ஜெயமோகன் பதிவும், ஆனந்த விகடனும்
ஜெயமோகன் எம்.ஜி.ஆர், சிவாஜி இவர்களைப் பற்றி எழுதியிருக்கும் தொப்பி, திலகம் ஆகிய இரு பதிவுகளையும் படித்து கண்களில் இருந்து கண்ணீர் வருமளவு சிரித்தேன். கிரீஷ் கர்நாட் நாடகங்களில் வரும் சில புராண கேலிகள் பற்றி "நாஸ்திக வாடையில்லாமல் சிரிக்கவைப்பவை" என்று சொல்வார்கள்। ஜெ.மோவின் இந்தப் பதிவுகளைப் பார்த்ததும் தமிழ்நாட்டின் போலித் தன வாடைகள் ஏதும் இல்லாதவையாக அவை எனக்குத் தெரிந்தன. ஹாட்ஸ் ஆஃப் ஜெ.மோ! இதற்கு முன்பு இந்த நடிகர்கள் பற்றிய இதே போன்ற, ரசிக்கும் படியான விமர்சனத்தை நான் படித்தது "புலிநகக் கொன்றை" நாவலுக்குள் ஒரு இடத்தில் தான் :))
ஆனால் "தமிழகத்தின் முகவரி" என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும், நகைச்சுவையைத் தன் முக்கிய அம்சமாகப் பிரகடனம் செய்யும் ஆனந்த விகடன் ஜெயமோகன் மீது அவதூறும், குற்றச்சாட்டும் சுமத்தியிருக்கிறது.. சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.
'கருணாநிதி இலக்கிய வாதியே இல்லை!' என்பது தொடங்கி, 'பெரியார், தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆரம்ப அறிவுகூட இல்லாதவர்!' என்பது வரை ஜெயமோகனின் தடாலடி ஸ்டேட்மென்ட்கள் பிரபலமானவை.
'அப்படி இவருக்கு அந்த இரண்டு சகாப் தங்களின் மீது என்னதான் பகை?' என்று படிப்பவர்கள் குமுறிக் கொந்தளிக்கும் அள வுக்கு
. ..ஒரு பொறுப்பான எழுத்தாளர் தன் அடையாளங்களைச் சொல்லி... அதே சமயம் தன் ஆவேசத்தை நியாயப்படுத்தக் காரணங்களும் சொல்லாமல் இப்படி சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்திருப்பதை என்னவென்று சொல்வது?
தமிழகத்தின் இலக்கிய ஆளுமை ஒருவர் மீது வெறுப்பைத் தூண்டும், அதன் மூலம் வன்முறையைத் தூண்டும் சாத்தியம் கொண்ட இது போன்ற சொல்லாடல்களின் மூலம் ஆனந்த விகடன் தான் தன் பொறுப்பற்ற தன்மையை நிரூபிக்கிறது. கருணாநிதி, ஈவேரா பற்றிய ஜெ.மோ விமர்சனங்கள் தடாலடி அல்ல, அவற்றுக்குப் பின் தீர்க்கமான, தெளிவான அலசலும், ஆய்வு நோக்கும் உள்ளது. அறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை என்கிற இந்த அருமையான கட்டுரை ஒரு உதாரணம்.
உலகெங்கும் கோடிக் கணக்கான மக்கள் தெய்வ அவதாரமாக வழிபடும் ராமபிரானையும், ராமாயணத்தையும் பற்றி தமிழக முதல்வர் கருநாநிதி உதிர்த்த அவதூறுகளைப் பற்றி ஒரு வரிகூட எழுதத் தோன்றாத இந்தப் பத்திரிகைக்கு இரண்டு பழைய மசாலா கதாநாயகர்கள் பற்றிய ஒரு விமரிசனத்தைப் பார்த்து இப்படி உள்ளம் குமுறுகிறதா? வெட்கக் கேடு.
ஜெ.மோ தனது இன்னொரு பதிவில் "இன்றைய இலக்கியத்தில் இத்தகைய பகடி மிக முக்கியமான ஒரு அம்சம்." என்று கூறுகிறார். உலகம் முழுவதும் சுதந்திரமான சமூகங்களில் இன்றைக்கு ஏற்றுக் கொள்ளப் பட்ட கருத்தாகும் இது.
"... His renowned eccentricities were owed in large measure to his mother, a simple woman from the country who lived for her rituals, which could last for months on end and “came with a series of fasts and half-fasts”। From this ensued his devotion to diet। He was a man who liked eating but who pledged himself to asceticism and simplicity।
One of Gandhi’s multitude of disciples was “a foolish man”, Vinoba Bhave, whose brain was softened by emulation and self-mortification, and who had to be dragged from the spinning wheel lest he made himself ill.
“He had lived for so long as a parasite, and away from the world, that he had become a kind of half-man, and he thought that Gandhi had been like that too. Vinoba had no means of knowing that Gandhi was a man of appetite, and his sexual abstinence hadn’t come easily. .."
இந்த வரிகளை எழுதிய "பொறுப்பற்ற ஆசாமி"க்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப் பட்டுள்ளது என்று ஆனந்தவிகடன் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இந்திய தேசம் முழுதும் போற்றும் இரண்டு பெரும் தலைவர்களைப் பற்றி இப்படி எழுதிய பின்னரும், வி.எஸ்.நய்பால் மீது இங்கே வைக்கப் பட்ட விமரிசனங்கள், இந்த விகடன் வரிகளை விட மிகவும் பண்பட்டவையாக இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆ.வி கட்டுரையைப் பார்த்து நொந்துபோன ஒரு நண்பர் அடித்த கமெண்ட் -
.. உண்மையில் ஜெமோ-வின் அந்த எம்சியார், சிவாஜி பற்றிய கட்டுரைகளைப் படித்துவிட்டு சிரித்துக் கொண்டிருந்தேன்.. ஹப்பாடி, இனிமேலாவது இவர்கள் போன்றஆளுமைகளைக் கடவுளாகப் பார்க்கும் தமிழர்களின் கெட்ட பழக்கம் கொஞ்சம்கொஞ்சமாகக் குறையும் என்று நினைத்தேன். ஆ.வி வெளியிட்டிருக்கும்கட்டுரையைப் பார்த்தால் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்றுநினைக்கிறேன்... இனிவரும் காலங்களில் சிம்பு, தனுஷ் போன்ற கடவுள்களும்,தென்னாட்டு டி-காப்ரியோ, தென்னாட்டு ப்ரூஸ்லீக்களும் உலா வருவார்கள்என்று எதிர்பார்க்கலாம். [ஏற்கனவே தன்னை சிம்பு ஒரு மகா பெரியமேதாவியாகத்தான் சொல்லிக்கொள்கிறார்!]
16 comments:
My Dear Sri Jataayu,
I abhor comedy scenes in most of the Tamil movies that make fun of one's complexion, deformity, disability and physcilally challenged condition in the name of humour. I am surprised to read that you could not control your laughter when you read about Sri Jayamohan's writing on MGR and Shivaji Ganesan. I do NOT know what he has writtern because I do NOT read magazines generally. When MGR was shot in the neck, a tiny piece of one bullet got stuck into the vocal chord and that he lost the faculty of speech totally. Surgeons did not want to remove the piece as it might endanger his life. It was with an extraordinary will power that MGR got back his ability to speak to the maximum extent. Again, in later years, it was his will power that enabled him to regain movements in limbs, also to speak to some extent. I am NOT a fan of MGR but certainly an admirer of his stubborn determination to strive against all odds he had to face in his lifetime. If MGR is made fun for his acting calibre and quixotic political adventures, I would no doubt join you in enjoying the comments. I am sad you could appreciate a writing that is in bad taste, presented in the guise of lighter vein. I am yet to read what is actually written and I have no intention of reading it also since I have bettter things to do. However, I could NOT refrain from reacting to your appreciation of comments made on a person's physical disability. Kindly excuse me for being frank in expressing my opinion.
Malarmannan
ஜடாயு
சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.
ஜெயமோகன் எழுதியிருப்பது அங்கதம் எனப்படும் மெல்லிய புத்திசாலித்தனமான தரமான நகைச்சுவை. இது கட்டுரை எழுதியவருக்குப் புரியவில்லையா அல்லது அப்படி எல்லாம் ஒரு வித நகைச்சுவை வெளிப்பாடு இருப்பதே அவருக்குத் தேரியவில்லையா? முதலில் இவர் தேவன், கல்கி,, எஸ் வி வி போன்றோர் விகடனில் அந்தக் காலத்தில் எழுதிய கட்டுரைகளைப் படிப்பது அவசியம். இது போன்ற சட்டையர்களால்தான் விகடன் என்ற பத்திரிகையே புகழ் பெற்றது என்பதை கோகுல் என்ற இந்தக் கட்டுரையாளர் அறியாமல் இருக்கலாம் ஆனால் விகடன் நிர்வாகியான பாலசுப்ரமணியன் அவர்களுக்குக் கூடவா தெரியாமல் போய் விட்டது,. இது போன்ற கத்துக்குட்டி அரை வேக்காட்டு எழுத்தாளர்களுக்கு விகடன் நிர்வாகிகள் முதலில் தேவன், ஏஸ் வி வி கல்கி கட்டுரைகள் குறித்து ஒரு ட்யூஷனாவது எடுக்கலாம். விகடன் என்று பெயர் வைத்துக் கொண்டு ஒரு விகடத்தைக் கூட புரிந்து கொள்ளாமல் சிண்டு முடியும் வேலையில் ஈடுபடுவது விகடன் என்ற பெயருக்கே அசிங்கம்,. கேவலம்.. எதைப் பற்றியும் ஆழமான புரிதலோ, அறிவோ இன்றி வெறுமே பிரச்சினையைத் தூண்ட வேண்டும் என்ற நோக்கில் ஒரு காழ்ப்புணர்வுடன் எழுதப் பட்டுள்ள கட்டுரை இது. கவுண்டமணி செந்தில் அடி தடி நாயே பன்னியே போன்ற நகைச்சுவை ரசனையுடன் வளரும் மக்களின் நடுவில் இது போன்ற தரமான சாதுர்யமான நகைச்சுவையை எழுதுபவர்கள் அருகி வரும் சூழ்நிலையில் ஜெயமோகன் போன்றோர் அந்த ரசனையை மீண்டும் கொணர்ந்திருப்பது வரவேற்கக் கூடிய ஒன்றாகும். விகடன் போன்ற, நகைச்சுவையும் கிண்டலும் கேலியும் தன் நோக்கம் என்று அறிவித்துக் கொள்ளும் ஒரு பத்திரிகை ஜெயமோகனின் எழுத்துக்களளச் சர்ச்சைக்குள்ளாக்கி சண்டை மூட்டி விடும் நோக்கத்துடன் கட்டுரை வெளியிட்டிருப்பது விகடனின் முதிர்ச்சியின்மையையும், கற்பனை/நகைச்சுவை வறட்சியையும் பொதுப் புத்தியையும், வம்பு இழுத்து விடும் குசும்புத்தனத்தையுமே காட்டுகிறது. கண்மூடித்தனமான சினிமா அரசியல் பக்தியுள்ள மூர்க்கமான அரசியல்வாதிகள் தொண்டர்கள் ரசிகர்கள் நிறைந்த தமிழ் நாட்டில் இது போன்று உணர்ச்சியைத் தூண்டி விடும் கட்டுரைகள் என்னவிதமான வன்முறை எதிர்விளைவுகள் ஏற்படுத்தும் என்பது விகடன் அறியாததா, இருப்பினும் இது போன்ற விஷமத்தனமான கட்டுரை ஒன்றை வெளியிட்டு தன் தரத்தையும் கண்ணியத்ததயும்ம் மேலும் தாழ்த்திக் கொண்டு தான் ஒரு மஞ்சள் பத்திரிகைதான் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது. மெல்லிய சாதுர்யமான, அறிவார்ந்த நகைச்சுவை எழுத்தைப் புரிந்து கொள்ள முடியாத விகடன் பேசாமல் தன் பத்திரிகையின் பெயரை வம்பன் அல்லது லும்பன் என்று மாற்றி வைத்துக் கொள்ளலாம்
அன்புடன்
ச.திருமலை
மதிப்பிற்குரிய ஸ்ரீ மலர்மன்னன் அவர்களுக்கு, நான் ஜெ.மோவின் காமெடியை ரசித்ததாகக் கூறியது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி விட்டது என்று தோன்றுகிறது. குண்டடி பட்ட எம்.ஜி.ஆர் அதற்குப் பின்னரும் மீண்டெழுந்து வந்த மன உறுதியைத் தான் பாராட்ட வேண்டுமே அல்லாது அவர் குரல் விளைவித்த விநோதங்களைக் கண்டு நகைப்பது நல்ல மனநிலை அல்ல என்கிறீர்கள். ஆனால் ரசிகர்கள் பலகாலம் எம்.ஜி.ஆரை, அவர் குரலை ரசித்து வந்தது குருட்டு வழிபாட்டுத் தன்மையால் அன்றி இத்தகைய பார்வையில் அல்ல என்பது என் தாழ்மையான எண்ணம்.
பொதுவாக, நீங்கள் குறிப்பிடும் அருவருக்கத் தக்க காட்சிகளை நானும் ரசிப்பதில்லை. ஆனால் இங்கே நான் ரசித்தது ஜயமோகனின் அங்கதத்தையும், இந்த நாயகர்களின் காலத்திலேயே அவர்களை கேலிசெய்து வந்த ஓரு சாராரின் வேடிக்கைப் பேச்சுக்களைப் பதிவு செய்ததையுமே. வரலாற்று அளவில், தமிழ்ச் சூழலில் இத்தகைய பதிவுகள் முக்கியமானவை.
இன்னொன்று இந்தக் காமெடி எனக்குப் பிடித்திருப்பதால், நான் ஜெயமோகனை ஆதரித்தோ, விகடனைக் கண்டித்தோ பேசவில்லை.
"I disapprove of what you say, but I will defend to the death your right to say it." என்ற வால்டேர் கூறிய கருத்து சுதந்திர தர்மத்தை ஒரு முன்னணிப் பத்திரிகை காலில் போட்டு மிதிப்பதைத் தான் கண்டிக்கிறேன்.
You are absolutely right Jataayu. This has been made clear by Gnyaani when he switched over to Kumudam. Alas, commercial considerations seem to have taken precedence for Ananda Vikatan over unbiased and fearless reporting.
// இது போன்ற சட்டையர்களால்தான் விகடன் என்ற பத்திரிகையே புகழ் பெற்றது //
சட்டையர்கள் - வாவ்! satire எழுதுபவர்கள் தமிழ்ச் சூழலில் அன்னியமாகி வருகிறார்கள் என்பதைக் குறிக்கும் முகமாக இந்த ஆங்கிலச் சொல்லையே இனிமேல் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்...
// விகடன் பேசாமல் தன் பத்திரிகையின் பெயரை வம்பன் அல்லது லும்பன் என்று மாற்றி வைத்துக் கொள்ளலாம்
அன்புடன்
ச.திருமலை //
:))) திருமலை, அசத்துகிறீர்கள் சார்.
// This has been made clear by Gnyaani when he switched over to Kumudam. //
Ah! The poison has just moved places. I am relieved that now it will inflict less readers, as Kumudam has less readership than Vikatan. We must appreciate Vikatan for this.
- DesaBhakta Thamizhan
//ஆனால் ரசிகர்கள் பல காலம் எம்.ஜி.ஆரை, அவர் குரலை ரசித்து வந்தது குருட்டு வழிபாட்டுத் தன்மையால் அன்றி இத்தகைய பார்வையில் அல்ல என்பது என் தாழ்மையான எண்ணம். //
அன்பிற்கினிய ஜடாயு ஸார்,
இதில் என்ன குருட்டு வழிபாட்டுத் தன்மை..? ஒருவருக்கு ஒருவரை எப்படிப் பிடிக்கிறது? எப்படிப் பிடிக்க வேண்டும் என்ற வரையறையை யார் நிர்ணயித்தது.?
உங்களுக்கு உங்களுடைய தாயாரை மிகவும் பிடிக்குமா? தந்தையை மிகவும் பிடிக்குமா என்று கேட்டால் யாரோ ஒருவருடைய அருமைதான் உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்க முடியும்.
அவர்களுடைய ஆளுமை உங்களுக்குள் இருப்பதை நீங்கள் ஒரு நாள் ஒத்துக் கொள்ளத்தான் செய்வீர்கள்.. இது எல்லா மனிதர்கள் மேலும் படிந்துள்ள ஒரு தொன்மம்.. இதை உங்களால் மறைக்க முடியாது.
இது நிகழ்ந்த காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் நட்சத்திரங்களாக ஜொலித்தவர்கள் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் மட்டுமே..
ரசிகர்களுக்கு அவர்களைப் பிடித்துப் போனது குற்றம் என்று மூன்றாம் மனிதர்களாக நாம் இப்போது பல வருடங்கள் கழித்து விமர்சனம் செய்வது சரியல்ல..
அந்தந்த காலக்கட்டத்தில் அவர்களுடனேயே இருந்து பார்த்திருந்தால்தான் அதனுடைய முழுமையும் நமக்குப் புரிய வரும்..
ஜெயமோகன் செய்தது காமெடி என்றாலும்கூட ஒருவருடைய உடல் ஊனத்தை கிண்டல் செய்வதை எந்தவிதத்திலும் காமெடியாக எடுத்துக் கொள்ளக்கூடாது.. அது மன வக்கிரம்..
இந்த நேரத்தில் உங்களுடைய எழுத்தைப் பார்க்காமல் தனிப்பட்ட முறையில் உங்களைக் கிண்டல் செய்து யாராவது எழுதினால் உங்களுக்கு என்ன நினைப்பு இருக்குமோ அதைத்தான் ரசிகர்களும் வெளிப்படுத்துவார்கள். வெளிப்படுத்துகிறார்கள். இதில் ஒன்றும் தவறில்லை..
ரசிகர்கள் அவரவர்க்கு பிடித்ததை ரசிக்கிறார்கள். அது ரசனைக் குறைவு என்று நீங்கள் கருதினால் உலகத்தில் எல்லாரையும் ஒரே மாதிரியாகவா படைத்து வைத்திருக்கிறான் ஆண்டவன்..?
ஆப்பிரிக்காவின் ஒரு தொல்குடியினருக்கு தாங்கள் நிர்வாணமாயிருப்பதை வெளியாட்கள் எவரும் பார்த்தால் கூட கோபம் வராது அவர்களுக்கு.
ஆனால் அவர்கள் சாப்பிடுவதை எவராவது வெளி பார்த்துவிட்டால் விஷ அம்பு எய்து கொலை செய்யும் அளவுக்குக் கோபம் வரும்.
ஆப்பிரிக்கா மனிதன் உசிலம்பட்டி வழியாக நடந்து இடம்பெயர்ந்தது அறிவியல் ஆய்வில் நிரூபிக்க்கப்பட்டிருக்கிறது!
அவ்வகையில் நம் மக்களுக்கு தன் அரசியல் நடிகத் தலைவனை, சினிமா நட்சத்திர நடிகரைச் சொன்னால் உணர்வு பொத்துக்கொள்கிறது!
ஆப்பிரிக்க வந்தேறித்தனம் இது!
மிகவும் வேதனையான விசயம் ஆனால் எதிர் பார்க்க முடியாததல்ல.
கனிமொழியையும் ஈவெராவையும் ஜெயமோகன் விமர்சித்தது திராவிட பாசிச சக்திகளுக்கு வெறியை உசுப்பிவிடுவதாகும். ஜெயமோகன் அதை செய்திருக்கிறார். அவர் இந்துத்துவம் முதல் இந்து கடவுளர் வரை எத்தனையோ பகடிகள் செய்திருந்தாலும் இணைய இந்துத்துவவாதிகள் அதனை ஒரு படைப்பாக்க திறன் மிக்க ஒருவரின் கூர்மையான விமர்சனமாக பார்க்கின்றனர். அதனை ஏற்றாலும் மறுத்தாலும். ஆனால் திராவிட பாசிஸ்டுகளுக்கோ ஜெமோவின் குரல் அவர்களின் 'பேரரசக்குடும்பத்தின் புத்தாடைகளின்' உண்மை தன்மையை காட்டுகிறது எனவே பொறுக்கவில்லை. எனவே லும்பன் கும்பல்களை சிவாஜி மற்றும் எம்ஜியார் பெயரால் தூண்டிவிட்டு அவர் மீது கருத்தியல் பாசிசத்தையும் முடிந்தால் வன்முறையையும் கட்டவிழ்த்து விட பார்க்கின்றனர். அதற்கு ஆனந்தவிகடன் துணை போகிறது. பெண்களின் மார்பினைக் காட்டி பத்திரிகை விற்கும் ஆனந்தவிகடன் போன்ற பொறுக்கிகளுக்கு ஜெமோ குறித்து பேச என்ன அருகதை இருக்கிறது?
மலர்மன்னன் அவர்கள் சொல்வது போல ஜெயமோகன் எம் ஜி ஆரின் ஊனத்தைக் கேலி செய்திருப்பதாகத் தோன்றவில்லை. ரஜினிகாந்துக்கு ஒரு ஆக்செண்ட் உண்டு, சரோஜாதேவியிடம் ஒரு மழலை உண்டு, எம் ஆர் ராதாவிடமும், விவேக்கிடமும் மூச்சு முட்டிப் பேசுவது போன்ற ஒரு தோரணை உண்டு. அது போல எம் ஜி ஆரின் வசனம் பேசும் உத்தி அவரது ஆப்பரேஷனுக்குப் பிறகு ஒரு வித மழலைத் தன்மையுடன் கூடியது. அதுவே பின்பு அவரது ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப் பட்டது. இங்கு எம் ஜி ஆரைப் பற்றி ஒரு பகடி செய்யும் பொழுது அவர் பேசும் ஆக்செண்டைப் பற்றியும் சொல்ல வேண்டி வருகிறது இல்லாவிட்டால் அது போலியான பகடியாகி விடும். அது நிச்சயம் உடல் ஊனம் குறித்த கேலியல்ல என்றே நான் கருதுகிறேன். எம் ஜி ஆரை இன்று ஆயிரக்கணக்கானோர் மிமிக்ரி செய்கிறார்கள் அவையெல்லாம் அவர் உடல் ஊனத்தைக் கேலி செய்வதாகவா எடுத்துக் கொள்ளப் படுகிறது? எம் ஜி ஆருக்கு இருந்த கிட்னி டயாலிசிஸ் பற்றி ஜெயமோகன் ஏதேனும் கிண்டல் அடித்திருந்தால் அது குற்றம், உடல் ஊனம் பற்றிய கேலியில் சேரும். ஒருவர் எப்படிப் பேசுகிறார் என்பதை மிமிக்ரி செய்வது அந்தக் கேட்டகரியில் சேராது.
தமிழ் நாட்டில் எம் ஜி ஆர்,சிவாஜி, அண்ணாத்துரை, கருணாநிதி, கனிமொழி, அன்பழகன் என்று அனைவரும் புனிதப் பிம்பமாகக் கருதப் படுகிறார்கள். இவர்களை ஒரு வித பெடஸ்டலில் வைத்து பயபக்தியுடன் வணங்கும் தன்மை அதிகரித்து வருகிறது. அப்படி இல்லை அவர்களும் சாதாரண ஆசாபாசங்களுடன் நிறைகுறைகளுடன் நிறைந்த மனிதர்தான், எப்படி நாம் நம் அண்டை வீட்டுக்காரர்களை, உடன் பணிபுரிபவர்களை, வீட்டாரை, உற்றார் உறவின நண்பர்களைக் கேலி செய்வோமோ அதைப் போலவே இந்த வி ஐ பி களையும் கேலி செய்யலாம் அவர்களது நிறை குறைகளை ஒரு எழுத்தாளன் தன் அங்கதத் திறமை கொண்டும் அலசலாம் என்பதைத்தான் ஜெயமோகன் செய்திருக்கிறார். விகடனுக்கும் ஜெயமோகனுக்கும் உள்ள ஏதோ தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக விகடன் அவரை ப்ளாக் மெயில் செய்து, மிரட்டி அவரை வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாக்குகிறது என்றே தோன்றுகிறது. இது ஒரு எழுத்தாளன் மீது சக்திவாய்ந்த ஊடகம் ஒன்று செய்யும் வன்முறை, ஊடக ப்ளாக் மெயில், மஞ்சள் பத்திரிகைத் தனம்.
விகடன் ஆசிரியர் பாலு எம் ஜி ஆர் அரசால் கைது செய்யப் பட்ட பொழுது வருந்திய கண்டித்த அதே வாசகனாகிய நான் இன்று வரலாற்ற்றை மறந்து ஒரு எழுத்தாளன் மீது வன்முறையைப் பிரயோகிக்கும் அராஜகப் போக்கையும் கண்டிக்கிறேன். அதிகாரமும், கையில் பத்திரிகை இருக்கிறது என்ற திமிரும் விகடனின் இந்தக் கட்டுரையில் தெளிவாக வெளிப்படுகிறது.
பிராமணர்களைத் தமிழ் நாட்டை விட்டு அடித்துத் துரத்த வேண்டும் என்று இன ஒழிப்புப் பிரகடனத்தைத் திமுக தன் அரசியல் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. இது ஒரு இன அழிப்பு, இனத் துவேஷ , கொலைகாரத் தீர்மானம் இதை எதிர்த்துக் கண்டிக்க துப்பில்லாத வக்கில்லாத விகடனுக்கு ஒரு எழுத்தாளர் தன் சொந்தப் பதிவில் அங்கதமாக எழுதிய ஒரு கட்டுரையைக் கேள்வி கேட்க்க மட்டும் தெம்பு வந்து விடுகிறது. என்னே ஒரு வீரம், என்னே ஒரு பத்ரிகா தர்மம்? என்னே ஒரு எழுத்துச் சுதந்திரம்? வெட்க்கக் கேடு. படித்தவன் சூது செய்தால் ஐயோ என்று போவான் என்றார் பாரதி. எல்லோரும் இன்புற்றிருக்க ஒரு பத்திரிகை நடத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டே எல்லோரையும் துன்புறுத்தி பிழைத்துக் கொண்டிருக்கிறது விகடன்.
அன்புடன்
ச.திருமலை
சிவாஜியும், எம்ஜிஆரும் திரைப்படத்துறையில் உச்சத்தில் இருந்த போதே கேலிகளுக்கும்,விமர்சனங்களுக்கும்
உள்ளானவர்கள். அவர்களை இன்றும்
கேலி செய்தும்,பகடி செய்தும் கலை
நிகழச்சிகள் நடக்கின்றன.ஜெயமோகன்
ஒன்றும் புதிதாய் செய்துவிடவில்லை.
அவருக்கு கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்
என்று தோன்றுகிறது, உடனே அர்த்தமற்ற கோபம் வருகிறது.
போஸ்டரில் தன் பெயர் இல்லையா,
ஆ.வியை வசை பாடி எழுதுபவர்
பிறரை கேலி செய்கிறார். இவரை,
இவர் குடும்பத்தினை இதே போல்
எழுதினால் தாங்கிக் கொள்வாரா.
திமிர், அகங்காரம் - இரண்டின் இன்னொரு பெயர் ஜயமோகன்.
பின் நவீனத்துவம் பற்றி உளறிக்
கொட்டுகிறார்.முன்னுக்குப் பின்னாக
எழுதுகிறார்.
திமிர் இருக்கிற அளவிற்கு பண்பும்
இல்லை, அறிவும் இல்லை.
// ரசிகர்கள் அவரவர்க்கு பிடித்ததை ரசிக்கிறார்கள். அது ரசனைக் குறைவு என்று நீங்கள் கருதினால் உலகத்தில் எல்லாரையும் ஒரே மாதிரியாகவா படைத்து வைத்திருக்கிறான் ஆண்டவன்..? //
உண்மைத்தமிழன், பின்னர் கலை, இலக்கியம், திரைப்படம் இவற்றில் விமர்சனம் என்று ஒன்று எதற்கு இருக்க வேண்டும்? மோசமான படைப்பு, சராசரி படைப்பு, உன்னதம் என்று ஏன் அறிஞர்களும், விமர்சகர்களும் சான்றுரை வழங்க வேண்டும்? அவரர்களுக்குப் பிடித்ததை அவரவர் ரசிக்கிறார்கள் என்று அப்படியே விட்டுவிடலாமே? இந்த வாதம் எடுபடாது.
இங்கே திருமலை சொல்வது போல ஜெ.மோ பகடி செய்திருப்பது எம்.ஜி.ஆரின் குரல் அமைப்பு, ஒலிச் சேஷ்டைகள் - சிவாஜியின் நடிப்பு "உத்திகள்" இவற்றைப் பற்றித் தான். இதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.
விகடன் வேண்டுமென்றே தன் வாசகர் வட்டத்தில் உள்ள இந்த நாயக வழிபாட்டாளர்களை உசுப்பி விடுகிறது என்றே தோன்றுகிறது.
// முன்னுக்குப் பின்னாக
எழுதுகிறார். //
பின் நவீனத்துவத்தின் அடிப்படை இலக்கணமே இது தானே? அதைச் சரியாகப் பின்பற்றும் ஜெயமோகனை "பின் நவீனத்துவம் பற்றி உளறிக்
கொட்டுகிறார்" என்று பிறகு ஏன் கூறுகிறீர்கள்??
Mr.Jaya mohan is tamilnadu's Ragula sangurithyaya.NOne of the "komban" can deny that.He has ..lls to comment even on Mr.M.k's so called writing.
regards,
k.n.baalasurahmanian
cbe
// இதற்கு முன்பு இந்த நடிகர்கள் பற்றிய இதே போன்ற, ரசிக்கும் படியான விமர்சனத்தை நான் படித்தது "புலிநகக் கொன்றை" நாவலுக்குள் ஒரு இடத்தில் தான் :))//
What a co incidence! The author of this novel P A Krishnan has written a column in The Pioneer in the same subject - a Must read..
Slaps and sticks for calling 'em slapstick
http://www.dailypioneer.com/columnist1.asp?main_variable=Columnist&file_name=anantha%2Fanantha20%2Etxt&writer=anantha
The eminent writer also calls Jeyamohan pieces as "rip roaring". I feel vindicated now, Malarmannan.
இந்த பதிவிற்கு உண்டான லிங் எங்கேயும் கிடைக்கவில்லையே. அப்படி ஜெமோ என்னதான் எழுதினார். 2008ல் நான் ரொம்ப சின்ன பையன்
Post a Comment