Thursday, August 30, 2007

..இன்னொரு மிதவாத தமிழ் முஸ்லீமின் முகத்திரை கிழிகிறது

முத்தமிழ் குழுமத்தில் நடந்து வரும் இந்த விவாதத்தை தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது..

விஷயம் இதுதான். தான் எழுதிய பதிவில் இடி அமீன், ஒசாமா பின் லேடன் இவர்களை "அவன்" என்று குறிப்பிட்டு செல்வன் எழுதியிருந்தார். உடனே அங்கிருந்து வந்தார் பழைய கிரிக்கெட் வர்ணனை புகழ் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் ஐயா.

".. இடி அமீன், ஒசாமா பின் லதெயின் என்கிற பெயர்கள் வந்ததோ தொலைந்தது. "அவன்" இவன் என்று ஒருமையில் ஆரம்பித்து விடுவார்கள். யாராக இருக்கட்டுமே ஏன் இந்தப் பண்பாட்டுச் சீர்கேடு ?"

செல்வன் விடுவாரா? இப்படி எழுதினார் -

தீவிரவாதியை அவன்,இவன் என்று எழுதாமல் அவர்,இவர் என்றா எழுத முடியும்?:-).
சந்தன கடத்தல் வீரப்பனை அவன்,இவன் என்று தான் எழுதுகிறோம்<
http://thatstamil.oneindia.in/news/2000/09/06/return.html>..நம்பலைன்னா சுட்டியை பாருங்க:)
பங்க் குமாரை அவன் இவன் என்று தான் எழுதுகிறோம். நம்பலைன்னா அதுக்க்கும் சுட்டி<
http://thatstamil.oneindia.in/news/2006/12/13/latika.html> இதோ
முட்டை ரவியை அவன் இவன் என்று தான் எழுதறோம். சுட்டி<
http://thatstamil.oneindia.in/news/2006/10/22/rowdy.html>
இதை விட மோசமா எருமைன்னெல்லாம் <
http://holyox.blogspot.com/2006/10/202.html> பண்டிதர்கள் சிலரை எழுதிருக்கேன்..:-))
நாவிதர் <
http://holyox.blogspot.com/2007/08/324_23.html> அப்படின்னு மரியாதையா தான் இதுவரை எழுதிருக்கேன்.
ஆனா பின்லேடனை எல்லாம் அவர் இவர்ன்னு எழுத சொல்லாதீங்க...அவனை அவன்,இவன்னு எழுதறதே ஜாஸ்தி மரியாதையோன்னு தோணுது:-))


ஜப்பார் ஐயாவுக்கு உள்ளுக்குள் பயங்கர கோபம் போலிருக்கிறது - எழுதுகிறார் -

"... அமெரிக்கா செய்யும் கொடூரங்களையும், அநியாயங்களையும், அக்கிரமங்களையும் நிங்கள் நியாயமானவைதான் என்று வாதிட்டால், நியாயப் படுத்தினால், ஒசாமா பின் லதைனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். அமெரிகக அக்கிரமங்களுக்கு ஆப்பு வைக்கும் ஒரே ஆண்பிள்ளை ஒசாமா என்று அரேபியாவில் சொல்கிரார்கள். அரேபிய அரச குடும்பத்தை விட செல்வத்திலும் செல்வாக்கிலும் உயர்ந்த குடும்பம் பின் லதைனின் குடும்பம் என்றும் அங்கே குறிப்பிடுகிரார்கள். "

அப்படிப் போடுங்க அரிவாள ! முதலில் இவர் எழுதியதைப் படித்ததும் ஜப்பார் ஐயா எல்லாருக்கும் மரியாதை குடுக்கச் சொல்றாருப்பா என்ற எண்ணம் தான் இயல்பாகத் தோன்றியது. மேலே உள்ளதைப் படித்ததும் தான் இவரது உண்மையான நோக்கம் தெரியவருகிறது.

உண்மையில் இவருக்கு வந்த கோபம், முட்டை ரவி, பங்க் குமார் ரேஞ்சுக்கு செல்வன் ஒசாமாவை தாழ்த்திவிட்டார் என்பது தான்.. பாவம் அதைச் சொல்லவேண்டாம் என்று நினைத்தாலும் வந்து விட்டது! அதுவும் பாருங்கள், அந்த லதைன் என்ற அரபி உச்சரிப்பு பிசகாமல் தன் ஹீரோ பெயரை எழுதியிருப்பதை

இந்தியாவை எதிரி நம்பர்-2 என்று வெளிப்படையாக அறிவித்த இந்த இஸ்லாமிஸ்ட் தீவிரவாதி மீது என்ன பரிவு, என்ன மரியாதை ! இவருக்கும் தங்கள் வீடுகளில் பின் லேடன் படத்தை வைத்திருக்கும் ஹைதராபாத் ஜிகாதி ஆதரவாளர்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் இல்லத்தில் வைத்திருக்கிறார்கள், இவர் இதயத்திலேயே வைத்திருப்பார் போல.

இந்த கடைந்தெடுத்த தேசத்துரோகத்தை கண்டுகொள்ளாமல், கண்டனம் செய்யாமல் வழக்கம் போல கும்மி அடித்து காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் அந்த குழுமத்தில். முற்றிப் போன திம்மித் தனம் !

ஜப்பார் சொல்கிறார், அமெரிக்காவை எதிர்த்து போராடும் ஆண்பிள்ளை ஒசாமா என்று.

அமெரிக்காவைவிட அதிகமாக குழந்தைகளை சூடானில் இஸ்லாமிஸ்டுகள் கொல்வதோ அல்லது சதாம் விஷவாயுவிட்டு கொன்றதோ இவர்கள் கண்களுக்கு தென்படவில்லையா? அதே போன்று ஒரு கற்பழிப்பை கண்டு காஷ்மீரிலும், ஈராக்கிலும் கொதிப்பார்கள் - இங்கே அப்படிச் செய்பவர்களுக்கு அரசு தண்டனை வழங்குவதும், பொதுநலமிகள் போராடுவதும் அவர்கள் கண்ணுக்கு தென்படாது.

ஆனால், சூடானில் கற்பழிக்கப்படும் கறுப்பின இஸ்லாமியப் பெண்கள், ஆஃப்கானிஸ்தானில் முஜாஹித்தீன்களால் கற்பழிக்கப்படும் இஸ்லாமியப் பெண்கள், சதாமின் சேனையினால் கற்பழிக்கப்பட்ட ஷியா, குர்து பெண்கள் - இந்த விஷயங்களெல்லாம் இவர்கள் கண்களிலேயே படாதா?

இந்த ஒசாமா இன்று தான் அமெரிக்காவை எதிர்த்து போரிடுகிறார். நேற்று ரஷ்யாவை எதிர்த்து போர் புரிந்தார். இன்று இவர்கள் அமெரிக்கா குழந்தைகளை கொல்கிறது என்று வாதிடுவார்கள். அப்போது நேற்றே ஒசாமா தீவிரவாதிதானே? சரி, ரஷ்யாவும் ஆஃப்கானியர்களை கொன்றது, ஆக்கிரமித்தது என்று வைத்துக்கொண்டால், அதே போன்று சதாம் ஹுசைன் குவைத்தை ஆக்கிரமித்தானே அப்போது எங்கே போனார் - உயர்குல வீரர் ஒசாமா பின் லதைன்?

ஒரு மதவெறியனை, பயங்கரவாதியை, மனித மிருகத்தை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் ஜப்பாரை தட்டிக் கேட்காதது மட்டுமல்ல, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் தமிழர்களைச் சொல்லவேண்டும்....

வேறு யாரை நொந்து கொள்வது நாம்?

Tuesday, August 28, 2007

ரக்க்ஷாபந்தன் வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் ரக்க்ஷாபந்தன் வாழ்த்துக்கள்!

A very happy Rakshabandhan to all.

Though its not in Tamil tradition, we have been celebrating this festival for years now in the family and also in the neighbourhood.

Its such a wonderful celebration of love and brotherhood, that brings all sections of the society together. This is one festival that reminds us the timesless Hindu message of universal brotherhood and "Vasudhaiva kutumbakam" (one world family) that echoed itself in the expression of "Sisters and brothers of America..." of Vivekananda in 1893.

Its an ancient festival that is mentioned in the Epics and Puranas. Indrani tied the 'rakhsa' around Indra's wrist to give him strength in his fight against Asuras. Noble king Mahabali is supposed to have observed the Vrata of Rakhsabandhan. In the Mahabharata, Sri Krishna advises Yudhishtira to observe this vow of Raksha that unites and protects all citizens of his kingdom.

There is a medieval legend in which a Rajput princess of a small principality sends a Rakhi to Mughal emperor Humayun with a plea to save her kingdom from the invading Gujart Sultan. This moves the heart of Humayun (who himself was an oppressive ruler) and he rushes to save his Rakhi sister, abandoning his war in Bengal.. But before he could reach, the Rajput principality falls and all that Humayun gets to see was the ashes of the princess, who had immolated herself in an act of "Jauhar" to save her honour.

मा भ्राता भ्रातरं द्विक्षन्
मा स्वसारमुत स्वसा
सम्यंच सव्रता भूत्वा
वाचं वदत‌ भद्रया

May brothers and sisters not hate one another
May you all take the blessed vow (vrata) of unity and speak words of togetherness and benediction
- Atharva Veda, 3.30.3
See this inspiring news -

J&K: Schoolgirls tie rakhis to jawans
http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20070024144

Monday, August 27, 2007

ஹைதராபாத் குண்டுவெடிப்புக்கள்: தெற்கின் ஜிகாதி தீவிரவாத கொடுக்குகள்

ஹைதராபாத் போகும்போதெல்லாம் ஹுசைன் சாகர் ஏரிக்கும், பக்கத்தில் உள்ள லும்பினி பூங்காவிற்கும் சென்றிருக்கிறேன். அட்டகாசமான அந்த லேசர் காட்சிகளில் நகரின் பல புராதன பெருமைகளையும் சொல்லி, கடைசியில் எப்படி எல்லா மதங்களும் அமைதியாக வாழும் நகரம் ஹைதராபாத் என்று ஒரு செக்யுலர் பஜனை உண்டு. ஆனால், பிரிவினையின் போதே ஹைதராபாத் முஸ்லீம்கள் பாகிஸ்தானில் சேரத்துடித்து அப்துல் ரசாக் தலைமையில் வன்முறையில் இறங்கியதும் சர்தார் படேல் அவர்களின் உறுதிமிக்க ராணுவ நடவடிக்கையால் அவர்கள் அடக்கப் பட்டதுமான அதி முக்கியமான சரித்திர சம்பவம் இந்த லேசர் காட்சிகளில் கிடையாது..

இந்த வாரக்கடைசியில், வேண்டுமென்றே இருட்டடிக்கப் பட்ட அதே ஜிகாதி இஸ்லாமியத் தீவிரவாதத்தின் அதே கோர முகம் அதே பூங்காவிலும், நகரத்தின் வேறு சில பகுதிகளிலும் 53க்கும் மேற்பட்ட மனித உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது.

வழக்கம் போல வாழ்க்கையின் வாரக்கடைசி குதூகலங்களுக்காக பூங்காவிற்கும், உணவகங்களுக்கும் ஓடும், சட்டத்த்தை மதித்து வாழ்ந்த, உழைத்து உண்ணும் மனிதக் கூட்டத்தின் உயிர்கள் இந்த மதவெறி மிருகங்களின் கோழைத்தனமான தாக்குதலில் சிதறடிக்கப் பட்டிருக்கின்றன. உயிரிழந்தவர்களின் ஆன்மா அமைதியடையட்டும். அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இஸ்லாமிய தீவிரவாதம் ஹைதராபத்திற்குப் புதிதல்ல. லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஹர்கத்-உல்-ஜிஹாட்-அல்-இஸ்லாமி (HuJi) அமைப்புகள் உள்ளூர் முஸ்லீம்கள் மத்தியில் அன்றாடம் புழங்கும் சமாசாரம் என்று தன்னிடம் கூறப்பட்டதாக பாதுகாப்பு நிபுணர் பி.ராமன் இந்தக் கட்டுரையில் கூறுகிறார். அவர் மேலும் தரும் தகவல்கள் -

".. ஹைதராபத்தில் ஏராளமான முஸ்லீம்கள் வீடுகளில் ஒசாமா பின் லேடன் மற்றும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரப் படங்களை மாட்டி வைத்திருக்கிறார்கள். ஜார்ஜ் புஷ் இந்த நகரத்திற்கு வந்த போது மிகப் பெரிய அளவில் எதிர்ப்புகள் இருந்தன - எதிர்ப்பாளர்கள் பின் லேடன் படங்களை ஊர்வலத்தில் எடுத்துச் சென்றார்கள். வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீன் மீது பட்டப் பகலில் கொலைவெறித்தாக்குதல் நடத்தும் அளவுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் இங்கு துளிர்விட்டுப் போயிருக்கிறார்கள். இந்தியாவில் நடக்கும் எல்லா தீவிரவாத தாக்குதல்களிலும் ஏதாவது ஒரு ஹைதராபாத் தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது.. 1995-லேயே இங்கு அல்-கொய்தாவின் தலைமறைவு இயக்கங்கள் (sleeper cells) உருவாகி விட்டன"

கொல்லைப் புறத்தில் இவ்வளவு பெரிய ஜிஹாதி தீவிரவாத ஊற்றை வைத்துக் கொண்டு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததும், வழக்கம் போல பங்களாதேஷ், பாகிஸ்தான் தீவிரவாதிகள் இதை செய்திருப்பார்கள் என்று ஆந்திர முதல்வர் வெட்கமில்லாமல் அறிக்கை விடுகிறார். அதே நேரத்தில் உளவுத்துறை குண்டுவெடிப்பில் பயன்படுத்திய வெடிமருந்து நாக்புரில் கடை வைத்திருக்கும் ஹைதரபாத்காரர் சுஹைல் என்பவரது கடையில் இருந்து வந்திருப்பதாக அறிவிக்கிறது... நம் நகரங்களிலேயே இருக்கும் இந்த கொலைகாரர்களை பார்க்க மறுத்து இன்னும் எத்தனை காலம் தான் கண்களை மூடிக் கொண்டிருக்கப் போகிறோம்?

இந்த குண்டுவெடிப்புகள் 2005 தீபாவளிக்கு முன்பு தில்லியில் நிகழ்ந்த சம்பவத்தையே பெரிதும் ஒத்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் வாரங்களில் இந்த நகரில் விமரிசையாகக் கொண்டாடப் படும் முக்கியமான இந்துப் பண்டிகைகளான ரக்ஷா பந்தன் மற்றும் விநாயக சதுர்த்தி விழாக்களைக் குறிவைத்து, இந்தத் தருணத்தில் மக்களை அச்சுறுத்த இந்த குண்டுவெடிப்புகள் நடந்ததாகக் கூறப் படுகிறது. இனிமேல் ஒவ்வொரு வருடமும் எல்லா நகரங்களிலும் முக்கியமான இந்துப் பண்டிகைகளின் போது ஜிகாதி தாக்குதல்கள் திட்டமிடப்படலாம் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

தீபாவளி, பொங்கல் போல ஜிகாதி தீவிரவாதத்தால் இந்தியர்கள் உயிரிழப்பதும் வழக்கமான நிகழ்வாகி வருகிறது. ஜனவர்-2004 முதல் ஆகஸ்டு 2007 வரை உள்ள காலகட்டத்தில் இந்தியாவின் இழப்பு 3674 மனித உயிர்கள் என்று ஆகஸ்டு-27 டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவிக்கிறது. உயிரிழப்பில் போரால் சீரழிக்கப் பட்டிருக்கும் ஈராக்கிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு இந்தியா தான் என்றும் இந்தப் பத்திரிகை கணக்கிட்டிருக்கிறது. தீவிரவாதத்தால் பலியான அமெரிக்கர்களின், பிரிட்டிஷாரின், ஐரோப்பியர்களின் ஒட்டுமொத்த ரத்தத்தை விட அதிகமாக இந்துக்களின் ரத்தம் தான் ஜிகாதி வன்முறைக்கு எதிராக இன்றும் சிந்திக் கொண்டிருக்கிறது.
இப்போது நடப்பது கொடுங்கோலன் ஔரங்கசீப்பின் ஆட்சியோ, கொள்ளையன் தைமூர் படையெடுப்போ அல்ல, ஆனால் சுதந்திர பாரதத்திலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இஸ்லாமிய மதவெறி மிருகங்களின் அதிகபட்ச தாக்குதல்கள் இந்துக்களைக் குறிவைத்தே நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

எவ்வளவு பெரிய அபாயத்தை நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணிப் பாருங்கள். இந்த சவாலை எதிர்கொள்ளத் திராணியில்லாத அரசியல் சக்திகளுக்கு நாட்டை ஆளும் உரிமை இல்லை. இனிவரும் காலங்களில் தீவிரவாதம் தான் இந்தியாவின் தலையாய பிரசினை - அதை உறுதியுடன் நேர்கொள்ளும் அரசியல் சக்திகளுக்கு மட்டுமே தங்கள் உயிர்மீது கொஞ்சமாவது பிரியம் உள்ள இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும்.

Thursday, August 16, 2007

மதுரை: 5-ஸ்டார் வேலையைத் துறந்து ஏழைகளுக்கு உணவளிக்கும் சமூகத் தொண்டர்

மதுரையைச் சேர்ந்த திரு. கிருஷ்ணன் சோற்றுக்கு அல்லாடும் மக்கள் நிலை கண்டு வேதனையுற்று, தன் வேலையைத் துறந்து அவர்களுக்கு உணவளிக்க ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவரது தன்னலமற்ற தொண்டுள்ளம் போற்றுதலுக்குரியது. உங்களால் முடிந்த உதவிளைச் செய்யுங்கள் -

Madurai: Thousands of homeless people in India live on the streets, search food in garbage, sleep hungry every night and in fact live a life worst than stray animals. These are invisible to most of us. But Krishnan, once a chef in a 5-star hotel, realized five-years back that he couldn't turn a blind eye anymore.

The 32-year-old former chef gave up his well-established profession to start an NGO that feeds the homeless people across the streets of Madurai.

"I saw a very old man, literally eating his own human waste out of hunger. I went to the nearby hotel and asked them what was available. They had idli, which I bought and gave to the old man. Believe me, I had never seen a person eating so fast, ever. As he ate the food, his eyes were filled with tears. Those were the tears of happiness," said N Krishnan.

Most of the people, he provides food are mentally challenged, he tells. "They eat their food without uttering a word," said Krishnan who is the Founder of Akshaya Trust, as he calls his 'kitchen'.

Krishnan drew up a fantastic menu, and created a committed team of cooks.

"Will you eat leftovers, ration rice, food which is not so good? If I cant eat such food, why should I give to someone who is as much a human being as me?"

Krishnan gets in touch with local donors, to finds those willing to donate on occasions like festivals and birthdays. And no matter what, Krishnan's food packet finds its way.

Krishnan can be contacted at 0452-4353439, 9843319933

(Courtesy: CNN-IBN; August 6, 2007)

Monday, August 13, 2007

கிறித்தவப் பள்ளிகள் பற்றி பாரதியார்

எவ்வளவு தீர்க்க தரிசனத்துடன் பாரதி எழுதியிருக்கிறார் பாருங்கள்.

மிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல்

பாரதியார் இந்தியா பத்திரிக்கையில் 18-8-1906 இல் எழுதியது.

சென்ற வாரம் சுதேசீய மஹான் களையும் புராதன வீரர்களையும், கவிஞர்களையும், தத்துவ ஞானிகளையும் பற்றி நமது இளைஞர்கள் நன்றா யறிந்திருக்கும்படியான சுதேசீய கல்வி இக்காலத்தில் கொடுக்கப்படவேண்டுமென்று வற்புறுத்திப் பேசினோம். மிஷனரிகளின் சம்பந்தமில்லாத சுத்த ஹிந்துப்பாடசாலைகளில் கூட மேற்கண்டவிதமான கல்வி அளிக்கப்படாமலிருத்தல் மிகவும் விசனகரமான விஷயமே. ஆனால் மேற்படி ஹிந்துப் பாடசாலைகளிலே நமது மஹான் களைப் பற்றி வேண்டுமென்று தூஷணை புரிந்து வாலிபர்களின் மனதை மாசு படுத்துவதில்லை என்ற ஒரு நலம் இருக்கிறது.

வியாஸர், வசிஷ்டர், யாக்ஞவல்கியர், சங்கரர் என்ற பெயர்களைப் பற்றி ஹிந்துப் பாடசாலை மாணாக்கர்கள் ஏதுமறியாமலிருக்கிறார்களென்பது மெய்யேயாயினும் மேற்படிப் பெரியோர்களைத் திட்டும்படிக்கு ஹிந்துப்பாடசாலை உபாத்தியாயர்கள் கற்பித்துக் கொடுப்பது கிடையாது. இது சாதாரணத் தீமை என்பதாக லேசாய் எவரும் நினைத்துவிடக் கூடாது.
புராதன சரித்திரமற்ற தேசத்துக்கு மென்மேலும் அபிவிருத்தி ஏற்படுதல் கஷ்டம். புகழ்பெற்ற புராதன சரித்திரமிருந்தும், அதனை மறந்திருக்கும் ஜாதியார் அழிந்தே போய்விடுவார்கள். புகழ் பெற்ற பூர்வகாலச் சரித்திரமிருக்க, அதனை இகழ்ந்து அதன் பொருட்டு லஜ்ஜையுறத் தலைப்படும் தேசத்தாரின் கதியை எழுதவும் வேண்டுமா ?


எனவே கிறிஸ்தவப் பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்பிச் சிவாஜியைக் கொலையாளி யென்றும், வியாசரை அறிவிலி யென்றும், ஸ்ரீகிருஷ்ண பகவானைத் தூர்த்தனென்றும் அவ் விளைஞர்கள் கற்கும்படி செய்கிற ஒவ்வொரு தந்தையும் புத்திரத் துரோகியாகிறான். இளைஞர்கள் அவ்வாறே நினைப்புக் கொண்டவர்களாகி, தமது ஒழுக்கத்திற்கும், அபிவிருத்திக்கும், ஊக்கத்திற்கும் முன்னோர்களிலிருந்து யாரையும் திருஷ்டாந்தமாகச் சொல்ல வன்மையற்றவர்களாகி, அது காரணமாக ஒழுக்க முதலியவற்றிலே தாழ்வடைந்து போய் விடுவார்களாதலால் மேற்கண்டவாறு தமது புத்திரர்களை மிஷன் பாடசாலைகளுக்கு அனுப்பும் தந்தையர் தேசத் துரோகிகளுமாகிறார்கள்.

கிறிஸ்து மார்க்கத்திலே நாம் அனாவசியமாக விரோதம் கொண்டிருப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். உலகத்திற் பிறந்த மஹோபகாரிகளிலும், மஹா ஞானிகளிலும் கிறிஸ்து ஒருவரென்று நாம் நம்புகிறோம். 'நானும் எனது தந்தையும் ஒன்றே ' என்று கிறிஸ்துநாதர் கூறியதற்குக் கிறிஸ்தவர்கள் என்ன பொருள் கூறிய போதிலும் 'சிவோஹம் ' என்னும் அத்வைதக் கோட்பாட்டையே கிறிஸ்து மேற்கண்டவாறு சொன்னாரென்று விவேகாநந்தர் போன்று பெரிய ஹிந்து தேசிகர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆதலால், நாம் கிறிஸ்து மார்க்கத்தை விரோதிக்கவில்லை. கிறிஸ்தவப் பாடசாலைகளிலே கல்வி கற்பிக்கப்படும் மாதிரியையே விரோதிக்கிறோம். இதற்குப் பாதிரிமார்களைக் குறை கூறுவதால் சிறிதேனும் பயனில்லை. அவர்கள் நம்மையும் நமது பூர்வகால மஹான்களையும் அறியாமையாலும், தாம் வாங்கும் சம்பளத்தின் பொருட்டாகவும் தூஷணை புரிகிறார்கள்.

ஆரியத் தன்மையைப் பெரும்பாலும் இழந்து அஞ்ஞானம், மூடநம்பிக்கை என்னும் சேறுகளிலே அழுந்திக் கிடக்கும் நம்மவர், கிறிஸ்தவப் பாதிரிகள் நமது முன்னோரைப் பற்றிக் கூறுவதே மெய்யாக இருக்கலாமென்று கிரகித்துக் கொள்கிறார்கள்.ஸ்ரீமத் ரானடே, ஸ்ரீ தத்தர் முதலியோர் எழுதியிருக்கும் பூர்வகாலச் சரித்திரப் பகுதிகளை நமது இளைஞர்களுக்குப் பயிற்ற வேண்டும். அறியாமை மிகுந்த அன்னியர்கள் அழுதி வைத்திருக்கும் பொய்ச் சரித்திரங்களைச் சுழற்றி யெறிந்து விட்டு நமது நாட்டின் தேசபக்தியும் நவீன அறிவும் கலந்த மேலோர்கள் சரியானபடி ஆராய்ச்சிகள் புரிந்து உண்மையான சரித்திரங்கள் எழுதத் தலைப்படவேண்டும். அதற்கிடையே இளைஞர்களின் அறிவையெல்லாம் பாதிரிகள் விஷமாக்கி விடாதவாறு அவர்களின் பாடசாலைகளை விலக்கி வைக்க முயல வேண்டும். போதுமானபடி பணம் குவித்து வைத்திருக்கும் மனிதர்கள் பச்சையப்பன் காலேஜ் போன்ற சுதேசீய காலேஜ்களையும் ஸ்கூல்களையும் பலப்படுத்தி, பாதிரிகளின் பள்ளிக்கூடங்களுக்கு நிகராக வேண்டும்.

நமது பாடசாலைகளில் உபாத்தியாயர்கள் ரஸமில்லாமலும், சம்பளம் அதிகமாகவும் இருக்குமானால் இவற்றை மாணாக்கர்கள் எட்டிப் பார்க்கவே மாட்டார்கள். இதையெல்லாம் செல்வர்கள் கவனிக்க வேண்டும். தேசத்தை நாளுக்குநாள் கீழே அழிய விட்டு விடுவோமானால், பிறகு எந்த உபாயத்தாலும் உயர்த்த முடியாமல் போய்விடக்கூடிய ஒருநாள் வந்து விடும். தெய்வக் கிருபையால் அந்த ஒருநாள் இன்னும் வந்து விடாமலே யிருக்கின்றது. அது வருமுன்பாக நானாவிதத்தாலும் முயற்சி புரிந்து நமது நிலைமையைச் சீர்திருத்திக் கொள்ளவேண்டும்.

'விழிப்பீர்! எழுவீர்! இன்றேல் நீர் வீழ்ந்து கிடப்பீர் என்றுமே!

* * *

பாரதியின் இந்தக் கனவுக்கு வடிவம் கொடுப்பதில் முன் நின்றவை, முன் நிற்பவை இந்து இயக்கங்கள் தாம். பா.ஜ.க தலைமையில் ஆன தேசிய முன்னணி ஆட்சியின்போது தான் அப்போதைய கல்வி அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி வரலாற்றுப் புத்தகங்களில் எழுதப் பட்டிருக்கும் பொய்களை சரி செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். இவை தேசதுரோக இடதுசாரிகளாலும், போலி மதச்சார்பின்மை வாதிகளாலும் கடுமையாக விமர்சிக்கப் பட்டன.

பாரதி சொன்னதை செய்ததற்காக பாரதீய ஜனதா கண்டிப்பாக பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.