Thursday, October 11, 2007

மனிதர்கள், சம்பவங்கள், மதங்கள் - 1

திண்ணை இதழில் "இடதுசாரி இந்துத்துவம்" போன்ற பல கருத்துச்செறிவுள்ள கட்டுரைகளை எழுதியிருக்கும் நண்பர் அருணகிரி, தனது (இதுவரை பிரசுரிக்கப் படாத) இந்தக் கட்டுரையை எனக்கு அனுப்பியிருந்தார். இதன் முடிபுகளை மறுக்க விரும்புபவர்களைக் கூட தீவிரமாக சிந்திக்க வைக்கும் கட்டுரை.

சீரான அறிவுசார் தேடலுடன், தெளிவான நடையில் எழுதப் பட்ட அருணகிரியின் இந்தக் கட்டுரை, பிரத்தியேகமாக ஜடாயு வலைப் பதிவு வாசகர்களுக்காக இங்கே -

மனிதர்கள், சம்பவங்கள், மதங்கள் - 1

பிலிப் சிம்பார்டோ என்னும் சமூக உளவியல் ஆராய்ச்சியாளர் ஸ்டான்ஃபோர்ட் சிறைச்சாலையில் 1971-இல் ஒரு பரிசோதனை நடத்தினார். சிறைச்சாலையில் கைதிகளின் நடவடிக்கையை ஆராய்வது இதன் முக்கிய நோக்கம் . சாதாரண கல்லூரி இளைஞர்கள் சிலரிடம் முன்கூட்டியே ஒப்புதல் வாங்கிய பின் இந்தப்பரிசோதனையில் ஈடுபடுத்தினார். இதற்கான பரிசோதனைக்குழுவை ஜெயிலர்களாகவும் கைதிகளாகவும் இரண்டு குழுக்களாகப் பிரித்தார். கைதிகளின் நடவடிக்கையை ஆராயத்தொடங்கிய பரிசோதனை ஜெயிலர்களின் உளவியல் குறித்த உண்மைகளையும் வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், நிறுவனப்படுத்தப்படும் அதிகாரத்தைக் குறித்தும் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தது. பரிசோதனையின் விளைவுகள் அந்தப்பேராசிரியரை அதிர்ச்சிக்குள்ளாக்கின. பரிசோதனை தொடங்கிய சில நாட்களிலேயே ஒரு 'கைதி' தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டார். பல கைதிகள் ஜெயிலர்களை எதிர்த்து புரட்சி செய்யத்தொடங்கினர். சிறைச்சாலை உடைப்பில் ஈடுபட முனைந்தனர். 'ஜெயிலர்களின்' அடக்குமுறையோ படிப்படியாகப் பல மடங்கு அதிகரித்தது. தனிமைச்சிறையில் எப்போதும் யாராவது ஒரு கைதி அடைக்கப்பட்டிருந்தார். தண்டனைகள் புதுப்புது விதமாக அளிக்கப்பட்டன. பரிசோதனையில் ஈடுபட்டுள்ள சக மாணவர்கள் என்ற எண்ணம் அடியோடு மறக்கப்பட்டு "கைதிகள்" உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் பலவாறு துன்புறுத்தப்பட்டனர். பரிசோதனைக்காலம் முடியும் முன்பே கைதிகளில் ஒரு பாதியினர் மிகப்பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி, அவர்களை விடுவிக்க வேண்டி வந்தது. ஒரு சில கைதிகளைத்தவிர பிற கைதிகள் அனைவரும் ஜெயிலர்களின் இழிவுறுத்தலையும் ஆணையையும் ஏற்று நடக்கும் ஊமைச்சனங்களாக மாறிப்போயினர். மிகச் சாதாரணமாகத் தொடங்கிய ஒரு உளவியல் பரிசோதனையின் பரிமாணம் ஒரே வாரத்தில் மனித உரிமை மீறல் என்னும் அளவுக்குப் பரிணமிக்க, இரண்டுவார பரிசோதனையை அவசரமாக ஒரே வாரத்தில் முடிக்க நேரிட்டது.

சாதாரண மக்களையும் கூட, நிறுவனப்படுத்தப்படும் ஒரு அதிகாரக் கட்டமைப்பு எவ்வாறு இரக்கம் இழந்த குரூரர்களாக மாற்றுகிறது என்பதை ஒரே வாரத்தில் கண்ணெதிரே நிரூபித்ததுக் காட்டியது இந்தப் பரிசோதனை. சீருடை அணிந்தவுடன் சாதாரண நிலையிலிருந்து 'அதிகார அடக்குமுறையாளன்' என்ற நிலைக்கு மனநிலையில் மாற்றம் அடைந்ததாக 'ஜெயிலர்கள்' கூறினர். ஒரு நிலையில் நல்ல மனிதர்களாக இருக்கும் சாதாரணர்கள் கூட வேறொரு நிலைக்கு மாறுகையில் மிகவும் குரூர சம்பவங்களை விருப்பமுடன் நிகழ்த்தும் கொடியவர்களாக மாறுவதையும் அவ்வாறு மாற்றமடையும் உளவியல் ரச வாதத்திற்கு அதிக அவகாசம் தேவைப்படுவதில்லை என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டியது இந்த ஸ்டான்ஃபோர்டு சிறைச்சாலைப் பரிசோதனை.

சக மனிதனைத் துன்புறுத்துவதும் கொல்வதும் சாதாரணமாக எந்தத் தனிமனிதனுக்கும் உவப்பானதல்ல,
என்றாலும் மனிதனை மனிதன் கொல்வதோ ஒரு மனிதக்கூட்டத்தை இன்னொரு கூட்டம் அழிப்பதோ மனித வரலாற்றில் தொடர்ந்து காணப்படும் ஒன்றுதான். ஸ்பார்ட்டர்கள், அலெக்ஸாண்டர், சேர சோழ பாண்டியர்கள், செங்கிஸ்கான் ஆகிய பல மன்னர்களும் குழுக்களும் போர் புரிந்த வரலாறு உண்டு. ஆனால் மேற்குறிப்பிட்ட இந்தப் போர்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் ஒரு தலைவனின்/ நாட்டின் அதிகாரப்பரவலுக்காக செய்யப்பட்டவை. தமிழ் மண்ணிலோ, மன்னர்களின் போர்களைத் தடுக்க படித்தறிந்த புலவர் பலர் முயன்ற செய்தி சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கிறது. அதாவது போர் என்பது உவப்பானதாக இருந்திருக்கவில்லை. அதிலும் முக்கியமாக மனிதக்கொலைகளை ஆன்மீக விடுதலைக்கான அவசிய வழியாக நம் மண்ணில் வேர் விட்ட கீழை ஞான மரபுகள் காணவில்லை.

மதத்திணிப்புக்காக போர் செய்வதையும் கொலை செய்வதையும் சனாதன மரபு ஆன்மீக வழிகளாக அங்கீகரிப்பது இல்லை. ஆனால் ஆபிரஹாமிய புத்தக மதங்கள் இதில் மிகத்தெளிவாக கீழைத்தத்துவங்களுடன் வேறுபடுகின்றன. மனிதக்கொலைகளை இறை ஆசீர்வாதம் பெற்றதாக மாற்றி அவற்றிற்கு புனித அங்கீகாரம் கொடுத்து சக மனிதனைத் துன்புறுத்துவதையும் கொல்வதையும் உவப்பானதாக மாற்றிய 'பெருமை' ஆசீர்வதிக்கப்பட்ட மதங்களான கிறித்துவத்தையும் இஸ்லாத்தையுமே சாரும். கிறித்துவத் தொன்மத்தில், ஏக இறைவன் தன்னை ஏற்காத பாகன் வழிபாட்டாளர்களின் பிள்ளைகளைக் கொல்கிறார். இதன் தொடர்ச்சியாக, தன்னை ஏற்காத மனிதர்களின் அழிவு இறைவனுக்கு உவப்பானவை என்ற உளவியல், ஆபிரஹாமிய மதங்களின் ஆன்மீக அடித்தளமாக உருப்பெறத்தொடங்குகிறது. இதன் அராபிய நீட்சியாக இஸ்லாம் உருவெடுத்து இஸ்லாத்தை ஏற்காத மக்களைக் கொல்வதையும், துன்புறுத்துவதையும், அவர்களது மத சின்னங்களை அழிப்பதையும், இறைவனை அடையும் மதக்கடமையாகவே எழுதி வைக்கிறது. இது இஸ்லாமிய சமூக உளவியலில் ஒரு முக்கிய மாற்றத்தைத் தோற்றுவிக்கிறது. அதாவது, கொலையும், போரும், ரத்தக்களறியும் மனித உளவியலுக்கு உவப்பானதில்லை என்றாலும் தனிப்பகை காரணமாகவோ, அரசியலாலோ அவ்வப்போது நிகழ்கின்ற "அவசியமான தீமை" (necessary evil) என்ற நிலையை அடியோடு மாற்றி, அவற்றை இறைக்கோட்பாடாக, புனிதச் செயலாக, அவசியமான மதக்கடமையாகக் கட்டமைப்பதன் மூலம், வன்முறைக்கு புனிதத்துவம் தரப்பட்டு, தேவ பீடத்தில் ஏற்றப்பட்டது. வன்கொலைகள் உவப்பானதில்லை என்ற மனித குல இயல்பு நிலை மாறி, மாற்று மதத்தவரின் மேல் நிகழத்தப்படும் இழிவுறுத்தலும், வாழ்வியல் அழிப்பும், பயங்கரவாதமும் மனிதனுக்கு மட்டுமல்ல, இறைவனுக்கே ஏற்புடைய ஆன்மீக தத்துவமாக உயர்த்தப்பட்டது.



இளவரசர் தாரோ ஷுகோ உபநிஷதங்களைக் கற்கிறார் (சமகால, முகலாயர் பாணி ஓவியம்)


இதனால்தான் அன்று இந்து மதத்தில் ஆர்வம் காட்டி உபநிஷதங்களை மொழிபெயர்த்த தாராஷிக்கோவை சொந்த சகோதரனென்றும் பாராமல் அவுரங்கசீப்பால் கொலை செய்ய முடிந்திருக்கிறது- மதக்கடமையாக. இன்றும் இதனால்தான் பெண்கள் குழந்தைகள் உட்பட்ட பொதுமக்களை ரயிலிலும், பஸ்ஸிலும், பொது இடங்களிலும் குண்டு வைத்து உடல் சிதறிச் சாகடிக்க முடிகிறது- மதக்கடமையாக. எந்தத் தனிப்பட்ட தொடர்பும் விரோதமும் இல்லாத டேனியல் பெர்ல் என்ற பத்திரிகையாளரை தொலைக்காட்சியில் பலர் பார்க்க கழுத்தை அறுத்துக்கொன்று "அமெரிக்க யூதனின் கழுத்தை ஆசீர்வதிக்கப்பட்ட இந்த வலக்கரம்தான் அறுத்துக்கொன்றது" என்று ஒருவனைப் பெருமிதத்துடன் சொல்ல வைக்கிறது- மதக்கடமையாக. இஸ்லாத்துக்கு மதம்மாறியவுடன் ஜெர்மனியின் சொந்த நாட்டு மக்களையே குண்டு வைத்துக் கொல்லத் துணியச் செய்கிறது - மதக்கடமையாக. தன் படிப்புக்கு உதவிய மதுரைப் பேராசிரியர் பரமசிவத்தை ஜிஹாதிகள் வெட்டிக்கொல்ல, அந்த முஸ்லீம் மாணவனே உதவி செய்ய வைத்தது- மதக்கடமையாக. நேற்று வரை நண்பனாக இருந்த முருகேசன் அப்துல்லாவாக மதம் மாறிய பின், தன் நண்பன் குமார் பாண்டியனை தென்காசியில் பொது இடத்தில் உடலை வெட்டி கழுத்தை அறுத்து கொல்ல வைக்கிறது- மதக்கடமையாக. அப்படியும் அடங்காத வெறியில் இந்த ஆகஸ்டு மாதம் 14 -இல் (பாகிஸ்தான் சுதந்திர நாள்) குமார் பாண்டியனின் மூன்று சகோதரர்களையும் வெட்டிக் கொல்ல வைத்தது- மதக்கடமையாக.

நாலடியாரில் தீயோர் நட்பு குறித்த பாடல் ஒன்று, தீயநட்பு காய்ந்த வைக்கோல் போருடன் நட்புக்கொண்ட நெருப்பு போல் ஆகும் என்று உவமை சொல்கிறது. பெரிதாய் வளர்ந்தாலும் யாருக்கும் உபயோகமின்றி எரிந்து சேர்ந்தவரையே அழித்து மடியும் கொடுந்தீயைப்போலத்தான் இன்றைய தீவிரவாத இஸ்லாம் விளங்குகின்றது. மனிதர்கள் என்ற நிலையிலிருந்து கொடும் சம்பவங்களை நிகழ்த்தும் ஜிஹாதிகளாக மாற தீவிரவாத இஸ்லாம், மத நம்பிக்கையின் பெயரில் பாதை போட்டுத்தருகிறது.

தனிமனிதக்கொலை அம்மனிதனுக்கு தண்டனை தருவதோடு முடிகிறது. ஜாலியன் வாலாபாக் போன்ற குழுக்கொலைகள் சமூக அநீதிச் சம்பவங்களாகி வரலாற்று வடுவாகின்றன. ஆனால், இந்த இரண்டுமே இறைவனின் பெயரால் மத அங்கீகாரத்துடன் நிகழ்த்தப்படுகையில் அச்செயல்களுக்கு தண்டனையோ, தலைகுனிவோ, வடுவோ இல்லாதது மட்டுமல்ல, மதப்பெருமையையும் இறை அங்கீகாரமும் அளிக்கப்பட்டு புனிதச் செயல்களாய் நிறுவப்பட்டு விடுகின்றன. எதிர்காலச் சந்ததிகள் மென்மேலும் அதே போன்ற கொடுமைகளை நிகழ்த்த இப்படிப்பட்ட மத நிறுவன அங்கீகாரம் தடம் போட்டுத் தருகின்றது. எனவேதான் இறைவன் வாக்கு என்ற பெயரிலும் மதத்தின் பெயரிலும் நடத்தப்படும் வன்முறைகள் வெறும் தனிமனித அல்லது குழு வன்முறைச் சம்பவங்களை விட அதிகக் கொடுமையானதாகின்றன. இப்படிப்பட்ட கொடுமைகள் வேரிலேயே பிடுங்கி எறியப்பட வேண்டிய விஷச்செடிகளைப் போன்றவைதான்.

(தொடர்ச்சி அடுத்த பகுதியில்)

1 comment:

Hariharan # 03985177737685368452 said...

சிறப்பான கட்டுரைக்கு வாழ்த்துக்கள் திரு.அருணகிரி.

வலிந்து இப்படி அந்நிய "அன்பிலாமத"க்கடமைகள் பாரத சமூகத்தின் மீது திணிக்கும் வன்முறையை தற்காப்புக்காக எதிர்கொள்வது என்று வன்முறையின் வீச்சு அதிகரிப்பதை அண்மையில் மிக அதிகமாக தமிழகத்தில் உணர முடிகிறது.

தேவர்மகன் பட க்ளைமாக்ஸில் "கடைசியா என்னையும் அருவாள எடுக்க வச்சிட்டியே" -ன்னு கமலஹாசன் பேசும் டயலாக் நினைவுக்கு வருகிறது.

ஆன்மா அறுவடைன்னு ஒரு குரூப், ஆட்கள் அறுவடைன்னு இன்னொரு குரூப் என்று இடையில் மாட்டிக்கொண்டு அமைதியான சனாதன பாரம்பரிய வாழ்க்கைச் சூழலை மீண்டும் முழுமையாக இழக்கும் படியான நிதர்சனம் தென்படுவதை மறுக்கமுடியவில்லை.

என்றபோதும் Nature has its own Check and Balance mechanism என்பது நம்பிக்கை தருகிறது.

கடந்த ஐம்பதாண்டுகளாக கருப்புத்தங்கம் என்கிற Fozzilfuel கொண்டு 99.9% மனித இயக்கம் நடைபெற்றதால் விளைந்த உலகசுற்றுச்சூழல் மாசு, புவிவெப்ப மாற்றம் இவைகளால் மாற்று எரிசக்தி கொண்டு மனித இயக்கம் அடுத்த 50 ஆண்டுகளில் பெருமளவுக்கு ஹைட்ரஜன் எரிபொருள் நுட்பத்தால் இயங்கும்.

பாலைவன நாடுகளின் கருப்புத்தங்க பொருளாதாரத்தினால் பாரதத்தில் இன்றைக்கு முனைப்புடன் பரவலாக முன்னெடுக்கப்படும் அந்நிய அன்பிலா மதக்கடமை வன்முறைகள் வரும் ஆண்டுகளில் சரிவுற்று இறக்கம் பெறும்.