கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தத் தடை!
பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினக் கதகதப்பில் தமிழகத்தின் இளவட்டங்கள் திளைத்துக் கொண்டிருக்கையில், இதே நாளில், 1998ஆம் ஆண்டு கோவை மாநகரில் இஸ்லாமிய ஜிஹாதி வெறியர்களின் வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்த 58 அப்பாவித் தமிழர்களுக்காகக் கண்ணீர் சிந்த, அஞ்சலி செலுத்த ஒரு சிறு கூட்டம் கோவை நகரில் இந்து அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டு அனுமதி கோரப்பட்டது. இந்த அமைதியான கூட்டத்திற்குக் காவல் துறை அனுமதி மறுத்து விட்டது.
இருப்பினும் அஞ்சலி செலுத்தியே தீருவோம் என்ற உறுதியுடன் மாநகரில் முதல் குண்டு வெடித்த இடத்தில் சாலையிலேயே அமர்ந்து விட்டனர் பாஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அஞ்சலி செலுத்த வந்திருந்தவர்கள். காவல்துறை 462 பேரைக் கைது செய்தது.
ஜிஹாதி தீவிரவாதத் தாக்குதலில் தங்கள் குடிமக்களை இழந்த மும்பை, தில்லி, லண்டன், நியூயார்க், மாட்ரிட் ஆகிய நகரங்களில் பொதுமக்கள் வருடாவருடம் மறைந்தவர்களுக்காகக் கண்ணீர் சிந்தியும், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவோம் என்று உறுதிபூண்டும் இத்தகைய தினங்களை அனுசரிக்கின்றனர். அரசு அதிகாரிகளும் இவற்றில் பங்கேற்கின்றனர்.
ஆனால் தமிழக காவல்துறை அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு அனுமதியும் மறுத்து, பின்னர் அவர்களைக் காரணம் எதுவும் கூறாமல் கைதும் செய்திருக்கிறது. தமிழக அரசின் இந்த மனித விரோத, அராஜக நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியது.
அங்கே இறந்தவர்கள் தமிழர்கள் தானே? இந்த நாட்டின், இந்த மாநிலத்தின் குடிமக்கள் தானே? அவர்களது நினைவை அவமதித்து, இழிவு செய்யும் இந்த ஜிஹாதி ஆதரவு அரசை இதற்காகக் கண்டிக்கும் குறைந்த பட்ச மானம், ரோஷம், மனிதாபினம் கூடவா இல்லாமல் போய்விட்டதா தமிழக பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும்?? வெட்கப் படவேண்டிய விஷயம்.
1 comment:
தமிழர்களுக்கு இந்து இயக்கங்களை விட்டால் வேறு நாதி கிடையாது என்பது இதிலிருந்தே தெரிந்துவிட்டது. செத்துப்போன தமிழர்கள் 100% திராவிடர்கள். நாத்தம்பிடித்த கருனாநிதி கம்மனாட்டியும் அவன் கட்சிக்காரன்களும் துலுக்கன்களுக்கு மாலிஷ் போட்டுக்கொண்டு இருக்கானுங்க. மோடி தமிழ்நாட்டு முதல்வர் ஆனாத்தான் விடிவுகாலம் பொறக்கும்.
Post a Comment