Friday, July 24, 2009

சீனாவின் தலைவலி இந்தியாவின் நிவாரணி?

... பிரிவினை மற்றும் உரிமை கோரலுக்கான பொறி எந்தப் பகுதியிலாவது தோன்றினால், அதைச் சமாளிப்பதற்கு சீனர்கள் பயன்படுத்தும் வழிமுறை ஒன்றே தான் - கோரிக்கையாளர்களைக் கடுமையாகத் தாக்கி ஒடுக்குவது, தொடர்ந்து தாக்கி ஒடுக்குவது. உறுதியுடன் தாக்கி ஒடுக்குவது. திபெத்தில் அவர்கள் செய்வதைப் போல. ..

மூலம்: பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன்
மொழியாக்கம்: ஜடாயு

கட்டுரையை சொல்வனம் இதழில் படிக்கலாம்.

Thursday, July 23, 2009

வேலை, அன்னியமாதல், படைப்பாளிகள்: சில எண்ணங்கள்

ஜெயமோகனின் செய்தொழில் பழித்தல் என்ற சமீபத்திய கட்டுரை குறித்து பேசிக் கொண்டிருக்கையில் நண்பர் மைத்ரேயன் எழுதித் தந்த கட்டுரை இது. “ஒரு அரசுடைமை நிறுவனத்தில் சில பத்தாண்டுகள் கூட்டமான ஊழியர்கள் நடுவே பணியாற்றி அன்னியமாகி இருப்பது இயல்பாகவே ஆகிப் போன அனுபவத்தை இன்னமும் மறக்காது இருப்பதாக” கூறும் அவருடைய பல தள வீச்சும், ஆழமும் கொண்ட கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் - ஜடாயு.

.... விரும்பிய தொழிலை விரும்பிய வகையில் செய்வதுதான் மனித விடுதலை என்று முழங்கிய மார்க்ஸ் அது எப்படி நெடுங்காலத்துக்கு எந்த சமூகத்திலும் கிட்டாத ஒரு சுதந்திரம் என்பதை அறியாமல் இல்லை. தெரிந்தும் ‘புரட்சி’ செய்ய மனிதரை உந்தியது (சுய?) வெறுப்பின் பால், வாழ்வுக் கோணலை ஒரே முயற்சியில் நிமிர்த்தி விடும் அவசரத்தில் எழுந்த குரோத முயற்சி. அதை இனம் காணாமல் அவரை ஒரு தீர்க்கதரிசி என்று விழுந்து தண்டனிடும் லட்சங்கள் தாமாக எதார்த்தத்தைத் தரிசிக்க முடியாத மந்தை ஆடுகள். உண்மையில் இருந்து அன்னியமான ‘மனிதர்’கள் ….

[முழுக்கட்டுரையையும் படிக்க...]

Saturday, July 18, 2009

அஞ்சலி: கானசரஸ்வதி டி.கே.பட்டம்மாள்

… பட்டின் நேர்த்தியும், தேனின் அடர்த்தியும், மலரின் மென்மையும், வீணையின் கம்பீரமும், அருவியோசையின் ஒழுக்கும் எல்லாம் சேர்ந்த ஒரு அற்புதம் என்று அந்தக் குரலைக் கற்பனை செய்யலாம் ! ஸ்ருதியும், லயமும் சிறிதும் பிசகாமல் ராக பாவம் முழுமையாக நிறைந்து அந்தக் குரலோடு சேர்வதால் விளையும் சங்கீதம் தான் பட்டம்மாளின் இசை….

[முழுக் கட்டுரையும் படிக்க...]

Friday, July 03, 2009

காலவெள்ளம் அலைமோதும் கந்தன் கோயில்: திருச்செந்தூர்

நேற்று திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தேறியது. அதனைத் தொலைக் காட்சியில் கண்டபோது, காலம் காலமாகக் கடற்கரையில் நின்றுகொண்டிருக்கும் இந்தக் கோயிலின் வரலாறு பற்றி மனதில் எண்ண அலைகள் எழுந்தன.. அதனைக் கட்டுரையாக எழுதியிருக்கிறேன்.

தமிழ்ஹிந்து.காம் தளத்தில் படிக்கலாம் -
http://www.tamilhindu.com/2009/07/thiruchendur-in-waves-of-time/

இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு நன்கொடை தந்து உதவுங்கள்!

இலங்கையின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் போரினால் பாதிக்கப் பட்டுத் தத்தளித்துக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களுக்கு உதவிட நன்கொடைகள் வேண்டி சேவாபாரதி அமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.

மேலும் விவரங்களுக்கு, தமிழ்ஹிந்து.காம் தளத்தைப் பார்க்கவும் -
http://www.tamilhindu.com/2009/06/srilankan-tamil-relief-seva-bharathi/

மும்பை இந்து-கிறிஸ்தவ உரையாடல்கள்: ஒரு பார்வை

”சகிப்புத் தன்மையுள்ள நாடான இந்தியாவில், ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடப்பது ஏன்” என்றார் வாத்திகன் பிரதிநிதி. ஆனால், இந்துத் துறவியர் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் கிறிஸ்தவ மதப்பிரசாரம் மற்றும் மதமாற்றங்களே என்பதை ஆணித்தரமாக முன்வைத்தனர். இந்துத் தரப்பின் சார்பாக வெளியிடப் பட்ட அறிக்கையின் மையமான கருத்துக்கள்...

தமிழ்ஹிந்து.காம் தளத்தில் முழுக் கட்டுரையையும் படிக்கலாம் -

http://www.tamilhindu.com/2009/06/mumbai-inter-faith-meet-jun09/