Friday, January 25, 2008

புத்தாண்டு சர்ச்சை: கருநாவின் கலாசார ஒழிப்பு திட்டம்

தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப் போவதாக தமிழக முதல்வர் கருணாநிதி நேற்று கவர்னர் உரை மூலம் தெரிவித்து, கிறிஸ்தவ மிஷநரிகள் பல பத்தாண்டுகளாக தமிழகத்தில் நிகழ்த்தி வரும் கலாசார திரிப்பு, ஒழிப்பு முயற்சிகளுக்கு இன்னொரு அடித்தளம் அமைத்துத் தந்திருக்கிறார். 1921-லேயே சில தமிழறிஞர்கள் இது பற்றி "விவாதித்து" புத்தாண்டைப் பற்றிய கருத்துக் கூறினார்களாம்! "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய" தமிழ்க்குடியினர் சமீபத்தில் தங்கள் புத்தாண்டு எது என்று குழம்பி, சர்ச்சை செய்தார்கள் என்று கூறுவதற்கு வெட்கமாயில்லையா?

நேற்றைய தினமணி இதழில் வரலாற்று அறிஞர், கல்வெட்டு ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் "சித்திரையில் தான் புத்தாண்டு" என்றொரு அருமையான கட்டுரை எழுதியுள்ளார். அதில் உள்ள் குறிப்புகளின் படி "தைப் புத்தாண்டு" என்கிற கருத்தாக்கம் ஒரு திட்டமிட்ட முழுமையான கிறிஸ்தவ மிஷநரிகளின் சதி என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. இதற்கு பண்டைத்தமிழ் வரலாறு, இலக்கியம், மரபுகள், நாட்டார் வழக்கு எதிலும் ஆதாரம் கிடையாது.

இன்னொரு முக்கிய விஷயம். பாரத நாடு முழுவதும் பரவியிருக்கும் தேசிய, கலாசாரக் கூறுகளில் இருந்து தமிழ்ச் சமுதாயத்தைப் பிரிக்கும் முயற்சியும் ஆகும் இது. நாம் கொண்டாடும் சித்திரை முதல் நாள் (ஏப்ரல் 14, 15ம் தேதிகளில் வரும்) தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பல பகுதிகளிலும், ஏன் சில அண்டை நாடுகளிலும் கூட புத்தாண்டு தான்.

இந்து மரபின் சூரிய காலக்கணக்கு (Solar Calendar) முறை "சூர்ய சித்தாந்தம்" என்ற தொன்மையான அறிவியல் நூலில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் சூரிய ஆண்டின் முதல் நாள் புத்தாண்டு என்றாகிறது. தமிழகம் மட்டுமல்ல, கேரளம், மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, திரிபுரா, மணிப்பூர், அஸ்ஸாம், பஞ்சாப், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய எல்லா இடங்களிலும் இந்த நாள் தான் புத்தாண்டாக மிக நெடுங்காலமாக கொண்டாடப் படுகிறது.

வங்காளத்தில் நபோ பர்ஷோ (Nôbo bôrsho). பஞ்சாபில் பைசாகி (Baisakhi). அஸ்ஸாமில் ரோங்காலி பிஹு (Rongali Bihu). கேரளாவில் விஷு.

இது மட்டுமன்று, இந்து, புத்த சமயப் பின்புலம் கொண்ட தாய்லாந்து, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளிலும் இந்தப் பண்டிகை வேசாக், வைசாக், விசாக பூஜா (Vesak, Waisak, Visaka Bucha ) என்ற பெயர்களில் புத்த பூர்ணிமா நாளுடன் இணைத்துக் கொண்டாடப் படுகிறது.. இந்த எல்லா சொற்களும் தமிழின் வைகாசி என்ற சொல்லுடன் தொடர்புடையவை. சூரியப் புத்தாண்டையும் சந்திர-சுழற்சி அடிப்படையிலான மாதங்களையும், பண்டிகைகளியும் பின்பற்றுவதால் இரண்டாம் மாதமான வைகாசி இந்த நாளன்று வந்துவிடுகிறது.




தமிழ் மாதங்களின் பெயர்களும், பாரதத்தின் பாரம்பரிய மாதப் பெயர்களே. எல்லா மொழிகளிலும் இந்த மாதப் பெயர்கள் (சில ஒலிக்குறிப்பு வேறுபாடுகள் தவிர) ஒன்று போலவே உள்ளன.

சம்ஸ்கிருதம் - தமிழ்
--------------------------

சைத்ர - சித்திரை (வங்காளியில் சொய்த்ரோ - Choitro)
வைசாக - வைகாசி
ஜ்யேஷ்ட - ஆனி (ஜ்யேஷ்டா அல்லது கேட்டை நட்சத்திரத்திற்கு தமிழில் ஆனி என்றும் ஒரு பெயர் உண்டு)
ஆஷாட - ஆடி
சிராவண - ஆவணி
ப்ரோஷ்டபத - புரட்டாசி
ஆஸ்வயுஜ - ஐப்பசி
கார்த்திக - கார்த்திகை
மார்கசிர - மார்கழி
புஷ்ய - தை (8வது நட்சத்திரமான புஷ்யம் (பூசம்) என்பதற்குத் தமிழ்ப் பெயர் தை. இந்த மாதத்தின் பூசம் தமிழர்களின் தொன்மையான பண்டிகை)
மாக - மாசி
பல்குன - பங்குனி


எனவே, தமிழ்ப் புத்தாண்டு என்பது பாரதத்தின் தேசிய கலாசாரத்தின் ஒரு அங்கமே. இது இட்டுக் கட்டும் சமாசாரமல்ல, இந்த எல்லா மாநில மக்களும் நன்கு அறிந்த விஷயம். உதாரணமாக வங்காளப் புத்தாண்டு பற்றிய இந்தக் கட்டுரையில், ஆசிரியர் மறக்காமல் தமிழ் மற்றும் மற்ற புத்தாண்டுகள் பற்றிக் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்.

இந்தக் குறைந்தபட்ச கலாசார அறிவு கூட தமிழகத்தை ஆளும் "கலைஞர்" கருநாநிதிக்கு இல்லையா? ஒரு மாநில அரசு காலங்காலமாக இருந்து வரும் கலாசாரப் பிணைப்பை திட்டமிட்டு அறுத்தெறிய ஏன் முயலவேண்டும்? இதில் என்ன உள்நோக்கம் உள்ளது? மார்க்சிஸ்ட்கள் ஆளும் மே.வங்கத்திலும், கிறிஸ்தவத் தாக்கம் அதிகம் உள்ள கேரளத்திலும் கூட இவ்வளவு அப்பட்டமான ஒரு கலாசார அழிப்பு வேலை கண்டிப்பாக சகித்துக் கொள்ளப் படாது.. சகித்துக் கொள்வதென்ன, இப்படி ஒரு பேச்சே எழாது.

ஆனால், தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷநரி சதிக்கும்பல்கள் மற்றூம் அவர்கள் கைப்பாவையாவும், அடிவருடிகளாகவும்ஆகிவிட்ட திராவிட இயக்கங்கள் அதன் தலைவர்கள் - இந்த இரண்டு இந்திய தேசிய விரோத சக்திகளும் கைகோர்த்துக் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

மத்திய அரசின் கலாசாரத் துறை இதில் குறுக்கிட வேண்டும். இந்திய தேசியம் மீதும், தமிழ்க் கலாசாரத்தின், மரபுகளின் தொன்மையின் மீதும் கொஞ்சமாவது அபிமானம் உள்ள ஒவ்வொருவரும் தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்க்க வேண்டும். இது சட்டசபையில் நிறைவேற்ற விடக் கூடாது.

அனைத்து அரசியல் கட்சிகள். இந்து இயக்கங்கள், சமூக, கலை, கலாசார அமைப்புகள் அனைத்தும் இதில் ஈடுபடவேண்டும். ஆயிரமாயிரம் ஆண்டுக் காலத் தொன்மைக் கலாசாரம் இந்த அற்ப அரசியல் அயோக்கியர்களின் கையால் சிதைக்கப் படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

15 comments:

ஜயராமன் said...

ஜடாயு ஐயா,

நன்றாகச்சொன்னீர்கள். ஆளுநர் உரையில் தமிழ் அறிஞர்களின் ஏகோபித்த முடிவு தையில் புத்தாண்டு என்று சொல்லியிருக்கிறார்கள். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வழக்கமான திமுக அடாவடித்தனம். தமிழகத்து மக்களை சரியான மூடர்கள் என்று தீர்மானித்து இந்த அரசு என்ன வேணும் என்றாலும் பேசுகிறது, செய்கிறது. ("எனக்கு எல்லா இராமாயணமும் தெரியும். ஹிந்தி ராமாயணத்தில் சீதைக்கு ராமன் சகோதரன்" என்று கருணாநிதி உளறியதை இங்கு ஞாபகப்படுத்திக்கொள்ளவும்).

இந்த அபாண்டமான அறிவிப்பை தமிழ்நாட்டு அரசைத்தவிர வேறு ஏதாவது வெளிநாட்டு அரசுகளோ, மத்திய அரசோ, வெளிநாடு வாழ் தமிழர்களோ அங்கீகறிப்பார்களா? மாட்டார்கள். தமிழர்களை தங்களுக்குள் துண்டு போடும் ஒரு முயற்சி இது. இதை எல்லா மானத்தமிழர்களும் எதிர்த்து தூற்ற வேண்டும்.

நன்றி

ஜயராமன்

Anonymous said...

Very well written, Jadayu.

How can Tamilians get so pathetically ignorant while understanding aspects of their ancient culture? Its a shame that the state CM gets so arrogant to declare a new "new year" for Tamils. Who is he to malign and twist such a glorious tradition? He is just the political head of a party that is ruling Tamil Nadu at present, thats all.

All self-respecting Tamils should condemn this.

// இது மட்டுமன்று, இந்து, புத்த சமயப் பின்புலம் கொண்ட தாய்லாந்து, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளிலும் இந்தப் பண்டிகை வேசாக், வைசாக், விசாக பூஜா (Vesak, Waisak, Visaka Bucha ) என்ற பெயர்களில் //

Correct. In fact, the Sinhala new year falls on the very same day as Tamil new year. This is one of the many common threads between both the cultures.

- Ramanathan

ஜடாயு said...

// தமிழகத்து மக்களை சரியான மூடர்கள் என்று தீர்மானித்து இந்த அரசு என்ன வேணும் என்றாலும் பேசுகிறது, செய்கிறது. //

உண்மை. இந்த முட்டாள்தனமான கலாசார அராஜகத்தை எதிர்த்துக் கேள்வி கேட்க ஒரு ஜந்து கூடவா தமிழக அரசியல் வட்டங்களில் இல்லாமல் போய்விட்டது?
கேவலம்!

ஜடாயு said...

அனானி, தங்கள் கருத்துக்கு நன்றி.

// Who is he to malign and twist such a glorious tradition? //

நீண்ட தமிழ்ப் பாரம்பரியத்துடன் ஒப்பிடுகையில் கருணாநிதி, அவரது கட்சி, திராவிட இயக்கம் எல்லாமே கொசுக்கள்.
தங்களுக்கு வாழ்வு இருக்கும் நேரத்தில் பறந்து ரத்தம் குடித்து, அசுத்தம் பரப்பும் கொசுக்கள்.

அரவிந்தன் நீலகண்டன் said...

வெட்கமில்லாமல் பொய் சொல்வதிலும் கருணாநிதிக்கு தனது மடத்தனத்தை நாணமில்லாமல் பீத்திக்கொள்வதிலும் கருணாநிதிக்கு இணை அவனேதான். இவனையும் இவனது சாக்கடைக் குடும்பங்களும் அதன் வாரிசுகளும் தமிழ்நாட்டையே நாற வைத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த கொலைஞனால் தமிழ்நாட்டுக்கு கிடைத்ததெல்லாம் தலைக்குனிவை தவிர வேறில்லை.

Anonymous said...

Dear Jataayu,

I am unable to write in Tamil now.

Vesak and New Year are two separate festivals. The New Year is celebrated during the fourteenth day of April in Sri Lanka by both the Hindus and Buddhists. Both people use the same Panchaangam to fix the day for New Year, therefore it is a national festival celebrated by all in Sri Lanka.

Vesak or Visakam on the other hand occurs on May 14 and it is the Birthday celebration of Buddha (for Sinhalese) and Murugan (for Tamils).

Anonymous said...

Dear Jataayu

In Sri Lanka, even the Christians celebrate Pongal & New Year. Celebrations are even held in Churches here. Therefore, I cannot understand why the Christians in Tamil Nadu are against these celebrations.

Here were an ethnic conflict rages on it is religion that plays the unifying factor. Therefore, I cannot understand why it cannot happen in India.

ஜடாயு said...

// Vesak and New Year are two separate festivals. //

Anony, thanks for the clarification. I had thought it was part of some "correction" in the calendar.

ஜடாயு said...

// Therefore, I cannot understand why the Christians in Tamil Nadu are against these celebrations. //

Anony, Christians in TN are very arrogant and fanatic-evangelists.
With the DK/DMK pawns in their hands, they want to defmae the Tamil culture (with its inseparable aspects of Hindu elements) to the core and want to Christianise it as much as possible.

In Sri Lanka also they are not angels. Probably they dont want to antoganize the self-assertive Tamil Hindus to such an extent.

Anonymous said...

தைப்புத்தாண்டு பின்னனி ஒரு மாற்றுப்பார்வை!
http://vovalpaarvai.blogspot.com/2008/01/blog-post_27.html

ஜடாயு said...

கலாசாரத்தோடு சேர்த்து கருத்து சுதந்திரத்தையும் சேர்த்தே ஒழித்திட வேண்டுமென்று கருநா கருதுவதாகத் தெரிகிறது.

இந்தப் பதிவில் குறிப்பிட்ட வரலாற்று ஆய்வுக் கட்ட்டுரையை எழுதியிருக்கும் அறிஞர் எஸ்.ராமச்சந்திரன் அவர்களுக்கு சட்டசபையில் கருணாநிதி மறைமுக மிரட்டல் விட்டிருக்கிறார் -

---------------------------------

கடந்த 23ஆம் தேதி, புதன் கிழமை, "தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும்", என தமிழக ஆளுனர் உரையில் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் செய்தி 24 அன்று நாளேடுகளில் வெளியான அதே நாளில், சித்திரையில்தான் புத்தாண்டு என்கிற தலைப்பில் திரு. எஸ். ராமச்சந்திரன் எழுதிய கட்டுரை 'தினமணி' நாளேட்டில் வெளியிடப்பட்டிருந்தது.

மொழிப்போர் தியாகிகள் நாளான 25 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில், தமிழக முதல்வர் மு. கருணாநிதி,

"தை முதல் நாள்தான் இனி தமிழர் ஆண்டின் முதல் நாள், இதை சில புலவர்கள் எதிரிக்கின்றனர். நக்கீரன் காலத்தில் 'பெயர் கொண்டான்' என்ற புலவர் இருந்தார். 'ஆரியம் நன்று தமிழ் தீது' என்று உரைத்த அவர் நக்கீரன் தந்த சாபத்தால் உயிரிழந்தார். மற்ற புலவர்கள் வேண்டியதன் பேரில், தமிழின் பெயரால் வெண்பா பாடி, அவரை மீண்டும் உயிர் பிழைக்கச் செய்தார் நக்கீரன்.

அதுபோல தற்போதுள்ள, கலிகால பெயர் கொண்டான்களுக்கும் நக்கீரன் வந்து சாபம் கொடுப்பார், அதன்பின் உங்களை மீண்டும் எழுப்ப இயலாது" என்று பேசியுள்ளார்.

மேற்படி எஸ். ராமச்சந்திரனின் பெயரைக் குறிப்பிடாது, சில புலவர்கள் என சூசகமாகப் பேசியுள்ளார் கருணாநிதி.

நன்றி: http://www.sishri.org/threat.html

---------------------------------
கருணாநிதி மற்றும் அவரது அரசின் இந்த பாசிச போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஜயராமன் said...

கலாசாரத்தோடு சேர்த்து கருத்து சுதந்திரத்தையும் சேர்த்தே ஒழித்திட வேண்டுமென்று கருநா கருதுவதாகத் தெரிகிறது.

இந்தப் பதிவில் குறிப்பிட்ட வரலாற்று ஆய்வுக் கட்ட்டுரையை எழுதியிருக்கும் அறிஞர் எஸ்.ராமச்சந்திரன் அவர்களுக்கு சட்டசபையில் கருணாநிதி மறைமுக மிரட்டல் விட்டிருக்கிறார் -
http://www.sishri.org/threat.html

கருணாநிதி மற்றும் அவரது அரசின் இந்த பாசிச போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Anonymous said...

நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் காணப்படும் செய்தியில் புலவருடைய பெயர் குயக்கொண்டான் என்று காணப்படுகிறது. முதல்வரின் மேற்கோளோ அவரைப் பெயர்கொண்டான் என்று குறிப்பிடுகிறது. (நீங்கள் காட்டியிருக்கும் மேற்கோள்--முதல்வருடையது--சரியானதுதானே?

அடுத்து ஒன்று. அந்த இரண்டு வெண்பாக்களையும் படித்தால், அவற்றின் நடையே அவை நக்கீரர் வாழ்ந்த சங்ககாலத்தைச் சேர்ந்தவை அல்ல; இடைக்காலத் தமிழ் நடை என்பது தெளிவாகப் புலப்படும்.

இடைக்காலப் புலவர்கள் பலர் திருவள்ளுவர் உள்ளிட்ட பழம்புலவர்களுடைய பெயர்களில் நிறைய இட்டுக்கட்டி இயற்றியிருக்கிறார்கள். 'பின்தூங்கி முன்எழுந்த பேதையே' என்று திருவள்ளுவர் வாசுகியைப் பற்றிப் பாடியிருப்பதாகச் சொல்லப்படும் பாடல் ஒரு சான்று.

அவரவர் தேவைக்கும் வசதிக்கும் ஏற்றாற்போல் பழம்பாடல்களையும், கதைகளையும் பயன்படுத்துகிறார்கள். 'செந்தமிழே தீர்க்க ஸ்வாஹா' என்று நக்கீரர் பாடியதாகச் சொல்லப்படும் வெண்பா, வடசொல்லோடு முடிகிறதே, அதுபற்றிக் கலைஞர் ஏதும் சொல்லவில்லையா?

Anonymous said...

நல்ல பதிவு ஜடாயு.

இது குறித்து துக்ளக் இதழில் (6 பிப்ரவரி 2008)
திரு. சோ ராமசாமி அவர்கள் எழுதியுள்ள அருமையான தலையங்கம்.

----------------

தாழ்வுற்று, வறுமை மிஞ்சிக்கிடந்த தமிழர்களின் வாழ்வு இனி மலர்ந்தது! தமிழ்ப்
புத்தாண்டு மாற்றப்பட்டு விட்டது. எல்லா அவமானங்களுக்கும் காரணமான, சித்திரை
மாத புதுவருடம் - இனி போயே போச்சு! பெருமையை அள்ளிக் கொட்டுகிற தை
மாதத்தில், இனி புத்தாண்டு பிறக்கும். தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள்
போட்டார் உத்தரவு! மாறியது புது வருடம்!!

தை மாதத்தில் அப்படி என்ன விசேஷம்? அது திருவள்ளுவர் பிறந்த மாதம்.

திருவள்ளுவர் அந்த மாதத்தில்தான் பிறந்தார் என்று ('பகுத்தறிவுவாதிகள்" ஏற்கிற
வகையில்) எப்படித்தெரியும்? இப்படிக்கேட்பதே, பகுத்தறிவுக்கு விரோதம்.

சரி, தொல்காப்பியர் - கலைஞர் கையினால் உரை எழுதப்படுகிற பெருமையைப் பெற்ற
தொல்காப்பியத்தை எழுதியவர் - திருவள்ளுவருக்கு அறுநூற்று எழுபது ஆண்டுகளுக்கு
முன்பாகவே பிறந்தாரே? அவர் பிறந்த மாதத்தில் புத்தாண்டைத் துவக்க, ஏன்
கலைஞர் ஆணையிடவில்லை? உஸ்!!! அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசக் கூடாது. இது
"கலைஞர் ஆதரவுத் தமிழறிஞர்கள்" ஏற்றுக்கொண்டுள்ள விஷயம்.

தவிர, கலைஞர் தனது முடிவிற்கு ஒரு ஆதாரமாக காட்டியிருக்கிற மாதிரி, "தை
பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழி இருக்கிறதே? ஹையா!! இப்ப என்ன
செய்வே? இப்ப என்ன செய்வே....?

சரி. இந்த மாதிரி பழமொழிகள், மற்ற எல்லா மாதங்களைப் பற்றியும்
இருக்கின்றனவே!

ஆடிப்பட்டம் தேடி விதை... புரட்டாசி சம்பா பொன் போல விளையும்... ஐப்பசியில்
அடை மழை... மாசிப்பிறையை மறக்காமல் பார்... என்று எல்லா மாதங்களைப் பற்றியும்
பழமொழிகள் சொல்வதால், அந்த மாதங்களில் ஒன்றை வைத்துப் புத்தாண்டை தொடங்க
வேண்டியது தானே? அட, அவ்வளவு ஏன்? இப்போதுள்ள சித்திரை மாதத் தொடக்கத்தையே
பார்த்தால் - "சித்திரை மழை, செல்வ மழை'; சித்திரை மாதத்து உழவு பத்தரை
மாற்றுத் தங்கம்' என்று பழமொழிகள் இருக்கின்றனவே!! அப்படியிருக்க, பழமொழிச்
சான்றைப் பார்த்து புது வருடத் தொடக்கத்தை சித்திரையிலிருந்து மாற்றுவானேன்?

இன்னும் சொல்லப்போனால், இப்போது நிச்சயமாகி இருக்கிற தை மாதத்தைப் பற்றி "தை
வரண்டது; தை மழை தவிட்டுக்கும் ஆகாது' என்ற பழமொழிகள் இருக்கின்றனவே!
தவிட்டுக்கும் ஆகாத தொடக்கமா, புது வருடத்திற்குத்தேவை?

இதோடு நிறுத்துவானேன்? கையில்தான் அதிகாரம் இருக்கிறதே! மாதங்களின் பெயர்களை
சும்மா விடுவானேன்! பெரியாரிலிருந்து தொடங்கி, அண்ணா உட்பட, தனது
குடும்பத்து அரசியல் வாரிசுகளையும் சேர்த்து, இடையில் ஒரு சில தமிழ் மொழிப்
போர்க்காரர்களையும் நுழைத்து, பெரியார் மாதம், அண்ணா மாதம்... ஸ்டாலின்
மாதம், கனிமொழி மாதம் ..... என்று பண்ணிரண்டு புதுப்பெயர்களை வைத்து
விடலாமே! கேள்வி கேட்கத்தான் யாருமில்லையே! இஷ்டத்திற்கு வைத்துக்கொள்ள
வேண்டியதுதானே!

நரகாசுரன் நல்லவன்; அவன் அழிந்த தினத்தைக்கொண்டாடுவது அநியாயம்: அதனால் அவன்
பிறந்தநாளைக் கண்டுபிடித்து, (அதற்கு சில அறிஞர்கள் கிடைக்க மாட்டார்களா, என்ன)
அந்த நாள்தான் விளக்கேற்றி கொண்டாடப்படுகிற தீபாவளி என்று அறிவித்து விடலாமே?

இந்த முதல்வருக்கும் அரசுக்கும் வேண்டியது என்ன? - ஹிந்து மத
நம்பிக்கைகளுடன் ஒன்றிய விஷயங்களை எள்ளி நகையாட வேண்டும்: ஹிந்து மத
நம்பிக்கையுடன் ஒன்றிவிட்ட பழக்க வழக்கங்களை மதிக்காமல் நடந்துகொள்ள
வேண்டும். இந்த ஒரு வகையான "ஸேடிஸம்" தவிர, இந்த புது வருட மாற்றத்திற்கு,
வேறு ஒரு காரணமும் கிடையாது.

பிரிட்டிஷார் கூட, மக்களின் நம்பிக்கைகளில், அவர்களுடைய கலாச்சாரத்தில்கை
வைக்கவில்லை. முதல்வர் அதைச் செய்ய முனைந்திருக்கிறார்.

ஆனால், ஒரு மக்கள் கூட்டத்தின் கலாச்சாரத்தை ஒரு அரசு உத்திரவு மாற்றிவிடப்
போவதில்லை. கலைஞரின் புத்தாண்டு, அவருடைய அரசின் பதிவுகளில் மட்டுமே
செல்லுபடியாகும்; ஆட்சி மாறும்போது அதுவும் கூட மாறிவிடும். அந்த
மாற்றத்திற்காக காத்திருப்போம்.

Anonymous said...

இந்த வார துக்ளக் அட்டையில் இது பற்றி வந்துள்ள அட்டகாசமான கார்ட்டூனையும் பாருங்க -

http://www.thuglak.com/thuglak/