Tuesday, July 15, 2008

வேர்ல்டுவிஷன்(World Vision) அமைப்புக்கு நன்கொடை அளிக்காதீர்கள்!

வேர்ல்டு விஷன் (World Vision) என்கிற இந்த அப்பட்டமான கிறிஸ்தவ மதமாற்ற அமைப்பு இந்திய சமூகத்திற்கு சேவை செய்வதாக உணர்ச்சிகரமான பிரசாரத்தை பெரும் பொருட்செலவில் பல்வேறு ஊடகங்களிலும், பல்வேறு விதமான விளம்பர யுக்திகள் மூலம் செய்து வருகிறது. தொலைக்காட்சி, பத்திரிகைகள், இணையம் ஒன்று விட்டுவைக்காமல் இந்தியாவின் ஏழைக் குழந்தைகளின் முகங்களைக் காட்டி தங்கள் மத ஆக்கிரமிப்பு அரசியல் அதிகாரத்திற்கு நியாயம் கற்பிக்கும் இந்த அமைப்புக்கு பல மத்திய வர்க்க இந்துக்கள் அப்பாவியாக நன்கொடைகளும் அளித்து வருகின்றனர்.

உலகெங்கும் NGO என்ற போர்வையில் தன் கரங்களை விரித்திருக்கும் இந்த அதிகார அமைப்பு அப்பட்டமான கிறிஸ்தவ மதவெறியர்களாலும், அடிப்படை வாதிகளாலும் நடத்தப் படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தங்கள் எஜமானர்களிடமிருந்து பெறும் கணக்கிலடங்கா பணபலம் போதாதென்று இந்த அமைப்பு நடுத்தர வர்க்க இந்தியர்களைக் குறிவைத்து, அவர்களிடம் நன்கொடைகள் வேண்டி பயங்கர பிரசாரமும் செய்கிறது.

திடீரென்று உங்கள் முகவரிக்கு வேர்ல்டு விஷனிடமிருந்து ஒரு கடிதம் வரும் -ஆந்திராவில் ஒரு குக்கிராமத்தில் உள்ள ஆஞ்சனேயா என்ற சிறுவனுக்கு உதவுங்கள் என்ற அப்பாவித் தனமான கோரிக்கையோடு. அந்த வண்ணமயமான விளம்பர நோட்டீசில் லேசாக ஓரத்தில் "World Vision is a Christain Charity" என்று குறு-அச்சில் (fine print) இருக்கும், கிரெடிட் கார்டு பில்களில் சம்பிரதாயமாக பின்பக்கம் அச்சிட்டிருப்பது மாதிரி.. இவர்களுக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு அதனால் பயன்பெறுபவர்கள் என்று சிறுவர் படங்கள் பளபள லேமினேட்டில் அனுப்பி வைக்கப் படும் - இதைப் பெருமையாக, என் இந்து நண்பர் ஒருவர் காண்பிக்க வேறு செய்தார்!

ஏழைகளுக்குத் தானே உதவுகிறார்கள், அதனால் என்ன என்று காஷுவலாக இவர்களுக்கு நன்கொடை அளிக்கும் மேல்தட்டு, நடுத்தர வர்க்க இந்துக்களே !

நீங்கள் கஷ்டப் பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தை எந்த கிறிஸ்தவ மிஷநரி அமைப்புக்கும் தயவு செய்து கொடுக்காதீர்கள். உங்கள் தர்மத்தையும், நம்பிக்கையையும் குழிதோண்டிப் புதைப்பதற்காக ராப்பகலாக வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு பேய்த்தனமான ஆக்கிரமிப்பு நிறுவன சக்தியின் கரங்களை உங்கள் பணத்தால் வலுப்படுத்துவது தற்கொலைக்கு ஒப்பான செயல் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? இது நீங்கள் வணங்கும் தெய்வத்திற்கும், உங்கள் முன்னோர்களின் புனித நினைவுக்கும், உங்களை ஊட்டி வளர்த்த இந்த மண்ணுக்கும், நீங்கள் அங்கம் வகிக்கும் இந்து சமுதாயத்திற்கும் இழைக்கும் துரோகம் அன்றி வேறில்லை.

ஏனென்றால், இவர்களது விஷன் உலக நல்வாழ்வோ, மனித சுதந்திரமோ அல்லவே அல்ல. மேற்கில் தேய்ந்து, மறைந்து, சிதறி வரும் கிறிஸ்தவ அரசியல் அதிகாரத்திற்கு வளரும் நாடுகளில் இடம் தேடுவது, அவ்வளவே. தங்கள் குப்பைகளை வெளிநாடுகளில் கொட்டுவதற்குக்
காண்டிராக்ட் தருவது போல, தாங்களே நம்பாத கிறிஸ்தவத்தை இந்தியாவிலும், சீனாவிலும் மார்க்கெட் செய்வது வணிக, அதிகார நோக்கில் சாதகம் தரும் என்று தான் மேற்கு நாடுகளின் சில செல்வந்தவர்களும், நிறுவனங்களும் இத்தகைய "விஷன்"களுக்கு ஆதரவும், பொருளுதவியும் அளித்து வருகின்றனர், இதன் பின் எந்த "ஆன்மிக" நோக்கமும் இல்லை.

கிறிஸ்தவ மிஷநரிகளின் வரலாறு முழுவதும் அதைத் தான் சொல்கிறது.


வேர்ல்டு விஷன் மட்டுமல்ல, பல வேடங்களில் சமூக சேவை என்ற போர்வையில் மதமாற்றம் செய்யும் அனைத்து அமைப்புகளையும் இந்துக்கள் தவிர்க்க வேண்டும். இதோ ஒரு பட்டியல் -


நீங்கள் சமூகப் பணிகளுக்காக நன்கொடைகளும், உதவிகளும் கண்டிப்பாக செய்ய வேண்டும். ஏராளமான இந்து அமைப்புகள் எந்தக் கூச்சலும் இல்லாமல், மிகப் பெரிய அளவில், எந்தப் பாரபட்சமும் இல்லாமல் இந்தியர்கள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் அருமையான சேவைப் பணிகளைச் செய்து வருகின்றன. அந்த அமைப்புகளுக்கு உதவலாமே !


அது மட்டுமில்லாமல், உங்கள் ஊரில், நீங்கள் வாழும் பகுதியிலேயே கல்வி, மருத்துவம், சுயதொழில் போன்றவற்றுக்கு உதவும் பல சிறு அமைப்புகள் இருக்கலாம். எந்த உள்நோக்கமும் இல்லாத இத்தகைய அமைப்புகள் ஆரவராமில்லாமல் பல நல்ல பணிகளைச் செய்துவரும். அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தும் நீங்கள் உதவலாமே!

இந்திய தேசிய ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் விரும்பும் கிறிஸ்தவர்களும் வேர்ல்டு விஷன் போன்ற மதமாற்ற அமைப்புகளின் செயலுக்குத் துணைபோகக் கூடாது. உள்நோக்கம் இல்லாத சமூக சேவையை மட்டுமே அவர்கள் ஆதரிக்கவேண்டும்.


மகாத்மா காந்தி சொல்கிறார் -

“எனது அச்சம் இது தான் – இந்து மதம் பொய் என்று இப்போதைக்கு கிறித்தவ நண்பர்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் அவர்களது மனதில் இந்துமதம் தவறானது, தாங்கள் நம்பும் கிறித்தவ மதமே உண்மை என்ற எண்ணங்களை வளர்த்து வருகிறார்கள். இப்போது நடக்கும் கிறித்தவ (மதமாற்ற) முயற்சிகளையெல்லாம் பார்க்கும்போது, இந்துமதத்தின் அடிப்படையை வேரறுத்துவிட்டு அங்கு வேறு ஒரு மதத்தை நிறுவப் பார்ப்பது தான் அவர்களது நோக்கம் என்பது புரியும்”

– ஹரிஜன், மார்ச் 13, 1937.

“என்னிடம் மட்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்தால், எல்லா மதமாற்றங்களையும் நிறுத்தி விடுவேன். இந்து குடும்பங்களில் ஒரு மிஷநரியின் வருகை என்பது குடும்பத்தைக் குலைக்கும் செயல்; உடை, ஒழுக்கம், மொழி, உணவு உள்பட கலாசாரத்தையே மாற்றும் செயல் என்றே ஆகிவிட்டிருகிறது”

- ஹரிஜன், நவம்பர் 5, 1935.

35 comments:

Anonymous said...

Dear Jatayu,
A timely warning to Hindus.
Many educated Hindus are misled by the brochures that the Worldvision sends to the credit card holders through the Banks issuing the cards.
Unfortunately, the efforts of discerning Hindus fall on their deaf years and World vision organisations under the hegemony of Protestant Missions in foreign countries continue to thrive at the cost of Hindus.

Anonymous said...

ஜடாயு,

வெளிப்படையாக world vision நிறுவனத்தை தோலுரித்து தாங்கள் எழுதிய பதிவைப் பாராட்டுகிறேன்.

பணக்கார இந்துக்களின் பணத்தை வாங்கிக் கொண்டு கூசாமல் அதை கிறிஸ்தவ மதமாற்றத்துக்கு செல்வு செய்யும் கயவர்கள் இவர்கள்.

இந்த செய்தி இந்துக்கள் அனைவரையிம் சென்று சேர வேண்டும்.

நன்றி.

ராமச்சந்திரன், கோவை

Anonymous said...

Thanks a lot for the ALERT message Jadayu.

The Blacklist that you have given link to is SO Big. These evangelist groups are working so aggressively in almost every nook and corner of India. Horrible!

It is not social service or any lofty motive, as you have rightly said. These Christian conversion groups are like a parasite. The sooner the Indian people control them, the better.

charmlee said...

One of the murderers of Swamy Laxmananda apprehended today was an employee of World Vision !

They deserve to be ostracised.

Anonymous said...

What you have stated is absolutely correct and true.
Worldvision is nothing but Christianvision.
Their main aim is to convert Hindu kids with their parents to Christianity.
Hindus should not contribute a single pie to this sectarian NGO.

Anonymous said...

Please write about Corporate Social Responsibility programs of all these IT/Multi National Companies, to promote awareness.

These companies collect money from their employees and/or donate money as well but there is no accountability on how this money (which runs into several lakhs of Rupees) gets spent or to be precise, which charities get this money.

In several cases, such money collected from the majority religion gets to the minority religion and is used to convert ! The objectionable part is not the conversion itself, but using the money collected from one group to convert their people, without their knowledge. If the employees know where the money goes, then they would take up the issue with the respective companies themselves.

balajinitesh.s said...

ungaludaya unmaiyana karuthu eankalai eluchiudan velippudan eruika uthaum

sali said...

மதமாற்றத்துக்கு பணம் மட்டும் ஒரு காரணமாக இருக்காது.அதுவும் ஒரு காரணமாக இருக்கும்.அதனால் பிற காரணங்களையும் ஆராய்ந்து அதை போக்க இந்து ஆன்மிக தலைவர்கள் பாடுப்பட வேண்டும்

Anonymous said...

The worst offers are the Nadar Christians in Tamil Nadu. They go to each and evry corner of Tamil Nadu and convert poor to Christanity. I have few friends of Nadar Christians. They move only amongst them and they do not mingle with Hindus. Maximum they can accept Nadars but not others.

kumar said...

The biggest offenders are Nadar Christains of Tamil Nadu. There good number of them in Abu Dhabi. They move amungst themselves, maximum they can accept only Nadars, but not others. They try to get jobs only for Nadar christain community in Oil Companies.

பிரத்யூஷ் ராமகிருஷ்ணன் said...

நன்றி ஜடாயுஅவர்களே
மிக்க நல்ல பதிவு ,“எனது அச்சம் இது தான் – இந்து மதம் பொய் என்று இப்போதைக்கு கிறித்தவ நண்பர்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் அவர்களது மனதில் இந்துமதம் தவறானது, தாங்கள் நம்பும் கிறித்தவ மதமே உண்மை என்ற எண்ணங்களை வளர்த்து வருகிறார்கள். இப்போது நடக்கும் கிறித்தவ (மதமாற்ற) முயற்சிகளையெல்லாம் பார்க்கும்போது, இந்துமதத்தின் அடிப்படையை வேரறுத்துவிட்டு அங்கு வேறு ஒரு மதத்தை நிறுவப் பார்ப்பது தான் அவர்களது நோக்கம் என்பது புரியும்”

– ஹரிஜன், மார்ச் 13, 1937.

“என்னிடம் மட்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்தால், எல்லா மதமாற்றங்களையும் நிறுத்தி விடுவேன். இந்து குடும்பங்களில் ஒரு மிஷநரியின் வருகை என்பது குடும்பத்தைக் குலைக்கும் செயல்; உடை, ஒழுக்கம், மொழி, உணவு உள்பட கலாசாரத்தையே மாற்றும் செயல் என்றே ஆகிவிட்டிருகிறது”

- ஹரிஜன், நவம்பர் 5, 1935


மதசார்ப்பின்ம்யின் ஹோல்சேல் டீலர்களான காங்கிரஸ் மற்றும் அதன் சார்பு கட்சிகளும் இதனை படிக்க வேண்டும்.
துணிந்து மதமாற்றத்தடை சட்டத்தை அமுல் படுத்தியவர் ஜெயாம்மா அவர்கள்,
துரதிர்ஷ்டவசமாக அதனை அவர்களே பின்னாளில் வாபஸ் பெறவேண்டியது ஆயிற்று ,அரசியல் நிர்பந்தம்.

இம்மாதிரி பதிவுகள் வலைதளத்தில் வோடிங்கும் அதிகம் பெறவேண்டிய நிர்பந்தம் உள்ளது அதிக வோடிங் இருந்தால் நிறைய பேர் இதனை படிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் ,
விழிப்புணர்வு எற்படும்.

பிரத்யூஷ் ராமகிருஷ்ணன்
கோயம்புத்தூர்

மணிகண்டன் said...

ஜடாயு

அணைத்து இந்து மக்களும் படிக்க வேண்டிய தளம் உங்களுடயுது
மற்றும் உங்கள் பணி தொடர ஈசன் அருளட்டும்

Anonymous said...

Their corporate logo says it all- a stylized flickering cross that resembles a star! The fellows have silently penetrated into Hindu households by thrusting a donation card into the hands of unsuspecting children in primary schools who go around enthusiastically approaching adults with a request for contributions! When a 5-year old child requests you donations, you will not have the heart to refuse. 99% of the people will be bowled over by the seemingly good intentions. You are poorer by a few rupees and would have inadvertently helped to sharpen the ax used for chopping down the Hindu tree.

john sabin raj said...

என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்.

சந்தோஷப்பட்டு, களிகூருங்கள், பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
மத்தேயு-அதிகாரம் 05,11to12

raju said...

Your information should spread throughout the India. I insist my friends that you should donate directly to the affected person by cash or kind,and verify your donations are utilising in a correct way. In this worldvision, we cannot see what happened to your money. On the other hand it is used for convertion means, they should be suppressed and thrown away from the hindu country like us.

raju said...

this type of trusts are there in India, and their work is to convert the hindu people to christianity. I insists our friends and relatives, donate the amount where there is a genuine hindu trust and follow up should be made about your money spent by them. We cannot see that our donations reaches in a good cause in this type of trusts. Keep it up and expecting your further informations

Anonymous said...

These people buy or even steel email ids and phone numbers from banks and contact everyone. Beware of these cheap converts.

radha said...

மிஷனரிகளின் நோக்கத்தைத் தோலுரித்துக் காட்டியதோடு நிற்காமல், பல நல்ல சேவை அமைப்புக்களின் பட்டியலையும் தந்துள்ளது சரியான செயல். வெகு நாட்கள் தமிழ் ஹிந்து தளத்தில் இருக்கும் இந்த அறிவிப்பை நானும் சட்டை செய்யாமல்தான் இருந்தேன். ஆனால் இன்று... என் மின்னஞ்சல் முகவரிக்கு இந்த World Vision ஓலை அனுப்பியிருந்தது. அதன் பிறகுதான் இந்தத் தளத்தின் இந்தச் சேவையைப் படித்துப் பார்க்க வேண்டி வந்தது. நன்றி. உண்மையில் ஹிந்து சேவை அமைப்புகளின் பட்டியலைத் தந்துள்ளதற்காக மிக்க நன்றி.

thustheheer said...

our god give u a long and healthy life;

Anonymous said...

ஜட்யு அவர்களுக்கு

தங்களுடய வேர்ல்ட் விஷனுக்கு நன்கொடை கொடுக்க வேண்டாம் என்ற விசயம் அதன் தொகுப்பாக வெளியிடப்பட்ட செய்திகளும் எல்லா ஹிந்துக்களையும் சென்றடையவேண்டும் அதுபோலவே கிறிஸ்துவ வளர்ச்சி அவர்களின் சூழ்ச்சிமுதலியவைகள் கன்ஷ்டண்டின், தியோடர், ஹெனோரிஸ் காலதில் இருந்து ஆராய்ச்சி செய்து எவ்வாறு தற்போதிய கிறிஸ்துவ சருச் என்ற மக்களை அடிமை படுத்தும் அமைப்பாக மாறியது எவ்வாறு ஐரோப்பிய மக்களை அடிமைப்படுத்தியது முதலனவிஷ்யங்களை சர்வதேச அளவில்கொண்டுசெல்ல வேண்டும் அப்போதுதான் இவர்களுக்கு கிடைக்கும் நிதி மற்றும் அரசு சார்பான அதிகாரங்கள் குறையும். ஐரோப்பிய, அமெரிக்க மக்களும் உண்மையை உணர்வார்கள். இது மட்டுமே இப்போது ஹிந்துக்களுடைய கைகளில் உள்ள ஒரே துருப்பு சீட்டு. இதற்க்கன எந்த உதவியும் ஹிந்துக்களுக்கு கிட்டுவது மிகவும் கடினம். இவை அணைத்தும் கிறிஸ்துவ சருச் கைகளில் வைத்து காப்பாற்றப்படுகிறது. நமது புராணங்களில் சொல்லப்படும் ஹிரண்யாட்சன் மற்றும் ஹிரண்யகசிபு போல கிறிஸ்துவ சருச் இஸ்லாமிய அமைப்புகளும் உள்ளன. அதை பின்பற்றுபவர்கள் உண்மையை உணரவேண்டும்.

வே நாராயணன்

சாணக்கியன் said...

இந்த அமைப்புக்கு நன்கொடை கொடுக்கலாமே என நான் பலமுறை நினைத்திருக்கிறேன். ஆனால் அவர்கள் உண்மையாகவே தொண்டு செய்தாலும் அவர்களின் உள் நோக்கம் மதமாற்றமாகவே இருக்கும் என்பதாலும் ஒரு குறிப்பிட்ட மாணவனுடன் commitment/attachmetn எடுத்துக்கொள்ள விருப்பம் இல்லாததாலும் செய்யவில்லை. நல்ல வேளை... ஈஷாவில் இதே போல் மாணவர்களை தத்தெடுத்துக்கொள்ளும் திட்டம் உள்ளது. அதற்கு நன்கொடை அளிக்கலாம்...

சரவண பவன் said...

தங்களது கட்டுரை கூறுவது முழுக்க முழுக்க உண்மை. நான் இத்தகைய கயவர்களால் பாதிக்கப்பட்டுள்ளேன். இவர்கள் எனது மனைவியை பிரைன் வாஸ் செய்து மதமாற்றத்திற்கு தயார் படுத்தி வைத்திருக்கிறார்கள். இவர்கள் எனது மனைவியை எனக்கு எதிராக திசை திருப்பி எனது குடும்பத்தை சின்னாபின்னமாக சிதைத்து விட்டார்கள்.

இப்போது எனது மனைவி என்னையும் மதம் மாற்ற முயன்று, நான் அவற்றுக்கு ஒத்து வராததால் வரதட்சனை கொடுமை, 488ஏ போன்ற வழக்குகளை என் மீதும் எனது உறவினர்கள் மீதும் போடுவேன் என்று மிரட்டி வருகிறார்.

இந்திய நீதித்துறையும் இதுபோன்ற விசயங்களிலி ஏற்கனவே காங்கிரஸ் அரசால் திட்டமிடு போடப்பட்ட இப்படிப்பட்ட அரக்கத்தனமான சட்டஙகளால் முடக்கப்பட்டு விட்டதால் என்னால் எதுவும் செய்ய இயலாமல் தவித்துக் கொண்டுள்ளேன்.

இந்திய உச்ச நீதி மன்றம் இந்த 498ஏ சட்டத்தை "குடும்ப தீவிரவாதம்" என்று கூறி அதனை மறுபரிசீலனை செய்யுமாறு பலமுறை அரசுக்கு பரிந்துரைத்தும், இந்து மதத்தை அழிப்பதையே முக்கிய நோக்கமாகவும், தலையாய கடமையாகவும் கொண்டுள்ள காங்கிரஸ் அரசு அந்த பரிந்துரைகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு, மேலும் சில அரக்கத்தனமான சட்ட பிரிவுகளை (அ) புதிய சட்டங்களை இந்து திருமணச் சட்டத்தில் சமீபத்தில் ஏற்படுத்தி உள்ளது.

இதன் முலம் இந்திய (குறிப்பாக இந்துக்களின் குடும்ப கலாசாரத்தை) சீர்குலைத்து, இந்தியாவையே ஒட்டு மொத்தமாக அழிப்பதே இந்த காங்கிரஸ் அரசின் எதிர்கால திட்டமாக உள்ளது.

சரவண பவன் said...

பின் குறிப்பு - காங்கிரஸ் அரசுக்கும் இத்தகைய மதமாற்ற நிறுவனங்களுக்கும் நெருங்கிய தெடர்பு இருப்பது போல் தோன்றுகிறது.

Anonymous said...

petravalai maranthu matravargalai petrorgalaga mathikkum mada hinthukkaluku ithu oru nalla padam

Anonymous said...

Dear Brother Jattayu,
Greetings. I cannot agree your comments on World vision. It is not a conversion troop. Did you see what they are doing. Please have a personal visit to their office, then tell the people what you have seen. Dont write what your own mind says and spoil Indian's real belief on True God. Thank you.
Muthu

Anonymous said...

About 4 years back my daughter was working in a software industry in Chennai. This organisation met her in the above premises and asked for a donation in the name of destitute children.being sympathetic by nature she gave them a handsome amount.After some time they approached her for another donation and started speaking sweetly about a religion. they tried to influence her and my daughter spoke about me on that day. I had some knowledge about this NGO and told her to be cautious. Again the tried to influence her and said that she would benefit if she follows that religion. She politely turned them out with the help of her colleagues.I dont know how they entered this high security zone. This practice should be curbed to prevent forcible conversion.

Anonymous said...

World vision is a christian missionary. It has many companies under its head- Hope international, god hope, vision fund jaipur and many other countries. Worldvision funded missionaries against the kundankular atomic project. Also they are engaged in conversion agenda and collect donations from indian public. Word vision was previously headed by congress M Ps as chairman and in charge. In orissa they funded money to moaists to kill swami chandradas in kandhanmal resulting a big riots.

Anonymous said...

ஒரு யுகம் என்பது 100 வருடங்கள் , ஒவொரு யுகத்திலும் மனிதனின் நாகாரீக வளர்ச்சி அறிவு வளர்ச்சியைப் பொறுத்து உணவு உடை குணங்கள் முதலியவைகள் மாறுபட்டது, நாட்களின் முடிவு நெருங்கிவிட்டதாகவே அனைத்து வேதங்களும் கூறுகின்றன ? கடைசி நாட்களில் மனிதர்கள் பொய்யை விரும்புவார்கள் நம்புவார்கள் , அறிவு பெருகிபோகும், அழிவை நோக்கி ஓடிக்கொண்டு
இருக்கிறார்கள் ! எப்பொருள் கேட்ப்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு .என்பது சான்றோரின் வாக்கு !! நம்முடைய அரிவைக்கொண்டு கடவுளைக் கண்டுபிடிக்கமுடியாது !! நம்முடைய அரிவைக்கொண்டு கடவுளை உருவாக்கவும்
முடியாது !! கடவுளே வாசற்ப்படியில் நிற்கிறார் , இதயக்கதவை திறக்கவேண்டும் !
திறந்த இதயத்துடன் கடவுளை தேடவேண்டும் !! முடியுமா ??

Anonymous said...

இந்த அமைப்புக்கு நன்கொடை கொடுக்கலாமே என நான் பலமுறை நினைத்திருக்கிறேன். ஆனால் அவர்கள் உண்மையாகவே தொண்டு செய்தாலும் அவர்களின் உள் நோக்கம் மதமாற்றமாகவே இருக்கும் என்பதாலும் ஒரு குறிப்பிட்ட மாணவனுடன் commitment/attachmetn எடுத்துக்கொள்ள விருப்பம் இல்லாததாலும் செய்யவில்லை. நல்ல வேளை... ஈஷாவில் இதே போல் மாணவர்களை தத்தெடுத்துக்கொள்ளும் திட்டம் உள்ளது. அதற்கு நன்கொடை அளிக்கலாம்...ஒரு யுகம் என்பது 100 வருடங்கள் , ஒவொரு யுகத்திலும் மனிதனின் நாகாரீக வளர்ச்சி அறிவு வளர்ச்சியைப் பொறுத்து உணவு உடை குணங்கள் முதலியவைகள் மாறுபட்டது, நாட்களின் முடிவு நெருங்கிவிட்டதாகவே அனைத்து வேதங்களும் கூறுகின்றன ? கடைசி நாட்களில் மனிதர்கள் பொய்யை விரும்புவார்கள் நம்புவார்கள் , அறிவு பெருகிபோகும், அழிவை நோக்கி ஓடிக்கொண்டு
இருக்கிறார்கள் ! எப்பொருள் கேட்ப்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு .என்பது சான்றோரின் வாக்கு !! நம்முடைய அரிவைக்கொண்டு கடவுளைக் கண்டுபிடிக்கமுடியாது !! நம்முடைய அரிவைக்கொண்டு கடவுளை உருவாக்கவும்
முடியாது !! கடவுளே வாசற்ப்படியில் நிற்கிறார் , இதயக்கதவை திறக்கவேண்டும் !
திறந்த இதயத்துடன் கடவுளை தேடவேண்டும் !! முடியுமா ??

Chandra Vembady said...

இந்துக்கள் முதலில் தங்களுக்குள் ஒற்றுமையாக வாழக் கற்றுக்கொள்ளவேண்டும். ஒற்றுமையே பலம், இதன் மூலம் மதமாற்றத்தை தடுக்கும் சக்தி ஓங்குவிக்கும்.
CHANDRA ESANA SIVASAKTHI

Manickavelu Manickam said...

என் குடும்பத்தில் ஏற்ப்பட்ட சிறு பிரச்சனைகளை தீர்ப்பதாக சொல்லி என் குடும்பத்தில் நுழைந்து முதலில் சிந்தையால் பலகினமான என் மனைவியை மயக்கி (மேஸ்பரிசம் )மதமாற்றம் செய்து (ipc பெந்தெகோஸ்தெ ) அடுத்து என் இரு மகள்களையும் மற்றிவிட்டர்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் என்னை விட்டு( குடும்பத்தை சிதைத்துவிட்டு)போய்விட்டார்கள் அதோடு இல்லாமல் என்னையும் ipc கு மாறச்சொல்லி என் மனைவி மகள்கள் , ipc பாஸ்டர் என்னை வற்புருத்தினர் தனிமைப்படுத்தப்பட்ட நான் எனது தாய்தகப்பன் வீட்டுக்கு வந்துவிட்டேன் ஓரு வருடம் போன பின்பு எனது அம்மாவுக்கு உடல்நிலை மோசமானது (வயதனதினால்)என் மனைவியிடத்தில் போய் நம் குடும்பத்தில் உள்ள முதியவர்களுக்கு கடைசிகால கடைமைகளை செய்யவேண்டியது நமது கடமை எனவே குடும்பம் நடத்த வரும்படி நானும் என் அப்பவும் அழைத்தபோது நீங்கள் இருக்கும் வீட்டில் உள்ள சாமிபடம் சிலைகள் எல்லாம் சாத்தான்கள் அவைகளை எடுத்து குப்பையில் போடுங்கள் வருகிறேன் என்று சொல்லி எங்களை திருப்பி அனுப்பிவிட்டால்(சில மாதங்களில் அம்மா இறந்து விட்டார்) அனால் இன்று நாங்களே வீடு பெருக்கி துணி துவைத்து பாத்திரம் துலக்கி சாப்பாடு செய்து நானும் அப்பவும் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனவே உஷார் உஷார் உஷார் உஷார் மக்களே கோஞ்ஜம் இடம் கொடுத்தால் (ipc பெந்தேகொஸ்தே)காரர்கள் குடும்பத்தை பிரித்து சிதைத்து சின்னாபின்னமாக்கி விடுவார்கள் ஜாக்கிரதை ஜாக்கிரதை ஜாக்கிரதை மக்களே பாதிக்கப்பட்டவன் அ.மாணிக்கவேலு

parthiban kandaswamy said...

organization (NGO) : If the dollar value of 500 in foreign money, [ $ 500* Rs 60 indian rupees = Rs 30, 000 ], but we only 500 rupees Instead give. The remaining money the federal / state to be added to statecoffers. But the salary persons not follow this method only non-governmental organization (NGO), because the extra money may go to corruption or terrorist or Conversion religion.

Sakuntala Nagesan said...

Jatauyu Sir, Namasthe
I am narrating an incident I witnessed in Melbourne, Australia. I went to a Bible Study class organised by the Salvation Army in Melbourne. A salvation Army employee from Bombay said, his name is Paul, and his wife's name is Anandi. in the Salvation Army in Bombay, he said he is a Major. The people in Bible Study Group were wonder-struck and said a Major position is a big position in Salvation Army. He said he sacrifised his life to spread the message of Jesus Christ. His son is an Australian Citizen and is working here in Melbourne. This man, Paul was visiting his son in Melbourne. Paul said " Hindus in India are rich. We Christians are poor, Hindus are our bosses. Hindus do idol worship. The Salvation Army in Bombay, he said, feeds the poor people. They also teach the poor people some skills like wood work, building construction work. He said,after training the poor to get some job," we ask them do you want to become Christians?". If they consented to become Christians, we convert the Hindus to Christians" What a blatant lies. He came to Melbourne branch of the Salvation Army to abuse the peceful Hindus to the foreigners who will think we Hindus are bad people. Why can't the Salvation Army convert the Muslims to Christians?

The Christians steal our ancestors wisdom and claim it as their own. For example, I saw an advertisement in a shopping centre in Melbourne. The advertisement asked for people to join Christian Yoga class. Yoga in an Indian word. Since when the Christians had Christian Yoga?

This is how our Ancestors wisdom is stolen and Claimed it as their own, by the foreigners.

I want my fellow Hindus know how we are abused by the Christians.

warm regards

Shakuntala

Sakuntala Nagesan said...

Jatauyu Sir, Namasthe
I am narrating an incident I witnessed in Melbourne, Australia. I went to a Bible Study class organised by the Salvation Army in Melbourne. A salvation Army employee from Bombay said, his name is Paul, and his wife's name is Anandi. in the Salvation Army in Bombay, he said he is a Major. The people in Bible Study Group were wonder-struck and said a Major position is a big position in Salvation Army. He said he sacrifised his life to spread the message of Jesus Christ. His son is an Australian Citizen and is working here in Melbourne. This man, Paul was visiting his son in Melbourne. Paul said " Hindus in India are rich. We Christians are poor, Hindus are our bosses. Hindus do idol worship. The Salvation Army in Bombay, he said, feeds the poor people. They also teach the poor people some skills like wood work, building construction work. He said,after training the poor to get some job," we ask them do you want to become Christians?". If they consented to become Christians, we convert the Hindus to Christians" What a blatant lies. He came to Melbourne branch of the Salvation Army to abuse the peceful Hindus to the foreigners who will think we Hindus are bad people. Why can't the Salvation Army convert the Muslims to Christians?

The Christians steal our ancestors wisdom and claim it as their own. For example, I saw an advertisement in a shopping centre in Melbourne. The advertisement asked for people to join Christian Yoga class. Yoga in an Indian word. Since when the Christians had Christian Yoga?

This is how our Ancestors wisdom is stolen and Claimed it as their own, by the foreigners.

I want my fellow Hindus know how we are abused by the Christians.

warm regards

Shakuntala

Sakuntala Nagesan said...

Major Paul from The Salvation Army in New Delhi visited the Salvation Army branch in Watton Street, Werribee Victoria in Melbourne Australia with his wife Anandi ( which is a Hindu name) in April this year, 2017. I am a Hindu from Coimbatore living in Melbourne for the past 30 years. I happened to participate in the Bible Study group in the above branch of the Salvation Army. Paul said to the people in the bible study group that "Hindus do idol worship. Hindus are rich. We are poor. We have to work for the Hindus. They are our boss. The Salvation Army in India not only feeds the poor but it teaches the poor some life skills like wood work, Carpentry etc., After training them to get a job, we get jobs for them, and we ask do you want to become Christians?". The people in this study group were listening to his blatant lies with rapt attention.

It is not enough for these Christian fanatics to talk evil about us the noble Hindus in India. They come to foreign countries at the expense of our Indian Government to poison the minds of the locals about us the Hindus. The Salvation Army workers from India come to Melbourne and show the videos about the dirty slums in Ooty and other places, and deliver hatred speech about the Hindus to the audience in the Salvation Army's Church that they helped the poor people in Nilagiri District (the Thodas). I saw these videos and heard their hatred speech about the Hindus on Easter Sunday this year in the Salvation Army Church in Werribee of Melbourne.

The Salvation Army in Melbourne conduct Christian Yoga classes ( of course for a fee). They steal our ideas and claim as their own. Since when Christ developed Yoga postures? These Christians in India, even after becoming Christians keep our Hindu names and do not hesitate to abuse us and tell lies about us.
Hindus are not the only people living in India, there are Jains, Sikhs, Parsees, Muslims, Sufis and Muslims. Why these Christians pick on us the Hindus?

Please, my fellow Hindus, do not donate any money to any Christian Missonary or any Christian Church.