"ஏசு குடிகாரன், ஔவை குடிகாரி": சொல்வாரா கருணாநிதி?
முன்னுக்குப் பின் முரணாக மட்டும் அல்ல, மூளையோடு தான் பேசுகிறாரா என்று எப்போதும் ஒரு ஐயம் இழையோடிக் கொண்டிருக்க்குமாறு பேசுவதையே ஒரு கலையாகக் கற்றிருக்கின்ற தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ராமசேது திட்டத்தின் பெயரால் தானும், டி.ஆர். பாலுவும், தங்கள் குடும்பங்களும் அடிக்க நினைத்திருக்கும் பெரும் கொள்ளை எங்கே பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் குளிர்ஜுரம் வந்து உளறிக் கொண்டிருக்கிறார்!
முதலில் ராமன் எந்தக் காலேஜில் இஞ்ஜினீயரிங் படித்து பாலம் கட்டினான்? என்று பிதற்றல். அடுத்தது "ராமன் என்பது பொய். நான் எழுதற நாவல்ல வர கேரக்டர் மாறி அவரும் ஒரு கேரக்டர்" என்ற உளறல். அடுத்தது "ராமன் குடிகாரன் என்று வால்மீகி ராமாயணத்திலேயே இருக்கிறது.. ராமாயணத்தைப் படைத்த வால்மீகி சொன்னதை விட நான் தவறாக எதையும் சொல்லி விடவில்லை" என்று இன்னொரு அபத்தப் பேச்சு. இதில் விவாதம் செய்யத் தயாரா என்று அத்வானியிடம் ஒரு சவடால் வேறு.
"இல்லவே இல்லாத ராமனை"ப் பற்றி உனக்கென்னய்யா இவ்வளவு அக்கறை?
தனக்கு வாக்களித்து தன்னைத் தேர்ந்தெடுத்து இருக்கும், கடவுள் நம்பிக்கையுள்ள கோடிக்கணக்கான இந்துக்களை மடையர்கள் என்று இதன் மூலம் அழைத்திருக்கிறார் கருணாநிதி. ஏனென்றால் ஸ்ரீராமனையும், ராமாயணத்தையும் கேலிசெய்து, அவமதித்து, இப்படி அறிக்கைகள் விடுவதற்கு வேறு முகாந்திரமே இல்லை - "ராமசேது என்பது பாதுகாக்கப் பட வேண்டிய தேசிய, கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை/செயற்கை அமைப்பா" என்பது மட்டும் தான் கேள்வி.. "ராமசேது திட்டம்" பற்றிய வழக்கில் அனாவசியாக ராமாயணம் என்ற இதிகாசத்தையும், அகழ்வாராய்ச்சியையும் குழப்பி காங்கிரஸ் கூட்டணி அரசு அளித்த அபத்த அறிக்கையும், அதற்கு எழுந்த நாடு தழுவிய உறுதியான எதிர்ப்பு அலையும், காங்கிரசின் மழுப்பல், பின்வாங்கல், மன்னிப்பு, இதற்கு யார் தலையை வாங்கலாம் என்ற கணிப்புகளும் இன்னும் முடிந்த பாடில்லை. இன்னும் 3 மாதத்திற்கு சேது சமுத்திர திட்ட செயல்பாட்டில் கைவைக்காமல் இதை மறுபரிசீலனை செய்வோம் என்று அரசு உச்சநீதி மன்றத்திலேயே வாக்களித்தும் ஆகி விட்டது.
இந்த சூழலில், இந்த முழுப் பிரசினையிலும், மகா கோமாளிகளாகவும், பைத்தியக் காரர்களாகவும் கருணாநிதியும், அவரது அரசும், கட்சியும் வெளிவந்திருக்கின்றன. காங்கிரஸ் கட்சி "ஏன் இந்த சனியன் நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கிறான்" என்று சொல்லாத குறையாக நாளுக்கு நாள் இவரது ராம தூஷணைகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறன..
ராமன் ஒன்றும் கிருஷ்ணன் அல்ல,
சிசுபாலனின் நூறு தூஷணைகளையும் சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டு கடைசியில் சக்ராயுதத்தை எடுப்பதற்கு. ஆனானப் பட்ட சமுத்திரராஜனுக்கே மூன்று நாள் கெடு, அதற்குப் பிறகு ராம பாணம் தான்.
"ராமன் குடிகாரன்" என்று இவர் காலையில் சொல்கிறார்.. மாலையில் தொலைக்காட்சியில் அமைச்சர் பொன்முடி "ராமன் சோமபானம் அருந்தியதாக வால்மீகி ராமாயணத்தில் வருகிறது.. அதனால் குடிகாரன்" என்கிறார்.
"சோமம்" என்பது வேதகாலத்தில் அறியப்பட்ட ஒரு அற்புத மூலிகை, அதன் சாறு தான் சோம்பானம், வேள்விகளில் இது சம்பிரதாயமாக அருந்தப் பட்டது , மேலும் "சோமம்" என்பதே தெய்வ சக்திக்கான ஒரு குறியீடு என்பதான விவரங்கள் நன்கறியப் பட்டவை என்பதைக் கூடத் தெரிந்துகொள்ளாத அரைகுறைகள்தான் இந்த திராவிட இயக்க அல்லக்கைகள். "தேவர்களே, சோமத்தை அருந்துவீர், எம்மைக் காப்பீர்" என்ற பாரதியின் வசன கவிதை வரிகள் சொல்ல வருவதும் இக்கருத்தையே. "சுராபானம்", "மது" "ஆஸவம்" இவையே மது மற்றும் கள்ளுக்கான பெயர்கள்.
இந்த கேள்வி எழுந்துவிட்டதால் ராமாயணத்தில் மது பற்றி வரும் குறிப்புகளை சுருக்கமாக பார்ப்போம் -
1) ராவணனும், அவன் மனைவியரும் மத்யபானம் செய்து அதன் வாசனையுடன் உறங்குவதை அனுமன் காண்பது பற்றி சுந்தரகாண்டத்தில் வருகிறது. சாமவேத விற்பன்னனும், புலஸ்தியரின் மகனுமான பிராமணன் ராவணன் போகத்திற்காக மதுபானம் செய்தான் என்று கூறும் வால்மீகி இதை *பாவம்* என்று சொல்லவில்லை.
2) வானரர்கள் மது அருந்தியது பற்றி பல இடங்களில் உள்ளது.. குறிப்பாக சுக்ரீவன் மிதமிஞ்சிக் குடித்திருந்ததும், லக்ஷ்மணன் தேடி வந்த சமயத்தில்நினைவயர்ந்து கிடந்ததும், தாரையை அனுப்பி வைத்து, அதன் பின்னால் வந்துலக்ஷ்மணனுடன் உரையாடியதுமான குறிப்புகளும், 'என் தம்பிக்கு என்னைப் போலவேகுடிப்பழக்கம் உண்டு' என்று வாலி சொல்லும்போதும் இது வெளிப்படுகிறது.
கம்பன் இந்தக் காட்சியை வைத்து கள்ளுண்ணாமை என்ற நற்பண்பை போதிக்கின்றான் -
'ஐய! நான் அஞ்சினேன், இந் நறவினின் அரிய கேடு;
கையினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால்;
வெய்யது ஆம் மதுவை இன்னம் விரும்பினேன் என்னின், வீரன்
செய்ய தாமரைகள் அன்ன சேவடி சிதைக்க' என்றான்.
என்று சுக்ரீவனை மனம் வருந்திச் சொல்லச் செய்கிறான். 'கையினால் தொடுவதுமட்டுமில்லை; மனத்தினால் நினைக்கவும் மாட்டேன். அப்படி மதுவை விரும்பினேனானால், இராமபிரானுடைய திருவடித் தாமரை என்னைச் சிதைக்கட்டும்'என்று சூளுரைக்கிறான்.
3) அயோத்யா காண்டத்தில் (சர்க்கம் 55, சுலோகம் 20) யமுனையைக் கடக்கும்போது சீதாதேவி "நூறு கள்குடங்களை உனக்கு காணிக்கையாகத் தருகிறேன், என் குடும்பத்தையும், உறவினர்களையும் காப்பாற்று" என்று யமுனா நதியை வேண்டிக் கொள்வதாக வருகிறது - இன்றும் கூட ஒரு கருப்பாயியும், ராக்காயியும் தங்கள் வழிபடு தெய்வமான பல கிராம தேவதைகளுக்கு கள் நிவேதனம் செய்யும் தொல்குடிப் பழக்கத்தின் ஆதி வடிவம் ராமாயணத்திலேயே இருப்பதற்கான ஆதாரம் தான் இது.
4) சுந்தரகாண்டத்தில், "ராமன் தேவியைப் பிரிந்ததில் இருந்து சாறையும் அருந்துவதில்லை, கதுப்பையும் உண்பதில்லை" என்று வருகிறது. இதில் சாறு, கதுப்பு என்பவை மது, மாமிசம் என்பதாக சில உரையாசிரியர்கள் கருதுகிறார்கள். இருக்கலாம் - க்ஷத்திரியர்கள் இந்த உணவுப் பழக்கம் கொண்டிருந்தது இதிகாசங்களில் வேறு பல இடங்களிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால் இதுவும் ராமனைக் குடிகாரன் ஆக்காது, தன் குல வழக்கத்திற்கேற்ற உணவுப் பழக்கத்தைக் கைக்கொண்ட, தர்மத்திலிருந்து சிறிதும் வழுவாத தரும நாயகன் என்றே நிலைநிறுத்தும் - வால்மீகி என்ற மாமுனிவன் எல்லா இடங்களில் ஸ்ரீராமனை நற்குணக் கடல் என்பதாகவே வர்ணித்திருக்கிறான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
ஆயிற்றா? இன்னும் என்ன விவாதம் செய்யப் போகிறார் கருணாநிதி, அத்வானியுடன்? இப்படி போன தலைமுறை திராவிடப் பைத்தியங்கள் எழுதிவைத்த "கீமாயணம்" குப்பையைக் கிளறி அதில் இருக்கும் ஒவ்வொரு சாக்கடை வாந்தியையும் எடுத்து பரிமாறப் போகிறாரா? இன்றைய தமிழ் மக்கள் அந்த அளவுக்கு முட்டாள்களும், ஏமாளிகளும், வேலையத்தவர்களும் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளட்டும்.
இன்னொரு நியாயமான கேள்வி.. (தலைப்புக்கு வரணுமில்லையா?)
ஒரு கோப்பை ஒயினையே பலமடங்காக்கி கூட்டத்தில் வந்திருந்தவர்கள் எல்லாருக்கும் ஏசு கொடுத்ததாக பைபிள் கதை உள்ளதே? அந்த மரபின் நீட்சியாக இன்றும் கிறித்தவப் பாதிரிகள் சம்பிரதாயமாக ஒயின் பிரசாத விநியோகம் செய்கிறார்களே? "ஏசு குடிகாரரன் மட்டுமல்ல, குடிப்பழக்கத்தை பிரசாரம் செய்தவன்" என்று பகுத்தறிவுப் பாசறையில் வந்த கருணாநிதி கூறுவாரா?
ராமாயணம், மகாபாரதத்தில் வரும் மது தொடர்பான குறிப்புகளே போன்று தான், ஏன் இன்னும் அதிகமாகவே சங்க இலக்கியங்கள் முழுவதும் கள்ளும், மதுவும், தேறலும், நறவமும், பிழிசலும் பெருக்கெடுத்து ஓடுகின்றன.
"ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப, மகிழ்சிறந்து.. " - புறநானூறு (24)
தங்கக் கிண்ணத்தில் மங்கையர் கள் ஊற்ற அருந்திய வீரத்தமிழ் மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன் குடிகாரன் என்று கருணாநிதி கூறுவாரா?
தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ,
ஊண்முறை ஈத்தல் அன்றியும் ,
கோண்முறைவிருந்திறை நல்கி யோனே - புறநானூறு (392)
"தேள் கொட்டுவது போல சுரீர் என்னும் சுவை தரும் புளித்த கள்ளை பொன் கிண்ணத்தில் ஊற்றி அளித்தான்" என்று அதியமான் மகன் பொகுட்டெழினி தனக்குக் கள் ஈந்த அனுபவத்தைப் பாடுபவர் யார் தெரியுமா? தமிழின் தலைசிறந்த பெண் கவிஞர்களில் ஒருவரான சங்ககால ஔவையார் ! "ஔவை ஒரு மொடாக் குடிகாரி" என்று கூறுவாரா கருணாநிதி?
முதலில் ஜெயலலிதாவை இதே போன்று குடிகாரர் என்றார். பிறகு விஜயகாந்த். இப்போது ஸ்ரீராமன் வரைக்கும் போய்விட்டது. மஞ்சள் துண்டு காரனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்!
மூடத்தனமே உன் பெயர் தான் முதலமைச்சரோ?
கயமையே உன் பெயர் தான் கலைஞரோ?
10 comments:
சடாயு,
வெறும் நம்பிக்கை, அதுவும் இந்த பா.ஜ.க. கூட்டத்தால் பிரச்சினை ஆக்கப் படாமல் இருந்தால் மக்கள் பெரிதாக கவலைப் படாத விசயம், மக்கள் நலத் திட்டத்துக்கு இடைஞ்சலாக சொல்லப் படும்போது அதை எதிரித்து, அந்த நம்பிக்கையை எதிர்த்து கலைஞர் பேசியிருக்கிறார். ஒரு வேளை, ஏசுவின் பெயராலோ, அவ்வையாரின் பெயராலோ மக்கள் நலத்திட்டங்கள் தேவையில்லாமல் முடக்கப்பட்டால் கலைஞர் எதிர்த்துப் பேசுவாராக இருக்கும்.
அது ஒன்னுமில்லை ஜடாயு,
நம்ம முக , காகா வாக மாறி ரொம்ப நாளாகிவிட்டது ( நம்ம ஊர்ல முஸ்லிம்களை பாய் என்று அழைப்பது போல, மதானி பார்டியின் அவ்விட தேசத்து கஞ்சி பார்டிகள் சக முஸ்லிம்களை காகா என்றுதான் அழைப்பார்கள் ).
முக இன்னும் ரம்ஜான் நோன்பு கஞ்சி
குடிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
அந்த நோன்பு கஞ்சி கிழவனின் வாயை அடைக்கும் வரையில் இப்படித்தான் புத்தி பிசகி உளறிக் கொண்டிருக்கும்.
எல்லாம் வயதானதால் வரும் புத்தி தடுமாற்றம். முக பேசாமல் முதலமைச்சர் பதவியை ஆற்காட்டாருக்கு கொடுத்து விட்டு, மகாபலிபுரம், கடற்கரை ரிசார்டில் சென்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.
அன்புடன்,
ராமச் சந்திரன்.
// ஒரு வேளை, ஏசுவின் பெயராலோ, அவ்வையாரின் பெயராலோ மக்கள் நலத்திட்டங்கள் தேவையில்லாமல் முடக்கப்பட்டால் கலைஞர் எதிர்த்துப் பேசுவாராக இருக்கும்.//
இதற்குப் பெயர் தான் குதர்க்கம் என்பது.. இங்கு கேள்வி ராமனைப் பற்றியதே இல்லையே, ஒரு திட்டத்தின் சாதக பாதகங்களைப் பற்றியது மட்டுமே.
ஏசுவின் பெயரால் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறதே நாகாலாந்தில், மிசோரத்தில், மேகாலயாவில்? அது திட்ட முடக்கத்தை விடவும் எவ்வளவு சீரியஸான விஷயம்? அது பற்றி ஏதாவது சொல்லியுள்ளானா இந்தக் கயவன்?
பேச வந்துட்டானுங்க.
ஜடாயு, மிகச் சரியாக கேட்டிருக்கிறீர்கள்..
இதையே தான் விஜகாந்தும் கேட்கிறார் -
எப்போதுமே இந்து மதத்தைப் பற்றி மட்டுமே கிண்டலடித்துப் பேசும் முதல்வர்
கருணாநிதி, மற்ற மதங்கள் குறித்து பேசுவது கிடையாது,'' என்று
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க.,
உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்த மூன்றாயிரம் பேர் நேற்று
தே.மு.தி.க.,வில் இணைந்தனர். சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை
அலுவலகத்தில் நடந்த இணைப்பு விழாவில் விஜயகாந்த் பேசியதாவது:"ஊழல்வாதிகளை
சேர்த்துக் கொண்டு விஜயகாந்த் எப்படி ஊழலை ஒழிப்பார்' என்று கிண்டல்
அடிக்கின்றனர். அழுக்கு ஆடைகள் சலவைத் தொழிலாளியிடம் போய் சேர்ந்தால்
வெளுக்கும்; தே.மு.தி.க., சலவைத் தொழிலாளி போல் செயல்பட்டு, கண்டிப்பாக
ஊழலை ஒழிக்கும்;
என் கட்சி தொண்டர்களை தேவையில்லாமல் ஆர்ப்பாட்டத்திலும், போராட்டத்திலும்
ஈடுபடும்படி கூற மாட்டேன். எதற்கெடுத்தாலும் அறிக்கை கொடுத்து அரசியல்
செய்ய மாட்டேன்.சேது சமுத்திர திட்ட விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி,
இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார். "பாலம் கட்டிய
ராமர் என்ன இன்ஜினியரா? அவர் எந்த கல்லுஷரியில் படித்தவர்' என்று
கேட்கிறார். "திருக்குறள் எழுதிய திருவள்ளூவர் எந்த கல்லுஷரியில்
படித்தவர்' என்று கேட்டால், முதல்வர் பதில் கூறுவாரா? இப்படி
வெளிப்படையாக உண்மையைப் பேசினால், என்னை சிறையில் அடைப்பேன் என்று
மிரட்டுவார்கள்; சிறையில் அடைத்தால் அங்கேயும் "ஜாலி'யாக
இருப்பேன்.எப்போதுமே இந்து மதத்தைப் பற்றி மட்டுமே கிண்டலடித்துப் பேசும்
முதல்வர், மற்ற மதங்கள் குறித்து பேசுவது கிடையாது. இதையெல்லாம்
பேசினால், விஜயகாந்த் அறிவில்லாதவன் என்று கூறுகின்றனர். அவர்களைப்
போன்று அறிவுப்பூர்வமாக கொள்ளையடிக்கவும், லஞ்சம் வாங்கவும் எனக்குத்
தெரியாது.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
ஜடாயு
இந்த விஷயத்தில் வந்த மிக முக்கியமான கட்டுரைகளில் உங்கள் கட்டுரையும் ஒன்று. வெகுஜன ஊடகங்களிலோ அல்லது காலச்சுவடு போன்ற போலி அறிவு ஜீவித் தளங்களிலோ நீங்கள் கேட்ட கேள்விகளைக் கேட்க்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் கேட்க்கும் கேள்விகள் எல்லாம் புரியும் அளவுக்கு அந்தத் தற்குறிக்கு அறிவு கிடையாது, அவனுக்கு வேற மொழியில் சொன்னால்தான் புரியும்
அன்புடன்
ச.திருமலை
You can shout whatever you want. Can you stop us from destroying your so called hindu identity?
Whatever Karunanithi says true. Hindu is a religion based on stories....It was never founded by a person like christian,budist and other religions.
You believe in Ramar....Not in the bridge. It is a Joke!!!!
Next BJB... and karunanithi are same for us both use people emotion to gain personaly.
I just visited your site and thought it would be appropriate to explicate some important facts about Hinduism.
The following nine facts, though not exhaustive, offer a simple summary of Hindu spirituality or about Hinudism.
1 Hindus believe in a one, all-pervasive Supreme Being who is both immanent and transcendent, both Creator and Unmanifest Reality.
2 Hindus believe in the divinity of the four Vedas, the world's most ancient scripture, and venerate the Agamas as equally revealed. These primordial hymns are God's word and the bedrock of Sanatana Dharma, the eternal religion.
3 Hindus believe that the universe undergoes endless cycles of creation, preservation and dissolution.
4 Hindus believe in karma, the law of cause and effect by which each individual creates his own destiny by his thoughts, words and deeds.
5 Hindus believe that the soul reincarnates, evolving through many births until all karmas have been resolved, and moksha, liberation from the cycle of rebirth, is attained. Not a single soul will be deprived of this destiny.
6 Hindus believe that divine beings exist in unseen worlds and that temple worship, rituals, sacraments and personal devotionals create a communion with these devas and God.
7 Hindus believe that an enlightened master, or satguru, is essential to know the Transcendent Absolute, as are personal discipline, good conduct, purification, pilgrimage, self-inquiry, meditation and surrender in God.
8 Hindus believe that all life is sacred, to be loved and revered, and therefore practice ahimsa, noninjury, in thought, word and deed.
9 Hindus believe that no religion teaches the only way to salvation above all others, but that all genuine paths are facets of God's Light, deserving tolerance and understanding.
Hinduism, the world is oldest religion, has no beginning--it precedes recorded history. It has no human founder. It is a mystical religion, leading the devotee to personally experience the Truth within, finally reaching the pinnacle of consciousness where man and God are one. Hinduism has four main denominations--Saivism, Shaktism, Vaishnavism and Smartism.
About Rama: A great yogi and an enlightend spiritual ruler who established a holy kingdom.He was an ardent devotee of God Siva(Example found a Siva shrine in Rameshwaram temple assisted by great tamil siddar Agathiyar).
Soma Bhanam ,yes he drank it everyday as every yogi did.No wonder, what is soma bhana, anyway?
This is the ultimate yogic technique or Mudra called Kechari Mudra. Once the Kundalini is roused and all the adharas are pervaded, a perfect Yogi reaches stage of drinking in the divine madhu / nectar that flows from the astral sphere of the body, known in Yogic language as nilA mandalam – piRai or Soma – within. At this stage the Yogi reaches the Samadhi stage, locking the breath within the body. And he no longer
needs any external food to live on.
-Rebuking a great yogi like Rama will result in bad Karmas that have to be experienced by the people concerned.
// a perfect Yogi reaches stage of drinking in the divine madhu / nectar that flows from the astral sphere of the body, known in Yogic language as nilA mandalam – piRai or Soma – within //
Dear Anony, that was a beautiful explanation of "soma" which incidentally also is a name of Shiva (soma = sa + uma, the One with Uma)!
Sri Rama was a great Yogi, of course. Valmiki refers to Rama as Jitendriya (one who has mastery over senses), Jitakrodha (one who mastered the anger) and sarva-bhoota-hite-rata (always involved in doing good to all beings). Arent these the essence of Yoga?
"Yoga Vasishta", a wonderful treatise on teh science of Yoga is supposed to be the teachings of Sage Vasishta to Sri Rama.
Thanks for your enlightening comments.
உளரலில் மொத்த உருவமாக உள்ளது இந்த பதிவு என்பது என் கருத்து..
ராமர் பாலம் என்று சொல்லி ஒரு திட்டத்தை தடுக்கும் கூட்டத்துக்கு ராமன் பற்றி தான் சொல்ல முடியும்..
கிறிஸ்து, அல்லா பெயர் சொல்லி தடுக்கப்பட்டால் , அங்கே கிறஸ்து , அல்லா, பற்றி சொல்லப்படும்..
தனி மனித (மு க) துவேஷம் அன்றி வேறேதும் இல்லை இந்த கட்டுரையில்..
Post a Comment