Saturday, February 10, 2007

சம்ஸ்கிருதம் பற்றி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உரை

மந்திராலயத்தின் அமைதி தவழும் சூழலில் ஸ்ரீகுரு சார்வபௌம சம்ஸ்கிருத வித்யாபீடத்தின் மாணவர்களுடன் உரையாடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். உங்கள் 7, 8 அல்லது 12 வருட பயிற்சியை முடித்த பின்னர் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள்? ஒரு சிறந்த ஆசிரியராக. நீங்கள் ஆசிரியப் பணிக்கு வேண்டிய தகுதிகளைத் தேடி அடைந்து ராகவேந்திர சுவாமியின் மரபினை முன்னெடுத்துச் செல்லவேண்டும். நீங்கள் எங்கிருந்தாலும், என்ன காரியங்கள் செய்தாலும், பக்தர்கள் உங்களை குரு என்பதாகப் பாவிப்பார்கள். அத்தகைய குருவுக்கான அடிப்படை இந்தக் கல்வி நிலையத்திலிருந்து வருகிறது. நீங்கள் வரும் வருடங்களில் ஆற்றப் போகும் மேன்மையான பணிகளுக்காக உங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களைப் பாராட்டுகிறேன். உங்களுடன் இருக்கையில், ராகவேந்திர சுவாமிகளின் மூல மந்திரத்தை ஓத விரும்புகிறேன்.

"பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே"


சத்தியத்தையும், நன்னடத்தையாகிய தர்மத்தையும் கடைப்பிடித்தவரும், உபதேசித்தவரும் ஆன தெய்வீக ஆத்மாவாகிய குரு ராகவேந்திரசுவாமியைப் போற்றுகிறோம். அவரது "கல்ப விருட்சம்" (அளவற்ற செல்வம் தரும் கற்பக மரம்) என்னும் திருப்பெயரை ஓதுகிறோம்; ஆன்ம ஞானத்தை வாரி வழங்கும் காமதேனுவாகிய அவர் முன் வீழ்ந்து வணங்குகிறோம்.

சம்ஸ்கிருத அறிஞர்களுடன் என் அனுபவம்:

தொடக்கப் பள்ளியிலும், செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் இரண்டு உயர்ந்த ஆசிரியர்களை நான் கண்டிருக்கிறேன். எனது தொடக்கப் பள்ளி அறிவியல் ஆசிரியர் சிவசுப்பிரமணிய ஐயர் ஒரு சம்ஸ்கிருத அறிஞர். ஒவ்வொரு நாளும் அவர் மூன்றுமுறை சந்தியாவந்தனம் செய்வார், பாகவதம் படிப்பார். எனக்கு காம்ப்ளெக்ஸ் எண்கள் கோட்பாடுகளைக் கற்றுத் தந்த பேராசிரியர் தோதாத்திரி ஐயங்காரும் ஒரு சம்ஸ்கிருத அறிஞரே.
இந்த இரண்டு உயர்ந்த ஆசிரியர்களுக்கும் அடிப்படை கணிதமும், அறிவியலும். ஆனால் அவர்களது வாழ்க்கையை செதுக்கியது சம்ஸ்கிருத புலமை. இயற்கை வேளாண்மை உட்பட பல விஷயங்கள் பற்றி சம்ஸ்கிருதத்தில் தீவிர ஆராய்ச்சி செய்து வரும், கர்நாடகத்தில் உள்ள மேல்கோடே சம்ஸ்கிருத அகாடமியைச் சேர்ந்த டாக்டர் லட்சுமி தாத்தாச்சாரையும் சமீபத்தில் சந்தித்தேன். இப்படி பல செல்வங்கள் அடங்கியது சம்ஸ்கிருதம். இந்த சம்ஸ்கிருத வித்யாபீடம் இந்த பெருமைமிக்க மொழியைப் பேணிப் பாதுகாக்கிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சம்ஸ்கிருதத்தின் பெருமை:

நான் சம்ஸ்கிருத நிபுணன் இல்லை. ஆனால் என் நண்பர்களில் பலர் சம்ஸ்கிருதத்தில் புலமை உள்ளவர்கள். நமது பண்டைய சம்ஸ்கிருத நூல்களில் உள்ள அறிவுச் செல்வங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில் பல நாடுகள் முனைந்திருக்கின்றன. வேதங்களைப் பற்றிய ஆராய்ச்சி அவசியம். குறிப்பாக மருத்துவம், விமான அறிவியல், அடிப்படைப் பொருட்கள் பற்றிய அறிவியல் மற்றும் தொடர்புள்ள துறைகள் பற்றி அதர்வ வேதத்தில் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. சம்ஸ்கிருதம் சரளமாகப் பயன்படுத்தப் படும் இன்னொரு துறை குறியீட்டு இயல் (cryptology).

சம்ஸ்கிருத வித்யாபீடம் செய்யவேண்டியவை:

தனது கல்விப் பணிகளோடு கூட சம்ஸ்கிருத வித்யாபீடம் நாட்டின் பல பகுதிகளில் சிதறியிருக்கும் சம்ஸ்கிருத இலக்கியங்களைக் கண்டுபிடித்து அவற்றை ஆவணப்படுத்தல், பாதுகாத்தல் ஆகிய பணிகளிலும் ஈடுபடவேண்டும். இதற்காக, இந்த நூல்களை ஒளி,ஒலி ஊடகங்களில் பதிவு செய்யும் தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒரு டிஜிட்டல் நூலகம் போன்று உருவாக்கினால், பல தலைமுறைகளுக்கும், நீண்ட காலங்களுக்கும் இந்தச் செல்வத்தைப் பாதுகாக்கலாம். இதற்காக இந்த நிறுவனம், டிஜிட்டல் நூலகப் பரிசோதன்னைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர் பாலகிருஷ்ணனுடன் தொடர்பு கொள்ளலாம்.

வால்மீகி, வியாசர், காளிதாசர், பாணினி போன்ற பேரறிஞர்கள், கவிஞர்கள், இதிகாசங்களை உருவாக்கியவர்கள் இவர்களது வாழ்க்கை வரலாறுகளை சம்ஸ்கிருத வித்யாபீடத்தில் நீங்கள் ஆழ்ந்து பயிலவேண்டும். இளைய அறிஞர்களுக்காக இந்திய அரசு வழங்கும் மஹரிஷி பாதராயண் சம்மான் மற்றும் சம்ஸ்கிருதத்தில் மதிப்புச் சான்றிதழ் பெற்ற சில அறிஞர்களை வித்யாபீடம் அழைத்து அவர்கள் மாணவர்களோடு தங்கிக் கலந்துரையாடுமாறு செய்யவேண்டும். இது மாணவர்கள் சம்ஸ்கிருதத்திலும், வேதத்திலும் தங்கள் புல்மையை வளர்த்துக் கொள்ளத் துணைபுரியும்.

ஞானம் பெறுதலும், நிலை நிறுத்துதலும்:

இப்போது, வேதங்களின் முக்கியத்துவத்தையும், வேதங்கள் எவ்வாறு நம் மனம், நினைவுகள், புத்தி இவற்றுக்கு ஊட்டமளிக்கின்றது என்பதையும் விளக்கும் ஒரு ஆடியோ சி.டி.யை ஒலிக்கச் செய்ய விரும்புகிறேன். சென்னை ஓஜஸ் அறக்கட்டளை நிறுவனர் தத்வமஸி தீட்சித் இசைத்தது இது. முதலில் இந்த மந்திரங்கள்:

மந்திரம் (அ): ஓ சூரியதேவனே! எனது நேர்முகமாய் உணரும் திறனை வளர்ப்பாய். வேதக் கல்வியை சந்ததியினருக்காக நிலைநிறுத்தத் துணை புரிவாய்!

மந்திரம் (ஆ): மேதா தேவியையும் (நிலை நிறுத்தும் சக்தி), மனீஷா தேவியையும் (உள்வாங்கும் சக்தி) எனது மனத்தினுள் வீற்றிருக்குமாறு அழைக்கிறேன். நிகழ்பவை பற்றிய ஞானத்தை முழுமையாய் உணரவும், கடந்தகாலம், மற்றும் எதிர்காலத்தின் ஞானத்தை விரித்துரைக்கவும் அவர்கள் அருள் புரியட்டும்.

மேதா மற்றும் மனீஷா ஆகிய சக்திகளிடம் வேண்டுதல் இது. அவைகள் வேண்டுபவனிடம் ஒன்றுகூடி வந்து, நிகழ்காலம் பற்றிய ஞானத்தை கடந்தகாலம், எதிர்காலம் இவற்றோடு தொடர்புபடுத்தி அறியத் துணைபுரிய வேண்டும். நினைவில் நிறுத்திக் கொள்ளும் சக்தி நடந்ததையும், நடப்பதையும் புரிந்து கொள்ளச் செய்கிறது, உள்வாங்கும் சக்தி இந்த அனுபங்களிலிருந்து எதிர்காலத்திற்கான பாடங்களைக் கற்கத் தூண்டுகிறது,

சம்ஸ்கிருதத்தைப் பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும் வெற்றியடைய குரு சார்வபௌம சம்ஸ்கிருத வித்யாபீடத்தின் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.

மூலம்: 1-2-2007 அன்று மாண்புமிகு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் மந்த்ராலயத்தில் ஆற்றிய உரை
http://presidentofindia.nic.in/scripts/eventslatest1.jsp?id=1431

43 comments:

Anonymous said...

Is he Abdul Kalam Ayyar or what?

Madhu Ramanujam said...

//Is he Abdul Kalam Ayyar or what? //

இதுக்குப் பேர்தான் அரைவேக்காட்டுத் தனம்ங்கிறது. நல்ல ஒரு விஷய்த்தை சொல்ல மதம் தேவையில்லை. சமஸ்கிருதத்தில் நல்ல விஷயம் இருந்தால் அந்த நல்ல விஷயத்தினை மட்டும் எடுத்துக்கணும். அதை விட்டுட்டு ஐயரா சுண்டைக்காயானு ஆராய்ச்சி பண்ணக் கூடாது. இதைத் தான் வள்ளுவர்

எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

என்று சொன்னார். அதனால ஐயரை ஓரம் கட்டிட்டு அர்த்தத்துல மட்டும் கவனம் செலுத்துங்க.

ஜடாயு said...

மது, கருத்துக்கு நன்றி.

சம்ஸ்கிருதம் பாரத கலாசாரத் திறவுகோல். எல்லா இந்திய மொழிகளின் அறிவுக் கருவூலங்களுக்கும் ஆதாரமான மொழி அது. ஒரு குறிப்பிட்ட சாதி, சமயத்தின் மொழி அல்ல.

இத்தகைய தவறான கருத்தைப் பரப்பி திராவிட இயக்கங்கள் சம்ஸ்கிருதம் மீதான தேவையில்லாத வெறுப்பு விஷத்தைத் தமிழகத்தில் விதைத்து விட்டன.

கலாம் உரை கேட்டாவது காழ்ப்புணர்ச்சி அகலட்டும்.

Madhu Ramanujam said...

//இத்தகைய தவறான கருத்தைப் பரப்பி திராவிட இயக்கங்கள் சம்ஸ்கிருதம் மீதான தேவையில்லாத வெறுப்பு விஷத்தைத் தமிழகத்தில் விதைத்து விட்டன.//

தவறான கருத்தானது அறியாமையால் பரப்பப் பட்டிருந்தால் மன்னிக்கலாம். வெறுமே மக்கள் மனதில் விரோதம் எனும் தீயினை வளர்த்து அதில் குளிர் காய்வதற்காகவே இது செய்யப் பட்டிருப்பது தான் வேதனை. நீங்கள் சொல்வது போல் சமஸ்கிருதம் பாரத நாட்டுக்கு மட்டுமல்ல உலகத்தின் கலாச்சாரத்திற்கே ஒரு திறவுகோல் என்றால் அது மிகையாகாது. குறைந்த பட்சம் அதை வளர்க்காவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அம்மொழியானது அழியாது பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு.

Thamizhan said...

திராவிட இயக்கங்கள்,வெறுப்பு,விஷம் என்றெல்லாம் பொரிந்து தள்ளியுள்ளதால் இந்தப் பின்னூடல்.
சரித்திரத்தைத் திருப்பித் தலைகீழாக எழுதாதீர்கள்.
பல தமிழர்கள் வேதம் படிக்கக்கூடாது என்று இருந்தாலுங்கூட சமசுகிருதம் படித்தார்கள்.தமிழ் நாட்டிலே இரண்டு பேருக்கு அவர்களுடைய ஆசிரியர் பாரதி என்று பட்டங்கொடுத்து மகிழ்ந்தார்.ஒருவர் சுப்பிரமணிய பாரதி.மற்றொருவர் நாவலர் சோமசுந்தர பாரதி.வடமொழி நன்கு அறிந்தவர்.இன்னும் பல தமிழறிஞர்கள் பன்மொழிப்புலவர்களாக வடமொழி அறிந்திருந்தனர்.ஆனால் சமசுகிருதத்திமிர்தான் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது.
தமிழில் என்ன இருக்கிறது.எல்லாம் சமசுகிருதத்திலிருந்து வந்ததுதான்.தமிழில் ஐந்தெழுத்தைத் தவிர மீதியெல்லாம் சமசுகிருதத்திலிருந்து வந்ததுதான் என்ற பெரிய சமசுகிருத அறிஞர்க்ளின் வார்த்தைகள்தான் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தது.
தமிழே இல்லாத அளவுக்கு வடமொழி தமிழை அழித்துவிடும் அளவுக்கு இடங்கொடுத்து விட்டோமே என்று உணர்ந்த அறிஞர்கள் தேவநேயப்பாவாணர்.மறைமலை{வேதாச
லம்}அடிகள்,பரிதிமாற்கலைஞர்(சூரியநார
யண சாஷ்திரி என்ற பார்ப்பனர்) போன்றோர் கால்டுவெல் அடிகளாரின் ஒப்பிலக்கணம் முதல் தமிழ் வேர்ச்சொற்கள் எப்படி சமசுகிருதத்திற்குப் போன் தமிழ்சொற்களே என்று எழுதினர்.
விவாஹசுபமுஹூர்த்தம் வாழ்க்கைத்துணைநல ஒப்ப்ந்தம்,திருமண அழைப்பிதழ் ஆயிற்று.
காஞ்சி மஹாப்பெரியவாள் தான் பூசையிலிருக்கும் போது நீச பாசையில் பேச மாட்டேன் என்றதும்.கடலூர் வள்ளலாரிடம் சமசுகிருதம்தான் உலகமொழிக்கெல்லாம் தாய்பாசை என்று சொல்ல சமசுகிருதம் நன்கறிந்த அவர் அப்படியென்றால் தமிழ்தான் தந்தை மொழி என்று மறுமொழி அளித்ததும் திராவிட இயக்கங்களின் விசத்தினாலா?
தமிழர்கள் அதிலும் சமசுகிருதம் அறிந்தவர்கள் வெறுப்படைந்தது யாரால்?வேதாரண்யம்,போஜனம்,ஜலம்
என்று ஊர் பேர் பொருள் என்று எதையாவது தமிழில் விட்டு வைத்தார்களா?வேண்டுமென்றே செய்த அயோக்கியத்தனத்தின் மீது என்ன பற்று்ம் காதலுமா வரும்?
மற்ற மொழிகளும் வளர வேண்டும் என்று எண்ணியிருந்தால் சமசுகிருதம் கூடவே வள்ர்ந்திருக்கும்.தமிழை அழித்து வளரவேண்டும் என்ற வெறியர்களால்தான் 100 கோடி கொட்டியும் வீணாகிறது.
செய்வதைய்ம் செய்துவிட்டுப் பழியை வேறுபோடுகிறீர்களே அடப்பாவிகளா நீங்கள் உருப்படுவீர்களா என்றுதானே சொல்லத் தூண்டும்.

ஜடாயு said...

ஐயா தமிழன்,

// தமிழில் என்ன இருக்கிறது.எல்லாம் சமசுகிருதத்திலிருந்து வந்ததுதான்.தமிழில் ஐந்தெழுத்தைத் தவிர மீதியெல்லாம் சமசுகிருதத்திலிருந்து வந்ததுதான் என்ற பெரிய சமசுகிருத அறிஞர்க்ளின் வார்த்தைகள்தான் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தது. //

சரியான காமெடி! இப்படி எந்த சம்ஸ்கிருத அறிஞர் சொன்னார் என்று ஆதாரம் உள்ளதா? ஒரு பாதுகாப்பற்ற மிசனரி போதனையில் மயங்கி விட்ட உனர்வு தான் தனித்தமிழ் இயக்கம் என்ற கொடுமையான தமிழ் நடையைக் கண்டுபிடித்தது. நல்லவேளை அந்த நடை தானாகவே செத்துவிட்டது, அதை முயூசியத்திலிருந்து எடுத்துவந்து சில ஆட்கள் (உதாரணமாக இராம.கி என்பவர்) இணையத்திலும் எழுதுவதைப் பார்த்தால் பரிதாபம் தான் ஏற்படுகிறது.

// காஞ்சி மஹாப்பெரியவாள் தான் பூசையிலிருக்கும் போது நீச பாசையில் பேச மாட்டேன் என்றதும்.//

ஆனால் "தெய்வத்தின் குரல்" என்ற பெயரில் உள்ள புத்தகத்தில் முழுக்கத் தமிழில் தானே பேசியிருக்கிறார் - பிராமணத் தமிழும் பல சாதிப் பேச்சு வழக்குப் போல ஒரு தமிழ் வழக்கு என்பதாகவே பார்க்க வேண்டும்.

// கடலூர் வள்ளலாரிடம் //
வடலூர்? கடலூரில் ஷாம்பு தான் உண்டு. வள்ளலார் இல்லை :))

// சமசுகிருதம்தான் உலகமொழிக்கெல்லாம் தாய்பாசை என்று சொல்ல சமசுகிருதம் நன்கறிந்த அவர் அப்படியென்றால் தமிழ்தான் தந்தை மொழி என்று மறுமொழி அளித்ததும் திராவிட இயக்கங்களின் விசத்தினாலா?//

இது இன்னொரு காமெடி. முதலில் இந்த இரு பெரியவர்களும் சமகாலத்தவர்களே அல்ல. பின்னர் எப்படி அவர்கள் பேசியிருக்க முடியும்?

மேலும், வடலூர் வள்ளப் பெருமான் சம்ஸ்கிருதத்திலும் பெரும்புலமை வாய்ந்தவர், அந்த மொழிப் பிரயோகங்களைத் தன் பாடல்களில்ல் பெருதும் விரும்பியே பயன்படுத்தியுள்ளார். அவரது "திருவடிப் புகழ்ச்சி" என்ற நூலைப் படித்துப் பாரும். முதல் 10-15 பாடல்கள் *முழு* சம்ஸ்கிருதத்தில் உள்ளன. செந்தமிழ் போல செஞ்சம்ஸ்கிருதம்!

முதலில் ஒரு விஷயத்தை ஒழுங்காகத் தெரிந்து கொண்டு பேச வந்தால் நல்லது.

ஆமாம் அது என்ன "சமசுகிருதம்"? "ஸ்" பேரில் உமக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? படிப்பதற்கே நாராசமாக இருக்கிறது. இந்த ரேஞ்சில் போனால், அறிவியல், வர்த்தகம் உட்பட பல துறைகளிலும் புழங்கும் வார்த்தைகளைக் கண்றாவியாக எழுத வேண்யிருக்கும் (சூன், சூலை, ஆகசுடு).

இந்தப் போலித் தமிழ் கோஷத்திலிருந்து முதலில் வெளியே வாரும். உம் போன்ற ஆட்கள் தான் தமிழுக்கு உண்மையான எதிரிகள்.

Hari said...

Jataayu,
once again a good post from you. Really informative.
Leave those half-baked fellows. They will throw Acid on others in net, but when people like us try to tell the truth, they will tell that we float saliva in net. Those people won;t allow the tamil people to live in good communal harmony. They always idolise a particular sect of people as the "default culprit" & also the others in the list.
Do continue ur work. Let these guys be kept aside.

Hari V

ஜடாயு said...

// தமிழர்கள் அதிலும் சமசுகிருதம் அறிந்தவர்கள் வெறுப்படைந்தது யாரால்? //

இது இன்னொரு ஜல்லி. உண்மையில் ஒழுங்காக சம்ஸ்கிருதம் படித்த எந்தத் தமிழ் அறிஞரும் அம்மொழியை வெறுத்ததில்லை, நேசிக்கவே செய்தனர். அருணகிரி நாதர், தாயுமானவர் முதல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, மகாகவி பாரதி வரை. கவியரசு கண்ணதாசனும் சம்ஸ்கிருதம் கற்றார், "அழகின் அலைகள்", "பொன்மழை" என்று சம்ஸ்கிருத பக்திப் பனுவல்களை அழகு தமிழில் தந்தார்.

வெறுப்படைந்தவர்கள் சம்ஸ்கிருதம் அறிந்தவர்களல்ல. வெறுப்பை மட்டுமே அறிந்தவர்கள்.

// வேதாரண்யம்,போஜனம்,ஜலம்
என்று ஊர் பேர் பொருள் என்று எதையாவது தமிழில் விட்டு வைத்தார்களா?வேண்டுமென்றே செய்த அயோக்கியத்தனத்தின் மீது என்ன பற்று்ம் காதலுமா வரும்? //

பண்டைத் தமிழக நகரங்கள் பலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் இருக்கின்றன. சீர்காழி நகரின் பெயர்கள் சம்பந்தர் தேவாரத்திலும், மதுரை நகரின் பெயர்கள் திருவிளையாடற்புராணத்திலும் வருகின்றன. இவற்றில் பல பெயர்கள் சம்ஸ்கிருதப் பெயர்கள். திருநெல்வேலிக்கு வேணுவனம், சாலிவாடீ என்றெல்லாம் சம்ஸ்கிருதப் பெயர்கள் கல்வெட்டுகளிலேயே உள்ளன. வேண்டுமென்றே செய்திருந்தால் இந்த நகரப் பெயர்கள் ஏன் சம்ஸ்கிருதமாக்கப் படவில்லை? யோசித்துப் பாருங்கள் மக்களே. உண்மை என்னவென்றால் அதிகமாக மக்களால் புழங்கப் பட்ட பெயர் பிற்காலத்தில் நிலைபெற்றது, அவ்வளவு தான்.

இதில் சதி, சூழ்ச்சி, அயோக்கியத் தனத்தை எல்லாம் தேடுவது துவேஷ மனப்பான்மையும், தமிழ்ப் பண்பாடு பற்றிய குறைபட்ட புரிதலுமே ஆகும்.

ஜடாயு said...

Hari said...
// Jataayu,
once again a good post from you. Really informative.
Leave those half-baked fellows. //

Hari,
Thanks for the encouraging words.

வடுவூர் குமார் said...

அதிபரின் பரந்த மனப்பாண்மையை காட்டுகிறது,அவரது பேச்சு.

கபீரன்பன் said...

இங்கே ஆங்கிலேயக் கைக்கூலிகளாக தமிழை தங்கலீஷ் ஆக்கி தொலைக்காட்சியில் காட்சிக்கு காட்சி கொலைசெய்தாலும் செய்வாரே தவிர சமசுகிருதம் என்ற "தீண்டத்தகாத" மொழியைப் பற்றி ஏதும் பேச கேட்க இடம் கொடார்.

தமிழுக்காக அதன் வளர்சிக்காக வாய்கிழியப் பேசுபவர்கள் முதலில் மேற்கண்ட கொலையை நிறுத்தி சுத்த தமிழைப் பேசச் செய்யட்டும். அதற்கான போராட்டங்கள் செய்யட்டும். அதை தமிழ் அன்பு என்று பாராட்டலாம். பிற மொழி எதிர்ப்பு என்பது தாய் மொழியை மதித்ததாகாது. நூறு வருடங்களுக்கு முன் இறந்ததாக கருதப்பட்ட ஹீப்ரு மொழி இன்று இஸ்ரேலில் ஆட்சி மொழி.

" மூடர்களே பிறர் குற்றங்கள் மறந்து முதுகைப் பாருங்கள்,
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனை கழுவுங்கள்"

என்ற திரைப்பட பாடல் வரிகள் இங்கே மிகப் பொருத்தம்

ஜடாயு said...

// பிற மொழி எதிர்ப்பு என்பது தாய் மொழியை மதித்ததாகாது. //

நன்று சொன்னீர்கள் கபீர் அன்பரே.

ஜயராமன் said...

மிகச்சிறந்த அபூர்வமான ஒரு பதிவு.

அப்துல் கலாம் சொன்னது ஒன்றும் ஆச்சரியமில்லை. திராவிடத்தின் புனிதம் வடமொழியால் மாசுபடுகிறது என்று இங்கு பொய்கொள்கை நிலவுவதே இன்றும் தமிழகத்துக்கு சாபக்கேடு. ஆனால், இதுவும் கடந்து போகும். இந்த "திராவிடம்" இப்போது நடை போட முடியாமல், மற்றவர்கள் கூடையில் தூக்கிக்கொண்டுவந்து ஆட்சி செலுத்த வைக்கப்பட்டிருக்கிறது. இதுவும் கடந்து போகும். தமிழகத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இணைந்த வடமொழி, தமிழ் உறவு மேலும் மலரும். விரைவில்.

நன்றி

ஜடாயு said...

ஜயராமன், நல்வரவு.

// இங்கு பொய்கொள்கை நிலவுவதே இன்றும் தமிழகத்துக்கு சாபக்கேடு //

ஆம்.

// தமிழகத்தின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இணைந்த வடமொழி, தமிழ் உறவு மேலும் மலரும். விரைவில் //

இந்த உறவு தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது, வாடவில்லை. இடையில் வந்த ஒரு குறுகிய இருண்ட காலத்தில் சம்ஸ்கிருத வெறுப்பு இந்து மத வெறுப்போடு சேர்த்துப் புகட்டப் பட்டது, அவ்வளவே.

திருப்புகழும், தாயுமானவரும், பாரதியும், பாபநாசம் சிவனும், கல்கியும், சாண்டில்யனும் இன்றும் வாழ்கின்றனர். அது மட்டுமல்ல,
இன்றைய இலக்கிய உலகில் ஒரு மனுஷ்யபுத்திரனும், ஒரு பிரம்மராஜனும், ஒரு க்ருஷாங்கினியும் எந்தவிதப் பாசாங்குமின்றி இப்படி அழகிய பெயர்கள் வைத்துக் கொண்டு அழகிய தமிழ்க் கவிதைகள் எழுத முடிகிறது. இதுவன்றோ வளர்தமிழ்! இதுவன்றோ வீரியமிக்க மொழி!

தனித் தமிழ் என்ற பெயரில் இடையில் வழங்கிய சலிப்பூட்டும் போலி நடையில் எழுதிய காழ்ப்புணர்ச்சி உமிழும் சமாசாரங்களைக் காலமே கபளீகரம் செய்துவிட்டது. அதிலிருந்து எழும் தூசியைத் தட்டிக் கொண்டிருக்கும் ஒருவரது எழுத்து நடை பற்றி "காலத்துக்கு ஒவ்வாதது" என்று நான் செய்த சாதாரண விமரிசனம் பற்றி "ஐயகோ, ஐயாவை அவமதித்து விட்டார்கள்" என்று தமிழ்த் தாலிபான்கள் கூட்டம் ஒன்று கூப்பாடு போட்டுக் கத்திக் கொண்டிருக்கிறது என்பதாகக் கேள்வி. Come on, get a life, guys!

உள்ளத்தில் உண்மையது உண்டாகில் வாக்கினிலே ஒளியுண்டாகும் - பாரதி

அல்லவை தேய அறம் பெருகும், நல்லவை நாடி இனிய சொலின் - குறள்

Anonymous said...

I have read the Dravida comedy about Kanchi Acharya and Vallalar in some other sites too. I would have reacted angrily to such tripe before - but after reading Sri Malar Mannan's article here - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20603241&format=html

பல தலைமுறைகளாக திராவிடர் கழகப் பிரசாரங்களைக் கேட்டுக் கேட்டுப் பழக்க தோஷங் காரணமாக பிராமணரல்லாதார் பிராமணரைத் தூற்றிப் பேசினாலும் அதற்காக பிராமணரும் பதில் தூற்றுதலில் இறங்கி ஹிந்து சமூகப் பிளவுக்குத் தாமும் காரணமாகிவிட வேண்டாம் என வேண்டுகிறேன்.

Now I will just ignore them. They damn themselves out of their own ignorant mouths.

குழலி / Kuzhali said...

ஒரு சில நேரங்களில் இராம.கி. அய்யா வருத்தம் தொனிக்க அவருடைய பதிவில் சில அனானி பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கும் போது இவரையும் இப்படி பேசுகிறார்களே யாராக இருக்கும் என்று நினைத்தேன், தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுபவரும், தமிழ் சொற்களின் வேர் சொற்களை ஆய்வு செய்தளிப்பவருமாக தற்போதைய நிலையில் இம்மாதிரியான விடயங்களில் ஆர்வமோடு செயல்படும் அய்யா அவர்கள் கிடைக்கதற்கரிய ஒரு பொக்கிசமாக திகழ்பவர் இவரை விமர்சிப்பவர்கள் பாவம் ஏதோ எரிச்சலில் செயல்படுகிறார்கள் என்பது நன்றாகவே தெரிகின்றது.

செத்து போன வட மொழிக்கு உயிர் கொடுக்க இவர்களும் படும் பாட்டை நினைத்தால் சிரிப்பு தன் வருகின்றது, இந்த இலட்சனத்தில் கணிணி, கிரிப்டோகிராபிக்கு சிறந்த மொழி சமஸ்கிரதமாம், கொடுமைடா சாமி கணிணிக்கு புரிவதெல்லாம் 1 மற்றும் 0 தான்... சமஸ்கிரதத்தில் என்ன MD5 லாஜிக்கோ அல்லது RSA லாஜிக்கோவா இருக்கின்றது?

அறிவுடைநம்பி said...

"பாம்புக்கறி திண்ணும் ஊருக்குச் சென்றால் நடுத்துண்டை எனக்கு வையுங்கள்" என்பது இடம்பொருள் ஏவலைக் கருத்தில் கொண்டு சொல்லப்படும் முதுமொழி.

//உங்களுடன் இருக்கையில்,ராகவேந்திர சுவாமிகளின் மூலமந்திரத்தை ஓத விரும்புகிறேன்.//

இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான குடிமகனென்ற முறையில் சனாதிபதி. அப்துல் கலாம் அவர்கள் பார்ப்பன சமசுகிருதப் பள்ளி விழாவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். அங்கு சமசுகிருதத்தைப் ஒப்புக்குப் பாராட்டியதோடு நிறுத்தியிருக்கலாம். ஆனால், மனுசன்

//"பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாய ச பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே"

சத்தியத்தையும், நன்னடத்தையாகிய தர்மத்தையும் கடைப்பிடித்தவரும், உபதேசித்தவரும் ஆன தெய்வீக ஆத்மாவாகிய குரு ராகவேந்திரசுவாமியைப் போற்றுகிறோம். அவரது "கல்ப விருட்சம்" (அளவற்ற செல்வம் தரும் கற்பக மரம்) என்னும் திருப்பெயரை ஓதுகிறோம்; ஆன்ம ஞானத்தை வாரி வழங்கும் காமதேனுவாகிய அவர் முன் வீழ்ந்து வணங்குகிறோம்.//

என்றெல்லாம் பிதற்றியிருக்க வேண்டியதில்லை;அதிலும் ஒரு முசுலிமாக இருந்து கொண்டு ராகவேந்திரனை வணங்குகிறோம் என்று சொல்லி இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. (நம் சனாதிபதிகள்,உதவியாளர்கள் எழுதிக் கொடுப்பதையே மேடைகளில் வாசிக்கிறார்கள். அப்துல் கலாமின் உதவியாளர்களில் பெரும்பாலோர் பார்ப்பன ஆதிக்கச் சாதியினர் என்பதால் சமசுகிருதத்தையும், ராகவேந்திரனையும் புகழ்ந்ததன் 'மகிமை' யை மெச்சுவதில் பார்ப்பனர்களுக்கு வேண்டுமானால் புல்லரிக்கலாம்)

அரவிந்தன் நீலகண்டன் said...

அன்புள்ள ஜடாயு,
பத்ரியின் பின்னூட்டத்தில் இதனை இட முயன்றேன் இயலவில்லை. எனவே இங்கு இடுகிறேன். மன்னித்துக்கொள்ளுங்கள்

சமஸ்கிருதம் என்பது ஒரு குழுவினருக்கோ அல்லது ஒரு சாதியினருக்கோ அல்லது ஒரு பிரதேசத்துக்கோ சொந்தமான மொழி அன்று. சமஸ்கிருதத்தின் ஆகச்சிறந்த கவிஞன் காளிதாசன் ஒரு சூத்திரன். சமஸ்கிருதத்தின் ஆதிகவி ஒரு வனவாசி வேடரான இரத்தினாகரன் எனும் வால்மீகி முனிவர். அண்மைக்காலங்களில் சமஸ்கிருதத்தில் ஆழமான ஆன்மீக உண்மைகளை எளிய அழகிய சந்தங்களில் வெளிப்படுத்தியவர் ஸ்ரீ நாராயணகுரு எனும் ஈழவ குலத்துதித்த மலையாள மண்ணின் மகான். எனவே சமஸ்கிருதம் நம் அனைவருக்குமே உகந்த ஒன்றாகும். பாணினியின் சமஸ்கிருத இலக்கணம் உலகின் முதல் 'செயற்கை மொழிக்கான' முயற்சியும் ஆகும்.மேலும் சமஸ்கிருதம் தேசிய ஒருமைப்பாட்டினுடையவும் மொழியாகும். பழைய தினமணிகதிரில் எவரெஸ்டில் ஏறிய பாரத பெண் தான் சமஸ்கிருத இலக்கியம் பயின்றதன் மூலமாக இமயமலை மீது அடங்காத ஈர்ப்பு ஏற்பட்டதாக எழுதியுள்ளார். எனது சொந்த அனுபவத்தில் மார்க்ஸிய கருத்தியலில் தோய்ந்த ஒரு நண்பன் ஆயுர்வேத கல்லூரியில் சமஸ்கிருதம் பயின்ற போது தீவிர பாரத தேசபக்தனாக மாறிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதியில் இரத்த தான முகாமில் கலந்துவிட்டு வந்த அவனைப் பார்த்து மலைத்து போய் 'எப்பவாக்கும் சகாவு ஸ்வயம்சேவக் ஆனது' என்று வினவிய போது சம்ஸ்கிருத இலக்கியங்களை படிக்க படிக்க பாரத தேசியத்தின் மீதும் பண்பாட்டின் மீதும் அவனது ஈர்ப்பு வளர்ந்து தன்னை சங்க சேவை பணிகளில் ஈடுபடுத்தியதாக அவன் கூறினான். சுனாமிக்கு மறுநாள் சேவாபாரதி மருத்துவ குழுவில் அவனும் இருந்தான். பெயர் டாக்டர்.லெனின்! சமஸ்கிருதம் தமிழுக்கோ இதர பிராந்திய மொழிகளுக்கோ எதிரியல்ல. அய்யன் காளி போன்ற சமூக போராட்டத்தின் மையக்கண்ணில் நின்று போராடியவர்களூக்கு அண்ணல் அம்பேத்கர், சுவாமி விவேகானந்தர் போன்ற தொலைநோக்கு பார்வை கொண்ட சமுதாய ஆன்மீக தலைவர்களுக்கு சமஸ்கிருதம் ஒரு சமுதாய போராட்ட கருவியாகவே தெரிந்திருக்கிறது. மாதா அமிர்தானந்த மயிக்கு அது தெரிந்திருக்கிறது. ஆனால் நுனிநாக்கு ஆங்கில அறிவுசீவிகளுக்கு, தலைமுறை தலைமுறையாய் அடுத்தவர் அறியாமையில் புளித்த ஏப்பம் விட்டு வாழ்ந்து இன்று மதச்சார்பின்மை என்கிற பெயரில் நியோ-மனுவாதம் பேசும் இரட்டைநாக்கு பிறவிகளுக்கு அது புரியாமல் போனதில் அதிசயமில்லை. ஐயா பத்ரி அவர்களே நீர் பேசாமல் இஸ்லாமுக்கும் ஜிகாதுக்கும் முஷாரஃப்புக்கும் கொள்கை பரப்பு செயலாளராக சம்பாதித்துக்கொண்டு இரும். அதில் ஆட்சேபனை இல்லை. அல்லது தேசபக்தர்கள் மத்தியில் கூட பச்சைபாம்பாக நுழைந்து அங்கேயே முஷாரஃப்புக்கு விளம்பரம் போடும். இந்த இழிதொழிலில் கூட ஆட்சேபிக்க எனக்கு ஏதுமில்லை. ஆனால் இதுநாள் வரை சமஸ்கிருதம் மறுக்கப்பட்ட எம் மக்களுக்கு இப்போதும் சமஸ்கிருதம் மறுத்திட ஒரு முற்போக்கு வேசம் போடுகிறீரே இந்த 'வேச'ம்தான் தேவையில்லை.

ஜடாயு said...

இந்த விஷயம் பற்றிய பத்ரியின் பதிவில் எழுதிய பின்னூட்டத்தை இங்கேயும் தருகிறேன்.

--------
// லத்தீன், பழைய கிரேக்கம் போன்று சமஸ்கிருதம் செத்த மொழிதான். //

பத்ரி, இன்றைக்குக் கூட உருவாக்கப் படும் பல அறிவியல் கலைச் சொற்களுக்கு இந்தப் பழைய மொழிகள் தான் கைகொடுக்கின்றன?

நேனோ டெக்னாலஜியில் உள்ள nano எங்கிருந்து வருகிறது தெரியுமா? monolithic rocks என்ற பாறை வகையின் பொருள் தெரியுமா? அந்தச் சொற்கள் எங்கிருந்து வந்தன தெரியுமா?

அணு, அண்டம், பிரபஞ்சம், கந்தகம் என்ற சொற்களெல்லாம் எம்மொழியைச் சேர்ந்தவை?

// இன்றைய மக்களின் வாழ்க்கையை, நெருக்கடிகளை, சாதனைகளை, சாத்தியங்களை, சிந்தனைகளை, உணர்ச்சிகளை இன்று வாழும் மொழிகளால்தான் வெளிப்படுத்த முடியும். //

சரிதான், ஒத்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டை விட்டு வெளியே இந்தியாவின் பல மாநிலங்களிலும் போய்ப் பார்த்ததுண்டா? அந்த மொழிகளில் உள்ள கலைச்சொற்கள் பற்றி கொஞ்சம் சிந்தித்தது உண்டா? அவற்றில் 95% சொற்கள் சம்ஸ்கிருத மொழிச் சொற்கள் தான். அது மட்டுமன்று இவற்றை ஆக்கிக் கொண்டிருப்பதில் பழை சம்ஸ்கிருத நூல்கள் பற்றிய அறிவும் ஆராய்ச்சியும் எவ்வளவு உதவுகின்றன என்று தெரியுமா?

உதாரணமாக Republic என்பதற்கான அழகான ஹிந்தி (மற்றும் பல இந்திய மொழிகளில் உள்ள) சொல் "கணதந்த்ர", இந்தச் சொல் நேரடியாக சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தில் இருந்து எடுக்கப் பட்டது.

தமிழ் உட்பட இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் சொல், பொருள் களஞ்சியமாக விளங்கும் மொழியை செத்தமொழி என்று சொல்லி அதில் ஒரு குரூர சந்தோஷம் அடைவதாயிருந்தால் அடைந்து விட்டுப் போங்கள். ஆனால் அதனால் உண்மை மாறிவிடாது.

// இந்தியாவில் வேறெந்த மொழிக்கும் இல்லாத அளவுக்கு சமஸ்கிருதத்துக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. //
// அந்தப் பணம் பல்வேறு வாழும் மொழிகளின் வளர்ச்சிக்கு செலவிடப்பட வேண்டும். //

இது மிகவும் தவறான செய்து. மேலே சொன்னபடி எல்ல மொழிகளின் வளமைக்கும் சம்ஸ்கிருதக் கல்வியும், ஆராய்ச்சியும் துணைபுரிகிறது. அதனால், மத்திய அரசு ஓரளவு நிதியை ஒதுக்கி சம்ஸ்கிருதத்தை வளர்க்கிறது. அவ்வளவே.

// இந்தியாவெங்கும் சமஸ்கிருதம் பரப்பப்படவேண்டும் என்று மத்திய மந்திரிகள் கூட்டங்களில் பேசுகிறார்கள். //

ஆம். சம்ஸ்கிருதம் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் சாதனம். பாரதியும், காந்தியும், விவேகானந்தரும், அரவிந்தரும் கூட இப்படித் தான் பேசினார்கள். இந்திய தேசியத்தின் சிற்பிகள் இவர்கள்.

// சமஸ்கிருதம் மூலமாகவே கடவுளை அடையலாம் போன்ற கருத்துகளுக்கு இன்று பொதுமக்களிடமும் சரி, சான்றோரிடமும் சரி, எந்தவித ஆதரவும் கிடையாது //

இன்றல்ல, பக்தி இயக்கம் தொடங்கிய 6-ஆம் நூற்றாண்டு முதலே ஆன்மிக, சமய உலகில் சம்ஸ்கிருதம் தான் தேவபாஷை என்ற கருத்து இல்லை. மாபெரும் சம்ஸ்கிருத பண்டிதரான துளசிதாசர் மக்களின் மொழியான "அவதீ" (ஹிந்தியின் ஒரு வடிவம்) தமது பக்திக் காவியத்தை எழுதியதே இதற்குச் சான்று. இந்த நூல் வட இந்தியா முழுவதும் வேதம் போல மதிக்கப் படுவது.

ஆனால், அறிவுத் துறைகளில் (மருத்துவம், ரசாயனம், கணிதம்..) சம்ஸ்கிருதம் தான் பொது மொழியாகப் புழங்கி வந்தது.

// இப்பொழுது குடியரசுத் தலைவர் சமஸ்கிருதம் குறியீட்டியல் துறையில் பயன்படுத்தப் படுவதாகச் சொல்லியுள்ளர். யாருக்காவது தெரியுமா எந்த வகையில் என்று? //

அறிவியல் துறையில் கலாம் அனுபவம் உள்ளவர். அவர் கூறியது சரியே. sanskrit + cryptology என்று கூகிள் இட்டுப் பாருங்கள், உண்மையிலேயே இது பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால். இதற்காக சம்ஸ்கிருதம் தான் இந்தத் துறையின் உயிர்நாடி என்றெல்லாம் சொல்ல வரவில்லை. குறியீடுகள் பற்றிய ஆராய்ச்சியில் சம்ஸ்கிருத மொழி அமைப்பு, இலக்கணம் இவை பற்றிய கல்வி உதவுகிறது.

// நான் தனித்தமிழ் கட்சி கிடையாது. சமஸ்கிருத எழுத்துக்களை விலக்க வேண்டும், எதற்கெடுத்தாலும் தமிழில் ஆழத் தோண்டி அடியிலிருந்து சொல்லைக் கண்டுபிடித்து, அது எத்தனைதான் கடினமாக இருந்தாலும் அதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லமாட்டேன் //

முற்றிலும் உடன்படுகிறேன்.

மார்க்சிஸ்டுகள் ஆளும் மே.வங்கத்தில் கூட சம்ஸ்கிருதக் கல்வியின் முக்கியத் துவமும், தேவையும் உணரப் படுகிறது. (கொசுறு: மற்றெல்லா இந்திய மொழிகளையும் விட சம்ஸ்கிருதத்தின் பல கூறுகள் மிக அதிகமாகப் புழங்கும் மொழி வங்காளி).

உலகம் முழுவதும் பல அறிஞர்கள் இந்த மொழியைத் தேடிப் பிடித்துப் பயின்று வருகையில், இப்படி உங்களை சம்ஸ்கிருதம் பற்றி ஏளனம் செய்ய வைப்பது தமிழ் நாட்டு திராவிட அரசியல் தாக்கம் தான். இல்லை இந்த வெறிபிடித்த மொழிச் சூழலில் நான் சம்ஸ்கிருத எதிர்ப்பாளர் தான் என்ற பிம்பத்தை நிலை நிறுத்த வேண்டிய அவசியமா?

ஜடாயு said...

// கணிணிக்கு புரிவதெல்லாம் 1 மற்றும் 0 தான்... சமஸ்கிரதத்தில் என்ன MD5 லாஜிக்கோ அல்லது RSA லாஜிக்கோவா இருக்கின்றது? //

குழலி, சும்மா கணினியில் 2-3 வித்தைகள் கற்று வைத்துக் கொண்டு இப்படி ஜல்லியடிப்பதற்கும் , தீவிர ஆராய்ச்சிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

NLP ஆராய்ச்சியில் சம்ஸ்கிருதத்தின் பங்கு பற்றி கூகிளில் தேடினாலே கிடைக்கும். நீலகண்டன் இது பற்றி திண்ணையில் ஒரு கட்டுரை கூட எழுதியிருந்தார்.

// அய்யா அவர்கள் கிடைக்கதற்கரிய ஒரு பொக்கிசமாக திகழ்பவர் இவரை விமர்சிப்பவர்கள் பாவம் ஏதோ எரிச்சலில் செயல்படுகிறார்கள் என்பது நன்றாகவே தெரிகின்றது. //

சிரிப்பு தான் வருகிறது.

ஜடாயு said...

// அதிலும் ஒரு முசுலிமாக இருந்து கொண்டு ராகவேந்திரனை வணங்குகிறோம் என்று சொல்லி இருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. //
அதைச் சொல்ல நீங்கள் யார்? அவ்வளவு திமிரா? நம் ஜனாபதி பெரும் அறிஞர், சுயசிந்தனை உள்ளவர். இவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவர் தான் எங்கே என்ன சொல்ல வேண்டும் என்பதையும் அறிந்தவர். தென்னகத்தின் புகழ்மிக்க ஒரு ஆன்மிக ஞானியை வணங்குகிறேன் என்று அவர் மனப்பூர்வமாகத் தான் சொல்லியிருக்கிறார்.
// (நம் சனாதிபதிகள்,உதவியாளர்கள் எழுதிக் கொடுப்பதையே மேடைகளில் வாசிக்கிறார்கள். அப்துல் கலாமின் உதவியாளர்களில் பெரும்பாலோர் பார்ப்பன ஆதிக்கச் சாதியினர் என்பதால் சமசுகிருதத்தையும், ராகவேந்திரனையும் புகழ்ந்ததன் 'மகிமை' யை மெச்சுவதில் பார்ப்பனர்களுக்கு வேண்டுமானால் புல்லரிக்கலாம்) //
ஹா ஹா! நீங்கள் கலாம் பற்றி அறிந்தது அவ்வளவு தான் போலிருக்கிறது. தனது சொந்த அனுபவம் பற்றி அவர் சொல்லியிருப்பதைப் படியும், அதையும் உதவியாளர் தான் எழுதித் தந்தாரா? கலாம் கர்நாடக சங்கீதத்தை ரசிப்பதும், வீணை வாசிப்பதும், ஸ்ரீஅரவிந்தரின் தத்துவங்களைப் படிப்பதும் கூட உதவியாளர்களுக்காகத் தான் போலிருக்கிறது.. ஐயோ பாவம் ஜனாதிபதி…
ம்ஹூம்!

Anonymous said...

Why Dont you write all these in Sanskrit!!!

Muse (# 01429798200730556938) said...

NLP ஆராய்ச்சியில் சம்ஸ்கிருதத்தின் பங்கு பற்றி கூகிளில் தேடினாலே கிடைக்கும். நீலகண்டன் இது பற்றி திண்ணையில் ஒரு கட்டுரை கூட எழுதியிருந்தார்.

Can you please give the URL of the Thinnai article by Sri. Aravindan?

Anonymous said...

Why don't they get some basic facts right before commenting on anything? First of all, to say that only brahmins (parpanargal in their words) have the knowledge of Sanskrit is blatently wrong. It might be true to a very little extent in the case of Tamil Nadu. Even in Tamil Nadu, a small percentage of tamil brahmins have good knowledge of Sanskrit. In north India, knowledge of Sanskrit language has no identity whatsoever with the Brahmin community alone. This might be because of the fact that (i) people here do not have any hatred either towards that communirty or Sanskrit language perse (ii) Hindi and other Aryan languages have close relationship with Sanskrit. Even in our neighbourhood Kerala, many Sanskrit scholars belong to non-Brahmin community, even Christianity. Secondly, the Dravidian lieutinents time and again proclaim that Sanskrit is a dead language. Just because a language is not spoken by substantial number of people, it cannot be called a dead language. A language lives in its richness, past and present development of that language.

Anonymous said...

பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்யதர்ம ரதாய ச
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே"

சத்தியத்தையும், நன்னடத்தையாகிய தர்மத்தையும் கடைப்பிடித்தவரும், உபதேசித்தவரும் ஆன தெய்வீக ஆத்மாவாகிய குரு ராகவேந்திரசுவாமியைப் போற்றுகிறோம். அவரது "கல்ப விருட்சம்" (அளவற்ற செல்வம் தரும் கற்பக மரம்) என்னும் திருப்பெயரை ஓதுகிறோம்; ஆன்ம ஞானத்தை வாரி வழங்கும் காமதேனுவாகிய அவர் முன் வீழ்ந்து வணங்குகிறோம்//


குடியரசு தலைவரை வழிமொழிகிறேன்

Anonymous said...

//அந்தப் பணம் பல்வேறு வாழும் மொழிகளின் வளர்ச்சிக்கு செலவிடப்பட வேண்டும்...பத்ரி//

வாழும் மொழிகளுக்கு எதற்கு இன்னும் செலவு செய்ய வேண்டும்?..எப்படி, பழந்தமிழை ஆராய்ந்தா?...அது சரியென்றால் இந்தியா முழுவதற்கும் சொந்தமாக இருந்த சமச்கிருதத்திற்கு ஏன் செலவிடக்கூடாது? பத்ரியின் மேற்கூறிய கருத்து அவரது பதிப்பாலர் முகத்திலிருந்து வந்ததெனக் கொள்ளலாம்...அவ்வளவே.

/இப்படிப்பட்ட பிள்ளைகளின் வாழ்க்கை பற்றி எனக்கு பயமாக உள்ளது. ஆளுநர் ராஜேஷ்வர் சொன்னதுபோல இந்தக் குழந்தைகள் மாட்டுவண்டி யுகத்திலேயே தங்கிவிடலாம். நாளை வாழ்க்கையை எவ்வாறு வாழப்போகிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவகையில் இதுவும் child abuse-தான்!//

ஆகா என்னவொரு சமுதாய அக்கரை...குழந்தைகட்கு என்ன தேவை அவர்கள் எப்படி உருவாகப் படவேண்டுமென்று பெற்றோரை விட உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.
தங்களது இந்த கருத்துகளை ஏன் தனி பதிவிடக்ககூடாது?

வானிலை பற்றிய நமது பண்டைய அறிஞர்கள் பாஸ்கர ராயர், ஆரியபட்டரரெல்லாம் அற்ந்த,அந்ததுறை வல்லூனர் கலாம் மெச்சுகிறார் ஆனால் பத்ரி இதனை "வேத கணிதம் என்றொரு 'புருடா' " என்றால் இதில் எது அறிவார்ந்த வாதம், எது சுயநலமிக்கது என்பது படிப்போர் முடிவு செய்யட்டும்.

//இன்றைய சமஸ்கிருதம் என்பது, என்றோ புழங்கி வந்த மொழியின் உறைந்த வடிவம். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் போல வரலாற்றாசிரியர்கள் இந்த மொழியைத் தோண்டிப்பார்ப்பதன்மூலம் பழங்காலத்தைப் புரிந்துகொள்ளக்கூடும். அவ்வளவே.//
இன்றைய வாழ்வியலிலும் நாம்கடைபிடிக்கத்தக்க பல விடையங்கள் சமச்கிருத்தில் உள்ளதென்பதை மறைக்கும் இந்த வரிகள், இது போதுமே தங்களது திராவிட/பொய் செக்கியுலரிச முகத்தைக் காட்ட.

Thamizhan said...

என்னுடைய பின்னூட்டத்திற்குப் பதில் எழுதியிரு்ந்தீர்கள்.அதற்கு விளக்கம் சொல்லுமுன் பதிவுகள் வேகமாகப் போகிறது.
நான் தமிழறிஞர்கள் பலர் சமசுகிருதம் படித்தார்கள் ஆனால் சமசுகிருத ஆதிக்கம் என்று வந்து தமிழை இழிவும் கொலையும் செய்தபோதுதான் தனித்தமிழ் இயக்கம் வந்தது என்று சொன்னேன்.
சமசுகிருதம் என்பதில் ஒரு எழுத்து சு வுக்காகக் குதிக்கின்றீரே தன் தாய் மொழியையே இழிவு படுத்தி அழிக்கப் பார்த்தபோது அவர்கள் எப்படித் துடித்திருப்பார்கள்.
அதற்கு திராவிட வெறியோ விசமோக் காரணம் இல்லை.ஏனென்றால் திருஞான்சம்பந்தப் பெருமானே தமிழில் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான்.தன்னைப் பல இடங்களில் தமிழ்ஞானசம்பந்தன் என்றே அழைத்துக் கொள்கின்றார்.தனக்கு பூணூல் அணிவித்தபோது கூட காயத்திரி மந்திரம் வேண்டாம் என்று தமிழிலே சைவ வாழ்த்து பாடச்சொல்கிறார்.இது என்னதிராவிட வெறியா இல்லைவிசமா?{சம்பந்தரும் வள்ளலாரும்-ஊரன் அடிகள்}
அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டவர்தான் வடலூர் வள்ளலார்.வடமொஷி அற்ஞர்.1850 களில் வாழ்ந்தவர்.அவரிடந்தான் அப்போது இருந்த காஞ்சி மடாதிபதி சமசுகிருத்ந்தான் உலக மொழிக்கெல்லாம் தாய் மொழி என்று சொல்ல அவர் அப்படியானால் தமிழ்தான் தகப்பன் மொழி என்று சொல்லுகிறார்.
மஹாப்பெரியவாள் தான் தமிழை நீச மொழி என்கிறார்.தமிழில் யாரோ முக்கியமானவ்ர் வந்ததால் பேச் நேர்ந்ததால் தான் மறுபடி குளிக்கவேண்டுமே என்று கோபித்துக் கொள்கிறார்.{இந்துமதம் எங்கே போகிறது--சீரங்கம் அக்னிஹோத்திரம் தோத்தாத்திரி}.இன்னும் அவருடைய தமிழ்ப்பற்றையும் வெறுப்பையும் நன்கு எழுதி்யுள்ளார்.இன்னும் பச்சையாக வேண்டுமானால் Sankarachari-A saint or secterian பாருங்கள்.
தனித்தமிழை ஏன் கொண்டுவந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் நோக்கமே இல்லாத வெறுப்பாளரான் நீங்கள் தமிழர்களைக் குறை சொல்வது ஏன் என்று மற்றவர்கட்கு நன்கு புரியும்.
சுப்பிரமணிய பாரதியின் நெருங்கிய நண்பரும் வகுப்புத்தோழருமான நாவலர் சோமசுந்தர பாரதி மதுரையிலே ஒரு பெரிய வீட்டுத்திருமணத்திலே மந்திரம் சொல்லிக்கொண்டிருந்த பார்ப்பனரை அறைகிறார்.மற்றவர்கள் துடித்துப்போய் என்ன இப்படிச் செய்து விட்டீர்களே என்கிறார்கள்.அப்போது நீ என்ன மந்திரம் சொல்கிறாய் தெரியுமா? என்கிறார்.தெரியாது என் தோப்பனார் சொன்னதைச் சொன்னேன் என்ற பொழுது நாவலர் இவன் கருமாதி மந்திரம் சொல்லுகின்றான் என்றபோது அனைவரும் கோப முற்றனர்.உடனே சோமசுந்தர பாரதி தமிழ் திருமணமுறை என்று எழுதிப் பரப்புகின்றார்.
சமசுகிருத வெறியர்களால்தான் தமிழறிஞர்கட்குத் தமிழின் பெருமையே தெரிய வந்தது.தமிழ்மொழிச் சொற்கள் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்று பின் கொஞ்சம் மாறி த்தமிழுக்கெ வந்து எது தமிழ் எது வடமொழி என்று திகைக்கும் அளவிற்கு{ரத்தம்,சுரம்...}இருந்ததால் பல அறிஞர்கள் வந்தவர் மொழியா செந்தமிழ்ச் செல்வமா என்றே விளக்கம் அளித்த்னர்.
தமிழர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டியது இரண்டு.ஒன்று வந்தவரை எல்லாம் வாழவைக்கும் தமிழும் தமிழரும் அடிமையானது ஏன்?
இரண்டு நமக்குத் தாய்மொழி என்பது தமிழ் என்பது ந்ன்கு தெரியும்.ஆனால் தமிழால் பிழைப்பு நடத்தும் பலருக்குத் தமிழ் தாய்மொழியா அல்லது பிழைப்பு மொழியா என்பதை அவர்கள்தான் உணர்வார்கள்.தமிழுக்குத் தொண்டு செய்த அனைவரயு்ந் தமிழர்கள் போற்றுகிறார்கள்.கால்டுவெல் முதல் பாரதி வ்.ரா வரை.ஆனால் தமிழை இழிவு படத்துவோரையும் தமிழ் மீது வேண்டுமென்றே சமசுகிருதத்தையும் தமிங்கலத்தையுந்திணித்து தமிழை அழிக்கப்பார்க்கம் எத்தர்களை நன்கு அடயாளங்கண்டு கொள்ளவேண்டும்.தமிழர்கள் நடத்தும் அனைத்து இதழ்கள் காட்சிகள் எல்லாவற்றிலும் உள்ளே பூந்துகொண்டு இவர்கள் செய்யும் அநியாயத்தை அடக்க வேண்டுந்தான்.அழிந்துவரும் மொழிகளிலே தமிழும் ஒன்றாகிவிடக்கூடாது என்பதிலே சமசுகிருதப் பற்றாளர்களின் செயல்களை நன்கு கவனிக்க வேண்டும்.தமிழ் செம்மொழியானல் தமிழருக்குச் சோறு கிடைக்குமா என்ப வர்கள் தமிழர்களா/
கி.ஆ.பே. விசுவநாதம் சொன்னார்.தமிழ் இசை என்பது தமிழர்க்குப் புரியும் அது புரியாதவன் தமிழனே இல்லை என்று.தமிழ் வளர்பவர் யார் என்று தமிழர்க்குப் புரியும் அது புரியாதவன் தமிழனே இல்லை.

Anonymous said...

//ஏனென்றால் திருஞான்சம்பந்தப் பெருமானே தமிழில் வடமொழி ஆதிக்கத்தைக் கண்டு வெறுப்படைந்தவர்தான்.தன்னைப் பல இடங்களில் தமிழ்ஞானசம்பந்தன் என்றே அழைத்துக் கொள்கின்றார்.
//

ஞானம் சம்பந்தம் இவையெல்லம் தமிழா? திருஞான்சம்பந்தப் பெருமானுக்கு இது தெரியாதா. அப்படியும் தன்னை ஞானசம்பந்தன் என்று அழைத்துகொண்டாரென்றால் அவருக்கு தங்களுக்கு இருப்பதைப்போல் வடமொழியின்மேல் எந்த வெறுப்பும் இல்லை என்று பொருள்.

குழலி / Kuzhali said...

//// கணிணிக்கு புரிவதெல்லாம் 1 மற்றும் 0 தான்... சமஸ்கிரதத்தில் என்ன MD5 லாஜிக்கோ அல்லது RSA லாஜிக்கோவா இருக்கின்றது? //

குழலி, சும்மா கணினியில் 2-3 வித்தைகள் கற்று வைத்துக் கொண்டு இப்படி ஜல்லியடிப்பதற்கும் , தீவிர ஆராய்ச்சிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
//
நன்றி ஜடாயு, safescryptக்காக கிரிப்டோகிராபியில் நான் செய்த ப்ராஜெக்ட்டை என் CVயிலிருந்து தூக்கிவிடலாமா என யோசித்துக்கொண்டிருக்கின்றேன், அதற்கு பதில் சமஸ்கிரதம் தெரிந்து கொண்டு அதை போட்டால் என்னை கிரிப்டோகிராபியில் வேலை செய்ய கூப்பிடுவார்களா என்பதையும் தாங்கள் தெரிவித்தால் தன்யனாவேன்.

Anonymous said...

After reading some comments, I got a doubt whether the President had said something against Tamil so went back and read his speach. He has only spoken about Sanskrit without references to any other languages. Even that infuriates some people to call him 'Kalam Ayyar', and repeat manufacutred stories about how Brahmins destroyed tamil. Stories about Cuddalore (!) Vallalar and Kanchi Acharya. And a story about Kanchi Acharya hating Tamil - quit reading those kaalana pamphlets and read some serious material, for a change. In Kanchi Acharya's Deivathin Kural collection - all those speeches are in Tamil - there is a whole section devoted to Poetess Avvayyar. And numerous quotes from Tamil poetry. (There are even portions where he chides 'paarpaans' for leaving their Vedic profession and competing with the rest in other fields - you might like those).

I seriously doubt if the defunct Dravida teachings alone are the reason for this hate-filled diatribe. There may be something else.

One of the comments mentioned how a person became a nationalist after studying Ayurveda. That was a great point. Ayurveda is a living science with several texts in Sanskrit. So is yoga. And some people have the temerity to call Sanskrit dead.

The pradhana Sishya of Dravida philosophy is himself now a Sishya of Yoga - did he insist that the names for all those Asanas get converted to Tamil before he practised them?

KuLathin meedhu kobappattuk kazhuvaamal ponaal nashtam yaarukku? Dhur-naatrandhaan minjum.

Muse (# 01429798200730556938) said...

ஜடாயு அவர்களே,

தமிழருக்கு பித்தம் ஒன்றுண்டு.

அடுத்தவர் நன்றாக இருந்தால் அதன் அடையாளம் நான் நன்றாக இல்லை என்கின்ற கருத்துருவாக்கம் இவர்களை ஆட்டிப்படைக்கின்றது. அனைவரும் நலமாகவும், வளமாகவும் இருக்கமுடியும் என்பதை ஏற்க மறுக்கும் மனோவசியத்திற்குள்ளான சலுப்பர்கள் இவர்கள். ஒரு மொழி உயர்ந்தது என்பதற்கு இன்னொரு மொழி தாழ்ந்தே இருக்கவேண்டும் என்கின்ற இவர்களுடைய கருத்துருவாக்கம்தான் வேறு எந்த மொழியையும் ரசிக்க விடுவதில்லை.

மனிதன் எங்கெல்லாம் இருக்கிறானோ அங்கே அவன் மூலமாய் இறையின் சக்தி வெளிப்படுகின்றது. மொழியும் அதன் வெளிப்பாடுதான். கலை, அறிவியல், செல்வ வளம், மகிழ்ச்சி, அருமையான கட்டிடங்கள், மசூதிக்கள், சர்ச்சுக்கள், கோயில்கள் அனைத்துமே இந்த இறை வெளிப்பாட்டின் புறவடிவங்கள்தான். ஹிந்து மதமானது இந்த இறை வெளிப்பாடு எங்கெல்லாம் வெளிப்படுகின்றதோ, அதை தெய்வமாக வணங்க ஆரம்பிக்கின்றது.

திருவள்ளுவரையும், திருமூலரையும் ஹிந்துக்கள் தெய்வமாய் போற்றக் காரணம் அவர்கள் மூலமாய் வெளிப்பட்ட ஆன்மீக பலம்தான். எங்கெல்லாம் மாபெரும் சக்தியின் வெளிப்பாடு உள்ளதோ அவை எல்லாம் என் அடையாளங்கள் என இறை சொன்னதாக ஹிந்து மதப் பனுவல் ஒன்று உண்டு.

ஹிந்துமதப் புரிதல் என்பது உண்மை அறிதல். உண்மை அறிதலே ஹிந்துமதப் புரிதல். ஜனாப். அப்துல் கலாம் அவர்களுக்கு இந்தப் புரிதல் இருக்கின்றது. ஒன்று பெருமை பெற மற்றவை எல்லாம் தாழ்ந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்கின்ற அவரது புரிதல் மரியாதைக்குரியது. இந்தப் புரிதலும் இறையின் வெளிப்பாடுதான். ஜனாப். அப்துல் கலாமை பிற்காலத்தோர் வழிபட்டால் அது சரியான புரிதலே.

ஆனால், இந்தப் புரிதல் சுத்தமாக இல்லாமல், ஒன்றே ஒன்று மட்டுமே உயர்ந்ததாக இருக்க முடியும் என்று கதைக்கின்ற ஓரிறைக்கொள்கையின் பிடிமானத்துக்குள் சிக்கியிருப்பவர்களால் ஆண்டவரை மட்டுமல்ல அப்துல்கலாமையும், ஜடாயுவையும், அரவிந்தன் நீலகண்டன்களையும் புரிந்துகொள்ள முடியாது. இது புரிய ஹிந்துத்துவா புரிந்திருக்கவேண்டும்.

நாம் அனைத்து கலாச்சாரங்களையும், கருத்துக்களையும், மனிதர்களின் வெற்றிகளையும் இறை வெளிப்பாடாக அடையாளம் கண்டு, மனித வளம் எங்கெல்லாம் சிறக்கிறதோ அங்கெல்லாம் இறை வெளிப்பட்டுள்ளது என்று புரிந்து அனைத்து மனித வள வெளிப்பாடுகளையும் பாராட்டுவோம். வணங்குவோம்.

Anonymous said...

///தனித்தமிழ் இயக்கம் என்ற கொடுமையான தமிழ் நடையைக் கண்டுபிடித்தது. நல்லவேளை அந்த நடை தானாகவே செத்துவிட்டது, அதை முயூசியத்திலிருந்து எடுத்துவந்து சில ஆட்கள் (உதாரணமாக இராம.கி என்பவர்) இணையத்திலும் எழுதுவதைப் பார்த்தால் பரிதாபம் தான் ஏற்படுகிறது. //

சமஸ்கிருதக் கலப்பற்ற தனித் தமிழில் பேசுவதைக் கொடுந்தமிழ் என்பது மட்டுமல்ல, தமிழை ஆய்ந்து தமிழிலுள்ள வேர்ச்சொற்களையும், தமிழில் புதிய சொல்களை உருவாக்குவதற்கும், தமிழ் வேர்ச் சொல்லாராய்வில் எம்மைப் போன்ற பல தமிழர்களுக்கு ஆர்வத்தையும் உண்டாக்கும் வகையில் தமிழ்த்தொண்டு செய்யும், தமிழர்களின் மதிப்புக்குரிய இராமகி ஐயாவை மட்டுமல்ல இச்செயலால் முழுத் தமிழர்களையும், வலுச்சண்டைக்கிழுக்கும் ஜடாயுவை தமிழுணர்வுள்ள வலைப்பதிவாளர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்.

Anonymous said...

I think it is high time we move beyond the past.Sanksrit as a classical language deserves all support. But let us not deify it , nor defame it.It was true that in that past some supporters of sanskrit were aggressive and were not willing to give Tamil the importance it deserved.But that need not prevent us in appreciating
Sanskrit.There is no point in projecting sanskrit as an enemy of Tamil or viceversa.
Today Tamils need not fear Sanskrit. Should I hate English as it is the language of the coloniser. All we need is a pragmatic and objective approach towards Sanskrit.A language cannot be evaluated soley by the number of speakers speaking it.I think calling Sanskrit as a dead language is not correct.Problems come when it is projected as source of all Indian languages or when it is claimed that it is the sole repository of all classical wisdom and learning. Let us understand and appreciate the diversity in India, lingustic and
cultural.Let us not undermine it by setting up false enemies.
Ravi Srinivas

கொசு said...

// இது புரிய ஹிந்துத்துவா புரிந்திருக்கவேண்டும்.
//

அதெல்லாம் வேண்டியதில்லை. பூணூல் போட்டிருந்தாலே போதும்!

லொடுக்கு said...

சமஸ்கிருதம் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன. அதைப் பற்றி தமிழர்களாகிய நமக்கென்ன கவலை.

Anonymous said...

பெரியாரை குருவாக ஏற்றுக் கொண்டிருக்கும் அவரது சிஷ்ய 'பகுத்தறிவு' கேடிகளுக்கும், புடுங்கிகளுக்கும் திருமூலர் திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறார்.

"குருட்டினைப் நீக்கும் குருவினைக் கொள்ளார்;
குருட்டினைப் நீக்கா குருவினைக் கொள்வர்;
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி,
குருடும் குருடும் குழி விழுமாறே"

சிஷ்ய கேடிகளுக்கு தமிழ் புரியும் என நினைக்கிறேன்

அரவிந்தன் நீலகண்டன் said...

As usual as Bathri's blog rejected my entry i am posting it here. Sorry Jatayu.
பாணினியின் இலக்கண விதிகள் துல்லியமான செயற்கை மொழி உருவாக்கத்துக்கு உதவும். பாணினியின் விதிகளே உலகின் முதல் செயற்கை மொழி உருவாக்க முயற்சி என்றும் கருதப்படுகிறது. பாணினி விதிகள் இயற்கை மொழிகளின் processing இலும் பயன்படுகிறது. பாணினி இலக்கண விதிகளின் அடிப்படையில் பாரத மொழிகளுக்கிடையிலான பரிமாற்றங்களை இலகுப்படுத்தவும் மொழித்தடைகளை நீக்கவும் ஒரு ஆராய்ச்சி செயல் திட்டமும் நடந்து வருகிறது.
அது குறித்து: பாணினி விதிகளின் மூலம் பெறப்பட்ட உத்வேகத்தினால் பாரத மொழிகளுக்கிடையிலேயான மொழி பெயர்ப்பை கணினி மூலம் நிகழ்த்துவதற்கான முயற்சி இது.

Anonymous said...

// ஒரு பாதுகாப்பற்ற மிசனரி போதனையில் மயங்கி விட்ட உனர்வு தான் தனித்தமிழ் இயக்கம் என்ற கொடுமையான தமிழ் நடையைக் கண்டுபிடித்தது. நல்லவேளை
அந்த நடை தானாகவே செத்துவிட்டது, அதை முயூசியத்திலிருந்து எடுத்துவந்து
சில ஆட்கள் (உதாரணமாக இராம.கி என்பவர்) இணையத்திலும் எழுதுவதைப் பார்த்தால் பரிதாபம் தான் ஏற்படுகிறது. //

உங்கள் சப்பைக்கட்டுக்கு, தமிழ் வேர்சொற்களை முன்வைத்து அவர் செய்யும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் http://valavu.blogspot.com/ இடைஞ்சலாகத்தான் இருக்கும்.
நீங்கள் "மாம்ஸம் சாப்பிட்டால் சமஸ்க்ருதம் பேசமுடியாது" என்பதுபோல ஏதாவது சொல்லிக் கொள்வதோடு நிறுத்திக் கொண்டிருக்கலாம்,

Anonymous said...

தமிழறிஞர் இராம.கி அவர்களை இழித்து எழுதியவன் யாராயிருந்தாலும் அவனைச் செருப்பால் அடிக்க வேண்டும்.

Anonymous said...

TAMILNADU LOVES HINDI OBC CASTES, BUT NOT TAMIL FORWARD CASTES!!!!

"TAMIL" NADU HAS PREFERENCE TO HINDI CASTES IN OBC LIST THAN TAMIL CASTES. Karunanidhi in public life is a Tamil lover. But in private life it appears otherwise. Privately he actually loves Hindi and hates Tamils. Why he continues to call Tamil speak Brahmins as non-Tamils while he calls Hindi speaking muslims, saurashtrians etc who are all in TN OBC list as "Tamils" only Karunanidhi or DMK will only know. What can anyone expect from a Telugu family. Anyway looking at Tamilnadu's OBC list, it appears Hindi, Telugu, Kannada castes take priority over forward caste Tamils. There is no proper answer justifying why Hindi-speakers get reservation in Tamilnadu. This is not a question of why not or why reservation but question of why Hindi people are getting favoured than Tamil. If you go down the list mentioned in TN govt website there are 5 - 10 castes mentioned who speak Hindi and not Tamil. Probably the name 'Tamilnadu' must be incorrect if Tamil language is not the criteria. It is not asking Forward caste Tamil citizens to be reserved but Hindi and other language castes citizen having higher priority than these uncounted Tamils. Probably Tamilnadu should change the name to OBC Desh if Hindi castes are having higher priority over Tamils. Also be aware that the number of Bihari migrants who only speak Hindi has increased. It is matter of time that they will also be included in Tamilnadu's OBC list. For those Tamils lost in the reservation who are still not observing, most of road construction jobs in Tamilnadu are exclusively being reserved for these Hindi speaking Biharis. If you are not aware there were protests two weeks back on this. It will be most like that these Hindi speaking Biharis will get included in TN OBC list along with other Hindi speaking castes. Yes no one says reservation is bad...BUT TAMILIANS FIRST INSIDE TAMILNADU IRRESPECTIVE OF THEIR CASTE, then comes others.

Anonymous said...

அன்பரே,
'பூஜ்யாய ராகவேந்த்ராய.. ... ...' எத்தகைய சல சலப்பை ஏற்படுத்தி விட்டது ?
எப்படியெல்லாம் பில்ட் அப் பண்ணுகிறார்கள் ?
நான் state bank of mysore -ல் பணிபுரிந்தவன். அதில் பல ஜாதியினரும் உடன் பணியாற்றினர். வியாழக்கிழமை தோறும் உபவாசம் இருப்போரில் பிராமணர்
அல்லாதோர் அதிகம். இந்த சுலோகம் தெரியாதவர்கள் மிகவும் குறைவு. இருந்தால்
தமிழ் நாட்டவராகவே இருக்க வேண்டும்.
அந்தணர் செழிப்போடும், செல்வாக்கோடும் மிகுதியாக வாழ்ந்த ஊர்கள் பல
இன்றளவும் தமிழ்ப்பெயர்களோடு தான் உள்ளன. யாரும் வலிந்து வட மொழிப்பெயர்களாக மாற்றியதில்லை.
ஊத்துக்காடு வேங்கட கவி, கோபால கிருஷ்ண பாரதியார், பாபநாசம் சிவன் போன்றோர் செய்த தமிழிசைப்பணிகள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன.
பிராமணர்கள் என்றால் தமிழுக்கு எதிரிகள் என்றே ஆக்கி விட்டனர்.
'ஆரியத்தீயிலும் அழியாத அருந்தமிழ்' என்று ஒரு ஜல்லி.
'ப்ருஹத் கதா', 'நைஷதம்' ,'ராமாயண- மகாபாரதங்கள்' , அலங்கார நூல்கள் போன்றவற்றால் தமிழ் செழித்ததே தவிர அழிந்து விடவில்லை.
தேவராஜன்

Anonymous said...

poi sollalam alvuku meeri poi solla kudathu

thamizh yennum mozhi, vadamozhi yennum mozhiyai vida pala madangu illakana thiran niraianthathu

endha sollaiyum entha karuthaiyum solla pira mozhiyai nada vendiya thevai thamizhil illai


sila eg.

bio technology - uyiri thozhilnutpam

nano technolory- meenun(greek nano from tamil nun) thozhilntupam

train - thodarundhu

vimanam - vanoorthi

republic- kudiyarasu

space - vin, visumbu

cell phone - celpesi

telephone - tholai pesi( tele rooted tamil word tholai)

etc

ivaiyellam thamizhin thantih iyangum arral ullathu

NLP - natural language processing-il thamizhum ugantha mozhi thaan.

Vijay Shanmugam said...

somebody has said that kalidasan was a shudra. Such inhuman nonsenses, slaying of shambuk, a shudra, by rama for doing penance, all these obnoxious things can be found only in sanskrit. No, I dont belittle sanskrit. It is a great language with two great epics ramayanam and mahabharatham which i enjoy thoroughly for their literary beauty. But it is also a source of many inhuman practices. Can anybody in his senses accept the nothing-but-nonsense manusmrithi? I give below a sentence which was in my primary book in 50s. Lahiri vasthukalai ubayogippadhu dhegarogyathukku haani vilaivikkum. Is it tamil? who wrote such tamil except the sanskrit chauvinists? what is wrong in writing as mayakka porutkalai payanpaduthuvathu udal nalathirku kedu vilaivikkum?