Wednesday, October 10, 2007

"தமிழக தலித்களின் குடிகெடுத்த பெரியார்" - தலித் தலைவர் சந்திரபான் பிரசாத்

இந்தியாவின் முதல் தலித் ஆங்கில எழுத்தாளர் என்று அறியப்பட்ட சமூக சிந்தனையாளர் சந்திரபான் பிரசாத் தனது சமீபத்திய கட்டுரை ஒன்றில் பெரியாரிசத்திற்கு பெரிய ஆப்பு ஒன்று அடித்திருக்கிறார் (இந்தக் கட்டுரையை அனுப்பிய வஜ்ரா-வுக்கு நன்றி).





இதில் அவர் கூறுகிறார் -

"தலித்களுக்கும், மற்ற பிற்பட்ட வகுப்பினருக்கும் (OBC) இடையே வளர்ந்து வரும் மோதல்களைக் கண்டிருந்தும், 1991-ல் மண்டல் கமிஷன் மீது பல விமரிசனங்கள் இருந்தும் அதை ஆதரித்தேன். ஏனென்றால் அப்போது கங்கைச் சமவெளி முழுதும் பிராமணர் உள்ளிட்ட உயர்சாதியினர் ஆதிக்கம் இருந்தது. எனவே, "பிராமணர்களது ஆதிக்கத்தை ஒழிப்பது வட இந்தியாவை சமூக விடுதலை பெறச்செய்யும், தமிழ் நாட்டைப் போல" என்று நினைத்தேன்.

மண்டல்-காலங்களுக்குப் பின்னர், நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள அறிஞர்கள், செயல்வீரர்களுடன் உரையாடிய பின், பெரியாரின் திராவிட இயக்கத்தைப் பற்றிய பல சந்தேகங்கள் தோன்றத் தொடங்கின. "நம்பிக்கைத் துரோகம்" (விஷ்வாஸ்காத்) என்ற எனது முதல் புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கையில் இந்திய அளவிலான நிலச் சொத்துரிமைகள் பற்றிய விவரணங்கள் என்னைத் தட்டி எழுப்பின. சமூக விடுதலை அடைந்த தமிழ் நாட்டில், ஒவ்வொரு 100 தலித்களிலும் 15 தலித்கள் தான் சுயமாகப் பயிரிடுபவர்கள், 63 பேர் நிலமில்லாத கூலிக்காரர்கள். ஆனால் உத்தரப் பிரதேசத்தில், ஒவ்வொரு 100 தலித்களிலும் 43 பேர் சுயமாகப் பயிரிடுபவர்கள், 39 பேர் தான் நிலமில்லாத கூலிக்காரர்கள். எப்படி தமிழக தலித்கள் உத்திரப் பிரதேச தலித்களை விட இவ்வளவு தூரம் பின் தங்கியிருக்கிறார்கள்?

பெரியாரது பிராமண எதிர்ப்பு இயக்கம் அர்த்தமில்லாதது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். நான் சொல்வதைக் கேட்க யாரும் தயாராயில்லை - பெரும்பாலான வட இந்திய தலித்களுக்கு தமிழ் நாடு ஒரு ஆதர்ச உதாரணமாக இருந்தது. அந்த நேரத்தில் தான் பேராசிரியர் ஃப்ராங்கெல் அவர்களது நூல் கிடைத்தது.

தனது நூலில் ஃப்ராங்கெல் பிராமணர்கள் மற்றும் சாதி இந்துக்களின் அதிகார வீழ்ச்சியைப் பதிவு செய்கிறார். ஆனால், சூத்திரர்கள் மற்றும் இதர பிற்பட்டவர்கள் (OBC) இவர்களது உயர்ச்சியில் காண்பது உண்மையில் "சமூக நீதி" தானா என்பது பற்றிய சந்தேகத்துடனேயே பேசுகிறார். இந்த நூலில் இருந்து எனக்குப் புரிவது இது தான் - பெரியாரது திராவிட இயக்கம் வெறும் பிராமண எதிர்ப்பு மட்டுமே, அது ஒருபோதும் சாதிக்கு எதிரான போராட்டமாக இல்லை.

இந்த அறிவுபூர்வமான தேடலின் முடிவுகளைக் கொண்டு, தலித்-பிராமணர் (கூட்டுக்) கொள்கையை நான் உருவாக்கத் தொடங்கினேன். 1997 ஆகஸ்டில் அதை வெளியிடவும் செய்தேன். அதிகாரத்தைப் பெற்ற பிறகு சூத்திரர்கள், மற்றும் மற்ற பிற்பட்டவர்கள் (OBC) தங்களுக்குக் கீழாக உள்ள சமூகத் தட்டைப் பார்ப்பார்கள், அங்கே இரையாகப் போவது தலித்கள் தான் என்று எனக்குத் தீர்மானமாகத் தோன்றியது.

உ.பி.யில் பகுஜன் சமாஜ்க் கட்சியின் வெற்றி சூத்திரர், மற்ற பிற்படுத்தப் பட்டவர்கள் (OBC) இயக்கம் பற்றிய எனது பார்வையை நிரூபித்திருக்கிறது. Dominance and State Power in Modern India என்ற ஃப்ராஙகெல் அவர்களது நூல் சொல்வதற்கு இன்னும் இருக்கிறது என்ற எண்ணத்தைத் தூண்டுகிறது."

தமிழக தலித்கள் இன்னும் எவ்வளவு காலம் தான் பெரியாரிசத்தையும், கழகக் கண்மணிகளையும் கட்டிக் கொண்டு மோசம் போகப் போகிறார்கள்?

உத்திரப்பிரதேச உதாரணம் இவ்வளவு தெளிவாக இருக்கையில், அந்த வழிமுறையைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் இருப்பது தமிழக தலித்களைத் தற்க்கொலைப் பாதைக்கே இட்டுச் செல்லும்.

மொழியாக்கம் செய்யப் பட்ட பகுதியின் ஆங்கில மூலம்:

... Though I had my reservations regarding Mandal as I was witness a growing conflicts between Dalits and OBCs, I still went ahead and defended it as by 1991, the larger Gangetic belt was still dominated by Dwijas/Brahmins. So, as I thought, a total annihilation of the Brahmin dominance may turn north India into a socially liberated zone as it had happened in Tamil Nadu.

Post-Mandal, when I begun touring and interacting with activists and scholars from all over the country, I developed doubts over Periyar's Dravidian movement. When I was writing my first book titled as Viswasghat (betrayal), I was alerted by the census figures on the landholding pattern in India. I was shocked to find that for every 100 Dalit in socially liberated Tamil Nadu, only 15 were independent cultivators and 64 were landless labourers. In Uttar Pradesh, of every 100 Dalit, 43 were independent cultivators and only 39 were landless labourers. How could Tamil Dalits be so far behind the UP Dalits."


There was no meaning to Periyar's anti-Brahmin movement I thoughts to myself. But there was no one who was willing to listen to me. For most of the Dalits in north India Tamil Nadu was a role model. It was then that I was given a book to read by prof Frankel.

In his book, Frankel mirrors the fall of Dwijas/Brahmins from the political power structure, the book however, remains sceptical of the social justice element in the rise of Shudras/OBCs. What I understood from the book suggests that Periyar's Dravidian movement was merely anti-Brahmin, and not anti-caste.

Equipped with a credible intellectual inquiry, I begun developing my Dalit-Brahmin thesis and made it public in August 1997. I was certain that after acquiring power and resources, Shudras/OBCs were looking for subordinate social categories and Dalits will be sure victims.

The BSP's win in Uttar Pradesh goes to confirm my reading of the Shudra/OBC movement, and revives Dominance and State Power in Modern India for further reading.

4 comments:

வஜ்ரா said...

போச்சு, நீங்க சந்திரபன் பிரசாத் ஐ வளைத்துக் கொண்டுவிட்டீர்களா ? இனி அவர் இந்துத்வாவாதி என்று சொல்லிவிடுவார்கள்.! :D


சந்திரபன் பிரசாத் ஒரு உண்மையான தலித் எழுச்சி சிந்தனையாளர். சும்மா, தலித் எழுச்சி என்று பேசிக்கொண்டே தலித்துகளை ஒடுக்கும் மேல் சாதி கஞ்சன் ஐலையா போன்ற "போலி" தலித் சிந்தனையாளர் அல்ல.

Anonymous said...

சந்திரபான் பிரசாத்துக்கும் பகுத்தறிவு குரூப் பிராமண அடி வருடி பட்டம் கட்டி விடும்.அவருடைய சட்டையின்
உள்ளே பூணூல் நெளிகிறதா,தெரிகிறதா என்று அவர் கொண்டையை லுக்கு விட்டு குறி அறுப்பேன் என பீலா வசனம் பேசும்.5000 வருடமாக அடக்கி வைத்திருந்ததை விடப் போகிறேன் என்ற பயமுறுத்தலும் வரும்.நாத்தம் தாங்காது,பாவம் சந்திரபான்!
அன்புடன்
பாண்டியன்

Anonymous said...

Read his dalit diary and his column in Daily Pioneer

Anonymous said...

ஜாதிய ஒழிப்பு என்ற பெயரில் பெரியார் பிராமணர் மற்றும் ஹிந்துக்களை எதிர்த்தாரே தவிர ஜாதியையும் ஒழிக்கவில்லை மற்ற (இஸ்லாம், கிறிஸ்தவம்) மதத்தில் உள்ள மூடத்தனத்தையும் விளக்கவில்லை. இதனை பகுத்தறிய தெரியாதவர்களாக இருக்கிறார்கள் இவரை பின்பற்றும் தொண்டர்கள்.