Monday, March 19, 2007

இஸ்லாமிஸ்ட் இந்து வேதத் திரிப்புக்கள் பற்றி என்.வி.கே.அஷ்ரஃப்

நேசகுமாரின் சமீபத்திய பகவத்கீதை - இஸ்லாமிஸ்டுகளின் திரிப்பு பதிவில் மரக்காயர் கீதையில் ஓரிறைக் கொள்கை என்று சில கீதை சுலோகங்களைத் திரித்து வழக்கமான இஸ்லாமிஸ்ட் ஏமாற்று பொய் வேலை செய்வதை அம்பலப் படுத்தியிருக்கிறார். நன்றி நேசகுமார்.

விளக்கவுரை அல்ல, சாதாரன கீதை மொழிபெயர்ப்புகளைப் படிப்பவர்களுக்குக் கூட இந்த ஏமாற்று வேலைகள் புரிந்து விடும்.

அப்பதிவில் கடைசியில் நேசகுமார் கூறுகிறார் :

பகவத் கீதையின் அறப்போரே , குரானின் ஜிகாத் என்று இஸ்லாமிஸ்டுகள் நூலெல்லாம் வெளியிட்டுக் கொண்டுள்ளார்கள். ஜிகாதை நியாயப்படுத்தும் இந்தச்செயலை இந்து ஆன்மீகவாதிகள் முன்வந்து கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், இது எப்படிப்பட்ட திரித்தல் என்பதையும் விளக்க வேண்டும்.

நேசகுமார், என்.வி.கே. அஷ்ரஃப் என்பவர் இப்படிப் பட்ட ஒரு ஆன்மிகவாதியாகத் தான் இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். சமீபத்தில் இணையத்தில் மேய்கையில் இவரது வலைத் தளத்தைப் பார்த்தேன். "இந்து வேதங்களில் முகமது.. ?" என்று ஆண்டர்சன் என்பவர் எழுதியதற்கு இவர் எழுதிய அருமையான எதிர்வினையில் இதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.. இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் அஷ்ரஃப் கூறுகிறார் -

Being a tolerant faith, Hinduism offers a great degree of freedom to interpret its scriptures. Ironically, this freedom has been abused by Muslim and Christian scholars to read their ideas into these texts. We will soon see that their claims of prophecies from the Vedas are a result of mistranslations and misinterpretations.

"பவிஷ்ய புராணத்தில் முகமது" போன்ற கட்டுக்கதைளை உரித்து வைக்கும் அஷ்ரஃப் , சொர்க்கம், நரகம் பற்றிய வேத இலக்கிய வர்ணனைகளின் ஆன்மிகக் குறியீடுகளையும் அலசுகிறார்.

குறிப்பாக "9 வாசல்கள் உடைய நகரம்" (நவத்வாரே புரே தேஹி) என்று வரும் பதத்தை இஸ்லாமிஸ்டுகள் "பாப்-ஏ-இப்ராஹிம் முதலான 9 வாசல்கள் உடைய காபா இறைவனின் வீடு" என்று பரப்பும் மகா மோசடியை சாடுகிறார்..

இந்த 9 வாசல்கள் என்பன யோக சாஸ்திரத்தின் படி நம் உடம்பில் உள்ள ஒன்பது துளைகளைக் குறிப்பவை. நகரம் என்பது உடல், இதன் உள்ளே உறையும் ஆன்மா பிரம்ம ஸ்வரூபம் என்பதைக் குறிக்கும் மந்திரங்களைத் தான் இஸ்லாமிஸ்டுகள் இப்படித் திருக்கின்றனர். அஷ்ரஃப் கூறுகிறார் -

The reference to 9 gates occur quite commonly in many Hindu scriptures..

Nine Gates in Tirumandiram
He fashioned this body, Into that body He breathed life; And set gates nine; (470)

Nine Gates in Svetasvatara Upanishad
It is He who resides in the body, The city of 9 gates. He is the soul That sports in the outside world..." (3:18)

Nine Gates in Bhagavad Gita
The stable person, renouncing work through knowledge,Neither acts himself, nor forces action on others, But takes refuge in the body, the city of 9 gates (V: 13)

"மலம் சோரும் ஒன்பது வாயிற்குடிலை" என்ற திருவாசக வரிகள் கூறுவதும் இதையே தான்.

Muslims have invariably tried to understand other religions from their point of view. Sanskrit words that sound similar to those in Arabic were often distorted to fit similar equivalents. The best of all examples is the mistaken identity of `Brahma' for `Abraham' [3,8]. Dr. Haq mentions a series of similar mistaken identities: Manu for Nuh (Noah), Saraswathi for Sarah, and of course Mamah for Muhammad! Indeed, some Muslim scholars have let their imaginations run wild!

திருமந்திரத்தை மேற்கோள் காட்டியதால் இவர் தமிழராக இருக்குமோ என்று இன்னும் கொஞ்சம் தேடியதில், இது உறுதியாயிற்று ! இதே கட்டுரையில் நரகம் பற்றிய இந்துக் கருத்தை விளக்குகையில் "இருள்சேர் இருவினையும் சேரா.." என்ற மிகப் பொருத்தமான குறளை சுட்டுகிறார்.

"குரானில் எண்ணிக்கைகளை வைத்து செய்யப் பட்ட கணித அற்புதங்கள் இருப்பதாகவும், இவை மனிதர்களால் அல்ல, ஏக இறைவனாயே செய்யப் படமுடியும்" என்ற இஸ்லாமிஸ்ட் சவடாலை எதிர்க்க நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் எழுதிய குறளில் உள்ள "கணித அற்புதங்களை" எடுத்துக் காட்டி அந்த வாதத்தைப் பொடிப் பொடியாக்குகிறார். திருக்குறளில் இவருக்கு இருக்கும் மிக ஆழ்ந்த புலமை பிரமிப்பூட்டுகிறது. பல மொழிகளிலும் திருக்குறள் என்று ஒரு பக்கத்தையும் தன் வலைத் தளத்தில் வைத்திருக்கிறார்.

"குரானைப் போன்ற மொழி நடையில் உள்ள நூலே உலகில் கிடையாது, அதில் உள்ளது போன்று 'சுரா'க்களை யாரும் எழுத முடியாது" போன்ற ஜல்லிகளுக்கு பதிலடியாக தமிழ், சம்ஸ்கிருதம், பஞ்சாபி மொழிகளிலுள்ள அற்புதமான பக்திப் பனுவல்களைக் காட்டி எதிர்ச்சவால் விடுகிறார்.

இவர் பெயரில் மட்டும் முஸ்லீம் அல்ல, அரபி மொழியிலும், இஸ்லாமிய நூல்களிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர் என்பது இந்தக் கட்டுரைகளில் இருந்து தெளிவாகிறது.

ஐயா அஷ்ரஃப், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? சுவனப்பிரியன், இறைநேசன், நல்லடியார், மரக்காயர் போன்று பல வண்ணங்களில் ஜிகாதிய வெறித்தனத்தை உமிழும் ஆசாமிகள் தான் இங்கு இருக்கிறார்கள். உங்களைப் போன்ற உண்மையான அறிஞர்கள் தான் இவர்களைத் தெளிவிக்க வேண்டும்!

8 comments:

Anonymous said...

"இவர் பெயரில் மட்டும் முஸ்லீம் அல்ல, அரபி மொழியிலும், இஸ்லாமிய நூல்களிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர் என்பது இந்தக் கட்டுரைகளில் இருந்து தெளிவாகிறது."


His father is a arabic scholar.

"திருமந்திரத்தை மேற்கோள் காட்டியதால் இவர் தமிழராக இருக்குமோ என்று இன்னும் கொஞ்சம் தேடியதில், இது உறுதியாயிற்று ! "

He hails from Kerala and has lived in Coimbatore. He can speak and read tamil.

He has a deep interest in hindu mysticism.

ஜடாயு said...

நன்றி அனானி.

// He has a deep interest in hindu mysticism. //

இது அவர் எழுத்துக்களில் தெளிவாகத் தெரிகிறது.

கோபால் said...

// பகவத் கீதையின் அறப்போரே , குரானின் ஜிகாத் என்று இஸ்லாமிஸ்டுகள் நூலெல்லாம் வெளியிட்டுக் கொண்டுள்ளார்கள். //

மகாபாரதம் என்னும் காவியத்தில் அந்த போர கட்டத்தில் இதை வைத்திருப்பது ஒரு அற்புதமான நாடகத் தன்மையைத் தருகிறது. ஆனால்
கீதை கூறும் போர் என்பது ஒரு உருவகம் என்று தான் பல ஞானிகள், யோகிகள் சொல்லியிருக்கிறார்கள். "தர்ம க்ஷேத்ரே குருக்ஷேத்ரே" என்று தான் கீதை தொடங்குகிறது.

ஆனால் ஜிகாத் என்பது உண்மையில் காபிர்களைக் கொன்றூ அழித்து ஒழிக்க வேண்டும் என்று உருவாக்கிய போர். அதுவும் கீதை கூறும் போரும் நேர் எதிர் துருவங்களில் உள்ளது!

Anonymous said...

// சுவனப்பிரியன், இறைநேசன், நல்லடியார், மரக்காயர் போன்று பல வண்ணங்களில் ஜிகாதிய வெறித்தனத்தை உமிழும் ஆசாமிகள் //

Crisp, precise and very correct assesment of these blog writers.
Keep it up, Jadayu.

சொக்கலிங்கம் said...

நல்ல பதிவு. அரிய தகவல்கள். நன்றி ஜடாயு.

// நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் எழுதிய குறளில் உள்ள "கணித அற்புதங்களை" எடுத்துக் காட்டி அந்த வாதத்தைப் பொடிப் பொடியாக்குகிறார். //

இந்த சுட்டியில் போய்ப் பார்த்தேன். ரொம்ப அருமையாக சொல்லியிருக்கிரார் அஷ்ரப்.

Inquirer said...

// He hails from Kerala and has lived in Coimbatore. He can speak and read tamil. //

Anony, how do you know this? Are you yourself Ashraf ????

Anonymous said...

"Anony, how do you know this? Are you yourself Ashraf ????"

No. But, Ashraf is well known here, in another name ;-)

அரவிந்தன் நீலகண்டன் said...

நல்ல அருமையான கட்டுரை. அஷ்ரப்க்கும் தங்களுக்கும் நன்றிகள். கேரள மிசிநரிகள் வேதத்தில் ஏசு குறித்து கூறியதாக சிடி எல்லாம் போட்டும் பிரசுரங்கள் இறக்கியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் ஏஞ்சல் டிவி என்கிற கிறித்தவ பிரச்சார டிவியின் பிரதம மதமாற்றி இந்த உளறல்களை தமிழில் பரப்பிவருகிறான். இதனை எதிர்கொள்ள அஷ்ரப்பின் எழுத்துக்களை தமிழில் பிரசுரங்களாக கொண்டுவரவேண்டும்.