Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Wednesday, February 17, 2010

இந்துக் கோயிலை சொந்தம் கொண்டாடும் அன்னியமத சக்திகள்: இரு நிகழ்வுகள்

செஞ்சியில் திடீரென ஏற்பட்டுள்ள பிரச்னையில் பழைமையான கோவிலின் வழிபாட்டை கிறிஸ்தவர்கள் தடுத்தி நிறுத்தி கோவிலை பூட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. காலனிய அடிமைத்தனத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு, தங்களுடன் காலம் காலமாக வாழ்ந்து வரும் தங்கள் சொந்த சகோதரர்களின் பழமையான வழிபாட்டுத் தலத்தை அபகரிக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் எப்பேர்ப்பட்ட ஈனத்தனம்!...

முழுதும் படிக்க: இங்கே.

Sunday, March 09, 2008

மலேசியாவிலிருந்து ஒரு சந்தோஷ செய்தி!

மலேசியாவில் இருந்து ஒரு நண்பர் அனுப்பிய மடல்:

தொடர்ந்து நீடிக்கும் விரக்திக்கும், கையாலாகாத்தனத்தின் வெறுப்புக்கும்இடையே, சில சந்தோஷங்கள், சின்ன சின்ன சந்தோஷங்கள் கிடைத்துவிடுகின்றன. அதை தெரிந்தவர், தெரியாதவர்களுக்கிடையே பகிர்ந்து கொள்வதிலும் ஒருசந்தோஷம். இன்று காலைச் செய்தி, டத்தொ சாமி வேலு, மலேசிய அரசின் ஒரே தமிழ் மந்திரி, தேர்தலில் தோற்றுப் போனது தான். தன் சுகத்துக்காக, பதவிக்காக, தன் மக்களைக் காட்டிக் கொடுக்கும் துரோகப் பரம்பரையை அன்றைய ஜஸ்டீஸ் பார்ட்டியில் பார்த்தோம். இன்றைய கழகங்கள், தமிழ் நாட்டு கம்யூனிஸ்ட் வகையறாக்களிடம் பார்த்தோம் பார்த்து வருகிறோம். இவர்களுக்கு அழிவு காலம் வராது போலிருக்கிறது. ஆனால், சாமி வேலு தோற்றதில் எனக்கு பரம சந்தோஷம். அவருக்கு தமிழ் நாட்டில் மரியாதை தொடுத்தது அங்குள்ள உலகத் தமிழ் ஈனத்தலைவர் :))

Tuesday, February 19, 2008

மலேசிய இந்துத் தமிழர்கள் வாழ்வுரிமைக்காக இந்து முன்னணி போராட்டம்

பிப்ரவரி 16, 2008 அன்று சென்னை மலேசியத் தூதரகம் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வாழ்வுரிமை கோரிப் போரிடும் HINDRAF அமைப்பினரின் தலைமையில் நடைபெறும் தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்கும் மலேசிய அரசைக் கண்டித்தும், இந்துக் கோயில்கள் இடிக்கப் படுவதனை எதிர்த்தும் கோஷங்கள் இடப்பட்டன.

கைது செய்யப் பட்டுள்ள இந்து தலைவர்களை விடுவிக்கவும், தமிழர்கள் தங்கள் மரியாதையுடனும், உரிமைகளுடனும் வாழ வழிவகை செய்யுமாறு மலேசிய அரசை வலியுறுத்தியும் தூதரகத் தலைவரிடம் மனு கொடுக்கப் பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமகோபாலன், துரை சங்கர் உள்ளிட்ட இந்து முன்னணி தலைவர்களும் கலந்து கொண்டனர். இவர்கள் கைது செய்யப் பட்டு பின்னர் விடுவிக்கப் பட்டனர். பிப்ரவரி 16 அன்றே, HINDRAF தலைவர் வேதமூர்த்தியின் மகள் மலேசியப் பிரதமரை சந்தித்து இதே கோரிக்கைகளை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத் தக்கது.

Thursday, May 10, 2007

தமிழ் நாட்டில் பற்றி எரியும் குடும்பச் சண்டை

நேற்று மதுரையில் ஒரு பிரிவு திமுக ரவுடிகளால் தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட அச்சு அசல் திராவிடத்தனமான வன்முறையில் இரண்டு மென்பொருள் பணியார்கள் மற்றும் ஒரு பாதுகாவலர் என மூன்று அப்பாவித் தமிழர்கள் பலியாகியிருக்கின்றனர். இந்த செய்தியை இன்று காலை படித்துக் கொண்டிருக்கும்போதே நண்பர் ஒருவரிடமிருந்து இந்த மின் அஞ்சல் வந்தது.. நான் எழுத நினைத்ததை இன்னும் நன்றாகப் பிரதிபலித்த அந்த மின் அஞ்சலை அப்படியே தருகிறேன்-

நண்பர்களே,

மதுரை நேற்று பற்றி எரிந்திருக்கிறது. எரித்தவர் கண்ணகி அல்ல. கண்ணகிக்கு சிலை வைத்தவரின் அக்னிக் குஞ்சு. தி மு க ஆட்சிக்கு வந்தால் வழக்கமாக எதிர்க் கட்சியினரரயும் எதிர்க்கும் பத்திரிகைகளையும் எரிப்பார்கள். இன்றைக்கு இவர்கள் குடும்பத்துக்குள் சண்டை, தமிழ் நாட்டையை விலைக்கு வாங்கும் அளவுக்கு பண பலம் ஒரு புறம், தமிழ் நாட்டையே தீ வைத்து எரிக்கும் அளவுக்கு ரவுடிகள் ஆட்சி மறுபுறம். ஐம்பதுகளில் சென்னையில் இருந்து சேலத்துக்கு கள்ள ரயில் ஏறிச் சென்றவருக்கு இன்றைக்கு இவ்வளவு சொத்து, பணபலம், அராஜகம், ஆட்சி அதிகாரம், பேய்கள் ஆட்சி செய்ய பிணம் தின்னும் சாத்திரங்கள்.

இதில் சம்பந்தப் படாத அப்பாவி மக்கள் கொளுத்தப் படுகிறார்கள் என்றும் சொல்ல முடியாது, "ஜனநாயக" தர்ம நியாயப் படிப் பார்த்தோமானால் இந்த அராஜகவாதிகளுக்கு ஓட்டுப் போட்டப் பாவத்துக்கு அப்பாவி மக்கள் உயிரோடு கொளுத்தப் படுகிறார்கள். அன்று சிதம்பரத்தில் ஒரு உதய குமாரன், க்ளைவ் ஹாஸ்டல் மாணவர்கள், கீழ வெண்மணி உழவர்கள், தர்மபுரியில் விவசாயக் கல்லூரி மாணவிகள், தரரசு ஊழியர்கள், இன்று அப்பாவி பத்திரிகை ஊழியர்கள். இந்த அரக்கர்கள் இன்னும் எத்தனை வருடங்கள் ஆண்டு இன்னும் எத்தனை பேர்களை உயிரோடு எரிக்கப் போகிறார்கள் ?

இப்படியாகப் பட்ட ஒரு கட்சி, ஒரு தலைவன், ஒரு ஆட்சி, இவர்களுக்கு ஒரு டி வி, அதில் வரும் ஆபாச அபத்தங்களைக் கண்டு கழித்து மூளை மழுங்கடிக்கப் பட்ட மக்கள், மரத்தை வெட்டும் எதிர்க்கட்சி, வேட்டியை கிழிக்கும் காங்கிரஸ் மொத்தத்தில் தமிழ் நாடே ஒரு அருவருப்பான பிரதேசமாக மாறி விட்டது.

இந்த குடும்ப சண்டையில் நாளைகே ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள் மாஃபியா கும்பல்கள், இதன் பின்புறம் உள்ள அரசியலையும் அதனால் தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் நேர விருக்கும் சாதக பாதகங்களையும் அரசியல் பார்வையாளர்கள் எந்த விதமான பயமும், மாச்சரியமும் இன்றி எடுத்துரைக்க வேண்டும். செய்வார்களா?