Thursday, June 05, 2008

பிறந்தநாள் பிச்சை கேட்கும் தமிழினத் தலைவர்

இந்த தினமணி செய்தியைப் பாருங்கள் -

சென்னை, ஜூன் 2: சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தாருங்கள் என்று எதிர்ப்பாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற "உளியின் ஓசை' திரைப்படத்தின் பாடலை வெளியிட்டு அவர் பேசியதாவது: சுற்றியுள்ள மாநிலங்கள் அனைத்தும் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் மாநிலங்களாக இல்லை. கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்தை தனித் தீவாக மாற்றிவிட்டன.

இந்தச் சூழ்நிலையில் தமிழகத்தின் "ஒரே கதி' சேது சமுத்திரத் திட்டம் மட்டுமே. சேது சமுத்திரத் திட்டத்தால் மட்டுமே தமிழகம் வளம் கொழிக்கும் மாநிலமாக மாறும். வாணிபத் தொடர்புகள் அதிகரிக்கும். சேது சமுத்திரத் திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றித்
தாருங்கள் என்று அந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனது பிறந்த நாள் யாசகமாக இதனைக் கேட்டுக் கொள்கிறேன். என் பேரப் பிள்ளைகளுக்காகக் கேட்கவில்லை. தமிழகத்தின் எதிர்காலத்துக்காகக் கேட்கிறேன்...."

சேது திட்டம் தான் "ஒரே கதியாம்". தமிழகம் "தனித்தீவாக" ஆகி விட்டதாம். எப்படிக் கூசாமல் அண்டப் புளுகு புளுகுகிறார் ஒரு மாநில முதல்வர்? மாநிலத்தின் வளர்ச்சிக்காக உருப்படியாக ஒன்றும் செய்யாமல், செய்யத் தெரியாமல், அண்டை மாநிலங்களை அநாவசியமாக வம்புக்கு இழுத்திருக்கிறார், துவேஷ மனப்பான்மையை வளர்க்கிறார். மிகவும் பொறுப்பற்ற பேச்சு.

திருவள்ளுவர், திருவள்ளுவர் என்று ஒருவர் இருந்தார். உலகின் உன்னதமான அறநூலான திருக்குறளை எழுதியவர். அதில் "இரவச்சம்" என்று ஒரு அதிகாரம் உண்டு. (ராத்திரி பயம் அல்ல; இப்போது இருப்பது போல திருவள்ளுவர் காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அவ்வளவு மோசமாக இல்லை). அதாவது உயிர்போவது பற்றிக் கூட பயம் கொள்ளாத மானமுள்ள மனிதர்கள் இரப்பதற்கு, பிச்சை கேட்பதற்கு அதை விடமிகுந்த நாணமும், அச்சமும் படுவார்கள் என்பதை வலியுறுத்திக் கூறும் அதிகாரம். அதில் ஒரு குறள்:

"ஆவிற்கு நீர்என்று இரப்பினும் நாவிற்குஇரவின் இளிவந்தது இல்"

"(சாகக் கிடக்கும் ஒரு பசுவைக் காப்பாற்றுவதற்காக) பசுவிற்கு நீர்வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும் அந்த இரத்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை."

அதனால் என்ன? திருக்குறளை ஒரு அலங்காரத்துக்காக மட்டுமே "குறளோவியமாக" சட்டம் போட்டு மாட்டிவைத்து புளகாங்கிதப் படும் தன்மானத் தமிழினத் தலைவர் அவர்கள் இப்படித் தயங்காமல் பிச்சை கேட்பது ஆச்சரியம் இல்லை தானே?

அதுவும் யாரிடம்? இந்தத் திட்டத்திற்கு எதிராக இருப்பவர்கள், முட்டுக்கட்டை போடுபவர்களிடமாம். அது யார் யார்?

நீதிமன்றம். அது தான் இந்தத் திட்டத்திற்குத் தடை விதித்து, தொல்பொருள் ஆய்வுத் துறை சேது பகுதியில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் நீதி கிடைக்கலாம். பிச்சை..?

பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். கூட்டணிக் கட்சிகளிடம் மன்றாடுவதில் கின்னஸ் சாதனை படைத்த பல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். வாக்காளர்களிடம் மன்றாடியார்கள் இருக்கிறார்கள். ஆனால் முதன்முறையாக, தள்ளாத வயதில் எதிர்க்கட்சிகளிடம் மன்றாடுவதாக வெட்கமில்லாமல் அறிவித்த அரசியல்வாதி என்கிற சாதனை பட்டத்தை இதன்மூலம் தானைத் தலைவர் தட்டிச் செல்கிறார்.

இந்து இயக்கங்கள், ராம பக்தர்கள், துறவிகள். இவர்களைப் பார்த்து கலிஞ்சர் செய்யாத கேலியா? கிண்டலா? ஏளனமா? அவதூறா? கடைசியாக, இந்த "மூட, மௌடீக, மதவாத" சக்திகளிடமெல்லாம் பிச்சை கேட்கும்படி அவர் நிலைமை ஆகிவிட்டதே. தெரியாமல் முதுகில் பட்டுவிட்ட வேலுக்கெல்லாம் கூட நாணிக் கோணி, வீறாப்பு தன்மான டயலாக் பேசி, ஓவராக ஃபிலிம் காட்டிய, பொழைக்கத் தெரியாத புறம்போக்கு புறநானூற்றுத் தமிழனுங்க பேரையெல்லாம் ஏந்தான் சொன்னோமோ என்று தன்மானத் தலைவர் தன்னைத் தானே நொந்துகொண்டு நோகும்படி ஆகிவிட்டதே. ரொம்ப பரிதாபமாக இருக்கிறது.

தலைவர் பேச்சில் எப்பவுமே ஒரு பொடி இருக்கும். தென்னாட்டு பெர்னாட்ஷாவிடம் அவர் கற்ற பாடம் அது. அதாவது உடன்பாட்டாகச் சொல்ல வேண்டியதை எதிர்மறையாகச் சொல்வார்...and vice versa. முந்தைய காலங்களில், அப்போதைய அரசுகள் சட்டவிரோத அல்லது அரசியல் காரணங்களுக்காக அவரைக் கைதுசெய்து சிறையில் அடைக்கும்போதெல்லாம் உடன்பிறப்புகளுக்கு பஸ்களை எரிக்கக் கூடாது, கலவரம் எதுவும் செய்யக் கூடாது, வன்முறையில் ஈடுபடுவது கூடவே கூடாது என்று அறிக்கை விடுவார். உடனடியாக என்ன செய்யவேண்டும் என்று தொண்டனுக்குத் தெரியும்.

இன்னொரு சமீபத்திய உதாரணம். தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையருக்கு நினைவு மண்டபம் அமைக்கிறோம் என்ற பெயரில் உத்தமதானபுரம் ஊரில் அவர் வாழ்ந்த அழகிய பாரம்பரிய வீட்டை இடித்து எந்தக் கலை உணர்வும் இல்லாத ஒரு கான்கிரீட் கட்டிடத்தைக் கட்டி, தனது தொடரும் கலை, கலாசார ஒழிப்புப் பட்டியலில் இன்னும் ஒரு எண்ணைச் சேர்த்தது தமிழக அரசு. படிக்கும்போதே ரத்தக் கண்ணீர் வருகிறது. இது பற்றி மனம் நொந்து விமர்சன பிதாமகர் வெங்கட் சாமிநாதன் எழுதியிருக்கும் கட்டுரையில் கூறுகிறார் -

"... அச்செய்திகளில், முதல்வர் கலைஞரின் வாழ்த்துச் செய்தியும் காணப்பட்டது. அவருடைய பாராட்டுச் செய்தியும், தமிழுக்குத் தொண்டாற்றிய உ.வே.சா எந்த இனத்தைச் சேர்ந்தவர் எந்த ஜாதிய்னர், குடியினர் என்பதையெல்லாம் புறமொதுக்கித் தான், அவரது தமிழ்த் தொண்டை போற்றத் தான் நினைவகம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற பொருளில் தான் இருந்தது. எந்த ஜாதி, எந்த இனம் என்ற சிந்தனை இல்லையென்றால் அதைச் சொல்லவேண்டும் என்ற எண்ணமும் தோன்றி யிராது தானே. யாரும் ஏதும் கேட்காமலேயே 'எங்களுக்கு அந்த சிந்தனையெல்லாம் கிடையாது" என்று சொல்லித் தன் தாராள மனதுக்கும் சிந்தனைகளுக்கும் பாராட்டுக்களைத் தனக்கு வழங்கிக் கொள்ளும் அவசியம் இருந்ததென்றால், அந்த சிந்தனை தான் மேலோங்கியிருக்கிறது என்று தானே பொருள் படும். இது தான் இன்றைய தமிழ் நாடு."

ஆமாம். அந்தத் தமிழ்நாட்டின் தலைவர் பேச்சில் அந்தப் பொடி இன்னும் இருக்கிறது. "என் பேரப் பிள்ளைகளுக்காகக் கேட்கவில்லை. தமிழகத்தின் எதிர்காலத்துக்காகக் கேட்கிறேன்" என்று அவர் கூறும்போது, அதில் மேலோங்கியிருக்கும் சிந்தனை என்ன என்பது இந்த முதுபெரும் தலைவரின் கரகர பேச்சைக் காலம் காலமாய்க் கேட்டு வரும் மாங்கா மடையர்களாகிய நமக்குப் புரியாதா என்ன? மிக மிக நன்றாகவே புரியும்.

4 comments:

ஜயராமன் said...

ஐயா,

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். ஊடகங்களில் பெருகிவரும் ஜால்ரா சத்தத்துக்கு நடுவில் சில நடுநிலைமையான சிந்தனைக் குரல்களும் இணையத்தில் ஒலிப்பது ஆறுதல் தருகிறது.

கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும் கழகத்தின் பகுத்தறிவு.

கரு-நா-நிதி கெஞ்சுவதும் இறைஞ்சுவதும் (பிச்சை என்பது கொச்சையாக தெரிகிறது!) இது முதல் தடவை அல்ல. கடைசி தடவையும் அல்ல.

எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் படுத்தபடியே தேர்தலில் போட்டியிட்டபோது "எனக்கு மக்கள் கொடுத்த இந்த தண்டனை போதாதா. கொஞ்சம் தயை பண்ணக்கூடாதா" என்று மக்களிடம் கெஞ்சினார். தயை செய்து என்னை முதல்வர் ஆக்குங்கள். ஒருவேளை எம்.ஜி.ஆர் பிழைத்துவந்தால் நானே அவருக்கு பதவி கொடுத்துவிடுகிறேன். அதுவரைக்கும் நான் அனுபவிக்கிறேனே" என்று அவர் கண்ணீர் மல்க அழுத குரல் இன்றும் மக்கள் மனதில் இருக்கிறது.

ராமனா யார் அவன்? என்று முதலில் சவடாலாக கேட்டு பின்னர் விவகாரம் கைவிட்டுப்போனதும் - எனக்கு ராமர் என்றால் ரொம்ப ரொம்ப மரியாதை என்று சொல்ல வேண்டியது - என்ன பிழைப்போ இது ஐயா!

நன்றி

ஜயராமன்

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

முதலில் பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று ஆரம்பித்தார் ( எதிர் மறை பொருள் கொள்ள வேண்டும் )
உடனே அவர் கட்சி பிரமுகர்கள் கெஞ்சி பிறந்த நாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்த மாதிரி ஒரு நாடகம் நடத்தப்பட்டது .
அனைத்து ஊடகங்களாலும் இது மறைக்கப்பட்டது .
மேடையில் வைத்திருந்த உண்டியலின் சைஸ் ஐ பார்த்தீர்களா ?
அன்புடன்
பாஸ்கர்

Anonymous said...

என்ன ஜடாயு அவர்களே, இந்தக் களவாணி எதற்குப் பிச்சை கேட்க்கிறார் யாருக்காகப் பிச்சை கேட்க்கிறார் என்று கூடவா தெரியவில்லை. இந்தப் பிச்சையின் உண்மையான அர்த்தம் இதோ:
-------------------

தமிழகத்திற்கு பிற மாநிலங்கள் நன்மை பயப்பதில்லை. என் மனைவிகளுக்கும், துணைவிகளுக்கும் அவர்கள் தம் புதல்வர்களுக்கும், புதல்விகளுக்கும், என் பெயரன்களுக்கும், பெயர்த்திகளுக்கும், என் கொள்ளுப் பெயரன்களுக்கும், பெயர்த்திகளுக்கும் பிற மாநிலங்களில் ஆட்சியில் பங்கு, வியாபரத்தில் பங்கு, லஞ்சத்தில் பங்கு போன்ற பங்குகளைக் கொடுப்பதில்லை. இந்த சூழ்நிலையில் எனக்கு இருக்கும் ஒரே கதி சேது சமுத்திரத் திட்டம் மட்டுமே. என் முதல் மனைவியின் மகன் குடிகாரனாகி உருப்படாமல் போய் விட்டான். இருந்தும் அவன் வாரிசுகளுக்கு நான் பல சொத்துக்களை ஒதுக்கிக் கொடுத்து விட்டேன்.

இரண்டாம் மனைவியின் குடும்பத்திற்கு ஆட்சியில் பங்கு, அடுத்த முதல்வர் ஆகும் வாரிசுரிமை, தென் பாண்டி நாட்டை ஆளும் அரசுரிமை, கொங்கு தேசத்தை ஆளும் உரிமை ஆகியவற்றை அளித்து விட்டேன்,

இந்த நிலையில் என் துணைவியும் மூன்றாவதும் ஆன ராசாத்தி அம்மாளுக்கும் அவரது வாரிசான கனி மொழிக்கும் அவரது வாரிசான ஆதித்யாவுக்கும் நான் இன்னும் உரிய பங்கை அளித்திடவில்லை என்ற நியாமான கோரிக்கையை ராசாத்தி அம்மாள் தெரிவித்திருக்கிறார்கள். கனிமொழிக்கு வெறும் ராஜ்ய சபை எம் பி பதவி மட்டுமே பற்றாது இன்னும் அதிகம் வேண்டும் என்று முறையிடுகிறார். அதில் இருக்கும் நியாயத்தினை நீயும் உணர்ந்திட வேண்டும் தம்பி.

ஆகவே என் பிற பேரப் பிள்ளைகளுக்காகக் கேட்க்கவில்லை. என் ஆசைநாயகிக்கும் அவரது மகளுக்காகவும் கெஞ்சிக் கேட்க்கிறேன், இந்த சேதுப் பாலத்திட்டத்தை நிறைவேற்ற துணை செய்யுங்கள். ராஜாத்தி கனிமொழியின் எதிர்காலத்திற்காகக் கேட்க்கிறேன். எனக்குப் பிறகு அவர்களுக்கு யார் இருக்கிறார்கள்? சுவிஸ் வங்கியில் சில பில்லியன் டாலர்கள் அவர்களுக்கு இன்னும் எத்தனை காலத்திற்கு வரும்?
ராஜ்யசபா பதவி இன்றிருக்கும் நாளைக்கு என் காலத்திற்குப் பின் என் வாரிசுகள் கனிமொழிக்குக் கொடுப்பார்களோ மாட்டார்களோ.


நான் அவர்களுக்கு ஒரு நல்லது செய்து அதன் காரணமாக என் ஆசைநாயகியிடம் ஒரு நல்ல பெயர் பெற்று விடக் கூடாது என்பதற்காக மதம் என்னும் போர்வையைப் பயன் படுத்தி சிலர் அரசியல் செய்கிறார்கள். நான் என்ன கேட்க்கிறேன்? இந்த சேதுப் பாலம் கட்டினால் என் ராசாத்திக்கும் அவரது மகளுக்கும் நிரந்தரமாக மண்ணள்ளிப் போடும் காண்டிராக்ட் கிடைக்கும். அதன் மூலம் தமிழ் மக்களின் வயிற்றிலும் வாயிலும் அவர்கள் மண்ணள்ளிப் போடுவார்கள். சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் தமிழகம் முழுவதும் அவர்கள் கட்டியிருக்கும் கொடவுன்கள் நிரம்பும் அவர்கள் சுவிஸ் வங்கிக் கணக்குகளும் நிரம்ப்பும்.

ஆகவே இதற்கு ராமர் பெயர் கூட வைத்துக் கொள்ளுங்கள் என் ஆசை நாயகியிடம் எனக்குக் கெட்ட பெயர் எடுத்துக் கொடுத்து விடாதீர்கள். ஒரு குடும்பத்துக்கு வெண்ணையும் ஒரு குடும்பத்திற்குச் சுண்ணாம்பும் வைத்தேன் என்ற அவப் பெயரை எனக்கு இந்த 85வது அகவையில் கொணர்ந்திடாதீர்கள். உங்கள் பாதங்களை வணங்கிக் கேட்க்கிறேன், சில பில்லியன் டாலர்கள் மட்டுமே வைத்துக் கொண்டு ஏழ்மையில் தவிக்கும் ராசாத்திக்கும், கனிமொழிக்கும் இன்னும் சில பில்லியன்கள் சம்பாதிப்பதில் குறுக்கே நின்றிடாதீர். தமிழகம் என்றால் என்ன? என் குடும்பம்தானே? என் குடும்பமும் தமிழ்நாடும் வேறு வேறா? அதில் ஒரு வீட்டுக்கு மட்டும் டிரில்லியன் கணக்கிலும் இன்னொரு வீட்டிற்கு பில்லியன் கணக்கிலும் நான் சொத்து ஒதுக்கினால் நாளைக்கு இந்த உலகம் என்னைப் பழித்திடாதா?

ஆகவே உங்கள் பாதங்களில் என் 85 வயதில் விழுந்து கெஞ்சிக் கேட்க்கிறேன், என் குடும்பத்தில் பிரிவினை ஏற்படுத்தி விடாதீர்கள். என்னை இன்னும் நூறாண்டு நிம்மதியாக வாழ விடுங்கள். என் ராசாத்திக்கும் என் கனிமொழிக்கும் நான் துரோகம் செய்தால் நான் நிம்மதியாகத் தூங்க முடியாது, தூங்கவும் விட மாட்டார்கள் ஆகவே ராமன் பெயரோ, சீதை பெயரோ வைத்துக் கொண்டு ஒழியுங்கள், என் பெயரோ என் மனைவிகள் பெயரோ கூட வைத்திட வேண்டாம் ஆனால் திட்டத்திற்கு மட்டும் தடை விதித்திடாதீர்கள். என் அருமைத் தம்பி பாலுவிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தேன் அவனும் சில பில்லியன்கள் அவனது பல மனைவிகளுக்கு ஒதுக்கியது போக ராசாத்தி கனிமொழிக்கு உரிய பங்கை கொடுக்க ஒத்துக் கொண்டிருக்கிறான், இப்படிப் பட்ட தம்பி இருக்கும் நேரத்திலேயே இந்தத் திட்டத்தை முடித்திட அனுமதி அளியுங்கள். தமிழகம் தான் என் குடும்பம் என் குடும்பம் தான் தமிழகம்,

என் தள்ளாத 85 வயதில் இப்படி ஒரு சோதனையில் தள்ளி தமிழக்த்தை அதாவது என் குடும்பத்தை இக்கட்டில் தள்ளி குழப்பம் ஏற்படுத்திட வேண்டாம். கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், ப்ளீஸ், சார், ஐயா, காலில் விழுந்து கேட்க்கிறேன், ஐயா தர்மவானே என் மூன்றாவது குடும்பத்துக்கு தயவு செய்து தர்மம் போடுங்க சாமி, ஐயா சாமி , ஐயா, ஐயா, சார் , சார் , ப்ளீஸ் ப்ளீஸ், என்னால் அடி தாங்க முடியவில்லை சாமி, என்னக் காப்பாத்துங்க சாமி, ஜார், ஜார், ஜீ அத்வானி ஜி, மோடி ஜீ, ராம்கோபால் ஜீ, கணேசன் ஜீ, எல்லா ஜீக்களும் கருணை காட்டுங்கள் ஜீ. உங்களைப் பண்டாரம் பரதேசி என்று ஏசியதைக் கண்டுக்காதீங்க சாமிங்களா. என் வைப்பாட்டியை வாழ வையுங்கள் ஐயா. ராமர் கோவிலுக்கு ரகசியமா வந்து தோப்புக்க்ரணம் போடுறேன் சாமி. ஜீ, ப்ளீஸ் ஜீ, எப்படியாவது பாலக் காண்டிராக்டு கொடுங்க சாமி. பிழைச்சுப் போறோம் சாமி, ஐயோ சாமி, ஆவோதி சாமி, ராமர் பாலம் பெர்மிஷன் கொடுங்க சாமி.

சார், ஐயா, ஜார், ஜீ, சாமி, தர்மவானே..........
..................................

-------------------------------------------------------------

இவன் கெட்ட கேட்டுக்கெல்லாம் ஒரு பிறந்த நாள் அதுக்கு ஒரு வாழ்த்து., த் தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

Anonymous said...

A nice piece on this, in News Today -

http://newstodaynet.com/col.php?section=20&catid=30

" The run-up to King K's B-day bash itself was a super set-up. When June 3 was still weeks away, K out of the blue declared that he would not be celebrating because terrorists were busy.

The 'reminder' sank in and the persevering 'Perasiriyar' promptly persuaded the leader to 'grant permission' for the celebs even though no terrorist called it a day. The reluctant leader relented and the sulk soon gave way to the sycophantic surge we saw. What a script! And his acceptance speech at the felicitation function was a sensational climax, a masterpiece in self-eulogy. And K must be patting himself for that. Now if anyone can set a newer record it is doubtless his predecessor in power and in the alphabetic order!
This sycophantic see-saw is unlikely to cease. But where and when do we, the people, get off? Self-respecting souls can turn to real worship and await Kalki ...or a clone. The rest, forming the rational fraternity of flatterers, can adopt any of the titles listed in Para 1 and join the party.