பெங்களூர் தெருப்பாடகர்கள்
இவர்களை அவ்வப்போது நீங்கள் தெருக்களில் பார்க்கலாம்.. இந்த கோஷ்டி ராமர், அனுமார் வேடம் பூண்டிருந்தது.. ஓரிடத்தில் பார்த்தபோது, அவர்களை அழைத்து உபசரித்து நின்று பாடச் சொல்லி, படம் பிடித்தேன். சன்மானமும் கொடுத்தனுப்பினேன். ஏக சந்தோஷம் அவர்களுக்கு.
வீடியோ: பாகம் 1
வீடியோ: பாகம் 2
கிராமத்தில் விவசாயக் கூலிகளாகவோ பண்ணைத் தொழிலாளர்களாகவோ இருப்பவர்கள்.. வேலை இல்லாத காலங்களில் நாடகம் போடுவது, ஊர் ஊராக பாடி சுற்றுவது என்று காலத்தை ஓட்டுகிறார்கள்..
இரண்டாவது வீடியோவில் உடைந்த கன்னடத்தில் கேள்வி கேட்பது அடியேன் தான். கன்னடம் நன்கறிந்த பெரியோர்கள் மன்னித்தருள்க!