Thursday, July 23, 2009

வேலை, அன்னியமாதல், படைப்பாளிகள்: சில எண்ணங்கள்

ஜெயமோகனின் செய்தொழில் பழித்தல் என்ற சமீபத்திய கட்டுரை குறித்து பேசிக் கொண்டிருக்கையில் நண்பர் மைத்ரேயன் எழுதித் தந்த கட்டுரை இது. “ஒரு அரசுடைமை நிறுவனத்தில் சில பத்தாண்டுகள் கூட்டமான ஊழியர்கள் நடுவே பணியாற்றி அன்னியமாகி இருப்பது இயல்பாகவே ஆகிப் போன அனுபவத்தை இன்னமும் மறக்காது இருப்பதாக” கூறும் அவருடைய பல தள வீச்சும், ஆழமும் கொண்ட கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் - ஜடாயு.

.... விரும்பிய தொழிலை விரும்பிய வகையில் செய்வதுதான் மனித விடுதலை என்று முழங்கிய மார்க்ஸ் அது எப்படி நெடுங்காலத்துக்கு எந்த சமூகத்திலும் கிட்டாத ஒரு சுதந்திரம் என்பதை அறியாமல் இல்லை. தெரிந்தும் ‘புரட்சி’ செய்ய மனிதரை உந்தியது (சுய?) வெறுப்பின் பால், வாழ்வுக் கோணலை ஒரே முயற்சியில் நிமிர்த்தி விடும் அவசரத்தில் எழுந்த குரோத முயற்சி. அதை இனம் காணாமல் அவரை ஒரு தீர்க்கதரிசி என்று விழுந்து தண்டனிடும் லட்சங்கள் தாமாக எதார்த்தத்தைத் தரிசிக்க முடியாத மந்தை ஆடுகள். உண்மையில் இருந்து அன்னியமான ‘மனிதர்’கள் ….

[முழுக்கட்டுரையையும் படிக்க...]

1 comment:

Bheemaa said...

அன்புள்ள ஜடாயு ,
மைத்ரேயனின் கட்டுரை பல விஷயங்களை உள்ளடக்கி உள்ளது . ஆனால் அவை நன்றாக குழம்பி இருப்பதால் படிப்பது சற்று சிரமமாக இருந்தது.

அந்நியமாதல் என்ற சொல்லை பல அர்த்தங்களில் பயன்படுத்தி உள்ளீர்கள்.
செய்யும் தொழிலை வைத்து..
மனிதர்கள் பொதுவாக செய்யும் செயல்களை வைத்து..
//கழிப்பிலும் தான் மேதையாகத்தான் இருப்பேன் என்று எந்த மேதையும் அடம் பிடித்ததாக எனக்குத் தெரியவில்லை.// :) :)

ஆனால் செய்தொழில் பழித்தல் என்பது செய்யும் தொழிலில் உள்ள பிரச்சினையை குறித்தது மட்டுமே ஒழிய மற்ற சாதாரண விஷயங்களை அல்ல . தனது தகுதியை கண்டுகொள்ளாமல் பலனை மட்டும் எதிர் பார்த்து வேலை செய்தால் அந்த வேலை யாருக்கும் பயனற்றுப் போய் விடுகிறது. அந்த தகுதியின்மை மற்றும் அதனால் விளையும் உள்ளார்ந்த வெறுப்பு மற்றும் அதன் பலன் மீது கொள்ளும் பேராசை வேலையையும் வேலை செய்பவரையும் சேர்த்தே அழித்து விடுகிறது. வியாபார திறமை உள்ளவர் ஆசிரியரானாலோ அல்லது ஆசிரிய திறமை உள்ளவர் அரசியல்வாதி ஆனாலோ விளைவுகள் என்னவாகும் என்பது தெரிந்ததே .. கம்பர் நாட்டை ஆண்டிருந்தாலோ அல்லது ராஜராஜன் காப்பியம் எழுத முயற்சித்திருந்தாலோ முற்றிலும் எதிர்மறையான பலன்களே கிடைத்திருக்கும்.

இதற்கு பதிலாக தனது இயல்புக்குரிய செய்யும் போது ஒரு உள்ளார்ந்த திருப்தி , ஆழமான அமைதி கிடைக்கிறது. ஒரு வகையில் இது தான் மனிதன் பெறக்கூடிய ஆகச் சிறந்த செல்வம். அப்துல் கலாம்,ஸ்ரீனிவாச ராமானுஜன், சி.வி.ராமன், தாகூர், மகாத்மா காந்தி, ஜெயமோகன் என பல உதாரணங்களை சொல்லலாம்.இவர்கள் சாதிக்க வேண்டும் என்பதற்காகவோ, பெயர், புகழுக்காகவோ செயலாற்ற வில்லை. செயலை செய்யும் பொது கிடைக்கும் மகிழ்ச்சிக்காகவே செயல் புரிந்தனர். அதனால் மேன்மை அடைந்தனர்.


//ஒரு புறம் சமத்துவமும் பேசிக் கொண்டு இன்னொரு புறம் தமக்கு விசேஷமான வாழ்க்கை கிட்டவேண்டும் என்றும் கருதும் உள்முரண் பற்றிக் குற்றவுணர்வில்லாத தன்மை இந்த வகை இளைஞர்களிடம் உண்டு. //

இதில் என்ன முரண்பாடு உள்ளது? சமத்துவம் என்பது எல்லாருக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்பது. விசேஷமான வாழ்க்கை என்பது ஒவ்வொருவரும் தன உழைப்பின் மீது சம்பாதிப்பது..

//எந்நேரமும் உன்னதத்திலேயே இருப்பது கொம்பை நட்டு அதன் காலணா அகல வட்டத்தில் உச்சியில் புட்டத்தை வைத்து உட்கார் என்று சொல்வதை ஒத்தது. நூற்றுக்கு 99.99 சதவீதம் பேர் அங்கு இருக்க, வாழ்நாள் பூரா அங்கேயே கழிக்க விரும்ப மாட்டார், ஒப்ப மாட்டார், சித்திரவதை செய்தாலும் அங்கே இருக்க மாட்டார், கீழே குதிக்கத்தான் முயல்வர். உச்சஸ்தாயியிலேயே நிரந்தரமாக ரீங்கரித்துக் கொண்டிருக்க மனித நுரையீரல் இடம் தராது.//

படைப்புத் திறன் வெளிப்பாட்டை போதையோடு ஒப்பிடும் தங்களின் திறமை அபாரமானது.. போதை நிலையில்லாதது. படைப்புத் திறன் வெளிப்பாடு என்பது தொடர்ந்து வருவது . நிலையானது..

//எப்போதும் ‘சிந்தித்து’ க் கொண்டிருப்பவன் செயல் திறனற்ற மலட்டு மனிதனாகத்தான் இருப்பான் என்று நான் கருதுகிறேன். சாதாரணம்தான் படைப்பை சாத்தியமாக்குகிறது. இன்னொரு முறை யாராவது மேதை வந்து ‘நாம் அன்னியமாகி விட்டோம்’ என்று ஆர்ப்பரித்தால் காதைப் பொத்திக் கொண்டு போனால் நம் புத்தி நம்முடையதாக இருக்கும் என்று நான் சிபாரிசு செய்கிறேன். அந்த மேதைக்குப் பிறரை உருப்படாத மனிதராக ஆக்குவதுதான் பெரும் படைப்பு என்று ஒரு மனம் பிறழ்ந்த நிலை இருக்கிறது என்பதை நாம் துரிதமாக அறிவது நம் மனிதம் நம் கையிலேயே இருக்க உதவும். ///
சம்பந்தமில்லாத உளறல் .... ஜெயமோகனின் குறிப்பிட்ட கட்டுரையை நன்றாக படியுங்கள்.