Monday, October 11, 2010

காஷ்மீர் இந்துபூமி யே என்கிறார் ஹாய் மதன் - பாராட்டுக்கள்!

சமீபத்திய விகடனில் ஹாய் மதன் பகுதியில் ஒரு கேள்வி - பதில்..

கேள்வி: காஷ்மீரில் நடக்கும் கலவரங்களை நம்மால் அடக்கமுடியவில்லை; பிரிவினைத் தீயை அணைக்க முடியவில்லை. முஸ்லிம்கள் தான் அங்கே பெரும்பான்மை. போனால் போகட்டும் என்று காஷ்மீரை விட்டுத் தொலைத்துவிட்டு நாம் ஏன் நிம்மதியாக வாழக் கூடாது?

இதற்கு அளித்த பதிலில்,

.. வேத காலத்தில் அங்கு வசித்த காஷ்யப முனிவரின் பெயரில் இருந்து தான் காஷ்மீர் என்ற பெயர் வந்தது என்று கருதப் படுகிறது...

என்று தொடங்கி காஷ்மீர சைவம், அபினவ குப்தர், யோக வாசிஷ்டம் ஆகிய இந்துப் பண்பாட்டுக் கூறுகளின் தாயகமான காஷ்மீர் இந்தியாவின் பகுதியே என்று பதில் சொல்லியிருக்கிறார் ஹாய் மதன். கருத்துக்கள் தவறாகவும், மேம்போக்காகவும், தகவல் பிழைகளுடனும் உள்ளன - காஷ்மீரி சைவம் தமிழக சைவத்திலிருந்து தான் உருவானது என்பது தவறு; இரண்டுமே வேதநெறியை விலக்கவில்லை, மாறாக வேதநெறியையே அடிப்படையாகக் கொண்டவை. பக்தி, தாந்தீரிகம் குறித்து மதன் கூறியதும் தவறு. இந்து தத்துவ நூல்களை பாரசீக மொழியாக்கம் செய்தவர் தாரா ஷீகோ, அக்பர் அல்ல. நாகார்ஜுனர் தமிழர் அல்ல, ஆந்திரர் - அவர் பெயரில் நாகார்ஜுனகொண்டா என்று ஊர் இன்றும் இருக்கிறது.

இந்த சின்ன பதிலிலேயே இவ்வளவு தவறுகள் இருந்தாலும், வெறும் செய்தித் தாள் துணுக்குகளின் அடிப்படையில் இல்லாமல், ஓரளவு வரலாற்று, கலாசார, சமூகப் பின்னணி பற்றிய புரிதலுடன் இக்கேள்விக்கு விடையளித்த ஹாய் மதனுக்குப் பாராட்டுக்கள்!

இந்த இண்டர்நெட் யுகத்தில் சரியான தகவல்களைத் திரட்டுவது கடினமே அல்ல; ஹாய் மதன் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்து தகவல்களைத் திரட்டி பதிலளிக்க வேண்டும்.

கேள்வி-பதில் இதோ -



Wednesday, February 17, 2010

சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம்

சாதிகள், சாதியம் இவற்றின் வரலாற்றுப் பின்னணி என்ன? சாதியம் குறித்து இந்து தருமம் கூறுவதென்ன? சாதி இந்தியாவில் மட்டும் தான் இருக்கிறதா? சாதியத்தை எதிர்க்க இந்து தருமம் அளிக்கும் கருத்தியல் என்ன? இத்தகைய கேள்விகளுக்கு இந்தச் சிறு நூல் சுருக்கமாக விடையளிக்க முயல்கிறது.

நண்பர்கள் அரவிந்தன் நீலகண்டன், பனித்துளி, அடியேன் மூவரும் இணைந்து எழுதியிருக்கும் இந்தச் சிறு நூல் தமிழ்ஹிந்து தளத்தில் தொடராக வந்து கொண்டிருக்கிறது..

தொடரின் அனைத்துப் பகுதிகளையும் இங்கே படிக்கலாம்.

காதலர் தினம் என்னும் வருடாந்திர வெள்ளம்

இருபாலருக்கும் இடையில் இயல்பான, ஆரோக்கியமான, பாலியல் சாராத அதே சமயம் ஆர்வமூட்டுகிற (non-sexual, yet exploratory) நட்புகளைப் புரிந்துகொள்ளவோ, ஊக்குவிக்கவோ இன்னும் முழுமையாகத் தயாராகாத ஒரு சமூகத்தில், காதலர் தினத்தின் வருகையை இத்தகைய வருடாந்திர வெள்ளத்திற்குத் தான் ஒப்பிடத் தோன்றுகிறது… அதன் பக்கவிளைவுகள் எப்போதுமே துயரம் தரக் கூடியவை. மேலும், அவற்றை எப்போதுமே நாம் தவறில்லாமல் கணித்துவிடவும் முடியும்!...

முழுதும் படிக்க: இங்கே.

இந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்

செஞ்சியில் திடீரென ஏற்பட்டுள்ள பிரச்னையில் பழைமையான கோவிலின் வழிபாட்டை கிறிஸ்தவர்கள் தடுத்தி நிறுத்தி கோவிலை பூட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. காலனிய அடிமைத்தனத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு, தங்களுடன் காலம் காலமாக வாழ்ந்து வரும் தங்கள் சொந்த சகோதரர்களின் பழமையான வழிபாட்டுத் தலத்தை அபகரிக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் எப்பேர்ப்பட்ட ஈனத்தனம்!...

முழுதும் படிக்க: இங்கே.