Thursday, December 28, 2006

“அனைத்துயிரும் ஆகி.." - யோகாசனங்களின் உணர்வு நிலைகள்

யோகாசனங்கள் எப்படி உருவாயின என்பது பற்றிய கேள்வி ஆசனங்களைப் பயிற்சி செய்யும் பலருக்கும் தோன்றியிருக்கும். “இலக்கியத்திற்குப் பின் இலக்கணம்” எனப்து போல, யோகத்தின் முதல் நூல் என்று கருதப் படும் பதஞ்சலி யோக சூத்திரங்கள் வரையறுக்கப் படுவதற்கு முன்பே யோகம் பற்றிய பல நுட்பங்கள் அறியப் பட்டிருந்திருக்க வேண்டும் என்றே யோக அறிஞர்கள் பலரும் கருதுகிறார்கள். இந்த நூலில் ஆசனம் பற்றி ஒரே ஒரு சூத்திரம் தான் உள்ளது: “உறுதியானதும், சுகமாயிருப்பதும் ஆன நிலை ஆசனம்”. ஏதாவது ஒரு ஆசனம் செய்யும்போது யாருக்காவது உடல் வலியால் முகம் சுளிப்பது போல் ஆனால் “ஸ்திரம் சுகம் ஆசனம்” என்று எங்கள் யோக ஆசிரியர் இந்த சூத்திரத்தைச் சொல்லி நினைவூட்டிக் கொண்டே இருப்பார்!

பதஞ்சலிக்குப் பின்னர் வந்த “ஹடயோக ப்ரதீபிகா” போன்ற நூல்களில் இன்று மிகப் பிரபலமாகி நாம் பயின்று வரும் பல ஆசனங்களின் பெயர்களும், அந்த ஆசனத்தில் உடலின் தோற்றம் (posture) எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றிய சித்திரங்களும் கிடைக்கின்றன. படங்கள் போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தாமல் சொற்கள் மூலமே விளக்கினாலும் ஆசனங்களுக்கான தெளிவான கையேடாக இந்த நூல் விளங்கி வந்திருக்கிறது. இது தவிர, வழிவழியாக வந்துள்ள தொடர்ச்சியான குரு சிஷ்ய மரபுகளும் இந்த ஆசனங்களில் உள்ள கலை நுணுக்கத்தை சரியான முறையில் இன்று வரை எடுத்து வந்துள்ளன.






ஆசனங்கள் வெளி உறுப்புக்களையும், தசைகளையும் மட்டுமல்ல, உடலின் பல உள் உறுப்புக்களையும், நாடி நரம்புகளையும் உறுதியாக்குகின்றன.
பல யோகாசனங்கள் பார்ப்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும், பயிற்சி செய்பவர்களுக்கு இவை மிக இயல்பானதாகவே தெரியும். பயிற்சி இதற்குக் காரணம் என்றாலும், யோக ஆசனங்களின் தன்மையே அப்படிப் பட்டதாயிருக்கிறது. 2-3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வளரும் பருவத்தில் தாங்களாகவே பல ஆசனங்கள் போடுவதைப் பார்க்கலாம். உட்காருவதற்கு வந்து நிற்கத் தொடங்கும் சமயம் பல குழந்தைகளுக்கு வஜ்ராசனம் தானாக வரும். தவழ்வதற்காக அமரும் தோற்றமே ஒரு ஆசனம் தான்! ஆசனங்களின் இந்த இயற்கைத் தன்மை அவற்றுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது.

மனித உடலின் இயக்கம் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு பெற்றிருந்தனர் பண்டைக் கால யோகிகள். காட்டில் விலங்குகள், பறவைகள் இவற்றின் வாழ்வைக் கூர்ந்து கவனித்த அவர்கள் அவை எப்போது அமைதியடைகின்றன, ஆக்ரோஷம் கொள்கின்றன இவற்றையெல்லாம் ஆராய்ந்து பல ஆசனங்களை உருவாக்கியிருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது.

புகழ்பெற்ற யோக குரு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களிடம் இந்தக் கேள்வி கேட்கப் பட்ட போது அவர் கூறினார் “யோகத்தின் ஒரு உயர்ந்த நிலையில் செல்லும்போது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ஆன்மாவை யோகிகள் உணர்ந்தார்கள். அந்த உணர்ச்சியின் வெளிப்பாடாக அவர்கள் உடல் தானாகவே பல விதமான தோற்றங்கள் கொண்டது. இப்படித் தான் ஆசனங்கள் தோன்றின. பின்னர் அவை ஆய்வுக்கு உட்பட்டு நெறிப்படுத்தப் பட்டன. பிராணாயாம முறைகள் தோன்றியதும் இப்படித் தான்.” ஸ்ரீஸ்ரீ அவர்களது உருவாக்கம் என்று கருதப் படும் புகழ்பெற்ற “சுதர்ஷன் க்ரியா” என்ற பிராணாயாம முறையும் பரிசோதனைகளாலோ, புறவயப் பட்ட முயற்சிகளாலோ தோன்றவில்லை. மாறாக, ஆழ்ந்த தியானத்தின் போது தானாகவே அது சித்தித்ததாக அவர் பலமுறை கூறியுள்ளார். உலகெங்கும் உள்ள யோக ஆசிரியர்கள் அடிப்படை யோகப் பயிற்சிகளில் புதிய புதிய பரிமாணங்களை இன்றும் ஆக்கம் செய்து வருகிறார்கள். இவற்றில் எத்தனை முயற்சிகள் அகவயப் பட்டவை என்பது கேள்விக்குரியது. இருந்தாலும் யோகம் என்பது “கணந்தோறும் புதிதாகத் தோன்றும்” ஒரு வாழும் கலை என்பதில் ஐயமில்லை.

யோகாசனங்கள் உருவாக்கும் உடல் தோற்றத்தோடு, அவை தரும் உணர்வு நிலையையும் கருத்தில் கொண்டு பின்னர் பெயர்கள் இடப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி
பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகி
வல் அசுரராகி முனிவராய்த் தேவராய்
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்!”

என்று திருவாசகம் கூறும் அதீத அனுபவம் பரிணாம அறிவியல் கூறும் வளர்ச்சிப் படிநிலைகளை மட்டுமல்ல, அனைத்து உயிர்களாகவும் ஆகும் ஆன்மாவின் தன்மையையும் குறிக்கிறது. எண்ணிப் பார்த்தால், இந்தப் பேரனுபவத்தின் வெளிப் பாட்டை மனித உடலின் மொழியில் பாடும் அழகிய கவிதைகள் யோகாசனங்கள்!

அசையாப் பொருள்கள் மற்றும் விலங்குகள், பறவைகள் இவற்றின் தோற்றத்தில் பல ஆசனங்கள் உள்ளன.

பர்வதாசனம் (மலை), நாவாசனம் (படகு), விருட்சாசனம் (மரம்)
புஜங்காசனம் (பாம்பு), சலபாசனம் (வெட்டுக் கிளி), மத்ஸ்யாசனம் (மீன்)
ஊர்த்துவ முக / அதோமுக ஸ்வானாசனம் (மேல் / கீழ் நோக்கும் நாய்), சிம்ஹாசனம் (சிங்கம்)
மயூராசனம் (மயில்), குக்குடாசனம் (சேவல்), கபோடாசனம் (புறா)






கருவில் இருக்கும் சிசுவாக கர்ப்ப பிண்டாசனம்.
எல்லா செய்கையும் அடங்கிய பிணமாக சவாசனம்.

முனிவர்களின் பெயரால் பரத்வாஜாசனம், மத்ஸ்யேந்திராசனம்.
தெய்வ சக்திகளாக வீரபத்ராசனம், நடராஜாசனம்.






இதயக் கமலத்தில் உறையும் ஆன்ம சக்தியின் உருவகமாகவும், ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை என்று ராஜயோகம் கூறும் சக்தி பீடமான சக்கரத்தின் உருவகமாகவும் விளங்கும் அற்புதமான பத்மாசனம்.

இப்படி ஆசனங்களிலேயே அனைத்துயிர்களின் உணர்வு நிலைகளும் தோன்றும் படி யோகிகள் இவற்றை வடிவமைத்து பெயரும் இட்டார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது!

ஆமே அனைத்துயிர் ஆகிய அம்மையும்
தாமே சகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே அவளடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே

- திருமந்திரம் 4.13.23

அடுத்த முறை விருட்சாசனம் செய்யும்போது, சில கணங்கள் கண்களை மூடிக் கொண்டு நீங்கள் மரமாகவே ஆகிவிட்டதாக உணருங்கள். அற்புதமான உணர்வு அது!

Monday, December 25, 2006

கண்ணன் எந்தக் குலம்?

கண்ணனது திருக்கதை அமுதத்தைப் பருகியவர்கள் இது பற்றிப் பல விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கலாம். சந்திர வம்சத்து மன்னர்களின் மரபில் வந்த யது என்ற மன்னனின் குலத்திலே தோன்றிய யாதவன். கோகுல பாலன், ஆயர் தம் குலக் கொழுந்து. அவன் தேவர் குலத்தவன், மனிதனாக அவதாரம் செய்தான், இப்படியெல்லாம்.

“கண்ணன் என் தந்தை” என்ற பாடலில் பாரதி சொல்லுகிறார் :

மூவகைப் பெயர் புனைந்தே அவன்
முகமறியாதவர் சண்டைகள் செய்வார்
தேவர் குலத்தவன் என்றே அவன்
செய்தி தெரியாதவர் சிலர் சொல்வார்.


அப்படியானால், எது அவன் குலம்?

பிறந்தது மறக் குலத்தில் - அவன்
பேதமற வளர்ந்ததும் இடைக் குலத்தில்
சிறந்தது பார்ப்பனருள்ளே – சில
செட்டிமக்களோடு மிகப் பழக்கமுண்டு
நிறந்தனில் கருமை கொண்டான் – அவன்
நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்
துறந்த நடைகளுடையான் – உங்கள்
சூனியப் பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான்!

கண்ணனைப் பற்றிய எவ்வளவு ஆழமான, தீர்க்கமான தரிசனம் பாருங்கள்! ராமாவதாரத்தில் மட்டுமல்ல, அமானுஷ்யமான தனது கிருஷ்ணாவதாரத்திலும் “மானுடம் வென்றதன்றே” என்றே முரசறைகிறான் கண்ணன். தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரன் எல்லாக் குலங்களையும் விளங்க வைக்கிறான். எல்லாக் குலங்களையும் தன் குலமாக்கிக் கொள்கிறான். எல்லாக் குலங்களையும் உய்விக்கிறான். எல்லாக் குலங்களையும் இணைக்கிறான்.





அதனால் தான், பட்டர் பிரான் திருமகளாக வளர்ந்த கோதை சொல்கிறாள்:

“பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது”

என்று! அந்தணர் விஷ்ணு சித்தரின் வீட்டில் வளர்ந்த பெண் “அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்தில்” வந்தவளாகத் தன்னைக் கருதுவதிலேயே பெருமை அடைகிறாள். வடமதுரை அரச குலத்தில் கண்ணன் பிறந்த கதை அவளுக்குத் தெரியாததல்ல, இருந்தாலும் “ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கே” என்று கண்ணன் தங்கள் குலத்தில் தான் பிறந்தான் என்று சொல்லிச் சொல்லிப் பூரித்துப் போகிறாள்.

மகள் இப்படி என்றால், அப்பா பெரியாழ்வார் இன்னும் ஒரு படி மேலே போகிறார்:

“அண்டக் குலத்துக்கு அதிபதியாகி அசுரர் இராக்கதரை
இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு”


என்று பாடுகிறார். இங்கே “அண்டக் குலம்” என்பது அண்டர் (தேவர்) குலம் அல்ல. அவன் தேவர் குலத்தவன் என்று செய்தி தெரியாதவர்கள் சிலர் சொல்வார்கள் என்று பாரதி கூறினான் அல்லவா? ஆழ்வார் சேதி தெரிந்தவர், அதனால் கண்டிப்பாக அப்படிச் சொல்லியிருக்க மாட்டார்.

அண்டக் குலம் என்றால் இந்த அண்டம் முழுவதையுமே குலமாக உடையவன் என்று பொருள்.
“அண்ட பகிரண்டமும் அடங்க ஒரு நினைவாகி ஆனந்தமான பரம்” அவனே.
“நீராய்த் தீயாய்ச் சுடராய்க் காற்றாய் நெடுவானாய்” விரிந்தவன் அவன்.
“உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையுமெல்லாம்” கண்ணன் எம்பெருமான்.
பிரபஞ்சத்தில் உள்ள சகல உயிர்கள், மற்றும் புல் பூண்டு முதலான எல்லாப் பொருள்களும் ஆனவன் அவனே அல்லவா?
அதனால் அவனது குலம் அண்டக் குலம்.

அப்பேர்ப் பட்ட அவனைப் போற்றித் துதிக்கும் தான் எந்தக் குலம் என்றும் பட்டர் அடுத்த வரிகளில் சொல்கிறார் –

தொண்டக் குலத்தில் உள்ளீர் ! வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே!

ஆக நாம் எல்லாரும் ஒரே குலம், அது தொண்டக் குலம். அவன் அடி தொழுத பின் நம்முடைய பழைய குலங்களெல்லாம் போய் “இன்று புதிதாய்ப் பிறந்தோம்”! அதனால் தான் “குலம் தரும் செல்வம் தந்திடும்” என்று திருமங்கையாழ்வார் நாராயண நாமத்திற்குக் கட்டியம் கூறினார்.

நாரத பக்தி சூத்திரம் (72-73) கூறுகிறது:

நாஸ்தி தேஷு ஜாதி வித்யா ரூப குல தன க்ரியாதி பேத: யதஸ் ததீயா:

“பக்தர்களிடத்தில் சாதி, கல்வியறிவு, உருவம், குலம், செல்வம், தொழில்கள் இவற்றால் உண்டாகும் எந்த வேற்றுமைகளுக்கும் இடமில்லை. ஏனெனில் அவர்கள் அனைவரும் அவனுடையவர்களே”.

இப்பேர்ப்பட்ட அடியார்களின் பெருமை எப்பேர்ப் பட்டது?

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தானிலாத சண்டாள சண்டாளர்களாயினும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் தன் அருளில்
கலந்தார் தம் அடியார் தம் அடியார் எம் அடிகளே!”

என்று குலப் பெருமை பேசித் திரியும் கூட்டத்திற்காகக் குருகூர்ப் பிரான் கூறுகிறார். குலத்தால் வரும் கொள்கையல்ல பக்தி, பண்பால் விளையும் பக்குவம்.

அண்டம் முழுதும் ஓர் குலமாய்ச் செய்த
கொண்டல் மணி வண்ணன் தாளில் – தொண்டன்
பழுதுடையேன் எனினும் பாரிப்பான் என்றே
கழுகரசன் சாற்றும் கவி

Saturday, December 23, 2006

பாகிஸ்தான் ஆகும் தஞ்சை: மலர்மன்னன் கடிதம்

இங்கு நடக்கும் விவாதங்களைப் படித்த திரு. மலர்மன்னன் அவர்கள் இந்த மின் அஞ்சலை எனக்கு அனுப்பியிருந்தார். இதைப் பதிப்பிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் இங்கு தருகிறேன்.

Dear brother,

I had gone through the comments in your blog by numerous bloggers and readers about my Thanjavur experience appearing in Tamil Sify. While thanking you for initiating a debate on this burning issue, I wanted to record my impression also on it but I could not make a comment at your blog. I am therefore writing it below, which may kindly be reproduced in your blog.

Hindustan has been a secular country from time immemorial and it is NOT secular just because our man made Constitution, which is about 60 years old, is presently saying so. It is secular by nature because it has been the land of Hindus. Initially, there was no declaration in the Constitution as "secular" in referring to our nation. The freedom of worship was assured under fundamental rights, irrespective of anyone's caste, creed or faith. The term was tagged later after many years to satisfy minorities to secure their votes. In fact, secular is NOT our concept. It relates to European monarchs, as they had to come out of the clutches of the Church that was overriding them. Hinduism is based on the very fundamentals of secularism and therefore, there was no need of coining a specific term to refer to it.

Now, I found that one of your readers had commented that ours is a secular country and anybody can buy properties anywhere and settle down. Quite true. But there are certain restrictions in some regions to buy properties to people from other regions. For instance,you cannot buy land in some of the north eastern states. Kashmir also has this privilege. I am statingt his for information only NOT going into the rationale in this, as it is NOT the bone of contention now.

Citizens of Hindustan, irrespective of their faith can settle down anywhere is true but in case of Mohmeddans it makes a lot of difference because of their mindset in general. Exception cannot be a rule.

Dr Ambedkar, who was NOT a Hindutva supporter clearlywarned that if Hindusatn had to be divided on the basis of Hindu and Mohmeddan, then the population should also be exchanged between the two on the basisof two different faiths considering the mindset of Mohmeddans. He explained that Mohmeddans place their religion above their nationality by nature and identify themselves with their religion first. Hindustan's safety and security would be in danger if Mohmeddans were allowed to continue their stay in Hindustan and the problem of Majority-minority rift would be a permanent headache for Hindustan. Please NOTE the term Hindustan is used by Dr Ambedkarand NOT me! You need to read his work 'Pakistan orPartition of India' writtten in 1941 to know hisargument in the matter. He has cited the incidence of Mohmeddans of Hindustan calling Afganistan's Amir to invade when their hold on power was weak. He also mentioned later how Mohmeddans in the army of Rajah Hari Singh of Kashmir suddenly shifted their loyaltyto the invading Pak army that was in disguise of Pathan tribes and the unit of Kashmir army was left with just 120 men to die fighting.

I do NOT have any personal grudge with any Mohmeddan and my NOT calling them Moslem and their religion Islam is NOT intentional. Those two terms are common and can be applied to anybody, who are good and pious,devoted and humble. Mohmedddans have to be iddentified by Mohmed whom they consider their prophet. It is similar ro Christians, though Christ is also a general term but exclusively used for Jesus, son of Mary.

Now, coming to the issue, there are already Mohmeddan majority panchayats in Thanjavur district and they officially celebrate August 14 as independence day with an excuse that Aug 15 is a holiday! You should know Aug 14 is the independence day of Pakistan. In these localities, Mohmeddan highhandedness has already begun in so many ways. Your fundamental rights, even though assured by our Consitution, are in peril in these places. You need to go to Thanjavur district to witness thedistress experienced by other communities wherever Mohmeddans have become majority. This kind of problem was never witnessed by Mohmeddansand others when these areas were having a Hindu majority. I can go on stating many more points but please try to understand that I am speaking on the grounds of my personal knowledge and experience of the result of demographical change in Hindustan especiallyif the scale goes down in favour of Mohmeddans.

Affectionately,
Malarmannan

Friday, December 22, 2006

இந்து வாழ்வுரிமைக் குரல் மதவெறியா? : பதிலடி

எனது "பாகிஸ்தான் ஆகி வரும் தஞ்சைத் தமிழ் மண்" பதிவைக் குறிவைத்து திரு. அசுரன் என்பவர் திட்டுக்களும், வசவுகளும் பொங்கி வழிய, "பதில் சொல்லுங்கள்" என்று கேட்டு ஒரு பதிவைப் போட்டிருக்கிறார். தான் சார்ந்திருக்கும் சித்தாந்தத்தின் வழக்கமான குழப்படியை முன்வைத்திருக்கிறார்.

எனது நண்பரும், இடதுசாரி இந்துத்துவம் போன்ற அருமையான கட்டுரைகளை எழுதியவருமான திரு. அருணகிரி, இவை வெற்று வாதங்களானாலும் பதிலடி தர வேண்டும் என்று கருதுகிறார். அவர் தரும் பதிலடி இதோ:

"இடதுசாரிபோர்வையில் இஸ்லாமிய அடிப்படைவாத கொட்டை தாங்கியாய் இனக்காழ்ப்பு உமிழும் கற்பக விநாயகம் என்ற பாஸிஸ்டுக்கு வெறியருக்கு, பெருமிதமிக்க ஒரு இந்துவின் பதில்:

வாயில் நுரை தள்ள வெறுப்பு விஷம் கக்கும் நீங்கள் உங்கள் எழுத்துகளில் உமிழப்பட்ட காழ்ப்பில் கடுகளவாவது சிந்தித்து எழுதுவதில் செலவழித்திருக்கலாம் . அப்படிச்செய்யாததால், மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு, எல்லாப் பிரச்சினைகளையெல்லாம் ஒரே ஓட்டைச்சட்டியில் போட்டுக்கலக்கி , நாற்றம் வரும் நடையில் குப்பாச்சு குழப்பாச்சு என உளறி விட்டுப் போயிருக்கிறீர்கள்.

மனிதன் பல அடையாளங்கள் உடையவன். அவனை பொருளாதாரம் என்ற குப்பியில் மட்டும் அடைத்து அடையாளப்படுத்தும் சில மார்க்சீய அரைவேக்காடுகளுக்கு இது புரியவில்லை என்றால் - செப்டம்பர் 11 பயங்கரவாதிகளைப் பார்த்தறிக. நன்றாய்ப்படித்தும், டாக்டர்களாகவும் , பேராசிரியர்களாகவும் உள்ள பயங்கரவாதிகள் எதனால் பயங்கரவாதிகள் ஆகிறார்கள் என்ற கேள்விக்கான பதில்தான் பாம் வைப்பவன் எல்லாம் ஏன் முஸ்லீமாக இருக்கிறான் என்பதற்கு பதில் . இது போல் பல கேள்விகள் உண்டு. துருக்கி மன்னராட்சி கவிழ்ந்தாலும், ஈராக்கின் மேல் அமெரிக்கா படையெடுத்தாலும் இங்குள்ள இந்துக்கள் அடிக்கப்படுவது எந்த வணிக உறவு கெட்டதால் ? ரத்த ஆறு ஓடச்செய்து நாட்டைப்பிரித்தற்கு வணிக உறவா காரணமானது? காஷ்மீர் உரிமைவாதிகள் என்பவர்கள் இந்துக்களை மட்டும் வெளியேறச்சொல்லி விரட்டியது எந்த வணிக உறவு கெட்டதால் ? சஞ்சய் தத் என்ற வெறியன் ஆயுதம் பதுக்கியது எந்த வணிக உறவை மேம்படுத்த? எங்கோ இருந்து இயக்கும் பயங்கரவாதக் கும்பலுக்கு உள்ளூர் "சிமி"க்கள் உதவுவது எந்த வணிக உறவை வளர்க்கும் பொருட்டு? அப்பாவிக் குழந்தைகளும் பெண்களும் உயிரோடு கொளுத்தப்பட்டது எந்த வணிக உறவு முறிந்ததால் ? கொள்ளையடிப்பதை மட்டும் செய்யாமல், குறி வைத்துக் கோவில்களை இடிப்பதும், வழிபடும் சிலைகளை கழிவறைப்படிகளாக்குவதும் எந்தப்பொருளாதாரச் சமன்பாட்டில் பொருத்த முடியும்?

பைசா அடிப்படையில் வைத்தே மனிதப்பிரச்சனைகளைப் பார்க்க நினைப்பது மனிதனைப் பிச்சைக்காரனாக வைத்திருப்பதில் தனது இருப்பினை நிலைநிறுத்தும் இயக்கங்களுக்கு வேண்டுமானால் வசதியாய் இருக்கலாம். ஆனால் உண்மையில் மனிதம் என்பது அவ்வளவு எளியதாக இல்லை. உணவிட்டால் கரணமிடும் குரங்கல்ல மனிதன் . அவனுக்கு வயிற்றையும் தாண்டிய அடையாளங்கள் உண்டு. அந்த அடையாளங்களை ஏற்படுத்துபவை எவை எவை என்பதில்தான் அவர்களது செயல்களுக்கான காரணிகள் பொதிந்துள்ளன. உயிரை எடுக்கவும், உயிரை விடவும் துணியும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பலர் நன்கு படித்தவர்கள் , நல்ல வேலையில் உள்ளவர்கள், பொருளாதார விடுதலை அடைந்தவர்கள். பைசா அடிப்படையிலோ வணிக அடிப்படையில் மட்டுமோ பார்த்தால் அவர்களின் கொடூரங்களுக்குக் காரணம் ஏதுமில்லை . இவற்றிற்கான காரணம் அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள உபயோகப்படுத்தும் அம்சங்களில் உள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தைச் செல்லம் தந்து தடவிக்கொடுத்து தூபம் போட்டு வளர்க்கும் அரசியல் ஓட்டுப் பொறுக்கிகளும் முற்போக்கு முகமூடிகளும் இருக்கும்வரை இந்து வாழ்வியல் ஆதாரங்களையும் அடையாளங்களையும் காட்டும்பொருட்டு இந்து என்ற அடையாளத்தின் அடிப்படையில் இந்துக்கள் அணிதிரள்வது தவிர்க்க முடியாதது.

பன்னாட்டு பஹாசுரக் கம்பெனிகள் இந்தியாவுக்குள் வரவும், தஞ்சையிலிருந்து ஓட்டாண்டிகளாய் சென்னைக்கு மக்கள் வருவதற்கும் இஸ்லாமியத்தீவிரவாதம் தான் காரணம் என யாரய்யா சொன்னது - சம்பந்தா சம்பந்தமின்றி நீங்கள் உளறுவதற்கு உங்களுக்கு முழு உரிமையும் உள்ளது . அந்த உளறல்களை ஏன் இந்து வாழ்வியலுக்குப்போராடும் இயக்கங்களோடு இணைக்கிறீர்கள்? தஞ்சையிலிருந்து மட்டுமல்ல இராமனாதபுரம், மதுரை , நெல்லை என அத்தனை ஊர்களில் இருந்தும்தான் வயிற்றுப்பிழைப்புக்காக சென்னை வருகிறார்கள். பேசப்பட்ட பிரச்சனை அதுவல்ல . ஊருக்குள் பரவும் இஸ்லாமிய மதவெறி ஆதிக்கம் பற்றித்தான் பேச்சே. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ? இப்படி ஊர்விட்டு ஊர் வந்து பிழைக்கும் நிலை ஏற்பட்டதால், உள்ளூரில் பரவும் இஸ்லாமிய மதவெறி ஆதிக்கம் பற்றி யாரும் பேசக்கூடாது என்கிறீர்களா? அல்லது அப்படி ஆதிக்கம் செய்வது அவர்கள் உரிமை என்று சொல்லப்போகிறீர்களா?

சீனாவுக்கு வால் பிடிக்கும், இஸ்லாமிய கால் நக்கும் கலாசாரத்தை ஒழித்து விட்டு பிறகுவாருங்கள் நாட்டார் கலாசாரம் குறித்துப் பேச . பார்ப்பனர் எவரும் மற்ற இந்துக்களை கழுத்தறுத்துக்கொல்வதில்லை. பார்ப்பனர் எவரும் நாட்டார் தெய்வக்கோவில்களை இடித்தழித்து, சூறையாடவில்லை . பார்ப்பனர் எவரும் கிறித்துவரை புனித விசாரணை செய்து எரிக்கவில்லை. பார்ப்பனர் எவரும் இஸ்லாமியர்மீது ஜிஹாத் தொடுத்து பாம் வைக்கவில்லை . காட்டுமிராண்டிகள் என தமிழர்களைச்சொல்பவருக்கு வக்காலத்து வாங்கும் கற்பக விநாயகம் போன்றவர்களுக்கு நம் கலாசாரம் பற்றிப்பேச என்ன அருகதை உள்ளது ? மாற்றுக்கலாசாரத்தையெல்லாம் வெட்டியழிக்கும் இஸ்லாமிய அடிவருடிகளுக்கு நாட்டார் கலாசாரம் பற்றிப்பேச எப்படி நா எழுகிறது? வன்முறைக்கலாசாரத்தால் தொன்மைக் கலாசாரம் அழித்த கம்யூனிஸ்டுகளுக்கு வால்பிடிப்பவருக்கு உள்ளூர்க் கலாசாரம் பற்றிப்பேச என்ன தகுதி இருக்கிறது?

வால் மார்ட் போன்றவற்றின் தீமை குறித்தும், சிறுவிவசாயிகளின் பாதுகாப்பு குறித்தும் குருமூர்த்தி எழுதிய கட்டுரைகளைப் படித்திருக்கிறீர்களா ?

உலகத்தில் உள்ள எல்லா விஷயங்களையும் ஒன்றாய்க்குழப்பி சேறடிக்கும் வேலையை முதலில் நிறுத்தி விட்டு வாத ஒழுங்குடன் பேச வாருங்கள்.
இந்துத்துவ பயங்கரவாதம் என்றெல்லாம் பொய்ஜல்லியடிக்கும் முன், அமைதியாய் இருந்த காலத்தில் இந்துக்களுக்கு இஸ்லாமியர்களால் நிகழ்ந்த வன்கொடுமைகளை எண்ணிப்பாருங்கள் . இப்போதும்கூட இந்தியாவிலேயே இந்துக்கள் அரசியலில் அனாதையானதால் மூன்று மதங்களுக்கிடையே இந்து மதம் மட்டும் சவலைப்பிள்ளையாய் அரசு நடத்துவதைப்பாருங்கள். கோவில்களை அப்துல் ரஹ்மான் அந்துலேயும், சாலமன் ரெட்டியும் ஆட்சி செலுத்தலாம் என்ற நிலையையும், சர்ச்களிலோ, வக்ஃப் போர்டுகளிலோ இந்துக்கள் தலையிடமுடியுமா என்பதையும் எண்ணிப்பாருங்கள் .
ஸ்டெயின்ஸ் பாதிரியை கொன்றவனுக்கு மரணதண்டனை என்ற போது வாய் திறக்காத கருணாநிதியும் , அருந்ததிராயும் 11ராணுவத்தினர் சாவுக்குக்காரணமான அப்சலுக்காக அழுவதைப்பாருங்கள்.


இஸ்லாமிய நோம்புக்கஞ்சி, செக்யூலர் என்றும் இந்துவின் திருநீறும் பொட்டும் அரசியல் தீட்டு என்றும் ஆன கேடு கெட்ட மதவாத அரசியலை முதலில் சுத்தம் செய்து விட்டு , விக்டிமைஸ் ஆகி வெம்பியிருக்கும் இந்துவிடம் வியாக்கியானம் செய்ய வாருங்கள்.

அப்படிச்செய்யும் நேர்மையில்லை என்றால் பொத்திக்கொண்டு போங்கள்".

Thursday, December 21, 2006

போப் வாயாலேயே பொய்த்துப் போன புனித தோமையார் கதை

“நான் ஏசுவினிடத்தில் சத்தியத்தைச் சொல்லுகிறேன். நான் பொய்யுரைக்கவில்லை. புனித ஆவி என் மனச்சாட்சிக்கு நிரூபணம்”
ரோமன்ஸ் 9:1, விவிலியம்

"புனித தோமையார் (செயின்ட் தாமஸ்) அதிக பட்சம் இன்று பாகிஸ்தான் என்றழைக்கப் படும் மேற்கு இந்தியா வரைக்கும் போயிருக்கலாம். அதற்கு மேல் அவர் போனதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. வெகுகாலம் பின்னர் தென்னிந்தியா மற்றும் பல பகுதிகளில் கிறித்தவம் பரவியது, ஆனால் கண்டிப்பாக புனித தாமஸ் அங்கு போகவில்லை", வாடிகனில் தான் சமீபத்தில் ஆற்றிய உரை ஒன்றில், போப் பெனடிக்ட் XI இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் (பார்க்க [1], [2]).

இதைக் கேட்டு பல இந்திய திருச்சபைகள் துணுக்குற்றன. இந்த செய்திக்கு ரொம்ப விளம்பரம் தராமல் அமுக்கியும் விட்டன. இஸ்லாம் பற்றிய போப்பின் உரையை முந்திக் கொண்டு வெளியிட்ட இந்தியப் பத்திரிகைகளும், ஊடகங்களும் இந்திய வரலாறு தொடர்பான போப்பின் இந்த முக்கியமான கருத்தைப் பெரிதாக வெளியிடவே இல்லை! கேரள ஒய்.எம்.சி.ஏ. தலைவர் சன்னி பரியாரம் “போப் தெரியாமல் சொல்லிறார். மிளகு, ஏலக்காய், முந்திரி வாணிகக் கப்பல்கள் அந்தக் காலத்தில் மேற்கிலிருந்து கேரளாவிற்கு நிறைய வந்து கொண்டிருந்தன. அதில் ஒன்றில் ஏறி புனித தாமஸ் வந்தார்” என்று தன் ஆழமான சரித்திர அறிவை வெளிப்படுத்தியயுள்ளார். கேரள பாதிரியார்கள் சங்கத் தலைவர் மறைதிரு. ஸ்காரியா வர்கீஸ் போப்புக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இருக்காதா பின்னே? “புனித தோமையார் கி.பி. 52 லேயே (வாஸ்கோடகாமா இந்தியாவிற்குக் கடல் வழி கண்டுபிடிப்பதற்கு 1400 ஆண்டுகள் முன்பு) கடல் மார்க்கமாக கேரளா வந்தார். அங்கிருந்த நம்பூதிரிகள் உட்பட பல பேரை மதம் மாற்றினார். பின்னர் அப்படியே பொடி நடையாக சென்னை மயிலாப்பூர் வந்து ஏசுவின் நற்செய்தியை வழங்கினார். சின்னமலையில் வாழ்ந்தார். பக்கத்தில் இருந்த பரங்கி மலையில் சில வெறியர்களால் கொல்லப்பட்டார்” இப்படியாக தோமையார் பற்றிய நவரசங்களும் நிறைந்த ஒரு கற்பனைக் கதையை இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் கிறிஸ்தவ மிஷநரிகள் காலம் காலமாகப் பரப்பி வந்துள்ளனர். வரலாற்று ஆதாரங்கள் படி, கிபி. 345-ல் தாமஸ் கானானியஸ் (Thomas Cananeus) என்ற வணிகர் தான் முதன்முதலில் கேரளத்தில் ஒரு சிறிய கிறிஸ்தவ சமூகத்தை ஏற்படுத்தினார். பின்னர் 14-15 ஆம் நூற்றாண்டுகளில் போர்ச்சுகீசியப் படையெடுப்பின் வன்முறைகள், கொள்ளைகளுடன் தான் கிறித்தவம் தமிழகத்தில் பெருமளவில் அறிமுகமாயிற்று. ஆனால், அதற்கு ஒரு தொன்மை வாய்ந்த வரலாறு இருப்பது போலக் காண்பிப்பதற்காக மிக நேர்த்தியாகச் செய்யப் பட்ட புரட்டு இது. இந்தப் புளுகு மூட்டையைப் போட்டு உடைத்து விட்டார் போப்!








சொல்லப் போனால் ஆதாரபூர்வமான வரலாற்று ஆய்வுகள் புனித தாமஸ் இந்திய வருகையை ஒரு போதும் ஏற்றுக் கொண்டது கிடையாது. இது பற்றி ஈஷ்வர் சரண் மிகத் தெளிவான விளக்கங்களுடன் “The Myth of St. Thomas and the Mylapore Siva Temple” என்ற நூலை எழுதியிருக்கிறார். 24 பகுதிகளைக் கொண்ட இந்த நூலில் ஆர்ச்பிஷப் அருளப்பா, ஆச்சார்யா பால், டாக்டர் தெய்வநாயகம், எஸ்.ஏ.சைமன் போன்றோருடைய புனித தோமையார் கதை பற்றிய ஒவ்வொரு பொய் வாதத்திற்கும் திட்டவட்டமான பதில் அளித்துள்ளார்.

இதன் உச்சமாக புனித தோமையரை திருவள்ளுவருடன் தொடர்பு படுத்தும் பெரிய ஊழல் 80களில் நடந்தது. தெய்வப் புலவர் திருவள்ளுவரின் குறள் “உலகப் பொதுமறை” என்று அறியப் பட்டதும் இதற்குத் தோதாகப் போயிற்று. அவர் சைவரா, வைணவரா, சமணரா என்ற உண்மையான, இலக்கியத் தனமான வாதங்களின் நடுவில் இப்படி ஒரு விஷயம் நுழைக்கப் பட்டது. “தோமையரு சாந்தோம்ல இருந்தாரு, வள்ளுவரு மயிலாப்பூர்ல. இரண்டு பேரும் கடற்கரையோரமா அப்படியே பேசிகிட்டே போவாங்க ! தோமயரு ஏசு பிரான் பத்தி வள்ளுவருக்கு சொன்னாரு, பைபிள்ள இருக்கறத அப்படியே வள்ளுவரு எழுதிப்புட்டாரு” என்று ஒரு கிறித்தவத் தமிழாசிரியர் காட்டுக் கத்தல் கத்திச் சொன்னது இன்றும் என் நினைவில் நிழலாடுகிறது ! இதற்காகப் பல வரலாற்று ஆதாரங்களைத் திரிக்கவும், புரட்டவும் தமிழ் அறிஞர் என்று அறியப் பட்ட கணேச அய்யருக்கு ரூ. 14 லட்சம் லஞ்சம் மறைதிரு. அருளப்பா குழிவினரால் வழங்கப் பட்டதும் 1986ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் (வழக்கு எண்:100087/82) அம்பலப் படுத்தப் பட்டது. தமிழரின் பண்பாட்டுப் பெட்டகமான திருக்குறளை கூசாமல் கிறிஸ்தவத்திலிருந்து காப்பியடித்தது என்று நிறுவ முயன்ற மிஷநரி கயமைத் தனம் இதில் வெளியாயிற்று. (பார்க்க: [3])

இன்று பரங்கி மலை என்று அழைக்கப் படும் இடம் 1910களில் கூட “பிருங்கி மலை” என்று அழைக்கப் பட்டதற்கான கல்வெட்டு ஆதாரம் உள்ளது. புனித தோமையார் தன் கையாலேயே உருவாக்கிய சிலுவை என்று காட்டப்படும் அழகிய சிலுவை உருவம் விஜயநகர காலத்திய தமிழர் சிற்பக்கலையுடன் வடிவமைக்கப் பட்டது என்று நிறுவப் பட்டு விட்டது (பார்க்க [4]). சாந்தோம் மாதா கோவில் சுற்றுப் புறத்தில் 11-ஆம் நூற்றாண்டு சோழர் காலக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. திருஞான சம்பந்தரின் பூம்பாவைப் பதிகத்தில்

'மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்'

என்ற குறிப்புப் படி கடற்கரையில் இன்றைய சாந்தோம் சர்ச் இருக்கும் இடத்தில்தான் அன்றைய கபாலி கோயில் இருந்தது,16'ம் நூற்றாண்டில் (1566 ல்) இது இடிக்கப்பட்டு சர்ச் கட்டப்பட்டது என்பதற்கான பல ஆதாரங்களையும் ஈஷ்வர் சரண் தன் நூலில் தருகிறார்.








“புனித தோமையரை வெறியர்கள் ஈட்டியால் குத்திக் கொன்றனர்” என்பது இந்துக்களின் மீது வேண்டுமென்றே துவேஷத்தையும், வெறுப்பையும் உருவாக்குவதற்காகப் புனையப் பட்ட கதை என்று சென்னை ராமகிருஷ்ண மடத் துறவி சுவாமி தபஸ்யானந்தர் இது தொடர்பாக எழுதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் குறிப்பிடுகிறார். (பார்க்க [5]). “The Legend of a Slain Saint to Stain Hinduism” என்ற அந்தக் கட்டுரையில் இவ்வளவு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தோமையார் பயன்படுத்திய கைத்தடி, அவரைக் கொன்ற ஈட்டி இவையெல்லாம் செல்லரித்துப் போகாமல் இருப்பது எப்படி என்று? என்று எழுப்பிய சாதாரணக் கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. இந்தக் கொலையைப் பற்றி ஒவ்வொரு முறையும் சொல்லும்போதும், உணர்ச்சியையும், அனுதாபத்தையும் கிளப்பி இந்துக்களை சாத்தானின் தூதுவர்கள் என்று சித்தரிக்கிறார்கள். பரங்கி மலையில் புனித தாமஸை நாமம் போட்ட அந்தணர் ஈட்டியால் குத்திக் கொல்வதாக ஒரு சித்திரம் உள்ளதாம். சைவத்தையும், வைணவத்தையும் ஒரே அடியில் சாத்தானாக்க நல்ல யுக்தி இது! இதற்கு முந்தைய புராணத்தில் தோமையாரை டோபிக்கள் கொன்றுவிட்டதாகவும் எனவேதான் அவர்கள் கால் வீங்கிவிட்டதாகவும் இந்த கால்வீக்கத்துக்கு பெயரே தோமை வீக்கம் என்றும் கதை விட்டுக் கொண்டிருந்ததாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

வாடிகனிடம் இது பற்றி 1996ல் ஈஷ்வர் சரண் விசாரித்தபோது புனித தாமஸ் தொடர்பான எந்த வரலாற்று ஆவணமும் தங்களிடம் இல்லை என்று அவருக்கு வாடிகன் திருச்சபை அதிகாரபூர்வமான கடிதம் அனுப்பியது
(பார்க்க [6]). என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா அவரது ஆதாரங்களை ஏற்றுக் கொண்டு, தங்களது அடுத்த பதிப்புகளில் புனித தாமஸ் பற்றிய தகவல் வெளியாகும்போது இந்த விவரங்களும் சேர்க்கப் படும் என்று அறிவித்துள்ளது [7]. ஆனால், இந்தியாவில் புனித தோமையார் பற்றிய இந்த பொய்க்கதை பாடப் புத்தகங்களிலும், வெகுஜன ஊடகங்களிலும் ஆணியடித்தது போல பரப்பப் பட்டு விட்டது. சென்னை பற்றிய எல்லா “டூரிஸ்ட்” புத்தகங்களிலும் செயின்ட் தாமஸ் மவுன்ட், சின்னமலை இவை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்கள் என்ற பட்டியலில் இடம் பெற்று, இந்தக் கதை வரலாறாகவே சொல்லப் படுகிறது. போப் அறிக்கை வந்த நவம்பர் 22 க்கு அடுத்த வாரமே, ஜூனியர் விகடனில் (6/12/06 - பக்கம் 42) முடிந்த முடிபாய் இப்படி எழுதியிருக்கிறார்கள்:

“கிபி.52'ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை புரிந்த ஏசுவின் நேரடிச்சீடர் புனித தோமையார் இந்த மலையில் (St.Thomos Mount) வைத்துதான் கிபி.72'ம் ஆண்டு வெறியன் ஒருவனால் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார்”

“வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி” என்று போப்பே இந்தக் கதை பொய் என்று சொல்லியும், இந்த வரலாற்றுத் தவறுக்கு மன்னிப்புக் கோரும் வாய்ப்பாக இதைக் கருதாமல் போப் சொன்னது தவறு என்று சொல்லும் போக்கு தான் இங்குள்ள மிஷநரிகளிடம் இருக்கிறது, இது துரதிர்ஷ்டவசமானது.

தோமையார் மரணத்தை மட்டுமல்ல, ஏசுவின் மரணம், ரத்தம் இவற்றைக் குறியீடுகளாக்கும் இறையியலிலேயே அதற்கு ஒரு கொலையாளியைக் காரணமாக்கும் துவேஷம் கலந்திருக்கிறது. இந்து ஆன்மிக நோக்கில் பார்த்தால் இது இன்னும் தெளிவாகத் தெரிகிறது. இது தொடர்பாக சுவாமி ரங்க நாதானந்தா “நாங்கள் போற்றும் ஏசு” (“The Christ We adore”, Swami Ranganathananda, Sri Ramakrishna Math) என்னும் நூலில் கூறுகிறார் :

“தெய்வ அவதாரங்களில் ஒருவர் என்று இந்துக்கள் கண்டுணர்ந்து போற்றத் தகுந்த பல அம்சங்கள் ஏசு கிறிஸ்துவின் வாழ்விலும், உபதேசங்களிலும் உள்ளன. அவரது வாழ்வு இனிமையும், மென்மையும், துயரமும், சோகமும் இழைந்து ஆன்மீகத்தால் நிரம்பியது. ஆனால், இந்துக்களாகிய நமக்கு அவரது முடிவு என்பது ஒரு சோகம், அவ்வளவு தான். ஆன்மிகம் ததும்பும் அழகுணர்ச்சி எதுவும் அதில் இல்லை. நமது தெய்வ அவதாரங்களான ஸ்ரீராமன், ஸ்ரீகிருஷ்ணன் இவர்களது வாழ்க்கை முடிவுகளும் பெரும் சோகம் ததும்பியதாகவே இருந்தன. ஆனால் அந்த முடிவுகள் மீது நாம் சமயத்தைக் கட்டமைக்கவில்லை. இந்த மரணங்களை இயற்கை நியதியாக ஏற்றுக்கொண்டு அவர்களது வாழ்வின் அற்புதமான தருணங்களின் மீதே நம் சமயம் கட்டப் பட்டிருக்கிறது. ஏசு என்பவர் சிலுவையில் அறையப் படாமலே இருந்தாலும், அவரது வாழ்வும், உபதேசமும் இந்துக்களுக்குப் பிரியமானதாகவே இருக்கும். ஆனால் கிறிஸ்தவ மதத்திற்கும், மேற்குலகிற்கும், இந்த சிலுவையில் அறைதல் என்ற துன்பியல் நிகழ்வு இல்லாமல், “ரத்தம் தோய்ந்த” தியாகம் இல்லாமல், ஏசுவின் வாழ்க்கை சாதாரணமானதாகவும், சக்தியற்றதாகவுமே தோற்றமளிக்கிறது. கிரேக்க துன்பியல் காவியங்களின் மரபில் தோய்ந்த மேற்குலகம் கிறிஸ்தவத்திற்கு இந்தத் தன்மை அளித்தது போலும்! ஆனால் இந்து மனத்திற்கோ வாழ்வு முழுவதும், உலகம் முழுவதுமே பிரபஞ்ச வடிவிலான இறைவனின் தெய்வ லீலை என்பதாகவே தோன்றுகிறது”.

போப்பே சொன்னபிறகு, இனிமேலும், கொலைக்கதை கலந்த இத்தகைய துவேஷப் பிரசாரம் தேவை தானா? இந்திய கிறிஸ்தவ போதகர்கள் தான் சொல்ல வேண்டும்.

Wednesday, December 20, 2006

ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் ஆன்மிகம் சார்ந்த இந்து உணர்வு

ஸ்ரீஸ்ரீயின் அரசியல் என்ற தலைப்பில் கூத்துப்பட்டறை பதிவில், அதன் ஆசிரியர் ஸ்ரீஸ்ரீயின் சில கருத்துக்களைக் குறிப்பிட்டு அவரது இந்து உணர்வு அவரது ஆன்மிக உணர்வோடு இயைந்ததல்ல என்ற தொனியில் எழுதியிருந்தார்.

இதற்கான சில விளக்கங்கள் இந்தப் பதிவில்:

// .அது தான் எனக்கு ஆச்சிரியமாக இருக்கிறது மேற்கில் ஒரு முகமும் இந்தியாவில் இந்து முகமுகவா இருக்கிறார் ? //

ஸ்ரீஸ்ரீயிலிருந்து ஒரு 100 வருடம் முன்னே சுவாமி விவேகானந்தருக்குப் போவோம். உலகளாவிய ஆன்ம நேய ஒற்றுமை அவரது செய்தியாக இருந்தது. ஆயினும் தான் இந்து என்பதை அவர் மிக்க பெருமையோடு சொல்லிக் கொண்டார், இந்தியாவிலும் சரி, மேற்கிலும் சரி. மத மாற்றத்தையும் கிறிஸ்தவ மிஷநரிகளையும் மிகவும் காட்டமாக எதிர்த்திருக்கிறார் என்பது அவரை ஓரளவு படித்தவர்கள் எல்லாருக்கும் தெரியும்.

ஸ்ரீஸ்ரீயின் "ஆர்ட் ஆஃப் லிவிங்" இயக்கத்தின் சமய, தத்துவ, ஆன்மீக அடித்தளம் சுவாமி விவேகானந்தர் பின்பற்றிய அதே இந்து வேதாந்தம், பதஞ்சலி யோகம் தான். ஆனால், இன்றைக்கு உலக அரங்கில் இந்திய அரசியல்வாதிகள் பலர் கடைப்பிடிக்கும் போலி மதச்சார்பினமை வாதமும், இந்து விரோத சக்திகளும் "இந்து" என்ற சொல்லுக்குக் கட்டமைத்திருக்கும் பிம்பம் கொஞ்சம் எதிர்மறையான பொருளையே அளிப்பதாக உள்ளது. இந்த துரதிர்ஷ்டமே "இந்து துறவி" என்ற சொல்லை அவரது இயக்கத்தினர் அடிக்கடி உலக அளவில் பயன்படுத்தாததற்குக் காரணம். அவரைப் பொறுத்த வரையில் தனது இந்து அடையாளத்தை சந்தேகமின்றி முன் நிறுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

// யோகா இன்று உலகம் முழுவதும் இந்து மதச் சாயலின்றி எல்லா மக்களாலும் பயிலப்படுகிறது .ஓரு நல்ல விசயம் எப்படியாவது பலர் பின்பற்றினால் நல்லது தானே //

அது என்ன "இந்து மதச்சாயல் இன்றி"? ஆசனங்களில் ஓரளவு தேர்ந்து யோகத்தின் மற்ற அங்கங்களான தியானம், தத்துவம் போன்றவற்றை அமெரிக்காவிலும், மற்றும் மேற்கத்திய எல்லா நாடுகளிலும் கற்றுக் கொடுப்பவர்கள் இந்து மதத்தின் அடிப்படை வாழ்வியலை அப்படியே பின்பற்றுபவர்கள் தாம். ஓம் மந்திரம், கீதை, ஆத்மா-ஜீவன்-பிரபஞ்சம் இவற்றுக்கிடையேயான உறவு பற்றிய கோட்பாடு இவை எல்லாம் இந்துமதச் சாயல் கூட அல்ல, இந்து மதமே தான்! அமெரிக்காவில் ஓரளவு பெயர் பெற்ற எந்த யோக ஆசிரியரையும், பள்ளியையும் எடுத்துப் பாருங்கள் - எல்லாரும் இந்து குருக்களிடமே, குரு சிஷ்ய முறையில் யோகம் கற்றுக் கொண்டுள்ளனர். அந்த ஆசிரியர்களிடம் கேட்டுப் பாருங்கள் - 200% இந்து வாழ்வியல் தான் யோகம் என்று தெளிவாகச் சொல்லுவார்கள்!

மேலே சொன்ன "இந்து" என்ற சொல்லுக்கு ஏற்பட்ட எதிர்மறை விளம்பரம் தான் நேரடியாக இதைச் சொல்வதைத் தடுத்துள்ளது. அதனால் ஒரு சின்ன “disclaimer” போன்று அது இந்து மதம் அல்ல என்று சொல்லுகிறார்கள். அவ்வளவு தான். இது மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஸ்ரீஸ்ரீ எந்தப் போலித் தனமும், பாசாங்கும் இல்லாத ஆன்மிக, ஞான குரு. சிவபிரானின் யோக ஒளியும், கண்ணனின் குறும்புத் தனமும் கலந்த தெய்வீகத் திருவுருவம் அவர். எத்தனையோ இடங்களில் தன் "இந்து" அடையளாத்தை மிகவும் உறுதியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது சமீபத்திய ஆனந்த விகடன் பேட்டியைப் படிக்கும் சிலருக்கு இது ஏதோ புதிதாகத் தோன்றலாம். பெங்களூரில் பல முறை இந்து இயக்கங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டுள்ளார். இந்து இயக்கங்களை மதவாத சக்திகள் என்று அழைப்பதையும் கண்டித்துள்ளார்.





ஆன்மீகமும், இந்து உணர்வும் முரண்பட்டவை அல்ல என்று அவரே விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்து அடையாளம் என்பது நமது சமுதாயத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் கூறியுள்ளார். "இந்தியன் எக்ஸ்பிரஸ்" இதழில் வந்த அவரது ஒரு அருமையான கட்டுரையை அப்படியே கீழே தருகிறேன். (நேரமின்மையால் மொழிபெயர்க்க இயலவில்லை).

We are in denial

Negating identity causes inaction, sloth and lethargy


If you come across a Communist, with a Hindu name, and ask him about his identity, he will deny being a Hindu. Yet, a Muslim Communist often claims his identity without hesitation. One wonders what causes this difference in attitude.

It is interesting to probe into the psyche of identity, which often is a source of security, insecurity, conflict and comfort. Perhaps the following reasons would answer the identity crises of the Hindus. The broadmindedness of Hinduism, its inherent inclusiveness and secularism, makes Hindus feel guilty about claiming their identity, as it is embedded in their philosophy that it is wrong to exclude others. Claiming a religious identity makes them feel they are excluding others and so they shy away from doing so.

Hindus have been traditionally groomed by the Vedanta to drop all identities. This has deeply influenced the Hindu psyche. Hindu philosophy is woven around egolessness. Let alone their religion, some sadhus don’t even say their name; they would say, “What’s in a name?” Sanyasis are even shy to talk about their parentage. A renowned ascetic in Rishikesh would meet with everybody, but not his own mother and family. When asked, he would say, “I am Vedanti; once I have taken sanyasa, I have dropped all my identities.”

This is an erroneous understanding of Vedanta. Why do we fear the identity so much? Seeing identity as stumbling blocks for one’s growth is ignorance. Sanyasa is transcending identity; it is being in that centredness from where you have equal love and compassion for all. It is the unshakable light and richness that one has found in one’s Being which is universal. Transcending identity is different from denying identity. When religious leaders themselves denounce their identity, the community follows suit. This is akin to the thought that secularism is anti-religion.

Caste identity is in some places much stronger than religious identity. The normal tendency is to go for one single identity than for a dual one. So, between caste and religion, many Hindus seem to go for caste. Hindus feel ashamed of the ills of Hinduism — its superstition, untouchability, and practices like sati are usually highlighted in the media, rather than its unparalleled philosophy and scientific temperament. Thus, for several centuries Hindu bashing has been a fashion.

The media seems to have given the prerogative of Hindu identity to the RSS and VHP and secular-minded Hindus would not like to associate with these two organisations. As a result they shy away from their own identity.

Within India itself, we witness a great deal of ignorance about the Hindu religion and its scriptures. Although Hindus form 80 per cent population of India, there is still only one university which teaches Hinduism — whereas there are five which teach Islam, five which teach Christianity, two which teach Sikhism and one that teaches Jainism. You would find every Muslim would know a couple of verses from the Quran; you can hardly find a Christian who has not read the Bible.

But Hindus who know Sanskrit or a few shlokas are rare. Most educated Hindus know the Bible; they know Christmas carols. When they know nothing about their religion, how can they take pride in it? There are 1.25 billion Hindus in the world, a little over one-sixth of the world’s population, but you hardly find a single Hindu lobby at international forums. You will find a Christian lobby, a Muslim lobby or a Jewish lobby, but you can’t find a Hindu lobby. Just 12 million Jews in the world are such a powerful voice. Buddhists also have a voice and make their presence felt at world forums.

In countries of south and central America and in Europe, although they are secular democracies, they are not shy to proclaim their allegiance to Christianity. You will find the religious symbol of the Cross placed in their parliaments; chaplains offer prayer before every official dinner. While associations like YMCA (Young Men’s Christian Association) have gained wide acceptance. Why then is it that Hindu associations are viewed with scepticism?

A strong community is an asset to any nation. A weak community will always be in fear and because of insecurity will become aggressive. It is the pride in one’s identity which strengthens the community. Identity is in no way contradictory to universality.

People often ask, “Will not the concept of global family, Vasudhaiva Kutambakam, contradict patriotism? Similarly, will your religious identity not conflict with your universality?’’ The answer is “No”. Your duty as a family man is not a hindrance for your realisation that you are Brahman. You don’t need to run away to the forest to realise “All this is Brahman”. Your being spiritual in no way contradicts your being a socially responsible citizen. In fact, it enhances your ability to care and share.

The conflict in the world is because people are either stuck in their identity, and die for it, or shy away from their identity and lose their roots. One has to opt for a middle path. The ideal situation will be when every religion transcends its identity. Until that time, it is unwise for the Hindus to let go of their identity. We cannot, and should not, eliminate differences on this planet. We need to celebrate the differences. And this is the uniqueness of Bharat — from the atheism of Charvaka to Bhakthi Panth and Sufism, it’s one beautiful bouquet.

An identity is related to an action. Denial of identity will dump you in inaction, sloth and lethargy and hence Krishna reminds Arjuna of his Kshatriya identity even while giving “Brahma gyan” to remind him of his duties and responsibilities. Otherwise while giving this High knowledge of the Self, why would Krishna remind him again and again of his limited identity. The limited identity in no way contradicts the universal one. A policeman cannot perform his duties — steer the traffic — if he fails to acknowledge his identity. Similarly, if a businessman shies away from his identity, he cannot function. The same is the story of Hindu identity. India cannot make a distinct mark on the world if it ignores its religious and spiritual heritage.

Sunday, December 17, 2006

பாகிஸ்தான் ஆகி வரும் தஞ்சைத் தமிழ் மண்???

பல ஊர்களில் மாடவீதி, ரதவீதிகளில் எல்லாம் பல முஸ்லீம் வீடுகள் வந்துவிட்டன. எந்த விலை கொடுத்தும் நிலம், வீடு வாங்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனாலும், மயூரநாதர் திருவீதி உலா வரும்போது முஸ்லீம் வீடுகளில் வாசனைப் பட்டு சாத்துகிறார்கள். புதுப் புது பெரிய பெரிய மசூதிகள் முளைத்த வண்ணம் உள்ளன.. ஆனாலும் சுவாமி பவனி வரும் நாட்களில் சில முஸ்லீம் வீடுகளில் வாசல் தெளித்து கோலங்கள் போடுகிறார்கள். எத்தனையோ முஸ்லீம் வீடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜாதகம் கணிக்கிறார்கள்.. ஜோசியம் பார்க்கிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தின் பல ஊர்களில் இஸ்லாமியத் தாக்கம் அதிகமாவது பற்றி வரும் அரசல் புரசலான செய்திகள் இவை. இந்நிலையில் சென்ற வாரம் தமிழ்சிஃப்.காம் தளத்தில் முதுபெரும் எழுத்தாளர் திரு. மலர்மன்னன் இதுபற்றி எழுதியதைப் படிக்க நேர்ந்தது -

கலைகள் தந்த தஞ்சை கவலை தருகிறது பாகம் 1, பாகம் 2

திரு. மலர்மன்னன் அவர்கள் பழுத்த அரசியல், எழுத்துலக அனுபவம் வாய்ந்தவர். சும்மா பரபரப்புக்காக எழுதுபவர் அல்லர். தேச, சமுதாய நலனை முன்னிறுத்தித் தன் கருத்துக்களை எடுத்துரைப்பவர். இந்தக் கட்டுரைகளில் அவர் வைக்கும் சில விவரங்கள், கருத்துக்கள் மிகவும் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் போக்கில் (provocative) ஆக இருக்கின்றன. சில துளிகள்:


  • நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் பார்த்த தஞ்சை மாவட்டம் என்ன்னைத் துணுக்குரச் செய்தது என்ற உண்மையை நான் மறைக்க விரும்பவில்லை..
  • என்னுடைய குடந்தையின் தமிழ்மணம் வீசிய கடைத்தெரு, கடைக்குக் கடை அதிகாலையிலேயே வாசலில் தண்ணீர் தெளித்து அரிசிமாக் கோலம் போட்டு தமிழ்க்கலாச்சாரத்தின் நுட்பத்தைக் காற்றிலே மிதக்கச் செய்தது. குடந்தையின் எனது சமீபத்திய அறிமுகத்தின் போது அதைக் காணாமல் காரணம் கேட்டேன். இன்று குடந்தையில் மட்டுமின்றிப் பொதுவாகத் தஞ்சை மாவட்டம் முழுவதுமே நூற்றுக்குத் தொண்ணூறு சதம் கடைகள் ஹிந்துக்கள் வசம் இல்லை என்றார்கள்...
  • தஞ்சையில் இன்று கிராமம் கிராமமாக ஹிந்துக் குடும்பங்களின் எண்ணிக்கை வற்றி, முகமதியக் குடும்பங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அதிலும் ஊரூராய் முகமதியர் தமக்கென அமைத்துக் கொள்ளூம் ஜமாத்துகளில் வஹாபிய முகமதியத்தின் ஆதிக்கம் வேரூன்றி வருகிறது
  • ஹிந்து கலாசார எச்சங்கள் முகமதியத்திற்கு எதிரானவை என் எச்சரிக்கப் பட்டு அவற்றையெல்லாம் முகமதியர் துறந்து விட்டால் தான் உண்மையான முகமதியராக முடியும் என வலியுறுத்தப் படுகிறது. ஆகையால் இன்றூ தஞ்சை மாவட்டம் முகமதிய மயமாவதைப் பார்க்கிறபோது அது இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தனது பாரம்பரியப் பண்பாட்டின் சின்னமாக விளங்க முடியும் என்கிற கவலை தோன்றுவதைத் தவிர்த்துக் கொள்ள இயலவில்லை
  • தொடக்க்கத்திலேயே உரிய கவனம் செலுத்த்வில்லையெனில் 'சோழவள நாடு சோறுடைத்து' என்ற பெயரை ஏற்கனவே இழக்கத் தொடங்கிவிட்ட தஞ்சை அதற்குப் பதிலாக 'சோழவளநாடு பள்ளிவாசல்களுடைத்து' என்கிற பெருமையை விரைவில் பெற்றுவிடும் எனலாம்..

இவை சில துளிகளே. இந்தப் பதிவிற்கு வரும் வாசகர்கள் அந்த முழுக்கட்டுரைகளையும் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதன் தொடர்ச்சியாக மேலும் சில பாகங்களையும் எழுதப் போவதாகவும் திரு. மலர்மன்னன் அறிவித்திருக்கிறார்.

இதைப் படித்தபின் அவரிடம் சந்தேகத்துடன் கேட்டேன் "என்ன ஐயா, இதெல்லாம் ரொம்ப மிகைப் படுத்தப் பட்டதா?" என்று. "அத்தனையும் உண்மை, நான் போகும் எல்லா இடங்களிலும் எல்லாத் தரப்பட்ட, எல்லாச் சாதிகளையும் சேர்ந்த இந்துக்களிடமும் பேசி வருகிறேன். அந்தக் கட்டுரையில் எழுதியது முழுவதும் உண்மை, யதார்த்தம்" என்று சொன்னார்.

இந்தப் பதிவின் முதல் பத்தியில் நான் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களைச் சொன்ன போது "வாஸ்தவம் தான், ஆனால், இந்துக் கலாசாரத்தின் கூறுகளை மதிக்கும் இந்தக் கொஞ்ச நஞ்சப் போக்கெல்லாம் கூட மாறி இதே முஸ்லீம்களை இவற்றை வெறுக்க வைப்பதற்கு ரொம்ப காலம் ஆகாது. வகாபிய இஸ்லாம் அங்கே பரவுகிற வேகத்தைப் பார்த்தால் உனக்கு இது புரியும்" என்று சொன்னார். "ஒரு 20 வருடம் முன்பு கூட இந்தக் கருப்பு பர்தா போட்ட பெண்களை இவ்வளவு பார்க்க முடியாது. ஒரு வெள்ளைத் துணியை சம்பிரதாயமாக முகத்தில் சுற்றியிருப்பார்கள், அவ்வளவு தான்.. ஆனால் இப்போது தெருவுக்குத் தெரு இப்படிப் பர்தா அணிந்து கஷ்டப் பட்டு வெயிலில் நடந்து போகும் பெண்களைப் பார்க்கலாம்... வெறித்தனமான வஹாபி இஸ்லாம் பரவி வருகிறது என்பதற்கு இதுவே சான்று" என்று கூறினார்.

அவர் கூறும் சான்றுகளும், முடிபுகளும் மறுக்க முடியாததாக உள்ளன..பாகிஸ்தான் ஆகி வருகிறதா தஞ்சைத் தமிழ் மண் ??

பாடகிகளின் முக அசைவுகள் பற்றி பழந்தமிழ்க் காவியம்

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி என்னும் நூலில், சீவகனுடைய நாயகிகளில் ஒருத்தி காந்தருவதத்தை. இவள் காந்தர்வ வேதம் என்றழைக்கப் பட்ட சங்கீதத்தில் பெரும் தேர்ச்சி பெற்றவள். இவள் சபை நடுவில் பாடிய அழகை வர்ணிக்கும் அருமையான பாடல் இது -

கருங்கொடிப் புருவம் ஏறா
கயல்நெடுங்கண்ணும் ஆடா
அருங்கடி மிடறும் விம்மா
அணிமணி எயிறும் தோன்றா
இருங்கடற் பவளச் செவ்வாய்
திறந்திவள் பாடினாளோ
நரம்பொடு வீணை நாவில்
நவின்றதோ என்று நைந்தார்.


பொருள்:

அவள் போடும்போது கரிய கொடி போன்ற புருவம் நெற்றிக்கு ஏறாமல் அசைவற்று இருக்கிறது.
கயல்மீன் போன்ற கண்கள் வலமும் இடமும் துடிக்காமல் ஓய்ந்திருக்கின்றன.
அழகு பொருந்திய அவளது கழுத்தில் உள்ள மிடறு வீங்கி வடியவில்லை.
முத்துப் போன்ற அழகிய பற்கள் கூட வெளியே தோன்றவில்லை !
பெருங்கடலில் பிறந்த பவழம் போன்ற அந்த சிவந்த வாய் திறந்து இவள் தான் பாடினாளோ !
அல்லது வீணையே நரம்புடன் உயிர்கொண்டு நாவெடுத்துப் பாடிற்றோ
என்று சபையினர் வியந்தனர்.



கச்சேரியில் பெண் இசைக் கலைஞர்கள் கொலு வீற்றிருந்து பாடுவதே ஒரு தனி அழகு. அன்றைய கச்சேரியின் பாட்டுக்கள் தவிர, அவர்களது பட்டுப்புடவை, புதிதாக அந்த வித்வாம்சினி அணியத் தொடங்கியிருக்கும் ஜிமிக்கி, அவரது ஒப்பனை போன்ற இதர விஷயங்கள் பற்றிய விவாதங்களுக்கும் தீனி உண்டு அவர்கள் கச்சேரிகளில்.

இந்தப் பாடலைப் படித்தவுடன் புகழ்பெற்ற வித்வாம்சினிகள் சுதா ரகுநாதன், எஸ்.சௌம்யா, நித்யாஸ்ரீ, அருணா சாய்ராம் இவர்களது சில பழைய க்ளிப்ஸ் பார்த்தேன்... ஒருவராவது பழந்தமிழ்ப் பாடகி இலக்கணத்திற்கு 100% ஒத்துப் போவதாகத் தோன்றவில்லை. அது ஒரு அமானுஷ்யமான கந்தர்வ இலக்கணம் போலும்!

Thursday, December 14, 2006

பாரதி பாடல்களில் அறிவியல் படிமங்கள்

தனக்கு முன்னும், பின்னும் வாழ்ந்த தமிழ்க்கவிஞர்கள் பலரிடம் காணக்கிடைக்காத அறிவியல் ஆர்வம் பாரதிக்கு இருந்தது என்று சொல்லலாம்.

ஜகதீச சந்திர போசின் தாவர ஆராய்ச்சிகள் பற்றி எழுதியிருக்கிறார். அவர் வாழ்நாளின் போது வந்த ஹாலியின் வால் நட்சத்திரம் பற்றி “சாதாரண வருஷத்துத் தூமகேது” என்று ஒரு கவிதை புனைந்தார்.

“எண்ணில் பல்கோடி யோசனை எல்லை
எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்
புனைந்த நின்னொடு வால் போவதென்கின்றார்”


என்று அந்த வால் பற்றிய அறிவியல் உண்மையைக் கூறுகிறார். அதே பாடலில்

“பாரத நாட்டில் பரவிய எம்மனோர்
நூற்கணம் மறந்து பன்னூறாண்டாயின
உனதியல் அன்னியர் உரைத்திடக் கேட்டே
தெரிந்தனம்; எம்முள் தெளிந்தவர் ஈங்கிலை”


என்று அறிவியல் அறிவை பாரத நாடு மறந்துவிட்டதைப் பற்றியும் வருந்துகிறார்.

“பாரத நாட்டுக்குத் தேவையான கல்வி” என்ற விஷயத்தைப் பற்றி எழுதுகையில் இயற்பியல், ரசாயனம், வான சாஸ்திரம், கணிதம் போன்ற துறைகளில் எந்த மாதிரியான முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன என்பதைக் குறிப்பிட்டு இவற்றையெல்லாம் நம் மாணக்கர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற தன் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துகிறார். அணு, மூலக்கூறு இவற்றின் அமைப்பு பற்றிய சித்தாந்தங்கள் புரியத் தொடங்கியது 1910களில் தான். ரூதர்போர்ட் அணுவின் மையமாக நியூக்ளியஸ் என்னும் பருப் பொருளை (mass) கண்டறிந்தார், தொடர்ந்து புரோட்டான், எலக்ரான், நியூட்ரான் துகள்களும் அறியப் பட்டன. சூரியனைக் கோள்கள் சுற்றுவது போல், அழகான வட்டப் பாதையில் எலக்ரான்கள் மையத்தில் உள்ள நியூக்ளியசைச் சுற்றுவது போன்ற ஒரு கற்பனை பிம்பத்தையும் அன்றைய அறிவியல் உலகம் உருவாக்கிற்று. (உண்மையில், நியூக்ளியசின் வெளிப்பகுதி முழுவதிலும் இம்மி இடமில்லாமல் துகள்களே நிரம்பியிள்ளன. அவை சுற்ற ஆரம்பித்தால் பெரும் மோதல் தான் ஏற்படும்! ஆனால், இன்று வரை இந்தப் பிம்பம் பாடப் புத்தகங்களிலும், வெகுஜன அறிவியல் எழுத்துக்களிலும் நீடிக்கிறது) மேற்குறிப்பிட்ட கட்டுரையில், அணுக்கூறுகள் சுற்றி வருவது பற்றிய அவர் காலத்து “சமீபத்திய” அறிவியல் முடிவுகளை கவித்துவத்தோடு பாரதி எழுதியிருக்கிறார். பல உலக அளவினான ஆங்கிலப் பத்திரிகைகளையும் படித்து வந்தததனால் தனது சமகால அறிவியல் முன்னேற்றங்கள் பற்றிய தகவல்களை அவர் நன்கு அறிந்திருந்தார் என்பதற்கு இது சான்று.

பாஞ்சாலி சபதத்தில் வரும் அழகான கடவுள் வாழ்த்துப் பாடல் இது :

இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென
இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்
இடையின்றிக் கதிர்களெலாம் சுழலுமென
வான் நூலார் இயம்புகின்றார்
இடையின்றிச் சுழலுதல் இவ்வுலகினிடைப்
பொருட்கெல்லாம் இயற்கையாயின்
இடையின்றிக் கலைமகளே ! நினதருளில்
எனது மனம் இயங்கொணாதோ?


பல நயங்களை இதில் அனுபவிக்கலாம். எல்லா அறிவுத் துறைகளின் உருவகமான சரஸ்வதியை வணங்கும் முன்னர் Perpetual molecular motion மற்றும் planetary motion என்னும் இயற்பியல், வானியல் உண்மைகளைப் பிரமாணமாக முன்வைக்கிறார். க்வாண்டம் பற்றிய ஆராய்ச்சிகள் அறியப்படாத அந்தக் காலகட்டத்தில் இயற்பியலின் பொது விதிகளே (general laws of physics) அணுவின் சுழற்சி முதல் அண்ட வெளியில் சுழலும் கோள்கள் வரை எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்ற கருத்து இருந்தது. அந்தக் கருத்தையும் இந்தப் பாடல் உள்ளடக்கியிருக்கிறது. “இந்த எல்லாவற்றையும் போலவே என் மனமும் ஒரு இயற்கைப் பொருள் (physical object) தானே? அதுவும் இடைவிடாமல் இயங்காதா?” என்று கேட்கையில் “உன் அருளில்” என்ற சொல்லை வைத்ததால், மேலே சொன்ன எல்லா பிரபஞ்ச இயக்கமும் நடப்பதும் பரம்பொருளான உன் அருளே அல்லவா என்ற ஆன்மீக பாவனையும் வெளிப்படுகிறது.



மகாசக்தி வாழ்த்து என்ற கவிதையின் முதற்பாடல்:

விண்டுரைக்க அறிய அரியதாய்
விரிந்த வான வெளியென நின்றனை
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை
அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை
மண்டலத்தை அணு அணுவாக்கினால்
வருவதெத்தனை அத்தனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை
கோலமே நினைக் காளியென்றேத்துவேன்


அண்டம் பற்றிய அளவீடுகளும், பரிமாணங்களும் மனித மனமும், அறிவும் செய்யும் எந்தக் கற்பனையையும் விட பிரம்மாண்டமானவை. பில் ப்ரைஸன் (Bill Bryson) எழுதிய “எல்லாவற்றையும் பற்றிய சுருக்கமான சரித்திரம்” (A brief History of nearly Everything) அல்லது Stephen Hawkingன் “காலத்தின் சுருக்கமான சரித்திரம்” (A brief History of Time) போன்ற வெகுஜன அறிவியல் நூல்களைப் படித்தவர்கள் இந்தப் பிரம்மாண்டத்தைக் கொஞ்சம் உணரலாம். ஒரு சிறிய சர்க்கரைக் கட்டிக்குள் எத்தனை அணுக்கள் இருக்கின்றன? நாம் இருப்பது பால்வீதி எனப்படும் வெளி (galaxy). இது போன்ற எத்தனை கோடி வெளிகள் பிரபஞ்சத்தில்? இவற்றுக்கு உடையே உள்ள தூரம் என்ன? தூரமும் காலமுமே மயங்கும் கணக்கு இது. “ஒளியின் வேகம்” என்ற நாம் அறிந்த அதிக பட்ச வேகக் கணக்கை வைத்து நடைமுறையில் இன்றைய அறிவியல் பெரும் வளர்ச்சி கண்டு விட்டது. ஆனால் பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு இடத்தில் எப்போதோ ஒரு நட்சத்திரம் சிதறிய போது அதில் வெளிப்பட்ட ஒளி இன்னும் நம்மை வந்து சேரவில்லை என்றால் நாம் அங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறோம்? இதையெல்லாம் கற்பனை செய்து பாருங்கள்!

இந்தப் பிரமாண்டத்தை கவித்துவ மொழியில் சொல்ல விழைவதே மேற்சொன்ன பாடல். இவ்வளவும் சொல்லிவிட்டுக் கடைசியில் “கோலமே” என்று பாடுகிறார். எண்ணிப் பார்த்தால் இது கூட அண்டம் பற்றிய நம் மனத்தில் உள்ள கோலம் தான், உண்மையல்ல!

அண்டம் பற்றிய ஆச்சரியங்களின் வெளிப்பாடு இந்து ஆன்மீக, பக்தி மரபில் புதிதல்ல. நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடல்களிலேயே உள்ளது. அதற்கும் முந்தைய வேத, உபநிஷத இலக்கியத்திலேயே உள்ளது. அவை எல்லாம் உள்ளுணர்வின் அடைப்படையிலானவை. ஆனால், இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி நடைபோடத் தொடங்கியிருந்த காலத்தில், அதைப் பற்றி ஓரளவு நன்கு அறிந்திருந்த கவிஞனின் பக்தி வெளிப்பாட்டில் கூட அறிவியல் சிந்தனை தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இந்தப் பாடல்கள் உணர்த்துகின்றன. இது அவனது ஆன்மீகத் தேடலைக் குழப்பவில்லை, மாறாக தெளிவித்திருக்கிறது, பரிணமிக்க வைத்திருக்கிறது.

பிற்காலத்தில், தமிழகத்தில் அறிவு சுத்தமாக மழுங்கியிருந்த ஒரு இருண்ட காலகட்டத்தில் “அமெரிக்காக் காரன் நிலாவில் கால் வைத்து விட்டான், மண் எடுத்து வந்து விட்டான், நீ அதை சிவன் தலையில் இருப்பதாகக் கருதி வணங்குகிறாயே” என்றெல்லாம் எள்ளி நகையாடி திராவிட இயக்கப் பாவேந்தர்கள் பாடல்கள் எழுதினார்கள். பாரதிக்கு இருந்ததில் பத்தில் ஒரு பங்கு அறிவியல் சிந்தனை கூட அவர்களுக்கு இருந்திருக்கவில்லை என்பது தெளிவு. அவர்களின் மற்ற படைப்புகளைப் படித்தால் இது புரியும். அமெரிக்க நிலாப் பயணத்தைப் பற்றி செய்தித் தாளில் படித்தவுடன் அரைகுறைப் பகுத்தறிவு பீறிட்டெழுந்து இத்தகைய அட்சரலட்சம் பெறுமான கவிதைகளை எழுதித் தள்ளினார்கள். மேற்சொன்ன பாரதி பாடல்களைப் படிக்கும்போது ஏனோ இது நினனவுக்கு வந்து தொலைக்கிறது.

“நிலவுலாவிய நீர்மலி வேணியன்” என்ற பழம்பாடலையும், பாரதியின் மேற்சொன்ன பாடல்களையும் இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் கழித்தும் நாம் படித்து அனுபவிக்கலாம். ஆனால் வெறுப்பில் விளைந்த அந்தக் காழ்ப்புணர்ச்சிப் பாடல்களைக் காலம் ஏற்கனவே விழுங்கி ஜீரணித்து விட்டது. “காலமே, நினைக் காளியென்றேத்துவேன்”!

டீ.என்.ஏ உள் நிற்கும் தெய்வமே போற்றி!
விண்கலன் செலுத்தும் விரைவே போற்றி!
கணினி நிரலின் காரணா போற்றி!

‘சிலிக்கன் சிப்’ மேவிய சிவனே போற்றி!

Sunday, December 10, 2006

பாரதி தரிசனம் : கவிதை

இனியொரு விதி செய்த
பிரமன்
அதை எந்த நாளும் காக்கச் சொன்ன
திருமால்
ஜகத்தினை அழிக்கப் புறப்பட்ட
ஜடாதரன்
பகைவனுக்கருளும் நன்னெஞ்சம் வேண்டிப் பாடிய
புத்தன்

ஒளிவளரும் தமிழ் வாணி
செம்மைத் தொழில் புரிந்தசெல்வத் திருமகள்
காலனைச் சிறு புல்லென மதித்துக்
காலால் மிதிக்கத் துடித்த
காளி



பெண்மை வாழ்கவென்று கூத்திட்ட
பெருமகன்
ஆதலினால் காதல் செய்வீர் என்று
அறைகூவி அழைத்த
அன்புத்தூதுவன்
சாதிகள் இல்லையடி பாப்பா என்று
சத்தியம் செய்த
சமத்துவத் தந்தை

வேடிக்கை மனிதரைப் போலே வீழ விரும்பாத
வேதாந்தி
நிலைகெட்ட மனிதரை நினைத்து நெஞ்சு பொறுக்காமல்
நிம்மதி கெட்ட
நிஜப் புரட்சிக்காரன்
வீர சுதந்திரம் வேண்டி
வெகுண்டெழுந்த வேங்கை
வையத்தலைமை எனக்கருள்வாய் எனக் கேட்ட
வல்லரசாதிக்கவாதி

வானம் வசப்படும் என்று நம்பிய
வருங்கால மனிதன்
காணி நிலம் வேண்டும் தொடங்கி
கனவு மெய்ப்பட வேண்டும் வரையில்
கற்பனைகளில் மிதந்த
கனவு சாதனையாளன்
வாதனை பொறுக்கவில்லை எனக் கதறிய
வாழ்க்கைப் போராளி
எத்தனை கோடி இன்பம் என்று
எண்ணிப் பார்த்து மெய்சிலிர்த்த
ஏகாந்த யோகி

பார்மீது நான் சாகாதிருப்பேன் கண்டீர் என்றவனை
அன்று பைத்தியக்காரன் என்று
பார்த்துச் சிரித்த மக்கள் கூட்டத்தின்
வழித் தோன்றல்களை
இன்றும் பைத்தியமாக அடித்துக் கொண்டிருக்கும்
அழியாக் கவிதைகளை
அள்ளித் தந்துவிட்டுப் போன
அமரகவி

2002-ல் திண்ணையில் வெளியான எனது பழைய கவிதை. அழியாத அவன் கவிதை வரிகளோடு இழைந்து அவன் தரிசனம் தேட முயலும் என் போன்ற பாரதியின் மீளா அடிமைகளுக்காக அவனது 124 வது பிறந்த நாளில் இதனை மீள் பதிவு செய்கிறேன்.

Wednesday, December 06, 2006

மலேசியாவில் இந்துக் கோயில் இடிப்புகள்: பெரும் அபாயம்

இந்த வருட ஆரம்பத்திலிருந்து 69 கோவில்கள் இடிக்கப்பட்டு விட்டன. மூன்று வாரத்திற்கு ஒரு கோயில் என்ற கணக்கில் இந்த இடிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதில் பெரும்பாலானவை 100 வருடத்திற்கும் மேல் பழமையான கோயில்கள். இந்துக்களின் உரிமைக்காகப் போராடி வரும் Hindraf என்ற அமைப்பு அரசுக்கும், பிரதமருக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஏகப்பட்ட கோரிக்கைகளைக் கொடுத்தும், எத்தனையோ மறியல்கள் செய்தும் இடிப்புகள் நின்றபாடில்லை.

அரசின் கட்டுமானப் பணிகளுக்காக மற்றும் நகர் விரிவாக்கம் என்றெல்லாம் முதலில் ஒன்றிரண்டு கோயில்கள் இடிக்கப் படுகையில் சொல்லப் பட்ட போது அப்பாவியாக நம்பிய தமிழ் மக்கள் விரைவிலேயே இது மலேசிய இந்து சமயத்தின் மீதும், இந்து மக்கள் மீதும் நடத்தப்படும் குறிவைத்த தாக்குதல் என்பதை உணர்ந்து கொண்டார்கள். பொது நிலங்கள் மட்டுமல்ல, தனியார் நிலங்களில் கட்டப் பட்டிருந்த சிறு சிறு குலதெய்வக் கோவில்களெல்லாம் கூட எந்த சரியான காரணமும் தரப் படாமல் இடிக்கப் படுகின்றன.

இந்த 10 நிமிட தமிழ் வீடியோவைப் பாருங்கள். தங்கள் கோயில்கள் குறிவைத்து இடிக்கப் படுவது அறிந்த கோபம், வலி, ஆற்றாமை, இஸ்லாமிய அரசால் வஞ்சிக்கப் படுவது பற்றிய புரிதல் எல்லாம் அதில் வெளிப்படுகிறது. இவர்கள் அனைவரும் காலம் காலமாக சட்டத்தை மதிக்கும், அமைதியோடு வாழ்ந்து வரும் தமிழ் மக்கள். இஸ்லாமிய அரசையும் அதிகாரத்தையும் 'சேலஞ்ச்' செய்யக்கூடியவர்கள் அல்ல, அதை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருபவர்கள். ஒரு இஸ்லாமிய அரசு தன் உண்மையான முகத்தை இப்போது காட்டத் துவங்கியதும் கலங்கிப் போயிருக்கிறார்கள்.

மென்-இஸ்லாமிய அரசு என்று நம்பப்படும் மலேசிய நாட்டு அரசு நிர்வாகமும், அதிகாரமும் ஜிகாதிகளால் வெகு வேகமாகக் கடத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக் கோவில் இடிப்புகள் வரப்போகும் மிகப் பெரிய இந்து வெறுப்பு பரப்பல் மற்றும் இனப் படுகொலைக்கான முன் தயாரிப்பு - இதில் துளியும் சந்தேகமில்லை. தாங்கள் வணங்கும் தெய்வங்கள் தங்கள் கண்முன்னால் இடியுண்டு விழுவதைத் தடுக்க முடியாமல் தவிக்கும் மக்கள் கூட்டத்தின் மனநிலை எப்படியாகும் என்று எண்ணிப் பாருங்கள் - ஜிகாதிகளின் கூர்மையான திட்டத்தின் முதல் பகுதி இது. கோவில்கள் இடிப்பைப் பார்த்துக் கலங்கி அழும் குழந்தைகள், தாய்மார்களின் கண்களில் அந்த பயம் தெரிகிறது.. "நாம வணங்கற தெய்வத்த ஆம்பர் வெச்சு அடிச்சு உடைக்கறான் சார்".. "என்ன தமிளன்னா இளிச்சவாயனா.. இந்து மதம்னா அவ்வளவு மட்டமா போச்சா.".."ஏன்யா, இடிக்கறதுக்கு முந்தி அந்தக் கோயில வேற எங்கயாவது மாத்துன்னு சொன்னா நாங்க செய்யாமலா இருக்கப் போறோம்".. முனியாண்டி, குணாளன், பழனிச்சாமி, சுப்பிரமணியன் போன்ற எண்ணற்ற மலேசியத் தமிழர்களின் உள்ளக் குமுறல்களை அந்தப் படம் காட்டுகிறது.

இவ்வளவு பெரிய அளவில் நடக்கும் கோயில் இடிப்பு பற்றிய செய்திகள் தமிழ் நாட்டு ஊடகங்களில், மற்ற இந்திய ஊடகங்களில் மொத்தமாக இருட்டடிப்பு செய்யப் படுகின்றனவா? இல்லை திம்மித்தனத்தில் ஊறிய பயத்தால் இந்தச் செய்திகளை வெளியிட பயமா?

இந்து மதத்தின் மீதான மலேசிய முஸ்லீம் வெறியர்களின் தாக்குதல் இது. இந்திய ஊடகங்கள் இந்தச் செய்திகளையும் இதன் பின்னணியையும் இந்திய மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த அநியாயத்தை எதிர்த்து இந்திய மக்கள் குரல் கொடுக்காவிட்டால் வேறு யார் குரல் கொடுப்பார்கள்?

செய்தி உதவி :

http://www.malaysiakini.tv/?cat=8
Language : Tamil

In this special Tamil video feature malaysiakini.tv looks into the controversies surrounding the demolition of Hindu temples in the country.

According to Hindu Rights Action Force (Hindraf) an average of one Hindu temple is demolished in every three weeks. The organisation says that since February this year, a total of 69 temples have been demolished or threatened to be demolished by the authorities. Many of these temples are more than one hundred years old.

In addition, at least six temples in Shah Alam, Selangor have been forced to relocate.
Hindraf says that the demolition are unconstitutional and causes disharmony and dissent amongst the Hindus in the country.


Hindraf has given various notes of appeals and memorandums to state leaders, political leaders and even to the Prime Minister. They hope the prime minister can take an active step in halting demolition of the Hindu temples. In this 10-minute video feature, malaysiakini.tv looks into the issue and talks to the affected people.

Watch the 10-minute clip.



Indrani Kopal

Sunday, December 03, 2006

கார்த்திகை விளக்கீடு: மன இருள் மாய்ப்போம்!

அந்தி நேரம். கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். “எனக்குப் பிறகு யார் இந்த உலகிற்கு ஒளிதரப் போகிறீர்கள்?” என்று கவலையுடன் கேட்டான். நிலவு இருந்தது, நட்சத்திரங்கள் இருந்தன, எல்லாம் அமைதியாக இருந்தன. ஒரு சிறு மண் அகல், அதன் சுடர் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. தன் தலையை நிமிர்த்திச் சொன்னது “நான் இருக்கிறேன், சூரிய தேவா!

- ரவீந்திர நாதத் தாகூரின் ஒரு கவிதை

அகல் விளக்குகள் ஏற்றி அதன் ஒளியில் அகிலம் முழுதும் நிறைந்திருக்கும் பேரொளியை உணரும், வழிபடும் நம் தொன்மைத் திருநாள் கார்த்திகை தீபம்.



சங்க காலத்தைச் சேர்ந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான “கார் நாற்பது” என்னும் நூலில் உள்ள ஒரு பாடல் -

நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகையுடைய ஆகிப்
புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழித்
தூதொடு வந்த மழை


“தோழி, கார்த்திகைத் திருநாளன்று நாடெங்கும் விளக்குகள் பூத்தன போல் காடெங்கும் தோன்றிப் பூக்கள் பூத்தன, மழையும் வந்தது” (தலைவன் வரும் கார்காலமும் வந்தது என்பது குறிப்பு).

இதன் மூலம் இந்த தெய்வீகத் திருநாளின் தொன்மையை அறியலாம். சைவமும், வைணவமும் செழித்து வளர்ந்த காலகட்டங்களிலும் இத்திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. நாம் ஏற்றும் தீபங்கள் அக இருள் அகற்றும் தெய்வீக ஞானத்தின் உருவகங்கள் என்பதையும் பல பாடல்கள் உணர்த்தும்.

“விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளைக்கை விளக்க வல்லார்க்கு
விளக்குடையான் கழல் மேவலுமாமே”

என்ற திருமந்திரப் பாடலின் ஆழ்ந்த தத்துவப் பொருள் அறிந்து, உணர்ந்து, அனுபவிக்கத் தக்கது. அகல்,எண்ணெய், திரி, சுடர் என்று பலவாறாகத் தோன்றும் விளக்கு என்பது ஒளியில் ஒன்றுபடுவது போல, பலவாறாகத் தோன்றும் பிரபஞ்சமும், ஜீவனும் பரம்பொருளான சிவத்தில் அடங்கும் என்பது இதன் உட்பொருள்.

“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா, நன்புருகு
ஞானச் சுடர்விளக்கேற்றினேன், நாரணர்க்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்”


என்று ஆழ்வார் அற்புதமாகத் தனது ஞான விளக்கு பற்றிக் கூறுகிறார்.



தமிழகம் மற்றும் பாரதத்தின் பல பகுதிகள் போலவே, இலங்கை ஈழத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்தத் திருநாளைப்பற்றி சகோதரர் அகிலன் சுவையாக எழுதியுள்ளார்.http://agiilankanavu.blogspot.com/2006/12/blog-post.html. இதிலே இப்படி ஒரு கேள்வியையும் கேட்டிருக்கிறார்."இன்றைக்கு விளக்கீடு என்றதும் எனக்கு உடனே ஞாபகம் வந்தது இதுதான். விளக்கீடு என்றால் கார்த்திகை தீபம் ஏற்றுவது. அதான் அதை தமிழ் நாட்டில் எப்படி சொல்வார்கள் என்று தெரியவில்லை ஆனால் ஈழத்தில் இதுதான் அதன்பெயர்."

தமிழ்நாட்டிலும் இதன் தொன்மையான பெயர் விளக்கீடுதான், அதனாலேயே இந்தப் பதிவுக்கு அப்படியே தலைப்பிட்டேன். சென்னை திருமயிலைக்கு திருஞானசம்பந்தப்பெருமான் வந்தபோது, என்றோ அரவம் தீண்டி மாண்ட பூம்பாவை என்ற பெண்ணின் சாம்பல் வைத்த குடத்தை முன்வைத்துசிவபெருமானை வணங்கி மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பிய பதிகத்தில் அந்நாளில்தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்ட பண்டிகைளின் பட்டியல் இருக்கிறது. இதிலே உள்ள அழகிய ஒரு பாடல் –

“வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச்சரத்தான் தொல் கார்த்திகைநாள்
தளத்தேந்திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்”

இப்பாடலில் வளையணிந்த அழகிய பெண்கள் விளக்கேற்றியது குறிப்பிடப் படுகிறது.

இந்து தர்மத்தின் சமய ஒருமையைப் பறை சாற்றும் திருநாள் கார்த்திகை.

“அறுசமய சாத்திரப் பொருளோனே
அறிவில் அறிவால் உணர் கழலோனே
குறுமுனிவர் ஏத்தும் முத்தமிழோனே
குமரகுரு கார்த்திகைப் பெருமாளே”

என்று கார்த்திகைப் பெண்டிர் எடுத்து வளர்த்த கந்தப் பெருமானை அருணகிரியார் பாடி மகிழ்வார். சிவபெருமான் அருட்பெரும்ஜோதியாக தரிசனம் தரும் திருநாள். ஞானப் பேரொளி உமையையும், தீப லட்சுமியையும் திருவிளக்கில் போற்றும் நாள். திருமால் திரிவிக்கிரமனாக அவதரித்து மாவலியைப் பாதாளத்தில் அமிழ்த்திய நாள். பரணி தீபம், திருவண்ணாமலை தீபம், சர்வாலய தீபம் என்று எல்லா ஆலயங்களிலும், பட்டி தொட்டிகள் தோறும் கொண்டாடப் படும் திருநாள் இது. சிறு சிறு குடிசைகள் கூட விளக்குகளால் அலங்கரிக்கப் படும் நாள் இது.



மகாகவி பாரதி எழுதுகிறார்:

கார்த்திகையில் கார்த்திகை நாள் கார்மேனிக் கமலக் கண்ணன் கொடியவரைக் கடிந்தடக்கிய நாள். உலகினில் கொடுங்கோலர்கள் கொட்டத்தைக் கருணாநிதியான கடவுள் அடக்கிய நாள்… பாரதர்கள் வெந்துயர்களையும் பரந்தாமன் விரட்டிய நாள். ஆரியர்களின் ஆண்மை அவனியில் பொலிந்திடு நாள். வானவரும் தானவரும் வருத்தம் நீங்கி வாழ்க்கை நிலையின் வனப்பை எய்திய நாள். மறமிடர்ப்படுக்கப் பட்ட மகிமைப் பெருநாள். அறம் தழைத்தோங்க ஆரம்பித்தத ஆனந்தத் திருநாள். தீபச் சோதியால் தேவாலயத்தை நிரப்பிடு நிகரில் திருநாள். வாணவேடிக்கையும், மாவலியாட்டும் மலிந்திடு நாள். பாரத மக்கள் ஸ்ரீ பகவானருள் பெற்ற நாள். கிருபாநிதிக் கடவுள் கருணை பொழிந்திடு நாள். பார் உவந்த உத்தமத் திருநாள் கார்த்திகையில் கார்த்திகை நாளே.

(நன்றி: மகாகவி பாரதியின் உரைநடை வரிசை – சிந்தனைகள், பக்கம் 28, மணிமேகலைப் பிரசுரம்)

இத்திருநாளில் நாம் ஏற்றும் தீபங்கள் புற இருளை அகற்றுவது போல், ஞானம் என்ற பேரொளி நம் மன இருளை மாய்க்க வேண்டும். “மனத்து இருளேதுமின்றி” என்று அபிராமி அந்தாதியும், “மனத்திருள் மூழ்கி கெடலாமோ” என்று திருப்புகழும் சுட்டுவது இதைத் தான்.

உலகில் இருள் என்பது எப்போதும் இருப்பது, அதனாலேயே அதை அழிக்கும் ஒளியின் தியானமும், நினைவும் எப்போதும் தேவைப்படுகிறது. இன்று நாம் காணும் வன்முறைகளுக்கும், கொடூரங்களுக்கும் காரணமாகவும், அழிவு மற்றும் ஆக்கிரமிப்பு சக்திகளின் பின்னணியிலும் இருப்பது இந்த மன இருள் தான். திண்ணை (அக்டோபர் 19,2006) இதழில் இருளும், மருளும், இஸ்லாமும் என்ற கட்டுரையில் திரு. நேசகுமார் இந்தக் கருத்தை மிக அற்புதமாக விளக்குகிறார். அதை அப்படியே கீழே தருகிறேன்.

'.. இன்று இஸ்லாத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ளாதபடிக்கு , காண்போரின் மனங்களையும் மயக்குவது இந்த இருட்தன்மைதான் . இந்தியத் தத்துவங்கள் , மரபுகள் இந்த இருள் என்றென்றும் இருக்கும் என்கின்றன .

ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா
ஒளியுளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும்
ஒளியுருள் கண்டகண் போலவே றாயுள
ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே !

- திருமந்திரம் - 1819.
***
சுழல் போன்று வந்து மீண்டும் மீண்டும் நம்மை ஆக்கிரமித்துக் கொள்வது இந்த இருள். இந்த இருளுக்கும் மருளுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. இஸ்லாத்தின் மிகப்பெரிய பலம் இந்த மருட்சிதான். ஆன்மீக ரீதியான மருட்சியானது இறைவன் பற்றிய மிரட்டல்களிலிருந்து தொடங்கி, நரகம் பற்றிய அச்சுறுத்தல்களால் பின்பற்றுபவர்களின் மனதை மருள வைக்கிறது. இது போதாதென்று, இதைக் கண்டு மருளாதவர்களை மிரட்டவே ஃபிஸிக்கலாக வன்முறையை பிரஸ்தாபிக்கின்றது இஸ்லாம். இந்த மன மருட்சி, மனதின் சிந்தனையை மூடி மறைத்துக் கொள்கிறது. இஸ்லாமிய வரலாற்றை உற்றுக் கவனித்தால், ஆரம்பத்தில் முகமதுவும் இதே மனநிலையில் இருந்தது தெரியவரும். வானத்தை மறைத்துக் கொண்டு ஆயிரம் இறக்கைகளுடன் தோன்றித் தம்மை இறுக்கிப் பிடித்து பேயடித்தவனின் நிலைக்குக் கொண்டுபோன ஜிப்ரீலின் மீது முகமதுவுக்கு பயம் ஏற்பட்டது. தற்கொலைக்குக் கூட முயன்றார் முகம்மது. பிறகு, தம்மை எதிர்த்தவர்கள் வன்முறையை மேற்கொண்டபோது எதிர்த்துத்தாக்கத் தைரியமில்லாமல் பயந்துபோய் ஊரை விட்டு ஓடினார்(விவேகானந்தர் இதுகுறித்து ஓரிடத்தில் எழுதும்போது, இப்படி எதிர்க்க வழியில்லாமல் வன்முறையை ஏற்பவர்கள் வாய்ப்புக் கிடைத்தவுடன் மற்றாவர்கள் மீது அதே வன்முறையை திணிப்பார்கள் என்று தெரிவிக்கின்றார்). இப்படி மருள் இருளாய் மாறி முகமதுவின் மனதைக் கைப்பற்றிக் கொண்டதுபோலவே, அவரது அடியார்களையும் காலம்காலமாய்ப் பற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறது.


இந்த இருளுக்கும், இதனிலிருந்து மீள மனித குலம் தம்மிலிருக்கும் உயரியசக்தியை விழிப்புணர்வை துணைக்கழைத்து மேற்கொள்ளும் போரே தேவ-அசுர யுத்தமாக இந்தியப் பெருங்கதைகளில் சித்தரிக்கவும் படுகிறது . மனித மனத்தின் விழிப்புணர்வின் உச்சமானதொரு தன்மையை இறைவன் இறங்கி அசுரர்களை எதிர்கொள்வதாக புராணங்கள், கதைகள், வழக்குகள் சித்தரிக்கின்றன. மாட்டுத் தலயுடன் கொண்ட சிந்திக்கா அசுரனை வீழ்த்தும் சக்தியை ஒரு இந்துவாக நம்மில் பலர் வணங்கியிருப்போம்.

சிறுவயதில் நான் அடிக்கடி சிந்தித்ததுண்டு. எப்படி அசுரர்களும் அதே கடவுளை வணங்குகின்றனர் . அசுரர்களுக்கு ஏன் இறைவன் வரங்களை வாரி வழங்குகின்றார் ? அது எப்படி அசுரர்கள் ஏக இறைவனை மட்டுமே வணங்கி உலகங்களையெல்லாம் விடு விடுவென்று ஆக்கிரமித்து விடுகின்றனர் . அது ஏன் கடைசியில் எல்லோரும் இறைஞ்சிய பின்னரே இறைவன் இறங்கி வருகின்றார் - இது போன்ற பல கேள்விகளுக்கு இன்று புலப்படும் விடை, இதெல்லாம் குறியீடுகள் என்பதே. அசுரத்தன்மை என்பது நமது மனத்தின் பின் கதவுகள் தாம். கடவுள் கீழிறங்கி வருவது என்பது கடைசியில் நமக்குள் ஏற்படும் விழிப்புணர்வுதான்!"


அனைவருக்கும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்!