Sunday, April 29, 2007

மொழிகள் சங்கமிக்கும் இந்து ஆன்மிகம்

பாரதத்தின் ஆன்மிக, தேசிய ஒருமைப்பாட்டு மொழியாக சம்ஸ்கிருதம் விளங்கி வருவது குறித்து மிக அழகாக அரவிந்தன் தன் பதிவில் எழுதியிருக்கிறார். பாரதத்தின் பல மாநிலங்களுக்குச் சென்று பலதரப்பட்ட மக்களோடு பழகிய என் அனுபவத்தில் இந்த கூற்று மிக உண்மையானது என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறேன். ஹிந்தி கற்றுக் கொள்ள ஆரம்பித்து அதன் மூலம் நான் கற்று அறிந்த சம்ஸ்கிருதச் சொற்கள் தான் ஒவ்வொரு புதிய இந்திய மொழியை நான் சந்தித்த சமயத்திலும் அதனோடு ஏற்கனவே எனக்கு இருந்த பந்தத்தின் இழையை, இருப்பை உணர வைத்தது. அனேகமாக இந்தியாவின் பல மொழிச் சொற்களையும் (கலைச் சொற்கள் உட்பட) சிறுசிறு முயற்சிகள் மூலம் நான் உள்வாங்கிக் கொள்ள முடிவதற்கு இதுவே காரணம்.

இந்து இயக்கங்களுக்கு அறிவுரை கூறுகிறேன் என்ற பேரில் மா.சிவகுமார் இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார் -

// ஒவ்வொரு பகுதியிலும் அந்தப் பகுதியின் மொழியிலேயே வழிபாடுகள் நடத்தப் போராட வேண்டும் //

அவ்வப்பொழுது அடிக்கடி தமிழ் இணையத்தில் சிலரும் இதுபோன்ற கோரிக்கைகளை வைத்தவன்ணம் உள்ளார்கள்.

இந்து ஆன்மிக கலாசார மரபில், காலங்காலமாக இழையோடிக் கொண்டிருக்கும் மொழிகள் இணைந்த, மொழிகளையும் கடந்த அற்புதமான ஒருமையுணர்வைக் குட்டிச் சுவராக்க எண்ணும் குருட்டுச் சிந்தனை இது.

இந்தியாவின் எந்த மூலைக்குப் போனாலும் ஓம் நமசிவாய, ராமநாமம், கிருஷ்ணநாமம் மற்றும் காயத்ரி போன்ற தெய்வீக மந்திரங்கள் தான் வழிபாடுகளில் இருக்கும்.. இவை வெறும் சொற்களாலான மொழி அல்ல, ஆன்மிக மொழி. இதை சில விதண்டாவாதிகள், மொழிவெறியர்கள் உணராமல் இருக்கலாம். ஆனால் உண்மையான பக்தர்கள், ஆன்மிகவாதிகள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

தமிழகத்தில் திராவிட பொய்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட சிலர் தவிர பாரதத்தின் எல்லா பகுதிகளிலும் எல்லா மக்களும் சம்ஸ்கிருதத்தை வேறுமொழியாக அல்ல, தங்கள் மொழிகளோடு தொப்புள்கொடி உறவு உள்ள ஒரு வேர்மொழியாகவே கருதுகிறார்கள். என் அனுபவத்தில் நான் சென்ற பல இடங்களிலும் மக்கள் சம்ஸ்கிருத சுலோகங்கள், மற்றும் தங்கள் மொழிப் பாடல்கள், மற்றும் சில சமயங்களில் மற்ற மொழிப்பாடல்களையும் கூடப் பாடி அற்புத தேசிய சங்கமமாக வழிபாடு செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

"இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்"

என்று மாணிக்கவாசகர் அழகாகக் கூறுவார்.

ஆந்திராவின் பெருமாள் கோவில்களில் தெலுங்கு லிபியில் உள்ள புத்தகத்தை வைத்து திருப்பாவை தமிழ் மூலப் பாடல்களை ப் படிப்பவர்களைப் பார்க்கலாம். சென்னையிலும், மதுரையிலும், கோவையிலும் நடக்கும் எத்தனையோ பஜனனைகளில் மீராவின் நெஞ்சைத் தொடும் ஹிந்திப் பாடல்களும், துகாராமின் மராட்டி அபங்கங்களும் கேட்கலாம்! மகாராஷ்டிர சிவன் கோயில்களில் சென்று நான் திருஞானசம்பந்தரின் நமச்சிவாயப் பதிகம் பாடியிருக்கிறேன்.. மொழி புரியாவிட்டாலும் "நமச்சிவாயவே" என்ற மந்திரச் சொல் திகழும் அந்தப் பாடல்களை உள்ளூர் மக்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்திருக்கின்றார்கள்.




"மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திரு மூர்த்தி.. " என்று அபிராமி பட்டர் அன்னையைப் பாடினார். அந்தப் பரம்பொருளின் வாக்காகவே மொழிகள் எல்லாம் உள்ளன.

ஆதிமுதல் சிவநடனத்தின் போது ஒலித்த உடுக்கையின் நாதத்தில் இருந்தே தங்கள் மொழியின் முதல் ஒலிகள் தோன்றியதாக சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளின் மரபிலும் புராணம் உள்ளது. பாரத மொழிகள் எல்லாமே தெய்வத்தன்மை உடையவை என்றே இந்து ஆன்மிகம் கருதுகிறது. "பாஷா ரூபா" (மொழிகள் வடிவானவள்) என்றே ஒரு அழகிய திருநாமம் லலிதா சகஸ்ரநாமத்தில் வருகிறது. நமது தேசியப் பாடல் வந்தே மாதரம் "ஸுமதுர பாஷிணீம்" என்று பாரத அன்னையைப் பாடுகிறது. "இனிமையான மொழிகளை உடையவளே" என்பது இதன் உண்மைப் பொருள்.

கம்பராமாயணம் பாயிரப் பாடல் இன்னும் ஒருபடி மேலே சென்று உலகில் எந்த இடத்தின் மொழியானாலும் அதில் ராமகாதையைக் கேட்பவர்கள் அமரர் ஆவார்கள் என்று கூறுகிறது -

வட கலை, தென் கலை, வடுகு, கன்னடம்,
இடம் உள பாடை யாதுஒன்றின் ஆயினும்,
திடம் உள ரகு குலத்து இராமன் தன் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே

(வடகலை - சம்ஸ்கிருதம், தென்கலை - தமிழ், வடுகு - தெலுங்கு, பாடை - பாஷை, அடைவுடன் - பக்தியுடன்)

கடந்த 2-3 நூற்றாண்டுகளின் ஆங்கிலம் பெருமளவில் உலகெங்கும் இந்து ஆன்மிகக் கருத்துக்களைக் கொண்டுசெல்லும் ஊடகமாக இருந்து வந்துள்ளது. இந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்ட சுவாமி விவேகானந்தர், ஸ்ரீஅரவிந்தர் இவர்களது உபதேசங்கள் ஆங்கிலத்திலேயே முதன்முதலில் வந்தன, பின்னர் மற்ற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டன.

இந்து மதம் உலக மதம். "வட்டார மொழியில் மட்டுமே வழிபாடு செய்யவேண்டும்" போன்ற கோரிக்கைகள் இந்து மதத்தின் இந்த உலகத் தன்மையைச் சிதைத்து வேண்டுமென்றே அதன் கூறுகளைத் தனித் தனியாகப் பிய்த்து சிறுகுழுக் கலாசாரமாக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதி தான். (இது தொடர்பான பொங்கல் பற்றிய பழைய பதிவு இங்கே). மொழிப்பற்று என்ற பெயரில் இங்கே அது உருக்கொள்கிறது.

தமிழ் வழிபாடு தழைக்கட்டும், இந்து ஆன்மிகம் செழிக்கட்டும்! தேவாரமும், திவ்வியப் பிரபந்தமும் தெய்வத் தமிழ்ப் பாடல்களும், வேத மந்திரங்களின், சம்ஸ்கிருத சுலோகங்களின் ஒத்திசையோடு சேர்ந்து ஒலிக்கட்டும்! ஆதி முனிவர்களின் மொழி முதல் ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் மொழிகள் வரை, உலக மொழிகள் அனைத்திலும் இந்து ஆன்மிகக் கருத்துக்கள் வெள்ளமெனப் பாயட்டும்!

Thursday, April 26, 2007

புதுச்சேரி மாநில சின்னங்கள்.. இந்து ஆன்மிகக் குறியீடுகள்

ஏப்ரல் 16, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு மாநிலத்தின் சின்னங்களை அறிவித்தது. சட்டசபையில் அமைச்சர் வைத்தியலிங்கம் இவற்றை முன்மொழிந்தார்.

மாநில மலர் (State Flower) : நாகலிங்கப் பூ
மாநில மரம் : வில்வ மரம்
காரைக்கால் அம்மையாரைத் தந்து சைவம் வளர்த்த மண்ணின் இயற்கை மணத்தைப் பறைசாற்றுகின்றன இந்த சிவச் சின்னங்கள்.

மாநில பறவை: குயில்
மாநில விலங்கு: அணில்

"வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க
யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ?"
என்ற பாரதியில் குயில் பாட்டு மற்றும் அவரது பல கவிதைகளுக்கு ஊற்றுக் கண்ணாக இருந்தது புதுச்சேரி குயில் தோப்பு. அதனால் என் போன்ற பாரதி அன்பர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழகக் கடற்கரை வெளி முழுதும் பல இடங்களில் புனிதச் சின்னமாக வணங்கப் படும் ராமர் பாதச் சுவடுகள் புதுச்சேரி கடற்கரையிலிருந்தே தொடங்குகின்றன. அணில் என்றதும் நமது கலாசாரத்தில் ராமனின் சேவைக்கு அது உதவிய படிமம் தான் மனதில் தோன்றும். அதனால் அணிலும் இவ்வகையில் ஒரு அழகிய ஆன்மீகக் குறியீடு தான்.

இந்த அழகிய அடையாளங்களை புதுச்சேரிக்கு வழங்கிய காங்கிரஸ் அரசுக்கு பாராட்டுக்கள்.

(செய்தி : http://www.hindu.com/2007/04/21/stories/2007042103560200.htm)

Monday, April 23, 2007

தமிழ்மணம் திரட்டியில் இருந்து விலகுகிறேன்

இலவச வலைதிரட்டி சேவை வழங்குவதாகக் கூறிக்கொள்ளும் தமிழ்மணம்.காம் இதன் நேரடி மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன என்பது பற்றிய சரியான விவரங்கள் அளிக்கத் தவறிவிட்டது.

இணையத்தில் எழுதும் ரவுடிகள் சிலரால் சென்னையில் மிரட்டப் பட்ட பதிவர் உண்மையில் இதனால் பாதிக்கப் பட்டாரா இல்லையா என்பது அல்ல பிரசினை. இதன் பின்னணியில் கேட்கப் பட்ட கேள்விக்கு - வியாபார அடிப்படையில் அல்ல, "தார்மீக அடிப்படையில்" பதிவர்களது சொந்த விவரங்கள் கூட்டுச் சேர்ந்தவர்களுக்கு (அதாவது associates) வழங்கப் படலாம் என்ற தமிழ்மணத்தின் நிலைப்பாடு கலவரப் படுத்துகிறது.

என் பதிவில் இருக்கும் தமிழ்மண கருவப்பட்டையைத் தூக்கிவிட்டேன். தமிழ்மணவான்களே, உங்கள் பாணியில் 24 மணி நேரத்திற்குள்ளோ இல்லை அதற்கும் முன்பாகவோ எனது பதிவை உங்கள் திரட்டியில் இருந்து நீக்கி விடுங்கள்.. இந்த திரட்டியில் பதிவை இணைத்ததால், ஒன்றிரண்டு நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். அதற்கு உபகாரம் செய்த உங்களுக்கு நன்றி.

இந்த வலைத்திரட்டி உருவாவதற்கு முன்பே திண்ணையில் நான் எழுதிவரும் காலங்களில் இருந்து என் எழுத்துக்களைப் படித்து வரும் பழைய, புதிய நண்பர்கள், வாசகர்களுக்கு இதனால் ஒரு மாற்றமும் இல்லை... You will anyway keep coming here, folks.

முகமின்மை என்ற இணையத்தின் தன்மையே உலகெங்கும் மக்கள் எந்த விதமான அச்சமும், பீதியும் இன்றி தங்கள் கருத்துக்களை உரத்துச் சொல்வதற்கு வழி செய்கிறது. இந்தக் கருத்துத் தளத்தில் யார் சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொல்கிறார்கள் என்பதே முக்கியத் துவம் பெறுகிறது..

ஆனால் வெட்டி சாட் செஷன்கள் போன்று ஒரு விஷய்மும் இல்லாமல் நீளும், மறுமொழிகள் பட்டு உறுத்தும் பதிவுகள், சளைக்காத தனிமனித தாக்குதல்கள், பெயரிட்டு அழைத்தல், ஐ.பிக்களை துழாவி ஆளைக் கண்டுபிடித்தல், பதிவுகளில் மிரட்டுதல், நேரில் வந்து மிரட்டுதல் போன்ற செயல்கள் மூலம், தமிழ்ச் சூழலில் வலைப்பதிவுகள் என்பதற்கு ஒரு தெருநாய்ச்சண்டைக் களம், மெகா கேலிக்கூத்து என்பதாகிய பரிமாணங்களை தமிழ்மணம் உருவாக்கியிருக்கிறது.

நேற்று தமிழ் எழுத்துலகம் நன்கு அறிந்த ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கையில் அரசு நூல்நிலையங்களில் நல்ல கவிஞர்களின் நூல்களை புறக்கணித்துவிட்டு திராவிட விசிலடிச்சான் குஞ்சுகளின் நூல்களை வாங்கி சேர்ப்பது குறித்து முன்பு ஜெயமோகன் ஒரு இதழில் எழுதியிருந்தது பற்றிக் குறிப்பிட்டார் - "தரமான கவிஞர்கள் மழையில் நனைந்தபடி வெளியே நிற்க நாய்கள் மேடையேறி ஊளையிடுகின்றன" என்று. இதைக் கேட்டதும் இப்படித் தான் சொல்லத் தோன்றியது -

தமிழ் இணையத்தில் திருமலை ராஜன், அரவிந்தன், ம்யூஸ், நேசகுமார் போன்ற நல்ல பரந்த வீச்சு கொண்ட எழுத்தாளர்களை புறக்கணித்துவிட்டு நாய்களும் நரிகளும் தமிழ்மண பூங்கா முதல் நடேசன் பூங்கா வரை மரங்களிலெல்லாம் கால்தூக்கி நனைத்து அதனை பிக்காஸோ ஓவியங்களாக ஒன்றின் பிருஷ்டத்தை அடுத்தது நக்கி வால் ஆட்டுகின்றன.

பயங்கொள்ளிப் பதிவர்களுக்கு... சில வார்த்தைகள்

தமிழ் இணையத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அரவிந்தன் நீலகண்டனின் பதிவை நீக்குவதாக தமிழ்மணம்.காம் வலைதிரட்டி அறிவித்து, அவர் தனது பதிவில் கூறியிருந்தது போல த.ம பாசிசப் பாதையில் அடையெடுத்து வைத்திருப்பதை கட்டியம் கூறி முரசறைகிறது.

சென்னையில் வாழ்ந்து வரும் ஒரு பயந்த சுவாமுள்ள அப்பாவி பதிவரை மிரட்டி கையழுத்து வாங்கி ஏதோ பெரிய வீர சாகசம் செய்துவிட்டதாக புல்லரித்துக் கொள்கிறது ஒரு இணைய ரவுடி கும்பல். திராவிட கட்சிகளின் அதே பாணியைப் பின்பற்றும் இந்த கும்பல் அ.மு.க என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பது சாலப் பொருத்தம் தான். இப்படிப்பட்ட ரவுடிகளுக்கு வழக்கமாக கொம்பு சீவிவிடும் தமிழ்மணம், இந்தப் பிரச்சினையில் தார்மீகநிலைப்பாட்டைக் கொண்டவர்களிடம் ஐபியை தருவோம் என்று தெளிவாகவே சொல்லியுள்ளது. இது பற்றி கால்கரி சிவா, ம்யூஸ் கேட்ட நியாயமான கேள்விகளுக்கும் இன்றுவரை எந்த உருப்படியான பதிலையும் இதுவரை தரவில்லை...

தமிழ்மணம்.காம் தொகுத்து வழங்கும் "சிறந்த பதிவுகளை" உள்ளடக்கிய பூங்கா என்ற வெறுப்பியல் இதழ் உருவான நாள் முதலாக இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும், இந்திய தேசியம் என்ற கருத்துருவாக்கத்தை கேலி செய்யும் பதிவுகளைப் பொறுக்கி எடுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது என்பதை முன்பே கூறியிருக்கிறேன். அப்சல் விவகாரமாகட்டும், காவிரி குடிநீர் விவகாரத்தை "தேசிய இனங்களின்" பிரசினையாக சித்தரிப்பதாகட்டும், "தேசிய ஜல்லிகள்" என்று தலைப்பிட்ட பதிவை கட்டம் கட்டி போடுவதாகட்டும், இந்திய நீதிமன்றத்தை காரணமில்லாமல் இழித்துரைப்பதாகட்டும், இந்திய எதிர்ப்பை முழுநேரப் பிழைப்பாக வைத்திருக்கும் ஜிகாதிகள், மாவோயிஸ்டுகள், ஜனநாயக எதிர்ப்பாளர்கள் கருத்துக்களை முன்னிறுத்துவதாகட்டும், "சிறந்த பதிவு"களாக தமிழ்மணம்.காம் கருதும் பதிவுகளின் யோக்கியதை இப்படித் தான் இருக்கிறது. விரல்விட்டு எண்ணி விடக் கூடிய ஒரு சில பதிவர்களைத் தவிர எத்தனை இந்தியர்கள் இதை எதிர்த்துக் கேள்வி கேட்கிறீர்கள்? ஏன் தயக்கம்? என்ன பயம்?

"பாட மறுக்கும் பாப்பாத்திகள்" என்று ஒரு ரவுடி எழுதுகிறான். இதற்காக அவனை முதுகில் தட்டிக் கொடுத்து அந்தப் பதிவை பூங்காவில் தலைப்பை மட்டும் மாற்றி பிரசுரிக்கின்றார்கள் தமிழ்மணம் ஆட்கள். மனச்சாட்சியுள்ள எத்தனை நடுநிலைப் பதிவர்கள், பெண் பதிவர்கள் இதை எதிர்த்துக் கேள்வி கேட்கிறீர்கள்?

இந்து தருமம், இந்துத் துவம், இந்து ஒற்றுமை இவற்றை மட்டுமே சமூகக் கொள்கைகளாக நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன், எந்த சாதிச் சார்புடைய கருத்துக்களையும் அல்ல. ஆனாலும் இந்த நேரத்தில் குறிப்பாக இதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. தமிழ்மணத்தில் தங்கள் பதிவுகளை இணைத்துள்ளவர்களில் குறைந்தது ஒரு 30 பதிவர்களாவது பிராமணர்களாக இருப்பார்கள். உள்ளே தினம் தினம் இழிவுக்கு ஆளாகிக் கொண்டு சகித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றார்கள். இந்த சமயத்தில், நேசகுமாருடன் முழுமையாக ஒப்பவில்லை என்றால் கூட அவர் சொன்னவற்றில் தமிழ்மணம் இடமளிக்கும் அப்பட்டமான பிராமண வெறுப்பு குறித்த கருத்து குறித்தாவது கொஞ்சமாவது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கலாம். அதில்லாமல் உள்ளே அமர்ந்து கொண்டு வாய்மூடி, இந்தக் கும்பல்களுடன் சிரித்து (அடி வாங்கிக்) கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சமூகம் இந்த அளவுக்கு அடிபடுவதில் வியப்பென்ன? வேறு எந்த சாதியையோ, மதத்தையோ எதாவது ஒரு தளத்தில் இப்படி திட்டமிட்டு கேவலப்படுத்துவதற்கு அனுமதித்தால் அங்கே இன்னேரம் என்ன நிகழ்ந்திருக்கும் என்று யூகித்துப் பாருங்கள். பரசுராமரின், சாணக்கியரின், மங்கள் பாண்டேயின், பாரதியின் மரபில் வந்தவர்கள் தானா இவர்கள்?

பிராமணர்கள் சிறுபான்மையாயிருக்கிறார்கள் என்றெல்லாம் யாரும் நினைக்க வேண்டாம். வலைப்பதிவுகளில் அவர்களைவிட சிறுபான்மையாக கிறித்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பாருங்கள், நேசகுமார் கிறித்துவத்துக்கு எதிராக எதுவும் எழுதவில்லை என்றாலும் கூட, அவர் முன்னிறுத்தும் ஆபிரகாமிய விமர்சனங்கள் தங்களது நம்பிக்கைகளுக்கு எதிரானவை என்பதால் மற்ற தேசவிரோத-ஜிகாதி குழுக்களுடன் கைகோர்த்து தமிழ்மணத்தின் வலைப்பதிவில் சென்று பின்னூட்டமிட்டு அவருக்கு எதிரான தங்களின் கருத்துக்களை எழுதியுள்ளார்கள்.

ஒரு சம்ஸ்கிருத பாடல் சொல்கிறது "ஆடுகள் தான் பலியிடப்படுகின்றன, சிங்கங்கள் அல்ல, புலிகள் அல்ல, யானைகள் அல்ல. ஏனென்றால், துர்ப்பலமான ஜந்துவை தெய்வமே அழிக்கிறது" என்று. இப்படி ஆடுகளாய் பலிபீடத்தை நோக்கி தலையாட்டிக் கொண்டு சென்றால், பின், ஏன் தான் இப்படிப்பட்ட கூத்துக்கள் நிகழ்ந்தேறாது?

இந்திய தேசியத்தில் முழு நம்பிக்கை கொண்ட பதிவர்கள், பெண் பதிவர்கள், பிராமண பதிவர்கள் நன்கு அறியப்பட்ட பலர் இருக்கின்றார்கள். அவர்கள் இந்த சமயத்தில் மௌனம் காக்காமல் வாய்திறந்து இந்த அராஜகத்தைக் கண்டித்தால், புத்தியைக் காட்டிட்டான் என்று சொல்வார்கள். சொல்லிவிட்டுத்தான் போகட்டுமே. எப்படியும் சொல்லப் போகிறார்கள், சொல்லிக் கொண்டுள்ளார்கள் என்ற நிலையில் இதனால் வாய்மூடி மௌனம் காக்கும் நீங்கள் இழக்கப்போவதுதான் என்ன?

தமிழ்மணத்திலிருந்து தூக்கிவிடுவார்கள் என்று அஞ்சினால், இங்கு இருந்து கொண்டு தினம் தினம் அவமானங்களைச் சந்திப்பதைவிட இது மேல் அல்லவா? உங்களில் எத்தனை பேரை இப்படித் தூக்க முடியும்? எண்ணிப் பாருங்கள். அரவிந்தன் குறிப்பிட்டிருப்பது போல இந்த வலைதிரட்டியுடன் நீங்கள் கொண்டிருப்பது ஒரு symbiotic relationship தான்.. ஆண்டான் அடிமை உறவு அல்ல.

இந்த வலைவறட்டியில் வளையவரும் வம்புப் பேச்சுகளில் மயங்கி ஏதோ இது தான் தமிழ் இணையம் முழுதும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு அல்பத் தனமான மாயையை விட்டு வெளியே வாருங்கள். தமிழ் இணையம் பெரியது, உலகம் அதைவிடப் பெரியது.

நான்... வெளியே வந்து கொண்டேயிருக்கிறேன் (அடுத்த பதிவையும் பாருங்க).

என்னவோ தெரியவில்லை இந்த வாரம் சிஃபி.காம் இதழில் படித்த வெங்கட் சாமிநாதனின் பத்தி நினைவுக்கு வருகிறது -

.. நாற்றத்தை நாற்றம் என்றுதானே சொல்லவேண்டும் என்றால், அப்படிச் சொல்வது இன்றைய சூழலில் விவேகமான காரியமில்லை. சமூகம் முழுதுமே கண்டனத்தில் சீறியெழும். ஆனால், சொல்லித் தான் ஆகவேண்டும் என்ற முனைப்பு இருந்தால், சொல்வதற்கு வழிகள் பிறக்கும். குறியீடுகள், உருவகங்கள், உருவகக் கதைகள், சமூக, வரலாற்று விடம்பனங்கள், கேலி, எல்லாம் இத்தகைய சூழலில் எதிர்க் குரலெழுப்பும் சக்தி வாய்ந்த ஆயுதங்களாகக் கூடும்...

Friday, April 20, 2007

நெல்லிக்காய் மூட்டை: இந்து ஒற்றுமை பற்றி பாரதியார்

நான் சிறு குழந்தையாக இருக்கும்போது ஹிந்துக்களைப் போல் ஒற்றுமைக் குறைவான கூட்டத்தார் வேறெந்த தேசத்திலும் இல்லையென்றும், ஹிந்துக்கள் நெல்லிக்காய் மூட்டைக்குச் சமானமென்றும் சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். பிறகு உலகத்திலுள்ள வேறு பல தேசங்களின் பூர்வ சரித்திரத்தையும், தற்கால இயல்பையும் பல விதங்களில் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் மேற்படி வார்த்தை தவறு என்று தெரிந்தது. கிழக்கே, மேற்கே, வடக்கே, தெற்கே உலகத்திலுள்ள எந்த ராஜ்ஜியத்தைப் பார்த்தாலும் அங்கு பணமும், அதிகாரமும் இருக்கும் வரை மனிதர் பரஸ்பர விரோதங்களையும், பொறாமைகளையும் உள்ளே அடக்கி வைத்துக் கொண்டு ஒரு விதமான வெளியொற்றுமை பாராட்டித் திரிகிறார்கள். இருந்தாலும் நாலடியாரில் சொல்லியபடி

"அட்டுற யார்மாட்டும் நில்லாது, செல்வம் சகடக்கால் போல வரும்".

லஷ்மிதேவி எந்த இடத்திலும் ஒரே நிலையாக நிற்பது வழக்கமில்லை. செல்வமும், அதனாலுண்டான பெருமையும், ஒரு கூட்டத்தாருக்கிடையே குறைவுபடும்போது உட்பொறாமையும், மாச்சரியமும் வெளிப்பட்டு தலைதூக்கி ஆடுகின்றன. உலக சரித்திரத்தை அறிவுடன் படித்த புத்திமான்கள் இதனை நன்றாக அறிவார்கள்.

ஆனால், இவ்விஷயத்திலே கூட, மற்ற தேசத்தாரைக் காட்டிலும், ஹிந்துக்கள் மேலென்று எனது விசாரணையில் தென்படுகிறது. ஏனென்றால், ஹிந்துக்களிடம் தெய்வபக்தி என்ற சிறந்த குணம், மற்றெல்லா தேசத்தாரைக் காட்டிலும் அதிகமென்பதை மேற்குப் பக்கத்துப் பண்டிதரிலே கூட பக்ஷபாதமற்ற பல யோக்கியர் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள். தெய்வபக்தியினால் ஜீவதையை உண்டாகிறது.

"எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
யல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே"

என்று தாயுமானவர் தமது தெய்வ பக்தியின் உண்மையை விளக்கினார்.

சென்னை, கார்த்திகை மாதம் புயற்காற்றடித்ததைப் பற்றி தென்னாற்காடு ஜில்லாவைச் சோதனை செய்த சர்க்கார் அதிகாரியான ஒரு ஆங்கிலேயர் தம்முடைய அறிக்கையில் ஹிந்து ஜனங்களுடைய விசேஷ ஜீவதையை, அதிதி சத்காரம் என்ற குணங்களை மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறார். காற்றடித்த இரவில் சில வைதிக பிராமணர் தமது வீட்டிற்குள் பறையர் வந்திருக்க இடங்கொடுத்ததாகப் பத்திரிகைகள் கூறின. ஏழைகளாக நம்மைச் சூழ்ந்திருப்போர் சிவனுடைய கணங்கள், நாராயணனுடைய மக்கள், முருகனுக்குத் தோழர், சக்தியின் அவதார ரூபம். பரமசிவன் சண்டாள ரூபத்துடன் சங்கராசாரியாருக்கு சமத்துவ ஞானத்தை ஊட்டினார். ஸ்ரீரங்கத்தில் எம்பெருமான் கடைக் குலத்தவராகிய திருப்பாணாழ்வாரை பரிசாக வேதியன் சுமந்துகொண்டு வந்து தனது கர்வ நோயைத் தீர்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டருளினார்.




சந்திரனுக்குள் ஒரு களங்கம் இருப்பது போல் இப்போது நம்முடைய கூட்டத்தில் ஒரு களங்கம் இருக்கிறது. ஆனால், பூத சந்திரனில் உள்ள களங்கத்தை அது தானே மாற்றிக் கொள்ளாது. ஞான சூர்யராகிய ஹிந்துக்கள் தமக்குள்ள குறையை விரைவாக நீக்கி வருகிறார்கள். அந்த களங்கமாவது நமது ஜாதிக் கட்டிலுள்ள சில வழக்கங்கள். மறுபடி தெய்வத்தை நம்பு எல்லாரும் இன்புற வேண்டி, குணகர்மங்களால் வர்ண நிச்சயம் செய்து கொண்டு, பூமண்டலத்திற்கு ஞானோபதேசம் செய்யும் பொருட்டாக பாரத தேவி தனது பத்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். காலம் ஹிந்துக்களின் சார்பில் வேலை செய்கிறது. தேவர்களெல்லாரும் ஹிந்துக்களைக் கைதூக்கிவிடப் புறப்பட்டிருக்கிறார்கள்.

பரமாத்மா ஒன்று, அவனுக்கு ரிஷிகள் பல பெயர்கள் சொல்லிப் போற்றுகிறார்களென்று வேதம் சொல்லுகிறது.

"பேரனந்தம் பேசி, மறையனந்தம் சொலும்
பெரிய மௌனத்தின் வைப்பு"

என்று தாயுமானவர் சுட்டினார். ராமகிருஷ்ணர் இதையே சொன்னார். இந்த உண்மை ஹிந்துக்களுடைய புத்தியில் வேரூன்றி விட்டது. எனவே, கலி நீங்கி விட்டது.

நெல்லிக்காய் மூட்டையைப் பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை. நெல்லிக்காய் கொடுத்தால் எல்லாரும் வாங்கித் தின்கிறார்கள். ஆனால், ஹிந்துக்கள் நெல்லிக்காய் மூட்டை போலென்று சொல்வோனைக் கண்டால், எல்லோரும் கைகட்டி சிரிப்பார்கள். இந்து தேசம் ஒரு தேவலோகத்துப் பலாப் பழத்தைப் போலாகி விட்டது. இனியென்றும் அழியாத பலாப் பழம். ஒவ்வொரு ஆரியனும் அதில் முளைத்தவன். நாம் எல்லோரும் சேர்ந்து அந்தப் பலாப்பழத்தின் மேல்தோல். உள்ளே ஞானச் சுளை.

நமக்கு அழிவில்லை, நமக்குள்ளே பிரிவில்லை. நாமொன்று. நாம் எப்போதும் தெய்வத்தையே நம்புகிறோம். தெய்வத்தை நம்பி நாம் அறத்தைச் செய்தால், நம்முடைய யோகக்ஷேமங்களை தெய்வம் ஆதரிக்குமென்று பகவத்கீதை சொல்லுகிறது.

(நன்றி: பாரதியார் கட்டுரைகள்)

Monday, April 16, 2007

சிறுபான்மை, பெரும்பான்மை, மனப்பான்மை

சமீபத்தில் உத்திரப் பிரதேச நீதிமன்றம் முஸ்லீம்கள் 18.5% அந்த மாநிலத்தில் உள்ளதால் அவர்கள் சிறுபான்மையினர் அல்ல என்று ஒரு அதிர்ச்சி வைத்திய தீர்ப்பை அளித்தது. வழக்கம் போல, முஸ்லீம் ஓட்டு வங்கியைக் குறிவைத்திருந்த முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரசுக்கு இது வயிற்றில் புளியைக் கரைத்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடுக்கப் போவதாக அவசர அவசரமாக அறிப்பு செய்தது எந்த முஸ்லீம் அமைப்பும் அல்ல, முல்லா முலாயமின் கட்சி! என்ன அக்கறை பாருங்கள்.

அதே நாளில் தெற்கே தமிழகத்தில் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆவன செய்யப் படும் என்று சட்டசபையில் தன் கரகர குரலில் கருணாநிதி அறிவிக்கிறார். ஏற்கனவே தமிழகத்தின் 69% அநியாய இட ஒதுக்கீட்டுக் கொள்கை உச்சநீதி மன்றத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பு! இட ஒதுக்கீட்டுக்குக் காரணம் - சிறுபான்மையினர்!

இந்த "சிறுபான்மை" என்ற லேபிள் எப்படி உண்மை நிலையை மறைத்து, திரித்து அரசியல்வாதிகள் தங்கள் ஓட்டுவங்கியை விருத்தி செய்து மக்களை ஏமாற்றவே பயன்படுகிறது என்று பார்ப்போம்.

சிறுபான்மை என்ற சொல் இந்தியா முழுதும் மொத்தமாக மத அளவில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்களைக் குறிப்பதற்காகவே பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. இந்த லேபிளால் அழைக்கப் படுபவர்கள் பாவப் பட்டவர்கள், கஷ்டப் படுபவர்கள், அவர்களை முன்னேற்ற பிரத்தியேக "சிறுபான்மை கமிஷன்" உண்டு என்ற கருத்துக்கள் ஆணி போல அறையப் பட்டிருக்கின்றன. ஆனால் இந்தக் குழுவில் வரும் சீக்கியர்கள் தான் இந்தியாவிலேய சராசரி தனிமனித வருமானம் (average per capita income) மிக அதிகமாக உள்ள சமூகக் குழு! எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்தும் செல்வத்தைப் பெருக்கும் பார்சிகள், ஜெயின்கள் ஆகிய குழுக்கள் தங்களுக்கு என்று எந்த சிறுபான்மை சலுகைகளையும் வேண்டிக் கேட்காதவை, இவற்றை பட்டியலில் இருந்து எடுத்து விட்டாலும் இந்த சமூகத்தினர் கண்டிப்பாக தெருவில் வந்து சண்டையிடப் போவதில்லை.

இன்னொரு சிறுபான்மைக் குழுவான கிறித்தவர்கள் கல்வி, வேலை மற்றும் பல மனிதவளக் குறியீடுகளில் முன் நிற்கின்றனர். பிரிட்டிஷாரால் இந்த நாட்டு மக்களிடமிருந்து பிடுங்கப் பட்ட நிலபுலன்கள், நிறுவனங்கள் போன்ற சொத்துக்கள் பலவற்றையும் சுதந்திரத்திற்குப் பின் ஜம்மென்று அனுபவிக்கும் உரிமையையும் பெற்று, இந்திய தேசம் வழங்கும் மத சுதந்திர உரிமைகளையும் அருமையாக துஷ்பிரயோகம் செய்து வெளிநாட்டு மிஷநரி நன்கொடைகளோடு வளப்ப வாழ்வு வாழும் வாய்ப்புகள் பல படைத்த சமூகக் குழு இது.

சச்சார் கமிட்டி அறிக்கைகள் தொடர்பான சர்ச்சைகளுக்குள் இறங்காமல் பார்த்தால், சராசரியாக முஸ்லீம்கள் பல குறியீடுகளில் இந்துக்களை விட அதிகமாகவும் (சராசரி வருமானம்), சிலவற்றில் சமமாகவும் (சராசரி கல்வியறிவு), சிலவற்றில் இந்துக்களை விடக் குறைவாகவும் (சராசரி பெண்கல்வி) வருகிறார்கள்.

மொத்தத்தில் பெரும்பான்மை என்ற பாரத்தை, பொறுப்புணர்வை, சிலுவையை சுமக்க வைக்கப் பட்டுள்ள இந்துக்கள் தான் இந்தியாவில் சராசரியாக எல்லா வளர்ச்சிக் குறியீடுகளிலும் பின் தங்கியுள்ளனர். அப்படியானால் யாருக்கு சலுகைகள் தேவை? யாருக்கு பொருளாதார உதவிகள் தேவை? ஊன்றுகோல்கள் ஓடி விளையாடுபவருக்குத் தேவையா தத்தித் தள்ளாடுபவருக்குத் தேவையா? "சிறுபான்மை" என்று அழைக்கப் படும் இந்த மதக் குழுக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சலுகைகள், இடஒதுக்கீடு வழங்குமானால் அது ஏற்கனவே பின்தங்கியுள்ள எல்லா சாதிகளையும் சேர்ந்த இந்துக்களிடம் இருந்து அவர்கள் வாய்ப்புகளைப் பறிப்பதாகத் தான் இருக்கும். இது ஒருவகையில் அநீதி.

ஏற்கனவே மத ரீதியான சிறுபான்மை என்ற இந்த சலுகையைப் பயன்படுத்தி கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் இந்த சமூகக் குழுக்கள் அரசு உதவியில் அல்லது அங்கீகாரத்தில் ஓடும் தங்கள் நிறுவனங்களை ஏதோ தங்கள் குழுக்களின் தனிச் சொத்து போல பாவித்து வருகின்றன. இவற்றின் கல்வி வாய்ப்புக்களை அரசு சமூகம் முழுமைக்கும் விரிவாக்க முயலும் போதெல்லாம் குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுகின்றன. இவற்றுக்கு முனைந்து அங்கீகாரம் வழங்கும் அரசு இந்துக்கள் (தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினராக இருந்தால் கூட) கல்வி நிறுவனங்கள் நடத்த முற்படுகையில் ஆயிரம் கேள்விகள் கேட்கப் பட்டு, முட்டுக் கட்டைகள் போடப் படுகின்றன. இதையும் மீறி பல இந்து கல்வி நிறுவங்கள் பெருமளவில் வளர்ந்திருப்பது ஒரு சாதனை தான்.

வளர்ச்சியை விடுங்கள், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களின் வாழ்வுரிமையே கேள்விக்குரியதாக உள்ளது. 1980களில் நடந்த திட்டமிட்ட இன அழிப்பில் காஷ்மீர் இந்துக்கள் தங்கள் சொந்த பூமியைவிட்டுத் துரத்தப் பட்டு தம் நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. திரிபுரா, மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் கிறித்தவர்களாக மாறிய பழங்குடியினர் சிறுபான்மையினராக உள்ள இந்துப் பழங்குடியினரை இதே ரீதியில் இன அழிப்பு செய்து வருகின்றனர். இத்தகைய இந்து சிறுபான்மையினரின் அவலத்தை எடுத்துரைத்தால் ஏளனம் தான் பதிலாகக் கிடைக்கிறது. என்ன கொடுமை!

மதம் தவிர, மற்ற பல வகையிலும், ஒவ்வொரு பிரதேசங்களிலும் மொழி, சாதி மற்றும் வேறு பல காரணங்களால் சிறுபான்மையினராகி அதன் காரணமாகவே அல்லலுறும் எத்தனையோ சமூகக் குழுக்கள் பற்றி தேசிய அளவில் பெரிய அக்கறை இல்லை. சொல்லப் போனால் சிறுபான்மையினர் பற்றிய நமது கண்ணோட்டம் ஒவ்வொரு மாநில அளவிலும், பிரதேச அளவிலும் இருந்து தானே தொடங்க வேண்டும்? பிராமணர்கள் தமிழகத்தில் சிறுபான்மை சாதியினர், அஸ்ஸாமில் வாழும் பீகாரிகள், மணிப்பூரில் வாழும் வங்காளிகள், திரிபுராவில் ஜமாத்தியாக்கள் இவர்கள் எல்லாரும் சிறுபான்மையினர் மட்டுமல்ல, அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஆதிக்க சக்திகளான பெரும்பான்மையினரால் ஏறி மிதித்து நசுக்கப் படுபவர்கள்! ஆனால் சிறுபான்மையினருக்கான எந்த உரிமைகளும், சலுகைகளும் ஏன் இவர்களுக்கு கிடைக்கவில்லை? யோசிக்க வேண்டிய விஷயம் இது.

பாரதம் போன்ற பல்வேறு வகைப்பட்ட சமூகச் சூழல்கள் வலைப் பின்னலாக நிலவும் நாட்டில், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பொதுப் படுத்துதலான குழு அடையாளங்கள் பெரும் குழப்பத்தையும், மயக்கத்தையும் தான் ஏற்படுத்துகின்றன. ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் "பெரும்பான்மை மனப்பான்மை" (majoritarion mindset) என்பது இப்படி அடையாளம் காணப்படும் இந்துக்களிடம் இருக்கிறதா? பல்வேறு வகையில் பிளவு பட்டுக் கிடக்கும், சகிப்புத் தன்மையின் இலக்கணமாகத் திகழும் இந்து சமுதாயம் பற்றி இப்படிச் சொல்வது குரூர நகைச்சுவை. காஷ்மீரில் வாழ்வுரிமை இழந்தவர்கள் இந்தப் "பெரும்பான்மை" மக்கள்!

"சிறுபான்மை மனப்பான்மை" (minority mindset) என்பது பொதுவாகக் குறைவாக இருக்கும் மக்கள் குழு எப்போதும் பாதுகாப்பின்மை பற்றிய உணர்வோடு வாழ்வது என்பதைக் குறிக்கும். ஆனால் இந்தியாவில் இந்தப் பெயரால் தங்களை அழைத்துக் கொள்ளும் கிறித்தவ, இஸ்லாமியக் குழுக்கள் தான் தாங்கள் ஓரளவு அதிகம் வாழும் இடங்கள் பலவற்றில் அராஜக, ஆதிக்க சக்திகளாக இருக்கின்றன. இத்தகைய இடங்களில் தங்களது குழு ஒற்றுமை காரணமாக பிளவு பட்டிருக்கும் இந்து சமுதாயம் மீது அதிகாரமும் செலுத்துகின்றன. அதே சமயம் தேசிய அளவில் "சிறுபான்மை" என்று கூக்குரல் இட்டு சலுகைகள் பெறவும் துடிக்கின்றன!

இந்த பொத்தாம் பொதுவான "மனப்பான்மை" வாதங்கள் பாரதத்தின் சமூக சூழலில் பொருள் இழக்கின்றன, நேர்மாறாகின்றன, குழம்பிப் போகின்றன.

நம் நாட்டிற்கு உண்மையான தேவை தனிமனித உரிமைகள் தான், எந்த குழுவுக்கான பிரத்தியேக உரிமைகளும் அல்ல. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு இவற்றுக்கான உரிமைகள். இவற்றை சரியாகப் பெறுபவர்கள் சிறுபான்மையினராக இருக்கும் நிலையை மாற்றி அவர்கள் பெரும்பான்மையினராக ஆகச் செய்வதே நாட்டின், அரசின், அரசியல் கட்சிகளின் கடமை.

The smallest minority on earth is the individual. Those who deny individual rights cannot claim to be defenders of minorities - Ayn Rand

"உலகில் எல்லாரையும் விட சிறுபான்மையானவன் தனிமனிதன் தான். தனிமனிதனுக்கான உரிமைகளை மறுப்பவர்கள் தங்களை சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று ஒருபோதும் அழைத்துக் கொள்ள முடியாது" - அயன் ராண்ட்

Saturday, April 14, 2007

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக் கவிதை

சித்திரையும் வந்தது நற்சீர்கள் கொண்டு
சிறுமைகள் பொசுங்கிடுக! சீலம் வெல்க!

இத்தரை மேல் மாந்தரெலாம் இன்னல் தீர்ந்து
இன்பங்கள் பல பெற்று இனிது வாழ்க!

"சத்துவ சன்மார்க்க வழி வாழ்வோர்க்கென்றும்
சத்தியமாய் வெற்றி தரும் சர்வஜித்து" -

தத்துவமாய் இஃதுரைக்கும் தமிழர் ஆண்டில்,
தமிழன்புக் கழுகரசன் கூறும் வாழ்த்து!

Thursday, April 12, 2007

இந்துமதம் பற்றி காந்திஜி கருத்துக்கள், காந்தி-ஈவேரா (கற்பனை?) உரையாடலின் பின்னணியில்

சென்ற திண்ணை (ஏப்ரல் 5,2007) இதழில் தாஜ் என்பவர், மிகவும் கஷ்டப் பட்டு தேடி எடுத்ததாகக் கூறி காந்திஜி மற்றும் ஈவேராவுக்கு இடையே நடந்த “சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த” உரையாடல் என்பதாக ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

முதலில் இந்த உரையாடலின் நம்பகத்தன்மை பற்றி நிறைய கேள்விகள் உள்ளன. காந்திஜியின் வாழ்க்கைக் குறிப்புக்கள், அவர் எழுதிய தொகுதி தொகுதிகளாக உள்ள நூல்களில் எதிலும் இது பற்றி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. காந்திஜியின் நூல்கள், அவர் வாழ்க்கை பற்றிய மற்ற முக்கிய நூல்கள் பலவும் உள்ள, மும்பை சர்வோதய மண்டல் அமைத்திருக்கும் http://www.mkgandhi.org/ இணைய தளத்தில் EVR, Ramasamy, Ramaswamy, Periyar போன்ற எந்தச் சொல் இட்டுத் தேடினாலும் ஒரு விடையும் கிடைக்கவில்லை.

இது பற்றி காந்திய இலக்கியத் தொகுப்பில் எந்த பதிவும் இல்லாத நிலையில், இந்த சந்திப்பின் காந்திஜி தரப்பு மிக மோசமாக பலவீனப்பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டு திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள, திரிக்கப்பட்ட பிரச்சார மலினம் இது என்றே தோன்றுகிறது. ஈவேராவின் பகுத்தறிவு சிஷ்யகேடிகள் இத்தகைய பிரசார மலினங்களை தொழில்முறை நிபுணத்துவத்தோடு செய்பவர்கள் என்பதால் இது இன்னும் உறுதியாகிறது.

இத்தகைய பின்னணியுடன் இந்த உரையாடலை நோக்கினால் கூட, எனக்கென்னவோ, காந்தி இந்த உரையாடலை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், ஒரு குழந்தையிடம் (உண்மையில், சமயம் ஆன்மிகம் சமூகம் பற்றிய எந்த சரியான புரிதலும் இல்லாத ஈவேரா என்ற கோமாளியிடம்), விளையாட்டாய் பேசுபவர்போலத்தான் கையாண்டுள்ளதாகத்தான் தெரிகின்றது. அவருடைய கட்டுரைகளில் இருக்கும் ஒரு தீவிரம், தெளிவு இந்த உரையாடலில் இல்லை. அவர் பேசியதாக வரும் கருத்துக்களும் வேறு பல இடங்களில் அவர் சொல்லியிருப்பதுடன் இயைவதாயில்லை.

காந்திஜியின் கருத்துகள் மாறிக்கொண்டிருந்தவை என்பது உண்மையே. அதனால் இங்கு மையமாகப் பேசப் பட்ட இந்துமதம் மற்றும் பிராமணர்கள் பற்றிய அவரது கருத்துக்களின் சில கீற்றுகளையாவது படித்தால் தான் இந்த விஷயத்தில் அவரது நிலைப்பாடு பற்றிய சரியான சித்திரம் கிடைக்கும்.

காந்தீய சூழலில் நான் வளர்ந்த எங்கள் வீட்டில் “கீதா மாதா” புத்தகத்தை மிக மரியாதையாக மேலே வைத்திருப்போம். அந்த புத்தகத்தை திறந்தவுடன் முதல் வரி: “கீதை எனக்கு வெறும் பைபிள் மட்டுமல்ல, வெறும் குரான் மட்டுமல்ல, ஞானத்தை வாரி வழங்கும் அன்னை” (கீதா மேரே லியே கேவல் பாய்பில் நஹி ஹை, கேவல் குரான் நஹி ஹை, வோ க்யானதாயினீ மாதா ஹை). இந்து மதம் பற்றி காந்திஜி கொண்டிருந்த பெருமிதத்திற்கு இந்த ஒரு வாசகமே சான்று.




“சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு இந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில், வேதங்கள், உபனிஷதங்கள், புராணங்கள் மற்றும் இந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். இப்பொழுது வழக்கில் உள்ள திரிக்கப் பட்ட மோசமான வடிவில் அல்லாமல், வேதங்களின் அடிப்படையில் மட்டும் உள்ள வர்ணாசிரம தர்மத்தை நான் மதிக்கிறேன். பசுப் பாதுகாப்பில் முழு நம்பிக்கை உண்டு. உருவ வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாமல் இல்லை”
- யங் இந்தியா, ஜூன் 10, 1921

“என் மதம் இந்து மதம். என்னைப் பொறுத்தவரை இது மனிதகுலத்தின் மதம், எனக்குத் தெரிந்த எல்லா மதங்களில் உள்ள ஆகச்சிறந்த கருத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய மதம்”

“கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன் அடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என் ஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது. மலைப்பிரசங்கத்தில் கிடைக்காத ஆறுதல் கீதையிலும், உபநிஷதங்களிலும் எனக்குக் கிடைக்கிறது. மலைப் பிரசங்கத்தில் உள்ள ஒரு ஆழ்ந்த கருத்து தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதல்ல. ஆனால் மனம் திறந்து சொல்கிறேன் : எப்போது ஐயங்கள் என்னை அச்சுறுத்துகின்றனவோ, ஏமாற்றங்கள் என் முகத்தில் அறைகின்றனவோ, தொடுவானில் ஒரு ஒளிக் கீற்றாவது தோன்றும் சாத்தியம் கூட இல்லாது போகிறதோ, அந்தத் தருணத்திலும் கீதையிடம் வருகிறேன், என் மனத்திற்கு அடைக்கலம் தரும் ஒரு சுலோகத்தைக் காண்கிறேன். கட்டுப் படுத்தமுடியாத அந்தத் துயரத்திற்கு நடுவிலும் புன்னகைக்கத் தொடங்குகிறேன். என் வாழ்க்கை முழுவதும் புறத் துயரங்களால் சூழப் பட்டிருந்தும், அவை என்மீது எந்த காயத்தையும், வடுக்களையும் ஏற்படுத்த முடிவதில்லை என்றால், கீதையின் மகத்தான உபதேசங்களுக்குத் தான் இதற்காகக் கடமைப் பட்டுள்ளேன்”
- யங் இந்தியா, 6-8-1925, p274.

“எனது அச்சம் இது தான் – இந்து மதம் பொய் என்று இப்போதைக்கு கிறித்தவ நண்பர்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் அவர்களது மனதில் இந்துமதம் தவறானது, தாங்கள் நம்பும் கிறித்தவ மதமே உண்மை என்ற எண்ணங்களை வளர்த்து வருகிறார்கள். இப்போது நடக்கும் கிறித்தவ (மதமாற்ற) முயற்சிகளையெல்லாம் பார்க்கும்போது, இந்துமதத்தின் அடிப்படையை வேரறுத்துவிட்டு அங்கு வேறு ஒரு மதத்தை நிறுவப் பார்ப்பது தான் அவர்களது நோக்கம் என்பது புரியும்” – ஹரிஜன், மார்ச் 13, 1937.

“என்னிடம் மட்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்தால், எல்லா மதமாற்றங்களையும் நிறுத்தி விடுவேன். இந்து குடும்பங்களில் ஒரு மிஷநரியின் வருகை என்பது குடும்பத்தைக் குலைக்கும் செயல்; உடை, ஒழுக்கம், மொழி, உணவு உள்பட கலாசாரத்தையே மாற்றும் செயல் என்றே ஆகிவிட்டிருகிறது”- ஹரிஜன், நவம்பர் 5, 1935.

இந்துமதம் பற்றிய காந்திஜியின் பல கருத்துக்களுக்கும், பார்க்க: http://www.mkgandhi.org/epigrams/h.htm

இதே போன்று, பிராமணர் பற்றியும் காந்திஜி பலவிதமான கருத்துக்களைக் கொண்டிருந்தார்.

“பிராமணர்களின் அழிவில் பிராமணரல்லாதார் உயர்வதை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்” - காந்திஜி படைப்புகள் தொகுப்பு, XXVI-331

“பிராமணீயத்தின் மீது நான் பெருமதிப்பு கொண்டுள்ளேன் – இதன் மூலம் தானாகவே ஏற்றுக் கொள்ளும் வறுமையையும், தெய்வீக அறிவுத் தேடலையும் தலைமுறை, தலலமுறையாக ஒரு குழு பின்பற்றுகிறது அல்லவா?” - டி.ஜி. டெண்டுல்கரின் “மகாத்மா”, 3-195

“பிராமணர்களிடத்தில் வேண்டுமானால் உங்கள் கோபத்தைக் காட்டுங்கள். ஆனால் ஒருபோதும் பிராமணீயத்தின் மீது அல்ல” - டி.ஜி. டெண்டுல்கரின் “மகாத்மா”, 2-283.

பிராமணர், பிராமணீயம் பற்றிய காந்திஜியின் பல கருத்துக்களுக்கும், பார்க்க: http://www.mkgandhi.org/epigrams/b.htm

“இந்து மதத்திலும், இந்திய கலாசாரத்திலும் சாதி முதலிய சீர்கேடுகளைத் தவிர வேறு என்ன உள்ளது?” என்று இங்கே ஈவேரா கேட்டது போலக் காழ்ப்புணர்ச்சியுடன் கேட்பவர்களை காந்திஜி கடுமையாக விமர்சித்திருக்கிறார். இத்தகைய கருத்துக்கள் கொண்டு பின்னாளில் வெளிவந்த பல நூல்களுக்கு முன்னோடியான கேதரின் மாயோவின் “மதர் இந்தியா” (1927) பற்றிய கருத்தைக் கேட்ட போது “சாக்கடையை நோண்டுபவரின் பதிவு” (Drain Inspector's Report”) என்ற ஒரே சொல்லால் அதனை நிராகரித்தார். ஈவேரா எழுதிய எந்தப் புத்தகத்தைக் காட்டியிருந்தாலும், காந்திஜி கண்டிப்பாக இதையே தான் கூறியிருப்பார் , சந்தேகமில்லை. வரலாற்றில் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது, அவ்வளவு தான்.

மொத்தத்தில், “ஆ காந்தியையே மடக்கறாரு நம்ம பெரியாரு” என்று கழகக் கண்மணிகளின் சுய புல்லரிப்புக்கும், இன்னொரு சுய ஏமாற்றத்திற்கும் அல்லாது வேறு எந்த உருப்படியான விஷயமும் இந்த உரையாடலில் இல்லை என்றே கூற வேண்டும்.

இது பற்றிய நண்பர் அருணகிரியின் திண்ணைக் கட்டுரை மிக அழகாக எழுதப் பட்டுள்ளது. ஈவேரா வைத்ததாகக் கூறப் படும் கேள்விகளைக் கேள்வி கேட்கிறது. அதையும் படித்துப் பாருங்கள்.

Tuesday, April 10, 2007

தலித் கிராமத்தில் தங்கினார் திருப்பதி பெருமாள்!

காலம் காலமாக வழக்கில் இருந்த வீண் சம்பிரதாயத்தை உடைத்தெறிந்து விட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ஸ்ரீநிவாச கல்யாண வைபவம், நேற்று திருப்பதியிலிருந்து 12 கிமீ. தூரத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வேமூரு என்ற தலித் கிராமத்தில் நடந்தேறியது. திருமலை சுற்றுப் புறங்களில் உள்ள தலித் கிராமத்தில் பெருமாள் உலா வருவது இதுவே முதல் முறை என்று கூறப் படுகிறது.

(செய்தி : இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கன் க்ரோனிக்கில்)

வழக்கமாக கல்யாண உத்சவங்களில் எழுந்தருளும் உற்சவ மூர்த்திகள் இந்த கிராமத்தின் எல்லா தெருக்களிலும் உலா வந்தனர். கிராமம் முழுவதிலும் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பெரும் ஆரவாரத்துடனும், ஆர்வத்துடனும் பெருமாளை வழிபட்டனர். நேற்றிரவு கிராமத்தில் அமைக்கப் பட்ட விசேஷ பந்தலில் பெருமாள் தங்கினார், விசேஷ பூஜைகள், பஜனைகள் நடந்தேறின. வழக்கமாக வி.ஐ.பிக்கள் மற்றும் பிரமுகர்களுக்கென்று நடத்தப் படும் "வேத ஆசிர்வாதம்" என்ற நிகழ்ச்சியும் இந்த கிராமத்தில் செவ்வாய்க் கிழமை நடத்தப் படும் என்றும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வரும் திரு. கருணாகர ரெட்டி கூறினார்.




"உண்மையான சனாதன தர்மமும், வேத நெறியும் சாதி வேறுபாடுகளுக்கு எதிரானவை, இதை நடைமுறையில் உணர்த்தவே நாங்கள் முனைந்து இத்தகைய உற்சவத்தை நடத்துகிறோம்" என்று தேவஸ்தான அதிகாரி குறிப்பிட்டார். தலித் மக்களுக்காக "தலித கோவிந்தம்" என்றொரு திட்டத்தையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெரிய அளவில் செயல் படுத்தப் போவதாகவும் அவர் கூறினார். சமய, ஆன்மிக விழிப்புணர்வோடு, தலித் மக்களுக்கு உதவு புரியும் வகையில் கல்வி, சுகாதார சேவைகளையும் இந்தத் திட்டம் எடுத்துச் செல்லும் என்று எதிர்ப்பார்ப்போம்.

ஆந்திராவின் கிராமப் புறங்களில் கிறித்தவ மதமாற்றம் வெறித்தனமான அலவில் நடந்து வருகிறது. திருமலைக்கு உள்ளேயே சர்ச் கட்ட மிஷநரிகள் திட்டம் தீட்டியதும், ஆந்திர முதல்வர் ஒய். சாமுவேல் ராஜசேகர ரெட்டி கோவில் சொத்துக்களை கிருத்துவ மிசநரிகளுக்கு தாரை வார்க்கும் விஷயங்களும் (பார்க்க திண்ணை கட்டுரை) சில காலம் முன்பு அம்பலப் படுத்தப் பட்டன. இத்தகைய சூழலில் இந்துக் கோயில்களும், ஆன்மிகத் தலைவர்களும் முனைப்புடன் செயல்பட்டு தலித்களுக்கு சமூக அங்கீகாரங்களை வழங்கி, அவர்கள் முன்னேற்றத்திற்குத் துணைபுரியும் செயல்களில் ஈடுபடுவது மிக முக்கியமானது.




".. சண்டாள வாருலகு சரி பூமி ஒகடே" (பிராமணன் வாழ்ந்து மடிவதும் இந்த ஒரே பூமி தான், சண்டாளனுடையதும் இந்த ஒரே பூமி தான்) என்று பாடிய வேங்கடவனின் தலைசிறந்த பக்தர் அன்னமாச்சாரியார் என்று அழைக்கப் படும் அன்னமய்யாவுக்கு (இவரும் தலித் சமூகத்தை சார்ந்தவரே) செலுத்தும் உண்மையான காணிக்கையும், அஞ்சலியும் இதுவாகவே இருக்கும்.

பாதியாய் அழுகிய கால் கையரேனும்
பழிகுலமும் இழி தொழிலும் படைத்தோரேனும்
ஆதியாய் அரவணையாய் என்பாராகில்
அவரன்றோ யாம் வணங்கும் அடிகளாவார்
சாதியொழுக்கத்தால் மிக்கோரேனும்
சதுர்மறையால் வேள்வியாற் றக்கோரேனும்
போதில் நான்முகன் பணியப்பள்ளி கொள்வான்
பொன்னரங்கம் போற்றாதார் புலையர்தாமே

- திருவரங்கக் கலம்பகம்

Monday, April 09, 2007

கடவுளின் கண்..

இந்தப் புகைப் படத்தைப் பாருங்கள். அழகிய, செவ்வரியோடிய, கருமையும் நீலமும் அடர்ந்த விழி....?




".. கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய்" என்ற தேவாரத்தை நினைவூட்டும் இந்தப் படம் ஹெலிக்ஸ் நெபுலா என்னும் விண்வெளிப் பொருளின் காட்சி.

உலகின் கண் (ஜகத்-சக்ஷு) என்று சூரியனை வேதம் போற்றுகிறது. ஒருநாள் நம் சூரியனும் இப்படி ஆகலாம்! ஆம், சூரியன் போன்ற பெரிய நட்சத்திரம் ஒன்றின் வாழ்க்கை முடியும்போது உருவாகிய தூசியும், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களும், பிளாஸ்மாவும் கலந்த ஒரு விண்வெளி மேகத் திரள் (interstellar cloud) தான் இந்த பெரிய நெபுலா வகை! ஒரு முடிவில்லாத ஹெலிக்ஸ் வளையம் போன்று தோற்றம் தருவதால் இந்தப் பெயர்.

டெக்னிக்கலாக இது ஒரே புகைப்படம் அல்ல. நாசாவின் விண்வெளியில் சுற்றும் ஹப்பிள் டெலெஸ்கோப் மற்றும் பூமியில் இருந்து படமெடுக்கும் டெலெஸ்கோப் இவை பல கோணங்களில் எடுத்த புகைப் படங்களைக் கொண்டு கட்டமைக்கப் பட்ட நெபுலாவின் கோலம். ஒரிஜினல் புகைப்படத்தில் கொஞ்சம் வண்ணங்கள் அடர்த்தியாய்த் தீற்றி டச் அப்பும் செய்யப்பட்டுள்ளது.

அண்ட வெளியின் அழகுகளுக்கும், ஆச்சரியங்களுக்கும் அளவே இல்லை!

மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்
வான்கண் உள்ள வெளியைச் செய்தாள்
வாழி நெஞ்சில் களியைச் செய்தாள்!

- மகாகவி பாரதி ("மகா சக்தி" என்ற பாடல்)

இந்திய நாணயங்களின் உண்மை மதிப்பு..

சமீபகாலமாக மும்பை, கல்கத்தா போன்ற நகரங்களில் 1,2 ரூபாய் நாணயங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதை ரிசர்வ் வங்கி துருவிப் பார்த்த போது மக்கள் நாணயத்தைப் பயன்படுத்துவதை விட அதை உருக்குவதில் அதிக லாபம் இருக்கிறது என்பதைத் தாங்களாவே கண்டறிந்ததைக் கண்டறிந்தது!

அதாவது இந்த நிக்கல் நாணயங்களின் பண மதிப்பை (face value) விட அவற்றில் உள்ளிருக்கும் உலோகத்தின் மதிப்பு (intrinsic value) ஒரு 15-20% அதிகம் என்கிறார்கள் - இரண்டு ரூபாய் நாணயத்தில் தான் அதிகபட்ச லாபம். அதனால் இவற்றை நிறுத்திவிட்டு இரும்பு எஃகில் நாணயம் தயாரிக்கலாமா என்று இந்திய நாணய அமைப்பு யோசித்து வருகிறதாம்.

வழக்கம் போலவே, இந்திய அரசுக்கு முன்பாக இதைக் கண்டுபிடித்து விட்ட இந்திய பொதுஜனத்திற்கு ஒரு சபாஷ்!

நன்றி : தி எகனாமிக் டைம்ஸ் செய்தி

Friday, April 06, 2007

ஸ்ரீகுருஜி கோல்வல்கர் - 2

ஸ்ரீகுருஜி பற்றிய சில தகவல்களை சென்ற பதிவில் அளித்திருந்தேன். ஸ்ரீகுருஜி மற்றும் இந்துத்துவம் பற்றி சில கேள்விகளை ராஜ்வனஜ் தமிழ்ப் பதிவுகளில் எழுப்பியுள்ளதாகக் கேள்வியுற்று போய்ப் பார்த்தேன். கந்தைப் பழைய, செல்லாக் காசான அவதூறுகளைத் தூசி தட்டி எடுத்திருக்கிறார்.

இந்துத்துவம் என்ற அரசியல், சமூக கருத்தியல் மட்டுமல்ல, இந்துமதம், இந்துப் பண்பாடு பற்றியே மோசமான, எதிர்மறைப் பார்வைகள் கொண்ட நிலைப்பாடு இவர் போன்ற ஆசாமிகளுடையது.. ஸ்டாலின் போன்ற மனிதகுல எதிரிகளான சர்வாதிகாரிகளை இன்றும் ஆராதனை செய்து வருபவரிடம் குருட்டுத் தனமான பாசிச சிந்தனை தவிர வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்?

1. நாஜி, ஹிடலர் பற்றி குருஜி கருத்துக்கள்

1939-ல் சங்கத் தலைவர் ஆவதற்கு முன்பு "ஒரு கன்னி முயற்சி" என்று குருஜி கோல்வல்கரே குறிப்பிட்டு எழுதிய "We the nationhood" புத்தகத்தில் இருக்கும் ஜெர்மனி, ஹிட்லர் பற்றிய ஒரு பாரா மேற்கோளை வைத்து சீதாராம் யெச்சூரியும், என். ராமும் 90-களில் குருஜியின் இந்துத்துவ ரோல் மாடல் ஹிட்லர் என்பதாகக் கட்டிவிட்ட ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் மிகக் குறுகிய காலம் வாழ்ந்தது, அப்போதே அம்பலப் படுத்தப் பட்டும் விட்டது.

we the nationhood என்ற இந்த நூலின் கடைசி பதிப்பு 1947-ல் வந்தது, அதன் பிறகு சங்கமும், குருஜியுமே ஒப்புதல் அளித்து இந்த நூல் முழுதுமாகத் திரும்பப் பெறவும் பட்டது.

இது ஒரு கீழ்த்தரமான மேற்கோள் மோசடி (கொஞ்சம் நாகரீக மொழியில் quote mining) தவிர வேறொன்றுமில்லை. குருஜி பற்றிய விக்கிபீடியா பக்கத்திலேயே பேராசிரியர் கொன்ராய்ட் எல்ஸ்ட் இந்த மோசடி பற்றி எழுதிய Was Guru Golwalkar a Nazi என்ற கட்டுரையின் சுட்டி உள்ளது.

.. Such attacks have been debunked by Koenraad Elst as politically motivated misrepresentations and quote mining. He asserts that discussion of this quote must be made in the proper context and that Golwalkar never endorsed the actions of the Nazi regime:[2]

"Note that Golwalkar's text mentions "racial purity" as Germany's concern but does not "make a plea" for it, and that he never described Hitler as "a source of inspiration.That alleged Golwalkar quotations turn out to be excerpted from the invective of his critics, is symptomatic of Hindutva-watching in general: first-hand information is spurned in favour of hostile second-hand claims made by unscrupled commentators. In most journalistic and academic publications on Hindutva, the number of direct quotations is tiny in comparison with quotations from secondary, hostile sources... If we do not just focus on the selected quotation (as we are led to do by those who made the selection in the first place), but read the whole book, we find that Golwalkar is definitely not asking the Hindus to emulate Nazi Germany."
[2]

He further asserts that Hindutva groups have largely renounced the book where such quotes were made, including Golwalkar himself. It hasn't been published since 1948 and that basically, it is a tool to vilify/ harass those who subscribe to Hindutva.[3][4]

இது பற்றிய முழு அலசலையும் பேரா. எல்ஸ்டின் மேற்குறிப்பிட்ட கட்டுரையில் காணலாம். குறிப்பாக இந்த புத்தகம் முதலில் வந்த 1930-களிலும் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் ஹிட்லர், ஜெர்மனி பற்றிய கருத்துக்கள் இப்படித் தான் இருந்தன என்று குறிப்பிடும் எல்ஸ்ட், இதன் பிறகு ஆர்.எஸ். எஸ். இயக்கத்தின் எந்த நூலிலும் நாஜிகள் பற்றிய எந்தக் குறிப்புமே இல்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

குருஜி ஹிட்லரை அழிவு சக்தியாகவே கண்டார். இதைப் பல இடங்களிலும் கூறியுள்ளார். உதாரணமாக, The Christians committed all sorts of atrocities on the Jews by giving them the label “Killers of Christ”. Hitler is not an exception but a culmination of the 2000-year long oppression of the Jews by the Christians."[5]

யூதர்கள் தங்கள் தேசிய அடையாளத்தை முன்னிறுத்தும் முகமான Zionist இயக்கங்களையும், இஸ்ரேலின் உருவாக்கத்தையும் குருஜி புகழ்ந்தார் -
"The Jews had maintained their race, religion, culture and language; and all they wanted was their natural territory to complete their Nationality"[6]

சொல்லப் போனால், இடதுசாரி முகாம்கள் கூட இந்த வாதங்களை இப்போது மூட்டை கட்டி விட்டன. அண்மையில் 'தி இந்து' நடுப்பக்கத்தில் வந்த ஒரு வழக்கமான இந்துத்துவ விரோத அர்ச்சனை ஒன்றில் ராமச்சந்திர குஹா இந்தப் பழைய அவதூறூகளைப் பற்றி மூச்சுக் கூட விடவில்லை. குருஜி பேசியது மனுவாதம், பிராமணீயம் என்று புது டிராக்கில் வசவுகளைத் தொடங்கியிருக்கிறார்!

சுவாமி விவேகானந்தரது இஸ்லாம் பற்றிய கருத்துக்களை எழுதிய என் பதிவில், அவர் கூறிய எதிரெதிர் கருத்துக்களையும் நான் கொடுத்திருந்தேன் என்பதை இங்கு நினைவு கூர வேண்டியிருக்கிறது. ஆனால், கூகிளில் தட்டினால் உடனே கிடைக்கக் கூடிய ஒரு விடையைப் பற்றிக் கூட யோசிக்காமல், மிகப் பழைய பொய்களை இவர்கள் சுழற்சி செய்கிறார்கள்! இந்த எல்லா விவாதங்களும் குருஜி பற்றிய விக்கிபீடியா பக்கத்திலேயே இருக்கிறதே. இதைக் கூட பார்க்க மறுக்கும், அறிவு சார் நேர்மை இல்லாத ராஜ்வனஜ், தில் இருந்தால் பதில் சொல்லுங்கையா ஆ ஊ என்று சவடால் விடுவதைப் பார்க்கும்போது சிரிப்புத் தான் வருகிறது.




2. இந்துக்கள் அல்லாத மாற்று மதத்தினர் பற்றி குருஜி கருத்து:

இதுபற்றிய அவதூறும் இணையம் உட்பட பல தளங்களில் தீவிரமாக விவாதிக்கப் பட்டு இன்னொரு வகையான மேற்கோள் மோசடி என்று புறந்தள்ளப் பட்டு விட்டது.

சர்ச்சைக்குரிய மேற்கோளின் உண்மை வடிவம் (எல்ஸ்ட் கட்டுரையில் இருந்து) :

"From this standpoint, sanctioned by the experience of shrewd old nations, the foreign races in Hindusthan must either adopt the Hindu culture and language, must learn to respect and hold in reverence Hindu religion, must entertain no idea but those of the glorification of the Hindu race and culture, i.e. of the Hindu nation, and must lose their separate existence to merge in the Hindu race; or may stay in the country, wholly subordinated to the Hindu Nation, claiming nothing, deserving no privileges, far less any preferential treatment -- not even citizen's rights." (We, p.47-48/p.55-56)

ஆனால், இதை ராஜ்வனஜ் இவ்வாறு எடுத்துரைக்கிறார் -

"ஜெர்மானிய தேசிய எழுச்சியின் மூலமாக நமக்குக் கிடைத்த அனுபவம் சொல்வது என்னவென்றால், இந்நாட்டில் வாழும் இந்துக்களல்லாதவர்கள் கட்டாயமாக இந்து கலாச்சாரத்தையும், மொழியையும் ஏற்றுக் கொள்ளவதோடு இந்து மதத்தை மதிக்கவும் வேண்டும். இந்த நாடு இந்து நாடு என்பதை அல்லாது வேறொன்றையும் அவர்கள் ஆதரிக்கக் கூடாது. இந்த பூமியின் பழமையான கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்வதோடு இதன் மேல் ஆழமான அன்பும் பக்தியும் செலுத்த வேண்டும். ஒரே வார்த்தையில் சொல்வதானால்; ஒன்று அவர்கள் அந்நியர்களாக விலகிவிடவேண்டும் அல்லது இந்து தேசியத்திற்கு உட்பட்டு அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும்"

இதில் ஜெர்மானிய எழுச்சி பற்றி எங்கே வருகிறது? அந்த நூலில் 20 பக்கங்களுக்கு முன்பே அந்த ஜெர்மனி பற்றிய மேற்கோள் முடிந்து விட்டது! இந்த மேற்கோள் பற்றிய மிக விரிவான அலசலும் மேற்குறிப்பிட்ட எல்ஸ்ட் கட்டுரையுல் உள்ளது. இந்த மேற்கோள் கண்டிப்பாக "இன அழிப்பு" என்பது பற்றி பேசவில்லை என்று எல்ஸ்ட் அறுதியிட்டுக் கூறுகிறார்.

.. The single oftest-quoted Hindutva statement in the whole Hindutva-watching literature is definitely the first one quoted above from Golwalkar's We, about non-Hindus being requested to "glorify" the Hindu culture, and otherwise "stay in the country" though "without privileges, not even citizen's rights". While certainly open to criticism, the meaning of this passage is by no means as terrifying and inhuman as the critics insinuate.

It has nothing to do with genocide or ethnic cleansing, for it says explicitly that the non-Hindus "may stay in the country". Further, it says that the religious minorities must "not claim any privileges", something with which any democrat and secularist would wholeheartedly agree: privileges on the basis of creed are against the equality principle which is fundamental to the law system of a modern state. It is one of the absurdities of Indian "secularism" that it contains a number of communal inequalities in law:

இதைத் தொடர்ந்து மதச்சார்பின்மை என்ற பெயரில் அரசியல் கட்சிகள் ஓட்டு வங்கிக்காக செய்து வரும் இஸ்லாமிய, கிறிஸ்தவ மத சலுகைகள் அனைத்தையும் பட்டியல் இடுகிறார் எல்ஸ்ட். சொல்லப் போனால் இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் எப்படி திம்மிகளாக (zimmi) வரி செலுத்தி அடிமைகளாக வாழவேண்டும் என்பது குறித்து ஷரியத் சட்டங்கள் கூறும் மிகக் கொடுமையான கருத்தாக்கங்களுக்கு முன்னால், குருஜியின் இந்த மேற்கோள் மிக மிக மென்மையானது தான். not even citizens rights என்று இங்கு குறிப்பிடுவது உட்பட.

ஆர். எஸ். எஸ். இயக்கத்திற்கு இப்போது 81 வருட வரலாறு உள்ளது. ஆனால் எந்தவிதமான உறுதியான, தொடர்ச்சியான ஆதாரங்களும் இல்லாமல் அதை எழுதிய ஆசிரியராலேயே திரும்பப் பெறப்பட்டுவிட்ட ஒரு பழைய நூலில் இருக்கும் ஒன்றிரண்டு மேற்கோள்கள் தான் அதன் கொள்கையைப் பிரதிபலிக்கிறது என்று திரும்பத் திரும்பக் கூக்குரல் இடுவது இந்துத்துவத்தை எப்படியாவது ஒரு "அரக்கத் தனமுள்ளதாக" சித்தரிக்க வேண்டும் என்ற இந்து விரோதிகளின் பரிதவிப்பையே காட்டுகிறது.



சங்க நிறுவனர் டாக்டர் ஹெக்டேவார் நூற்றாண்டு விழாவின் போது வெளியிடப்பட்ட தபால் தலை

3. சுதந்திரப் போராட்டம்:

சங்கம் சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரசுடன் தோளோடு தோள் நின்று போராடியது. சங்க நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் நாக்புர் காங்கிரஸ் தலைவராகவே பணியாற்றியிருக்கின்றார். இந்த காலகட்டத்தில் சிறு குழந்தையாக வளர்ந்து வந்த சங்கத்தின் பொறுப்பை அப்பாஜி ஜோஷி என்ற தலைவரிடம் ஒப்படைத்து விட்டு, 1931 ஒத்துழையாமை இயக்கத்தில் டாக்டர்ஜி நேரடியாகப் பங்கு கொண்டு சிறை சென்றார். 1934-ல் வார்தாவில் நடைபெற்ற சங்க பயிற்சி முகாமுக்கு மகாத்மா காந்திஜி வருகை புரிந்து, சாதி வித்தியாசம் பார்க்காமல் அனைத்து இளைஞர்களும் அங்கு ஒன்றுபட்டு பழகுவதைப் பாராட்டியும் இருக்கின்றார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் சங்க ஸ்வயம்சேவகர்கள் நேரடி பங்கு கொண்டனர்.

ஆனால், பிரிட்டிஷாருக்கு எதிரானது என்ற ஒரே புள்ளியை மட்டுமே லட்சியமாகக் கொள்வதுடன் ஆர்.எஸ்.எஸ். ஒப்பவில்லை. காங்கிரசுக்கு தனது முழு ஆதரவையும் சுதந்திரப் போராட்ட காலத்தில் அளித்து வந்த டாக்டர்ஜி, "இந்துக்கள் ஒரு வலிமை வாய்ந்த தேசத்தை, சமூகத்தைக் கட்டியமைக்காத பட்சத்தில், பிரிட்டிஷாரை வெளியேற்றி விட்டால் நாம் சுதந்திரமாக, ஒரே தேசமாக இருப்போம் என்பதற்கு என்ன உத்தரவாதம்?" என்ற கேள்வியையும் எழுப்பினார். இந்தப் புள்ளியில் தான் இந்துத்துவம் காங்கிரசில் இருந்து வேறுபட்டது.

4. இந்துத்துவம் என்ற கலாசார தேசியத்தின் முழு வடிவம்

ராஜ்வனஜ் கூறுகிறார் : .. அது மட்டும் இல்லாமல் இப்போது அந்த சமயத்தில் சுதந்திரப் போராட்டத்தில் தியாகங்கள் பல செய்த தலைவர்களை, போராட்டக்காரர்களை சுவீகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். மிகச் சரளமாக பகத்சிங்க், சுகதேவ், ராஜகுரு, ஆஸாத் போன்ற புரட்சியாளர்கள் படங்களைக் கூட அவர்கள் நிகழ்ச்சியகளில் பயன்படுத்துகின்றனர்.. இவர்கள் தவறாமல் பாடும் 'ஏகாத்மதா ஸ்தோத்திரம்' என்னும் பாடலில் குறிப்பிடப்படும் தலைவர்களில் ஹெட்கேவாரும், கோல்வால்கரும் தான் இவர்கள் அமைப்புடன் தொடர்புடைய விடுதலைப் போராட்ட காலத்தில் வாழ்ந்த தலைவர்கள்.

இதில் ஏன் வயிற்றெரிச்சல் படவேண்டும்? இந்த தேசத்தின் நன்மைக்காகப் பாடுபட்ட எல்லா வீரர்களையும், தலைவர்களையும் இந்துத்துவம் போற்றுகிறது. ஏனென்றால் இயல்பாகவே இந்த தியாகிகளைப் போற்றும் உணர்வு இந்துத் துவத்தில் இருக்கிறது, அதனால் "சுவீகாரம்" தேவையில்லை.

ஆனால் உங்களுக்கு அது கண்டிப்பாக உபயோகப் படலாம். சுவாமி விவேகானந்தர் இந்திய தேசியத்தின் எழுச்சி நாயகர் - அவர் இந்திய மக்கள் அனைவருக்கும் உரியவர் தான். அவர் படத்தை ஏன் இடது சாரிகள் தங்கள் கூட்டங்களில் வைக்கக் கூடாது? ஒரு சம்பிரதாயத்திற்காகக் கூட இந்த "சுவீகாரத்தை" செய்ய மறுக்கும் இந்திய தேசிய விரோதிகளுக்கு இந்துத்துவம் பற்றி பேசவே அருகதை இல்லை என்பேன்.

சங்கம் தேசத் தலைவர்களை இப்படி "முகாம்" பார்த்து தெரிவு செய்வதில்லை, அதற்கு அவசியமும் இல்லை. அதனால் தான் ஏகாத்மதா ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரரும் இருக்கிறார், அம்பேத்கரும் இருக்கிறார். வனவாசித் தலைவர் பிர்சா முண்டாவும் இருக்கிறார், காந்திஜி இருக்கிறார், முஸ்லீம் கவிஞர் ரஸ்கான் இருக்கிறார், அயர்லாந்தில் பிறந்து பாரதத்திற்காகவே வாழ்ந்து மடிந்த சகோதரி நிவேதிதா இருக்கிறார். பார்சி தாதாபாயும், கண்ணகியும், வள்ளுவரும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், துகாராமும், நாராயண குருவும் எல்லாரும் இருக்கிறார்கள். இதுதான் இந்திய கலாச்சாரத்தின் உண்மையான பிரதிபலிப்பு! இது தான் இந்துத் துவம். (மேலும் பார்க்க, என் திண்ணைக் கட்டுரை கண்ணகி சிலை விமரிசனங்களில் ஏன் இந்து விரோதக் காழ்ப்புணர்ச்சி?)

தேசபக்தி என்ற இந்த உள்ளுணர்வு சிறிதும் இல்லாமல், தேசிய உணர்வு பேணும் இயக்கங்களைக் கிண்டல் செய்யும் வெட்கம் கெட்ட தனம் தான் குருஜி பற்றிய இத்தகைய விமரிசனங்களில் தெரிகிறது.

Thursday, April 05, 2007

ஸ்ரீகுருஜி கோல்வல்கர் - 1

இந்து சமுதாயம் முழுவதும் ஒன்றிணைந்து, சென்ற வருடம் துவங்கி மார்ச்-2007 வரை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இரண்டாவது தலைவர் ஸ்ரீகுருஜி கோல்வல்கர் நூற்றாண்டு விழாவை "சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்க விழாவாக" நாட்டின் பல பகுதிகளில் அனுசரித்தது. லட்சக் கணக்கான மக்கள் பங்கு கொண்ட ஆயிரக்கணக்கான சேவை முகாம்கள், கருத்தரங்குகள், எல்லா சாதி மக்களும் வேற்றுமை மறந்து தங்கள் இந்து அடையாளத்தை முன்னிறுத்தி கொண்டாடிய சமூக விழாக்கள் இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் பரவலான வெகுஜன் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கின்றது.

கோல்வல்கர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஆர்.எஸ்.எஸ் மாநில அளவில் ஏற்படுத்திய குழுவில் இசைஞானி இளையராஜா, கவிஞர் வாலி, தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் ஆர். அன்பழகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் காந்தி, , தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் இ.ஆர்.குமாரசாமி, கோவை சிறுதுளி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வனிதா மோகன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, பிரபல எழுத்தாளர் பிரேமா நந்தகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ஆர். எஸ். எஸ்ஸையும் கோல்வல்கரையும் நன்கு அறிந்து கொண்டவர்கள். அதனால்தான் கோல்வல்கர் நூற்றாண்டு விழாக் குழுவில் மகிழ்ச்சியோடு இடம்பெற்றார்கள்.



குழந்தை முருகன்கள், பின்னணியில் குருஜி


தீவிரவாதம், பொருளாதார முன்னேற்ற சவால்கள், சாதிப்பூசல்கள் போன்ற பல பிரசினைகள் நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் இந்தச் சூழலில் இந்திய தேசியம், இந்துத்துவம், சமுதாய ஒற்றுமை இந்தக் கருத்துக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒரு மாபெரும் தலைவரின் நினைவும், கருத்துக்களும் இந்த சவால்களை நாம் உறுதியுடன் எதிர்கொள்ள உதவும். அதனால், இவை வெறும் கொண்டாட்டங்கள் மட்டும் அல்ல.
குருஜி ராமகிருஷ்ண மடத்தில் தங்கி பயின்று ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி அகண்டானந்தரிடத்தில் சன்னியாச தீட்சை பெற்றவர். தமது குருவின் ஆணைப்படியும், முழு அனுமதியுடனும், ஆசியுடனுமே அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்தார். குருஜி கோல்வல்கரின் ஆன்மிக சிந்தனையும், பரந்த உள்ளவும், சேவை மனப்பான்மையும் அவரது குருநாதராலேயே பாராட்டப் பட்டது.
மதுரையில் நடந்த கோல்வல்கரின் 50 வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தலைமை தாங்கினார். அப்போது பேசிய முத்துராமலிங்க தேவர் கோல்வல்கரை தன்னலம் கருதாத மாபெரும் தலைவர் என்று வர்ணித்தார்.
சுதந்திரமான சிந்தனையுடன் பலரும் வியக்கும் விஞ்ஞானியாக திகழ்ந்த ஜி.டி.நாயுடு கோல்வல்கருக்கு மிகவும் நெருங்கிய நண்பராக விளங்கினார், கோல்வல்கரை கோவைக்கு அழைத்து பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார் ஜி.டி. நாயுடு. எனக்கு கடவுளிடத்திலும், மற்ற விஷயங்களிலும் நம்பிக்கை இல்லை ஆனால் கோல்வல்கரை நம்புகிறேன். அவரது நாமம் இந்த பாரத நாட்டை காக்கும் என்று நம்புகிறேன் என்று கோல்வல்கரை பற்றி ஜி.டி. நாயுடு கூறியிருக்கிறார்.
1973ல் கோல்வல்கர் மறைந்த போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத அவருக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செழுத்தப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் திருமதி இந்திரா காந்தி ஸ்ரீகோல்வல்கர் தேசிய வாழ்வில் தனது தனித்தன்மை வாய்ந்த ஆற்றலினாலும், ஈடுபாட்டின் தீவிரத்தினாலும் மதிப்புக்குரிய நிலையை எய்தினார் என்று புகழ்ந்துரைத்தார்.
ஸ்ரீ குருஜி கோல்வல்கர் இந்து சாம்ராஜ்ஜியத்தின் பிரதமர் என்று தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த தீபம் நா.பார்த்தசாரதி குறிப்பிடுகிறார். பிரபல எழுத்தாளர் தமிழ்வாணன் கோல்வல்கரை இரண்டாவது காந்தி என்று புகழ்ந்துள்ளார். கவியோகி சுத்தானந்த பாரதியார் கோல்வல்கர் மறைந்தபோது காபி ராகத்தில் ஒரு இரங்கற்பாவையே வடித்தார்.
திண்ணையில் புதுவை சரவணன் எழுதிய குருஜி கோல்வல்கர் - சில தகவல்கள், காந்தம் போல் எல்லோரையும் கவர்ந்தவர் கோல்வல்கர் ஆகிய கட்டுரைகளில் ஸ்ரீகுருஜி பற்றிய பல அருமையான தகவல்கள் உள்ளன.

இத்தகைய மாபெரும் தேசியத் தலைவர் பற்றியும் அவரது உரைகள், எழுத்துக்களில் உணர்த்திய தேசிய, இந்துத்துவக் கருத்தியல் பற்றியும் சில தவறான அவதூறுகள் இந்து விரோதிகளால் கூறப்படுகின்றன. அது பற்றி... அடுத்த பதிவில்.

Wednesday, April 04, 2007

கோவாவில் கோயில்கள் இடிப்பு

தெற்கு கோவாவில் இரண்டு கோயில்கள் விஷமிகளால் சேதப்படுத்தப் பட்டுள்ளன. இந்த பகுதிகளில் மிரட்டல்கள் மூலம் இஸ்லாமிய மதமாற்றங்கள் நடந்து வருவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன..

செய்தி: http://timesofindia.indiatimes.com/NEWS/India/Temples_vandalised_in_south_Goa/articleshow/1854489.cms

PANAJI: Two temples were damaged in the twin towns of Sanvordem-Curchorem in South Goa late on Tuesday night. Unidentified persons broke "religious symbols" at the temples, situated five kilometres away from each other, said the police.

Security personnel have been deployed in the two towns that had witnessed communal riots for three days in March last year when a structure housing a madarasa was demolished. The Magisterial inquiry which went into the Curchorem-Sanvordem communal riots held in March last year said that it was in the nature of an eruption which was precipitated due to the building up of continuous tension and strain between the two communities – Hindus and Muslims.

Conversion of faith through force or allurement has been on the rise in many parts of South Goa. Forced conversion by the believers has been causing unrest among Hindus. Last week, the Hindu Janajagruti Samiti (HJS) in Goa demanded strong action against people forcing conversions. "We have pressed a platoon of India Reserve Battalion (IRB) to ensure that the situation is kept under control," Shekhar Prabhudesai, Superintendent of Police (South), said, admitting that the situation had been tense in the twin towns. "Complaints have been registered and every step is being taken to ensure that tension does not aggravate," said Prabhudesai.