Wednesday, June 11, 2008

பெங்களூர் தீமிதி விழா - தமிழ் போஸ்டர்

நேற்று அல்சூர் ஏரிக்கரை வழியாக போகும்போது கண்ணில் பட்ட போஸ்டர்:



(பெரிதாக்க படத்தில் க்ளிக் செய்யவும்)


கோயில் மற்றும் சுற்றிலும் உள்ள சாலைகளில் எல்லாம் காவிக் கொடி பறந்து கொண்டு இருந்தது. தீமிதி விழாவை சமூக விழாவாக, இந்து எழுச்சி விழாவாகக் கொண்டாடும் அல்சூர் மக்களுக்கு வாழ்த்துக்கள்.

"நில்லும்" என்று கண்ணை உறுத்தும் இலக்கணப் பிழை இல்லாமல் எழுதியிருக்கலாம். அதற்குப் பதிலாக, "வெல்லும்" சரியாக இருந்திருக்கும்.

"திருப்பதம் வரவேற்று" ?? "ஸ்ரீபாதகள ஸ்வாகதா" என்று கன்னடத்தில் சிந்தித்து தமிழில் எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்..

7 comments:

ஜயராமன் said...

ஜடாயு ஐயா,

தகவலுக்கு நன்றி. செய்தி உற்சாகம் ஊட்டுகிறது. தமிழகத்தில் இம்மாதிரி இணைந்த நல்லிணக்க உணர்வு விழாக்கள் நடக்கும் காலம் எந்நாளோ!

நில்லும் என்று இருப்பதுதான் சரியானது. :-)))

ஸ்ரீபாதகள என்பதற்கு தமிழில் திருப்பதம் என்பதா திருப்பாதம் என்பதா? பதம் என்றால் வார்த்தை, அடி (step) என்று நினைத்திருந்தேன்.

நன்றி

ஜயராமன்

Anonymous said...

படத்தை காணோமே ஸார்?

ஜடாயு said...

// படத்தை காணோமே ஸார்? //

இருக்கே, கிளிக்கினால் தெரியாவிட்டால் இங்க பாருங்க -

http://i142.photobucket.com/albums/r106/jataayu/Image015.jpg

ஜடாயு said...

நன்றி ஜயராமன்.

// பதம் என்றால் வார்த்தை, அடி (step) என்று நினைத்திருந்தேன். //

அதாவது, திருப்பாதம் (ஸ்ரீ+பாதம்) என்று சொல்லவந்து திருப்பதம் ஆக்கிவிட்டார்கள்.

இது எழுத்துப் பிழையாக இருக்கலாம்.. அல்லது "பதம் பணிந்தேன்" என்று வரும் பக்திப் பாடல்களைக் கேட்டு, தமிழில் அதற்கான சொல் பதம் என்றே கூட அவர்கள் எண்ணியிருக்கலாம், possible..

Anonymous said...

it will be good to speculate which party these bangalore tamils voted for - the communal bjp or the secular congress.

The 'eeena thalaivar', and 'soopara star' gave some 'voice' on how they should vote.

Gokul said...

இப்பொழுதான் தமிழர்கள் மீதான தாக்குதல்களை சற்று மறந்து இருக்கிறார்கள், அதற்குள் "சும்மா கிடந்த சங்கை" நன்றாக ஊதி இருக்கிறார்கள்.

ஜடாயு அவர்களே, இந்து எழுச்சி விழா என்பது ஒருபக்கம் இருக்கட்டும், இது தமிழர் எழுச்சி விழாவாக பெங்களுர்வாசிகள் நினைத்து விடக்கூடாது. மீண்டும் "இடத்தை கொடுத்தால், மடத்தை பிடுங்குவோம்" என்ற தோற்றம் வந்து விடக்கூடாது. அந்த வகையில் இந்த போஸ்டர் கண்டிக்கத்தக்கது.

Please correct me , if iam wrong.

Anonymous said...

// இந்து எழுச்சி விழா என்பது ஒருபக்கம் இருக்கட்டும், இது தமிழர் எழுச்சி விழாவாக பெங்களுர்வாசிகள் நினைத்து விடக்கூடாது. //

தமிழர் எழுச்சியானது இந்துக்களின் எழுச்சி. இந்துக்களின் எழுச்சி தமிழர்கள் எழுச்சி.

ஒன்றில்லாமல் மற்றொன்று நடக்காது. அப்படி நடத்த திராவிட இனவெறியாளர்கள் முயல்வதால்தான் கர்னாடகாவில் தமிழர்கள் துன்புறுகிறார்கள்.

உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் கோயில்களை எழுப்பினார்களோ அங்கெல்லாம் அவர்களது எழுச்சிமிக்க வரலாறு படைக்கப்பெற்றது.

எனவே இந்துக்களின் எழுச்சியாக இருக்கும்போதுதான், தமிழர் எழுச்சி நடைபெறும் என்பது வரலாறு சொல்லும் பாடம்.

பாடங்களை கற்றுக்கொள்ளும் சமுதாயமே எழுச்சி பெறும்.