இந்து, கிறிஸ்தவ மோதல்கள் (encounters): ஒரு வரலாற்று அறிமுகம்
மூலம்: சீதாராம் கோயல் [1]
மொழியாக்கம்: ஜடாயு
(1)
பதினேழாம் நூற்றாண்டுத் தொடக்க காலத் தமிழ்நாட்டுப் பண்டிதர்கள் முதல் இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திய அருண் ஷோரி வரையிலான இந்துக்கள் கிறிஸ்தவத்தின் அடிப்படை மதக் கொள்கைகளை (dogma) விவாதத்தால் தகர்ப்பதிலும், மிஷநரி செயல்பாடுகள் பழிக்கத் தக்கவை என்று நிறுவுவதிலும் சளைக்காமல் தங்கள் எழுத்துக்களையும், சக்தியையும் செலவழித்திருக்கின்றனர். ஆனால் கிறிஸ்தவ சமயவாதிகளின் (theologians) ஆணவப் போக்கிலும், கிறிஸ்தவ மிஷநரிகளின் தீவிர மனப்பான்மையிலும் இதனால் ஒரு மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.ஏனென்றால் இந்த அடிப்படை மதக்கொள்கை ஒருபோதும் விவாதத்திற்கான பொருளாக இருந்ததில்லை. பொதுவான தர்க்க விதியின்படி, உண்மை என்று நிரூபிக்கப்படாத ஒரு விஷயத்தை மறுக்க முடியாமலும் போகலாம்; அதை நிரூபிக்கவேண்டிய அவசியமும் இல்லை. 33 CEல் (பொது சகாப்தம் 33ஆம் வருடத்தில்) அவ்வளவாகப் பிரபலமாகாத ஒரு யூதரை, யூதேயா எனும் ஊரில் வைத்து, ரோமானிய கவர்னர் ஒருவர் சிலுவையில் அறையச் செய்தாராம். சிலுவையில் அறையப்பட்ட அந்த யூதரே வரப்போகிற எல்லா மனிதர்களின் பாவங்களையும், எல்லா காலங்களிலும் சுமக்கிறாராம். இதை எப்போதாவது, யாராவது நிரூபித்திருக்கிறார்களா? தங்களின் ஒரே ரட்சகர் அந்த மனிதர் மட்டுமே என ஏற்றுக்கொள்பவர்கள் சந்தோஷம் பொங்கும் நிரந்தர சொர்க்கத்திற்குப் பயணிப்பார்கள் என்றும், மற்றவர்களெல்லாம் நிரந்தர நரகத்தில் தீயில் வெந்துகொண்டிருப்பார்கள் என்றும் யாராவது நிரூபித்திருக்கிறார்களா? அப்படி யாரும் நிரூபிக்காவிட்டாலும், (நம்புபவர்கள் சொர்க்கத்திற்கும், மற்றவர்கள் நரகத்திற்கும் போகக் கடவார்கள் என்கிற) இந்த அறைகூவலும், வாக்குறுதியும், அச்சுறுத்தலும் உண்மையில்லை என்று மறுத்துரைப்பது தர்க்கரீதியாக முடியாததாக உள்ளது.
எவ்வளவு தான் அலங்காரமான சமயவாத வளவளா போதனைகளைப் பரப்பினாலும், பெரும் நிறுவனங்களைக் கட்டமைத்து, அவற்றையே ஆயுதமாகச் செலுத்தி, மற்றவர்களை அச்சுறுத்தி ஆக்கிரமிக்கும் மறைமுக உத்தி என்பதற்கு மேல், இந்த மதக்கொள்கையில் வேறு எதுவும் இல்லை என்பது தான் உண்மை. எனவே, இந்த கிருத்துவ மதக் கொள்கைகளுக்கு அவமதிப்பு என்கிற பொருத்தமான நிராகரிப்பை மட்டும் வழங்கிவிட்டு தங்களுக்கிடையே நிலைபெற்றுவிட்ட கிருத்துவ மிஷநரி கட்டமைப்புக்கள் மீதுதான் இந்துக்கள் கவனம் செலுத்தவேண்டும், இப்போதாவது.
இந்தக் கட்டமைப்புகளை இயக்கும் நிறுவனமயமான கிருத்துவத்தின் ஒரே நோக்கம் இந்து சமுதாயத்தையும், கலாசாரத்தையும் அழித்து, இந்துக்களின் தாய்மண்ணாகிய இந்தியாவைக் கைப்பற்ற வேண்டும் என்பதே. இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக சாதகமான, பாதகமான சூழ்நிலைகள் ஒவ்வொன்றிற்கும் ஏற்றவாறு அந்த நிறுவனம் யுக்திகளை வகுத்துக் கொண்டேயிருக்கிறது. காசு தரும் எஜமானர்களுக்காக தங்கள் திறமைகளை விபசாரம் செய்யும், கபடங்களை வார்த்தை ஜாலங்களால் அலங்காரம் செய்யும் அறிவுஜீவி கிரிமினல்களை கணிசமான அளவில் உருவாக்கி, அது வேலை வாங்குகிறது. (இப்படியிருக்கும்) இந்தியச் சூழலில், இந்த குயுக்திகள் சமய விளக்கங்களாக விளம்பரம் செய்யப்படுவதும், இத்தகைய கிரிமினல்கள் சமய அறிஞர்களாக முன்நிறுத்தப்படுவதும், இந்த சமூக விரோதக் கும்பலின் உண்மையான நோக்கங்களைப் புரிந்து கொள்வதிலிருந்து இந்துக்களின் கவனத்தை சிதறடித்து விடக்கூடாது.
இந்துமதமும், கிறிஸ்தவமும் இங்ஙனம் எதிர்ப்படுவதை, மோதிக் கொள்வதை இரு மதங்களுக்கிடையில் நிகழும் உரையாடலாக எண்ணுவது இந்துக்கள் செய்து கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய தவறு. ஏனெனில் கிறிஸ்தவம் ஒரு “மதமாக” என்றுமே இருந்ததில்லை; வேட்டையாடி அழிக்கும் தன்மை கொண்ட எதேச்சாதிகார சக்திகளில் ஈடு இணையற்றது அது என்று அதன் நெடிய வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அதனால், சிந்தனையாலும் செயல்முறையாலும் ஒன்றை ஒன்று விலக்கக்கூடிய இரண்டு மார்க்கங்களுக்கு இடையேயான போர் என்று தான் இந்த எதிர்ப்படுதலைக் கருத இடமுள்ளது. கீதையின் மொழியில் (அத்தியாயம் 16) சொல்வதென்றால், இது தெய்வத்தன்மைக்கும், அசுரத்தன்மைக்கும் இடையே நிகழும் போர். சம்பிரதாயமான வரலாற்று மொழியில் சொல்வதென்றால், வேத நெறிக்கும் (Vedic), விவிலிய நெறிக்கும் (Biblical) இடையேயான போர்.
இந்த இரு நெறிகளையும், முன் நடத்திச் செல்லும் இவற்றின் மூலங்கள் பற்றிய ஆய்வுக்குள் இப்போது போக வேண்டாம். அது பற்றி வேறொரு இடத்தில் விரிவாக விளக்கியிருக்கிறேன் [2]. அவை எந்த வகையான நடத்தைகள் மற்றும் செயல்முறைகளுக்கு வழிவகுக்கின்றன என்பதை மட்டும் இங்கே சுருக்கமாகப் பார்க்கலாம்.
வேத நெறி, மனிதன் தன்னை அறிதலிலும், உணர்தலிலும் கருத்துச் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. அதாவது அறவழியிலும், ஆன்மிகத்திலும் மேன்மையடைய வேண்டும். இதற்காக தவம், யோகம், தியானம், ஞானம், பக்தி என்று பல வழிமுறைகளை அது வளர்த்தெடுத்திருக்கின்றது. ஒரு சாதகன் தனது தார்மீக, ஆன்மிக மனநிலைக்குப் பொருந்துமாறு (ஆதாரம்), எந்தவொரு வழிமுறையையும் தேர்வு செய்து அதைக் கைக்கொள்ளலாம் (அதிகாரம்). (குணத்தாலும், மனத்தாலும் வேறுபட்டிருந்தாலும்) அனைவருக்கும் ஒரே ஒரு மருந்துச் சீட்டுத்தான் என்பது கிடையாது. (நிறுவனமயமான) ஒரு மத நம்பிக்கையின் கட்டுப்பாட்டிற்குள்ளே (மனிதரை) திணிக்கும் வற்புறுத்தல் மற்றும் ஆசைகாட்டுதல்கள் கிடையாது. மேலும், மற்றவர்களுக்கு எதிராக, தாக்குதலுக்காக அணிதிரள வேண்டும் என்பது நிச்சயம் கிடையாது.
இதற்கு மாறாக, விவிலிய நெறி, நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையற்றவர்களை திருத்தவேண்டும் என்று போதிக்கிறது. “ஒரே சத்திய வழி”க்கு சாட்சியம் கூறிய மாத்திரத்தில், ஒருவர் உயர்ந்த மனித ஜீவனாக ஆகிவிட்டதாக நம்பப் படுகிறார். அவர் மற்றவர்களது “ரட்சிப்பு”க்கு வழிகாட்டத் தகுதிபெற்றவராகவும் ஆகிவிட்டார்! அதன் பிறகு தேவைப்படும் பயிற்சியெல்லாம் - செயற்குழுக்களையும், கட்டமைப்புக்களையும் உருவாக்கி களத்தில் எப்படி இறங்குவது, மற்றவர்களைநிர்ப்பந்தம், மோசடி உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி எப்படியெல்லாம் மதம் மாற்றுவது, வழிக்கு வர மறுப்பவர்களை எப்படி கொல்லவோ, சீரழிக்கவோ அல்லது கறைபடுத்தவோ செய்வது, இதெல்லாம் தான்.
சனாதன தர்மம் எனப்படும் இந்து மதத்தின் பல சமயத் துறைகளை (schools) வேத நெறியானது உலகிற்கு அளித்திருக்கிறது. இவற்றைப் பின்பற்றுபவர்கள் தங்களுக்குள்ளும் சரி, மற்றும் வேறு மார்க்கங்களைப் பின்பற்றுபவர்களிடத்திலும் சரி, அமைதியையும், சமாதானத்தையுமே கடைப் பிடித்து வந்துள்ளனர். ஆனால் விலிலிய நெறியில் இருந்து உதித்த கிறிஸ்தவம், இஸ்லாம், கம்யூனிசம் மற்றும் நாசிசம் போன்ற சமயங்கள் கொலை மற்றும் அழிப்பையே தங்கள் முக்கிய வழிமுறைகளாகக் கொண்டவை. இவைகள் தங்கள் உட்குழுக்களுக்குள்ளும், தங்களுக்கிடையிலும் மட்டுமல்ல, மனிதகுலத்தின் மற்ற மக்களுடனும் வன்முறை மோதல்களையே உருவாக்கியுள்ளன.
(2)
இந்து கிறிஸ்தவ எதிர்ப்படுதல்களின் வரலாற்றை குறிப்பிட்ட ஐந்து காலகட்டங்களாகப் பிரிக்கலாம். இந்த எல்லா காலகட்டங்களிலும், கிறிஸ்தவ மிஷநரிகள் “கிறிஸ்தவக் கடவுள் ஒருவரே உண்மை, ஏசு ஒருவரே ரட்சகர், இந்துக்கள் இதை ஏற்றுக் கொண்டாக வேண்டும் அல்லது ஏற்றுக் கொள்ள வைக்கப் படவேண்டும்” என்ற அடிப்படை மதக் கொள்கையில் அப்படியே தான் நின்று கொண்டிருக்கின்றனர். ஆனால் வழிமுறைகளையும், சொல்லாடல்களையும், மாறும் சூழ்நிலைகளுக்குப் பொருந்துமாறு மாற்றிக் கொண்டேயிருக்கின்றனர். ஆரம்பத்தில் இந்துமதக் காவலர்கள் கிறிஸ்துவ போதனைக்கும், மிஷநரி வழிமுறைகளுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் பல்வேறு காரணங்களினால், பின்வரும் கட்டங்களில் இந்துக்களின் எதிர்ப்புணர்வு தொய்வடைகிறது அல்லது ஒரேயடியாக மறைந்து விடுகிறது. கிறிஸ்தவம் வெற்றியடைந்து விட்டதாக மார்தட்டிக் கொண்டு முன் நகர்கிறது.முதல் காலகட்டம் பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் போர்ச்சுகீசியக் கொள்ளையர் வருகையில் தொடங்குகிறது. குறிப்பாக, இந்தக் கொள்ளையர்களின் குலகுருவான (patron saint) பிரான்சிஸ் சேவியரின் வருகைக்குப் பின்னர் கிறிஸ்தவம் தனது உண்மையான முகத்துடன் தரிசனம் தருகிறது. அதன் மொழி அதன் ஐரோப்பியத் தாயகத்தில் இருந்தது போன்றே கரடுமுரடாகவும், அதன் வழிமுறைகள் அதே குரூரத்துடனும் இருக்கின்றன. திக்கற்ற இந்துக்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆட்படுகின்றனர். அவர்கள் செய்த புண்ணியம், இந்தக் காலகட்டம் நெடுநாள் நீடிக்கவில்லை. கோவா மற்றும் சில சிறிய மாகாணங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் போர்ச்சுகீசியர்கள் தோல்விடையடைகின்றனர். விதிவிலக்காக பாண்டிச்சேரி மற்றும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட வேறுசில இடங்களில் பிரெஞ்சுக்காரர்களின் குறுகிய காலச் செயல்பாடுகள் தவிர்த்து, பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஐரோப்பிய அரசுகளுக்கு கிறிஸ்தவப் பரப்புதலுக்கு அவ்வளவாக நேரமிருக்கவில்லை.
இரண்டாவது காலகட்டம், 1813ல் மராட்டியர்களின் இறுதித் தோல்விக்குப் பின் பிரிட்டிஷ் அரசு காலூன்றுவதில் தொடங்குகிறது. பிரிட்டிஷார் மிஷநரி செயல்பாடுகளுக்கு மறைமுக ஊக்கம் தந்தாலும், அவர்களது நேரடி வழிமுறைகளை அனுமதிக்கவில்லை. ஆயினும் மிஷனரிகளின் மொழி அதே வக்கிரத்துடன் தான் இருக்கிறது. சிறிது காலம், குறிப்பாக வங்கத்தில் கிறிஸ்தவம் கொஞ்சம் தன்னம்பிக்கையுடன் வாழ்கிறது. மகரிஷி தயானந்தர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் அறைகூவல் மற்றும் இந்து சீர்திருத்த இயக்கங்களின் எழுச்சியுடன் இந்தக் காலகட்டம் முடிவடைகிறது. கிறிஸ்தவம் தீவிர பின்னடைவை சந்திக்கிறது.
மூன்றாவது காலகட்டம் மகாத்மா காந்தியின் பிரவேசத்தைத் தொடர்ந்து, அவரது “சர்வமத சமரசம்” என்ற கோஷத்துடன் தொடங்குகிறது. கிறிஸ்தவ மிஷநரிகள் (தாக்குதல் நிலைப்பாட்டிலிருந்து) தற்காப்பு நிலைப்பாட்டுக்குத் தள்ளப் பட்டு, தங்கள் மொழியை மாற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். வசைச்சொல் வாயர்களாக இருந்த விஷமிகள், நாவில் சர்க்கரை தடவிக் கொண்ட நாகங்களாக மாறுகின்றனர். அழுக்குக் கந்தல் கட்டிய பிச்சைக்காரன் தனது விலையுயர்ந்த ஆடையணிகளை செல்வந்தர்களுக்கு தானம் செய்வதாக வாக்களித்தால் எப்படியிருக்கும்? அதே பாணியில், இப்போது அவர்கள் இந்துக்களிடம் “தங்கள் ஆன்மீகச் செல்வங்களைப் பகிர்ந்து கொள்ளப் போவதாக” (share their spiritual riches) புறப்படுகின்றனர். 1938ல் தாம்பரம் மாநாட்டில், அகில உலக மிஷநரி கவுன்சில் (International Missionary Council) கிறிஸ்தவ இறையியலை இந்திய சூழலுக்காக மாற்றியமைப்பதாக முடிவெடுப்பதுடன் இந்தக் காலகட்டம் முடிவடைந்தது.
சுதந்திரத்தின் வருகையுடன் தொடங்கிய நான்காவது காலகட்டம், கிறிஸ்தவத்திற்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. இந்துக்களை மதமாற்றுவதற்கான கிறிஸ்தவ உரிமை அரசியல் சட்டத்தாலேயே உறுதி செய்யப் படுவதாக சொல்லப் பட்டது. 17 ஆண்டுகளாக தேசிய அரசியலை வியாபித்திருந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒவ்வொரு இந்து விரோத கருத்தியலையும், எல்லா இந்து விரோத இயக்கங்களையும் மதச்சார்பின்மை என்கிற பொய்மைத் திரையிட்டு ஊக்குவித்து வளர்த்தார். அதற்குப் பின்வந்த அரசுகள் “இந்து மதவாதம்” ஒரு பெரும் அச்சுறுத்தல் என்று பயங்காட்டுவதைத் தொடர்ந்து செய்துவந்தன. தங்களது வழிமுறைகளையும், செயல்பாடுகளையும் பற்றி மெல்லிய ஆட்சேபம் தெரிவிப்பவர்களைக் கூட இந்து மதவாதிகள், வெறியர்கள், “இந்து நாசிகள்” என்று கூட கிறிஸ்தவ மிஷநரிகள் வசைபாடக் கூடிய நிலை உருவாயிற்று. எல்லாவிதமான “மதச்சார்பற்றவர்களும்” இந்த கோஷ்டி கானத்தில் இணைய முன்வந்தனர்.
கிறிஸ்தவத்தை பூரணத்துவமாக முன்வைத்தல் (Fulfilment), கிறிஸ்தவத்தை இந்திய மயமாக்குதல் (Indigenisation), பரலோகத்திற்குப் பதிலாக “மோட்சம்” (Liberation), பிற மதங்களுடன் உரையாட முன்வருதல் (Dialogue) இப்படியாகப் பட்ட சமயக் கோட்பாட்டு ஜல்லிகள் “வளர்த்தெடுக்கப் பட்டு” செயலில் இறக்கப் பட்டன. மிஷநரி கட்டமைப்பு பல்கிப் பெருகி எங்கும் நிறைந்ததாயிற்று. இந்தியாவின் சரித்திரம் முழுவதிலும், கிறிஸ்துவத்திற்கு இது போன்றதொரு நல்லகாலம் எப்போதும் வாய்த்ததில்லை. கிறிஸ்தவம் இந்தியாவின் ஒரு தொன்மையான சமயம் போன்று அங்கீகரிக்கப் பட்டு, தனது கூட்டத்தைப் பெருக்கவும், செயல்பாடுகளை அதிகரிக்கவும் முழு உரிமை பெற்றதாக ஆகிவிட்டிருந்தது. இந்தப் பேரிசைக் கூச்சலுக்கு நடுவே ஒலித்தவை ஒருசில சுருதிபேதங்கள் மட்டுமே : 1953ல் லண்டனிலிருந்து வெளிவந்த கே.எம்.பணிக்கரின் “ஆசியாவும், மேற்கத்திய ஆக்கிரமிப்பும்” என்கிற அரிய நூல், 1956ல் மத்தியப் பிரதேச அரசால் வெளிக் கொணரப்பட்ட நியோகி கமிட்டி அறிக்கை, 1978ல் ஓம் பிரகாஷ் தியாகியால் கொண்டுவரப்பட்ட “மத சுதந்திரம்” பற்றிய மக்களவைத் தீர்மானம்.
இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஐந்தாவது காலகட்டம் நாடு தழுவிய இந்து எழுச்சியுடன் தொடங்கியது எனலாம். தமிழ்நாட்டில் மீனாட்சிபுரம் என்ற ஊரில் ஹரிஜனங்கள் இஸ்லாமுக்கு ஒட்டுமொத்தமாக மதமாற்றப் பட்டது, இஸ்லாமிய மதவெறி மற்றும் வன்முறையின் மீட்சி, பஞ்சாபிலும், காஷ்மீரிலும் பாகிஸ்தானின் ஆதரவுடன் வளர்ந்த தீவிரவாதம் இவையே இந்த எழுச்சிக்கு முக்கிய காரணங்கள். பல வருடங்களாக முக்கியமான இந்து சமுதாய பிரசினைகளை ஒருவித உறைந்த மனப்பான்மையுடன் பார்த்துக் கொண்டிருந்த சங்க பரிவாரம் 1984 மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் படுதோல்வியைக் கண்டு திடுக்கிட்டு, தன் இந்து அடையாளத்தை புதுப்பித்துக் கொள்ள முடிவு செய்தது. அதன் விளைவாகத் தோன்றியது ராமஜன்மபூமி இயக்கம். இஸ்லாமிய ஆதிக்க, ஆக்கிரமிப்பு சக்திகளின் பரவலைத் தடுப்பது தான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. கிறிஸ்தவ மிஷன்கள் குறித்து ஒன்றுமே கூறப்படவில்லை. இருப்பினும், இந்த இயக்கத்தைக் கண்டு அதிகமாகக் கவலைப் படவும், கூப்பாடு போடவும் தொடங்கியவை கிறிஸ்தவ மிஷநரிகள் தான்! சக்திவாய்ந்த கிறிஸ்தவ ஊடகங்கள் மேற்குலகம் முழுவதும் இந்துக்கள் சிறுபான்மையினரை இந்தியாவிலிருந்து ஒழித்துக் கட்டி நாசி அரசை அமைக்கப் பார்க்கிறார்கள் என்று கத்திக் கூச்சலிட்டு, பெரும்புயலைக் கிளப்பின. அந்தப் புயலின் தாக்கம் இன்னும் முழுமையாக அடங்கிய பாடில்லை. எப்போது அடங்கும்? யாருக்கும் தெரியாது.
சுட்டிகள்:
[1] 1997ல் எழுதப் பட்ட The Sunshine of Secularism என்ற நீண்ட கட்டுரையின் முதல் பகுதியின் மொழியாக்கம் இது. Pseudo-secularism, Christian Missions and Hindu Resistance என்ற நூலிலிருந்து.
[2] Sita Ram Goel, Defence of Hindu Society, Third revised edition, Voice of India, New Delhi, 1994.
ஆசிரியர் சீதாராம் கோயல் பற்றிய அறிமுகம் இங்கே.
10 comments:
ஐயா,
அற்புதமான ஒரு பணியை ஆரம்பித்திருக்கிறீர்கள். திரு. கோயல் ஐயா அவர்களின் கருத்துச்செறிவும் தெளிவாக வரலாற்றுப்பார்வையும் அழகாக இருக்கின்றன. அவற்றை தமிழில் இயல்பு மாறாமல் இயல்பாக மொழிபெயர்த்தது சுவையாக இருக்கிறது.
மேலும், தொடருங்கள். படிக்க ஆவலாக இருக்கிறோம்.
நன்றி
ஜயராமன்
ஜயராமன், உங்கள் உற்சாக வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.
// மற்றவர்களை அச்சுறுத்தி ஆக்கிரமிக்கும் மறைமுக உத்தி என்பதற்கு மேல், இந்த மதக்கொள்கையில் வேறு எதுவும் இல்லை என்பது தான் உண்மை //
நச் வரிகள்.
அருமையான கட்டுரை. மிகத் தெளிவாக கிறிஸ்தவம் என்கிற ஆதிக்க சக்தியைத் தோலுரிக்கிறது. மிக்க நன்றி ஜடாயு அவர்களே.
முருகவேல்,
சேலம்
கிறிஸ்தவம் பற்றிய எந்த பசப்புதலும் இல்லாத இவ்வளவு தீர்க்கமான பார்வையா? சீதாராம் கோயல் ஒரு அசாதாரண அறிவுஜீவி என்பதற்கு இதுவே சான்று.
ஜடாயு, உங்கள் மொழிபெயர்ப்பும் மிக நன்றாக இருக்கிறது. இத்திறக்கில் மேலும் பல கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன்.
ஜடாயு,
நல்ல பணி. இந்துகளின் கண்களை திறக்கும் என நினைக்கிறேன்
டேய் ஜடாயு இந்து கிறித்தவ வன்முறையையெல்லாம்வுடு, இந்துவுக்கும் இந்துவுக்குமே இந்த மானங்கெட்ட மதம் சண்டை மூட்டுதே அதப்பத்தி ஏதாவது எழுது. வேதம் புராணம் என்று ஏதாவது பொய்களைச்சொல்லிக்கொண்டு இந்த சாதிப் பிரிவினையினைப் பாதுகாப்பது, சாதீய வன்முறைக்கு என்ன காரணம் அப்படின்னு கேட்டா எவனாவது இளிச்சவாயனைக்காட்டி தப்பித்துக்கொண்டு நாங்கள் புணிதமானவாள் என்று சொல்லிக்கொள்வது. தூ இதுவும் ஒரு பொழப்பாடா நாயே. இதவுட்டுட்டு மத்த மதத்துக்காரனப் போயி ஏண்டா சொரண்டிப்பாக்குற?
போயி தேவன், கவுண்டன் இன்னும் மற்ற சாதிவெறி இந்துக்காலிகளின் கால்லபோயி உழுடா.
அன்புள்ள ஜடாயு..
ரொம்ப நாளைக்கப்புறம் உங்க பதிவை பார்க்கிறேன்...
கிறிதவ மதத்தில் 100 ஓட்டைகள் என்றால் இந்து மதத்திலும் 100 ஓட்டைகள் இருக்கின்றனவே ?
மூட நம்பிக்கைகளின் மொத்த உருவகமாக மதங்கள் திகழ்கின்றனவே ?
பகுத்தறிவுக்கு ஒவ்வாத மத நம்பிக்கைகளை நாம் ஏன் ஒட்டுமொத்தமாக எதிர்க்கக்கூடாது ??
டேய் ஜடாயு இந்து கிறித்தவ வன்முறையையெல்லாம்வுடு, இந்துவுக்கும் இந்துவுக்குமே இந்த மானங்கெட்ட மதம் சண்டை மூட்டுதே அதப்பத்தி ஏதாவது எழுது. வேதம் புராணம் என்று ஏதாவது பொய்களைச்சொல்லிக்கொண்டு இந்த சாதிப் பிரிவினையினைப் பாதுகாப்பது, சாதீய வன்முறைக்கு என்ன காரணம் அப்படின்னு கேட்டா எவனாவது இளிச்சவாயனைக்காட்டி தப்பித்துக்கொண்டு நாங்கள் புணிதமானவாள் என்று சொல்லிக்கொள்வது. தூ இதுவும் ஒரு பொழப்பாடா நாயே. இதவுட்டுட்டு மத்த மதத்துக்காரனப் போயி ஏண்டா சொரண்டிப்பாக்குற?
போயி தேவன், கவுண்டன் இன்னும் மற்ற சாதிவெறி இந்துக்காலிகளின் கால்லபோயி உழுடா.
first u r a hindu please love any person.dont blame others.becuase its waste of time.god gives ur life take it easy and possible to invent something in the world.Dont blame religion like anything.If u r a true hindu love every one.
ம்ம்ம்ம்ம் ... கட்டுரை நன்றாக உள்ளது.
என் மொழி ,
" The god is so big , so that it can't fit into one Religion ".
Post a Comment