Showing posts with label தேசியம். Show all posts
Showing posts with label தேசியம். Show all posts

Monday, November 22, 2010

ஒரு தேசம், இரு உரைகள்

... சாதாரண பாமர மக்களின் இந்த சாதாரண பாமர முட்டாள்தனத்தை அருந்ததி ராய் போன்ற அறிவுஜீவி எழுத்தாளரால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? எனவே துப்பாக்கிகளும், துவேஷ பிரசாரங்களும், ரத்தக்களறிகளும் தான் அவர்களது மீட்புக்கு வழி என்று போதிக்கிறார். ...

முழுதும் படிக்க - http://www.tamilhindu.com/2010/11/a-nation-and-two-speeches/


Monday, October 11, 2010

காஷ்மீர் இந்துபூமி யே என்கிறார் ஹாய் மதன் - பாராட்டுக்கள்!

சமீபத்திய விகடனில் ஹாய் மதன் பகுதியில் ஒரு கேள்வி - பதில்..

கேள்வி: காஷ்மீரில் நடக்கும் கலவரங்களை நம்மால் அடக்கமுடியவில்லை; பிரிவினைத் தீயை அணைக்க முடியவில்லை. முஸ்லிம்கள் தான் அங்கே பெரும்பான்மை. போனால் போகட்டும் என்று காஷ்மீரை விட்டுத் தொலைத்துவிட்டு நாம் ஏன் நிம்மதியாக வாழக் கூடாது?

இதற்கு அளித்த பதிலில்,

.. வேத காலத்தில் அங்கு வசித்த காஷ்யப முனிவரின் பெயரில் இருந்து தான் காஷ்மீர் என்ற பெயர் வந்தது என்று கருதப் படுகிறது...

என்று தொடங்கி காஷ்மீர சைவம், அபினவ குப்தர், யோக வாசிஷ்டம் ஆகிய இந்துப் பண்பாட்டுக் கூறுகளின் தாயகமான காஷ்மீர் இந்தியாவின் பகுதியே என்று பதில் சொல்லியிருக்கிறார் ஹாய் மதன். கருத்துக்கள் தவறாகவும், மேம்போக்காகவும், தகவல் பிழைகளுடனும் உள்ளன - காஷ்மீரி சைவம் தமிழக சைவத்திலிருந்து தான் உருவானது என்பது தவறு; இரண்டுமே வேதநெறியை விலக்கவில்லை, மாறாக வேதநெறியையே அடிப்படையாகக் கொண்டவை. பக்தி, தாந்தீரிகம் குறித்து மதன் கூறியதும் தவறு. இந்து தத்துவ நூல்களை பாரசீக மொழியாக்கம் செய்தவர் தாரா ஷீகோ, அக்பர் அல்ல. நாகார்ஜுனர் தமிழர் அல்ல, ஆந்திரர் - அவர் பெயரில் நாகார்ஜுனகொண்டா என்று ஊர் இன்றும் இருக்கிறது.

இந்த சின்ன பதிலிலேயே இவ்வளவு தவறுகள் இருந்தாலும், வெறும் செய்தித் தாள் துணுக்குகளின் அடிப்படையில் இல்லாமல், ஓரளவு வரலாற்று, கலாசார, சமூகப் பின்னணி பற்றிய புரிதலுடன் இக்கேள்விக்கு விடையளித்த ஹாய் மதனுக்குப் பாராட்டுக்கள்!

இந்த இண்டர்நெட் யுகத்தில் சரியான தகவல்களைத் திரட்டுவது கடினமே அல்ல; ஹாய் மதன் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்து தகவல்களைத் திரட்டி பதிலளிக்க வேண்டும்.

கேள்வி-பதில் இதோ -



Friday, July 24, 2009

சீனாவின் தலைவலி இந்தியாவின் நிவாரணி?

... பிரிவினை மற்றும் உரிமை கோரலுக்கான பொறி எந்தப் பகுதியிலாவது தோன்றினால், அதைச் சமாளிப்பதற்கு சீனர்கள் பயன்படுத்தும் வழிமுறை ஒன்றே தான் - கோரிக்கையாளர்களைக் கடுமையாகத் தாக்கி ஒடுக்குவது, தொடர்ந்து தாக்கி ஒடுக்குவது. உறுதியுடன் தாக்கி ஒடுக்குவது. திபெத்தில் அவர்கள் செய்வதைப் போல. ..

மூலம்: பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன்
மொழியாக்கம்: ஜடாயு

கட்டுரையை சொல்வனம் இதழில் படிக்கலாம்.