..இன்னொரு மிதவாத தமிழ் முஸ்லீமின் முகத்திரை கிழிகிறது
முத்தமிழ் குழுமத்தில் நடந்து வரும் இந்த விவாதத்தை தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது..
விஷயம் இதுதான். தான் எழுதிய பதிவில் இடி அமீன், ஒசாமா பின் லேடன் இவர்களை "அவன்" என்று குறிப்பிட்டு செல்வன் எழுதியிருந்தார். உடனே அங்கிருந்து வந்தார் பழைய கிரிக்கெட் வர்ணனை புகழ் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் ஐயா.
".. இடி அமீன், ஒசாமா பின் லதெயின் என்கிற பெயர்கள் வந்ததோ தொலைந்தது. "அவன்" இவன் என்று ஒருமையில் ஆரம்பித்து விடுவார்கள். யாராக இருக்கட்டுமே ஏன் இந்தப் பண்பாட்டுச் சீர்கேடு ?"
செல்வன் விடுவாரா? இப்படி எழுதினார் -
தீவிரவாதியை அவன்,இவன் என்று எழுதாமல் அவர்,இவர் என்றா எழுத முடியும்?:-).
சந்தன கடத்தல் வீரப்பனை அவன்,இவன் என்று தான் எழுதுகிறோம்<http://thatstamil.oneindia.in/news/2000/09/06/return.html>..நம்பலைன்னா சுட்டியை பாருங்க:)
பங்க் குமாரை அவன் இவன் என்று தான் எழுதுகிறோம். நம்பலைன்னா அதுக்க்கும் சுட்டி<http://thatstamil.oneindia.in/news/2006/12/13/latika.html> இதோ
முட்டை ரவியை அவன் இவன் என்று தான் எழுதறோம். சுட்டி<http://thatstamil.oneindia.in/news/2006/10/22/rowdy.html>
இதை விட மோசமா எருமைன்னெல்லாம் <http://holyox.blogspot.com/2006/10/202.html> பண்டிதர்கள் சிலரை எழுதிருக்கேன்..:-))
நாவிதர் <http://holyox.blogspot.com/2007/08/324_23.html> அப்படின்னு மரியாதையா தான் இதுவரை எழுதிருக்கேன்.
ஆனா பின்லேடனை எல்லாம் அவர் இவர்ன்னு எழுத சொல்லாதீங்க...அவனை அவன்,இவன்னு எழுதறதே ஜாஸ்தி மரியாதையோன்னு தோணுது:-))
ஜப்பார் ஐயாவுக்கு உள்ளுக்குள் பயங்கர கோபம் போலிருக்கிறது - எழுதுகிறார் -
"... அமெரிக்கா செய்யும் கொடூரங்களையும், அநியாயங்களையும், அக்கிரமங்களையும் நிங்கள் நியாயமானவைதான் என்று வாதிட்டால், நியாயப் படுத்தினால், ஒசாமா பின் லதைனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். அமெரிகக அக்கிரமங்களுக்கு ஆப்பு வைக்கும் ஒரே ஆண்பிள்ளை ஒசாமா என்று அரேபியாவில் சொல்கிரார்கள். அரேபிய அரச குடும்பத்தை விட செல்வத்திலும் செல்வாக்கிலும் உயர்ந்த குடும்பம் பின் லதைனின் குடும்பம் என்றும் அங்கே குறிப்பிடுகிரார்கள். "
அப்படிப் போடுங்க அரிவாள ! முதலில் இவர் எழுதியதைப் படித்ததும் ஜப்பார் ஐயா எல்லாருக்கும் மரியாதை குடுக்கச் சொல்றாருப்பா என்ற எண்ணம் தான் இயல்பாகத் தோன்றியது. மேலே உள்ளதைப் படித்ததும் தான் இவரது உண்மையான நோக்கம் தெரியவருகிறது.
உண்மையில் இவருக்கு வந்த கோபம், முட்டை ரவி, பங்க் குமார் ரேஞ்சுக்கு செல்வன் ஒசாமாவை தாழ்த்திவிட்டார் என்பது தான்.. பாவம் அதைச் சொல்லவேண்டாம் என்று நினைத்தாலும் வந்து விட்டது! அதுவும் பாருங்கள், அந்த லதைன் என்ற அரபி உச்சரிப்பு பிசகாமல் தன் ஹீரோ பெயரை எழுதியிருப்பதை
இந்தியாவை எதிரி நம்பர்-2 என்று வெளிப்படையாக அறிவித்த இந்த இஸ்லாமிஸ்ட் தீவிரவாதி மீது என்ன பரிவு, என்ன மரியாதை ! இவருக்கும் தங்கள் வீடுகளில் பின் லேடன் படத்தை வைத்திருக்கும் ஹைதராபாத் ஜிகாதி ஆதரவாளர்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் இல்லத்தில் வைத்திருக்கிறார்கள், இவர் இதயத்திலேயே வைத்திருப்பார் போல.
இந்த கடைந்தெடுத்த தேசத்துரோகத்தை கண்டுகொள்ளாமல், கண்டனம் செய்யாமல் வழக்கம் போல கும்மி அடித்து காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் அந்த குழுமத்தில். முற்றிப் போன திம்மித் தனம் !
ஜப்பார் சொல்கிறார், அமெரிக்காவை எதிர்த்து போராடும் ஆண்பிள்ளை ஒசாமா என்று.
அமெரிக்காவைவிட அதிகமாக குழந்தைகளை சூடானில் இஸ்லாமிஸ்டுகள் கொல்வதோ அல்லது சதாம் விஷவாயுவிட்டு கொன்றதோ இவர்கள் கண்களுக்கு தென்படவில்லையா? அதே போன்று ஒரு கற்பழிப்பை கண்டு காஷ்மீரிலும், ஈராக்கிலும் கொதிப்பார்கள் - இங்கே அப்படிச் செய்பவர்களுக்கு அரசு தண்டனை வழங்குவதும், பொதுநலமிகள் போராடுவதும் அவர்கள் கண்ணுக்கு தென்படாது.
ஆனால், சூடானில் கற்பழிக்கப்படும் கறுப்பின இஸ்லாமியப் பெண்கள், ஆஃப்கானிஸ்தானில் முஜாஹித்தீன்களால் கற்பழிக்கப்படும் இஸ்லாமியப் பெண்கள், சதாமின் சேனையினால் கற்பழிக்கப்பட்ட ஷியா, குர்து பெண்கள் - இந்த விஷயங்களெல்லாம் இவர்கள் கண்களிலேயே படாதா?
இந்த ஒசாமா இன்று தான் அமெரிக்காவை எதிர்த்து போரிடுகிறார். நேற்று ரஷ்யாவை எதிர்த்து போர் புரிந்தார். இன்று இவர்கள் அமெரிக்கா குழந்தைகளை கொல்கிறது என்று வாதிடுவார்கள். அப்போது நேற்றே ஒசாமா தீவிரவாதிதானே? சரி, ரஷ்யாவும் ஆஃப்கானியர்களை கொன்றது, ஆக்கிரமித்தது என்று வைத்துக்கொண்டால், அதே போன்று சதாம் ஹுசைன் குவைத்தை ஆக்கிரமித்தானே அப்போது எங்கே போனார் - உயர்குல வீரர் ஒசாமா பின் லதைன்?
ஒரு மதவெறியனை, பயங்கரவாதியை, மனித மிருகத்தை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் ஜப்பாரை தட்டிக் கேட்காதது மட்டுமல்ல, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் தமிழர்களைச் சொல்லவேண்டும்....
வேறு யாரை நொந்து கொள்வது நாம்?