Sunday, April 13, 2008

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! எதிர்ப்பீர் திமுக அரசின் கலாசார ஒழிப்பை!

சங்கடங்கள் தீர்க்க வரும் சர்வதாரி
சத்திய தர்மம் காக்க சக்தி தாராய்!
கங்கையுடன் காவிரியும், இமயம் தொட்டு
கடல்குமரி ஈறாகக் கைகள் கோர்த்து
பங்கமிலாப் பாரத நல் நாடுயர்க!
பாரெங்கும் பாதகர்கள் ஒழிந்து வீழ்க!
மங்களங்கள் பொங்கிடுக! மக்கள் கூட்டம்
மனையறங்கள் பாலித்து மகிழ்ந்து வாழ்க!


அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

காலம் காலமாக நம் முன்னோர் கொண்டாடி வரும் இந்தப் புத்தாண்டுத் திருநாளை அரசாணை மூலம் திரித்து உருமாற்ற முயலும் கருநாநிதி அரசின் அப்பட்டமான கலாசார ஒழிப்புத்திட்டம் மற்றும் அதன் உள்நோக்கங்கள் பற்றி ஏற்கனவே பழைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். இது பற்றி வரலாற்று அறிஞர், ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் எழுதிய சித்திரையில் தான் புத்தாண்டு என்கிற கட்டுரையையும் சுட்டியிருந்தேன்.

இந்நிலையில் இந்தப் புத்தாண்டு நாளில் திமுக அரசு இன்னும் சில அராஜக அரசாணைகள் மூலம் மக்களின் கலாசார உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது.

இன்று தமிழ்ப் புத்தாண்டு என்று பேசுவதும், எழுதுவதும் ஏதோ கொலைக் குற்றம் என்னும்படியான அல்பத் தனமான, கிறுக்குத் தனமான பயம் தமிழ்ச் சமூகம் முழுவதும், ஊடகங்கள் முழுவதும் பீடித்திருக்கிறது. "சித்திரைத் திருநாள் நிகழ்ச்சிகள்" என்கின்றன தொலைக் காட்சிகள். "சித்திரைச் சிறப்பிதழ்" என்று அறிவிக்கின்றன பத்திரிகைகள். காலை தொலைபேசி புத்தாண்டு வாழ்த்துத் தெரிவிக்கும்போது சென்னை உறவுக்காரப் பெண் ஒருத்தி "சித்திரைத் திருநாள்னு சொல்லுங்க" என்று பயந்து கொண்டே சொல்கிறார். எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா "விஷு வாழ்த்து" மட்டும் சொல்லி நிறுத்திக் கொள்கிறார்! என்ன நடக்கிறது இங்கே?



இன்று எங்கள் வீட்டு வாசல் கோலம்

இந்த அரசின் விஷக் கொடுக்குகளில் சிக்கியிருக்கும் தமிழகத்தின் முக்கிய கோயில்களில் எல்லாம் இன்று சிறப்புப் பூஜைகள் செய்யக் கூடாது, பஞ்சாங்கம் படிக்கக் கூடாது என்று இந்து அறநிலையத் துறை ஆணையிட்டியிருக்கிறது. ஜோதிட நம்பிக்கை உள்ளவர்கள் தான் பஞ்சாங்கம் படிப்பவர்கள், கேட்பவர்கள் - அவர்கள் கருநாநிதி அறிவித்த அபத்தப் புத்தாண்டு அறிவிப்பைப் சிறிதும் சட்டை செய்யவில்லை என்பது தெளிவு. ஆனால் அவர்கள் கொண்டாட விரும்பும் புத்தாண்டில் அவர்கள் நம்பும் சடங்கு ஒன்றிலும் குறுக்கிட்டு அரசு எப்படி ஆணையிட்டுத் தடுக்க முடியும்? அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம் இது!

இந்துக் கோயில்கள் எந்த நாளில், எந்தப் பண்டிகையை எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதையெல்லாம் இனிமேல் இந்த இந்து விரோத அரசே தான் முடிவு செய்யுமா? அதற்கான வெள்ளோட்டம் தான் இதுவா?

இன்னும் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்? எல்லா கோயில்களிலும் டிசம்பர் மாதம் கழுதை வாகனத்தில் ஏசு பவனி நடத்த வேண்டும், அன்று கூடவே பெரியார் என்ற பரிவார தேவதைக்கு வெங்காய அலங்காரம் செய்யவேண்டும் (அது குளிக்காது, அபிஷேகம் செய்தால் தொலைந்தார் அர்ச்சகர்!).

ஸ்டாலின் பட்டாபிஷேக உற்சவம், அழகிரி பாரி வேட்டை, கனிமொழி திருஅவதார தினம் இந்த எல்லா விழாக்களும் தான் தமிழர் தொன்மைத் திருநாள்கள். அவற்றை எல்லா கோயில்களும் கொண்டாட வேண்டும் என்றும் அரசாணை வரலாம்!

இனிமேல் தமிழ்நாட்டில் யாரும் மாவிலை கட்டக் கூடாது -சுப நிகழ்ச்சிகளில் எல்லாம் பனை ஓலை தான் கட்ட வேண்டும்.. ஏனென்றால் திராவிட நாடான இஸ்ரவேலுக்கு ஓசன்னா பாடிக் கொண்டு இயேசுவின் கூட்டம் நுழைந்த போது அந்த இலையைத் தான் ஆட்டிக் கொண்டு போனார்கள் என்பது பற்றி பத்துப் பாட்டிலும், எட்டுத் தொகையிலும் பலப் பல ஆதாரங்கள் உள்ளன என்று தமிழறிஞர்கள் ஆய்ந்து முடிவெடுத்துள்ளனர்.

மேலும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி முக்கனிகளில் பேரீச்சம்பழமும், ஆதாம் கடித்த ஆப்பிளும் சேர்க்கப் படுகின்றன. ஆரியக் கனிகளான மாம்பழத்தையும், பலாப் பழத்தையும் நீக்க தமிழக அரசு விரைவில் அரசாணை கொண்டுவரப் போகின்றது!

அடப் பாவிகளா! ஒரு மாநிலம் முழுவதும் இவ்வளவு பெரிய ஆட்டுமந்தைக் கூட்டமாகவா இருக்கிறது? தமிழ்ப் புத்தாண்டு என்று பேசும், எழுதும் அத்தனை பேரையும் அரசால் கைது செய்து விட முடியுமா? தண்டனை தான் வழங்க முடியுமா? என்ன செய்ய முடியும்? ஒரு அரசியல்வாதி, ஊடக நிறுவனம் கூடவா இதை எண்ணிப் பார்க்கவில்லை? வெட்கம் ! வெட்கம்!

ஆனால், ஆரவாரமில்லாமல் ஏராளமான தமிழர்கள் தங்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும் புத்தாண்டைக் கொண்டாடியிருக்கின்றனர். பா.ஜ.க மற்றும் இந்து இயக்கங்கள் இன்று தமிழ்ப் பண்பாட்டுக் கலாசாரக் கொலையை எதிர்த்து சிறு குரல் கொடுத்திருக்கின்றன. வேப்பம் பூப் பச்சடியில் வந்து விழும் மாம்பழத் துண்டுகள் போல, ஆறுதல் அளிக்கும் சமாசாரம்.

அடுத்து வரும் அரசு, அது எந்த அரசானாலும் சரி, இந்தக் கேடுகெட்ட சட்டசபைத் தீர்மானத்தை ரத்து செய்யவேண்டும், அடுத்த தமிழ்ப் புத்தாண்டிலாவது தங்கள் உண்மைக் கலாசாரத்தின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளும் உணர்வுள்ளதாக தமிழர் கூட்டம் மாற வேண்டும் என்று இந்த நன்னாளில் அனைத்தையும் தரிப்பவளான சர்வதாரி, அன்னை பராசக்தியிடம் வேண்டிக் கொள்கிறேன். நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்.

13 comments:

LAKSHMI NARAYANAN said...

Hi ,

Beautiful comments . today we enjoyed our tamil new year as usual.

Thanks,
Lakshmi Narayanan.V

Anonymous said...

அரபு நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இது பொருந்துமா? நா வேற ரொம்ப பேருக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லி இருக்கேன்.. நல்ல பதிவு நண்பரே...

முத்தமிழ் வித்தகரின் சீரிய ஆட்சியில் வாழும் அப்பாவித்தமிழன்

வஜ்ரா said...

முட்டாள்கள் தினமாக ஏப்ரல் 1 ஐ உலகில் பல பகுதிகளில் கொண்டாடுகிறார்கள். நாம் தை 1 பொங்கலுடன் சேர்த்து முட்டாள்கள் தினமாகக் கொண்டாடிவிடுவது நல்லது என்று நான் நினைக்கிறேன்.

தமிழ் புத்தாண்டு அன்று தான் 15 வருடங்கள் முன்பு சன் டீ.வி துவக்கப்பட்டது. அதைக் கொண்டாடும் வகையில் சன் டீ வி செயல்படுகிறது. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று தொண்டைவரை வந்து மென்னு முழுங்கி சித்திரை முதல் நாள் வாழ்த்துக்கள் என்கிறார்கள்.

Anonymous said...

Very Well Said,

Keep up the good work.

-Sreeni

அரவிந்தன் நீலகண்டன் said...

கொஞ்சம் லேட்டாயிருச்சு.
புத்தாண்டு வாழ்த்துக்கள்:
http://arvindneela.blogspot.com/2008/04/blog-post_13.html
Sorry for the dealyed response.

ஜயராமன் said...

ஜடாயு ஐயா,

புத்தாண்டு வாழ்த்துக்கள். திமுக அரசு செய்து கொண்டிருப்பது இந்து கலாசார ஒழிப்பை! இதற்கான தங்கள் பதிவு மிக அருமையாய் இருக்கிறது.

ஜயலலிதா அவர்கள் இந்துவிரோதத்தில் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்பது உண்மை. ஆனால், எதிரிக்கு எதிரி என் நண்பன் என்ற கொள்கையில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். அறிக்கை விட்டு புத்தாண்டு சித்திரை நாளுக்கு வாழ்த்தினார்கள். அதுபோல, வாழ்த்து தெரிவித்த இன்னொரு அரசியல்வாதி சரத்குமார் அவர்கள். மற்றபடி வழக்கமாக வரும் ராஷ்ட்ரபதி, பிரதம மந்திரி அவர்களின் வாழ்த்துக்கள் காணோம். கரு.நா.நிதியின் கைப்பாவையாக இருக்கும் இவர்கள் தங்கள் இழிநிலை குறித்து கவலைப்படட்டும்.

நன்றி

ஜயராமன்

Anonymous said...

1. சென்னை மற்றும் உலகெங்கிலும் ஈழ தமிழர்கள் நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடினார்கள்..

சென்னை கொண்டாட்ட படங்கள் மற்றும் செய்திகளை இங்கே பாருங்கள்...

http://www.asiantribune.com/?q=node/10545

http://www.asiantribune.com/?q=node/10511


2. ஈழப்புலி இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகன் (நம் கரு.நா.நிதியின் இதயம் இவருக்காக இடைவிடாது துடிக்கிறது என்று சொல்லிக்கொள்வார்) தமிழ்ப்புத்தாண்டு செய்தி விடுத்து தமிழ் ஈழ போராளிகளை வாழ்த்தினார்.

http://www.tamilnet.tv/index.php/sinhala-tamil-new-year-04013?blog=1

3. மலேசியாவில் எல்லா தமிழர்களும் நேற்று புத்தாண்டு விமர்சையாக கொண்டாடினார்கள்.

http://www.nst.com.my/Current_News/NST/Monday/National/2212857/Article/index_html

4. கனடா நாட்டின் அதிபர் தமிழர்களுக்கு நேற்று புத்தாண்டு வாழ்த்து அறிக்கை சொன்னார். (நம் மன்மோகன் சிங் அவர்களுக்கும், பிரதிபா பாட்டீல் ராஷ்ட்ரபதி அவர்களுக்கும் கருணாநிதி அனுமதி கொடுக்காததால் பேச முடியாமல் போனது வெட்கக் கேடு!)

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25285

5. போலந்து நாட்டில் நேற்று தமிழ் புத்தாண்டு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

http://www.polskieradio.pl/thenews/lifestyle/?id=79837

சரி, நம் தமிழ்நாட்டில். கரு.நா.நிதியின் சட்டத்திற்கு ஒரு மதிப்பும் இல்லாமல் இங்கும் தமிழ் புத்தாண்டு விமர்சை...

http://www.thaindian.com/newsportal/uncategorized/tamils-ignore-government-fiat-celebrate-new-year_10037583.html

Tamils ignore government fiat, celebrate New Year
April 13th, 2008 - 6:51 pm

Chennai, April 13 (IANS) Even as several major temples "obeyed" the diktat of the Tamil Nadu government and avoided special worship, the laity here celebrated Tamil New Year with usual gaiety Sunday. Just as the biggest Hindu Shiva temple in Mylapore area here allowed people to offer special prayers, the famed Vishnu shrine at Srirangam, 300 km south of Chennai and considered a "heaven on earth", celebrated the occasion with pomp.
The Meenakshi Amman temple at Madurai, 400 km south of here, steered clear of controversy and avoided any special prayer.
The government early this year declared that from now on, Pongal, the harvest festival falling Jan 14, would herald the Tamil New Year.
It prohibited special prayers on the traditional Tamil New Year day in all government-controlled temples. It also banned the reading of the Tamil almanac on the traditional New Year day in shrines.
Hindus across the state, however, celebrated the occasion regardless of the government's fiat. Festoons were seen everywhere and feasts were held at almost every home.
A leading Hindu priest explained why the masses ignored the wishes of the DMK government.
"The year is named 'Sarvadhari' after Lord Vishnu, in whom all Hindus believe and the term itself means 'one who bears all burdens'," said Shankara Shastri, a priest consulted by many leading business houses here.
"This is as per the Hindu calendar's 60-year cycle that has been in vogue since the time of the Vedas, of which astrology and astronomy are essential parts. And it is not just the Tamils - several Indian subcultures have a New Year almost at the same time," Shastri told IANS.
The opposition AIADMK had exhorted its workers to celebrate the occasion and "tell the government that the people do not care for orders against Indian culture and sentiment".
Several Bharatiya Janata Party (BJP) volunteers garlanded an icon of Mother India in Madurai and read the almanacs publicly to register their protest against the government.
"One does not know whether the people of Tamil Nadu will take a cue from the next New Year's name 'Virodhi' and end up believing that the ruling DMK is their enemy, which is what the word means," said political commentator and satirist Cho S. Ramaswamy.

Anonymous said...

பின்ன.. தமிழர்கள் எல்லாரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே மின்சாரம் கண்டுபிடித்து திருப்பதிக்கு அப்பாலும் க. குமரிக்கு இப்பாலும் தனியாக அமைதியாக பகுத்தறிவோடு வாழ்ந்து கொண்டிருந்தனர்.

அப்போது தை பிறக்கும் போது தைய தக்க தா என தமிழர்கள் குதித்தார்கள் என மூதறிஞர்களே குறிப்பிட்டுள்ளதால் தமிழ் புத்தாண்டு தை என்பது தெளிவாகிறது. அப்படி இருக்க,

அம்மின்சார வேலியை தகர்த்து கொண்டு வந்த ஆரிய மக்கள் புகுத்திய தால் விளைந்த சீர்கேட்டால் சித்திரை வருடம் பிறந்தது.

மாதமோ சித்திரை
மணியோ பத்தரை
உங்களை தழுவுவதோ நித்திரை
மறவாது எமக்கு இடுவீர் முத்திரை

என தான் பேரறிஞர் அண்ணாவும் பாடினாரே ஒழிய அதனை புத்தாண்டாக சொல்லவில்லை.

அப்படியிருக்க முழுக்க முழுக்க ஆரிய அடிமைத்தனத்தின் வெளிப்பாடான சித்திரையை திராவிடர்கள் கொண்டாடுவது ஏற்க இயலாத செயல்.

மின்சாரம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதால் இனி தமிழக எல்லையில் மின்சார வேலி பணிகள் விரைவில் துவங்கும். பின்னர் தமிழர் தைய தக்கதா என மீண்டும் குதிக்கத் துவங்குவர்.

வாழ்க பகுத்தறிவு!

Anonymous said...

நேற்று ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் கேட்டார்,"அடுத்தது ஹிஜ்ரி
ஆண்டும் பொங்கலன்றே துவங்கும் தமிழ்நாட்டில் என்று அறிவிப்பாரா
கருணாநிதி?" என்று.

நல்ல கேள்விதான். இந்து முண்ணனியாவது உண்மையான தமிழ் இஸ்லாமியர் சார்பாக
இந்த கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.

மசூதிகளில் தமிழ் குர் ஆன் ஓதுதல் சம்பந்தமான ஜிஓ, தலைக்குல்லாவுக்கு
பதிலாக தமிழர்களின் பாரம்பரிய முண்டாசுடன் மசூதிக்கு செல்லுதல்,
லுங்கிக்கு பதிலாக வேஷ்டி, சக்கரைப் பொங்கள் சமைத்து பாத்திஹா, அரசு
அதிகாரிகளை மசூதிகளுக்கும் தர்காக்களுக்கும் ஆணையர்களாக நியமித்தல்,
பாரம்பரிய திராவிட கட்டிடக்கலைப் பாணியில் மட்டுமே மசூதிகளைக்
கட்டவேண்டும் என்ற அரசு ஆணை - என்று அனைத்து விஷயங்களிலும் நமது தமிழ்
இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஆதரவாக இந்த திமுக அரசு செயல்படும் என்று
நினைக்கிறேன்.

சுத்தமான தன்மான தமிழ் அரசு அல்லவா இது!

Anonymous said...

Selvam,


Tamil restrictions will not apply to us, muslims. We are all muslims, we don't have any distintions based on caste, language, region, race etc. Thus, there is nothing like Tamil Muslim. We are just Muslims and we worship one God, we follow one Prophet and we use one language (Arabic) in our mosques throughout the world.

Please don't bring us into your kafir tamil agenda.

Anonymous said...

Karunanithi see Christian tamilians as Christians, Muslim Tamilians as Muslims but Hindu Tamilians not as Hindus, but tamilians..What a sadists asshole. If Aryans brought in Hinduism, then the Turkish and afgan invaders brought in Islam, and the Portuguese and English invaders brought in Christianity. He only sees Hinduism as foreign religion but not Islam and Christianity. For Karunanithi Jesus is tamilian, Mohammed is tamilian. Christianity and Islam are founded by Dravidans.... He can deny Sanskit to be read in tamils and should be read in tamil. In tamil nadu Mosque, the mullahs are reading quran in arabic. Arabic a dravidan language??? Just look what this guy is saying.....

(
tawheed follower

"Tamil restrictions will not apply to us, muslims. We are all muslims, we don't have any distintions based on caste, language, region, race etc. Thus, there is nothing like Tamil Muslim. We are just Muslims and we worship one God, we follow one Prophet and we use one language (Arabic) in our mosques throughout the world.
)

If Islam is a religion which is one, then why there are SUFI, SUNNI AND SHIA Muslims? Why moghul king Aurangazeb hated Shia muslims at the deccan and why he was such a stuanch Sunni Muslim. Why did he kill his elder brother Dara Shikoh?

The tamil muslims in Tamil Nade have no love for India and even Tamil Nadu. Their love is at Arab and Afganistan.

Your ancestor is a Hindu. You can't deny that.

The tamil muslims and tamil chritians in tamil nadu are very happy each and every time whenever Karunanithi attacks the Hindus...

They believe karunanithi is doing them a hugh favour...

ஜடாயு said...

ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து கூறினாரா இல்லையா என்று குழப்பம் இருந்தது.

அவர் விடுத்த அறிக்கை "தினபூமி"யில் வந்துள்ளது. அதில் தெளிவாக தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். அவரைப் பாராட்டுகிறேன்.

http://www.thinaboomi.com/2008/apr/13/politics/politics1.php

ஜெ. ஆட்சி அமைத்தவுடன் முதல் வேலையாக இந்த அரசாணையை ரத்து செய்வார் என்று நம்புவோம்.

Anonymous said...

unless tamizh hindus protest and throw the rowdies in dk dmk admk evr followers veeramani and close the poison pit viduthalai paper there is no end to these attrocities.also nasthika evr followers has no business to interfere with hindu traditions.
vandematharam.jaihind.