Monday, January 22, 2007

பெங்களூர் இந்து சமூக விழா காட்சிகள்

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இரண்டாவது தலைவர் குருஜி கோல்வல்கர் நூற்றாண்டு விழாவினையொட்டி இந்து இயக்கங்கள் நாடு முழுவதும் இந்து சமுதாயத்தை ஒன்றிணைக்கும், தேசபக்தியை வளர்க்கும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.அல்சூர் இந்து சமூக விழாவில் தமிழ் பேனர்கள்


இதன் பகுதியாக 21-ஜனவரி ஞாயிறு அன்று மாலை பெங்களூரில் 3 இடங்களில் பிரம்மாண்டமான "விராட இந்து சமாஜோத்சவ" நிகழ்ச்சிகள் நடந்தேறின.
கடந்த இரண்டு வாரங்களாகவே பெங்களூரின் பல பகுதிகளைக் காவிக் கடலில் மூழ்கடித்திருந்தன இந்து இயக்கங்கள்.

அல்சூர் ஹொய்சள நகர் நிகழ்ச்சியில் சுமார் 10,000 பேர் கலந்து கொண்டனர். சங்கத்தின் முக்கிய பேச்சாளர் திரு. பிரபாகர் இந்துப் பண்பாட்டின் அடிப்படையில் இழையோடும் சமூக சமரசம் பற்றி கன்னடத்தில் மிக அருமையாகப் பேசினார்.திருவள்ளுவர், அம்பேத்கர், பசவேஸ்வரர், விவேகானந்தர், நாராயண குரு, கனக தாசர் திருவுருவங்கள் அணி செய்யும் பொதுக்கூட்ட மேடை


இது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் இந்து முன்னணி தலைவர் திரு.ராமகோபாலன் தமிழில் சமூக நல்லிணக்கம் மற்றும் கிறித்துவ மதமாற்றங்களின் தீமைகள் பற்றி அருமையாகப் பேசினார். திருமதி சத்தியவாணி தெலுங்கிலும் பேச, நிகழ்ச்சி நிறைவடைந்தது.கூட்டத்தினரின் ஒரு பகுதி
அல்சூர் ஊர்வலத்தின் ஒரு பகுதி

19 comments:

oru thamizhan said...

I am happy that your organisation is recognising thiruvalluvar.

Hariharan # 26491540 said...

நிறைய இதுமாதிரிஆக்கமான அமைதியான இந்துக்கள் விழிப்புணர்வுக் கூட்டங்கள் பெருவாரியாக நாடெங்கும் நடக்கவேண்டும்.

ஜடாயு said...

thamizhan,

RSS has always recognized Valluvar, Kannaki, Agathiyhar and other great Tamil icons. I had written earlier abt this in Thinnai -
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80606237&format=html

செந்தழல் ரவி said...

///
நிறைய இதுமாதிரிஆக்கமான அமைதியான இந்துக்கள் விழிப்புணர்வுக் கூட்டங்கள் பெருவாரியாக நாடெங்கும் நடக்கவேண்டும்.
////

ஹரி, விஷயம் தெரியாமல் பேசாதீர். 25 ஆட்டோக்கள் எரிப்பு + 50 பேருந்து மற்றும் சிற்றுந்துகள் எரிப்பு + ஒரு மார்க்கெட் எரிப்பு + துப்பாக்கி சூட்டில் சிறுவன் பலி + 144 தடையுத்தரவு + 15 போலிசார் காயம் + 5 பேர் வன்முறையில் சாவு.

இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...இதுதான் உண்மை நிலை...அமைதி எல்லாம் கிடையாது சார்...

ஜடாயு said...

ஹரிஹரன், ஆம். பலவிதமான பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி இந்து சமூக விழாவாக இதனைக் கொண்டாடியது குருஜிக்கு செலுத்தும் சிறந்த அஞ்சலி.

Anonymous said...

ஹரி, விஷயம் தெரியாமல் பேசாதீர். 25 ஆட்டோக்கள் எரிப்பு + 50 பேருந்து மற்றும் சிற்றுந்துகள் எரிப்பு + ஒரு மார்க்கெட் எரிப்பு + துப்பாக்கி சூட்டில் சிறுவன் பலி + 144 தடையுத்தரவு + 15 போலிசார் காயம் + 5 பேர் வன்முறையில் சாவு.

செந்தழல் ரவி - who indulged in
violence on friday and why should
violence be incited in the name
of Saddam Hussein in B'lore.Muslims use friday prayers to indulge in and incite violence.
This results in violence by Hindutva organisations.So you should condemn
both.

ஜடாயு said...

செந்தழல் ரவி,

// தடையுத்தரவு + 15 போலிசார் காயம் + 5 பேர் வன்முறையில் சாவு. //

// ...இதுதான் உண்மை நிலை...அமைதி எல்லாம் கிடையாது சார்...//

பெங்களூரில் இருந்தும் நீங்கள் முழுதாக விஷயம் தெரியாமல் பேசுவதாகவே தோன்றுகிறது..

இந்த விழாக்கள் எத்தனையோ மாதங்களுக்குக் முன்பிருந்தே அறிவிக்கப் பட்டு நடத்தப் பட்டன. விழாவில் ஏராளமான பெண்கள், குழந்தைகளும் கலந்து கொண்டனர். மேற்சொன்ன கலவரம் பற்றி எதுவுமே அல்சூர் விழாவில் கலந்து கொண்டவர்களுக்குத் தெரியாது!

சிவாஜி நகர், பாரதி நகர் பகுதிகளில் தான் நீங்கள் சொன்ன எல்லா சம்பவங்களும் நடந்திருக்கின்றன. (முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகள் இவை என்று பெங்களூர்க் காரார்கள் எல்லாருக்கும் தெரியும்).
இதன் பின்னணி என்ன?

வெள்ளிக்கிழமை (19-ஜனவரி) சதாம் தூக்கு கண்டனத்திற்காக காங்கிரஸ் தலைவர் ஜாபர் ஷெரீப் நடத்திய கூட்டத்திற்கு ஊர்வலமாக சென்றவர்கள் வழியில் உள்ள காவிக்கொடிகளையும் இந்து சமாஜோத்சவ பேனர்களையும் எரிக்க, அதை லோக்கல் இளைஞர்கள் தட்டிக் கேட்க பக்கத்திலிருந்த இந்து வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.. 40 இந்துக் கடைகள், அனுமன், முத்தியாலம்மன் கோயில்கள் தாக்கப் பட்டது, பெண்களிடத்தில் தகராறு செய்ததாகவும் தினத் தந்தி செய்தி கூறுகிறது..இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் 80% தமிழர்கள் .

இந்தப் பின்னணியில் பெரும் பாதுகாப்புடன் ஞாயிற்றுக் கிழமை மாலை நிகழ்ச்சிகள் நகரின் 4 இடங்களில் நடந்தது.

செய்திகளின் படி, இந்த ஏரியாக்களுக்குப் பக்கத்தில் திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு குழு கடைகளைத் தாக்கத் தொடங்கியதாம். அதன் பிறகு நடந்தது தான் இந்த வன்முறை. வெள்ளிக் கிழமை வன்முறைக்கு பதிலடி ஞாயிறு வன்முறை.

மாபெரும் இந்து எழுச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த இந்து சமாஜோத்சவத்தையும், ஆளும் பாஜக-ஜனதாதள கூட்டணியையும் discredit செய்வதற்காக காங்கிரஸ் மற்றும் மதவாத முஸ்லீம் சக்திகள் வேண்டுமென்றே வெள்ளிக்கிழமை வன்முறையைத் தொடங்கி இருக்கிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன்.. அந்த கேடுகெட்ட சதாம்-தூக்கு-கண்டன கூட்டத்தில் கர்நாடகத்தின் பழைய காங்கிரஸ் பெருச்சாளிகள் அத்தனை பேரும் ஆஜராகி இருந்தனர்.

"சதாம் செத்து ஆச்சு 20 நாள். அவன் யார் இங்குள்ளவர்களுக்கு மாமனா மச்சானா? அதற்கு ஒரு கூட்டம் போட்டு ஏன் இந்த கலவரம்?" என்று தான் முஸ்லீம்கள் உட்பட பெங்களூரின் எல்லா பொது மக்களும் கேட்கிறார்கள்.

செந்தழல் ரவி said...

/////"சதாம் செத்து ஆச்சு 20 நாள். அவன் யார் இங்குள்ளவர்களுக்கு மாமனா மச்சானா? அதற்கு ஒரு கூட்டம் போட்டு ஏன் இந்த கலவரம்?" என்று தான் முஸ்லீம்கள் உட்பட பெங்களூரின் எல்லா பொது மக்களும் கேட்கிறார்கள்.////'

வழிமொழிகிறேன்...ஆனால்

//அதன் பிறகு நடந்தது தான் இந்த வன்முறை. வெள்ளிக் கிழமை வன்முறைக்கு பதிலடி ஞாயிறு வன்முறை..///

இது எங்கே கொண்டுபோய் விடுமோ ?

G.Ragavan said...

எனக்குத் தெரிந்து பிரச்சனை இந்த மாநாடு தொடங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. பழைய பெங்களூர்...தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி வழியாக சதாம் ஆதரவு ஊர்வலம் போயிருக்கிறது. அப்பொழுது ஊர்வலத்தார் ஏதோ கொடியைக் கிழித்திருக்கிறார்கள். இந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் மாநாட்டுக் கொடியென்று நினைக்கிறேன். அப்பொழுது வெடித்திருக்கிறது முதல் பிரச்சனை. அதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களே. முத்தாலம்மன் கோயில் தாக்கப்பட்டிருக்கிறது. துவாரபாலகர் சிலையும் தாக்கப்பட்டிருக்கிறது. யாரோ வீட்டு வாசலில் பிள்ளையார் இருந்ததாம்...அந்த வீடும் தாக்கப்பட்டிருக்கிறது. எது எப்படியோ....தமிழன் அடி வாங்கியிருக்கிறான்.

நேற்று மீண்டும் கலவரம் வெடித்திருக்கிறது. மாநாடு நடந்த ஏரியாவுக்குள் போகவே முடியவில்லை. அப்பாவை கண்டோன்மெண்ட் ரயில்வே ஸ்டேஷனிற்குக் கூட்டிக் கொண்டு பழைய சென்னை ரோடு வழியாகப் போனால்...அங்கும் ரோட்டை அடைத்திருக்கிறார்கள். அல்சூருக்குல் (கூட்டம் நடந்த இடம்) நுழையும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பிறகு சி.எம்.ஹெச் ரோடு வழியாக...கேம்பிரிட்ஜ் லேவுட் வழியாக மனிபால் செண்டர் வாயிலைப் பிடித்து மின்ஸ்க் ஸ்கொயர், கன்னிங்கம் ரோடு...உதயா டீவி என்று ஊரெல்லாம் சுற்றி கண்டோன்மெண்ட்டுக்குப் போக முடிந்தது. அல்சூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் போலீஸ் தலைகள். பிரச்சனை எங்கு வெடித்தது என்று பேப்பரைப் பார்க்க வேண்டும்.

Anonymous said...

I am really wondering as to what is happening to our (Tamil) people. Everyone knows that the BJP wants to have a stronghold in the country and the only weapon is religion. It is funny to read that BJP wants peace in this country where people of many religions live...! I think this post should not have a link in Thenkoodu...but in some other RSS affliated internet site.

I am not writing this to hurt anyone's sentiments. My own people live in Bangalore and hope Bangalore does not turn into another Ayothya.

Tamils have thier own relgion and their own festivels and their own culture and we dont want others to come in and tell us what we should do.

Gone are the days.

ஜடாயு said...

// இது எங்கே கொண்டுபோய் விடுமோ ? //

ரவி, இது இப்படியே இதோடு நின்று விடவேண்டும். நின்று விடும் என்றே நம்புவோம்.

அடுத்தமுறை சதாமுக்கு பதிலாக யாராவது சலீம் எங்காவது செத்தால், இங்கே உள்ள ஒரு குறிப்பிட்ட மதத்தவர் அதைச் சாக்கிட்டு தங்கள் சகோதரர்களைத் தாக்குவது போன்ற மதவெறி மடத்தனத்தை மறுபடி செய்யாதவரை, இந்த நம்பிக்கை உண்மையாக இருக்கும்.

ஜடாயு said...

// அப்பொழுது ஊர்வலத்தார் ஏதோ கொடியைக் கிழித்திருக்கிறார்கள். இந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் மாநாட்டுக் கொடியென்று நினைக்கிறேன் //

ராகவன், அது "மானாட்டுக் கொடி" அல்ல. ஓம் என்ற பிரணவ மந்திரம் பொறித்த இந்து தர்மத்தின் பதாகையான காவிக் கொடி. அல்சூரின் எல்லாக் கோயில்களிலும் இப்போது பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது.

ஜடாயு said...

// I think this post should not have a link in Thenkoodu...but in some other RSS affliated internet site //

அனானி, இது காமெடி. நடந்த விழா பற்றிய குறுஞ் செய்தி + படங்கள்..அவ்வளவு தான் இந்தப் பதிவு. இதற்கே இது தேன்கூட்டில் போடத் தகாததாகி விடுகிறதா உங்களுக்கு ?

படு கேவலமான சொற்களுடன், வெறுப்பு விஷத்தை வாரியிறைக்கும் சாதீய, இனவெறி பரப்பும், இஸ்லாமிய வெறி பரப்பும் பதிவுகள் எத்தனை? அவை பற்றி ஒரு வார்த்தை சொல்ல வக்கிருக்கிறதா உங்களுக்கு?

என்னய்யா போலித்தனம் இது!

arunagiri said...

ஜடாயு, உங்களுக்குத்தெரியாதா, இதற்குப் பெயர்தான் மண்ணாங்கட்டி மதச்சார்பின்மை. அழுத்திப்பிடித்தால் உதிர்ந்து போகும்; உள்ளிருக்கும் இந்து வெறுப்பு பல்லை இளிக்கும்.

Anonymous said...

I have requested younger generations music sites to have Hindu religious songs to reach the Tamil Diaspora all over the world. And one site graciously, posted tons of Aiyyappan songs on their site. www.geethams.com

They will gladly post any videos or religious music you have.

thanks
Visvanathan

ravindar said...

why should tamils be attacked if a barbarian bastard terrorist dictator saddam is hung in iraq? Why do indian muslims protest it by attacking tamils? This is total bullshit.

All the pseudo secular parties like congress, communist and DMk have encouraged this mindset.Shame on them.

Next will these idiots go out to protest if terrorist afzal is hung?Shame on them.

ஜடாயு said...

ravindar, visvanathan,

கருத்துக்களுக்கு நன்றி.

இது பற்றிய மேலும் சில விவரங்களை நீலகண்டன் அவரது பதிவில் இட்டுள்ளார் -
http://arvindneela.blogspot.com/2007/01/blog-post_22.html

கால்கரி சிவா said...

ஜடாயு,

இந்திய பத்திரிகைகள் அனைத்தும் ஏதோ இரு குழுக்கள் மோதிக் கொண்டது போல் எழுதுகின்றன.

சதாம் உசேன் என்ற கொடியவனுக்கு அவனுடைய நாட்டில் தூக்குபோட்டால் இங்குள்ளவனுக்கு என்ன வந்தது.

அவர்கள் வன்முறையை தொடங்கி வைத்தார்கள்.

ஆனால் இந்துக்கள்தான் தங்களின் ப்ரணவ மந்திரத்தை கொடியில் ஏற்றி அவர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிட்டார்கள் என்று ஓலமிடுகிறார்கள் இந்த திம்மிகள்

Varadhan said...

ஜடாயு

பதிவுக்கும், தகவலுக்கும், படங்களுக்கும் நன்றி.

ரவி என்றைக்குத்தான் எதைத்தான் புரிந்து எழுதியிருக்கிறார் ? ஒரு கொடுங்கோலனின் மரணதண்டனைக்காக பதிவு எழுதும், ஊர்வலம் போகும் , தீ வைக்கும் இந்தத் தேச விரோதக் கும்பலும் தீவீரவாதிகளே. இவர்கள் என்றைக்காவது காஷ்மீரிப் பண்டிட்களின் படுகொலைக்காக ஊர்வலம் போயிருப்பார்களா? ஈழத் தமிழர்களுகுக்காக ஊர்வலம் போயிருப்பார்களா ? சோமாலியாவில் கொல்லப் படும் அப்பாவிகளுக்காக ஊர்வலம் போயிருப்பார்களா? இந்த மத வெறியர்களினால் உலகம் முழுக்க பிரச்சினைதான். உலகத்தை அழிக்க வந்த நாசகார சக்திகள், அரக்கர்கள், சாத்தான்கள். சதாம் ஹீசைன் செத்தால் இந்த நாய்களுக்கு என்ன வந்தது? புஷ் கொஞ்சம் அப்படியே சிவாஜிநகரிலும் குண்டு போட்டால் பெங்களூரில் அமைதி நிலவும்