Monday, October 30, 2006

மைசூர் பாக் : தெற்கில் வளரும் ஜிகாதி தீவிரவாதம்

வாயில் கரையும் இனிப்பு சமாசாரமல்ல இது, நெஞ்சை எரிக்கும் விஷயம்... மைசூரில் பாக். தீவிரவாதிகள் கையும் களவுமாகப் பிடி பட்டது பற்றிய தினமலர் செய்தியைத் தான் குறிப்பிடுகிறேன். பொருளாதாரத்தில் முன்னேறிய பகுதிகளான தென் கர்நாடகம் (South Canara) மற்றும் கேரளாவின் கோழிக்கோடு போன்ற பகுதிகளில் ஜிகாதி தீவிரவாதம் வளர்ந்து வருவதைப் பற்றி அரசு பெரிதும் கவலை தெரிவித்துள்ளது.

சரியான சமயத்தில் இந்தக் கருங்காலிகளை மடக்கிப் பிடித்து செயலிழக்கச் செய்த காவல்துறை அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள்.

பிடிக்கப் பட்ட தீவிரவாதிகளில் ஒருவனின் அப்பா, பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கே குடிபெயர்ந்து அங்கே ஒரு பெண்ணை மணந்தவன். தான் பிறந்த மண்ணின் மைந்தர்களான காஃபிர்களை ஜிகாதில் கொல்லத் துடிக்கும் இத்தகைய ஆட்களுக்கெல்லாம் ஒளிந்துகொள்ள வட கேரள்ம் சொர்க்கம். இடது சாரிகள் மதச் சார்பின்மை காப்பதற்காக "முஸ்லீம் மாவட்டம்" என்று ஏறக் குறைய அதிகாரபூர்வமாகவே அறிவித்த மலப்புரம், பொன்னாணி ஊர்களை ஒரு எட்டு போய்ப் பார்த்து வந்தால் இது புரியும்.

இந்தியாவில் இருக்கிறோமா, ஈரானில் இருக்கிறோமா என்று தெரியாதமாதிரி எங்கு பார்த்தாலும் புர்காக்கள், தொளதொள வெள்ளை ஆடைகள், மாதாமாதம் முளைக்கும் புதுப்புது மதரஸாக்கள், மசூதிகள்... மலையாளத்தை விட அதிகம் புழங்கும் உருது, அரபி... இத்தகைய ஒரு இடத்தில், பாகிஸ்தான் என்ன உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் ஜிகாதிகள் வந்து உட்கார்ந்து நிம்மதியாகத் தீவிரவாதத்தை வளர்க்கலாம், உள்ளூர் ஆதரவும் உண்டு.. ஏறக்குறைய இதே விஷயத்தைத் தான் இன்னும் கொஞ்சம் மென்மையாக காவல், உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்..

மும்பை குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு எழுதிய உள்நாட்டு ஜிகாதி தீவிரவாதத்தின் கோர முகம் என்ற கட்டுரையில் இது பற்றிய விவரங்களை இன்னும் விரிவாக எழுதியிருந்தேன். அதில் சொன்னதையே மறுபடியும் இங்கு வலியுறுத்த வேண்டியிருக்கிறது.

"... ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அனில் அதாலே மும்பை குண்டு வெடிப்பு நிகழ்ந்த உடனே எழுதிய கட்டுரையில் [2] கூறுகிறார் - "இந்தியாவின் 90% முஸ்லீம்கள் தேச பக்தர்கள். அமைதியை விரும்பும், சட்டத்தை மதிக்கும் குடிமக்கள். ஆனால் மீதம் இருக்கும் 10% பேர் ஜிகாதி தீவிரவாதத்திற்கு ஏதாவது ஒரு விதத்தில் ஆதரவளிப்பவர்கள் என்று வைத்துக் கொண்டாலும், அந்த 10% என்பது ஒன்றரைக் கோடி மக்கள்.. இவ்வளவு பெரிய தீவிரவாத ஆதரவுக் கும்பலை அடக்குவது என்பது எந்த அரசுக்கும் மிகக் கடினமான, சொல்லப் போனால் முடியாத காரியம்.. அந்த 90% முஸ்லீம் மக்கள் தான் முனைந்து இந்தத் தேச துரோகிகளையும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் இனம் காண வேண்டும்...தண்ணீரில்லாமல் தவிக்கும் மீன் போல, தங்கள் சமுதாயத்தின் ஆதரவு நிறுத்தப் பட்டால், ஜிகாதிகள் தானாக செயலிழந்து போவார்கள்.. இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாத்தை ஒடுக்க, நடைமுறையில் சாத்தியமான வழி இது தான்"

Friday, October 27, 2006

வரலாற்றின் கண்ணீர்த்துளிகளிலிருந்து : நாலந்தாவின் மரணம்

“அல்லாஹோ அக்பர்” என்று கத்திக் கொண்டே வந்த சம்சுத்தீன் என்ற அந்தப் படைவீரனின் கூரிய வாள் பிரதம ஆச்சாரியர் சீலபத்திரரின் நெஞ்சில் இறங்கியது. தன்னைச் சுற்றியிருந்த ஸ்தூபங்களின் உச்சிகள் எல்லாம் ஒளிமழுங்கிப் பேரிருள் சூழ்வது போலத் தோன்றியது. தான் தவழ்ந்து, விளையாடிக் கற்று வளர்ந்த அறிவுத் திருக் கோயில் அரக்கர்களால் சூறையாடப் பட்டுக் கொண்டிருந்ததைக் காணச் சகியாமல் அவர் கண்கள் மூடின. கண்கள் மூடியிருந்தாலும் சுற்றியுள்ள சைத்யங்களிலும், ஆலயங்களிலும் உள்ள சிற்பங்கள் ஒரு கணம் தன்னையே உற்றுப் பார்ப்பதாக அவருக்குப் பட்டது – கச்சப ஜாதகத்தில் வரும் போதிசத்வர், பத்மபாணி, மகர தோரணம், மயில் மீதமர்ந்த கார்த்திகேயன், கின்னரர்கள், அப்சராக்கள், பரிநிர்வாண புத்தர், குபேரன், கஜலஷ்மி, நாக கன்னிகைகள், அவலோகிதேஸ்வரர்.

உடல் முழுவதும் செயலிழந்தது.. சுவாசம் தடுமாறியது.. கண நேரம் ஆயிரமாயிரம் எண்ணங்கள் அவர் நெஞ்சில் அலைபாய்ந்தன.

"யார் இந்தப் பாதகர்கள்? காந்தாரத்துக்கு அப்பால் ஏதோ ஒரு பாஷை பேசித் திரியும் மிருக வெறி படைத்த கொலைகாரக்கூட்டங்கள் இந்தப் பக்கமாக வந்து கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டோமே, அவர்கள் தானா இது? சில ஆயிரம் மாணவர்களும், பிட்சுக்களுமே உள்ள இந்த விஹாரத்துக்குள் வந்து ஏன் இப்படி எல்லாரையும் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள்? ஓ தர்ம தேவதையே, நாங்கள் என்ன பாவம் செய்தோம்?

வேத மந்திரங்களின் ஒத்திசையையும், உபநிஷத தத்துவ விவாதங்களையும் உள்வாங்கி வளர்ந்த தெய்வ நதி பாயும் கங்காவர்த்தமே! வர்த்தமான மகாவீரர் பதினான்கு மழைக்காலங்கள் தங்கி அருள்புரிந்த தவபூமியே! புத்த பகவானும், சாரிபுத்ரரும் புனிதத் திருப்பாதம் பதித்ததனால் இன்னும் புனிதமானாய் நீ! அசோக சக்ரவர்த்தி நட்ட மரங்களின் நிழலில் இங்கே அமர்ந்து படிக்கும் பாக்கியம் பெற்றதை ஏழு பிறவிகளிலும் மறப்பேனா? இளம் பிரம்மசாரியாக இங்கே வந்து மகாயானத்தின் மகா குருவாக உயர்ந்த நாகார்ஜுனர் ஸ்தாபித்த சைத்யங்கள், விஹாரங்கள், அதற்குப் போட்டியாக வைதீகர் சுவிஷ்ணு உருவாக்கிய தேவாலயங்கள்.. இவற்றின் படிகளில் அமர்ந்த அந்த தெய்வீகத் தருணங்கள்! ஐயோ, அர்த்த சாஸ்திர மேதை, என் உயிர் நண்பன் உபகுப்தன் எப்படியிருக்கிறான்? அவனையும் இந்த அரக்கர்கள் கொன்று விட்டார்களா?

மாத்யமிக மரபின் ஆரியதேவரும், யோகாசார்ய மரபின் வசுபந்துவும், அசங்கரும் அமர்ந்த குருபீடங்கள்! சக்கரவர்த்திகளான சமுத்ரகுப்தனும், குமார குப்தனும் எத்தனை முறை இங்கே வந்து ஆசாரியர்களின் பாதம் பணிந்திருக்கிறார்கள் ! மகாராஜா சக்ராதித்தன் கட்டித் தந்த மாணவர் விடுதி, எத்தனை வாத விவாதங்கள், ஞானத் தேடல்கள் அங்கே நடந்திருக்கின்றன! தர்க்கம், வியாகரணம், ஆயுர்வேதம், ஜ்யோதிஷம்.. எத்தனை அறிவுத் துறைகள் இந்த விஹாரத்தில் முளைத்துச் செழித்து வளர்ந்தன! இலங்கையிலிருந்தும், சீனத்திலிருந்தும், காந்தாரத்திலிருந்தும், கலிங்கத்திலிருந்தும், வங்கத்திலிருந்தும், காம்போஜத்திலிருந்தும் எத்தனை ஆயிரம் மாணவர்கள் ! போன வாரம் கூட த்ராவிட தேசத்தின் காஞ்சி நகரிலிருந்து 100 வித்யார்த்திகள் வந்தார்களே.. ஐயோ, அவர்களுக்கு என்ன ஆயிற்றோ? கன்னௌஜத்தில் சக்ரவர்த்தி ஹர்ஷவர்த்தனரின் பட்டாபிஷேகத்தில் இங்கேயிருந்து ஆயிரம் பிட்சுக்கள் போய்வந்ததைப் பற்றிய கதைகள் இன்றும் ஆர்வத்துடன் கேட்கப் பட்டு வருகின்றனவே..பிராமணர்களும், சிரமணர்களும் ஒன்று கூடி ஹர்ஷனை வாழ்த்திய அந்தக் கதைகள்! இதைப் பற்றியே ஒரு அழகிய காவியம் எழுதவேண்டும் என்று கவி பிரம்மதத்தன் சொல்லி வந்தானே? ஐயோ, அவனுக்கும் அவனது சீடர்களான அற்புதக் கவிஞர்களுக்கும் என்னவாயிற்றோ? உபவீதி, விக்ரமசிலா, ஓடந்தபுரி இந்த விஹாரங்களில் இருந்தெல்லாம் அடுத்தவாரம் மாணவர்கள் வருவார்களே, ஐயோ அவர்களை யார் வரவேற்பார்கள்?

அதிகாலை முதல் அர்த்தராத்திரி வரை விவாதங்களின் மெல்லோசைகள் ஓயாத ஞான நதியே! மஹிபால மன்னனின் காலத்தில் தீப்பிடித்து விஹாரத்தின் சில பகுதிகள் அழிந்த போது, உடனடியாகப் புதுப்பிக்கப் பட்ட விஹாரங்களின் பொலிவு தான் என்ன, “வெந்தணலால் வேகாது” என்பது மெய்யாயிற்றல்லவா? அந்த சீன யாத்திரீகன் யுவான் சுவாங், அவனுக்குக் கூட இங்கே மோக்ஷதேவன் என்று தீட்சைப் பெயர் அளிக்கப் பட்டதே, அந்த மகா மேதாவியான சீனனுக்கே குருவாய் விளங்கிய சீலபத்திரரின் பெயரை அல்லவா எனக்கு வைத்தார்கள்! தர்க்க சாஸ்திரத்தின் தந்தை திக்நாகர், பௌத்தப் பேரறிஞர்கள் தர்மபாலர், தர்மகீர்த்தி, பத்மசம்பவர், சந்தரக்ஷிதர் – எத்தனை எத்தனை மேதைகள் உன் மடியில் தவழ்ந்தனர்! ரத்னௌததி என்று உன் நூலகத்திற்குப் பெயர் வைத்தது சாலப் பொருத்தம் தான்.. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஞானக் கடலில் மூழ்கி எம் முன்னோர் அள்ளிய முத்துக்களும் மணிகளும் அல்லவா அங்கே ஓலைச் சுவடிகளாய் இருக்கின்றன? ஐயோ, அந்தச் சுவடிகள், என் ரத்தினங்கள்.. இந்தக் கிராதகர்கள் அவை அனைத்தையும் கொளுத்தி விடுவார்களோ? ஐயோ, அவற்றுக்கு என்னவாகியிருக்கும்? என்னவாகி….”

அடுத்த கணம் அவர் மூச்சு அடங்கியது, உயிர் உடலை விட்டுப் பிரிந்தது. ஹேஹேஹே என்று சம்சுதீன் சிரித்த கோரச் சிரிப்பில் இந்த ஓசையற்ற ஒலிகள் உயிரிழந்தன. இந்த மொட்டைத் தலைக் காஃபிர்களை நொடிப் பொழுதில் கொன்று குவித்த தன் படைகளின் வீரத்தையும், தன் தளபதியின் யுத்த சாமர்த்தியத்தையும் எண்ணி வியந்தான் அவன். தனக்குத் தெரிந்த உமர் மின்ஹாஜுத்தீன் உஸ்மான் இப்னு சிராஜுத்தீன் அல் ஜுஜானி என்கிற புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் ரொம்பப் பெரிசாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு இந்த வீரப் பிரதாபங்கள் பற்றி தபகத்-ஏ-நாசிரி என்ற புத்தகத்தில் இப்படி எழுதுவார் என்பது தெரிந்திருந்தது போலும்!

“முகமது பக்தியார் (Bakhtiyar) என்கிற இந்த கில்ஜி, கோர் பிராந்தியத்தின் கர்ம்சிர் பகுதியைச் சார்ந்தவன். இவன் மிகுந்த சாமர்த்தியம் கொண்டவன், முயற்சி மிக்கவன், தைரியமும், துணிவும், அறிவும் அனுபவமும் வாய்ந்த மனிதன்..... கொஞ்ச காலம் கழித்து மாலிக் ஹிசாமுத்தீன் உக்லபாக்கின் பணியில் அவத் (அயோத்தி) சென்றான். அவனிடத்தில் நல்ல குதிரைகளும், படைகளும் இருந்தன. பல இடங்களில் தன் வீரத்தைக் காண்பித்ததனால் ஜாகீரில் ஸஹ்லத்தும் ஸாஹ்லியும் பெற்றான். துணிவும் முயற்சியும் வாய்ந்த மனிதனாகையால் முனி (மோங்கீர்), பீகார் முதலிய பிராந்தியங்களில் படையெடுத்துச் சென்று நிரம்ப கொள்ளைப் பொருள்களைக் கொண்டு வந்தான். இதே ரீதியில் நிறைய குதிரைகள், படைகளைச் சேர்த்தான். அவனது வீரத்தாக்குதல்கள் மற்றும் கொள்ளைகள் பற்றிய புகழ் எல்லா இடங்களிலும் பரவியது. ஹிந்துஸ்தானத்தில் இருந்த கில்ஜிகளின் குழுக்களும் அவனோடு இணைந்தன. இதெல்லாம் சுல்தான் குத்புதீன் ஐபெக் காதுக்கு எட்டின. சுல்தான் அவனுக்கு உயர்ந்த ஆடை அணிகலன்களை அனுப்பித் தன் மரியாதையைத் தெரிவித்தார். இப்படி ஊக்குவிக்கப்பட்ட அவன், தன் படைகளுடன் பீகாருக்குச் சென்று அதனை அழித்து ஒழித்தான். இப்படியே இரண்டு மூன்று வருடங்கள் அக்கம்பக்கங்களைக் கொள்ளையடித்து வந்த அவன், அந்த நாட்டின் மீது படையெடுக்கத் தயாரானான்.

நம்பத்தகுந்தவர்களின் கூற்றுப்படி பீகார் கோட்டையின் வாயிலுக்கு வெறும் 200 குதிரைகளுடன் போய், எதிரிகள் அறியாத வண்ணம் சென்று அவன் போரைத் தொடங்கினான். பக்தியாரின் பணியில் பெரும் அறிவுபெற்ற இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். ஒருவன் நிஜாமுத்தீன், இன்னொருவன் சம்சுத்தீன். இந்த நூலின் ஆசிரியன் லக்னௌடி என்ற இடத்தில் ஹிஜ்ரி ஆண்டு 641 (கி.பி. 1243) சம்சுத்தீனைச் சந்தித்த போது பின்வரும் சம்பவத்தைக் கேட்க நேர்ந்தது. அந்தக் கோட்டையின் வாயிலருகே பக்தியார் சென்று மிக்க சக்தியுடனும் சாமர்த்தியத்துடனும் போரைத் தொடங்கி உடனே அந்த இடத்தைக் கையகப் படுத்திவிட்டான். இந்த இரண்டு அறிவார்ந்த சகோதரர்களும் அந்தப் போரில் பெரும் சாகசம் புரிந்தனர். வெற்றி பெற்றவர்களுக்குப் பெரும் கொள்ளைகள் காத்திருந்தன. அந்த இடத்தில் இருந்த பெரும்பாலானாவர்கள் தலையை முழுக்க மொட்டையடித்த பிராமணர்கள் (பிட்சுக்கள்). அவர்கள் உடனடியாகக் கொல்லப் பட்டார்கள். பெரும் எண்ணிக்கையில் அங்கே புத்தகங்கள் இருந்தன. அவைகளைப் பார்த்த முகமதியர்கள் அவற்றில் என்ன இருக்கிறது என்று சில ஆட்களைக் கேட்க விரும்பினார்கள். ஆனால் எல்லாருமே கொல்லப்பட்டு விட்டார்கள். அந்தக் கோட்டை மற்றும் நகரம் முழுவதும் ஒரு கல்வி கற்கும் இடம் (மதரஸா) என்று தெரியவந்தது. ஹிந்தி மொழியில் பிகார் (விஹார்) என்பதற்கு கல்வி கற்கும் இடம் என்று பொருள்.”


இங்கிலாந்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் முகப்பில் இருக்கும் புல்வெளிகளைப் (Cambridge lawns) பற்றியே ஒரு உருவகமாக மிக சிறப்பாகப் பேசுவார்கள். நானூறு ஆண்டுகளாக நீரூற்றி வளர்க்கப்பட்ட இந்தப் புல்வெளிகள் நியூட்டன் முதலான மாமேதைகள் பாதம் பதித்தவை. பரத கண்டத்தில் தோன்றி வளர்ந்து செழித்த உலகத்தின் முதன் முதல் பல்கலைக் கழகத்தின் இடிபாடுகளின் பெருமை, இந்தப் புல்வெளிகளையும் நாணித் தலைகுனியவைப்பது. அந்த இடிபாடுகளில் காதை வைத்துக் கேளுங்கள், சீலபத்திரரின் மரண ஓலம் இன்னும் அங்கே ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நாலந்தா மிகச் சிறிய கிராமம் தான். அரசு தொல்பொருள் துறை ஒரு சின்ன அருங்காட்சியகத்தை அங்கே நடத்தி வருகிறது. அங்கே போக வேண்டுமானால் பக்கத்தில் உள்ள பெரிய ஊரான பக்தியார்புர் (Bakhtiyarpur) என்ற ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். இந்தியாவுக்கே கலாசாரத்தைக் கொண்டுவந்த முகமதியர்களின் பெருவீரர்களில் ஒருவன், இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களால் எப்படியெல்லாம் புகழப்பட்டவன், அவன் பெயரில் உள்ள ஊர் அல்லவா இது? இந்த ஊரில் அவனுக்கு பிரம்மாண்ட கல்லறை கூட இருக்கலாம். தில்லி வழியாக நீங்கள் போனால், அங்கே இருக்கும் குதுப் மினார் என்ற நெட்டுக்குத்தாக நிற்கும் ஒரு கோபுரத்தைப் பார்க்கலாம். இது யாருடைய நினைவாக நிற்கிறதோ அந்த சுல்தான் குத்புதீன் ஐபெக், முகமது பக்தியார் கில்ஜி போன்ற மாவீர தளபதியை உரிய முறையில் கௌரவித்த மாமன்னன். அவன் இந்தியக் கலாசாரத்திற்குச் செய்த சேவை கொஞ்சமா நஞ்சமா? இந்தியாவின் பன்முகக் கலாசாரத்திற்கு எப்பேற்பட்ட எடுத்துக்காட்டு இந்த மாவீரர்கள்!

வில் டுரான்ட் தனது “நாகரீகங்களின் வரலாறு” என்ற நூலில் கூறுகிறார் “இந்தியாவை இஸ்லாமியர்கள் கைப்பற்றியது தான் உலக சரித்திரத்திலேயே அதிக அளவு ரத்தக்கறை படிந்த கதையாக இருக்கும். அது எவரையும் நிலைகுலையச் செய்யும் கதை. அதிலிருந்து தெளிவாகப் புரியும் பாடம் என்னவென்றால், கலாசாரம் என்பது ஒரு பெருமதிப்புள்ள பொருள். அதன் சிக்கலான, நுட்பமான ஒழுங்கும், சுதந்திரமும் வெளியிலிருந்து ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் அவர்கள் மூலம் உள்ளிருந்தே பல்கிப்பெருகுபவர்கள் என்ற இருவகைக் காட்டுமிராண்டிகளாலும் எந்நேரமும் தகர்த்தெறியப் படும் அபாயம் இருக்கிறது”.

“...the Islamic conquest of India is probably the bloodiest story in history. It is a discouraging tale, for its evident moral is that civilization is a precious good, whose delicate complex order and freedom can at any moment be overthrown by barbarians invading from without and multiplying from within “
- Will Durant in “History of Civilization”

ஜார்ஜ் சாந்தாயனா சொன்னது இன்னும் முக்கியமானது “கடந்த காலத்தின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள் அவற்றையே மறுமுறை செய்யும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்”.

பின்குறிப்பு:
இதில் வரும் எல்லா சம்பவங்களும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப் பட்டவையே.

1) Tabakat-i Nasiri of Abu ‘Umar Minhaju-d din, ‘Usman ibn Siraju-d din al Juzjani : http://www.infinityfoundation.com/ECITTabakatiNasiri2frame.htm

2) Temples and Legends of Nalanda by PC Roy Chaudhuri
http://www.hindubooks.org/temples/bihar/nalanda/index.htm

3) பௌத்தத்தின் அழிவு குறித்து டாக்டர் அம்பேத்கர் (நன்றி: திரு. அரவிந்தன் நீலகண்டன் 19-அக்டோபர் திண்ணை இதழில் எழுதிய கட்டுரை)
“முஸ்லீம் படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்ட பௌத்த கலாசாலைகளில் ஒருசிலவற்றின் பெயர்களையாவது கூற வேண்டுமானால் நாலந்தா, விக்கிரமசீலா, ஜகத்தாலா, ஓடந்தபுரி ஆகிய இடங்களில் இருந்து முஸ்லீம் படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டவற்றைக் கூறலாம். முஸ்லீம் படையெடுப்பாளர்கள் நாடெங்கும் இருந்த பௌத்த மடாலயங்களையெல்லாம் அழித்தார்கள். பௌத்த துறவிகள் இந்தியாவிற்கு வெளியே நேபாளம், திபெத் என தப்பி ஓடினார்கள். மிக அதிக அளவில் பௌத்த துறவிகள் முஸ்லீம் தளபதிகளின் நேரடி ஆணைகளின் படி கொல்லப்பட்டார்கள்."
" பௌத்த துறவிகள் மீது இஸ்லாமிய படையெடுப்பாளர்களால் ஏவப்பட்ட வன்கொலைகள் மிகக்கொடுமையானது. கோடாலியின் வெட்டு (பௌத்தம் எனும் மரத்தின்) அடிவேரிலேயே விழுந்தது. பௌத்த துறவிகளைக் கொன்றதன் மூலம் இஸ்லாம் பௌத்தத்தைக் கொன்றது. இதுவே பௌத்த சமயத்தின் மீது இந்தியாவில் ஏற்பட்ட மிகக் கொடுமையான அடியாகும்."

இதை வெளியிட்ட திண்ணை இதழுக்கு நன்றி.

கீதை உலகளாவிய மானேஜ்மென்ட் வழிகாட்டி: பிஸினஸ்வீக்

உலகப்புகழ் பெற்ற வணிக இதழ் பிஸின்ஸ்வீக் இந்த வாரம் Karma Capitalism என்ற இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

..Times have changed since Gordon Gekko quoted Sun Tzu in the 1987 movie Wall Street. Has the Bhagavad Gita replaced The Art of War as the hip new ancient Eastern management text?

இப்படித் தொடங்கும் இந்தக் கட்டுரை சென்னையைச் சேர்ந்த சுவாமி பார்த்தசாரதியின் உரைகளைக் கேட்கத் திரண்டிருந்த நியூயார்க் நகரின் பெரும் பிஸினள் தலைகளைப் பட்டியலிடுகிறது.

உடலையும், மனத்தையும் கட்டுக்குள் வைத்திருக்குமாறு ஞானத்தை நம்முள் வளரச் செய்ய வேண்டும் என்று இந்த 80-வயது பெரியவர் கூறுவது,

"விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன், நித்தம் நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்"

என்னும் பாரதியின் வரிகளை நினைவுபடுத்துகிறது.

.. the lanky 80-year old scribbled the secrets to business success ("concentration, consistency, and cooperation") on an easel pad. The executives sat rapt. "You can't succeed in business unless you develop the intellect, which controls the mind and body," the swami said in his mellow baritone.

பெரிய வணிக நிறுவனங்கள் பாரத தத்துவ சிந்தனையின் கருத்துக்களிலிருந்து உந்துதல் பெற பெரும் ஆர்வம் காட்டி வருவதாகவும், கீதை போன்ற இந்து மத நூல்களிலிருந்து மேற்கோள்கள் மேனேஜ்மெந்த் வட்டாரங்களில் காணக் கிடைப்பதாகவும் கட்டுரை கூறுகிறது..

Big Business is embracing Indian philosophy. Suddenly, phrases from ancient Hindu texts such as the Bhagavad Gita are popping up in management tomes and on Web sites of consultants..

வார்டன், ஹார்வர்ட் போன்ற அமெரிக்காவின் பெரும் பல்கலைக் கழகங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர்கள், மற்றும் அவர்களது கருத்துக்கள் பெரிதும் கவனிக்கப் படுகின்றன.. விஜய் கோவிந்தராஜன், சி.கே.ப்ரஹ்லாத், ராம் சரண் இந்த பேராசிரியர்கள் GE போன்ற மிகப் பெரிய கம்பெனிகளின் தலைவர்களுக்கே ஆலோசனை வழங்கக் கூடியவர்கள். கீதை காட்டும் பாதை எப்படி இன்றைய பிஸினஸ் உலகிலும் வழிகாட்டுதலை அளிக்க முடியும் என்பதையும் இந்தக் கட்டுரையில் விளக்கியிருக்கிறார்கள்.

புதுமை படைத்தல் (innovation) நிபுணர் விஜய் கோவிந்தராஜன், தன் கருத்துக்களின் கரு இந்துத் தத்துவ சிந்தனையிலிருந்தே வருவதாக் கூறுகிறார்.

Vijay Govindarajan, a professor at Dartmouth College's Tuck School of Business whose books and consulting for the likes of Chevron (CVX ) and Deere & Co. (DE ) have made him a sought-after innovation guru, links his theories directly to Hindu philosophy. He helps companies figure out how to stop reacting to the past and start creating their own futures through innovation.

இந்தியத் தத்துவ சிந்தனைகளின் வீச்சுக்கும், ஆழத்திற்கும் அவற்றின் உலகளாவிய பான்மைக்கும் இது இன்னொரு எடுத்துக்காட்டு.

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
- திருவாசகம்

Saturday, October 14, 2006

சம்ஸ்கிருதத்தில் முதன்மை பெறும் கேரள முஸ்லீம் மாணவி

சம்ஸ்கிருதத்தை விரும்பிப் படித்து, வீட்டிலும் சுலோகங்களை இசைக்கும் ஷஜீனாவிடம் "ஏன் அரபி மொழியைப் படிக்கவில்லை" என்று கேட்டதற்கு "இந்தியர்களுக்கு ஏற்ற, தேவையான மொழி சம்ஸ்கிருதமே அல்லவா?" என்று பதிலளித்திருக்கிறாள். சம்ஸ்கிருதச் சொற்களின் அழகையும், அதன் கவித்துவமான மொழியையும் பற்றி சிலாகித்துப் பேசுகிறாள்.

தனது வீட்டிலும் சமூகத்திலும் இதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை, மாறாக மகிழ்ச்சியே அடைந்தார்கள் என்றும் அவள் சொல்லுகிறாள்.

பாரத ரத்னா அப்துல் கலாம், உஸ்தாத் பிஸ்மில்லாகான், ஷேக் சின்னமௌலானா போன்று பாரத நாட்டின் பண்பாட்டுடனும், கலாசாரத்துடன் தங்களை ஒன்றிணைத்துக் கொண்டிருக்கும் இத்தகைய முஸ்லீம்களே இஸ்லாமிய சமுதாயத்தின் ரோல் மாடல்கள். வந்தே மாதரம் பாட மறுக்கும் தேசத் துரோகிகள் அல்ல.

May their tribe increase!

செய்தி : டைம்ஸ் ஆஃப் இந்தியா, 6 அக்டோபர்

Cheer her, this Muslim girl tops Sanskrit exams
By P K Surendran/TNN

Navaikulam: When even the National Song “Vande Mataram” is branded communal, here is a Muslim girl who not just topped in her masters course in Sanskrit at the Kerala University, but also vows to teach it to her sister and children in future. Shajeena S scored 79% in the Sanskrit post-graduate degree examinations of 2006. She is the first Muslim top ranker in university’s history.

Shajeena, 24, is the second of three girls of Shahul Hamid, a labourer in Navaikulam. She started learning Saskrit just three years back and topped the university without going for private coaching. “She is a very bright and sincere student,’’ says Shajeena’s teacher R Nirmala. Another student who now teaches in the university, S Sajana, ranked second four years ago. She too is a Muslim and says she loves the language as it is rich and lyrical. Did Shajeena confront any resistance from community leaders or parents? “No. In fact, when I told my parents I wanted to learn Sanskrit, they agreed without a problem. When I topped the examination, my Ustad in the community asked for sweets.’’

“My father does odd jobs and my mother is unlettered. Some did ask me why I I didn’t choose Arabic, but I told them that Sanskrit is most apt for Indians. Besides it also guarantees better job opportunities.’’ She recites Sanskrit shlokas at home.

“Nobody at home understands them. My younger sister is in the fourth standard. My parents listen to my recital which is Greek to them. But they say it sounds melodious when intoned in a low pitch. This language is poetic. There is rhythm in every syllable. No wonder the language is termed the most apt for computers,’’ says Shajeena showing off her prowess in Sanskrit.

Shajeena has two ambitions — to launch a Sanskrit periodical to allow others like her to air their views, and to teach the language to her children.

தீ-பா-வ-ளி வா-ழ்-த்-து சொல்வதற்கெதிரகாக இஸ்லாமிய பத்வா!!

மலேசிய நாட்டின் ஷரியத் துறைத் தலைவர் முஸ்லீம்கள் யாரும் அந்த நாட்டின் இந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார். " தங்கள் பண்டிகைகளில் இந்துக்கள் இந்துத் தெய்வங்களைத் தான் (!!!) வணங்குகிறார்கள். எனவே அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது இஸ்லாமுக்கு எதிரானது. சொன்னவர்கள் அதற்காகப் பின்னர் வருந்த வேண்டும், மறுமுறை அப்படிச் செய்யக் கூடாது.. இது மட்டுமல்ல, துர்கா பூஜா, லஷ்மி பூஜா மற்ற எல்லா பண்டிகைகளுக்கும் இதே கதி தான்" என்றும் அவர் விளக்கியுள்ளார். தீபாவளி மலேசியாவில் அரசு விடுமுறை நாள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்த ஷரியத் துறை அரசின் ஒரு அங்கம் என்றாலும், அரசு அலுவலர்கள் ஃபத்வா போன்ற இந்த அறிக்கை அரசின் நிலைப்பாடு அல்ல என்று சொல்லியிருக்கிறார்கள். பெரும்பாலான முஸ்லீம் நாடுகளைப் போல் மற்ற மதத்தினரை ஒரேயடியாக நசுக்கி மிதிக்காமல் ஓரளவு உரிமைகளும் தரும் தரும் மென் - முஸ்லீம் (soft Islamic) நாடு மலேசியா. (15 ஆண்டுகளுக்கு முன் புத்த தேசமாக இருந்த இந்த நாடு திடீரென்று ஒரு நாள் தன்னை இஸ்லாமிய நாடு என்று அறிவித்துக் கொண்டு விட்டது. இதன் பின்னணியில் அந்த நாட்டின் இஸ்லாமிஸ்ட் திட்டம் எவ்வளவு இருந்தது என்பது தனிக்கதை. அது அவ்வளவு ஒன்றும் மென்மையானதல்ல).

ஆனால், சமீப காலமாக மலேசியா வன்-இஸ்லாம் நோக்கிச் சென்று கொண்டிருப்பதையே மேற்சொன்னது போன்ற அபத்தங்கள் காட்டுகின்றன. இந்தப் பாதையில் மலேசியா போகாமல் இருக்கச் செய்ய வேண்டியது அமைதி விரும்பும் உலக நாடுகளின் கடமை.


செய்தி: http://sify.com/news/fullstory.php?id=14309524

Malaysian Muslims warned over greeting Hindus
Wednesday, 11 October , 2006, 16:56

Kuala Lumpur: The head of Malaysia's Shariat Department has asked Muslims in the country not to greet Hindus a Happy Diwali, a directive the government distanced itself from saying it is a narrow interpretation of Islam.

Fauzi Mustaffar, head of Shariah department, in an email directive to office staff has said that Diwali was a religious festival in which Hindu deities were worshipped and greeting Hindus on the occasion was like practising polytheism to Muslims.

"So Muslims who have inadvertently wished Hindus a Happy Diwali, Happy Durga Pooja or Happy Lakshmi Pooja must immediately repent and not repeat it in the future," Fauzi said in his e-mail, according to The Star daily.

Government distanced itself from the controversial directive. Abdullah Zin, a minister in Prime Minister Abdullah Badawi's Department, said the email sent by Mustaffar was his "personal view," according to the daily.

"He (Mustaffar) has no authority to say Muslims shouldn't wish Hindus because that is like a fatwa (edict). And fatwas can only come from the National Fatwa Council and Jakim," Zin was quoted as saying. "Just because you wish someone Happy Diwali does not mean that you have embraced his beliefs and religion. It is not syirik (practising polytheism). In a multi-religious and multi-racial country like ours, it is important to live in harmony and be nice to one another," the minister said. Fauzi when contacted said the email was in response to employees’ enquiries and meant only for internal circulation.

Malaysia is a Muslim majority country but has a minority population of Hindus and Chinese who are freely allowed to practice and Diwali is a national holiday.

Saturday, October 07, 2006

கொலைகாரக் கொசுக்கள்: தொடரும் சுகாதார அவலம்

கொலைகார அப்சலுக்கு மரணதண்டனை கொடுப்பதா வேண்டாமா என்று விவாதம் தூள் பறந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இதை நினைக்காமல் இருக்க முடியவில்லை. Aedes Aegypti, Aedus Albopictus என்கிற இந்த ஜாதிக் கொசுக்கள் ஜாதி வித்தியாசம் பாராமல் எல்லாரையும் சகட்டு மேனிக்குப் பகலிலும் இரவிலும் கண்ட நேரங்களிலும் கடித்துத் தள்ளி வருகின்றன. பிரதமரின் பேரர்கள் முதல் மூன்றாந்தர ஹோட்டல் 'பேரர்கள்' வரை யாரும் விதிவிலக்கல்ல. நோகாமல் நொங்கு தின்று வந்தவர்கள் கூட நோய்ப்பட்டு டெங்கு வந்து கிடக்கிறார்கள். சிகுன்குனியா போன்ற வாயில் நுழையாத பெயரெல்லாம் சிக்கன் பிரியாணி போல சர்வ சாதராணமாகி விட்டது.

இன்றைய தேதியில் தீவிரவாதிகள் ரேஞ்சுக்கு நம் நாட்டை இந்தக் கொசுக்கள் அச்சுறுத்தி வருகின்றன. நாட்டின் நம்பர்-ஒன் மருத்துவ நிறுவனம் என்று 'போற்றப்படும்' தில்லியிலுள்ள ஏ.ஐ.ஐ.எம்.எஸ்-ல் பணிபுரியும் 30 டாக்டர்களையே டெங்கு நோய் தாக்கியுள்ளது, ஒரு டாக்டரை ஏற்கனவே பலிவாங்கியும் விட்டது. டெங்கு நோயாளிகள் நிரம்பி வழியும் வார்டுகளில் திறந்து கிடந்த குப்பைத் தொட்டிகள், தேங்கியிருக்கும் தண்ணீர் இவையே இதற்குக் காரணமாக சொல்லப் படுகின்றன. இருப்பினும் வேறு வழியில்லாததால் நோயாளிகள் இந்த மருத்துவமனையைத் தான் நாட வேண்டும். எல்லா ஊர்களிலும் உள்ள முக்கிய மருத்துவமனைகளிலும் தேர்க் கூட்டம் திருநாள் கூட்டம் போல டெங்கு ரத்தப் பரிசோதனை வரிசைகள் நீண்டு கொண்டிருக்கின்றன.

கேரளாவில் ஏற்கன்வே 81 உயிர்களைப் பலிவாங்கி விட்டது சிகுன்குனியா. இந்த நோய் குறிப்பிட சூழல் சார்ந்ததா (endemic) இல்லை இஷ்டத்துக்குப் பரவும் தொற்றுநோயா (epidemic) இதில் எந்த வகை என்று ஒருவழியாகச் சண்டை முடிந்து இப்பொழுது தொற்றுநோய் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே ஒரு மாதிரி குளிரும், வெயிலும் கலந்த நச நச தட்பவெப்பநிலை உள்ள எங்கள் பெங்களூரில் இத்தகைய நோய் பரவும் அபாயம் அதிகம் என்று அபிப்பிராயம் உள்ளது. கர்நாடகம் முழும் டெங்கு தாக்கலாம் என்றும் அஞ்சப் படுகிறது. அதனால் இதைத் தடுக்கும் முகமாக 888 ஸ்ப்ரேய்ங் மெஷின்களும் 5000 லிட்டர் pyarathrium மருந்தும் தயாராக (!!) இருப்பதாகவும் 3 மாதங்களுக்கு தொடர்ச்சியாக மருந்தைத் தெளித்து நோய் வரவிடாமல் தடுக்கப் போவதாகவும் மாநில அரசு சூளுரைத்துள்ளது. பார்ப்போம்.

மூன்றாம் உலக நாடுகளுக்கே உரித்தான இத்தகைய நோய்களெல்லாம் நம் நாட்டில் வசிக்கும் மூன்றாந்தரக் குடிமக்களைத் தான் தாக்கும் என்று தான் எண்ணிவந்தோம். ஆனால் சமத்துவக் குட்டையில் பிறந்த கொசுக்கள் இதைப் பொய்யாக்கி விட்டன. சேலத்தில் வசிக்கும் என் உறவினர்கள் குடும்பத்தோடு போன மாதம் சிகுன்குனியா தாக்கி, மீண்டு இன்னும் மூட்டு வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஹைதராபாதில் வசிக்கும் என் ஆபீஸ் பாஸின் வயதான அப்பாவையும் பகல் தூக்கத்தின் போது இந்தக் கொசுக்கள் பதம் பார்த்திருக்கின்றன. ஒரு வருடம் முன்பு என் மைத்துனரின் 2-வயது மகனை டெங்கு தாக்கி நுங்கம்பாக்கம் சைல்ட் ட்ரஸ்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். உடம்பின் பல இடங்களில் ட்ரிப்ஸ் ஏற்றுவதற்காக ஊசி குத்தியிருந்த குழந்தயைப் பார்த்தது கொடுமையிலும் கொடுமை. கண்களில் ரத்தக் கண்ணீர் வந்தது. 10 நாட்கள் அட்மிட் ஆகி ஒருவழியாக சரியாயிற்று. குழந்தையைப் பார்க்கப் போனபோது அந்த ஃப்ளோர் முழுக்க டெங்கால் அடிபட்டுக் கிழந்த சின்னஞ்சிறு குழந்தைகள் கட்டில்களில் படுத்துக் கிடந்தன, சில குழந்தைகள் வயிறு உப்பி பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தன.

இவையெல்லாம் நல்ல வசதி படைத்த, சுகாதாரத்தைப் பேணும் நடுத்தர, மேல் நடுத்தர வீட்டுக் குழந்தைகள். இந்தக் குழந்தைகளுக்கே இந்தக் கதி என்றால் சுகாதாரமற்ற சேரிகளில், கஷ்டப் படும் குடும்பங்களில் வளரும் குழந்தைகள் கதி எப்படியாகும் என்று கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

காரணம்? கொசு ஐயா, ஜஸ்ட் கொசு! இந்த 50-ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் நோய் பரப்பும் இந்தக் கொலைகாரக் கொசுக்களைக் கூட நாம் ஒழிக்க முடியவில்லை என்பது வெட்கக்கேடு.

பழகி விட்டோம், கொசுக்களுடன் வாழப் பழகி விட்டோம். இன்று நேற்றல்ல நூற்றாண்டுகளாக என்று தோன்றுகிறது. ஆங்கிலத்தின் mosquito என்ற வார்த்தை லத்தீன் musca-வில் இருந்து வந்தது. இது சம்ஸ்கிருதத்தின் "மஷகீ" என்பதிலிருந்து வந்திருக்கலாம். ஆகக்கூடி, உலகத்திற்கே கொசுவுக்குச் சொல் வழங்கியது நாம் என்று பெருமைப் பட்டுக் கொள்ளலாம்! ஒவ்வொரு வருடமும் தீபாவளி பொங்கல் போல இந்த நோய்கள் வந்து போய்க்கொண்டிருக்கின்றன.

கொசுக்கடி என்பதை வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டோம். நகரமோ, கிராமோ, எவ்வளவு பெரிய வீடுகளாக இருந்தாலும் அங்கு ஏதாவது ஒரு கொசுவிரட்டு வழிமுறை இருக்கத் தவறுவதில்லை - வலை அடித்த ஜன்னல்கள் அல்லது திறக்கப் படக் கூடாத ஜன்னல்கள், ஆல்அவுட் போன்று புகை விட்டுப் பகையழிக்கும் திரவங்கள் இல்லை பழைய மாடல் சுருள்கள் இப்படி ஏதாவது ஒன்று. இதையெல்லாம் செய்ததால் பெருமளவு தப்பித்தோம்.

யார் இதற்குப் பொறுப்பாளி? அரசா, சமுதாயமா என்றெல்லாம் வழக்கம்போல விவாதம் நடக்கிறது. எல்லாரும் தான் என்பதில் போய் அது முடியவும் செய்கிறது. கொசு என்பது இயற்கையின் ஒரு அங்கம், அதை எப்படி ஒழிக்க முடியும் என்றெல்லாம் கூட கேட்கப் படுகிறது ! மக்கள் நெரிசல் உள்ள உலகின் பல நகரங்களில் கொசுதொல்லை என்பதையே பார்க்க முடியவில்லையே, எப்படி சாதித்தார்கள்?

அறிவியல் இவ்வளவு தூரம் முன்னேறி விட்ட இந்த நூற்றாண்டில், இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி கொசுக்கள் உருவாவதை, பரவுவதைத் தடுக்க இந்தியாவில் நாம் என்ன செய்திருக்கிறோம் என்று கேட்கத் தோன்றுகிறது. என்று ஒழியும் இந்த சுகாதார அவலம்?