Showing posts with label கிறிஸ்தவம். Show all posts
Showing posts with label கிறிஸ்தவம். Show all posts

Tuesday, December 07, 2010

இந்திய மதப்பிரிவினை சட்டம் (Article 30) = பண்பாட்டு அழிவு?

அரசு நிதியில் இயங்கும் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களும் மத அடிப்படையில் பெருமளவில் இட ஒதுக்கீடு செய்ய வழிவகுக்கும் சர்ச்சைக்குரிய இந்திய சட்டம் இது...

தில்லி செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி தொடங்கி மதுரை அமெரிக்கன் கல்லூரி வரை இந்தச் சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்யும் அடாவடிகள் கடந்த சில ஆண்டுகளாக அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்...

இதன் நீண்டகால விளைவுகள் என்னவாக இருக்கும்? - என்பது பற்றி நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் தாமஸ் ஷெல்லிங்கின் ஒரு அறிவியல்பூர்வமான கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்ந்து டாக்டர் மூர்த்தி முத்துசுவாமி என்பவர் எழுதிய ஒரு கட்டுரையை நான் மொழிபெயர்த்திருக்கிறேன் -

Wednesday, February 17, 2010

இந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்

செஞ்சியில் திடீரென ஏற்பட்டுள்ள பிரச்னையில் பழைமையான கோவிலின் வழிபாட்டை கிறிஸ்தவர்கள் தடுத்தி நிறுத்தி கோவிலை பூட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. காலனிய அடிமைத்தனத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு, தங்களுடன் காலம் காலமாக வாழ்ந்து வரும் தங்கள் சொந்த சகோதரர்களின் பழமையான வழிபாட்டுத் தலத்தை அபகரிக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் எப்பேர்ப்பட்ட ஈனத்தனம்!...

முழுதும் படிக்க: இங்கே.

Friday, July 03, 2009

மும்பை இந்து-கிறிஸ்தவ உரையாடல்கள்: ஒரு பார்வை

”சகிப்புத் தன்மையுள்ள நாடான இந்தியாவில், ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடப்பது ஏன்” என்றார் வாத்திகன் பிரதிநிதி. ஆனால், இந்துத் துறவியர் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் கிறிஸ்தவ மதப்பிரசாரம் மற்றும் மதமாற்றங்களே என்பதை ஆணித்தரமாக முன்வைத்தனர். இந்துத் தரப்பின் சார்பாக வெளியிடப் பட்ட அறிக்கையின் மையமான கருத்துக்கள்...

தமிழ்ஹிந்து.காம் தளத்தில் முழுக் கட்டுரையையும் படிக்கலாம் -

http://www.tamilhindu.com/2009/06/mumbai-inter-faith-meet-jun09/

Friday, April 10, 2009

மதர் தெரசாவின் மகளுக்கு: சில கேள்விகள்

மூலம்: டாக்டர் திருமதி ஹில்டா ராஜா

மொழியாக்கம்: ஜடாயு

மதர் தெரசா நிறுவிய மிஷனரீஸ் ஆஃப் சாரிடி அமைப்பின் பெரும் தலைவராக (சுபீரியர் ஜெனரல்) புதிதாக பொறுப்பேற்றுள்ள சகோதரி பிரேமா (இவர் பிறப்பால் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்) இரண்டு விஷயங்களை பிரகடனம் செய்துள்ளார் – மதமாற்றம் என்பது கடவுளின் பணிஎன்று ஒன்று. எனக்கு தேவ ஆணை கிடைத்தால் நான் கந்தமால் (ஒரிஸ்ஸா) செல்வேன்என்று இன்னொன்று.

மதமாற்றம் செய்வதிலேயே ஊறித்திளைப்பவர்கள் அதனைக் கடவுளின் பணி என்று வர்ணிப்பது வழக்கமான ஜல்லி தான். இஸ்லாத்திற்கு ஜிகாத் எப்படியோ, அப்படி கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம்.

சகோதரி பிரேமா மேலும் சொல்கிறார் – “ஒவ்வொரு மனித உயிருக்கும் தன் நம்பிக்கைகளுடன் வாழ உரிமை உள்ளது, ஒவ்வொரு மனிதனும் சுயகௌரவத்துடன் தான் பிறக்கின்றான். மதமாற்றம் கடவுளின் பணி”. நல்லது. ஆனால், இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் தான் பிரம்மாண்டமாக இருக்கின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் தன் நம்பிக்கைகளுடன் வாழ உரிமை உள்ளதென்றால், அந்த மனிதரை அவருக்கு பிறப்பிலிருந்தே இயல்பாக இல்லாத, புதிய வினோதமான இன்னொரு நம்பிக்கையில் வலிந்து நுழைக்க தேவை தான் என்ன? இயற்கையாக வாய்த்த கடவுளை பேயோட்டுவது போல் துரத்திவிட்டு அந்த இடத்தில் இன்னொரு கடவுளை உட்கார வைப்பது தான், அந்த மனிதருக்கு பிறப்புரிமையாக வரும் சுயகௌரவத்தை உயர்த்துவதா? மதமாற்றம் என்பது முழுக்க முழுக்க இதைத் தானே செய்கிறது சகோதரி?

சுயத்துடன் வாழும் ஒரு ஆணையோ, பெண்ணையோ ஏன் இப்படி ரணப்படுத்த வேண்டும்? சகோதரி என்ன சொல்லவருகிறார் என்றால் - ஒவ்வொரு மனிதரையும் மதம்மாற்ற அவருக்கு உரிமை உள்ளது; ஆனால் அந்த மனிதர் தமது நம்பிக்கைகளுடன் வாழும் உரிமை என்பது சகோதரி பிரேமாவும் அவரது திருச்சபையும் நம்பும் குறிப்பிட்ட கடவுளை அவர் நம்புகிறாரா இல்லையா என்பதைப் பொறுத்துத் தான் தீர்மானிக்கப் படும்! உண்மையில் அவர் கூறுவது இதைத் தான். 2000 வருட வயதே கொண்ட இந்தக் குறிப்பிட்ட கடவுள் ஏன் எப்போதும் மற்றவர்களின் பூமி மீது படையெடுப்பவர்களின் உடனுறைபவராகவே இருக்கிறார் என்ற பரிமாணம் ஒரு தனிக்கதையாக சொல்லவேண்டிய விரிவான விஷயம்.

மதமாற்றம் கடவுளின் பணி என்றால் மறுமதமாற்றம் (அதாவது தாய்மதத்திற்குத் திரும்ப அழைத்து வருவது) யாருடைய பணியாம்? சகோதரி பிரேமாவும் சரி, இந்த கிறிஸ்தவ மிஷனரி சைன்யங்களும் சரி, அவர்களது கடவுளைப் பெரிய அளவில் ஏமாற்றியிருக்கிறார்கள்; கடவுளும் அவர்களை செமத்தியாக ஏமாற்றியிருக்கிறார். அதையும் சொல்லவேண்டும் இல்லையா? மதமாற்றம் உண்மையிலேயே தேவனுடைய பணிஎன்றால் தேவன் மகா சோம்பேறியாகவும், திறமையில்லாதவராகவும் இருந்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டி வருகிறது.

கத்தோலிக்க திருச்சபை மிகப் பெரிய கன்யாஸ்திரீகள் மற்றும் பாதிரிகளின் படையை வைத்திருக்கிறது. கிறிஸ்தவ எவேஞ்சலிகல் சர்ச்சுக்களோ அவர்களுக்கே உரித்தான மதப் பிரசாரகர்களை வைத்திருக்கிறார்கள் ; வட இந்தியாவில் மட்டுமே சதர்ன் பாப்டிஸ்டுகள் சுமார் ஒரு லட்சம் பணியாளர்களை வைத்திருக்கிறார்கள். அதுவும் சம்பளம் வாங்கி வேலை செய்யும் உண்மையான தேவ “ஊழியர்கள்”. இருப்பினும் தேவனுக்கு பெரிதாக மகிமை ஒன்றும் உண்டானாற்போலத் தெரியவில்லை.

மேலும், இந்த தேவன் கொஞ்சம் பயந்தாங்கொள்ளி போன்றும் தெரிகிறது. அவர் ஏன் இஸ்லாமிய நாடுகள் பக்கம் திரும்பவே மாட்டேனென்கிறார்? தீவிரவாதிகளுக்கு பயப்படுகிறாரோ? வறுமையில் வாடும் வனவாசிகளும், அமைதி விரும்பிகளான சாது இந்துக்களும் தான் இந்த தேவனுக்கும் அவரது ஊழியர்களுக்கும் இலக்கு போலும்! இவ்வளவு பணபலம், படைபலம் இருந்தும், இந்த தேவன் தன் ராஜ்ஜிய விரிவாக்கத்திற்கு இடையூறாக இருந்த ஒரு ஏழைத் துறவியைப் படுகொலை செய்ய ஒரு கிறிஸ்தவ நிறுவனத்திற்கு* தனது தேவ ஆசிர்வாதத்தை வேறு வழங்க வேண்டி வருகிறது!

(* : ஒரிஸ்ஸா கந்தமால் பகுதியில் சுவாமி லட்சுமணான்ந்தா படுகொலை தொடர்பாக, வேர்ல்டுவிஷன் என்ற உலகளாவிய கிறிஸ்தவ அமைப்பின் பணியாளர்கள் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்)

சகோதரி பிரேமா தெரிந்தோ தெரியாமலோ காங்கிரஸ் தலைவர்களின் உளறல்களை அம்பலப் படுத்தி விட்டார். இங்கு மதமாற்றம் நடப்பதே இல்லை என்று ஊடகங்களில் திரும்பத் திரும்பச் சொல்லப் படுகிறது. ஆனால் மதமாற்றம் உலக அளவில் பல வடிவங்களை எடுக்கிறது என்பது தெரிந்த ரகசியம். சேவை, வறுமை ஒழிப்பு என்ற எந்தப் போர்வையில் வந்தாலும் அடிப்படையில் அது ஒரு வன்முறையே. ஆம், ஒரு மனிதரின் பிறப்புரிமை என்று சகோதரி பிரேமா குறிப்பிடும் அந்த “சுய கௌரவத்தைஅவரிடமிருந்து பிரித்து, அவரது மதப் பாரம்பரியத்திலிருந்து அவரை வெட்டி எறிந்து, தன் சமூகத்திலேயே வேற்று மனிதராக்குவது உளவியல் ரீதியாக சித்திரவதை செய்து கொல்வது போன்ற வன்முறையே ஆகும்.

கிறிஸ்தவம், மதமாற்றம் இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதே உண்மை. கிறிஸ்தவம் சென்ற இடங்கள் அனைத்திலும் ரத்த ஆறு தானே ஓடியது? அழிவு, அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் மறைமுகத் திட்டம், செல்வக் குவிப்பு, அதிகாரத்திற்குட்பட்ட குடிகளை ஓட்டாண்டியாக்குதல் இதைத் தவிர வேறு என்ன நிகழ்ந்த்து? கென்ய விடுதலை வீரர் எவ்வளவு நிதர்சனமாகச் சொன்னார் – “மிஷநரிகள் இங்கே வரும்போது அவர்கள் கையில் பைபிள் இருந்தது, எங்கள் கையில் பூமி. வந்திறங்கியதும், “கண்களை மூடிப் பிரார்த்தனை செய்வோம்என்றார்கள். செய்தோம். நாங்கள் கண்களைத் திறந்து பார்த்தபோது, எங்கள் பூமி முழுவதும் அவர்களிடம், எங்கள் கைகளில் வெறும் பைபிள் மட்டும்”.

இது ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல, உலகெங்கும் நடந்தது. வாத்திகனின் இரும்புப் பிடியிலிருந்து தங்களை உடைத்துக் கொண்ட கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற தேசங்கள் முன்னேற்றம் அடைந்தன. கத்தோலிக்க அதிகார பீடங்களின் கையில் இருக்கும் ஸ்பெயின், போர்ச்சுகல், மெக்சிகோ, அர்ஜெண்டினா, கியூபா, இத்தாலி ஆகிய தேசங்கள் ராணுவ சர்வாதிகாரத்திலும், சர்ச் கொடுங்கோன்மையிலும் சிக்கித் திணறிக் கொண்டிருக்கின்றன. கிறிஸ்துவம் இன்று அமைதி விழையும், சகோதரத்துவம் வளர்க்கும், கருணை மதமாக பார்க்கப் படவேண்டும் என்று விரும்புகிறது, ஆனால் இந்த விஷயங்களிலிருந்து அது வெகுதூரத்தில் இருக்கிறது. ரத்தத்தில் பிறந்து, ரத்தக் களரியில் தான் கிறிஸ்தவம் வளர்ந்தது என்பது நினைவிருக்கட்டும்.

பல கன்யாஸ்திரீகள், பாதிரியார்கள் போன்று சகோதரி பிரேமாவும் திருச்சபையின் வரலாறு பற்றி அறியாத வெள்ளந்தியாக இருக்கிறார் போலும். இவர்கள் அன்பு, கருணை, சேவை போன்றவற்றைக் காட்டி மூளைச்சலவை செய்யப் பட்டவர்கள். குறிப்பாக இந்தியாவில் இதில் மாட்டிக் கொண்டு பின்னர் மீளமுடியாமல் தவிப்பவர்களே அதிகம். திருச்சபைக்கு இருக்கும் அத்துமீறிய அதிகாரம் பற்றியும், மனச்சாட்சியுள்ள சாதாரணர்களால் அதனுடன் போரிடவே முடியாது என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்களது குரல் காட்டில் எழும் எதிரொலி போல அங்கேயே அமுங்கி விடுகிறது.

தேவ ஆணை கிடைத்தால் கந்தமால் (ஒரிஸ்ஸா) செல்வேன் என்று பிரேமா சொல்கிறார். அவர் முன் ஒரு தேவ விசுவாசம் மிகுந்த பிரார்த்தனையை வைக்கிறேன். கந்தமாலுக்கு பதிலாக, கேரளா சென்று அங்கு முன்னாள் கன்யாஸ்திரீ சிஸ்டர் ஜெஸ்மியைப் போய்ப் பார்த்து, சர்ச் கான்வெண்டிற்குள் அவருக்கு நடந்த பாலியல் அத்துமீறல்களைப் பற்றி விசாரிப்பது தான் உண்மையான, விசுவாசமிக்க செயலாக இருக்கும். அவரது உடனிருக்கும் ஊழியர்களாலேயே நம்பிக்கை துரோகம் இழைக்கப் பட்டு, கூட இருந்த பாதிரியார்களின் பாலியல் வக்கிரங்களுக்கு உடன்படும்படி கட்டாயப்படுத்தப் பட்டு, நிர்வாணமாக்கப் படுவது உட்பட பல சித்திரவதைகளை அனுபவித்திருக்கிறார் அவர். இத்தனைக்கும் சர்ச் வட்டாரங்களில் இது ஒரு புதிய விஷயமோ, அபூர்வமாக நடந்த ஒரு சமாசரமோ இல்லை. கான்வெண்டுகள் மற்றும் சர்ச்களின் மதிள் சுவர்களுக்குள் கற்பழிப்புகளும், கொலைகளும் காலம்காலமாக நடந்து வருவது தான். ஆனால் சர்ச்சுக்கு வெளியில் “கன்யாஸ்திரீ கற்பழிப்புஎன்பது மட்டும் தான் இங்கே பற்றி எரியும் செய்தியாகிறது.

சகோதரி பிரேமா சிஸ்டர் ஜெஸ்மி மற்றும் அவர் போன்று வருந்தும் மற்ற கன்யாஸ்திரீகளின் துயர்துடைப்பதற்காக சர்ச் அதிகார அமைப்பில் தலையிடுவதில் ஏன் தன் “தேவ ஆணையைசெலுத்தக் கூடாது? கன்யாஸ்திரீகள் கருத்தடை சாதனங்கள் உபயோகிப்பது, பிஷப்கள் மற்றும் பாதிரிகளின் குழந்தைகளைச் சுமக்க வேண்டிய நிலைக்கும் ஆளாவது, சிறுவர்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு தருவதற்காக அமெரிக்காவில் சர்ச்சுகள் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்யப் படுவது – இதெல்லாம் மிஷனரீஸ் ஆஃப் சாரிடி போன்ற ஒரு புகழ்பெற்ற திருச்சபை அமைப்பின் தலைவருக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் அல்லவா?

அமெரிக்காவில் ஒரு ஏசுசபை குழுமம் தான் திவாலாகி விட்ட்தாக அறிவித்திருக்கிறது – அதன் பாதிரிகளின் பாலியல் அத்துமீறல்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் அளவுக்கு போதிய பணம் இல்லை என்பதால். ஆனால், சகோதரி பிரேமா போன்ற விசுவாசி கிறிஸ்தவர்களுக்கு இதெல்லாம் ஒன்றுமே இல்லை – ஒரிஸ்ஸாவில் நடப்பது தான் அவர்களது பார்வையை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறது. சரி, அப்படியே இருக்கட்டும். முதலில் படுகொலை செய்யப்பட்ட சுவாமி லட்சுமணானந்தாவின் ஆசிரமத்திற்குச் சென்று அந்த சம்பவத்தின் பயங்கரத்தால் மிரண்டு போயிருக்கும் அங்கிருக்கும் குழந்தைகளை சகோதரி அன்புவார்த்தைகளால் தேற்றலாமே! இதில் ஈடுபட்ட கொலையாளிகளுக்கு தண்டனையும், பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதியும் கிடைக்க கருணை மிகு சகோதரி நடவடிக்கை எடுப்பாரா?

கடைசியாக ஒரு வேண்டுகோள் – சகோதரி பிரேமா சொல்வது போல, அவரது நிறுவனம் ஏழைகளுக்காகவே பணியாற்றுகிறது என்றால், இந்த நாட்டின் ஏழைகளுக்காக வந்த பணம், ஏன் ரோம் நகரின் (வத்திக்கான்) பணக்கருவூலங்களுக்குப் போகவேண்டும்? மிஷநரிஸ் ஆஃப் சாரிடி அமைப்பின் கணக்குகள் தணிக்கை செய்யப் படுகின்றனவா? சர்ச் நிலங்களும், சொத்துக்களும் ஏன் தணிக்கை செய்யப் படுவதில்லை? ஏன் அவற்றுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும்? இது ஒரு தேசவிரோத செயல் இல்லையா? ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் கையில் இருப்பதால் பணத்தின் மதிப்பு மாறிவிடுமா? அந்தப் பணம் தேசப் பொருளாதாரத்தின் கணக்கில் வரவேண்டும் அல்லவா?

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அரசு ஊதியம் பெறுகிறார்கள், வருமான வரியும் செலுத்துகிறார்கள். ஆனால் அதே நிறுவனங்களில் பணியாற்றி, அதே ஊதியம் பெறும் பாதிரியார்களுக்கும், கன்யாஸ்திரீகளுக்கும் வருமான வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப் படுகிறது. ஒட்டுமொத்த இந்திய மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் இவர்களுக்கு ஊதியம், பென்ஷன் எல்லாம் கிடைக்கிறது. ஆனால் மற்ற இந்தியமக்கள் செலுத்தும் வரியை மட்டும் இவர்கள் செலுத்தமாட்டார்கள்! இது எந்த வகை நியாயம்? சகோதரி பிரேமாவின் அமைப்பும், அது போன்ற மற்ற மிஷன்களும் நடத்தும் “ஏழைகளுக்கான சேவை அமைப்புகள்மிகப் பெரிய அளவில் பணம் புழங்கும் வர்த்தகங்கள் என்பதே உண்மை.

இந்த கிறிஸ்தவ மொழியைப் புரிந்து கொள்ள ஒரு தனி சிறப்பு அகராதியே உருவாக்க வேண்டும். அதிகாரம் என்பது சர்க்கரை தடவி “சேவைஎன்று சொல்லப் படும். தங்களை எப்போதாவது காயப் படுத்துபவர்களுக்கு இயல்பாக “பாவமன்னிப்பு வழங்குவார்கள், இரக்க குணத்தைக் காண்பிப்பதற்காக. ஆனால் மற்றவர்களைக் காயப் படுத்துவதை மட்டும் நிறுத்தவே மாட்டார்கள். வனவாசிகளையும், ஏழைகளையும் மனிதத் தன்மையற்றவர்களாக சித்தரிப்பதை நிறுத்தவே மாட்டார்கள்.

இவர்கள் ஏன் ஏழைகளை நிம்மதியாக இருக்கவிடக் கூடாது? இந்த அளவுக்குப் பெரும்பணம் வெளிநாடுகளில் இருந்து இந்திய மிஷநரிகளுக்காக வந்து குவிந்திருக்கிறது, வந்துகொண்டேயிருக்கிறது. அரசும் தன் பங்குக்கு பல திட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறது. சர்வ மகிமை பொருந்திய தேவன் வேறு கூட இருக்கிறார். இருந்தும், வறுமையையும், பசியையும், பற்றாக்குறையையும் சிறிய அளவில் கூடக் குறைப்பதற்கு மிஷநரி முயற்சிகளால் முடியவில்லையே. கொஞ்சம் நின்று நிதானித்து, அடிப்படையில் என்ன தவறு என்று யோசித்துப் பார்க்க வேண்டாமா? யார் யாரைச் சுரண்டுகிறார்கள்? ஏழைகளை ஏழ்மையிலேயே வைத்திருக்கவேண்டும் என்பது தான் தேவ ஆசிர்வாதமா? பிற்போக்குத் தனம் அப்படியே இருக்கவேண்டும் அல்லது வளர வேண்டும் என்பது தான் பிரார்த்தனையா? ஒருவேளை சகோதரி பிரேமா மற்றும் அவர் போன்றவர்கள் அடிப்படை பொதுப் புத்தியுடன் சிந்திப்பதற்குக் கூட “தேவ ஆணைவரவேண்டும் என்று நாம் காத்திருக்கவேண்டுமோ?

ஆசிரியர் குறிப்பு:

டாக்டர் திருமதி ஹில்டா ராஜா இந்திய தேசியம், இந்திய கலாசாரம் மற்றும் இந்திய சமய மரபுகள் மீது மதிப்பும், பெருமிதமும் கொண்ட ஒரு ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சமூகவியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கத்தோலிக்க கல்வி அமைப்புகள், அரசு வளர்ச்சித் திட்டக் குழுக்கள் ஆகியவற்றின் ஆலோசகராகவும் பணியாற்றியிருக்கிறார். மதமாற்றங்கள் உருவாக்கும் சமூக மோதல்கள் பற்றி கூரிய பார்வையுடன் ஊடகங்களில் தொடர்ந்து எழுதி வருபவர்.

Friday, September 05, 2008

இந்தியாவைக் குறிவைக்கும் கிறிஸ்தவ மிஷநரி அமைப்புகளும், அமெரிக்கஅரசு சதித்திட்டங்களும்: தெஹல்கா அதிரடி ரிப்போர்ட்

சில மாதங்கள் முன்பு எனது கிறிஸ்தவம் என்கிற கோகோ கோலா பதிவில் ஜோஷுவா ப்ராஜெக்ட் என்ற பயங்கர கிறிஸ்தவ மதமாற்றத் திட்டம் பற்றிய தகவல்களையும் மற்றும் அதன் சீரியஸான தாக்கத்தைப் பற்றியும் எழுதியிருந்தேன்.. அப்போது நான் சும்மா பூச்சாண்டி காட்டுகிறேன் என்று கூட தமிழ் வலையுலகில் சிலர் கேலி செய்தனர்..

வெல், இப்போது இந்தியாவின் முன்னணி புலன்விசாரணை பத்திரிகையான தெஹல்கா.காம் இதே விஷயத்தைப் பற்றிய விரிவான ரிப்போர்ட் ஒன்றை disturbing exposé என்ற குறிப்புடன் வெளியிட்டிருக்கிறது...

Preparing for the harvest ... The Tehelka Report

A new mood of aggressive evangelism has been emanating from America. Well-funded, superbly networked,backed by the highest of the land, seized of its moral supremacy, it has India as one of its key targets, reveals VK Shashikumar in a disturbing exposé...

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு சமூகக் குழுக்கள், சாதிகள் பற்றிய விவரங்களையும் இந்த ஜோஷுவா ப்ராஜெக்ட் தங்கள் வலைத் தளத்திலேயே போட்டுவைத்திருப்பதைப் பற்றியும் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.. தெஹல்காவின் துப்பறிதலில் இந்த விவரங்கள் அனைத்தும் அமெரிக்க உளவுத்துறை நிறுவனம் (CIA) மற்றும் அமெரிக்க வெளிநாட்டு அமைச்சகம் இவற்றின் கைகளுக்குப் போவதாகவும் தெரிய வந்துள்ளது..

ஏறக்குறைய இயற்கையையும், ஜீவராசிகளையும் போன்றே பல சிக்கலான உறவுகளையும், வலைப்பின்னல்களையும் கொண்டது இந்திய சமூக அமைப்பு. இந்து, பௌத்த, சமண, சீக்கிய மதங்கள் உபதேசிக்கும் மானுட அறம், தர்மம், அனைத்து உயிர்களையும் நேசித்தல், இயற்கையைப் போற்றுதல் ஆகிய பல கோட்பாடுகளால் உரமூட்டப்பட்ட இந்த அமைப்பு, வானவில்லின் வர்ணஜாலம் போல ஏராளமான வேற்றுமைகளைக் கொண்டிருந்தும், பெரிய சமூக மோதல்களையும், பழங்குடிப் போர்கள் மாதிரியான சண்டைகளும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து வருகிறது..

இந்த சமூக அமைப்பை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து இதில் சில கண்ணிகளை வேண்டுவென்றே தூண்டிவிட்டு எரிமலையாக வெடிக்கச் செய்து நாட்டில் பல சமூகக் குழப்பங்களை உருவாக்கும் உள்நோக்கத்துடனேயே இந்த அமெரிக்க நிறுவனங்கள் இந்த விவரங்களை மெனக்கெட்டு, துல்லியமாக சேகரித்துத் தொகுக்கின்றன என்பது கண்கூடு.

நம் நாட்டிற்கெதிரான இந்த மிகப்பெரிய தேசத்துரோக சதியில் ஏராளமான இந்திய கிறிஸ்தவ அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன என்பது வெட்கக் கேடான விஷயம்.. இந்தக் குற்றங்களால் தண்டிக்கப் பட்டு, ஒழிக்கப் படவேண்டிய இந்த அமைப்புகள் ஏதோ இந்திய மக்களுக்கு சேவை செய்கிறோம் என்ற பெயரில் இங்கே உலவிக் கொண்டிருக்கின்றன..

வேர்ல்டுவிஷன்(World Vision) அமைப்புக்கு நன்கொடை அளிக்காதீர்கள்! என்ற எனது இன்னொரு பதிவில் மதமாற்றிகள் என்பதாலேயே இவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்... ஆனால் தெஹல்கா கட்டுரைப் படி பார்த்தால், இந்த அமைப்பை தேசத்துரோக சதிக்குத் துணைபோகும் நிறுவனம் என்று கூறுவதே சரியாக இருக்கும்!

ஒரிஸ்ஸாவில் தற்போது நடந்து வரும் கலவரங்களைப் பற்றி ஏதோ காரணமில்லாமல் இந்து கும்பல்கள் கிறிஸ்தவர்களைத் தாக்கி வருவதாக இந்த அமைப்புகள் ஒப்பாரி வைக்கின்றன.. சூடான் நாட்டில் அங்கிருக்கும் அரசுக்கு எதிராக உலக-பெட்ரோல்-அரசியல் பின்னணியில் இதே மாதிரியான கூச்சலை அங்குள்ள கிறிஸ்தவ மிஷநரி அமைப்புகள் போட்டு வருவதையும் இந்த ரிப்போர்ட் குறிப்பிடுகிறது.

இத்தகைய மிஷநரி சதிகாரர்களின் தலைமைக் கூடாரமாக சென்னை நகரமும், தமிழகமும் விளங்கி வருகிறது என்பதையும் இத்தகைய ரிப்போர்ட்கள் அனைத்தும் கூறுகின்றன. தமிழ் கூறும் நல்லுலகத்தை நாசமாக்கும், தருமமிகு சென்னையில் அதர்ம மதத்தைப்
பரப்பும் இந்த சதிகாரர்களின் சதித்திட்டங்களை உண்மையான தமிழர்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.

Tuesday, July 15, 2008

வேர்ல்டுவிஷன்(World Vision) அமைப்புக்கு நன்கொடை அளிக்காதீர்கள்!

வேர்ல்டு விஷன் (World Vision) என்கிற இந்த அப்பட்டமான கிறிஸ்தவ மதமாற்ற அமைப்பு இந்திய சமூகத்திற்கு சேவை செய்வதாக உணர்ச்சிகரமான பிரசாரத்தை பெரும் பொருட்செலவில் பல்வேறு ஊடகங்களிலும், பல்வேறு விதமான விளம்பர யுக்திகள் மூலம் செய்து வருகிறது. தொலைக்காட்சி, பத்திரிகைகள், இணையம் ஒன்று விட்டுவைக்காமல் இந்தியாவின் ஏழைக் குழந்தைகளின் முகங்களைக் காட்டி தங்கள் மத ஆக்கிரமிப்பு அரசியல் அதிகாரத்திற்கு நியாயம் கற்பிக்கும் இந்த அமைப்புக்கு பல மத்திய வர்க்க இந்துக்கள் அப்பாவியாக நன்கொடைகளும் அளித்து வருகின்றனர்.

உலகெங்கும் NGO என்ற போர்வையில் தன் கரங்களை விரித்திருக்கும் இந்த அதிகார அமைப்பு அப்பட்டமான கிறிஸ்தவ மதவெறியர்களாலும், அடிப்படை வாதிகளாலும் நடத்தப் படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தங்கள் எஜமானர்களிடமிருந்து பெறும் கணக்கிலடங்கா பணபலம் போதாதென்று இந்த அமைப்பு நடுத்தர வர்க்க இந்தியர்களைக் குறிவைத்து, அவர்களிடம் நன்கொடைகள் வேண்டி பயங்கர பிரசாரமும் செய்கிறது.

திடீரென்று உங்கள் முகவரிக்கு வேர்ல்டு விஷனிடமிருந்து ஒரு கடிதம் வரும் -ஆந்திராவில் ஒரு குக்கிராமத்தில் உள்ள ஆஞ்சனேயா என்ற சிறுவனுக்கு உதவுங்கள் என்ற அப்பாவித் தனமான கோரிக்கையோடு. அந்த வண்ணமயமான விளம்பர நோட்டீசில் லேசாக ஓரத்தில் "World Vision is a Christain Charity" என்று குறு-அச்சில் (fine print) இருக்கும், கிரெடிட் கார்டு பில்களில் சம்பிரதாயமாக பின்பக்கம் அச்சிட்டிருப்பது மாதிரி.. இவர்களுக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு அதனால் பயன்பெறுபவர்கள் என்று சிறுவர் படங்கள் பளபள லேமினேட்டில் அனுப்பி வைக்கப் படும் - இதைப் பெருமையாக, என் இந்து நண்பர் ஒருவர் காண்பிக்க வேறு செய்தார்!

ஏழைகளுக்குத் தானே உதவுகிறார்கள், அதனால் என்ன என்று காஷுவலாக இவர்களுக்கு நன்கொடை அளிக்கும் மேல்தட்டு, நடுத்தர வர்க்க இந்துக்களே !

நீங்கள் கஷ்டப் பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தை எந்த கிறிஸ்தவ மிஷநரி அமைப்புக்கும் தயவு செய்து கொடுக்காதீர்கள். உங்கள் தர்மத்தையும், நம்பிக்கையையும் குழிதோண்டிப் புதைப்பதற்காக ராப்பகலாக வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு பேய்த்தனமான ஆக்கிரமிப்பு நிறுவன சக்தியின் கரங்களை உங்கள் பணத்தால் வலுப்படுத்துவது தற்கொலைக்கு ஒப்பான செயல் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? இது நீங்கள் வணங்கும் தெய்வத்திற்கும், உங்கள் முன்னோர்களின் புனித நினைவுக்கும், உங்களை ஊட்டி வளர்த்த இந்த மண்ணுக்கும், நீங்கள் அங்கம் வகிக்கும் இந்து சமுதாயத்திற்கும் இழைக்கும் துரோகம் அன்றி வேறில்லை.

ஏனென்றால், இவர்களது விஷன் உலக நல்வாழ்வோ, மனித சுதந்திரமோ அல்லவே அல்ல. மேற்கில் தேய்ந்து, மறைந்து, சிதறி வரும் கிறிஸ்தவ அரசியல் அதிகாரத்திற்கு வளரும் நாடுகளில் இடம் தேடுவது, அவ்வளவே. தங்கள் குப்பைகளை வெளிநாடுகளில் கொட்டுவதற்குக்
காண்டிராக்ட் தருவது போல, தாங்களே நம்பாத கிறிஸ்தவத்தை இந்தியாவிலும், சீனாவிலும் மார்க்கெட் செய்வது வணிக, அதிகார நோக்கில் சாதகம் தரும் என்று தான் மேற்கு நாடுகளின் சில செல்வந்தவர்களும், நிறுவனங்களும் இத்தகைய "விஷன்"களுக்கு ஆதரவும், பொருளுதவியும் அளித்து வருகின்றனர், இதன் பின் எந்த "ஆன்மிக" நோக்கமும் இல்லை.

கிறிஸ்தவ மிஷநரிகளின் வரலாறு முழுவதும் அதைத் தான் சொல்கிறது.


வேர்ல்டு விஷன் மட்டுமல்ல, பல வேடங்களில் சமூக சேவை என்ற போர்வையில் மதமாற்றம் செய்யும் அனைத்து அமைப்புகளையும் இந்துக்கள் தவிர்க்க வேண்டும். இதோ ஒரு பட்டியல் -


நீங்கள் சமூகப் பணிகளுக்காக நன்கொடைகளும், உதவிகளும் கண்டிப்பாக செய்ய வேண்டும். ஏராளமான இந்து அமைப்புகள் எந்தக் கூச்சலும் இல்லாமல், மிகப் பெரிய அளவில், எந்தப் பாரபட்சமும் இல்லாமல் இந்தியர்கள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் அருமையான சேவைப் பணிகளைச் செய்து வருகின்றன. அந்த அமைப்புகளுக்கு உதவலாமே !


அது மட்டுமில்லாமல், உங்கள் ஊரில், நீங்கள் வாழும் பகுதியிலேயே கல்வி, மருத்துவம், சுயதொழில் போன்றவற்றுக்கு உதவும் பல சிறு அமைப்புகள் இருக்கலாம். எந்த உள்நோக்கமும் இல்லாத இத்தகைய அமைப்புகள் ஆரவராமில்லாமல் பல நல்ல பணிகளைச் செய்துவரும். அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தும் நீங்கள் உதவலாமே!

இந்திய தேசிய ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் விரும்பும் கிறிஸ்தவர்களும் வேர்ல்டு விஷன் போன்ற மதமாற்ற அமைப்புகளின் செயலுக்குத் துணைபோகக் கூடாது. உள்நோக்கம் இல்லாத சமூக சேவையை மட்டுமே அவர்கள் ஆதரிக்கவேண்டும்.


மகாத்மா காந்தி சொல்கிறார் -

“எனது அச்சம் இது தான் – இந்து மதம் பொய் என்று இப்போதைக்கு கிறித்தவ நண்பர்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் அவர்களது மனதில் இந்துமதம் தவறானது, தாங்கள் நம்பும் கிறித்தவ மதமே உண்மை என்ற எண்ணங்களை வளர்த்து வருகிறார்கள். இப்போது நடக்கும் கிறித்தவ (மதமாற்ற) முயற்சிகளையெல்லாம் பார்க்கும்போது, இந்துமதத்தின் அடிப்படையை வேரறுத்துவிட்டு அங்கு வேறு ஒரு மதத்தை நிறுவப் பார்ப்பது தான் அவர்களது நோக்கம் என்பது புரியும்”

– ஹரிஜன், மார்ச் 13, 1937.

“என்னிடம் மட்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்தால், எல்லா மதமாற்றங்களையும் நிறுத்தி விடுவேன். இந்து குடும்பங்களில் ஒரு மிஷநரியின் வருகை என்பது குடும்பத்தைக் குலைக்கும் செயல்; உடை, ஒழுக்கம், மொழி, உணவு உள்பட கலாசாரத்தையே மாற்றும் செயல் என்றே ஆகிவிட்டிருகிறது”

- ஹரிஜன், நவம்பர் 5, 1935.

Thursday, March 27, 2008

இந்து, கிறிஸ்தவ மோதல்கள் (encounters): ஒரு வரலாற்று அறிமுகம்

மூலம்: சீதாராம் கோயல் [1]
மொழியாக்கம்: ஜடாயு

(1)
பதினேழாம் நூற்றாண்டுத் தொடக்க காலத் தமிழ்நாட்டுப் பண்டிதர்கள் முதல் இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திய அருண் ஷோரி வரையிலான இந்துக்கள் கிறிஸ்தவத்தின் அடிப்படை மதக் கொள்கைகளை (dogma) விவாதத்தால் தகர்ப்பதிலும், மிஷநரி செயல்பாடுகள் பழிக்கத் தக்கவை என்று நிறுவுவதிலும் சளைக்காமல் தங்கள் எழுத்துக்களையும், சக்தியையும் செலவழித்திருக்கின்றனர். ஆனால் கிறிஸ்தவ சமயவாதிகளின் (theologians) ஆணவப் போக்கிலும், கிறிஸ்தவ மிஷநரிகளின் தீவிர மனப்பான்மையிலும் இதனால் ஒரு மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

ஏனென்றால் இந்த அடிப்படை மதக்கொள்கை ஒருபோதும் விவாதத்திற்கான பொருளாக இருந்ததில்லை. பொதுவான தர்க்க விதியின்படி, உண்மை என்று நிரூபிக்கப்படாத ஒரு விஷயத்தை மறுக்க முடியாமலும் போகலாம்; அதை நிரூபிக்கவேண்டிய அவசியமும் இல்லை. 33 CEல் (பொது சகாப்தம் 33ஆம் வருடத்தில்) அவ்வளவாகப் பிரபலமாகாத ஒரு யூதரை, யூதேயா எனும் ஊரில் வைத்து, ரோமானிய கவர்னர் ஒருவர் சிலுவையில் அறையச் செய்தாராம். சிலுவையில் அறையப்பட்ட அந்த யூதரே வரப்போகிற எல்லா மனிதர்களின் பாவங்களையும், எல்லா காலங்களிலும் சுமக்கிறாராம். இதை எப்போதாவது, யாராவது நிரூபித்திருக்கிறார்களா? தங்களின் ஒரே ரட்சகர் அந்த மனிதர் மட்டுமே என ஏற்றுக்கொள்பவர்கள் சந்தோஷம் பொங்கும் நிரந்தர சொர்க்கத்திற்குப் பயணிப்பார்கள் என்றும், மற்றவர்களெல்லாம் நிரந்தர நரகத்தில் தீயில் வெந்துகொண்டிருப்பார்கள் என்றும் யாராவது நிரூபித்திருக்கிறார்களா? அப்படி யாரும் நிரூபிக்காவிட்டாலும், (நம்புபவர்கள் சொர்க்கத்திற்கும், மற்றவர்கள் நரகத்திற்கும் போகக் கடவார்கள் என்கிற) இந்த அறைகூவலும், வாக்குறுதியும், அச்சுறுத்தலும் உண்மையில்லை என்று மறுத்துரைப்பது தர்க்கரீதியாக முடியாததாக உள்ளது.

எவ்வளவு தான் அலங்காரமான சமயவாத வளவளா போதனைகளைப் பரப்பினாலும், பெரும் நிறுவனங்களைக் கட்டமைத்து, அவற்றையே ஆயுதமாகச் செலுத்தி, மற்றவர்களை அச்சுறுத்தி ஆக்கிரமிக்கும் மறைமுக உத்தி என்பதற்கு மேல், இந்த மதக்கொள்கையில் வேறு எதுவும் இல்லை என்பது தான் உண்மை. எனவே, இந்த கிருத்துவ மதக் கொள்கைகளுக்கு அவமதிப்பு என்கிற பொருத்தமான நிராகரிப்பை மட்டும் வழங்கிவிட்டு தங்களுக்கிடையே நிலைபெற்றுவிட்ட கிருத்துவ மிஷநரி கட்டமைப்புக்கள் மீதுதான் இந்துக்கள் கவனம் செலுத்தவேண்டும், இப்போதாவது.

இந்தக் கட்டமைப்புகளை இயக்கும் நிறுவனமயமான கிருத்துவத்தின் ஒரே நோக்கம் இந்து சமுதாயத்தையும், கலாசாரத்தையும் அழித்து, இந்துக்களின் தாய்மண்ணாகிய இந்தியாவைக் கைப்பற்ற வேண்டும் என்பதே. இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக சாதகமான, பாதகமான சூழ்நிலைகள் ஒவ்வொன்றிற்கும் ஏற்றவாறு அந்த நிறுவனம் யுக்திகளை வகுத்துக் கொண்டேயிருக்கிறது. காசு தரும் எஜமானர்களுக்காக தங்கள் திறமைகளை விபசாரம் செய்யும், கபடங்களை வார்த்தை ஜாலங்களால் அலங்காரம் செய்யும் அறிவுஜீவி கிரிமினல்களை கணிசமான அளவில் உருவாக்கி, அது வேலை வாங்குகிறது. (இப்படியிருக்கும்) இந்தியச் சூழலில், இந்த குயுக்திகள் சமய விளக்கங்களாக விளம்பரம் செய்யப்படுவதும், இத்தகைய கிரிமினல்கள் சமய அறிஞர்களாக முன்நிறுத்தப்படுவதும், இந்த சமூக விரோதக் கும்பலின் உண்மையான நோக்கங்களைப் புரிந்து கொள்வதிலிருந்து இந்துக்களின் கவனத்தை சிதறடித்து விடக்கூடாது.

இந்துமதமும், கிறிஸ்தவமும் இங்ஙனம் எதிர்ப்படுவதை, மோதிக் கொள்வதை இரு மதங்களுக்கிடையில் நிகழும் உரையாடலாக எண்ணுவது இந்துக்கள் செய்து கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய தவறு. ஏனெனில் கிறிஸ்தவம் ஒரு “மதமாக” என்றுமே இருந்ததில்லை; வேட்டையாடி அழிக்கும் தன்மை கொண்ட எதேச்சாதிகார சக்திகளில் ஈடு இணையற்றது அது என்று அதன் நெடிய வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அதனால், சிந்தனையாலும் செயல்முறையாலும் ஒன்றை ஒன்று விலக்கக்கூடிய இரண்டு மார்க்கங்களுக்கு இடையேயான போர் என்று தான் இந்த எதிர்ப்படுதலைக் கருத இடமுள்ளது. கீதையின் மொழியில் (அத்தியாயம் 16) சொல்வதென்றால், இது தெய்வத்தன்மைக்கும், அசுரத்தன்மைக்கும் இடையே நிகழும் போர். சம்பிரதாயமான வரலாற்று மொழியில் சொல்வதென்றால், வேத நெறிக்கும் (Vedic), விவிலிய நெறிக்கும் (Biblical) இடையேயான போர்.

இந்த இரு நெறிகளையும், முன் நடத்திச் செல்லும் இவற்றின் மூலங்கள் பற்றிய ஆய்வுக்குள் இப்போது போக வேண்டாம். அது பற்றி வேறொரு இடத்தில் விரிவாக விளக்கியிருக்கிறேன் [2]. அவை எந்த வகையான நடத்தைகள் மற்றும் செயல்முறைகளுக்கு வழிவகுக்கின்றன என்பதை மட்டும் இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம்.





வேத நெறி, மனிதன் தன்னை அறிதலிலும், உணர்தலிலும் கருத்துச் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. அதாவது அறவழியிலும், ஆன்மிகத்திலும் மேன்மையடைய வேண்டும். இதற்காக தவம், யோகம், தியானம், ஞானம், பக்தி என்று பல வழிமுறைகளை அது வளர்த்தெடுத்திருக்கின்றது. ஒரு சாதகன் தனது தார்மீக, ஆன்மிக மனநிலைக்குப் பொருந்துமாறு (ஆதாரம்), எந்தவொரு வழிமுறையையும் தேர்வு செய்து அதைக் கைக்கொள்ளலாம் (அதிகாரம்). (குணத்தாலும், மனத்தாலும் வேறுபட்டிருந்தாலும்) அனைவருக்கும் ஒரே ஒரு மருந்துச் சீட்டுத்தான் என்பது கிடையாது. (நிறுவனமயமான) ஒரு மத நம்பிக்கையின் கட்டுப்பாட்டிற்குள்ளே (மனிதரை) திணிக்கும் வற்புறுத்தல் மற்றும் ஆசைகாட்டுதல்கள் கிடையாது. மேலும், மற்றவர்களுக்கு எதிராக, தாக்குதலுக்காக அணிதிரள வேண்டும் என்பது நிச்சயம் கிடையாது.





இதற்கு மாறாக, விவிலிய நெறி, நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையற்றவர்களை திருத்தவேண்டும் என்று போதிக்கிறது. “ஒரே சத்திய வழி”க்கு சாட்சியம் கூறிய மாத்திரத்தில், ஒருவர் உயர்ந்த மனித ஜீவனாக ஆகிவிட்டதாக நம்பப் படுகிறார். அவர் மற்றவர்களது “ரட்சிப்பு”க்கு வழிகாட்டத் தகுதிபெற்றவராகவும் ஆகிவிட்டார்! அதன் பிறகு தேவைப்படும் பயிற்சியெல்லாம் - செயற்குழுக்களையும், கட்டமைப்புக்களையும் உருவாக்கி களத்தில் எப்படி இறங்குவது, மற்றவர்களைநிர்ப்பந்தம், மோசடி உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி எப்படியெல்லாம் மதம் மாற்றுவது, வழிக்கு வர மறுப்பவர்களை எப்படி கொல்லவோ, சீரழிக்கவோ அல்லது கறைபடுத்தவோ செய்வது, இதெல்லாம் தான்.

சனாதன தர்மம் எனப்படும் இந்து மதத்தின் பல சமயத் துறைகளை (schools) வேத நெறியானது உலகிற்கு அளித்திருக்கிறது. இவற்றைப் பின்பற்றுபவர்கள் தங்களுக்குள்ளும் சரி, மற்றும் வேறு மார்க்கங்களைப் பின்பற்றுபவர்களிடத்திலும் சரி, அமைதியையும், சமாதானத்தையுமே கடைப் பிடித்து வந்துள்ளனர். ஆனால் விலிலிய நெறியில் இருந்து உதித்த கிறிஸ்தவம், இஸ்லாம், கம்யூனிசம் மற்றும் நாசிசம் போன்ற சமயங்கள் கொலை மற்றும் அழிப்பையே தங்கள் முக்கிய வழிமுறைகளாகக் கொண்டவை. இவைகள் தங்கள் உட்குழுக்களுக்குள்ளும், தங்களுக்கிடையிலும் மட்டுமல்ல, மனிதகுலத்தின் மற்ற மக்களுடனும் வன்முறை மோதல்களையே உருவாக்கியுள்ளன.

(2)
இந்து கிறிஸ்தவ எதிர்ப்படுதல்களின் வரலாற்றை குறிப்பிட்ட ஐந்து காலகட்டங்களாகப் பிரிக்கலாம். இந்த எல்லா காலகட்டங்களிலும், கிறிஸ்தவ மிஷநரிகள் “கிறிஸ்தவக் கடவுள் ஒருவரே உண்மை, ஏசு ஒருவரே ரட்சகர், இந்துக்கள் இதை ஏற்றுக் கொண்டாக வேண்டும் அல்லது ஏற்றுக் கொள்ள வைக்கப் படவேண்டும்” என்ற அடிப்படை மதக் கொள்கையில் அப்படியே தான் நின்று கொண்டிருக்கின்றனர். ஆனால் வழிமுறைகளையும், சொல்லாடல்களையும், மாறும் சூழ்நிலைகளுக்குப் பொருந்துமாறு மாற்றிக் கொண்டேயிருக்கின்றனர். ஆரம்பத்தில் இந்துமதக் காவலர்கள் கிறிஸ்துவ போதனைக்கும், மிஷநரி வழிமுறைகளுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் பல்வேறு காரணங்களினால், பின்வரும் கட்டங்களில் இந்துக்களின் எதிர்ப்புணர்வு தொய்வடைகிறது அல்லது ஒரேயடியாக மறைந்து விடுகிறது. கிறிஸ்தவம் வெற்றியடைந்து விட்டதாக மார்தட்டிக் கொண்டு முன் நகர்கிறது.





முதல் காலகட்டம் பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் போர்ச்சுகீசியக் கொள்ளையர் வருகையில் தொடங்குகிறது. குறிப்பாக, இந்தக் கொள்ளையர்களின் குலகுருவான (patron saint) பிரான்சிஸ் சேவியரின் வருகைக்குப் பின்னர் கிறிஸ்தவம் தனது உண்மையான முகத்துடன் தரிசனம் தருகிறது. அதன் மொழி அதன் ஐரோப்பியத் தாயகத்தில் இருந்தது போன்றே கரடுமுரடாகவும், அதன் வழிமுறைகள் அதே குரூரத்துடனும் இருக்கின்றன. திக்கற்ற இந்துக்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆட்படுகின்றனர். அவர்கள் செய்த புண்ணியம், இந்தக் காலகட்டம் நெடுநாள் நீடிக்கவில்லை. கோவா மற்றும் சில சிறிய மாகாணங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் போர்ச்சுகீசியர்கள் தோல்விடையடைகின்றனர். விதிவிலக்காக பாண்டிச்சேரி மற்றும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட வேறுசில இடங்களில் பிரெஞ்சுக்காரர்களின் குறுகிய காலச் செயல்பாடுகள் தவிர்த்து, பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஐரோப்பிய அரசுகளுக்கு கிறிஸ்தவப் பரப்புதலுக்கு அவ்வளவாக நேரமிருக்கவில்லை.

இரண்டாவது காலகட்டம், 1813ல் மராட்டியர்களின் இறுதித் தோல்விக்குப் பின் பிரிட்டிஷ் அரசு காலூன்றுவதில் தொடங்குகிறது. பிரிட்டிஷார் மிஷநரி செயல்பாடுகளுக்கு மறைமுக ஊக்கம் தந்தாலும், அவர்களது நேரடி வழிமுறைகளை அனுமதிக்கவில்லை. ஆயினும் மிஷனரிகளின் மொழி அதே வக்கிரத்துடன் தான் இருக்கிறது. சிறிது காலம், குறிப்பாக வங்கத்தில் கிறிஸ்தவம் கொஞ்சம் தன்னம்பிக்கையுடன் வாழ்கிறது. மகரிஷி தயானந்தர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் அறைகூவல் மற்றும் இந்து சீர்திருத்த இயக்கங்களின் எழுச்சியுடன் இந்தக் காலகட்டம் முடிவடைகிறது. கிறிஸ்தவம் தீவிர பின்னடைவை சந்திக்கிறது.





மூன்றாவது காலகட்டம் மகாத்மா காந்தியின் பிரவேசத்தைத் தொடர்ந்து, அவரது “சர்வமத சமரசம்” என்ற கோஷத்துடன் தொடங்குகிறது. கிறிஸ்தவ மிஷநரிகள் (தாக்குதல் நிலைப்பாட்டிலிருந்து) தற்காப்பு நிலைப்பாட்டுக்குத் தள்ளப் பட்டு, தங்கள் மொழியை மாற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். வசைச்சொல் வாயர்களாக இருந்த விஷமிகள், நாவில் சர்க்கரை தடவிக் கொண்ட நாகங்களாக மாறுகின்றனர். அழுக்குக் கந்தல் கட்டிய பிச்சைக்காரன் தனது விலையுயர்ந்த ஆடையணிகளை செல்வந்தர்களுக்கு தானம் செய்வதாக வாக்களித்தால் எப்படியிருக்கும்? அதே பாணியில், இப்போது அவர்கள் இந்துக்களிடம் “தங்கள் ஆன்மீகச் செல்வங்களைப் பகிர்ந்து கொள்ளப் போவதாக” (share their spiritual riches) புறப்படுகின்றனர். 1938ல் தாம்பரம் மாநாட்டில், அகில உலக மிஷநரி கவுன்சில் (International Missionary Council) கிறிஸ்தவ இறையியலை இந்திய சூழலுக்காக மாற்றியமைப்பதாக முடிவெடுப்பதுடன் இந்தக் காலகட்டம் முடிவடைந்தது.

சுதந்திரத்தின் வருகையுடன் தொடங்கிய நான்காவது காலகட்டம், கிறிஸ்தவத்திற்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. இந்துக்களை மதமாற்றுவதற்கான கிறிஸ்தவ உரிமை அரசியல் சட்டத்தாலேயே உறுதி செய்யப் படுவதாக சொல்லப் பட்டது. 17 ஆண்டுகளாக தேசிய அரசியலை வியாபித்திருந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒவ்வொரு இந்து விரோத கருத்தியலையும், எல்லா இந்து விரோத இயக்கங்களையும் மதச்சார்பின்மை என்கிற பொய்மைத் திரையிட்டு ஊக்குவித்து வளர்த்தார். அதற்குப் பின்வந்த அரசுகள் “இந்து மதவாதம்” ஒரு பெரும் அச்சுறுத்தல் என்று பயங்காட்டுவதைத் தொடர்ந்து செய்துவந்தன. தங்களது வழிமுறைகளையும், செயல்பாடுகளையும் பற்றி மெல்லிய ஆட்சேபம் தெரிவிப்பவர்களைக் கூட இந்து மதவாதிகள், வெறியர்கள், “இந்து நாசிகள்” என்று கூட கிறிஸ்தவ மிஷநரிகள் வசைபாடக் கூடிய நிலை உருவாயிற்று. எல்லாவிதமான “மதச்சார்பற்றவர்களும்” இந்த கோஷ்டி கானத்தில் இணைய முன்வந்தனர்.

கிறிஸ்தவத்தை பூரணத்துவமாக முன்வைத்தல் (Fulfilment), கிறிஸ்தவத்தை இந்திய மயமாக்குதல் (Indigenisation), பரலோகத்திற்குப் பதிலாக “மோட்சம்” (Liberation), பிற மதங்களுடன் உரையாட முன்வருதல் (Dialogue) இப்படியாகப் பட்ட சமயக் கோட்பாட்டு ஜல்லிகள் “வளர்த்தெடுக்கப் பட்டு” செயலில் இறக்கப் பட்டன. மிஷநரி கட்டமைப்பு பல்கிப் பெருகி எங்கும் நிறைந்ததாயிற்று. இந்தியாவின் சரித்திரம் முழுவதிலும், கிறிஸ்துவத்திற்கு இது போன்றதொரு நல்லகாலம் எப்போதும் வாய்த்ததில்லை. கிறிஸ்தவம் இந்தியாவின் ஒரு தொன்மையான சமயம் போன்று அங்கீகரிக்கப் பட்டு, தனது கூட்டத்தைப் பெருக்கவும், செயல்பாடுகளை அதிகரிக்கவும் முழு உரிமை பெற்றதாக ஆகிவிட்டிருந்தது. இந்தப் பேரிசைக் கூச்சலுக்கு நடுவே ஒலித்தவை ஒருசில சுருதிபேதங்கள் மட்டுமே : 1953ல் லண்டனிலிருந்து வெளிவந்த கே.எம்.பணிக்கரின் “ஆசியாவும், மேற்கத்திய ஆக்கிரமிப்பும்” என்கிற அரிய நூல், 1956ல் மத்தியப் பிரதேச அரசால் வெளிக் கொணரப்பட்ட நியோகி கமிட்டி அறிக்கை, 1978ல் ஓம் பிரகாஷ் தியாகியால் கொண்டுவரப்பட்ட “மத சுதந்திரம்” பற்றிய மக்களவைத் தீர்மானம்.

இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஐந்தாவது காலகட்டம் நாடு தழுவிய இந்து எழுச்சியுடன் தொடங்கியது எனலாம். தமிழ்நாட்டில் மீனாட்சிபுரம் என்ற ஊரில் ஹரிஜனங்கள் இஸ்லாமுக்கு ஒட்டுமொத்தமாக மதமாற்றப் பட்டது, இஸ்லாமிய மதவெறி மற்றும் வன்முறையின் மீட்சி, பஞ்சாபிலும், காஷ்மீரிலும் பாகிஸ்தானின் ஆதரவுடன் வளர்ந்த தீவிரவாதம் இவையே இந்த எழுச்சிக்கு முக்கிய காரணங்கள். பல வருடங்களாக முக்கியமான இந்து சமுதாய பிரசினைகளை ஒருவித உறைந்த மனப்பான்மையுடன் பார்த்துக் கொண்டிருந்த சங்க பரிவாரம் 1984 மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் படுதோல்வியைக் கண்டு திடுக்கிட்டு, தன் இந்து அடையாளத்தை புதுப்பித்துக் கொள்ள முடிவு செய்தது. அதன் விளைவாகத் தோன்றியது ராமஜன்மபூமி இயக்கம். இஸ்லாமிய ஆதிக்க, ஆக்கிரமிப்பு சக்திகளின் பரவலைத் தடுப்பது தான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. கிறிஸ்தவ மிஷன்கள் குறித்து ஒன்றுமே கூறப்படவில்லை. இருப்பினும், இந்த இயக்கத்தைக் கண்டு அதிகமாகக் கவலைப் படவும், கூப்பாடு போடவும் தொடங்கியவை கிறிஸ்தவ மிஷநரிகள் தான்! சக்திவாய்ந்த கிறிஸ்தவ ஊடகங்கள் மேற்குலகம் முழுவதும் இந்துக்கள் சிறுபான்மையினரை இந்தியாவிலிருந்து ஒழித்துக் கட்டி நாசி அரசை அமைக்கப் பார்க்கிறார்கள் என்று கத்திக் கூச்சலிட்டு, பெரும்புயலைக் கிளப்பின. அந்தப் புயலின் தாக்கம் இன்னும் முழுமையாக அடங்கிய பாடில்லை. எப்போது அடங்கும்? யாருக்கும் தெரியாது.

சுட்டிகள்:

[1] 1997ல் எழுதப் பட்ட The Sunshine of Secularism என்ற நீண்ட கட்டுரையின் முதல் பகுதியின் மொழியாக்கம் இது. Pseudo-secularism, Christian Missions and Hindu Resistance என்ற நூலிலிருந்து.

[2] Sita Ram Goel, Defence of Hindu Society, Third revised edition, Voice of India, New Delhi, 1994.

ஆசிரியர் சீதாராம் கோயல் பற்றிய அறிமுகம் இங்கே.

சீதாராம் கோயல்: வரலாற்றாசிரியர், சமூக சிந்தனையாளர்

சீதாராம் கோயல் (1921-2003) சுதந்திர இந்தியாவின் ஒரு முக்கியமான வரலாற்று அறிஞர் மற்றும் சமூக சிந்தனையாளர். 1940களில் தீவிர கம்யூனிச ஆதரளவாக இருந்து 50களில் சோவியத் அரசின் கோரங்கள் பற்றி அறிந்து, அதைத் துறந்து இந்து தர்மம், இந்திய தேசியம் என்ற தன் வேர்களுக்குத் திரும்பினார். இந்து சமுதாய, அரசியல் பிரசினைகள், கம்யூனிசத்தின் கொடூரங்கள், கிறிஸ்தவ மதப் பரவல் மற்றும் மிஷநரிகள், கிறிஸ்தவ மத அடிப்படைகளைத் தகர்க்கும் மேற்கத்திய அறிவியக்கம், இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பின் வரலாறு மற்றும் அதில் இழையோடும் ஜிகாத் வன்முறைக் கோட்பாடு, இவற்றைப் பற்றிய ஆழமான ஆய்வுகள், வரலாற்று உண்மைகளை வெளிக் கொணரும் பல முக்கிய நூல்களை அவர் எழுதியும், தொகுத்தளித்தும் உள்ளார். ஆற்றொழுக்குப் போன்று, அதே சமயம் கூர்மை தெறிக்கும் ஆங்கிலத்தில் 35க்கும் மேற்பட்ட நூல்களையும், குறிப்பிடத்தக்க ஹிந்தி மொழியாக்கங்களையும், பத்திரிகைக் கட்டுரைகளையும் அவர் படைத்திருக்கிறார். கோயலின் இஸ்லாம் தொடர்பான சில வரலாற்று ஆய்வு நூல்களைத் தடைசெய்யுமாறு அராஜக கோரிக்கைகள் எழுந்தன. இரண்டு நூல்கள் குறுகிய காலத்திற்கு தடை செய்யப் பட்டு, பின்னர் நீதிமன்றக் குறுக்கீட்டால் தடை விலக்கப் பட்டது.




நேருவின் அரசியல் கொள்கைகள், எமர்ஜென்சி, போலி மதச்சார்பின்மை இவை பற்றிய மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சீதாராம் கோயல் மறைந்த அரசியல் தலைவர்களான ஜெயப்ரகாஷ் நாராயண், கே.ஆர்.மல்கானி மற்றும் காந்தியவாதி தரம்பால் ஆகியாரின் நெருங்கிய நண்பரும், உடன் பணியாற்றியவரும் கூட. மறைந்த தத்துவ சிந்தனையாளர் ராம் ஸ்வரூப் தொடங்கிய வாய்ஸ் ஆஃப் இந்தியா என்னும் இலாப நோக்கற்ற பதிப்பகத்தைத் தன் இறுதி நாள் வரை நடத்தி வந்த இந்த கர்மயோகி இன்று இந்து எழுச்சி பற்றிய விமர்சனங்களுக்காக அதிகம் கவனிக்கப்படும் கொய்ன்ராட் எல்ஸ்ட், டாக்டர் டேவிட் ஃப்ராலி, அருண் ஷோரி, சுபாஷ் கக் போன்றவர்களுக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும், பதிப்பாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

சீதாராம் கோயல்: விக்கிபீடியா பக்கம்
India's Only Communalist : சீதாராம் கோயல் பற்றி கொய்ன்ராட் எல்ஸ்ட்
இணையத்தில் சீதாராம் கோயல் நூல்கள்

(பி.கு: அமரர் கோயல் அவர்கள் கட்டுரைகளின் மொழியாக்கங்களை பதிவிடுவதாக உத்தேசம். அவற்றுக்கான ஆசிரியர் குறிப்பு இந்தப் பதிவு).

Friday, January 25, 2008

புத்தாண்டு சர்ச்சை: கருநாவின் கலாசார ஒழிப்பு திட்டம்

தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப் போவதாக தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று கவர்னர் உரை மூலம் தெரிவித்து, கிறிஸ்தவ மிஷநரிகள் பல பத்தாண்டுகளாக தமிழகத்தில் நிகழ்த்தி வரும் கலாசார திரிப்பு, ஒழிப்பு முயற்சிகளுக்கு இன்னொரு அடித்தளம் அமைத்துத் தந்திருக்கிறார். 1921-லேயே சில தமிழறிஞர்கள் இது பற்றி "விவாதித்து" புத்தாண்டைப் பற்றிய கருத்துக் கூறினார்களாம்! "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய" தமிழ்க்குடியினர் சமீபத்தில் தங்கள் புத்தாண்டு எது என்று குழம்பி, சர்ச்சை செய்தார்கள் என்று கூறுவதற்கு வெட்கமாயில்லையா?

நேற்றைய தினமணி இதழில் வரலாற்று அறிஞர், கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் "சித்திரையில் தான் புத்தாண்டு" என்றொரு அருமையான கட்டுரை எழுதியுள்ளார். அதில் உள்ள் குறிப்புகளின் படி "தைப் புத்தாண்டு" என்கிற கருத்தாக்கம் ஒரு திட்டமிட்ட முழுமையான கிறிஸ்தவ மிஷநரிகளின் சதி என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. இதற்கு பண்டைத்தமிழ் வரலாறு, இலக்கியம், மரபுகள், நாட்டார் வழக்கு எதிலும் ஆதாரம் கிடையாது.

இன்னொரு முக்கிய விஷயம். பாரத நாடு முழுவதும் பரவியிருக்கும் தேசிய, கலாசாரக் கூறுகளில் இருந்து தமிழ்ச் சமுதாயத்தைப் பிரிக்கும் முயற்சியும் ஆகும் இது. நாம் கொண்டாடும் சித்திரை முதல் நாள் (ஏப்ரல் 14, 15ம் தேதிகளில் வரும்) தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பல பகுதிகளிலும், ஏன் சில அண்டை நாடுகளிலும் கூட புத்தாண்டு தான்.

இந்து மரபின் சூரிய காலக்கணக்கு (Solar Calendar) முறை "சூர்ய சித்தாந்தம்" என்ற தொன்மையான அறிவியல் நூலில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் சூரிய ஆண்டின் முதல் நாள் புத்தாண்டு என்றாகிறது. தமிழகம் மட்டுமல்ல, கேரளம், மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, திரிபுரா, மணிப்பூர், அஸ்ஸாம், பஞ்சாப், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய எல்லா இடங்களிலும் இந்த நாள் தான் புத்தாண்டாக மிக நெடுங்காலமாக கொண்டாடப் படுகிறது.

வங்காளத்தில் நபோ பர்ஷோ (Nôbo bôrsho). பஞ்சாபில் பைசாகி (Baisakhi). அஸ்ஸாமில் ரோங்காலி பிஹு (Rongali Bihu). கேரளாவில் விஷு.

இது மட்டுமன்று, இந்து, புத்த சமயப் பின்புலம் கொண்ட தாய்லாந்து, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளிலும் இந்தப் பண்டிகை வேசாக், வைசாக், விசாக பூஜா (Vesak, Waisak, Visaka Bucha ) என்ற பெயர்களில் புத்த பூர்ணிமா நாளுடன் இணைத்துக் கொண்டாடப் படுகிறது.. இந்த எல்லா சொற்களும் தமிழின் வைகாசி என்ற சொல்லுடன் தொடர்புடையவை. சூரியப் புத்தாண்டையும் சந்திர-சுழற்சி அடிப்படையிலான மாதங்களையும், பண்டிகைகளியும் பின்பற்றுவதால் இரண்டாம் மாதமான வைகாசி இந்த நாளன்று வந்துவிடுகிறது.




தமிழ் மாதங்களின் பெயர்களும், பாரதத்தின் பாரம்பரிய மாதப் பெயர்களே. எல்லா மொழிகளிலும் இந்த மாதப் பெயர்கள் (சில ஒலிக்குறிப்பு வேறுபாடுகள் தவிர) ஒன்று போலவே உள்ளன.

சம்ஸ்கிருதம் - தமிழ்
--------------------------

சைத்ர - சித்திரை (வங்காளியில் சொய்த்ரோ - Choitro)
வைசாக - வைகாசி
ஜ்யேஷ்ட - ஆனி (ஜ்யேஷ்டா அல்லது கேட்டை நட்சத்திரத்திற்கு தமிழில் ஆனி என்றும் ஒரு பெயர் உண்டு)
ஆஷாட - ஆடி
சிராவண - ஆவணி
ப்ரோஷ்டபத - புரட்டாசி
ஆஸ்வயுஜ - ஐப்பசி
கார்த்திக - கார்த்திகை
மார்கசிர - மார்கழி
புஷ்ய - தை (8வது நட்சத்திரமான புஷ்யம் (பூசம்) என்பதற்குத் தமிழ்ப் பெயர் தை. இந்த மாதத்தின் பூசம் தமிழர்களின் தொன்மையான பண்டிகை)
மாக - மாசி
பல்குன - பங்குனி


எனவே, தமிழ்ப் புத்தாண்டு என்பது பாரதத்தின் தேசிய கலாசாரத்தின் ஒரு அங்கமே. இது இட்டுக் கட்டும் சமாசாரமல்ல, இந்த எல்லா மாநில மக்களும் நன்கு அறிந்த விஷயம். உதாரணமாக வங்காளப் புத்தாண்டு பற்றிய இந்தக் கட்டுரையில், ஆசிரியர் மறக்காமல் தமிழ் மற்றும் மற்ற புத்தாண்டுகள் பற்றிக் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்.

இந்தக் குறைந்தபட்ச கலாசார அறிவு கூட தமிழகத்தை ஆளும் "கலைஞர்" கருநாநிதிக்கு இல்லையா? ஒரு மாநில அரசு காலங்காலமாக இருந்து வரும் கலாசாரப் பிணைப்பை திட்டமிட்டு அறுத்தெறிய ஏன் முயலவேண்டும்? இதில் என்ன உள்நோக்கம் உள்ளது? மார்க்சிஸ்ட்கள் ஆளும் மே.வங்கத்திலும், கிறிஸ்தவத் தாக்கம் அதிகம் உள்ள கேரளத்திலும் கூட இவ்வளவு அப்பட்டமான ஒரு கலாசார அழிப்பு வேலை கண்டிப்பாக சகித்துக் கொள்ளப் படாது.. சகித்துக் கொள்வதென்ன, இப்படி ஒரு பேச்சே எழாது.

ஆனால், தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷநரி சதிக்கும்பல்கள் மற்றூம் அவர்கள் கைப்பாவையாவும், அடிவருடிகளாகவும்ஆகிவிட்ட திராவிட இயக்கங்கள் அதன் தலைவர்கள் - இந்த இரண்டு இந்திய தேசிய விரோத சக்திகளும் கைகோர்த்துக் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

மத்திய அரசின் கலாசாரத் துறை இதில் குறுக்கிட வேண்டும். இந்திய தேசியம் மீதும், தமிழ்க் கலாசாரத்தின், மரபுகளின் தொன்மையின் மீதும் கொஞ்சமாவது அபிமானம் உள்ள ஒவ்வொருவரும் தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்க்க வேண்டும். இது சட்டசபையில் நிறைவேற்ற விடக் கூடாது.

அனைத்து அரசியல் கட்சிகள். இந்து இயக்கங்கள், சமூக, கலை, கலாசார அமைப்புகள் அனைத்தும் இதில் ஈடுபடவேண்டும். ஆயிரமாயிரம் ஆண்டுக் காலத் தொன்மைக் கலாசாரம் இந்த அற்ப அரசியல் அயோக்கியர்களின் கையால் சிதைக்கப் படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

Monday, January 07, 2008

நீளும் கிறிஸ்துவின் ஆக்கிரமிப்புக் கரங்கள்

கிறிஸ்தவம் என்கிற கோகோ கோலா என்ற முந்தைய பதிவு ஒன்றில் இப்படி எழுதியிருந்தேன் -

"பொட்டு வைத்த இந்துப் பெண்கள், தலைப்பாகை கட்டிய இந்துக்கள், சீக்கியர்கள், தொப்பி வைத்த முஸ்லீம்கள், அரபு ஷேக்குகள், மொட்டையர்கள், வெள்ளைய பொதுப் புத்தியில் “காட்டுமிராண்டிகளான” கறுப்பு, பழுப்பு என்று பலவண்ண இந்துக்கள் இவர்கள் அனைவரும் நீண்டு விரியும் ஏசு கிறிஸ்துவின் கைகளுக்குள் போவது போன்று பிரமாதமான சித்திரம் வரைந்து அதை பெங்களூர், சென்னை போன்ற நகரங்களின் சந்திகளில் பெரிய அளவில் விளம்பரப் பலகைகள் வைக்கிறார்களே, என்ன திமிர், என்ன ஆணவம், மற்ற மதங்களின், கலாசாரங்களின் மீது என்ன ஒரு இளக்காரம் இருக்க வேண்டும் இப்படி செய்வதற்கு? நீண்ட அந்தக் கரங்கள் எங்கள் கலாசாரத்தையும், சமயத்தையும், சமுதாயத்தையும் அழிக்க வரும் விஷக் கொடுக்குகள் என்று நாங்கள் கருவதில் என்ன தவறு?

அந்தப் பதிவில் ஒருவர் இப்படி மறுமொழி இட்டிருந்தார் -

மாமல்லன் said...

அப்படியா? இப்படிப் பட்ட விளம்பரத்தைப் பார்த்ததில்லை. படம் இருந்தால் வெளியிட முடியுமா? நன்றி.

நேற்று ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது பெங்களூரின் முக்கிய சாலை ஒன்றில் இத்தகைய விளம்பரப் பலகை கண்ணில் பட்டது. போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், ஒருவாறாக நான் எடுத்த படம் -



பெரிய அளவு படம் இங்கே.

சாலையில் முக்கியமான இடத்தில் வைத்திருப்பதை சமாளிப்பதற்காக படத்தின் கீழே பெங்களூர் நகராட்சிக்கு (Bangalore Mahanagara Palike) உதவி செய்யும் நல்லெண்ணத்தில் இவர்கள் கீழே ஒரு "சமூக செய்தி"யையும் தந்திருக்கின்றனர் -

You must obey the state authorities, because no authority exists without Gods authority. The existing authorities have been put there by God" - Rom. 13:1

நீங்கள் அரசு அதிகாரத்திற்குக் கண்டிப்பாகக் கீழ்ப்படிந்தே ஆகவேண்டும். ஏனெனில் தேவனின் அதிகாரம் இல்லாமல் வேறெந்த அதிகாரமும் இருக்க முடியாது. இங்கு இருக்கும் அதிகாரவர்க்கத்தினர் அனைவரும் தேவனாலேயே அங்கு வைக்கப் பட்டுள்ளனர் - ரோமன்ஸ் 13:1

அந்தப் படத்தையும் இந்த செய்தியையும் ஒன்றாக இணைத்துப் பாருங்கள். அதாவது, இந்திய அரசு அதிகாரிகள் அரசால் நியமிக்கப் படவில்லை, மக்களாலும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. கிறிஸ்தவத்தின் உலக ஆக்கிரமிப்புக்கு உதவுவதற்காக கிறிஸ்துவால் அவர்கள் அங்கே வைக்கப் பட்டுள்ளனர். ஆமென்.

இது தெரியாமல் ஜனநாயகம், குடியரசு என்றெல்லாம் உளறுகிறீர்களே மடசாம்பிராணிகளே.

அதிலும் கூட ஊருக்குத் தான் இப்படி உபதேசம். மற்றபடி பெங்களூரில் பல இடங்களில் நகராட்சியினர் வைத்துள்ள் வழி, சிக்னல்களைக் காட்டும் பலகைகளை எல்லாம் பார்த்துப் பார்த்து அங்கே ஜீசஸ் அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டிருக்கிறார்.









அடப் பாவிகளா, ஒரு இடத்தையும் விட்டுவைக்க மாட்டீர்களா?

Thursday, December 27, 2007

கிறிஸ்தவம் என்கிற கோகோ கோலா

“பறவைகளுக்குக் கூடு உண்டு, விலங்குகளுக்கு குகைகள் உண்டு, மனித குமாரனுக்குத் தலைசாய்க்க இடமில்லை” - மத்தேயு 8:20

இணையத்தில் வேறு எதற்காகவோ மேய்ந்துகொண்டிருக்கையில் நல்ல மேய்ப்பருடைய சாம்ராஜ்ய விரிவாக்கத் திட்டங்கள் பற்றிய பல விவரணங்களில் தடுக்கி விழ நேர்ந்தது. அனேகமாக எல்லா உலகளாவிய மதப்பிரசார, மதமாற்றத் திட்டங்கள் பற்றிய வலைத்தளங்களிலும் உலகத்தை கிறிஸ்தவ மயமாக்கி ஆக்கிரமித்தல் என்ற தங்கள் ஆதிக்க உள்நோக்கத்தை எந்த வித தயக்கமும், குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தெளிவாகவே சொல்லிவிடுகிறார்கள். பாசாங்கு செய்யும் தெருவோர கிறிஸ்தவ பஜனைக்காரர்கள், சுவிசேஷக் கூச்சல்காரர்கள் இவர்களுடன் ஒப்பிடுகையில் அவர்களது எஜமானர்களின் வெளிப்படையான போக்கைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஜோஷுவா ப்ராஜெக்ட் (Joshua Project) எனப்படும் இத்தகைய ஒரு திட்டத்தின் வலைத்தளத்தில் உலகெங்கும் உள்ள “சென்றடையாத மக்களுக்கு” (unreached peoples) இவர்கள் நற்செய்தியைக் கொண்டு சென்று “முடிக்கப் படாத பணியை முடிப்போம்” என்று அறைகூவுகிறார்கள். முகப்பிலேயே பாரத வரைபடம் “வரைபடங்கள், புள்ளிவிவரங்கள், மேலும்” என்கிறது. குண்டு வைத்தல் (planting a bomb) என்பதற்கு ஈடாக சர்ச் வைத்தல் (Church Planting) என்ற சொல்லாடலை சரளமாகப் பயன்படுத்துகிறார்கள். தேசவாரியாக, மொழிவாரியாக உலகெங்கும் உள்ள மக்கள் குழுக்களின் பட்டியல், அதில் ஒவ்வொரு குழுவினரின் மக்கள் தொகை, அதில் எத்தனை சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள், எத்தனை சதவீதம் மதப்பிரசாரகர்கள் (evangelicals) என்ற விவரங்கள். இந்தியாவைப் பொறுத்த வரையில் மக்கள் குழுக்கள் என்பதில் சாதிகள் வருகின்றன. மொழிவாரியாக “தமிழ்” என்று தேடி பட்டியலிட்டால் [1] அடவியார், அத்தப்பு சிங்கா, ஆதி ஆந்திரா, ஆதி திராவிடா என்று ஆரம்பித்து விடுகிறது. முன்னேற்ற அளவு (progress scale) என்பதில் ஒவ்வொரு சாதியிலும் எத்தனை சதவீதம் மேய்ப்பரின் ஆடுகளாக மாறியிருக்கிறார்கள் என்று காண்பிக்க சிவப்பு, பச்சை, நீலம் என்று வண்ணக் குறியீடுகள் வேறு!

மகா கீழ்த்தரமான, பிளவுபடுத்தும் சாதி அரசியல் நடத்தும் இந்திய அரசியல்வாதிகளிடமோ அல்லது வாக்காளர்களின் சாதி எண்ணிக்கையையே முக்கிய அளவீடாக வைத்து “அறிவியல் பூர்வமாக” தேர்தல் கணிப்புகள் கூறும் பிரணய் ராய் குழுவிடமோ கூட இந்த அளவு நேர்த்தியாக சாதிப் பட்டியல் போடும் அளவுக்கு எண்ணமோ, வசதியோ இருக்காது என்று தோன்றுகிறது. சாதீயத்தை வேரோடு ஒழித்து, சமத்துவத்தை நிலைநாட்டும் கர்த்தரின் சாம்ராஜ்யம் புல்லரிக்க வைக்கிறது.

சர்வதேச வர்த்தக நிறுவனங்களின் சேல்ஸ் குழுக்கள் பொறாமைப் படும் அளவுக்கு திட்டம் தீட்டுகிறார்களே என்று யோசித்துக் கொண்டே இருக்கும்போது, கண்ணில் பட்டது மதமாற்ற பிரசாரகர்களுக்கான “உலக மதமாற்ற நிலவரம்” என்னும் ஒரு பயிற்சிக் கையேடு [2]. அதில் 12-வது பக்கத்தில் உள்ள ஒரு படம் இதோ:




“உலகின் எல்லை வரை நற்செய்தி”

‘கோக்’கால் ஆன உலகம்:

10% கோக் ரசிகர்கள் (ஏசுவின் உண்மையான அடியாள்கள்)
20% கோக் அருந்துபவர்கள் (பொதுவான கிறிஸ்தவர்கள்)
40% கோக் அருந்தாதவர்கள் (நற்செய்தி செல்லும் இடங்களில் இருந்து, ஆனாலும் மனம் திருந்தாதவர்கள்)
30% கோக் தெரியாதவர்கள் (நற்செய்தி இன்னும் சென்று சேராதவர்கள்)

இது ஒரு உதாரணம் மட்டும் அல்ல. தங்கள் போற்றுதலுக்குரிய தேவகுமாரனின் செய்தியின் மதிப்பு என்ன, அதை எப்படி மார்க்கெட் செய்யவேண்டும் என்ற இவர்களது எண்ண ஓட்டத்தையும் இது துல்லியமாகப் பிரதிபலிக்கிறது. இதே பயிற்சிக் கையேட்டில் (பக்கம் 22), சீனாவில் கிறிஸ்தவம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்று உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள். 1948-ல் 1 மில்லியனுக்கும் குறைவாக கிறிஸ்தவர்கள் இருந்த சீனாவில் இன்று 90 மில்லியன் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்களாம். ஒவ்வொரு நாளும் 24,000 புதிய சீன கிறிஸ்தவ விசுவாசிகள் தேறுகிறார்களாம். இன்றைய கணக்குப் படி வட அமெரிக்காவை விட அதிகம் கிறிஸ்தவர்கள் சீனாவில் இருக்கிறார்களாம். “தி இந்து” என்று பெயர் வைத்துக் கொண்டு, இந்துப் பண்பாட்டிற்கும், சமுதாயத்திற்கும் குழிபறிக்கும் வேலை செய்யும், மாவோவை ஆராதிக்கும் மவுண்டுரோடு புரட்சியாளர்கள், கம்யூனிசத்தைக் கரைத்துத் தள்ளும் இந்த ஆபிரகாமின் ‘அபின்’ மழை பற்றி ஏன் ஒன்றுமே சொல்வதில்லை?





லாவோட்சுவும், கன்பியூஷியசும், பௌத்தமும் வளர்த்த பழைய ஞான வயலில் கோகோ கோலாவைப் பொழிந்து நிமிடத்தில் அதைக் காலி செய்து விடலாம். என்னே தேவனின் மகிமை!

இன்னொரு வலைத்தளத்தில் கர்நாடகத்தின் லிங்காயத் எனப்படும் வீரசைவ சமூகத்திற்குள் மதமாற்றம் செய்வதற்காக அனுப்பப்பட்ட பிரசாரகர்கள் “எவ்வளவோ வருடம் ஊழியம் செய்தாலும் இந்த சமூகத்தில் ஒரு பயலும் கர்த்தரின் நற்செய்தியைப் புரிந்துகொள்ள முடியாத பாவிகளாக இருக்கிறார்களே” என்று புலம்பித் தீர்க்கிறார்கள். முதலீட்டுக்குத் தக்க லாபம் இல்லை என்றால் எப்படி நடத்துவது வியாபாரம்? நியாயம் தானே? ஆனால் உலகளாவிய மனித நேயத்தையும், சிவ பக்தியையும் போதித்து, சாதிக் கொடுமைகளை எதிர்த்துப் போராடிய மாபெரும் சீர்திருத்த வாதியான பசவேஸ்வரர் நிறுவிய இந்து சமயப் பிரிவினைச் சேர்ந்த இந்த சமூகத்தினருக்கு ஏசுவின் இரத்தத்தாலோ, அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாலோ என்ன பிரயோஜனம் என்று ஏன் இந்த வியாபாரிகள் நினைப்பதில்லை? ஒரு அமைதியான, முன்னேற்றம் விழையும், ஆன்மிகத்தைப் பின்பற்றும் சமூகத்திற்கு உள்ளே நுழைந்து அதைக் குலைக்க வேண்டும் என்ற நோக்கமே அருவருக்கத் தக்கதாக இல்லையா? வன்முறையையும், வெறுப்பையும், கைக்கொள்ளாத இத்தகைய சமூகங்களில் இருந்து இந்த மதப்பிரசாரகர்கள் பாடம் அல்லவா கற்றுக் கொள்ள வேண்டும்?

இப்படிப் பட்டியல் இடுவதே உலகின் பல தேசங்களில் வாழும் பலவித மக்கள் குழுக்களை இழித்து, அவமதிப்பதும், அவர்களது கலாசாரத்தின், மதத்தின் மீதான நேரடி தாக்குதலும் ஆகும். இதை இந்த கிறிஸ்தவ மதமாற்றக் குழுக்களும், இவர்களது ஏஜெண்டுகளாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களிலும் செயல்படும் மதப்பிரசார வெறியர்கள் கொஞ்சமாவது எண்ணிப் பார்க்கிறார்களா?





பொட்டு வைத்த இந்துப் பெண்கள், தலைப்பாகை கட்டிய இந்துக்கள், சீக்கியர்கள், தொப்பி வைத்த முஸ்லீம்கள், அரபு ஷேக்குகள், மொட்டையர்கள், வெள்ளைய பொதுப் புத்தியில் “காட்டுமிராண்டிகளான” கறுப்பு, பழுப்பு என்று பலவண்ண இந்துக்கள் இவர்கள் அனைவரும் நீண்டு விரியும் ஏசு கிறிஸ்துவின் கைகளுக்குள் போவது போன்று பிரமாதமான சித்திரம் வரைந்து அதை பெங்களூர், சென்னை போன்ற நகரங்களின் சந்திகளில் பெரிய அளவில் விளம்பரப் பலகைகள் வைக்கிறார்களே, என்ன திமிர், என்ன ஆணவம், மற்ற மதங்களின், கலாசாரங்களின் மீது என்ன ஒரு இளக்காரம் இருக்க வேண்டும் இப்படி செய்வதற்கு? நீண்ட அந்தக் கரங்கள் எங்கள் கலாசாரத்தையும், சமயத்தையும், சமுதாயத்தையும் அழிக்க வரும் விஷக் கொடுக்குகள் என்று நாங்கள் கருதுவதில் என்ன தவறு? சிலுவை மாலை போட்ட மனிதர்கள் கூட்டம் அதை அறுத்தெறிந்து விநாயகர் முன் நின்று தொழுவது போல நான் படம் வரைந்து, அதை வீதிதோறும் நிறுத்தினால், சகித்துக் கொள்வார்களா இந்த வெறியர்கள்?





உலகின் வளரும் நாடுகளில் எல்லாம் கோகா கோலா என்பது எதேச்சாதிகாரத்தின், பொருளாதார ஆக்கிரமிப்பின், ஊடுருவலின் சின்னமாகவே கருதப் பட்டு வருகிறது. ஒன்றுக்கும் உபயோகமில்லாத, உடலுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய ஒரு சமாசாரத்தை எப்படி பிரம்மாண்டமான விளம்பரங்கள் மூலம் விற்றுத் தள்ளுவது என்பதற்கும் கோகோ கோலா ஒரு சிறந்த உதாரணம். கோலாவின் அரித்துத் தின்னும் அமிலத் தன்மை வெகு பிரசித்தம் - ‘கோக்’கை ஊற்றி அமெரிக்க காவல்துறையினர் ரத்தக்கறைகளைக் கூட கழுவுவார்கள் என்று செய்திகள் உண்டு. மேலும் கவனித்தீர்களானால் எந்த கோகா கோலா விளம்பரங்களிலும் அந்த பானத்தில் என்ன இருக்கிறது, அது எப்படி நன்மை செய்யும் என்பது பற்றிய மெஸேஜ் எதுவும் இருக்காது, ஆனால் கோக் குடிப்பது தான் பிறவிப் பயன், இந்த பானத்தைப் பருகாதவன் எல்லாம் மனிதனே இல்லை, இளநீர் குடிப்பவன் காட்டான் கோக் குடிப்பவன் நாகரீகமானவன் என்பது மாதிரி மெஸேஜ்கள் தான் இருக்கும்.

இத்தகைய சமூக-அழிப்பு மதப்பிரசாரத் திட்டங்களை வர்ணிக்கும் “இந்தியாவை வன்புணர்தல்” (The Rape of India) என்ற தனது கட்டுரையில் [4] டேவிட் கோஸ்டின்சுக் (David Kostinchuk) கூறுகிறார் - “மதமாற்றப் பிரசாரகர்கள் இந்தியாவில் தங்களது இறுதி கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகையில் ஏற்படும் விளைவுகள் பரபரப்பானவையாகவும், வருத்தம் தரக் கூடியவையாகவும் இருக்கும். மதப்பிரசாரத்திற்கு எதிரான பெருவாரியான எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பற்றி நீங்கள் செய்தித் தாள்களில் பார்க்கலாம். மதப்பிரசாரகர்கள் அரசியல்வாதிகளிடமும், சமூக உரிமை குழுக்களிடமும், மேற்கத்திய செய்தி ஊடகங்களிலும் கூக்குரல் இடுவார்கள்

இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரிசாவின் பழங்குடி வனவாசி மக்கள் வசிக்கும் பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் பின்னணியில் நடந்த கலவரம் பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. “இந்து வெறிக் கும்பல்களால்” 14 “சர்ச்சுகளும் ஜெபக்கூடங்களும்” (உச்சியில் சிலுவைகள் சொருகிய உடைந்து விழும் ஓலைக் குடிசைகள்) எரிக்கப் படுவதாக அமெரிக்க [5], பிரிட்டிஷ் [6] ஊடக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மதமாற்ற பிரசாரத்தை (கிறிஸ்தவ மதத்தையே அல்ல) எதிர்த்து இயக்கம் நடத்திய 80 வயது முதியவரான, எளிய வனவாசி சமூகத்தைச் சேர்ந்த துறவி சுவாமி லக்ஷ்மானந்த சரஸ்வதி [7] என்ற “இந்து பழைமைவாத தலைவர்” (Hindu conservative leader) தாக்கப் பட்டது இதற்குக் காரணம் என்று அவை அறிவிக்கின்றன. பழங்குடியினர், மலைச்சாதியினர் இந்துக்களே அல்ல, அவர்கள் “மிருக வழிபாட்டாளர்கள்” (animists) என்று சூடம் அணைத்து சத்தியம் செய்யும் இந்த ஊடகங்களின் அகராதியில், அதே மலைவாசி, பழங்குடியினர் அக்கிரமம் தாங்காமல் பொங்கியெழுந்து ஆக்கிரமிப்பு தலங்களை எரிக்கும்போது “இந்து வெறிக்கும்பல்கள்” ஆகிவிடுகிறார்கள். என்னவொரு கருத்து நேர்மை!

தன் கட்டுரையின் இறுதியில் டேவிட் கேட்கிறார் - “மதமாற்ற பிரசாரகர்களும் அவர்களது பணியாளர்களும் பல நாடுகளிலும் அங்கிருக்கும் சமூகங்கள், கலாசாரம், மதம் மற்றும் மக்களின் குடும்பங்களில் குழப்பம் விளைவிக்க உரிமை உள்ளதா? அல்லது, மக்கள் தங்கள் சமூகம், கலாசாரம், மதம் மீது தொடரப்படும் தாக்குதலை எதிர்த்து போராட உரிமை உள்ளதா?”

“தலைசாய்க்க இடமில்லாத” மனிதகுமாரனுக்கே வெளிச்சம்.