Wednesday, January 24, 2007

பெரியாருக்கு ஒரு கவிதாஞ்சலி

திண்ணையில் பல அருமையான கட்டுரைகளை எழுதிவரும் நண்பர் திரு. அருணகிரி தான் இயற்றிய இந்தக் கவிதையை மின் அஞ்சலில் அனுப்பியிருந்தார்.

காதைப்பிளக்கும் பெரியார் பஜனைகளுக்கு நடுவில், சந்தம் தளைதட்டாமல் கருத்துக்கள் களைகட்டும் ஒரு நல்ல மரபுக் கவிதை. Hats off அருணகிரி!

இந்த அருமையான கவிதையை அவர் அனுமதியுடன் இங்கு வெளியிடுகிறேன்.

ஈ.வெ.ரா பெரியார் - இவரா பெரியார்?

பெரியார் யாரெனத் தெரியா மூடர்
சிறுமை தம்முள் அதிகம் கொண்டவர்
ஒருவர் தம்மைத் தேர்ந்து எடுத்து
பெரியார் என்றொரு பெயரும் வைத்தார்.

அறியார் அறவழி தெரியார் அடிமை
வெறியார்வத்தால் வேற்றவனுக்கு
விரிவாய்ப் பலவாய்ச் சேவகம் செய்து
இழிவாய் வாழ்ந்தார் இவரா பெரியார்?

அடிமை செய்த வெள்ளையன் அவனின்
கொடுமைத் தளையைக் கொன்றிடும் நாளில்
மிடிமை கொண்டெமை மீண்டும் ஆளெனக்
கடிதம் போட்டார் இவரா பெரியார்?

செந்தமிழ் மொழியின் சிறப்பறியார், பல
குந்தகம் சொன்னார்; கொள்ளையன் வந்து
தந்த அம்மொழியே தனிச்சிறப் பென்றார்
இன்தமிழ் இகழ்ந்தார் இவரா பெரியார்?

கீழ்மைச் சிந்தனை யாளர் சீழ்மனப்
பான்மை கொண்டு ஆபாசப் பேச்சில்
தாழ்மைக் கோஷம் போட்டார் சொல்லின்
நேர்மையற்றார் இவரா பெரியார்?

உள்ளம் தன்னில் உயர்நெறி இல்லார்
சொல்லும் சொல்லின் சுத்தம் அறியார்
தள்ளும் வயதில் மகளெனத் தக்க
பிள்ளை மணந்தார் இவரா பெரியார்?

மண்ணின் உடலை மதத்தால் வெட்டி
பின்னப் படுத்திய எதிரியைப் போல
இன்னும் இதனை இரண்டாய் வெட்டச்
சொன்னார் சிறியார் இவரா பெரியார்?

நாய்ப்பால் குடித்த நரிக்குக் கூட
நன்றி என்றொரு ஞாபக மிருக்கும்
வாய்ப்பால் வெள்ளையன் வாலைத் தூக்கி
நோய்ப்பால் குடித்தவர் இவரா பெரியார்?

வீட்டின் விளக்கை விலைமகள் என்று
ரோட்டில் செல்கையில் கேவலம் செய்யக்
கூட்டம் சேர்த்துக் குறுமதி சேர்த்துக்
காட்டிக் கொடுத்தார் இவரா பெரியார்?

அறிவின் விரிவில் அடக்கம் காட்டி
எளியார் மீதும் இரக்கம் காட்டி
கருமித்தனமும் காழ்ப்பும் நீங்கிய
தருமர் எவரோ அவரே பெரியார்!

26 comments:

ஜடாயு said...

testing..

ஜடாயு said...

மிக அசிங்கமான, ஆபாசமான வார்த்தைகளைப் போட்டுத் திட்டி ஒரு பின்னூட்டம் பெரியார் அடியார் "விடாது கருப்பு" என்பவரிடமிருந்து வந்தது. அதை நிராகரிக்கிறேன்.

கவிதையின் முதல் அடிகள் எவ்வளவு பொருள் பொதிந்தவை என்று தெரிகிறது.

Anonymous said...

//அறிவின் விரிவில் அடக்கம் காட்டி
எளியார் மீதும் இரக்கம் காட்டி
கருமித்தனமும் காழ்ப்பும் நீங்கிய
தருமர் எவரோ அவரே பெரியார்! //

சக மனிதன் மேல், காழ்ப்புணர்ச்சி மிகுந்துபோய் எழுதும் நீர் நிச்சயமாய் வயதுமிகினும் உருவில்மிகினும் சிறியோர்தான்.. பெரியாரைப் பற்றிப் பேசவும் தகுதியுமக்குண்டோ..

பங்காளி... said...

ஏங்காணும்....அப்டியே அந்த கவிஞராண்ட சொல்லி காஞ்சி பெரியசாமி, சின்னசாமி பத்தி கவித கேட்டு வாங்கிப்போட்டேள்னா போற வழிக்கு புண்ணியமாப்போகும்....

நம்ம ரெக்வஸ்ட்ட கன்ஸிடர் பண்ணுங்கோ ஜடாயூ சார்...ஹி..ஹி..

Anonymous said...

This jack ass Pangaali/s attempt at humour is pathetic.

Sridhar

Bharathi said...

Well written, Job accomlished!

bala said...

//மிக அசிங்கமான, ஆபாசமான வார்த்தைகளைப் போட்டுத் திட்டி ஒரு பின்னூட்டம் பெரியார் அடியார் "விடாது கருப்பு//

ஜடாயு அய்யா,

கருப்பு அய்யா வந்தேறிகளை திரும்பி கைபர்/போலன் வழியா போங்கன்னு ஆர்டர் போட்டுட்டார் அய்யா அவர் பதிவு மூலமா.நானும் ஒரு லாரி அனுப்பி வைங்கன்னு ஒரு பெடிஷன் குடுத்து விட்டேன்.

பாலா

கால்கரி சிவா said...

//நாய்ப்பால் குடித்த நரிக்குக் கூட
நன்றி என்றொரு ஞாபக மிருக்கும்
வாய்ப்பால் வெள்ளையன் வாலைத் தூக்கி
நோய்ப்பால் குடித்தவர் இவரா பெரியார்?//

சூப்பரான வரிகள் இவை

அருணகிரி அருமை

சிறில் அலெக்ஸ் said...

பெரியார் செய்த புரட்சியால் நன்மை ஏதும் பெறாதவர்கள் அவரைப் பற்றி கவிதை எழுதுவதை தவிர்த்தல் நலம்.

பெரியார் இல்லாத தமிழ் வரலாற்றில் கீழ்த்தட்டு வர்க்கம் எப்படி முன்னேறியிருக்கும் என்பதையும் தாங்களே சொல்லிவிட்டால் நலம்.

பெரியார் சொல்லியிருக்கும் எல்லாமே சூப்பர் என்பதை ஒருபோதும் ஏற்கத்தயாராயில்லை. அதற்கு அவசியமில்லை என்பதையும் அவரே கூறியிருக்கிறார்.

arunagiri said...

"சக மனிதன் மேல், காழ்ப்புணர்ச்சி மிகுந்துபோய் எழுதும் நீர் நிச்சயமாய் வயதுமிகினும் உருவில்மிகினும் சிறியோர்தான்.. பெரியாரைப் பற்றிப் பேசவும் தகுதியுமக்குண்டோ.."

என்னை யாரும் பெரியார் என்று அழைப்பதில்லையே. இப்படிப்பட்ட பெரியாராய் இருப்பதை விட இப்போது இருப்பது போலவே இருப்பதுதான் எனக்கு சாலச்சிறந்தது.

மேலும் விமர்சனத்தகுதி எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் உண்டு. வெறும் சக மனிதனுக்கு இத்தகு கீழ் குணங்கள் இருந்தால் அது வேறு. ஆனால், பெரியார் என்று புனித பிம்பமாக்கப்படுபவரை நோக்கி இந்தக் கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது. புனித பிம்பங்களை உடைத்து மீள் பார்வை செய்வதை ஈவேராவே ஒப்புக்கொள்வார்தான், இல்லையா?

சிறில்,

நல்ல கருத்து. யார் யார் எதைப்பற்றி கவிதை எழுதலாம் என்று ஒரு லிஸ்ட் போட்டு வெளியிட்டு விடுங்கள். அனைவருக்கும் உதவும். உதாரணத்திற்கு காஞ்சி மடத்தால் பயன் பெறாதவர்கள் அதைப்பற்றி எழுதக்கூடாது, அல்லது ஒரு மதத்தால் பயன் பெறாதவர்கள் அந்த மதம் குறித்து விமர்சிக்கக்கூடது என்றெல்லாமும் சென்சார் அறிக்கை விட்டு விட்டால் ஒரு மாரல் கன்ஸிஸ்டன்ஸி இருக்கும், இதற்குமுன் அப்படி விட்டிருக்கிறீர்களா என அறியவும் ஆசை.

பெரியார் இல்லாத தமிழ் நாட்டில் கீழ்த்தட்டு வர்க்கம் எப்படி முன்னேறியிருக்கும் என்ற கேள்விக்கு, பெரியார் இல்லாத கேரளத்தில் கீழ்த்தட்டு ஈழவர்கள் எப்படி முன்னேறினார்கள் என்று பாருங்கள். பெரியார் இல்லாத வங்காளத்தில் எப்படி வங்க மொழி இலக்கியமும், நாடகமும் செழித்தது எனப்பாருங்கள். பெரியார் செய்த
கு க்ளக்ஸ் கான் வகை போலி இனவெறி அராஜகங்கள், வெள்ளையன் கால் பிடித்து தேசவிடுதலைக்கு உயிரும் உடைமையும் அர்ப்பணித்த தலைவர்களை ஏளனம் செய்தது, உமிழ்ந்த இந்து மதக் காழ்ப்புகள், ஜின்னாவுடன் சேர்ந்து கொண்டு பிரிட்டிஷ்காரனிடம் தனிநாட்டுக்கு மனுப்போட்டது, சுதந்திர தினத்தை துக்க நாளாகப் பார்த்தது, இந்து தெய்வங்களை செருப்பால் அடித்தது, இஸ்லாமிஸ்ட்டுத்தனமாக சிலைகளை உடைத்தது இவற்றால் எல்லாம் பாதிக்கப்படாதவர்கள் இக்கவிதை குறித்து கருத்து சொல்வதைத் தவிர்த்தல் நலம்.

Anonymous said...

வந்துட்டாரு ஐயா ப்ரதர் சிறில். ஆமாம் அருணகிரி ஈ வெ ராவினால் பயன் அடைந்த மிஷ நரிகளில் ஒருவர் அல்லவே அதனால அவரைப் பத்திப் பாடக் கூடாது. மிஷநரிகளில் ஒருவரான சிறில் அலெக்ஸுக்கு ஈ வெ ராவுக்கு நன்றி சொல்ல ஆயிரம் காறானாணங்கள் இருக்கலாம். சர்ச்சிடம் வாங்கிய காசுக்கு குரைத்த நாய்தானே ஈ வெ ரா, அவரைப் பற்றி யாராவது உண்மையைச் சொன்னா காசு கொடுத்த சர்ச் ஆசாமிக்கும் கோபம் வரத்தானே செய்யும். அருணகிரி இனிமேல் நீங்க கவிதை எழுதுவதற்கு முன் போப்பாண்டவரிடம் ஒரு அப்ரூவல் வாங்கிக் கிடுங்க, அப்படியே நம்ம சிறில் ஐயா கிட்டேயும் ஒரு அனுமதி கடுதாசி வாங்கிக்கிட்டு அதுக்கு அப்புறமா கவிதை எழுதலாமா இல்லை வேண்டாமான்னு திங் பண்ணுங்க.

அது சரி சிறில் வாதப் படி யாரார் ஈ வெ ரா பற்றி கவிதை எழுதலாம் ?

ஈ வெ ரா வால் பிழைப்பு நடத்திய மிட்டா மிராசுதார்கள்

ஈ வெ ரா வின் தயவினால் ஆத்ம அறுவடை நடத்து மிஷ நரிகள்

ஈ வெ ரா வுக்கு மிஷநரிகள் கொடுத்த சொத்தை பரிபாலனம் செய்யும் தி க மணிகள்

ஈ வெ ரா வின் பெயரைச் சொல்லி திராவிடப் பிழைப்பு நடத்தி பீல்லியனராகிய கருணாநிதி அண்டு கம்பெனி அவருடைய கட்சிக்காரர்கள்

அருணகிரி நீங்கள் இந்த மானம் கெட்ட கேவலமான க்ரூப்பில் எதிலாவது வருகிறீர்களா ? இல்லையே இனிமேல் தாசில்தாச் சிறில் அலெக்சைக் கேட்டு விட்டு கவிதை எழுதுங்கள். வந்துட்டானுங்க

அப்ப்டி என்னங்கடா புரட்சி செய்துட்டான் ஈ வெ ரா ? தன் பொண்டாட்டியை உறாரான் மேயச் சொல்லி அனுமதி கொடுத்தானெ அது புரட்சியா, குளிக்காம திடிஞ்சானே அது புரட்சியா, வைக்கத்துல போராடினேன் என்று டூப் விட்டு திரிஞ்சானே அது புரட்சியா ? எல்லோரும் எல்லாரோடையும் படுத்துக் கொள்ளலாம் என்று எயிட்ஸ் வரக் காரணமாக இருந்தானெ அது புரட்சியா ? தலித் பெண்களை ஆபாசமாகப் பேசினானே அது புரட்சியா ? ஊருல உள்ள ஆதிக்க ஜாதில பாப்பானை மட்டும் தாக்கினானே அது புரட்சியா ? பாப்பான் வீட்டையெல்லாம் தீ வைத்துக் கொளூத்தச் சொன்னானே அது புரட்சியா ? கூலி உயர்வு கேட்டவனைக் கொளுத்திய தன் தி க கட்சிக்கார நாயுடு செய்தது நியாயம் என்று சொன்னானே அது புரட்சியா ? தமிழைக் காட்டுமிராண்டி பாசை என்று சொன்னானே அது புரட்சியா ? 80 வயதில் 20 வயதுக் குமரியைக் கட்டிக்கிட்டானே அது புரட்சியா ? கோடி கோடியா கிற்த்துவ மதமாற்ற நாய்களிடம் காசு வாங்கிக் காட்டிக் கொடுத்தானே அது புரட்சியா ? வெள்ளைக் காரந்தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்று பெட்டிசன் கொடுத்தானே அது புரட்சியா ?

சிறில் உன்னோட யேசுவையும் மேரியையும் ஆபாசமாகப் பேசும் ஒருவரை நாங்கள யாராவது பாராட்டினால் உனக்கு எப்படி எரியும். இந்து மதக் கடவுள்களை ஆபாசமாக இகழ்ந்த ஒரு நாய்க்கு வக்காலத்து வாங்குவதை இனிமேலாவது நிறுத்திக் கொள்

Anonymous said...

சிறில்

பெரியார் செய்த புரட்சியால் நன்மை ஏதும் பெறாதவர்கள் அவரைப் பத்தி கவிதை எழுதுவதைத் தவிர்க்க வேண்டுமா ?

ஒரு பின்னூட்டத்த போடும் முன்னாடி கொஞ்சமாவது யோசித்து எழுதுவீங்களா மாட்டீங்களா? படிக்கும் பொழுதே அதன் கேனத்தனம் தெரியவில்லை ?

உங்கள் வாதப் படி காஞ்சி சாமிகளின் பக்தியினால் பயனேதும் பெறாதவர்கள் காஞ்சி சாமிகளைப் பற்றி எதுவும் எழுதக் கூடாது. கிறிஸ்துவ தேவாலயங்களின் புரட்சியினாலோ அல்லது யேசுவின் புரட்சியினாலோ பயனேதும் பெறாதவர்கள் (அதாவது காசு வாங்கிக் கொண்டு மதம் மாறாதவர்கள்) யேசுவைப் பற்றியோ சர்ச்சைப் பற்றியோ கவிதை எழுதக் கூடாது, கருணாநிதி செய்த புரட்சியினால் பயனேதும் பெறாதவர்கள் அதாவது லஞ்ச ஊழல் செய்து கோடீஸ்வரர் ஆகாதவர்கள் கருணாநிதியைப் பற்றி எதுவும் எழுதக் கூடாது, ............. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாமா?

அடுத்த தடவையாவது ஒரு பின்னூட்டம் போடும் முன்னால் அது உங்களுக்கே லூசுத்தனமா தெரியவில்லையா என்பதை ஒரு செகண்ட் சிந்தித்து விட்டுப் போடட்டும்.

இந்த இணைய காலத்திலே கடவுளையே கேள்வி கேக்குறானுங்க, முகமதுவையே கார்டூன் போடுறாங்க, ஒரு சாதாரண ராமசாமி நாயக்கனைப் பத்தி கவிதை எழுத அவரால் பயன் பெறாதவர்களுக்குத் தகுதி இல்லை என்று தாசில்தார் சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ராமசாமி நாயக்கன் என்ற பொறுக்கி ஒரு ரவுடி சொல்லி வீடுகளை இழந்த அடி வாங்கிய எத்தனை அப்பாவி பிராமணர்கள் இருபபர்கள் அவர்கள் எல்லோரும் பொத்திக் கிட்டுப் போகனும் என்கிறீர்களா, ராமசாமி நாயக்கன் விநாயகரை செருப்பால் அடித்த பொழுது மனம் நொந்த எத்தனை இந்து பக்தர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு எல்லாம் அவரை கண்டித்து கவிதை எழுத உரிமை இல்லையா என்ன? கொஞ்சம் உங்க மூஞ்சியையும் கண்ணாடில பார்த்து விட்டு அப்பாலிக்கா அருணகிரி ஐடியா கொடுங்க சாரே

Anonymous said...

சிறில்

பெரியார் இல்லாத தமிழ் வரலாற்றில் சந்தன வீரப்பன் இல்லாத தமிழ் வரலாற்றில் எப்படி முன்னேறி இருக்குமோ அப்படி முன்னேறி இருக்கும். பெரியார் இல்லாத கன்னட வரலாற்றில் எப்படி முன்னேறி இருக்குமோ அப்படி முன்னேறி இருக்கும், பெரியார் இல்லாத கேரளாவில், மஹராஷ்டிரத்தில் எப்படி முன்னேறி இருக்குமோ அப்படி முன்னேறி இருக்கும், தமிழ் நாட்டில உங்க பெரியார் வன்முறை, ரவுடித்தன, ஒழுக்கமின்மையைத் தவிர வேற ஒரு புண்ணாக்கையும் வளர்க்கவில்லை. உங்க முட்டத்தில எத்தனை பிராமணர்கள் உங்களை அடிமையாக நடத்தினார்கள், பெரியார் வந்து உங்கள் அடிமைச் சங்கிலியை கத்தரிச்சு விட்டாருன்னு சொல்ல முடியுமா ? சும்மா ஜல்லி அடிக்காதீங்க ஐயா, உங்களுக்கு சர்ச்சில் காசு வாங்கிக் கொண்டு இந்து மதத்தை ஆபாசமாக இகழ்ந்த ஈ வெ ராமசாமி நாயக்கன் பெரியாராகத் தெரியலாம் ஆனால் கோடிக்கணக்கான இந்துக்களுக்கு அவன் ஒரு பொறுக்கிதான்.

ஜடாயு said...

அனானிஸ்,

நாராயண குரு, அம்பேத்கர் போன்ற தன்னலமற்ற தலைவர்கள் தலைமையில் சமூக நீதிப் போராட்டம் நடைபெறாமல் ஒரு சுயநல கயவரான ஈவெரா கையில் போனது தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டம் என்று எழுத வேண்டும் என்று நினைத்தேன். அதை உங்கள் போக்கில் நீங்கள் சொல்லி விட்டதற்கு நன்றி.

ஆனால், சிறில் அவர்களை பெயரிட்டு அழைத்து லேபிள் செய்வதைக் கண்டிக்கிறேன். இப்படி தனிமனிதத் தாக்குதல்களைத் தவிர்த்து கருத்துக்களை முன்வைக்கவும்.

ஜடாயு said...

சிறில் said

// பெரியார் செய்த புரட்சியால் நன்மை ஏதும் பெறாதவர்கள் அவரைப் பற்றி கவிதை எழுதுவதை தவிர்த்தல் நலம். //

சிறில், நான் இப்போது கவனித்து வரும் ஒரு மோசமான சமூக போக்குக்கு உரம் சேர்ப்பது போல் நீங்கள் எழுதிருப்பது வருத்தம் அளிக்கிறது.

மாபெரும் மக்கள் தலைவர்களை, நாட்டிற்கும், சமூகத்திற்கும் அவர்கள் செய்த ஒட்டுமொத்த நன்மையைக் கருத்தில் கொண்டு மதிப்பிடுவது தான் தேசிய சிந்தனையை வளர்க்கும், அந்த ஆளால் எனக்கு (அல்லது என் சாதிக்கு) என்ன கிடைத்தது என்ற ரீதியில் யோசிப்பது பிரிவினையைத் தான் வளர்க்கும்.

உதாரணமாக, அம்பேத்கர் என்ற மாமனிதரை எல்லா சாதிக்காரர்களும் போற்ற வேண்டும், தலித்துக்கள் மட்டும் அல்ல. பெங்களூரில் உயர்தட்டு மக்கள் வசிக்கும் ஒரு இடத்துக்கு அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும் என்று நான் சொன்ன போது ஒரு மாதிரியாகப் பலர் என்னைப் பார்த்தனர் ! (வழக்கமாகச் சேரிகளுக்குத் தான் அவர் பேர் வைப்பார்கள் என்று ஒரு படித்தவர் சொன்னார்) அம்பேத்கர் ஒரு தேசியத் தலைவர் என்று நான் புரிய வைக்க கஷ்டப் பட வேண்டியதாயிற்று.

காந்திஜி, பாரதி, விவேகானந்தர், நேதாஜி போன்ற தலைவர்களும் இப்படியே. இவர்களை சாதி,மத,மொழி ரீதியில் லேபிள் செய்யும் கூட்டம் தேசத்திற்கு நல்லதல்ல.

ஆனால், இதில் எந்த வகையிலும் போற்றுதலுக்குத் தகுதியற்றவர் ஈவெரா. இதுவும் லேபிளிங் தானே என்று கேட்கலாம். ஆம், சமூகத்துக்குத் தீங்கிழைத்த தேச விரோதியை எல்லாப் பிரிவினரும் சரியாக அடையாளம் காணவேண்டும். அவர் செய்த ஒட்டுமொத்தத் தீமைக்காக.

Hariharan # 26491540 said...

அருணகிரி,

சத்தியமான வார்த்தைகள், ஈரோட்டு வெங்காயம் இல்லாமலே நாராயண குரு போன்ற ஆன்மீகவாதிகள் கேரளத்து ஈழவர்களை மேலேற்றி இருக்கின்றார்கள்.

இதில் ஈரோட்டு வெங்காயம் வைக்கத்தில் நாராயணகுருவையும் மிஞ்சிய சீர்திருத்தப் புர்ச்சி செய்ததாகக் கதைவிடுகிறார்கள்!

வெங்காயம் அழுகல் எண்ணங்களுடன் செயல்பட்டவர். அழுகல் குப்பைக்குப் போகவேண்டியது என்பது பகுத்தறிவு இல்லாமல் பொதுஅறிவு இருந்தாலே புரியும்.

ஒழுக்கமின்மையை தமிழகத்தில் ஏற்படுத்திய அரசியல் திரா"விட"ப் பொறுக்கிக் கொள்கைக்கு வித்திட்டது ஈரோட்டு வெங்காயம் என்பதை மறந்து அழுகல் ஆசாமிக்கு பெரியார் என்று தகாத மரியாதை தருவது புண்ணாக்குச் சிந்தனையே!

கரு.மூர்த்தி said...

அருணகிரியின் மிக அருமையான கவிதை , கூடவே அந்த அனானியின் நல்ல கேளிவிகள் பிரமாதம் .

இந்த மாதிரி ஒரு இழிபிறவி தலைவர் தோன்றாத கேரளமும் ஆந்திரமும் முன்னேறவேயில்லையா என்ன ? இந்த ஆளால் தமிழகம் எய்ட்ஸ்ல் நெ 1 ஆனதுதான் மிச்சம் .

bala said...

ஜடாயு அய்யா,

பெரியாரிடம் பெரிதாக இருந்தது,அயோக்யத்தனமும்,தாடியும் தான்.கருப்பு சட்டை அரைவேக்காட்டு குஞ்சுகள் தான் இந்த ஆளை,பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் ரேஞ்சுல புகழ்ந்து தள்ளுங்க.ஒட்டு மொத்தமா பாத்தா,இந்த கருப்பு சட்ட கும்பலைத் தவிர வேற யாரும் இந்த தாடி சொன்னதை சிலாகிக்க காணோம்.தமிழன் என்றாலே கிண்டலாக, ஆந்திராத்தில்,கர்நாடகத்தில் பார்க்கறாங்க.அதுக்கு முக்கிய காரணம் இந்த தாடியும், அவரோட சிஷ்ய கோடிகளும் தான் காரணம்.

பாலா

சிறில் அலெக்ஸ் said...

சரிதான் அண்ணன் தம்பிங்க நீங்க சண்ட போட்டுக்கறீங்க நமக்கு என்ன வேலை.

:)

உங்கள் பதில்களிலும் உண்மை இருப்பதை மறுக்க இயலவில்லை.

முட்டத்தில் பிராமணர்கள் அடக்குமுறை செய்யவில்லை என பகிரங்கமாகவே சொல்கிறேன். அந்தக் காலத்துல மீன் பிடிக்கிறவங்ககூட பிராமணர்கள் தொடர்பு வைத்திருந்தனரா எனத் தெரியவில்லை (இராமருக்கு ஒரு மீனவ பக்தர் இருந்தார் எனப் படித்திருக்கிறேன்.)

ஆனா ஜாதீய அடக்குமுறை நிச்சயம் இருதிருக்கும் இதுவே இவர்களின் மனமாற்றத்துக்கு துருப்புச்சீட்டென கேள்விப்பட்டிருக்கிறேன்.

பெரியார் காலத்துக்கு முன்னமே எங்க ஊர் மக்கள் மதம் மாறிட்டாங்க என்பதும் உண்மை.

போன பின்னூட்டத்தில் சொல்ல மறந்துட்டேன். கவிதையில் தமிழ் மிளிர்கிறது.

Anonymous said...

சிறில் அவர்களின் நேர்மையான பதிலுக்கு நன்றி.

ஜடாயு சார் சிறிலை மட்டும் குறி வைத்துத் தாக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் யாருக்கும் கிடையாது, அவரவர் கோபம், தார்மீகமான கேள்விகள் தெறித்து விழும் பொழுது கொஞ்சம் சூடாகத்தான் விழும், எரிமலைக் குழம்பு என்ன குளிர்ச்சியாகவா பீறிட்டு அடிக்கும் ? ஈ வெ ரா வை விமர்சிக்கத் தகுதி அருணகிரிக்கு இல்லை என்று சொன்னதால் அவரது கருத்துக்கு உள்நோக்கம் கற்பிக்கப் பட்டது. அவரது ஆள் மனதில் அது போன்ற உள்நோக்கம் இருந்ததன் காரணமாகவே ராமசாமி நாயக்கரின் சப்போர்ட்டுக்கு வந்தார் என்றுதான் ராமசாமி நாயக்கரை விமர்சிப்பவர்கள் நினைப்பார்கள். அதுதான் காரணம்.

சொல்ல மறந்து விட்டேன், கவிதை மிக அருமை. மரபுக் கவிதையின் மீது எல்லோருக்குக் காதல் வர வைத்து விட்டார் அருணகிரி

சுபமூகா said...

பார்ப்பன இழிபிறவிகளின் மூளை எப்படி கேவலமாக சிந்திக்கிறது என்பதற்கு இந்த பதிவு ஒரு முன்னுதாரணம்.

Muse (# 5279076) said...

No wonder. Only "AruNagiri" can write such a poem with such a beautiful verses.

Dear AruNagirinaatharee, vaazththukkaL.

பெரியார் இல்லாத தமிழ் வரலாற்றில்

பெரியார் - Who?

You mean EVR?

ராமசாமி நாயக்கன் என்ற பொறுக்கி ஒரு ரவுடி சொல்லி வீடுகளை இழந்த அடி வாங்கிய எத்தனை அப்பாவி பிராமணர்கள் இருபபர்கள்.

There you do the mistake sir. It is NOT only brahmins who have lost their houses, their honour by their women being molested. Violences were unleashed against any one who is against Dravidian movement.

Let me tell an incident.

Rajaji was the chief minister then. DMK anounced a threefold strike "mummunai pooraattam" in which the Dravidian scoundrals have assaulted the people of Puthukiraamam in Tuticorin district. Few of the women who were raped and killed are pregnant for 7 to 8 months. Any one can decipher in the first sight that they are pregnant women, but the castism that EVR has spread cannot distinguish between human beings. For them there are only two divisions - other high castes who can live, and the powerless daliths and brahmins who have no right to live.

Rajaji had to set up a separate police station just to stop the recurring violence against people of Puthukkiramam. The violence against every man and women without caste distinction enraged Kalki KrishNamurti to write in his editorial on how women in Puthukkiraamam and other places should protect themselves and save their honour by doing very high sacrifices; and what men should do be a valiant.

These violences have paved the way for the frightened conditions that afraid to reveal anything against EVR and his gang.

Anonymous said...

சுப மூ க

பார்ப்பன இழிபிறவிகளுக்காவது மூளை ஒன்று இருக்க்கிறது, உனக்கு அது கூட இல்லையே, ஈரேட்டுக் கரும்பாறையிடம் அடகு வைத்து விட்டாயே. ஒரு தெருபொறுக்கிக்கு ஆதரவாக பேசும் உனக்கெல்லாம் மூளை எப்படி வளரும்?

Anonymous said...

ம்யூஸ் அவர்களே

இதை அப்படியே முகமூடியின் இயக்குனர் ஐயாவுக்கு பதிவிலும் இட்டு விடுங்கள். நுனிப்புல் மேய்பவர்களுக்கு உதவியாக இருக்கும்

நன்றி

Muse (# 5279076) said...

Respected Mr. Anony,

Done.

சுபமூகா said...

என் பெயரில் வெளியாகி உள்ள கருத்தை நான் அனுப்பவில்லை.
தயவு செய்து அதை நீக்கி விடவும்.

http://puthupunal.blogspot.com/2007/01/blog-post_30.html

நன்றி,

சுபமூகா