Showing posts with label விமர்சகர். Show all posts
Showing posts with label விமர்சகர். Show all posts

Tuesday, May 03, 2011

வெ.சா விமர்சனங்களும் விவாதங்களும் - வெளியீட்டு விழா பதிவுகள்

தமிழ் கலை, இலக்கிய விமர்சன பிதாமகர் வெங்கட் சாமிநாதன் அவர்களது அரை நூற்றாண்டு எழுத்து இயக்கத்தை சிறப்பிக்கும் முகமாக 30-ஏப்ரல்-2011 அன்று சென்னையில் ஒரு விழா நடந்தது. வெளியீட்டு விழா அழைப்பிதழ் இங்கே.

இவ்விழாவில் வெ.சா: விமர்சனங்களும் விவாதங்களும் என்ற புத்தகமும் வெளியிடப் பட்டது. இப்புத்தகத்தில் நான் எழுதியிருக்கும் ”வெ சா என்னும் சத்திய தரிசி” என்ற கட்டுரையை இங்கே படிக்கலாம்.
விழாவின் போது நான் எடுத்த புகைப்படங்கள் இங்கே.
வீடியோ பதிவுகள்:
ஜெயமோகன் உரை:

அரவிந்தன் நீலகண்டன் உரை:

வெங்கட் சாமிநாதன் உரை:

இது உரையின் முதல் பகுதி. பாதியில் காமிரா பேட்டரி தீர்ந்து விட்டதால் மீதம் உரையை செல்போனில் ஆடியோ பதிவு மட்டுமே செய்ய முடிந்தது. அந்தப் பதிவு:


வெ.சா: விமர்சனங்களும் விவாதங்களும் - அரை நூற்றாண்டு எழுத்து இயக்கம்
(கலை, இலக்கிய ஆளுமைகள், ஆர்வலர்கள் எழுதிய 43 கட்டுரைகள்)
தொகுப்பு: பா.அகிலன், திலீப்குமார், சத்தியமூர்த்தி
வெளியிடுவோர்:
சந்தியா பதிப்பகம்
பு. எண் 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை - 600 083.
தொலைபேசி: 044-24896979
http://sandhyapublications.com/
பக்கங்கள்: 504
விலை: ரூ. 300