பயங்கரவாதிகள் மீது காட்டும் பரிவால் நிகழவிருக்கும் பின்விளைவுகள்
தீவிரவாதச் செயல்களுக்கு துணணபோனதற்காக குற்றம் சாட்டப்பட்டு ஆஸ்திரேலியாவில் விசாரிக்கப் பட்டு வரும் இந்திய டாக்டருக்காக இந்திய அரசு காண்பித்து வரும் அதீத கனிவும், பரிவும் தேசபக்தர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துவது நியாயமே.
இதன் பின்னணியில் முதுபெரும் எழுத்தாளர் திரு. மலர்மன்னன் அவர்கள் ஜூலை-12, 2007 திண்ணை இதழில்
ஹிந்துஸ்தானத்தின் மீது பயங்கரவாத முத்திரை விழப் போகிறது! என்ற ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையில் கடைசியில் அவர் எடுத்துவைக்கும் வாதம் மிகவும் சிந்தனைக்குரியது -
".. ஹிந்துஸ்தானத்துப் பிரதமரோ, போதிய ஆதாரங்கள் சிக்கியதன் அடிப்படையில் விசாரணைக் கைதிகளாக லண்டனில் வைக்கப்பட்டிருக்கும் ஹிந்துஸ்தானத்து முகமதிய இளைஞர்களின் தாய்மார்கள் அளிக்கும் கண்ணீர்ப் பேட்டிகளைப் பார்த்துத் தாமும் கண்ணீர் மல்க இரவெல்லாம் உறக்கமின்றி உழன்றதாகச் சொல்கிறார். அந்தத் தாய்மார்களுக்கு ஆறுதலும் தைரியமும் அளிக்கிறார். ஹிந்துஸ்தானத்து தூதரகங்கள் அந்த விசாரணைக் கைதிகளின் நலனைக் கவனித்துக் கொள்ளும் என உறுதி கூறுகிறார். இங்கிலாந்தின் பிரதமரிடம் பேசுகிறார். தப்பித் தவறிக்கூட மதத்தின் சாயத்தை இதில் பூசிவிடாதீர்கள் என்கிறார்.
... முஷரப் ஆப்கானிஸ்தானத்துடனான எல்லைக் கோடு நெடுகிலும் கண் காணிப்புக்கும் ஏற்பாடு செய்து, தாலிபான்களின் ஊடுருவலைத் தடுக்க முனைந்துவிட்டார். ஆக, பயங்கர வாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தான் உறுதியாகவும், ஒரு முகமதிய தேசமாக இருப்பினும் நிர்தாட்சண்யமாகவும், திறமையாகவும் செயல்படுவதாக உலக அரங்கில் நம்பிக்கை பிறக்கிறது. அதே சமயம், ஹிந்துஸ்தானம் முகமதிய பயங்கரவாதிகளிடம் காட்டும் மெத்தனத்தையும் மீறிய பரிவின் காரணமாக, பயங்கர வாத ஆதரவு நாடாகக் கருதும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.
உலக நாடுகளுக்கு ஹிந்துஸ்தானத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உள்விவகாரங்கள் பற்றி சரியான புரிதல் ஏதும் இல்லை. புரிந்துகொள்ள வேண்டுமென்கிற அக்கரையும் அவற்றுக்கு இல்லை. எனவே அவற்றின் பார்வையில் பாகிஸ்தான் பயங்கர வாதத்தை ஒடுக்கும் நாடாகவும் ஹிந்துஸ்தானம் பயங்கர வாதிகள் மீது அனுதாபம் கொண்டு சலுகை அளிக்கும் நாடாகவும்தான் தோற்றமளிக்கும்"
இதைத் தொடர்ந்து வந்த பல கேள்விகளுக்கும் பதிலளிக்கும் முகமாக சி.பி.காம் தளத்தில் அவரது இன்னொரு கட்டுரையும் வந்துள்ளது. இதில் திரு. ம.ம அவர்கள் எழுப்பும் கேள்விகளும், வைக்கும் வாதங்களும் இந்தியாவின் தற்போதைய தலையாய சமூக பாதுகாப்பு பிரசினையான ஜிகாதி தீவிரவாத்தை நேர்கொள்வதில் அரசு காட்டி வரும் மெத்தனப் போக்கை தெளிவாகவும், உறுதியாகவும் எடுத்துரைப்பதாக உள்ளன. சில துளிகள் -
.. அரசியலுக்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத விளையாட்டு வீரர்களை அராபத்தின் பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் கொன்று குவித்த பிறகும் நமது மைய ஆட்சியாளர்கள் அராபத்தை மார்புறத் தழுவி அவரது பயங்கரவாத இயக்கத்தை ஆதரிக்கத் தவறவில்லை. ஹிந்துஸ்தானம் இந்த மரபினைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது என்கிற செய்தியைத் தமது செயலால் உலக நாடுகளுக்குப் பிரகடனம் செய்து வருகிறார், இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்.
.. ஹிந்துஸ்தானத்தில் அண்மைக் காலத்தில் தோன்றி, உலகம் முழுவதும் சீடர்களைப் பெற்றிருந்த மிகச் சிறந்த சிந்தனையாளரும் தத்துவ ஞானியுமான ஆசாரிய ரஜனீஷ் என்கிற ஓஷோ அமெரிக்காவில் ஒரு குற்றவாளியாக அலைக்கழிக்கப்பட்டதும் நினைவிருக்கும். .. ஓஷோ அமெரிக்காவில் கைதான போது கூட அவர் அகில உலகிலும் மதிக்கப்படும் சிந்தனையாளர்; அவரைக் கௌரவமாக நடத்துங்கள் என்று நமது மைய அரசு சொன்னதாக எனக்கு நினைவில்லை. ஆனால் நமது இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் ஆஸ்திரேலிய அரசிடம் மிகவும் உறுதிபடச் சொல்கிறார்: பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாகக் கருதி நீங்கள் காவலில் வைத்திருக்கும் ஹமீது எங்கள் நாட்டுப் பிரஜை; அவரது உடலுக்கோ, உள்ளத்திற்கோ எவ்வித ஊறும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்பதாக.
.... முன்பெல்லாம் ஹிந்துஸ்தானத்திலிருந்து வருபவர்களை 'ஓ! புத்தர் பிறந்த தேசத்திலிருந்து வருகிறீர்களா?' என்று விமான நிலையத்திலேயே இன்முகத்துடன் வரவேற்பார்கள். சில சமயம் 'யோகா தேசமா' என்பார்கள். காந்தி திரைப்படம் வந்தபின் 'கேண்டி?' என்று வரவேற்பார்கள். இனி, 'ஓ! சொந்த நாட்டு பயங்கரவாதிகள் மீது பரிவு காட்டும் தேசத்திலிருந்து வருபவரா?' என்று மனத்திற்கு உள்ளாவது நினைத்துக்கொள்வார்கள். அதற்குத் தகுந்தவாறுதான் வரவேற்பும் இருக்கும்.
2 comments:
ஜடாயு இதுதாங்க இந்திய அரசியலில் மதச்சார்பின்மை!
கையாலாகாத பிரதமர் மன்மோகன், அல்லக்கை ரேஞ்சுக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் இப்படியான மதச்சார்பின்மையை முன்னெடுத்துச்செல்ல தோதுவாக இருப்பார்கள் அந்தோணியோ மைனோ எனும் காங்கிரஸின் தியாக அன்னை சோனியாவுக்கு.
மறு காலனியாதிக்கம் என்பது என்னன்னு புரிஞ்சுபோச்சு எனக்கு! வெட்கம் வருத்தம் சோகம்னு இருக்கு!
மலர்மன்னனின் கட்டுரையை தற்போதுதான் படித்தேன். நல்ல கட்டுரை. உங்களது பதிவு அதற்கு சிறப்பான முன்னுரையை அளித்துள்ளது.
நன்றி.
Post a Comment