Friday, October 26, 2007

கிருஷ்ணர் கடவுளா, அரசரா?: விகடனில் ஹாய் மதன் பாமரத்தனம்

இந்த வார விகடனில் "ஹாய் மதன்" பகுதியில் இப்படி ஒரு கேள்வி பதில்.

கிருஷ்ணர் கடவுளா, அரசரா?
என்.பிரபாகர், ஆ.புதூர்.

மகாபாரதத்தில், கிருஷ்ணர் நினைத்திருந்தால் சில நிமிடங்களில் துரியோதனன்உட்பட கௌர-வர்கள் அத்தனை பேரையும் அழித்திருக்கலாம். ஏன் குரு«க்ஷத்திரபோர் வரை செல்லவிட்டார்?முதன்முதலில் எழுதப்பட்ட மகாபாரதத்தின்படி, கிருஷ்ணர் யாதவர்களின்அரசர்தானே தவிர, கடவுள் இல்லை. துரியோதனனிடம் பாண்டவர்களின் பிரதி-நிதியாகச் சென்று ‘போர் வேண்டாம்’ என்று எடுத்-துரைக்க மட்டுமேகிருஷ்ணரால் முடிந்தது. அவர் கடவுள் அவதாரமாகக் கருதப்பட்டது, மிகப்பிற்பட்ட காலத்தில்தான். பிறகு, கடவுளுக்குரிய அம்சங்கள் மகாபாரதத்தில்சேர்க்கப்பட்டன. மிகப் பெரிய அளவில் கிருஷணர் வழிபாட்டை முதலில்துவக்கிவைத்த பெருமை வங்காளிகளுக்கே சேரும்!'

ஹாய் மதன் அனைத்தும் அறிந்த ஒரு அறிஞர் என்று அவரிடம் கேள்வி கேட்பவர்கள் உட்பட யாருமே எண்ணுவதில்லை.

இருந்தாலும், இப்படிப் பட்ட ஒரு கூமுட்டைத் தனமான பதிலைப் பார்க்கையில், மகாபாரதம் போன்ற நன்கறியப் பட்ட விஷயத்தில் கூட ஒரு குறைந்த பட்ச ஹோம் ஒர்க், புரிதல், உண்மை இருக்கவேண்டிய அவசியமில்லை என்று அவரே என்ணுவதாகத் தெரிகிறது.

இது பற்றி இதிகாசங்களில் ஆழ்ந்த புலமை கொண்ட திரு. ஹரிகிருஷ்ணன் (அனுமன் வார்ப்பும் வனப்பும் நூலின் ஆசிரியர்) அவர்களிடம் மின் அஞ்சல் அனுப்பிக் கேட்டபோது அவர் அனுப்பிய பதில் மூலம் ஹாய் மதனிடம் தொடுக்கும் கேள்விகள் -

1) முதலில் எழுதப்பட்ட மகாபாரதத்தின் பதிப்பு இப்போது யாரால் வெளியிடப்பட்டுள்ளது? எங்கே கிடைக்கும்?

2) கிருஷ்ணன் யாதவர்களின் அரசனே இல்லை. அவன் ஒருபோதும் அரசனாகவே இருந்ததில்லை என்பதுதான் வியாச பாரதத்தின் தற்போதைய மொழிபெயர்ப்புகள் சொல்வது. பாகதவமும் இதையே சொல்கிறது. சிசுபாலன் கிருஷ்ணனை நிந்திக்கும்போது சொல்வனவற்றில் இதுவும் ஒன்று:

O Bhishma, if one like thee, possessed of virtue and morality acteth from motives of interest, he is deserving of censure among the honest and the wise. How doth he of the Dasarha race, who is not even a king, accept worship before these kings and how is it that he hath been worshipped by ye? O bull of the Kuru race, if thou regardest Krishna as the oldest in age, here is Vasudeva, and how can his son be said so in his presence?

ஆகவே, கிருஷ்ணனை யாதவ அரசன் என்று சொல்லும் முதலில் எழுதப்பட்ட வியாச பாரதம் மிகவும் முக்கியமான ஒன்றாகிறது. எனவே தயவுசெய்து எந்தப் பதிப்பகத்தார் வெளியிட்ட புத்தகத்தைத் தாங்கள் வைத்திருக்கிறீர்கள் என்பதைத் தெரிவிப்பது எம்போன்ற எளிய வாசகர்களுக்குப் பெரிய உபகாரமாக இருக்கும்.

3) ஆனால் பாரதமும் பாகவதமும் கிருஷ்ணனைப் பரம்பொருள் என்று மிகப் பல இடங்களில் குறிக்கின்றன. பீஷ்மர் தன்னுடைய உடலை விடுவதற்கு முன்னால் மிகத் தெளிவாகவே இதைச் சொல்கிறார். யுத்த சமயத்தில் சக்கரத்தை எடுத்துக் கொண்டு பீஷ்மரை வதைப்பதற்காகக் கண்ணன் விரையும்போதும், கூப்பிய கரங்களோடு 'வா கண்ணா, உன் கையால் எனக்கு விடுதலை கிடைக்கட்டும்' என்று துதிக்கிறார்.

இவையெல்லாம் வங்காளிகளுடைய பிற்சேர்க்கை என்பதை நிறுவுவதற்காகத் தாங்கள் எங்களுக்கு அருள்கூர்ந்து இந்த உபகாரத்தைச் செய்ய வேண்டும்.

இவை ஒரு அறிஞர் கேட்கும் கேள்விகள்.

எனக்கும் சில சாதாரணமான கேள்விகள் தோன்றுகின்றன -

பொது சகாப்தம் (Common Era, CE) முதல் நூற்றாண்டில் வாழ்ந்த *தமிழர்* இளங்கோ அடிகள் *மகாபாரத* கண்ணனை நாராயணனாகவே கண்டு பாடுகிறாரே -

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுபவர் பால் நாற்றிசையும் போற்ற
படர்ந்தாரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா என்னா நாவென்ன நாவே

சிலப்பதிகாரத்தில், மதுரைப் புறஞ்சேரியில் உள்ள ஆயர்கள், ஆய்ச்சிகள் அனைவரும் குரவையிட்டு கண்ணனை ஆராதிக்கிறார்களே? இதற்கும் முந்தைய சங்க இலக்கியமாகிய பரிபாடலில் கண்ணனின் லீலைகளைச் சுட்டி அவனை மாயோன், திருமால் என்று போற்றும் பாடல்களும், அவனது கோயில்கள் பற்றிய குறிப்புக்களும் உள்ளனவே? இது எல்லாம் "மிகப் பெரிய அளவில் கிருஷ்ணர் வழிபாடு" இல்லையா?

அப்போ சிலம்புக்கும், பரிபாடலுக்கும் முற்பட்ட ஏதாவது வங்காளி நூல் கிருஷ்ணனைக் கடவுள் என்று ஆக்கியதா? அதை மதன் படித்திருக்கிறாரா? அல்லது இளங்கோ அடிகளும் அதைப் படித்துத் தான் கண்ணன் கடவுள் என்று தெரிந்து கொண்டாரா?

ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மகாப்ரபு 16-ஆம் நூற்றாண்டில் வங்கத்தில் தோன்றுவதற்கு ஒரு 800-900 ஆண்டுகள் முன்பே ஆண்டாள் திருப்பாவையும், "கண்ணன் எம்பெருமான்" என்று கசிந்துருகிப் பாடிய திருவாய்மொழியும் தோன்றி விட்டதே! திருக்கண்ணபுரம் என்று தமிழகத்தில் திவ்யதேசமே இருந்ததே!

இப்படி ஆகத் தொன்மையான சங்கத் தமிழ் நூல்களே கண்ணனைக் கடவுளாகப் போற்றுகின்றன என்னும்போது இந்தக் கருத்துக்கள் தமிழகம் முழுதும் பரவியிருந்த காலமே "மிகப் பிற்பட்ட காலமா"? அப்போ நீங்கள் சொல்லும் அந்த "கண்ணன் கடவுள் ஆகாத" மிக மிக முற்பட்ட காலத்திற்கு சான்றுகள் எங்கே? எந்த அடிப்படையில் இப்படிச் சொல்கிறீர்கள்?

கோடிக்கணக்கான இந்துக்கள் போற்றும் தெய்வ அவதாரமான ஸ்ரீகிருஷ்ணனைப் பற்றி இப்படி ஏனோதானோ என்று போகிற போக்கில் ஒரு பதில் கொடுத்து விட்டுப் போகிறீர்களே மதன்? இது நியாயமா?

16 comments:

Anonymous said...

Well said Jatayu!
Madhan should come up with the facts he has , if any, or with an apology.

யோசிப்பவர் said...

விட்டுத் தள்ளுங்கள். அவர்கள் 'அறிவு' ஜீவிகள்!!

யோசிப்பவர் said...

Why dont you send this to Vikatan?

Anonymous said...

Being in Dravida country, writing for the Dravida readers, Madan may not have a choice. Stating that Krishna was God would be very communal Hindu brahmin fundamentalist kind of a thing in Dravida country.

How many people in TN do you think would get offended by such blatant bull shit such as this? 97% of the holy dravida land is happy with their reserved seats. If one more lie will help them keep that, they would be only too happy.

Why did Krishna not kill all the Kauravas himself? He did not, because prior to the war, both the Kauravas and Pandavas were canvassing for their armies. Both Duryodana and Arjuna went to Krishna, to ask him to fight the war with his Yadava-sena in their side. Krishna then said, I can send the Yadava army to one of you, and I can join one of you myself, but without taking weapon. Duryodana was too happy to ask for Yadava-sena, and Arjuna wanted only Krishna to be in his side.

That, is the earliest Mahabharatha that I know of. If the dravida dimwits know of any other version, would be glad to know.

Anonymous said...

Very good post. I will print this.
By the way I am printing most of your articles and neelakandan's articles.After printing it, i am binding it into a book Very useful writings.Keep writing about history of india and hinduism.
Bye

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ஐயா,

வணக்கம்.

உங்களது பதிவுகளை அதன் ஆரம்ப காலத்திலிருந்து படித்து வருகிறேன். தமிழக, இந்திய, உலக அளவில் இந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்த உண்மைகளை புட்டு புட்டு வைக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

இது போன்ற பத்திரிக்கைப் பொய்களை தோலுரித்துத் தொங்கவிட ஒரு தனிப் பதிவையே தாங்களும், தமிழறிஞர் ஹரிகிருஷ்ணன் அவர்களும் சேர்ந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது உங்களுடைய பக்கங்களைப் படிக்கும் எனது மற்றும் என் குடும்பத்தார் அனைவரின் வேண்டுகோளும் ஆகும்.

செய்வீர்களா?

அன்பன்,

மாரிமுத்து மற்றும் குடும்பத்தார்
தென்காசி

Anonymous said...

(தவறுகளைத் திருத்தி மீண்டும் பதிகிறேன்.)

மதன்? யார்?

ஓ! இந்த "அன்பே சிவம்" என்கிற படத்திற்கு கதை-வசனம் எழுதினாரே அவரா?

அந்தப் படத்தின் தலைப்பு அன்பே சிவம். ஆனால், அந்தப் படத்தில் கமல் உலகின் எந்த மூலையில் பாதிக்கப்பட்டாலும் வந்து அன்பே சிவமாய் வந்து சேவை செய்வதோ ஒரு கிருத்துவ

பெண் பாதிரி மட்டுமே ! அதே படத்தில் ஒரு ஹிந்து சாமியார் ஜடம்போல யாருக்கும் எந்த உதவியும் செய்யாமல் உட்கார்ந்திருப்பதையும் காட்டி சமதர்மத்தை உறுதி செய்திருப்பார்கள்.

அவருக்கு பாகன்களின் கடவுளான க்ருஷ்ணன் கடவுளாய் தெரிவாரா?

மதனுக்கு அவர் பதில் சொல்லுகின்ற விஷயங்களில் ஆழ்ந்த அறிவு என்றுமே இருந்ததில்லை. அரவிந்தன் நீலகண்டனுடைய

ப்ளாக்கில்
இருக்கும் பரந்த அறிவு-நுணுக்கங்கள் குறித்த புரிதல், திண்ணையில் ஜெயபாரதனின் கட்டுரைகள், விக்கி பசங்களுடைய பக்கங்களில் இருக்கும் சுவையான கருத்துக்கள்

எல்லாம் இணையத்தில் கிடைக்கும்போது காய் கவர விரும்பாமல் இந்தக் கனிகளையே படிக்க தரம் வாய்ந்தவர்கள் செல்லுகிறார்கள்.

மதன் போன்ற பத்திரிக்கை ஆசிரியர்களின் கால் தமிழ்நாட்டில் இருக்கிறது, கைகளோ பெட்ரோல் பணத்திற்காகவும், எவாஞ்சலிக்கர்களின் எச்சல்களுக்காகவும் பிச்சை எடுக்கிறது, இதயமோ

சுயலாபத்திற்காக எதையும் செய்ய லப் டப், டப் லப், டாப் லாபம், டப் லப், டாப் லாபம், டப் லப், டாப் லாபம், டப் லப், லப் டப் என்று துடிக்கிறது, கண்களோ அவர்களுடைய சொந்த

பேங்க் பேலன்ஸைப் பார்க்கிறது, மூளையோ கைகளில் கிடைக்கும் பிச்சைக் காசு அதிகமாய் கிடைக்க என்ன செய்யவேண்டும் என கணக்கிடுகிறது.

பாமர மக்களை பாமரர்களாகவே வைத்திருக்கவே இவர்கள் விரும்புகிறார்கள். இதில் எழுதப்படும் பொய்கள் குறித்து தமிழ்நாட்டில் கேள்வி கேட்க யாருக்கும் ஞானமோ, தைரியமோ இல்லை

என்கிற முன்நம்பிக்கையில்தான் இவர்களது தொழிலே நடக்கிறது. உங்களுடைய, ஹரிகிருஷ்ணனின் கேள்விகள் அவர்களுக்கு ஸ்ட்ரோக்கையே வரவழைத்திருக்கும்.

தமிழகத்தின் வீடுகளில் சரோஜா தேவி கதைப் புத்தகம் படித்தால் சூடுதான் வைப்பார்கள். ஆனந்த விகடன் படித்தால் உயிரோடு எரித்து கருமாதி வைக்கிறார்கள்.

ஆனந்த விகடன் என்கிற அரைகுறை ஆடைகளோடு பெண்களின் படங்களைப் போட்டு, "ஞா"லத்தின் "நி"ர்மூடர்களின் பெயரில் எவாஞ்சலிக்க கட்டுரைகளைப் போட்டு விற்பனையாகிற ஒரு

பத்திரிகை ஆசிரியரிடம் தரத்தையும், உண்மையையும் எதிர்பார்ப்பது உங்களுடைய தவறே.

Anonymous said...

நச்! ஆனால் இவர்களுக்கு எல்லாம் உறைக்காது.

கால்கரி சிவா said...

உங்கள் கட்டுரயை ஆனந்த விகடனுக்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் பிரசுரிக்கவில்லை. இதுதான் பத்திரிக்கை தர்மம் இந்தியாவில் இந்துகளை தாக்கி அவர்களின் உணர்வுகளை காயபடுத்துவதே இவர்களின் வேலை. இந்துகள் இவர்களின் பத்திரிக்கையை புறகணித்தால் போதும்.. ஆன்மிக வாதிகளுக்காக சக்திவிகடன் என தனி பத்திரிக்கை வேறு. இவர்கள் பத்திரிக்கை வியாபாரிகள் இல்லை விபசாரிகள் இவர்களிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது நம் தவறு.

Anonymous said...

Madhan is only expert in how actress lips and other body parts..when he came to devotional aspect..Leave this kind of half fitted personalities. We can found that this kind of half-fitted personalities are the majority in india. This is because:
1. our education system
2. Language problem
I am herewith share my personal experience, when I talked to high educated indian. During the discussion, north culture and Maharbharatha topic came. The conversation is:

Indian Intellect: Do you know in north india, yelder brother wife is common to younger brother also?

I: (I really shocked) No..No..in northern india, yelder wife is equivalent of mother

Indian Intellect: it is true..

I: where did you get this information?

Indian Intellect: I read from one book, which was written by French authour. In that book, in tribe area, this is the rule.

I: I do not know about this french authour. How he understood properly our culture. Even then, How can you generalise whole north india is like that.in my knowledge.'BABI' means equivalent of mother status.

Indian Intellect: No..This is our practise.Do you know Mahabharatha?

I: Yes, little I know.

Indian Intellect: Dhrowbathi has five husbond.what do you know from this?

I: (I understood where he is coming) I know that you never read Mahabharatha. If you read Mahabharatha, this question never arise.

Indian Intellect: No.No. I know

I: please tell me when you read.

Indian Intellect: in 1st standard school

Please understand this is situation of present india. Today, ignorance is knowledge; violance is authourity.
For information, in Mahabharatha, Dhrowbathi marriage is not easily accepted as just like that. Her father opposed, intially. Her brother expressed his shocking. Sri vyasar, Dharmar participated in the debate.

Another, the whole world is now understanding our literature values through yoga, ayurveda practices. American university recently added Bhagavad gita in MBA course.

But oure people..?
Bharathi said:
'Nenju poorkuthilaye indthe neelaiketa manthari nenithuvital'.

ஜடாயு said...

யோசிப்பவர், ரீஸன், பனித்துளி, கிருஷ்ணா - உங்கள் மறுமொழிகளுக்கு மிக்க நன்றி.

சிவா, விகடன் மறுமொழிப் பெட்டியில் இப்பதிவின் சுட்டியை இட்டதற்கு நன்றி.
இன்னும் உங்கள் மறுமொழியை அனுமதிக்கவில்லையா? இந்த அளவுக்கு மோசமான கருத்துச் சுதந்திர எதிரியாகவா ஆகிவிட்டது ஆ.வி? வருத்தமாக இருக்கிறது.

ஜடாயு said...

// Why did Krishna not kill all the Kauravas himself? //

ரீஸன், மகாபாரதத்தின் படி மிக லாஜிகலான விளக்கத்தை அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி.

விஷ்வரூப தரிசனம் காட்டிய பெருமான் கௌரவர்களை ஏன் நொடியில் அழிக்கவில்லை என்றால் அதற்குக் காரணம் - சும்மா விளையாட்டுக்குத் தான்!

அலகிலா விளையாட்டுடையார் என்கிறார் கம்பர். "பரோக்ஷ ப்ரியா இவ ஹி தேவா:" (தெய்வங்கள் மறைந்து நின்று விளையாடுவதில் பிரியம் உள்ளவர்கள்) என்கிறது வேதம்.

தனக்காகப் போரிட்ட வானரர்களை நொடியில் உயிர்வித்த ஸ்ரீராமன் தன் தந்தை தசரதன் மறைந்தது கேட்டுக் கதறி அழுகிறானே - அது ஏன்? அது தான் லீலை. வாழ்க்கையின் பலவித வர்ண ஜாலங்களையும், ரஸங்களையும் உணர்த்துவதற்காக, உலகிற்கு வழிகாட்டுவதற்காக தெய்வம் புரியும் லீலை.

இந்து ஆன்மிகத்தின் இந்தப் புள்ளியை அறிந்து கொள்ளாமல் இதிகாசங்களையும், அவதாரங்களையும் புரிந்து கொள்ள முற்படுவதே அறியாமை.

Achilles said...

dear jadaau,
i like u r article.
we realy need a guy like u.
keep it up.

Anonymous said...

For tamil friends who want to write their comments in Tamil:

இன்னொரு முக்கியமான விஷயம் தமிழில் எழுத !!


சில மாதங்களுக்கு முன்னர், ஹிந்திக்கு transliteration அறிமுகப்படுத்திய கூகிள் சில வாரங்களுக்கு முன்னர் தமிழில் எழுதும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனால் தமிழில் டைப் செய்ய ஒரு கம்ப்யூட்டரும் இணைய இணைப்பு தவிர font, client application என்று ஒரு புண்ணாக்கும் தேவையில்லை.இங்கே க்ளிக்க http://www.google.com/transliterate/indic/Tamil#

Thanks to Minnalpriyan.

Unknown said...

உங்களின் இந்த கட்டுரைக்கு நன்றி ஐயா, தயவு செய்து இதனை மேலும் தமிழ்நாட்டில் கிருஷ்ணா வழிபாடு இருந்த காலத்தை நீங்கள் விளக்கமாக கூறவும்.தமிழ் ஹிந்து தளத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியும், நாம் மறக்கக் கூடாத பளிதானமும் கட்டுரையில் கிருஷ்ணா வழிபாடு பின்னால் சேர்க்கப்பட்டதாக கருத்து கூறியிருக்கிறார்கள். நான் உங்கள் கட்டுரையையும் திரு அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் கட்டுரையையும் படிக்குமாறு மறுமொழி இட்டிருக்கிறேன். நீங்கள் இன்னும் விளக்கமாக தமிழ் இந்து தளத்திலோ அல்லது உங்கள் தளத்திலோ ஆரம்ப கால கிருஷ்ணா வழிபாடு முதல் (தமிழ் நாட்டில்) கிருஷ்ணா வழிபாடு பற்றி எழுதுமாறு உங்களிடம் அன்புடன் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன். கிருஷ்ணர் பிறந்து 5200 வருடங்கள் ஆயிற்று அப்போதிலிருந்தே கிருஷ்ணா வழிபடு இந்தியாவில் இல்லையா? தமிழகத்தில் இல்லையா? தயவு செய்து விளக்குங்கள்.2500 ஆண்டுகளுக்கு சான்றுகளை உங்கள் கட்டுரையில் காண்கிறேன்.இது குறித்து விளக்கமாக கட்டுரை நமக்கு அவசியம்,இல்லாவிட்டால் மதனை போல் நாளை பகுத்தறிவளர்களும் (அவர்களே சொல்லிகொள்வதுதான்) பிற புண்ணியவான்களும் புது கதை கட்டி அறுவடை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.