தமிழ்மணம் திரட்டியில் இருந்து விலகுகிறேன்
இலவச வலைதிரட்டி சேவை வழங்குவதாகக் கூறிக்கொள்ளும் தமிழ்மணம்.காம் இதன் நேரடி மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன என்பது பற்றிய சரியான விவரங்கள் அளிக்கத் தவறிவிட்டது.
இணையத்தில் எழுதும் ரவுடிகள் சிலரால் சென்னையில் மிரட்டப் பட்ட பதிவர் உண்மையில் இதனால் பாதிக்கப் பட்டாரா இல்லையா என்பது அல்ல பிரசினை. இதன் பின்னணியில் கேட்கப் பட்ட கேள்விக்கு - வியாபார அடிப்படையில் அல்ல, "தார்மீக அடிப்படையில்" பதிவர்களது சொந்த விவரங்கள் கூட்டுச் சேர்ந்தவர்களுக்கு (அதாவது associates) வழங்கப் படலாம் என்ற தமிழ்மணத்தின் நிலைப்பாடு கலவரப் படுத்துகிறது.
என் பதிவில் இருக்கும் தமிழ்மண கருவப்பட்டையைத் தூக்கிவிட்டேன். தமிழ்மணவான்களே, உங்கள் பாணியில் 24 மணி நேரத்திற்குள்ளோ இல்லை அதற்கும் முன்பாகவோ எனது பதிவை உங்கள் திரட்டியில் இருந்து நீக்கி விடுங்கள்.. இந்த திரட்டியில் பதிவை இணைத்ததால், ஒன்றிரண்டு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். அதற்கு உபகாரம் செய்த உங்களுக்கு நன்றி.
இந்த வலைத்திரட்டி உருவாவதற்கு முன்பே திண்ணையில் நான் எழுதிவரும் காலங்களில் இருந்து என் எழுத்துக்களைப் படித்து வரும் பழைய, புதிய நண்பர்கள், வாசகர்களுக்கு இதனால் ஒரு மாற்றமும் இல்லை... You will anyway keep coming here, folks.
முகமின்மை என்ற இணையத்தின் தன்மையே உலகெங்கும் மக்கள் எந்த விதமான அச்சமும், பீதியும் இன்றி தங்கள் கருத்துக்களை உரத்துச் சொல்வதற்கு வழி செய்கிறது. இந்தக் கருத்துத் தளத்தில் யார் சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொல்கிறார்கள் என்பதே முக்கியத் துவம் பெறுகிறது..
ஆனால் வெட்டி சாட் செஷன்கள் போன்று ஒரு விஷய்மும் இல்லாமல் நீளும், மறுமொழிகள் பட்டு உறுத்தும் பதிவுகள், சளைக்காத தனிமனித தாக்குதல்கள், பெயரிட்டு அழைத்தல், ஐ.பிக்களை துழாவி ஆளைக் கண்டுபிடித்தல், பதிவுகளில் மிரட்டுதல், நேரில் வந்து மிரட்டுதல் போன்ற செயல்கள் மூலம், தமிழ்ச் சூழலில் வலைப்பதிவுகள் என்பதற்கு ஒரு தெருநாய்ச்சண்டைக் களம், மெகா கேலிக்கூத்து என்பதாகிய பரிமாணங்களை தமிழ்மணம் உருவாக்கியிருக்கிறது.
நேற்று தமிழ் எழுத்துலகம் நன்கு அறிந்த ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கையில் அரசு நூல்நிலையங்களில் நல்ல கவிஞர்களின் நூல்களை புறக்கணித்துவிட்டு திராவிட விசிலடிச்சான் குஞ்சுகளின் நூல்களை வாங்கி சேர்ப்பது குறித்து முன்பு ஜெயமோகன் ஒரு இதழில் எழுதியிருந்தது பற்றிக் குறிப்பிட்டார் - "தரமான கவிஞர்கள் மழையில் நனைந்தபடி வெளியே நிற்க நாய்கள் மேடையேறி ஊளையிடுகின்றன" என்று. இதைக் கேட்டதும் இப்படித் தான் சொல்லத் தோன்றியது -
தமிழ் இணையத்தில் திருமலை ராஜன், அரவிந்தன், ம்யூஸ், நேசகுமார் போன்ற நல்ல பரந்த வீச்சு கொண்ட எழுத்தாளர்களை புறக்கணித்துவிட்டு நாய்களும் நரிகளும் தமிழ்மண பூங்கா முதல் நடேசன் பூங்கா வரை மரங்களிலெல்லாம் கால்தூக்கி நனைத்து அதனை பிக்காஸோ ஓவியங்களாக ஒன்றின் பிருஷ்டத்தை அடுத்தது நக்கி வால் ஆட்டுகின்றன.
10 comments:
//நாய்களும் நரிகளும் தமிழ்மண பூங்கா முதல் நடேசன் பூங்கா வரை மரங்களிலெல்லாம் கால்தூக்கி நனைத்து அதனை பிக்காஸோ ஓவியங்களாக ஒன்றின் பிருஷ்டத்தை அடுத்தது நக்கி வால் ஆட்டுகின்றன.//
ha ha ha ha
super decision. wait for some a new tamil aggreator is coming soon.
//நேரில் வந்து மிரட்டுதல் //
ஓ.. வந்தவரு தான் மெரட்டினாரா? இப்பத் தான் புரியுது.. அதான் சம்பந்தப்பட்ட பொண்ணும் அந்த அமுக தலையும் பயந்துகிட்டு அதுக்கப்புறம் பேசாமலே இருக்கானுங்களா... போகும் போது இத்த தெளிவா சொல்லிட்டுப் போனதுக்கு நன்றி..
எங்கிருந்தாலும் வாழ்க....
நானும் ஒரு தேடி வந்து படிப்பவன்...
நன்றி வணக்கம்.
//தமிழ்ச் சூழலில் வலைப்பதிவுகள் என்பதற்கு ஒரு தெருநாய்ச்சண்டைக் களம், மெகா கேலிக்கூத்து என்பதாகிய பரிமாணங்களை தமிழ்மணம் உருவாக்கியிருக்கிறது.//
after few lines you write,
//நாய்களும் நரிகளும் தமிழ்மண பூங்கா முதல் நடேசன் பூங்கா வரை மரங்களிலெல்லாம் கால்தூக்கி நனைத்து அதனை பிக்காஸோ ஓவியங்களாக ஒன்றின் பிருஷ்டத்தை அடுத்தது நக்கி வால் ஆட்டுகின்றன.//
உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலீங்ளாண்ணா? :)
பயங்கொள்ளிப் பதிவர்களுக்கு... சில வார்த்தைகள்
தமிழ்மணம் இப்பொழுதுதான் தூய்மை அடைந்து வருகிறது. அசுத்தங்கள் அகற்றப்பட்டு வருகிறது. வாழ்க தமிழ்மணம்.
தமிழ்மணம் இப்பொழுதுதான் தூய்மை அடைந்து வருகிறது. அசுத்தங்கள் அகற்றப்பட்டு வருகிறது. வாழ்க தமிழ்மணம்.
ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே
மாவோவின் கலாச்சார புரட்சியும்
ஹிட்லரின் இனத்தூய்மை முயற்சியும்
ஸ்டாலினின் பிற்போக்குவாத எதிர்ப்பும்
ஞாபகம் வருதே !
என்ன ஜடாயு இது?
இருக்கும்வரை அதன் சுகங்களையும் வசதிகளையும அனுபவித்துவிட்டு பிரச்சனைன்னதும் இப்டி கண்டபடி திட்டுறதா?
ம்.
//தமிழ்ச் சூழலில் வலைப்பதிவுகள் என்பதற்கு ஒரு தெருநாய்ச்சண்டைக் களம், மெகா கேலிக்கூத்து என்பதாகிய பரிமாணங்களை தமிழ்மணம் உருவாக்கியிருக்கிறது.
//
இதில் உங்கள் பங்கு எவ்வளவு இருந்தது என யோசித்திருக்கிறீர்களா?
//தமிழ்மணம் உருவாக்கியிருக்கிறது.//
நிச்சயமா இல்ல. இதற்கு பதிவர்கள்தான் பொறுப்பேர்க்கணும்.
நீங்கலும் நானும்.
//நடேசன் பார்க்கில் ஒண்ணுக்கிருந்து ...//
நல்ல கற்பனை.
என்னமோ போங்க மனசே கேக்கல.
Post a Comment