்ல என்றும் தெளியலாம்.3. மேலும் சிறுதெய்வங்களுக்குப் படையல் வைப்பதும், மூதாதைகளுக்குப் படையல் வைப்பதும் (குறள் 43) சமணத்திற்கு ஏற்புடையது அல்ல.

4. குறள் 550 -ல் 'கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களை கட்டதனோடு நேர்' என்று மரணதண்டனையை நியாயப்படுத்துவது எவ்வகையிலும் அஹிம்சை போற்றும் சமணத்திற்குப் பொருந்தாது. சமண அறநூல்களில் மரணதண்டனை தீர்ப்பாகச் சொல்லப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. மன்னன் முறைதவறினால் அந்தணர் கடமைகளான வேட்டல் வேட்பித்தல், கற்றல், கற்பித்தல், இரத்தல், புரத்தல் ஆகிய அறுதொழில் நலியும் என்றும் அவர்தம் நூலையே மறப்பர் என்றும், வேள்விக்கும் ஆலயவழிபாட்டிற்கும் அவசியமான ஆபயன் (பஞ்சகவ்யம்) குன்றும் என்றும் (குறள் 134, 560) வள்ளுவர் வலியுறுத்துவதையும் நோக்கினால் வள்ளுவத்தின் அடிநாதம் சமணம் அல்ல என்று தெளியலாம்.

6. கடவுள் வாழ்த்திலே 'மலர்மிசை ஏகினான்' என்பதை சமணர்தம் ஆதிநாதர் மலரிலே நடந்தவர் என்பதால் சொல்கிறார் என்று சிலர் சொல்வதுபோல் பொருள் கொண்டால் அதன் தொடர்ச்சியாய் அவன் அடிசேர்ந்தார் 'நிலமிசை நீடுவாழ்தல்' எவ்வகையிலும் பொருந்தாது. 'நிலமிசை நீடுவாழ்தல்' (மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் - சம்பந்தர் தேவாரம்) என்பதே சமணத்திற்குப் புறம்பானது. இது போலவே இதர கடவுள்வாழ்த்துப் பாக்களுக்கும் சமணர்தம் அத்திநாத்திய சியாத்வாதக் கோட்பாட்டிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

7. பல குறட்பாக்கள் பதஞ்சலி யோகசூத்திரம் மற்றும் திருமந்திரப் பாக்களை ஒத்திருப்பதைக் காணலாம். 'பகவன், அறவாழி அந்தணன், எண்குணத்தான்' போன்ற விளிகள் சமணருக்குச் சொந்தமானதல்ல. காட்டாய்:

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்
மறவா அருள்தந்த மாதவன் நந்தி
*அறவாழி அந்தணன்* ஆதிப் பராபரன்
உறவாகி வந்தென் உளம் புகுந் தானே!
திருமந்திரம் - 1803

பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்
நல்லூழி ஐந்தினுள் ளேநின்றவூழிகள்
செல்லூழி யண்டத்துச் சென்றவ் வூழியுள்
அவ்வூழி யுச்சியு ளொன்றிற் *பகவனே*.
திருமந்திரம் - 2533

கொல்லான் பொய்கூறான் களவிலன் *எண்குணம்*
நல்லான் அடக்கமுடையான் நடுச்செய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத்து இடையில் நின்றானே.
திருமந்திரம் - 554

இங்கே சிவாகமங்கள் சுட்டும் எண்குணங்கள் ஆவன: தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை மற்றும் வரம்பில் இன்பமுடைமை.

'எட்டுகொலாம் அவர் ஈறில் பெருங்குணம்' என்று அப்பர் பெருமானும், 'எண்குணம் செய்த ஈசனே' என்று மாணிக்கவாசகரும் பாடுவர்.
அதனாற்றான் சிவாகமங்களில் சுட்டியபடி என்று பரிமேலகரும் உரையெழுதுகிறார்.

8. மேலும் எளிதில் பொருள்விளங்கா பல அதிநுட்பமான குறட்பாக்களுக்கு வேதாந்த சைவசித்தாந்த அடிப்படையில் மட்டுமே மெய்ப்பொருள் கொள்ளமுடியும். காட்டாய்:

'அல்லல் அருள் ஆள்வார்க்கில்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி' (குறள் 245)

என்ற குறளில், அருள் ஆள்பவர்க்கும் வளிக்கும் உள்ள தொடர்பை சித்தாந்தரீதியில் அணுகினால் ஒழிய பொருள் விளங்காது.
இதன் சூக்குமத்தை

'வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே'

என்ற திருமந்திரத்தின் துணை கொண்டும் தெளியலாம்.
அது போலவே

'குடம்பை தனித்தொழிய புள் பறந்தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு'

என்ற குறளில் (338) ஆன்மாவின் இயல்பைச் சுட்டுவதும் அத்திநாத்தியத்திற்கு ஒவ்வாதது. இது வேதாந்தக் கோட்பாடு. அவ்வண்ணமே வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகுதலும்.

9. சைவசித்தாந்த சாத்திர நூல்களில் திருக்களிற்றுப்படியார் என்ற நூல் முதன்மையானது. இதில் இரண்டு குறட்பாக்கள் நேராகச் சுட்டப்பட்டுகின்றன:

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகி னென்றமையாற்
சார்புணர்த றானே தியானமுமாஞ் - சார்பு
கெடவொழுகி னல்ல சமாதியுமாங் கேதப்
படவருவ தில்லைவினைப் பற்று. (34)
* குறள்: மெய்யுணர்தல்

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால்
வேண்டின� தொன்றுமே வேண்டுவது - வேண்டினது
வேண்டாமை வேண்டவரு மென்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டுமவன் பால். (40)
*குறள்: அவாவறுத்தல்

சமணக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு சைவசித்தாந்த சாத்திரநூல் பாடப்பட்டது என்பது நகைமுரணாகும்.

அவ்வண்ணமே சைவத்திருமுறையிலே சேரமான்பெருமாள் நாயனார் கயிலையில் சிவனார்தம் ஆசிகொண்டு பாடிய 'திருக்கயிலாய உலா' என்ற நூலில் திருக்குறள் ஒன்று தெளிவாய்க் குறிப்பிடப்படுகிறது:

'கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உளவென்று - பண்டையோர் கட்டுரையை..' (173/174)

10. இறுதியாய் ஒன்று. அஹிம்சை என்பது சமணர்க்கு மட்டுமே குறிக்கோள், ஆதாரக்கோட்பாடு என்பதும் பிழை. யோகமார்க்கத்தில் அஹிம்சையை இந்துசமய நூல்கள் அனைத்துமே வலியுறுத்துகின்றன. ஆயின் சமணத்தைப் போலன்றி அதை முக்திக்கு ஒரே வழியாக வைக்கவில்லை. 'யோகியர் பெறும் பேற்றினையே சாங்கியரும் பெறுவர்' என்ற கண்ணபிரானின் கீதைப்பேருரைக்குச் சான்றாய் வேடர் கண்ணப்பரையும், மீனவர் அதிபத்தரையும் அவர் போன்ற எண்ணற்ற மகான்களையும் காண்கிறோம். வள்ளுவரும் புலால் மறுத்தலை அனைவருக்கும் வலியுறுத்திச் சொல்ல்லவில்லை.

புலால் மறுத்தலை வலியுறுத்துவது யாரிடம்?

'துறவியலில்', யோகத்திலாழ்ந்து தவம் மேற்கொள்வோர்க்கு, நோற்பார்க்கு மட்டுமே. அது அமணர்க்கு மட்டுமின்றி அனைவர்க்கும் பொதுவானது. 'சமாதி'யில் (semedi) அமைய வேண்டி, ஒரு மண்டலம் நோன்பிருக்கும், மரக்கறி உணவே பழகாத ஜாவானியர் கூட அந்த நாற்பது நாள்களில் புலால் (முட்டை கூட) உண்பதில்லை.

புலால் மறுத்தலை வேறெங்காவது சொல்கிறாரா?
குடியியலில் ஓரிடத்தில் சுட்டுகிறார்.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. (984)

ஆக, கொல்லாமை என்பது நோற்பார் மட்டுமே கொளத்தகும். ஆயின் அவர் பெரும்பான்மையினரா? என்றுமில்லை. அவரே சொல்கிறார்:

இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். (270)

வள்ளுவம் சமணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் 'கொல்லாவிரதம்' அனைத்துத் தரப்பினர்க்கும், 'துறவியல்' மட்டுமின்றி பிற அதிகாரங்களிலும் எங்காவது ஓரிடத்திலாவது வலியுறுத்தப் பட்டிருக்கும்.
அப்படி அமையவில்லை என்பதை ஓர்க!

பொதுவில் பெரும்பான்மைக்கு, குறிப்பாய் நட்பியலில், 'மருந்து' (அதிகாரம் 95) எது என்று குறிப்பிடுகையில், 'செரித்தது கண்டு, அளவறிந்து உண்க' என்று பல பாக்களில் சொல்லிப் போகிறாரே அன்றி ஓரிடத்திலும் 'புலால் மறுத்தலே சிறந்த மருந்து, உடல்நலத்திற்கு ஏற்றது' என்று சொல்வதில்லை.
தமிழர் உணவுப்பழக்கத்தில் புலால் தவிர்க்க முடியாத அம்சமாய் இருப்பதை தொன்றுதொட்டுக் காண்கிறோம்.

ஓரிடம் நிணத்தைத் தீயிலிட்டு வாட்டுவதைக் காண்கிறார் வள்ளுவர். கண்டிக்கவில்லை; கலங்கவுமில்லை. மாறாய் நின்று ரசிக்கிறார். புசித்துமிருக்கலாம். எப்படியோ, சமணராய் வெறுத்து ஒதுக்கி ஓடியிருந்தால் அதனை ஓர் உவமையாய்க் குறளில் (that too approvingly) அமைத்திருக்க மாட்டார் என்பது திண்ணம்.

காமத்தீயில் நிறையழிந்து நிற்கும் பெண்மைக்கு அதைச் சுட்டுகிறார் இங்கு:

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்? (1260)

அன்புடன், ஜாவா குமார்

Wednesday, February 20, 2008

“தமிழ் எதிரிகளைத் துரத்துங்கள்”: மு.க வன்முறை அறைகூவல்

பிப்ரவரி 16, 2008: “தமிழகத்தில் உள்ள 97 சதவீதம் திராவிடர்களும், தமிழர்களும் ஒன்றிணைந்து தீய சக்திகளான தமிழ் எதிரிகளைத் துரத்துவதை கடமையாகக் கருத வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.கருநாநிதி கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா கருணாநிதியை ராவணன் என்று அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவித்தாராம். அதைக் குறிப்பிட்டு "ஜெயலலிதா ஆரியர்கள் திராவிடர்களை வெற்றிகொண்டதாகக் கூறும் ‘புராணப் பொய்களை’ மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி *தமிழர்களையும்* தமிழ் உணர்வுகளையும் புண்படுத்தி வருகிறார். ஜெயலலிதாவின் விமர்சனத்தை தமிழ் இனம் சவாலாக ஏற்க வேண்டும்” என்று திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

காமெடியிலும், காழ்ப்புணர்ச்சியிலும் கழகக் கண்மணிகளுக்கு இணை அவர்களே தான். காலம் காலமாக ராவணன் தான் உண்மையான தமிழன் என்று கட்டைத் தொண்டையில் பேசி வருவது இவர்கள் தானே? பின்னர் கொலைஞனை “ராவணன்” என்று கூறுவது இவர்களை ஏன் புண்படுத்த வேண்டும்? குஷிப்படுத்த அல்லவா வேண்டும்? 97 சதவீதம் உண்மைத் தமிழர்கள் மிச்சம் உள்ள 3 சதவீத “எதிரிகளை” அடித்து விரட்ட வேண்டுமாம். அடடா! இவர்களது புற(ம்போக்கு)நானூற்று வீரம் புல்லரிக்க வைக்கிறது.

அந்த 3 சதவீதம் என்பது பிராமணர்களைக் குறிக்கிறது என்று அந்த செய்தியே கூறுகிறது. ஒரு மாநிலத்தின் முதல்வர் அந்த மாநிலத்தின் குடிமக்களான பிராமணர்களுக்கு எதிராக துவேஷத்தையும், வெறுப்பையும் விதைத்து, வன்முறையைத் தூண்டி விடும் போக்கில் இப்படிப் பேசியிருக்கிறார்.

இந்த செய்தியைப் படித்துக் கொதித்துப் போயிருக்கும் ஒரு நண்பர் கேட்கிறார் -

தமிழ் நாட்டில் ஒரு கட்சி அதுவும் ஆளும் கட்சி அதன் தலைவர் அவனும் ஒரு முதலமைச்சர் 3 சதவிகிதம் மக்களை வேரறுக்கச் சொல்லி ஒரு தீர்மானமே போட்டிருக்கிறானே அது என்னவோ எந்தவொரு பத்திரிகையாளன் கண்களிலும், எந்தவொரு அரசியல்வாதி கண்களிலும், எந்தவொரு மனித உரிமம அமைப்புக் கண்களிலும் படவில்லை.

இது இன அழிப்புப் பிரச்சாரம் இல்லையா? வன்முறையைத் தூண்டும் இன ஒழிப்பு கோரிக்கை இல்லையா? இப்படியெல்லாம் எதுவும் பேசாத மோடியை அரக்கன் என்று வர்ணித்த பத்திரிகைகள் இன்று சர்வத்தையும் மூடிக் கொண்டிருப்பது ஏன்? காங்கிரசுக்கும், கம்னியுஸ்டுகளுக்கும் இந்த இன ஒழிப்பில் ஒப்புதல் உண்டா? ஏன் கண்டிக்கவில்லை? இது வரை ஒரு பத்திரிகை கூட இது குறித்து வாய் திறக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்காக தி மு க தடை செய்யப் பட வேண்டும், கருணாநிதியும் அவன் குண்டர்களும் கைது செய்யப் பட வேண்டும். உடனடியாக அவனது ஆட்சி கலைக்கப் பட வேண்டும்.

இதே போன்ற சில பத்தாண்டு வெறுப்பு அரசியல் பிரசாரத்தின் விளைவாக தமிழகத்தின் கிராமங்களில் இருந்தும், பல சிறு, பெரு நகரங்களில் இருந்தும் எல்லாம் ஏற்கனவே எல்லாப் பிராமணக் குடும்பங்களையும் துரத்தியாயிற்றே? விரட்டியாயிற்றே? இன்னுமா உங்கள் வன்மம் அடங்கவில்லை இனவெறி நாய்களே?

அவரது கருத்துடன் உடன்படுகிறேன்.

செய்தி:
Drive out “anti-Tamil, evil forces” - DMK

Chennai, Feb. 16 Seeking to revive its anti-Brahmin ideology, the DMK today appealed to 97 per cent Dravidians in Tamil Nadu to drive out “anti-Tamil, evil forces”, represented by the AIADMK supremo Ms Jayalalitha, from the state.

Taking exception to Ms Jayalalitha describing chief minister and DMK leader Mr M Karunanidhi as `Ravana’ in the general council meeting of AIADMK recently, a resolution adopted at the party’s administrative committee meeting said Ms Jayalalitha was again and again referring to the `mythological lies’ of Aryan victory over Dravidians and degrading Tamils and Tamil sentiments.

“Jayalalitha’s arrogant remarks will be taken as a challenge against the Tamil race. Ninety-seven per cent Tamils and Dravidians should take it as their duty to work for driving out these anti-Tamil evil forces from Tamil Nadu”, the resolution said in an obvious call to 97 per cent non-Brahmins in the state.

Even during the 2006 Assembly elections, Ms Jayalalitha had indirectly described the fight between the DMK and the AIADMK as a war between Aryans and Dravidians. - Bureau Report

Published: Saturday, February 16, 2008

Tuesday, February 19, 2008

மலேசிய இந்துத் தமிழர்கள் வாழ்வுரிமைக்காக இந்து முன்னணி போராட்டம்

பிப்ரவரி 16, 2008 அன்று சென்னை மலேசியத் தூதரகம் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வாழ்வுரிமை கோரிப் போரிடும் HINDRAF அமைப்பினரின் தலைமையில் நடைபெறும் தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்கும் மலேசிய அரசைக் கண்டித்தும், இந்துக் கோயில்கள் இடிக்கப் படுவதனை எதிர்த்தும் கோஷங்கள் இடப்பட்டன.

கைது செய்யப் பட்டுள்ள இந்து தலைவர்களை விடுவிக்கவும், தமிழர்கள் தங்கள் மரியாதையுடனும், உரிமைகளுடனும் வாழ வழிவகை செய்யுமாறு மலேசிய அரசை வலியுறுத்தியும் தூதரகத் தலைவரிடம் மனு கொடுக்கப் பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமகோபாலன், துரை சங்கர் உள்ளிட்ட இந்து முன்னணி தலைவர்களும் கலந்து கொண்டனர். இவர்கள் கைது செய்யப் பட்டு பின்னர் விடுவிக்கப் பட்டனர். பிப்ரவரி 16 அன்றே, HINDRAF தலைவர் வேதமூர்த்தியின் மகள் மலேசியப் பிரதமரை சந்தித்து இதே கோரிக்கைகளை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.

கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தத் தடை!

பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினக் கதகதப்பில் தமிழகத்தின் இளவட்டங்கள் திளைத்துக் கொண்டிருக்கையில், இதே நாளில், 1998ஆம் ஆண்டு கோவை மாநகரில் இஸ்லாமிய ஜிஹாதி வெறியர்களின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த 58 அப்பாவித் தமிழர்களுக்காகக் கண்ணீர் சிந்த, அஞ்சலி செலுத்த ஒரு சிறு கூட்டம் கோவை நகரில் இந்து அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டு அனுமதி கோரப்பட்டது. இந்த அமைதியான கூட்டத்திற்குக் காவல் துறை அனுமதி மறுத்து விட்டது.

இருப்பினும் அஞ்சலி செலுத்தியே தீருவோம் என்ற உறுதியுடன் மாநகரில் முதல் குண்டு வெடித்த இடத்தில் சாலையிலேயே அமர்ந்து விட்டனர் பாஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அஞ்சலி செலுத்த வந்திருந்தவர்கள். காவல்துறை 462 பேரைக் கைது செய்தது.

ஜிஹாதி தீவிரவாதத் தாக்குதலில் தங்கள் குடிமக்களை இழந்த மும்பை, தில்லி, லண்டன், நியூயார்க், மாட்ரிட் ஆகிய நகரங்களில் பொதுமக்கள் வருடாவருடம் மறைந்தவர்களுக்காகக் கண்ணீர் சிந்தியும், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவோம் என்று உறுதிபூண்டும் இத்தகைய தினங்களை அனுசரிக்கின்றனர். அரசு அதிகாரிகளும் இவற்றில் பங்கேற்கின்றனர்.

ஆனால் தமிழக காவல்துறை அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு அனுமதியும் மறுத்து, பின்னர் அவர்களைக் காரணம் எதுவும் கூறாமல் கைதும் செய்திருக்கிறது. தமிழக அரசின் இந்த மனித விரோத, அராஜக நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது.

அங்கே இறந்தவர்கள் தமிழர்கள் தானே? இந்த நாட்டின், இந்த மாநிலத்தின் குடிமக்கள் தானே? அவர்களது நினைவை அவமதித்து, இழிவு செய்யும் இந்த ஜிஹாதி ஆதரவு அரசை இதற்காகக் கண்டிக்கும் குறைந்த பட்ச மானம், ரோஷம், மனிதாபினம் கூடவா இல்லாமல் போய்விட்டதா தமிழக பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும்?? வெட்கப் படவேண்டிய விஷயம்.

Friday, February 15, 2008

ஜெயமோகன் பதிவும், ஆனந்த விகடனும்

ஜெயமோகன் எம்.ஜி.ஆர், சிவாஜி இவர்களைப் பற்றி எழுதியிருக்கும் தொப்பி, திலகம் ஆகிய இரு பதிவுகளையும் படித்து கண்களில் இருந்து கண்ணீர் வருமளவு சிரித்தேன். கிரீஷ் கர்நாட் நாடகங்களில் வரும் சில புராண கேலிகள் பற்றி "நாஸ்திக வாடையில்லாமல் சிரிக்கவைப்பவை" என்று சொல்வார்கள்। ஜெ.மோவின் இந்தப் பதிவுகளைப் பார்த்ததும் தமிழ்நாட்டின் போலித் தன வாடைகள் ஏதும் இல்லாதவையாக அவை எனக்குத் தெரிந்தன. ஹாட்ஸ் ஆஃப் ஜெ.மோ! இதற்கு முன்பு இந்த நடிகர்கள் பற்றிய இதே போன்ற, ரசிக்கும் படியான விமர்சனத்தை நான் படித்தது "புலிநகக் கொன்றை" நாவலுக்குள் ஒரு இடத்தில் தான் :))

ஆனால் "தமிழகத்தின் முகவரி" என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும், நகைச்சுவையைத் தன் முக்கிய அம்சமாகப் பிரகடனம் செய்யும் ஆனந்த விகடன் ஜெயமோகன் மீது அவதூறும், குற்றச்சாட்டும் சுமத்தியிருக்கிறது.. சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.

'கருணாநிதி இலக்கிய வாதியே இல்லை!' என்பது தொடங்கி, 'பெரியார், தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆரம்ப அறிவுகூட இல்லாதவர்!' என்பது வரை ஜெயமோகனின் தடாலடி ஸ்டேட்மென்ட்கள் பிரபலமானவை.

'அப்படி இவருக்கு அந்த இரண்டு சகாப் தங்களின் மீது என்னதான் பகை?' என்று படிப்பவர்கள் குமுறிக் கொந்தளிக்கும் அள வுக்கு

. ..ஒரு பொறுப்பான எழுத்தாளர் தன் அடையாளங்களைச் சொல்லி... அதே சமயம் தன் ஆவேசத்தை நியாயப்படுத்தக் காரணங்களும் சொல்லாமல் இப்படி சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்திருப்பதை என்னவென்று சொல்வது?

தமிழகத்தின் இலக்கிய ஆளுமை ஒருவர் மீது வெறுப்பைத் தூண்டும், அதன் மூலம் வன்முறையைத் தூண்டும் சாத்தியம் கொண்ட இது போன்ற சொல்லாடல்களின் மூலம் ஆனந்த விகடன் தான் தன் பொறுப்பற்ற தன்மையை நிரூபிக்கிறது. கருணாநிதி, ஈவேரா பற்றிய ஜெ.மோ விமர்சனங்கள் தடாலடி அல்ல, அவற்றுக்குப் பின் தீர்க்கமான, தெளிவான அலசலும், ஆய்வு நோக்கும் உள்ளது. அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை என்கிற இந்த அருமையான கட்டுரை ஒரு உதாரணம்.

உலகெங்கும் கோடிக் கணக்கான மக்கள் தெய்வ அவதாரமாக வழிபடும் ராமபிரானையும், ராமாயணத்தையும் பற்றி தமிழக முதல்வர் கருநாநிதி உதிர்த்த அவதூறுகளைப் பற்றி ஒரு வரிகூட எழுதத் தோன்றாத இந்தப் பத்திரிகைக்கு இரண்டு பழைய மசாலா கதாநாயகர்கள் பற்றிய ஒரு விமரிசனத்தைப் பார்த்து இப்படி உள்ளம் குமுறுகிறதா? வெட்கக் கேடு.

ஜெ.மோ தனது இன்னொரு பதிவில் "இன்றைய இலக்கியத்தில் இத்தகைய பகடி மிக முக்கியமான ஒரு அம்சம்." என்று கூறுகிறார். உலகம் முழுவதும் சுதந்திரமான சமூகங்களில் இன்றைக்கு ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்தாகும் இது.

"... His renowned eccentricities were owed in large measure to his mother, a simple woman from the country who lived for her rituals, which could last for months on end and “came with a series of fasts and half-fasts”। From this ensued his devotion to diet। He was a man who liked eating but who pledged himself to asceticism and simplicity।

One of Gandhi’s multitude of disciples was “a foolish man”, Vinoba Bhave, whose brain was softened by emulation and self-mortification, and who had to be dragged from the spinning wheel lest he made himself ill.

“He had lived for so long as a parasite, and away from the world, that he had become a kind of half-man, and he thought that Gandhi had been like that too. Vinoba had no means of knowing that Gandhi was a man of appetite, and his sexual abstinence hadn’t come easily. .."


இந்த வரிகளை எழுதிய "பொறுப்பற்ற ஆசாமி"க்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப் பட்டுள்ளது என்று ஆனந்தவிகடன் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இந்திய தேசம் முழுதும் போற்றும் இரண்டு பெரும் தலைவர்களைப் பற்றி இப்படி எழுதிய பின்னரும், வி.எஸ்.நய்பால் மீது இங்கே வைக்கப் பட்ட விமரிசனங்கள், இந்த விகடன் வரிகளை விட மிகவும் பண்பட்டவையாக இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆ.வி கட்டுரையைப் பார்த்து நொந்துபோன ஒரு நண்பர் அடித்த கமெண்ட் -

.. உண்மையில் ஜெமோ-வின் அந்த எம்சியார், சிவாஜி பற்றிய கட்டுரைகளைப் படித்துவிட்டு சிரித்துக் கொண்டிருந்தேன்.. ஹப்பாடி, இனிமேலாவது இவர்கள் போன்றஆளுமைகளைக் கடவுளாகப் பார்க்கும் தமிழர்களின் கெட்ட பழக்கம் கொஞ்சம்கொஞ்சமாகக் குறையும் என்று நினைத்தேன். ஆ.வி வெளியிட்டிருக்கும்கட்டுரையைப் பார்த்தால் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்றுநினைக்கிறேன்... இனிவரும் காலங்களில் சிம்பு, தனுஷ் போன்ற கடவுள்களும்,தென்னாட்டு டி-காப்ரியோ, தென்னாட்டு ப்ரூஸ்லீக்களும் உலா வருவார்கள்என்று எதிர்பார்க்கலாம். [ஏற்கனவே தன்னை சிம்பு ஒரு மகா பெரியமேதாவியாகத்தான் சொல்லிக்கொள்கிறார்!]

Thursday, February 07, 2008

அத்வானி, சானியா அச்சுறுத்தல்கள்: நம் அடிப்படை உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவால்

இந்த வாரம் இந்தியாவின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் இரண்டு பெரிய அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன.

பா.ஜ.க தலைவர் அத்வானி உள்நாட்டு பாதுகாப்பு, தீவிரவாதத்தை நேர்கொள்வதில் இப்போதைய அரசின் தோல்விகள் இவற்றை முன்னிறுத்தி நாடு முழுவதும் 13 இடங்களில் பேரணிகள் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து தற்கொலைப் படைத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல விதங்களிலும் அவரது உயிருக்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உயிருக்கும் ஆபத்து இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அறிவித்தார். இது வழக்கமான எச்சரிக்கை மட்டுமல்ல, உளவுத்துறையால் உறுதி செய்யப்பட்ட தகவல் என்பதால் பா.ஜக இந்தப் பேரணிகளை தீவிர மறுபரிசீலனை செய்யவேண்டும், தேவைப்பட்டால் ரத்து செய்யவும் வேண்டும் என்று எடுத்துரைக்கப் பட்டது. மோடி மற்றும் அத்வானிக்கு அளிக்கப் படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் படும் என்றும் செய்திகள் கூறுகின்றன.

அரசுத்துறையின் தகவல்கள் உண்மையாகவே இருக்க வேண்டும். பாஜக பேரணியை மத்திய அரசு குலைக்கப் பார்க்கிறது என்று சில கட்சித் தலைகள் பேசும் அற்ப அரசியலை ஒதுக்கி விடலாம். ஆனால் இதன் மூலம் அத்வானி மேற்கொண்டிருக்கும் பிரசாரம் எந்த அளவுக்கு அத்தியாவசியமானது, உண்மையானது என்பது நிரூபிக்கப் பட்டு விட்டது. இந்த தேசத்தின் இறையாண்மை, சுதந்திரம், முன்னேற்றம் இவற்றின் மீது விடாமல் போர்தொடுத்து வரும் ஜிகாதி தீவிரவாதத்தை எதிர்த்து பிரசாரம் செய்வது என்பதே அபாயகரமான செயலாக ஆகிவிட்டிருக்கிறது. அதுவும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்கள் என்ன செய்ய முடியும்?

முட்டாள் தனத்திற்காக ஒரு சாராரால் கேலிசெய்யப் பட்டாலும் “நாம் அவர்களை சாம்பலாக்குவோம்” (We will smoke ‘em out) என்று தீவிரவாதிகளுக்கு முஷ்டியை மடக்கிக் காட்டி அதைச் செய்தும் காட்டும் கௌபாய் ஜார்ஜ் புஷ் போன்ற துணிவும், உறுதியும் வாய்ந்த அரசியல் தலைமை நமக்கு வாய்க்கவில்லை தான். அதற்காக விதியை நொந்துகொள்வோம். ஆனால் இந்த பலகட்சி, பல கொள்கை ஜனநாயக நாட்டில், ஜிகாதி தீவிரவாதத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடையே உண்டாக்கி, அதை ஒரு அரசியல், தேர்தல் பிரசினையாக்குவதற்குக் கூட முதல் கட்டத்திலேயே முட்டுக்கட்டை போடும் அளவுக்கு இந்த தீவிரவாத வலைப்பின்னலின் ஊடுருவல் இருக்கிறது என்பது வெட்கக் கேடான விஷயம்.

இந்திய விளையாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த “பெங்களூர் ஓபன்” போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று டென்னிஸ் இளம்புயல் சானியா மிர்சா அறிவித்து ஒரு பெரிய குண்டைப் போட்டிருக்கிறார். இது மட்டுமல்ல, இனிமேல் இந்தியாவுக்காக வெளிநாடுகளில் விளையாடுவேன், இந்தியாவில் எங்குமே தைரியமாக விளையாடுவதற்கான சூழல் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

டென்னிஸ் வீராங்கனைகளுக்கே உரிய கச்சிதமான பாவாடையை அவர் அணிவது இஸ்லாமுக்கு எதிரானது என்று லக்னோவிலிருந்து லாலாபேட்டை வரை ஒரு முல்லா, மௌல்வி விடாமல் பிரசாரம் செய்து முடித்தாயிற்று. இந்த “ஹராமை” அவர் தொடர்ந்து செய்து வருவதற்கு எதிராக பல ஃபத்வாக்களும் விடப் பட்டிருக்கின்றன. அவர் போகுமிடங்களில் எல்லாம் இது பற்றிக் கேள்விகள் கேட்கப் பட்டு அவரை சங்கடத்திலும், அசௌகரியத்திலும் ஆழ்த்துகிறார்கள். இது போதாதென்று ஹைதராபத் மசூதி ஒன்றின் பின்னணியில் அவர் ஒரு விளம்பரப் படத்தில் நடித்தார் என்பதற்காக அவர் மீது வழக்குகள், மிரட்டல்கள். (அந்தப் புகைப் படத்தைப் பார்த்தால் அதில் மசூதி எங்கோ தூரத்தில் இருக்கிறது - அதற்கே இந்தக் கூப்பாடு). இந்த முரடர்கள் விளையாட்டு மைதானத்தில் வந்து ஏதாவது பைப் குண்டுகளை வீசி எறிந்து விட்டால் என்ன செய்வது என்று சானியா உண்மையிலேயே கவலைப் படுவதாகத் தெரிகிறது.
இத்தனைக்கும் சாதாரண முஸ்லீம்கள் சானியா போன்று ஒரு துடிப்பான, அழகான விளையாட்டு வீராங்கனையை தங்கள் ‘icon” ஆக நினைப்பதில் பெருமைப் படுகிறார்கள். பல முஸ்லீம் கடைகள், வாகனங்கள், நிறுவனங்களில் அவரது குறுகுறு எழில்முகத்தை ப்ளோ அப்களில் பார்க்கிறேன். இத்தகைய வெகுஜன அங்கீகரித்தல்கள் தரும் தைரியத்தை விட சில முட்டாள் முல்லாக்களின் பயமுறுத்தல்களும், அவற்றை நிறைவேற்றும் தீவிரவாத குழுக்களும் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீராங்கனையை முடக்கிப் போடும், நசுக்கும் அவலம் இந்த நாட்டில் நிகழ்கிறது.

அயன் ராண்ட் தமது Atlas Shrugged நூலில் ஒரு சுவாரசியமான கற்பனையை முன்வைக்கிறார். திறமைசாலிகள், சாதனையாளர்கள், பெரும் கனவுகளைக் காண்பவர்கள் (dreamers of dreams) தங்கள் திறனும் ஊக்கமும் முடக்கப் படும் சூழலில், அதை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தால் என்ன ஆகும் என்று. சாதனையாளர்களை நசுக்கும் தேசம் அவர்களால் புறக்கணிக்கப் பட்டு, பாழ்படும்.

நேற்று பிப்ரவரி-6 புதன் அன்று ஜபல்பூரில் அத்வானியின் முதல் பேரணி நடந்து முடிந்திருக்கிறது. பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சலை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை என்பது உள்ளிட்ட பல கேள்விகளோடு இந்தப் பிரசாரம் தொடங்கியிருக்கிறது. அத்வானியின் அனைத்துப் பேரணிகளும் சில தேதி மாற்றங்களுடன் முன்பு அறிவிக்கப் பட்ட படியே திட்டமிட்ட எல்லா இடங்களில் நடைபெறும் என்ற அறிவிப்பு இந்த இருளில் ஒரு ஒளிக்கீற்றாக வந்திருக்கிறது.

இதே போன்று சானியாவும் தன் முடிவை மாற்றிக் கொள்வாரா? சானியாவின் உரிமைகள் நிலைநாட்டப் படுவது இந்த சுதந்திர நாட்டின் முதன்மையான கடமை.

Maharishi attains Maha samadhi - A Tribute & some thoughts

Maharishi Mahesh Yogi has attained Maha samadhi at the age of 91. He was a great soul and one of the greatest Yogis of this era, who brought Yoga, meditation and Hindu spirituality on the world stage. Particularly to the west, particularly at a time when the west was heading towards moral and spiritual degeneration. He was truly a pioneer to the many globe trotting Hindu spritual Masters and Gurus of today.

Born "Mahesh Prasad Varma" in the ywar 1911 in Jabalpur, Madhya Pradesh, he became a close disciple of Swami Brahmananda Saraswati, the then Shankaracharya of Jyotirmath, Badrinath, a Guru well respected all over North India at that time. Upon his Guru's passing away, Mahesh became his spirtual heir and started teaching what is now known as "Transcendental Meditation" (TM). Millions of aspritants and Sadhaks all over the world have benefitted from this practice.
Credited as the author of more than 16 books, including commentaries of the Bhagavad Gita and some portions of the Vedas, Maharishi expanded his work to include many aspects of Vedic teachings. He also established universities, townships and many organizations towards this end.

In an act that is truly a hallmark of great Yogis, On January 11, 2008, he announced his retirement from his normal activities: "Invincibility is irreversibly established in the world. My work is done. My designated duty to Guru Dev is fulfilled." He resolved to use all his remaining time to complete his commentary on the Veda. He passed away less than a month later.

Humble Pranams to the glorious memory of Maharishi.

Something that is very saddening is NOT Maharishi's passing away, he lived a very fulfilling life of 91 years, but the way the media (both the Indian and western) portrayal at this time - Ignoring all the great contributions, but harping on silly controversies that surrounded him.

The New York Times : Maharishi Mahesh Yogi, Spiritual Leader, Dies
The Times of India: Maharishi Mahesh Yogi, guru to the Beatles, dies
In line with TOI, *all* Indian newspapers have "Beatles Guru" in their headlines.

The only fitting tributes, are an aricle by Dr. Deepak Chopra and the IndiaTimes Pay your tributes page.

An insightful comment from a good friend of mine -

"... While the results of his techniques could be a subjective experience, as most such spiritual exercises always are, he was the first who showed the world glimpses of what Yoga could achieve if one had a serious bent towards it for which he had given a simple technique to start with. It would be entirely naïve to believe that one would become a Rishi by chanting a mantra for twenty minutes twice a day, but that seemed to have been the expectation of those who were disappointed by trying his techniques. I have personally seen and experienced the sharpening of certain human faculties as one learned some of what he called as advanced techniques. He proved with clinical results as well so many beneficiary factors of his techniques.

Yes, he seemed to have gone overboard on quite a fewoccasions, but then he had so much of positive contribution to the world of Indian Spirituality which make one feel sad that he would be remembered today as the Guru of Beatles, who hardly even acquired any level of mental maturity after being personally acquainted with him, other than create some of their best songs in that period ofassociation.

What makes me feel sadder is not the negligence of the Western Media or how they caricatured him. It is the negligence of our own people of whose spiritual legacy he was an exponent of. What a tragedy!"