Thursday, May 10, 2007

தமிழ் நாட்டில் பற்றி எரியும் குடும்பச் சண்டை

நேற்று மதுரையில் ஒரு பிரிவு திமுக ரவுடிகளால் தினகரன் பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட அச்சு அசல் திராவிடத்தனமான வன்முறையில் இரண்டு மென்பொருள் பணியார்கள் மற்றும் ஒரு பாதுகாவலர் என மூன்று அப்பாவித் தமிழர்கள் பலியாகியிருக்கின்றனர். இந்த செய்தியை இன்று காலை படித்துக் கொண்டிருக்கும்போதே நண்பர் ஒருவரிடமிருந்து இந்த மின் அஞ்சல் வந்தது.. நான் எழுத நினைத்ததை இன்னும் நன்றாகப் பிரதிபலித்த அந்த மின் அஞ்சலை அப்படியே தருகிறேன்-

நண்பர்களே,

மதுரை நேற்று பற்றி எரிந்திருக்கிறது. எரித்தவர் கண்ணகி அல்ல. கண்ணகிக்கு சிலை வைத்தவரின் அக்னிக் குஞ்சு. தி மு க ஆட்சிக்கு வந்தால் வழக்கமாக எதிர்க் கட்சியினரரயும் எதிர்க்கும் பத்திரிகைகளையும் எரிப்பார்கள். இன்றைக்கு இவர்கள் குடும்பத்துக்குள் சண்டை, தமிழ் நாட்டையை விலைக்கு வாங்கும் அளவுக்கு பண பலம் ஒரு புறம், தமிழ் நாட்டையே தீ வைத்து எரிக்கும் அளவுக்கு ரவுடிகள் ஆட்சி மறுபுறம். ஐம்பதுகளில் சென்னையில் இருந்து சேலத்துக்கு கள்ள ரயில் ஏறிச் சென்றவருக்கு இன்றைக்கு இவ்வளவு சொத்து, பணபலம், அராஜகம், ஆட்சி அதிகாரம், பேய்கள் ஆட்சி செய்ய பிணம் தின்னும் சாத்திரங்கள்.

இதில் சம்பந்தப் படாத அப்பாவி மக்கள் கொளுத்தப் படுகிறார்கள் என்றும் சொல்ல முடியாது, "ஜனநாயக" தர்ம நியாயப் படிப் பார்த்தோமானால் இந்த அராஜகவாதிகளுக்கு ஓட்டுப் போட்டப் பாவத்துக்கு அப்பாவி மக்கள் உயிரோடு கொளுத்தப் படுகிறார்கள். அன்று சிதம்பரத்தில் ஒரு உதய குமாரன், க்ளைவ் ஹாஸ்டல் மாணவர்கள், கீழ வெண்மணி உழவர்கள், தர்மபுரியில் விவசாயக் கல்லூரி மாணவிகள், தரரசு ஊழியர்கள், இன்று அப்பாவி பத்திரிகை ஊழியர்கள். இந்த அரக்கர்கள் இன்னும் எத்தனை வருடங்கள் ஆண்டு இன்னும் எத்தனை பேர்களை உயிரோடு எரிக்கப் போகிறார்கள் ?

இப்படியாகப் பட்ட ஒரு கட்சி, ஒரு தலைவன், ஒரு ஆட்சி, இவர்களுக்கு ஒரு டி வி, அதில் வரும் ஆபாச அபத்தங்களைக் கண்டு கழித்து மூளை மழுங்கடிக்கப் பட்ட மக்கள், மரத்தை வெட்டும் எதிர்க்கட்சி, வேட்டியை கிழிக்கும் காங்கிரஸ் மொத்தத்தில் தமிழ் நாடே ஒரு அருவருப்பான பிரதேசமாக மாறி விட்டது.

இந்த குடும்ப சண்டையில் நாளைகே ஒன்றாக சேர்ந்து கொள்வார்கள் மாஃபியா கும்பல்கள், இதன் பின்புறம் உள்ள அரசியலையும் அதனால் தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் நேர விருக்கும் சாதக பாதகங்களையும் அரசியல் பார்வையாளர்கள் எந்த விதமான பயமும், மாச்சரியமும் இன்றி எடுத்துரைக்க வேண்டும். செய்வார்களா?

11 comments:

அரவிந்தன் நீலகண்டன் said...

இந்த கீழ்த்தரங்கள் ஜிகாதி மிருகங்களுக்கு வாலாட்டி பாலூட்டி உதிரமூட்டி வளர்ப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது, முதலமைச்ச'ர்' காட்டியிருப்பது - குடும்ப பாசம் அல்ல குடும்ப பாசிசம். தூ. என்ன சொல்ல....இவன்களை துப்பினால் எச்சிலை டெட்டால் விட்டு கழுவவேண்டும்.

அருணகிரி said...

தா. கிருட்டிணன் கொலை, உள்ளாட்சித் தேர்தலில் ரவுடி வன்முறை என்று மலினப்பட்டுப்போன அரசியல் சூழல் தமிழகத்தில் தொடருவதைத்தான் இது உறுதி செய்கிறது. என்ன பாவம் செய்தார்கள் அந்த அப்பாவி ஊழியர்கள்? இந்த பழியும் பாவமும் இந்த வன்கொடுமையின் பின்னணியில் இருப்பவர்களைச் சும்மா விடாது.

தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்.

Vajra said...

வாரிசு வக்கிரத்தின் உச்சகட்டம்.

மதுரையில் அன்றயதேதி எந்தத் தொலைக்கட்சியும் ஒளிபரப்பக் கூடாது என்று ரவுடிகள் மிரட்டியதால் கேபிள் ஆப்பிரேட்டர்கள் அனைவரும் கேபிளை "சுவிட்ச் ஆப்" செய்துவிட்டனர்.

இதன் பெயர் தான் இருட்டடிப்பு செய்வது. கடைசியில் இரவில் சன், சன் செய்திகள், மற்றும் ஜெயா மட்டும் ஒளிபரப்பினார்கள். ஒண்ணும் இல்லாத சப்பை மேட்டருக்கே இவ்வளவு நேரம் இருட்டடிப்பு செய்கிறார்கள். ஏதாவது பெரிதாக நடந்தால் என்னென்ன செய்வார்களோ இந்த ரவுடிகள்.?

அழகிரியினால் மதுரை நாசமாகிக் கொண்டு இருப்பது தான் உண்மை.

Anonymous said...

ஜெயலலிதா உயிரோட கல்லூரிப் பெண்களை வைத்து கொளுத்தியபோது என்னடா செய்தே பாப்பார நாயே? அப்போ எழுதுனியா வலையிலே?

Anonymous said...

"தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்."

WITH LOVE AND REGARDS,
B.MURALI DARAN.

ஜடாயு said...

// ஜெயலலிதா உயிரோட கல்லூரிப் பெண்களை வைத்து கொளுத்தியபோது என்னடா செய்தே பாப்பார நாயே? அப்போ எழுதுனியா வலையிலே? //

இந்த பதிவிலேயே "தர்மபுரியில் விவசாயக் கல்லூரி மாணவிகள்" என்று வருவதைப் பார்க்கவில்லையா அனானி?

ஜடாயு said...

// கடைசியில் இரவில் சன், சன் செய்திகள், மற்றும் ஜெயா மட்டும் ஒளிபரப்பினார்கள். ஒண்ணும் இல்லாத சப்பை மேட்டருக்கே இவ்வளவு நேரம் இருட்டடிப்பு செய்கிறார்கள். //

பெங்களூரில் எல்லா சேனல்களும் ஒழுங்காக வர, ஜெயா டிவியில் குரல் இல்லாமல் படம் மட்டும் வந்ததாக பல நண்பர்கள் சொன்னார்கள். இந்த அராஜகம் கர்நாடகம் வரை வந்துவிட்டது போலிருக்கிறது!

// ஏதாவது பெரிதாக நடந்தால் என்னென்ன செய்வார்களோ இந்த ரவுடிகள்.? //

ஆம். கௌரவர்களே தங்களுக்குள் போரிட்டுக் கொள்ளும் ஒரு குருக்ஷேத்திரத்திற்கான சாத்தியம் உள்ளது.

பனித்துளி said...

ஆம். கௌரவர்களே தங்களுக்குள் போரிட்டுக் கொள்ளும் ஒரு குருக்ஷேத்திரத்திற்கான சாத்தியம் உள்ளது.

கௌரவர்கள் தங்களுக்குள் போரிடுவதற்கும், பாண்டவர்கள் போராடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதே.

பாண்டவர்களுக்குள் நடக்கும் போரால் பாண்டவர்களுக்கு மட்டும்தான் பாதிப்பு. கௌரவர்களின் போரால் அப்பாவிகள்தான் சொத்தையும் உயிரையும் விடுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு ஓட்டுப்போடுபவர்களுக்கும் இந்த பாவம் சேரும்தான். ஏனெனில் ஒரு அக்கிரமத்தை மற்றொரு அக்கிரமத்தால் அங்கீகரிக்கும் போக்கு இருக்கும்வரை இது தீர வழியில்லை.

தினகரன் அலுவலகத்தில் வாழ்வில் தங்களுக்கும், தங்கள் குடும்பத்திற்கும் வளம்தரும் பொறுப்பைச் சுமந்திருக்கும் மூன்று இளைஞர்களை கொன்றார்கள் - போலீஸ் பாதுகாப்போடு. பேப்பர்களில் போட்டோ வந்திருக்கிறது.

இணையத்தில் இந்த ரௌடிகளின் கட்சிக்கு ஆதரவாக பூத்தில் ஏஜண்டாக இருந்தவர்கள் அதிகம் இருக்கிறார்கள். திராவிட பாரம்பர்யம் (?) தங்களுடையது என்று குழுவாக செயல்பட்டு மனோவியாதி ஆளவந்தான்களை காப்பாற்ற அக்கிரமத்தில் ஈடுபடுகிறார்கள். வலைத்திரட்டி ஏதோ ஒன்றுகூட இதற்கு ஆதரவு என்று கேள்வி.

ஜாக்கிரதை ! இவர்களைக் காப்பாற்ற செய்தித்தாளில் உருட்டுக்கட்டையோடு இருப்பவர் ஜடாயுதான் என்று ஐபி அட்ரெஸ் வைத்து கண்டுபிடித்துவிட்டதாக ஏதேனும் ரௌடி கும்பல் புரளி கிளப்பலாம்.

போலீஸ்காரர்கள் காக்கி பேண்ட் போட்டிருப்பதால், ஆர் எஸ் எஸ் ஆட்கள்தான் அவர்கள் என்று ஆதாரபூர்வ செய்தி வந்திருப்பதாகவும் யாரேனும் பதிவு போடுவார்கள்.

உடனேயே அந்த பதிவிற்கு ஜீரா, கருமி, கிராமகி, நிழல்கள் ரவி, முதலானோர் போய், ஜடாயுவைப் போய் நல்லவர் என்று நினைத்தோம் அவரது குட்டை அம்பலப்படுத்தியதற்கு நன்றி என்று பின்னூட்டம் போடுவார்கள். துலுக்க சுவர்க்கத்திற்கு பிரியமானவர்கள் யாரேனும் இந்துத்துவாவின் இழிவிற்கு ஆதாரம் கிடைத்தது என்று அறிக்கை விடுவார்கள்.

ஜாக்கிரதை ! ஜாக்கிரதை !

Reason said...

There was an attempt to make this an issue of 'press freedom'. Other than the degenerate Hindu, nobody else in the media seems to have fallen for that. The Indian express and deccan herald wrote editorials clearly pointing out that media is being used as a tool in family politics. The coverage in other media (TV channels and times of India) too projected this as a family feud.

The classic saying of 'you can fool some of the people some of the time, but not all the people all the time' - it is good to see that atleast media in general refused to get fooled. Hopefully the people of TN, caught between the competing cesspools of Dravida politics, too will stop getting fooled some day.

பனித்துளி said...

Dear Reason,

You inform that Indian Express and Deccan Herald clearly point out that media is used in family feuds.

The question is be it family feud, or anything else, either the media or the politcal strong hand can do whatever they want to do without caring a damn about those to whom they should be responsible?

Do the editors of the deccan and indian express say that media has all the liberty to misuse its power and mafia families should be allowed to do anything they wish?

And other media protest atleast one dangerous element in support of the other dangerous element that prove again that the entire media have gone to dogs - including those media that condemn the media's angst against the atrocity.

Anonymous said...

They are paying for the deed they have done...Wat else we can say about it....