Wednesday, January 24, 2007

மதமாற்ற பிரசாரத்திற்கு எதிராக பெங்களூர் கிறித்தவர்கள்

இந்திய கிறித்தவர்கள் என்ற முறையில், ஏசு கிறிஸ்து வாழ்ந்து காட்டியதுபோன்று, பதிலுக்கு எதையும் எதிர்பாராமல் நமது அண்டை வீட்டார் மீது நிபந்தனையற்ற அன்பு செலுத்துவதே நமது விசுவாசத்திற்கு சாட்சியாக இருப்பதற்கான வழி என்று நாங்கள் நம்புகிறோம். எந்த ஒரு மதக்குழுவும் செய்யும் ஆக்கிரமிப்பு ரீதியான “மத வியாபார” உத்திகளை நாங்கள் எதிர்க்கிறோம். ஏனென்றால், இவை எல்லா சமயங்களுக்கும் மரியாதை அளிக்கும் பாரத நாட்டின் கலாசாரத்தை அவமதிக்கின்றன; “எந்த மதத்தையும் பின்பற்றலாம், பிரசாரம் செய்யலாம்” என்ற உரிமையை வழங்கும் அரசியல் சட்டத்தின் உண்மையான கோட்பாட்டிற்கு எதிராக இருக்கின்றன.

நாம் கிறிஸ்தவர்கள். நம்மில் சிலர் பிறக்கும் போதே கிறித்தவர்களாக இருந்தோம், வேறு சிலர் விருப்பப்பட்டு கிறித்தவத்தைத் தழுவினோம். புனிதர் மத்தேயுவின் சுவிசேஷ வசனம் (Great Commission in the Gospel according to Matthew) சந்தேகமின்றி பிறன் தனது நம்பிக்கைகளைப் பின்பற்றவும், உபதேசிக்கவும் உள்ள உரிமையை மீறாத படி, கிறித்துவை பன்முக அமைப்பில் காணவேண்டும் என்று தான் அறிவுறுத்துகிறது. கிறிஸ்துவின் சாட்சியம் எக்காலத்திலும் கேள்விக்குறிய முறைகளினாலோ, மக்களது சமூக, மனம் சார்ந்த குறைபாடுகளைப் பயன்படுத்தியோ அல்லது மற்ற சமயங்களை இழிவுபடுத்தியோ செயல்படுத்தப் படக் கூடாது.

மேலும், எல்லா தேசங்களிலும் விசுவாசிகளை உருவாக்குதல் (to make disciples of all nations) என்னும் கிறித்தவ உபதேசத்தை நற்செய்தி தருபவர்கள் சிறந்த வழியில் கடைப்பிடிப்பது என்பது கிறித்தவம் கூறும் உயர்வான ஒழுக்க நெறிகளைக் கடைப் பிடிப்பதும், பரந்த சமூக நலனுக்கு நன்மை தரும் வகையில் நமது நாட்டின் பன்முகத் தன்மையை மதித்து, அதற்கு உண்மையாக இருப்பதுமே ஆகும் என்று நாங்கள் நம்புகிறோம். வாழ்க்கையையே மாற்றும் இயல்புடைய நம்பிக்கை மாற்றம் என்பது ஒவ்வொருவரது சுய அனுபவம் மூலமே சாத்தியம். அதில்லாமல் இன்றைய காலகட்டத்தில் நடத்தப்படும் மதமாற்றங்கள் நாடகத் தனமான திடீர், உடனடி அதிர்வுகளாலேயே ஏற்படுத்தப் படுகின்றன.

1977-ல் இந்திய உயர்நீதிமன்றம் கூறிய தீர்ப்பில், ஒரு இந்தியக் குடிமகன் தனது மதத்தை “கடைப்பிடிக்கவும், உபதேசிக்கவும், பரப்பவும்” வழங்கப் பட்டுள்ள உரிமை மதம் மாற்றுவதற்கான உரிமை அல்ல என்று தெளிவாகக் கூறியுள்ளது. இது அரசியல் சட்டத்தையும், பண்பாட்டு நெறிமுறைகளையும் மேலும் உறுதிப் படுத்துகிறது.

இந்தியாவின் அனைத்தையும் அரவணைக்கும் கலாசாரமும், மதச்சார்பற்ற அரசியல் சட்டமும், தன் நாட்டுக் குடிமக்களை மட்டுமல்ல, இங்கு பயணிகளாக வருபர்களுக்கும் தங்கள் மதத்தைப் பின்பற்றும் சுதந்திரத்தை அளித்துள்ளது. ஆனால், இந்த உரிமைகளை உறுதி செய்யும் அரசியல் சட்டம் 25-வது பிரிவு, “சமூக ஒழுங்கு, நீதி நெறிகள் மற்றும் நல்வாழ்வு” இவற்றின் வரையறைக்கு உட்பட்டுத் தான் இந்த உரிமைகள் உள்ளன என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

ஆகையால், இந்திய அரசு மற்றும் எல்லா மதச்சார்பற்ற நாடுகளும் ஐ.நா. சபையின் மனித உரிமைத் தீர்மானத்தில் கூடுதலாக இங்கே கொடுக்கப் பட்டுள்ள (தடி எழுத்தில் உள்ள) இரண்டாம் வாக்கியத்தையும் இணைக்குமாறு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

“ஒவ்வொருவருக்கும் தனது சுயசிந்தனை, மனச்சாட்சியம் மற்றும் மதம் இவற்றுக்கான உரிமை உள்ளது; இந்த உரிமையில் தனது மதம் மற்றும் நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளுதல் மற்றும் தனியாகவோ, குழுவாகவோ அல்லது பொதுவிலோ, தனியிடத்திலோ தனது சமயம் மற்றும் நம்பிக்கைகளை கற்பித்தல், உபதேசம், வழிபாடு இவற்றின் மூலமாக வெளிப்படுத்துதல் இவையும் அடங்கும். ஆனால், எந்தவொரு தனிமனிதனோ, நிறுவனமோ வயது வராதவர்கள் (minors) மற்றும் மனவளர்ச்சி குறைந்தவர்கள் உள்ளிட்ட வேறு தனிமனிதர்களையோ அல்லது குழுக்களையோ, அதிகாரபூர்வமாகவோ அல்லது அதிகாரபூர்வமற்றோ – பணம் மற்றும் பொருள் சலுகைகள் அளித்தல் , உடல், மன அல்லது உணர்வு ரீதியாக நிர்ப்பந்தப் படுத்துதல், மிரட்டல் மற்றும் பயமுறுத்தல் இத்தகைய வழிமுறைகள் மூலமாக – ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாற்றக் கூடாது.”

எல்லா விதமான மதத் தலைவர்கள் மற்றும் மத அடிப்படைவாதிகளின் மதமாற்ற முயற்சிகளையும் நாங்கள் கண்டிக்கிறோம். இந்திய கலாசாரத்தின் உயர்ந்த மரபுகளின் படி பலவித மத நம்பிக்கைகளுக்கும் இடையில் நல்லெண்ணத்தை உருவாக்குவதற்கு உழைப்போம் என்று உறுதி கூறுகிறோம். ஒரு முன்னேறும் ஜனநாயக நாட்டின் செயல்பாட்டிற்குத் தேவையான எல்லா உரிமைகளையும் வழங்கும் அரசியல் சட்டம், மதசார்பின்மை மற்றும் எல்லா மதங்களையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை - இவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்ட இந்திய நாட்டின் பன்முகத் தன்மையைப் பேணிப் பாதுகாக்க முயலும் எங்கள் முயற்சிகளில் இணையுமாறு எல்லா இந்தியர்களையும் அழைக்கிறோம்.

இங்ஙனம்,

பி.என். பெஞ்சமின் மற்றும் கையொப்பமிட்டவர்கள்


P.N.Benjamin

"CHRISTIANS AGAINST PROSELYTISM"
A CAMPAIGN DECLARATION FROM
BANGALORE INITIATIVE FOR RELIGIOUS DIALOGUE (BIRD)
7A, 3rd Cross, Da Costa Square, Bangalore 560 084, INDIA

January 1, 2007

BIRD அமைப்பின் இந்த ஆங்கில அறிக்கையின் தமிழ் மொழியாக்கத்தை திரு. பி. என். பெஞ்சமின் அவர்களின் அனுமதியோடு எனது வலைப் பதிவில் வெளியிடுகிறேன். இந்த அறிக்கையில் ஏற்கனவே 500 கிறித்தவர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்றும் திரு. பெஞ்சமின் தெரிவிக்கிறார்.

இந்திய தேசியத்தை வலிமையுறச் செய்யும் திரு.பெஞ்சமின் மற்றும் அவரது இயக்கத்தின் முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

இந்த நன்முயற்சியில் இணைய விரும்புவோர் திரு. பெஞ்சமின் அவர்களை benjaminpn@hotmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

BIRD இயக்கத்தின் வலைப் பதிவுகள்:

http://birdbenjamin.blogspot.com/
http://pnbenjamin.blogspot.com/
http://benjaminpn.blogspot.com/

17 comments:

ஜடாயு said...

testing..

இந்து said...

சில நல்ல கிருத்ஸ்துவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.

Anonymous said...

மாம்ஸ்
நம்ம RSS தலைங்க கிட்ட சொல்லி இந்த திராவிட வெறியர்களை திருத்த முடியாதா?

சிறில் அலெக்ஸ் said...

//சில நல்ல கிருத்ஸ்துவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.
//

:)

செம காமெடி.

ஜடாயு,
நல்ல தகவலை தந்திருக்கிறீர்கள். பெஞ்சமினின் இயக்கம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

முகில் said...

நல்ல செய்தி!... நம்ப முடியவில்லை :(

ஜடாயு said...

சிறில்,

மிக்க நன்றி. இந்த இயக்கத்தை நீங்கள் வாழ்த்தியது கண்டு மகிழ்ச்சி.

பெஞ்சமின் ஆங்கிலத்தில் தான் இந்த அறிக்கையைத் தந்தார். தமிழாக்கம் நான் செய்தது. ஓரளவுக்கு சுமாராக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஜடாயு said...

// சில நல்ல கிருத்ஸ்துவர்களும் இருக்கதான் செய்கிறார்கள் //

ஏன் இப்படி சலித்துப் போய்ப் பேசுகிறீர் அனானி?

நல்லோர்கள் எங்கும் உளர். அவர்களால் தான் உலகம் வாழ்கிறது! "உண்டால் அம்ம இவ்வுலகம்"..

ஜடாயு said...

// நம்ம RSS தலைங்க கிட்ட சொல்லி இந்த திராவிட வெறியர்களை திருத்த முடியாதா? //

அனானி, என்ன சொல்ல வரீங்க? தமிழ்ப் பதிவுகளில் தான் இப்பேர்ப் பட்ட வெறியர்களை நான் சந்திக்கிறேன். நிஜ வாழ்க்கையில் பெரியார் பக்தர்களை நேர் கொண்டிருக்கிறேன், அவர்கள் இவ்வளவு மோசமாகப் பேசியதில்லை. இனவாதன் பேசும் இந்த இனமே மெதுவாக அழிந்து வருகிறது..

பெரியார் பதிவுல போட வேண்டிய பின்னூட்டத்த இங்கே போட்டுட்டீங்களா?

Anonymous said...

Dear Jadayu,

This is a commendable initiative from PN Benjamin of Bangalore, in line with the true Christian values. I have always thought of these hate-mongering proselytists as morally bankrupt and a big harm to the Indian society.

Thanks for highlighting this.

- Johnson

செல்வம் said...

// ஒரு இந்தியக் குடிமகன் தனது மதத்தை “கடைப்பிடிக்கவும், உபதேசிக்கவும், பரப்பவும்” வழங்கப் பட்டுள்ள உரிமை மதம் மாற்றுவதற்கான உரிமை அல்ல என்று தெளிவாகக் கூறியுள்ளது //

சரிதான். இந்த அடிப்படையில் மிசனரிகள் நடத்தும் பொய்ப் பிரசாரங்கள் மற்றும் மதமாற்றங்கள் எல்லாமே சட்டத்திற்குப் புறம்பானவை தானே?

ஒரு சட்ட விரோதச் செயலைச் செய்து கொண்டு அதற்கு சுவிசேஷம், ஆசிர்வாதம் என்றெல்லாம் பெயரிட்டு கேலிக்கூத்தாக்குவது சரியான ஏமாற்று வேலை.

// இந்திய கலாசாரத்தின் உயர்ந்த மரபுகளின் படி பலவித மத நம்பிக்கைகளுக்கும் இடையில் நல்லெண்ணத்தை உருவாக்குவதற்கு உழைப்போம் என்று உறுதி கூறுகிறோம் //

நல்ல எண்ணம். இந்த இயக்கத்தில் நிறைய கிறித்தவர்கள் சேர்ந்தால் நல்லது.

Anonymous said...

I had read columns of PN Benjamin in newspapers. He is a true nationalist and secularist. Good to know that he is also putting in practice what he professes in writing. May his tribe increase!

- Sam Mariadoss, Bangalore

ஜோ / Joe said...

பெஞ்சமினின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

வழக்கம் போல இதுவும் கிறிஸ்துவ மிசநரிகளின் மறைமுக சதி என்று ஜல்லியடிக்காத ஜடாயு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

ஜடாயு said...

ஜோ said:
// பெஞ்சமினின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
//

நன்றி ஜோ!

// வழக்கம் போல இதுவும் கிறிஸ்துவ மிசநரிகளின் மறைமுக சதி என்று ஜல்லியடிக்காத ஜடாயு அவர்களுக்கும் வாழ்த்துக்கள்! //

நன்றி ஜோ. உண்மையான, நேர்மையான, ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு என்றும் என் ஆதரவு உண்டு.

சதிகாரர்கள் தான் சடாயுவிடம் சாக்கிரதையாக இருக்க வேண்டும்.

Anonymous said...

Sri P N Benjamin is my friend. He is sincere and committed to what he says. I had lost touch with him. Please convey my best wishes and thanks to him. I have very many Christian friends and even fathers who agree to what we say. Similarly, I have many Shia Mohmedan friends who stress that our nation should be declared Hindu Rashtra and Hinduism should be our state religion so that our nation will continue to remain a truly secular state according to the tenets of Hindu faith. They say Hindustan is the country that allows them to live peacefully without fear of being a minority sect among those practising Mohmedan faith. I wish similar declaration comes from such Mohmedans also, who talk sense.

Malarmannan

ஜடாயு said...

முதுபெரும் எழுத்தாளர் திரு. மலர்மன்னன் அவர்களே, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

arunagiri said...

அருமையான செய்தி.

நீங்கள் டாக்டர். அலெக்ஸ் அலெக்ஸாண்டர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அமெரிக்காவின் DoD எனப்படும் Department of Defenceஇலும் Department of Affairs-இலும் பணியாற்றியவர். அலெக்ஸ் அவர்கள் தன்னை கலாசாரத்தால் ஹிந்துவாகவும், பிறந்த தேசமாக இந்தியாவையும், ஆர்த்தடாக்ஸ் கிறித்துவ நம்பிக்கையாளராகவும், இஷ்ட தெய்வமாக ஏசுவையும் வரிக்கிறார். கலிபோர்னியா பாடநூல்களில் இந்து மதம் செலக்டிவாக இழிவுபடுத்தப்பட்டதை எதிர்த்து இந்து பெற்றோர்கள் குரல் எழுப்பிய போது, அதற்கு ஆதரவாகக் குரலெழுப்பி வலைப்பத்திரிகைகளில் எழுதியவர். சனாதன தர்மம் இழிவுபடுத்தப்படுவதை எதிர்த்து இந்துக்கள் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்கிறார்.

மதம் மாற்றப்பிரச்சாரத்தை ஒதுக்கிய சிரியன் ஆர்த்தடாக்ஸ் பிரிவைச்சேர்ந்தவர் இவர். இந்துக்களைப்போலவே இவர்களும் 15-ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்களால் தொல்லைக்குள்ளாகி பலர் சிரியன் கத்தோலிக்கர்கள் என்ற பிரிவுக்குள் மாற்றப்பட்டனர். பின் 17-ஆம் நூற்றாண்டில் தொடங்கி பிரிட்டிஷ் ஆட்சியின் மிஷனரி தொந்தரவுகளால் மார்தோமா சிரியன் சர்ச் சார்ந்தவராகவும் பல ப்ராட்டஸ்டண்டு பிரிவுகளாகவும் அடையாளம் இழக்கச் செய்யப்பட்டனர்; இப்படி மாற்றப்பட்ட பிரிவுகள் எல்லாமே மதமாற்றத்தை முன்வைக்கும் பிரிவுகள் என்பதுதான் இதில் முக்கிய விஷயம். மதமாற்றம், பிரச்சாரம், பிற நம்பிக்கையை அவமதித்தல் என்றெல்லாம் இன்றி அமைதியாக சக இந்து சமூகங்களுடன் வாழ்ந்து வந்த சிரியன் ஆர்த்தடாக்ஸ் பிரிவினர் இவ்வாறான மாற்றங்களால் இந்துக்களுக்கு அன்னியமாகிப்போனது மட்டுமன்றி பல மத உராய்தல்களுக்கும் கேரளக்கிறித்துவர்களுக்கிடையிலேயே பல மனக்கசப்புகள் வளரவும் இது காரணமாகிப்போனது. இன்று பல்லாயிரக்கணக்கான ஆர்த்தடாக்ஸ் சிரியன் கிறித்துவர்கள் இருந்தாலும் அவர்களும் இந்துக்கள் போலவே மத மாற்ற டார்கெட்டுகளாகத்தான் மதமாற்ற கத்தோலிக்க மற்றும் ப்ராட்டஸ்டண்டு சர்ச்சுகளால் பார்க்கப்படுகின்றன.

கேரளாவில் அதிகரித்து வரும் மதமாற்ற கிறித்துவ மற்றும் இஸ்லாமிய ஆதிக்கத்தால் இன்னும் 100 வருடங்களில் இந்த சர்ச்சே அழிந்து போய் விடும் என்று அஞ்சுகிறார்கள் இப்பிரிவைச்சார்ந்தவர்கள். இவர்களும் இந்துக்களும் நேர்கொள்வது ஒரே பிரச்னையின் இரு வடிவங்களையே.

மதமாற்ற சக்திகளை எதிர்த்து ஐநா சபையில் குரலெழுப்ப வேண்டி டாக்டர்.அலெக்ஸ் தொடங்கிய கையெழுத்துப்போராட்ட மனுவைக் கீழே காணலாம். பல இந்துக்களும் இவருக்கு ஆதவாகக் குரலெழுப்பி உள்ளனர்.

http://www.petitiononline.com/unchr900/petition.html

sparkkarthi karthikeyan said...

I Support