Sunday, April 27, 2008

திருவாசகம், குரான், தீவிரவாதம்: ஒரு கடிதம்

அன்புள்ள பா.ரா,
Fitna - தேவையற்ற அச்சுறுத்தல் பதிவில் ரொம்ப அப்பாவியாக இப்படி சொல்கிறீர்கள் -

// பிற கடவுள்களை வணங்குவோரைச் சுட்டிக்காட்டி மாணிக்கவாசகர் கலவரப் பீதியைத் தூண்டுவதோ நமக்கு ஒரு பொருட்டில்லையென்றால் மேற்படி சூராக்களையும் நாம் பெரிய அளவில் பொருட்படுத்தத் தேவையில்லை. //

தேவையில்லை தான்.. இஸ்லாம் என்கிற மதம் தான் சென்றவிடமில்லாம் பெரும் படுகொலைகளையும், பேரழிவுகளையும் *மதத்தின் பெயரால்* செய்யாமலே இருந்திருந்தால். அது *இன்றும்* தொடர்ந்து நடக்காமல் இருந்திருந்தால்.. போர் நடக்கும் ஈராக்குக்கு அடுத்தபடியாக, இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு அதிக குடிமக்களை பலிகொடுத்திருக்கும் ஒரு நாட்டில் வாழ்ந்துகொண்டு கொஞ்சம் கூட உணர்ச்சியில்லாமல் எப்படி சுவாமி உங்களுக்கு இப்படி எழுத வருக்கிறது?

சொற்கள் மட்டும் ஒரு கருத்தியலின் தாக்கத்தைத் தீர்மானிப்பதில்லை.. ஒரு மனிதன், மதம், சமூகம் அந்தச் சொற்களை உள்வாங்கித் தங்கள் வாழ்க்கையையும், அமைப்புகளையும் கட்டமைக்கும் விதமே அவற்றின் நடத்தையையும், செயல்முறைகளையும் தீர்மானிக்கிறது. "அஞ்சுமாறே" என்பதற்கும் "மாண்டனர்" எனபதற்கும் "அழிந்து போகிறான் (விநஷ்யதி)" என்பதற்கும் திருவவசகத்திலும், ராமானுஜ நூற்றந்தாதியிலும், கீதையிலும் அர்த்தமே வேறு. இந்த நூல்களின் தளமே வேறு. அது சுத்த ஆன்மிகம். இவை காஃபிர்களைக் கண்ட இடங்களில் கொல்லப் போகிற முஃமீன்களான "நம்பிக்கையாளர்கள் கூட்டத்திடம்" பேசவில்லை. ஒரு தனிமனிதனின், ஆன்ம சாதகனின் மனத்துடன் பேசுகின்றன. இதுவும் உங்களுக்குத் தெரியாததல்ல. மேலும், இந்த நூல்களினால் எத்தனை பாதகர்கள் உருவாகியிருக்கிறார்கள்? எத்தனை இனப்படுகொலைகள் நிகழ்ந்துள்ளன? வரலாற்று அறிஞரே, தயவு செய்து ஆதாரங்கள் தாருங்கள்.

ஆனால், இஸ்லாமின் ரத்தம் தோய்ந்த வரலாறு பற்றி வில் டுராண்ட் (அவரது பிரபலான மேற்கோளை மடல் முடிவில் தந்திருக்கிறேன்) முதல் இன்றைய கொய்ன்ராட் எல்ஸ்ட் வரை ஏராளமான வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இன்றைய செய்தி ஊடகங்களும், அப்பட்டமாக நமக்கு இவற்றை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. இப்படியிருக்கும்போது "அந்தளவுக்கு அவர்கள் அடக்குமுறைக்கும் ஆதிக்கத்துக்கும் உட்பட்டிருக்கிறார்கள் என்பது தவிர எனக்கு வேறு காரணம் தெரியவில்லை" என்று ஜல்லியடிக்கிறீர்களே.. மத்தியக் கிழக்கு சரி, மற்ற நாடுகளின் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு என்ன காரணம்?

பாகிஸ்தானிய, வங்கதேச இந்துக்கள் சந்தித்த அடக்குமுறை, ஆக்கிரமிப்புக்கள், கற்பழிப்புக்கள் கொஞ்சமா? நஞ்சமா? இத்தனைக்கும் இஸ்லாமிய ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு எந்தக் கலகமும் செய்யாமல், அதற்கு அடிபணிந்த வாழக் கூட இணங்கியவர்கள் அவர்கள். அவர்களை இன அழிப்பு செய்து, அவர்கள் சொந்த மண்ணை விட்டுத் துரத்திய இஸ்லாமிய" அராஜகத்திற்கு என்ன காரணம்?? இந்த குரானிய சூராக்கள் என்பதைத் தவிர?

"புவியிலோரிடம்" போன்ற அற்புதப் படைப்பைத் தந்த நீங்கள், மனச்சாட்சியையும், முதுகெலும்புகையும் கழற்றிவைத்துவிட்டு எழுதியிருக்கிறீர்கள்.

வேதனையுடன்,
ஜடாயு

வில் டுரான்ட் தனது “நாகரீகங்களின் வரலாறு” என்ற நூலில் கூறுகிறார் “இந்தியாவை இஸ்லாமியர்கள் கைப்பற்றியது தான் உலக சரித்திரத்திலேயே அதிக அளவு ரத்தக்கறை படிந்த கதையாக இருக்கும். அது எவரையும் நிலைகுலையச் செய்யும் கதை. அதிலிருந்து தெளிவாகப் புரியும் பாடம் என்னவென்றால், கலாசாரம் என்பது ஒரு பெருமதிப்புள்ள பொருள். அதன் சிக்கலான, நுட்பமான ஒழுங்கும், சுதந்திரமும் வெளியிலிருந்து ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் அவர்கள் மூலம் உள்ளிருந்தே பல்கிப்பெருகுபவர்கள் என்ற இருவகைக் காட்டுமிராண்டிகளாலும் எந்நேரமும் தகர்த்தெறியப் படும் அபாயம் இருக்கிறது”.

“...the Islamic conquest of India is probably the bloodiest story in history. It is a discouraging tale, for its evident moral is that civilization is a precious good, whose delicate complex order and freedom can at any moment be overthrown by barbarians invading from without and multiplying from within “
- Will Durant in “History of Civilization

5 comments:

Anonymous said...

நல்ல பதில் ஜடாயு. எனது பதிவிலும் இதை எடுத்து உள்ளிடுகிறேன். நன்றி.

Anonymous said...

// பிற கடவுள்களை வணங்குவோரைச் சுட்டிக்காட்டி மாணிக்கவாசகர் கலவரப்
பீதியைத்
தூண்டுவதோ நமக்கு ஒரு பொருட்டில்லையென்றால் மேற்படி சூராக்களையும் நாம்
பெரிய
அளவில் பொருட்படுத்தத் தேவையில்லை. //

இதை பாரா சொல்லக்க்கூடாது. மதானியும் பாஷாவும் நாகூர் ரூமியும்
சொல்லவேண்டும். அதாவது அந்த சுராக்களையெல்லாம் கடாசி விடுவோம் என்று.

Gokul said...

ஜடாயு அவர்கட்கு,

வணக்கம். நல்ல வாதம்தான், நானும் உங்களை ஆதரிக்கிறேன் ஆனால் எதிர்ப்பாளர்கள் உங்கள் வாதத்திற்கு பதிலாக சமணர்களை கழுவேற்றிய விஷயத்தை கூறுவார்கள்.

எனவே அதற்கும் சேர்த்து பதில் கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Thanks
Gokul

ஜடாயு said...

கோகுல், தங்கள் கருத்துக்கு நன்றி.

// உங்கள் வாதத்திற்கு பதிலாக சமணர்களை கழுவேற்றிய விஷயத்தை கூறுவார்கள். எனவே அதற்கும் சேர்த்து பதில் கூறி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். //

அதனால் என்ன? பதில் கூறினால் போச்சு!

இது பற்றி அரவிந்தன் நீலகண்டன் ஒரு அருமையான பதிவை ஏற்கனவே எழுதியிருக்கிறார்.. அதிலிருந்து ஒரு முக்கியமான பகுதியை மட்டும் இங்கு இடுகிறேன்.

மிகத்தெளிவாக இந்துசமய நூல்களிலெங்கும் சமணருக்கு எதிராக கூறப்பட்டிருக்கும் வன்மையான நிகழ்வு என்பது சமணர் கழுவேறிய சம்பவமே ஆகும். இதற்கு கல்வெட்டு ஆதாரமோ அன்றி சமண இலக்கிய ஆதாரமோ கிடையாது என்பதனை கணக்கில் எடுக்க வேண்டும். மேலும் அவ்வாறு கழுவேற்றப்பட்டதாக கூறப்படுவோரும் தாமகவே கழுவேறியதாக சைவ இலக்கியங்கள் கூறுகின்றனவா அல்லது வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டதாக சைவ இலக்கியங்கள் கூறுகின்றனவா என்பது அடுத்த கேள்வி. நீங்கள் எடுத்து எழுதியிருக்கும் சேக்கிழாரின் பெரியபுராணத்தில் சமணர்கள் கழுவேறியதை மட்டும் குறிப்பிட்டுவிட்டு முக்கியமான பாடல் ஒன்றை விட்டுவிட்டீர்கள். அதுசரி. நீங்கள் கட் அண்ட் பேஸ்ட்
பண்ணியிருப்பது எங்கோ எவனோ மிஷிநரி எடுத்த வாந்திதானே. இந்த விஷயம் சம்பந்தமாய் என்னிடம் இருந்த திரு.ஜாவா குமாரின் கட்டுரைகளில் ஆங்கிலத்தில் இருந்த சிலவற்றை விடுத்து தமிழில் இருந்தவற்றை மட்டும் தொகுத்துப்போட்டேன். விடுபட்ட ஆங்கிலக்கட்டுரை ஒன்றில் இந்தக் கேள்விக்கு அவர் அருமையாக பதில் தந்திருக்கிறார்.
அதனை தமிழில் தருகிறேன்:


தெய்வத்திரு ஞான சம்பந்தர் மீது கூறப்படும் இக்குற்றச்சாட்டு எந்த அளவு உண்மை?
நம் திரு ஆதீனங்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நம் தெய்வத் திருமுறைகளில் எவ்வித மாற்றமோ சொருகலோ இன்றி காப்பாற்றி வந்த பெருமைக்கு உரியவர்கள் அவர்கள். நம் தெய்வத் திருமுறைகள் உண்மையை பகிர்கின்றன.

பாண்டியன் வெற்பினை தணித்த எம்மான் ஆளுடைய பிள்ளையார் தெய்வ தமிழ்ஞான சம்பந்த பெருமான் சமணரை வாதங்களில் வெல்கிறார். அப்போது அமைச்சர் குலச்சிறையார் அவ்வாதத்தில் தோற்போருக்கு என்ன ஆகும் என வினவ அதற்கான பதில் என்ன என்பதனை சேக்கிழார் பெருமான் திருவார்த்தைகளிலேயே கேட்கலாம்: (பெரியபுராணம் பாடல் 798)

அங்கது கேட்டு நின்ற அமணரும் அவற்மேற் சென்று
பொங்கிய வெகுளி கூரப் பொறாமை காரணமேயாகத்
தங்கள் வாய் சோர்ந்து - தாமே தனிவாதில் அழிந்தோமாகில்
வெங் கழுவேற்றுவான் இவ்வேந்தனே - என்று சொன்னார்.

மத வைராக்கியம் கொண்ட சமணர்களை திருஞானசம்பந்தர் கழுவேற்றியதாக கூறித்திரிவோருக்கு ஒரே ஆதாரங்கள் சைவ இலக்கியங்களே. ஆனால் அந்த இலக்கியமே சைவர்கள் சமணர்களை கழுவேற்றியதாக கூறவில்லை. என்றாலும் இவர்கள் இதனை நாணமின்றி கூறித்திரிவர்.

பாட்டுக்குப்பாட்டு தமிழ்ஞானசம்பந்தன் என்றே தன்னை அடையாளமிட்டு தமிழ்ச் சமுதாயத்தை வாழ்விக்க வந்த தேவார முதல்வரான ஆளுடைய பிள்ளையாரை 'ஆரிய வெறியனாக்கிய'அரசியலையும் இதில் அவர் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்:

அந்தக்காலத்திலிருந்து சைவர்கள் (வள்ளலார் போன்ற ஒருசிலர் விதிவிலக்காக இருக்கலாம்) இப்படித்தான் - என்று அனானி எழுதியிருப்பதைப் படித்தால் உங்கள் பக்க கும்பலின் (அல்லது ஒரு வேளை உங்களின்) அறியாமையை நினைத்து சிரிப்புதான் வருகிறது. அந்த வள்ளலாருக்கே ஞானகுரு சம்பந்தர்தான். அது உங்களுக்குத் தெரியாது. வள்ளலார் எங்கும் வானத்திலிருந்து குதித்து விடவில்லை. 'வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவன்' என்றுதான் அவர் தன்னைச் சொல்லிக் கொண்டது. தன் குருவான சம்பந்தரை 'அமண இருள் அற வந்த தெய்வமே' என்றும் அவரே பாடுகிறார்.

ஐந்தாம் திருமுறை 009.ஆளுடைய பிள்ளையார் அருண்மாலை

செவ்வகை ஒருகால் படுமதி அளவே செறிபொறி மனம்அதன் முடிவில் (29)
எவ்வகை நிலையும் தோற்றும் நீ நினக்குள் எண்ணிய படிஎலாம் எய்தும் (30)
இவ்வகை ஒன்றே வருத்தமில் வகைஎன் றெனக்கருள் புரிந்தசற் குருவே (31)
தெவ்வகை அமண இருளற எழுந்த தீபமே சம்பந்தத் தேவே (32)

போதுமா, இனி வள்ளலாரையும் 'இந்து ஜிகாதிகள்' லிஸ்டில் சேர்த்து விடவும்.

hamaragana said...

அன்பரே திருவாசகம் என்ற வார்த்தைக்கு பக்கம் கு..... எழுத எப்படி மனசு வந்தது ...ஆறாத கண்ணீருடன்