Monday, January 07, 2008

நீளும் கிறிஸ்துவின் ஆக்கிரமிப்புக் கரங்கள்

கிறிஸ்தவம் என்கிற கோகோ கோலா என்ற முந்தைய பதிவு ஒன்றில் இப்படி எழுதியிருந்தேன் -

"பொட்டு வைத்த இந்துப் பெண்கள், தலைப்பாகை கட்டிய இந்துக்கள், சீக்கியர்கள், தொப்பி வைத்த முஸ்லீம்கள், அரபு ஷேக்குகள், மொட்டையர்கள், வெள்ளைய பொதுப் புத்தியில் “காட்டுமிராண்டிகளான” கறுப்பு, பழுப்பு என்று பலவண்ண இந்துக்கள் இவர்கள் அனைவரும் நீண்டு விரியும் ஏசு கிறிஸ்துவின் கைகளுக்குள் போவது போன்று பிரமாதமான சித்திரம் வரைந்து அதை பெங்களூர், சென்னை போன்ற நகரங்களின் சந்திகளில் பெரிய அளவில் விளம்பரப் பலகைகள் வைக்கிறார்களே, என்ன திமிர், என்ன ஆணவம், மற்ற மதங்களின், கலாசாரங்களின் மீது என்ன ஒரு இளக்காரம் இருக்க வேண்டும் இப்படி செய்வதற்கு? நீண்ட அந்தக் கரங்கள் எங்கள் கலாசாரத்தையும், சமயத்தையும், சமுதாயத்தையும் அழிக்க வரும் விஷக் கொடுக்குகள் என்று நாங்கள் கருவதில் என்ன தவறு?

அந்தப் பதிவில் ஒருவர் இப்படி மறுமொழி இட்டிருந்தார் -

மாமல்லன் said...

அப்படியா? இப்படிப் பட்ட விளம்பரத்தைப் பார்த்ததில்லை. படம் இருந்தால் வெளியிட முடியுமா? நன்றி.

நேற்று ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது பெங்களூரின் முக்கிய சாலை ஒன்றில் இத்தகைய விளம்பரப் பலகை கண்ணில் பட்டது. போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், ஒருவாறாக நான் எடுத்த படம் -பெரிய அளவு படம் இங்கே.

சாலையில் முக்கியமான இடத்தில் வைத்திருப்பதை சமாளிப்பதற்காக படத்தின் கீழே பெங்களூர் நகராட்சிக்கு (Bangalore Mahanagara Palike) உதவி செய்யும் நல்லெண்ணத்தில் இவர்கள் கீழே ஒரு "சமூக செய்தி"யையும் தந்திருக்கின்றனர் -

You must obey the state authorities, because no authority exists without Gods authority. The existing authorities have been put there by God" - Rom. 13:1

நீங்கள் அரசு அதிகாரத்திற்குக் கண்டிப்பாகக் கீழ்ப்படிந்தே ஆகவேண்டும். ஏனெனில் தேவனின் அதிகாரம் இல்லாமல் வேறெந்த அதிகாரமும் இருக்க முடியாது. இங்கு இருக்கும் அதிகாரவர்க்கத்தினர் அனைவரும் தேவனாலேயே அங்கு வைக்கப் பட்டுள்ளனர் - ரோமன்ஸ் 13:1

அந்தப் படத்தையும் இந்த செய்தியையும் ஒன்றாக இணைத்துப் பாருங்கள். அதாவது, இந்திய அரசு அதிகாரிகள் அரசால் நியமிக்கப் படவில்லை, மக்களாலும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. கிறிஸ்தவத்தின் உலக ஆக்கிரமிப்புக்கு உதவுவதற்காக கிறிஸ்துவால் அவர்கள் அங்கே வைக்கப் பட்டுள்ளனர். ஆமென்.

இது தெரியாமல் ஜனநாயகம், குடியரசு என்றெல்லாம் உளறுகிறீர்களே மடசாம்பிராணிகளே.

அதிலும் கூட ஊருக்குத் தான் இப்படி உபதேசம். மற்றபடி பெங்களூரில் பல இடங்களில் நகராட்சியினர் வைத்துள்ள் வழி, சிக்னல்களைக் காட்டும் பலகைகளை எல்லாம் பார்த்துப் பார்த்து அங்கே ஜீசஸ் அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டிருக்கிறார்.

அடப் பாவிகளா, ஒரு இடத்தையும் விட்டுவைக்க மாட்டீர்களா?

6 comments:

மாமல்லன் said...

என் வேண்டுகோளை ஏற்று, அந்த கிறிஸ்தவப் பிரசாரப் படத்தை இட்ட ஜடாயுவுக்கு மிக்க நன்றி.

Anonymous said...

You can issue a notice through an advocate to remove the word Jesus
from the sign posts.If the authorities fail you can file a Public Interest Litigation. The advt. can be considered as offensive to non-christians.If authorities do not remove it despite representations from
non-christians appraoch the
court for remedy. There is
no fundamental right to
convert. Religious freedom
is not an absolute fundamental
right. So such attempts by
christians can be challenged
by non-christians as abuse of
religious freedom.

ஜடாயு said...

// The advt. can be considered as offensive to non-christians //

Thanks anon, for agreeing to this.

// non-christians appraoch the
court for remedy. There is
no fundamental right to
convert. //

This is a tricky wicket. Christian bodies invairably take the "religious freedom" to mean their right to convert (and hence exert domniation). Thats why whenever state govts. enact laws to ban illegal, fradulent conversions (eg. TN, Orissa, MP, Rajasthan), the Christian bodies are at the forefront in opposing them.

// You can issue a notice through an advocate to remove the word Jesus //

//You can issue a notice through an advocate to remove the word Jesus
from the sign posts //

Why notice? Shouldn;t the traffic authorities remove these stickers by themselves which have been put illegally on a public-utility? What are they afraid of?

Anonymous said...

// இந்திய அரசு அதிகாரிகள் அரசால் நியமிக்கப் படவில்லை, மக்களாலும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. கிறிஸ்தவத்தின் உலக ஆக்கிரமிப்புக்கு உதவுவதற்காக கிறிஸ்துவால் அவர்கள் அங்கே வைக்கப் பட்டுள்ளனர். //

சோனியா காந்தி அவர்களால் (சொந்தமாக எழுதப் பட்ட) காங்கிரஸ் கட்சி அறிக்கை மாதிரி இருக்கிறதே?

Anonymous said...

poda punnakku

Anonymous said...

சட்டத்தையும் தர்மத்தையும் தூக்கி எறிந்து மதமாற்ற ஆக்ரமிப்பு செய்யும் கிறிஸ்தவ ஏமாற்றுக் கும்பல்களைத் தோலுரிக்கும் உங்கள் பதிவுகள் தொடரட்டும். நன்றி.

-கதிர்வேலன், திருப்பூர்