Thursday, January 28, 2010

பண்பாட்டைப் பேசுதல்: தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல்!

ந்து மத சாத்திரங்கள் சாதிப் பாகுபாடுகளையும், பெண்ணடிமைத் தனத்தையும் வளர்க்கின்றனவா?ந்துத்துவம் சாதிய ஆதரவு சித்தாந்தமா?லக கிறிஸ்தவ நிறுவனங்கள் உண்மையிலேயே இந்தியாவைக் குறிவைத்து மதமாற்றத் திட்டங்கள் தீட்டுகின்றனவா? .....

மூகம், வரலாறு, இலக்கியம், சமயம், கலாசாரம் தொடர்பான இத்தகைய கேள்விகளுக்கு விடைதேடிக் கொண்டிருப்பவரா நீங்கள்?

நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.

மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும். ஜெ.ராம்கியின் புத்தக விமர்சனம் சொல்வனம் இதழில் வந்துள்ளது.

இந்தத் தொகுப்பில் அடியேன் எழுதிய, மொழியாக்கம் செய்த கட்டுரைகளும் உண்டு!

Wednesday, November 11, 2009

இயற்கை முரண்களும், இருவேறு கலாசாரங்களும்

… இரண்டுமே சாதாரண வரையறைகளுக்குள் அடங்காத விசித்திர பிராணியைக் கற்பனை செய்தன. ஒரு கலாசாரம் அதனை தெய்வீகத் தன்மை கொண்ட அதிசயமாகப் பார்த்தது. மற்றது சாத்தானிய (diabolical) தன்மை கொண்ட அரக்கனாகப் பார்த்தது…

முழுக் கட்டுரை தமிழ்ஹிந்து.காம் தளத்தில்.

Sunday, September 20, 2009

இறைமை ததும்பும் இரவு: நவராத்திரியை முன்வைத்து ..

இரவு அச்சமூட்டுவது, வசீகரிப்பது, மர்மங்களும் ஆழ்ந்த அமைதியும் கொண்டது. அதனால் தான் நம் மரபில் இரவைப் பெண்ணாக, தேவியாக உருவகித்தார்கள் போலும்! உலகின் வெளித் தோற்றங்கள் அனைத்தும் காரிருளில் கரைந்து மறையும் அந்தக் காலவெளியை, அக எழுச்சியை விழையும் அனைத்து விதமான மாந்தர்களும் சரணடைகிறார்கள் - ஞானிகள், கலைஞர்கள், கவிஞர்கள், போகிகள், யோகிகள், இலக்கின்றித் தவிப்பவர்கள் யாராயினும்…

முழுதும் படிக்க:
இறைமை ததும்பும் இரவு: நவராத்திரியை முன்வைத்து ..

இதில் ராத்ரி ஸுக்தம் என்ற அழகிய வேத மந்திரத்தின் ஆடியோ க்ளிப் ஒன்றையும் போட்டிருக்கிறேன்.

அனைவருக்கும் நவராத்ரி வாழ்த்துக்கள்!

Sunday, September 13, 2009

கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?

மூலம்: தருண் விஜய், தமிழில்: ஜடாயு

ஷா ஆலம் (மலேசியா) பகுதியில் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தினர் மதவெறி கோஷங்களை எழுப்ப தலைவரான ஹாஜி சொன்னார் - “கோயில் கட்டுமானம் மட்டும் தொடர்ந்தால் இங்கே ரத்த ஆறு ஓடும்” … தாங்கள் ஒரு குற்றமும் செய்யாதபோதும், கோயம்புத்தூர் முதல் கோலாலம்பூர் வரை, காட்மாண்டு முதல் ஜெட்டா வரை ஏன் எல்லா இடங்களிலும் கொத்துக் கொத்தாக இந்துக்கள் படுகொலைக்கு எளிய இலக்காகின்றனர்? இந்துக்கள் படும் காயங்கள் பல துறைகளிலும் செல்வாக்குள்ள தலைவர்களாக உள்ள இந்துக்களாலேயே கண்டுகொள்ளாமல் ஒதுக்கப் படுகின்றன. ஏன்? ....

முழுக்கட்டுரையும் தமிழ்ஹிந்து தளத்தில் படிக்கலாம்.