Wednesday, May 21, 2008

தமிழக ஜிகாதிகள்: போலீஸ் தேடுதல் தீவிரம்

ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகள் பற்றிய இந்தப் பதிவின் இறுதியில் இப்படிக் கூறியிருந்தேன் -

"எனவே அரசு மிக உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், உடுமலைப் பேட்டையிலும், உடுப்பியிலும், குண்டூரிலும், நாசிக்கிலும் என எதிர்பாராத இடங்களில் எல்லாம் ஜிகாதிகள் தாக்குதல் நடத்தப் போவது உறுதி. மக்களின் உயிருக்கு உத்தரவாதம் தராத அரசு நீடிப்பதில் அர்த்தமில்லை, அது அகற்றப் படவேண்டும்"

எழுதிய கம்ப்பூட்டரை இன்னும் ஒருமுறை boot கூடப் பண்ணவில்லை, அதற்குள் சென்னை மண்ணடியில் ஜிகாதிகள் கைது செய்யப் பட்டதாகவும், சென்னையிலும் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. போலீஸ் போய்ப் பிடிப்பதற்குள் இந்த ஜிகாதி கும்பலின் தலைவன் தப்பியோடிவிட்டான். இது பற்றி ஜுனியர் விகடன் இதழ் ஒரு அதிரடி ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது.

தஞ்சை கடலோரப் பகுதிகளில் இஸ்லாமிய தீவிரவாதமும், மதவெறியும் நாளுக்கு நாள் பெருகிவருகிறது பற்றியும் இந்த ரிப்போர்ட் கவலை தெரிவிக்கிறது. ஒன்றரை வருடம் முன்பு பாகிஸ்தான் ஆகி வரும் தஞ்சைத் தமிழ் மண்??? என்ற பதிவில் குறிப்பிட்டது போல, கோயில் திருவிழாக்களில் சுவாமி வீதியுலா வருகையில் கோலம் போட்டு வரவேற்று தஞ்சை மண்ணின் கலாசாரத்துடன் தங்களை இணைத்துக் கொண்டிருந்த முஸ்லீம்களின் தலைமுறை முடிந்துபோய், ஜிகாதி தீவிரவாத விஷ விருட்சங்கள் அங்கே வளர்ந்துகொண்டிருக்கின்றன. இன்று ஜூ.வியே இதைப் பற்றி எழுத ஆரம்பித்துள்ளது.

மற்ற மாநில, மற்றும் வெளிநாட்டு ஜிகாதிகளுடன் இவர்களுக்கு இருக்கும் தொடர்புகளையும் ஜூ.வி கட்டுரை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

டென்ஷனில் தமிழகம்! 'டேஞ்சரஸ் தவ்பீக்...'
(ஜூனியர் விகடன் 25-5-2008 இதழிலிருந்து)

தமிழகத்தை திடீரென திக்திக்கில் மூழ்கடித்திருக் கிறது தவ்பீக் என்ற பெயர்! 'இறைவன் ஒருவனே' அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக இருக்கும் தவ்பீக், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம் பட்டினத்தைச் சேர்ந்தவன். சில மாதங்களுக்கு முன்பு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டவன். அப்போது, ''வெறுங்கையோட திரியிற நான், இத்தனை போலீஸ் பாதுகாப்பையும் தாண்டி எப்படி சார் மோடியைக் கொல்ல முயன்றிருக்க முடியும்? இருந்தாலும், என்னால மோடியோட உயிருக்கு ஆபத்து இருக்குன்னு நீங்க நினைச்சதே எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு'' என சொல்லி போலீஸாரையே அசரடித்தவன் தவ்பீக்.

அந்த வழக்கிலிருந்து கடந்த மாதம்தான் வெளியே வந்திருக்கிறான்.ஆறு வருடங்களுக்கு முன்பு அதிராம்பட்டினத் தில் முஸ்லிம் பெண்களை ஏற்றிச் சென்ற ஒரு ஆட்டோக்காரரை அரிவாளால் வெட்டிய தவ்பீக், போலீஸாரிடம் மத்திய அமைச்சர் ஒருவரின் பெயரைச் சொல்லி மிரட்டியதை அப்போதே ஜூ.வி-யில் வெளியிட்டிருந்தோம் (தவ்பீக்கின் புகைப்படத்தை அப்போதே முதன்முறையாக வெளியிட்டது ஜூ.வி.).அதன்பிறகு, தவ்பீக்கை உளவுத்துறை போலீஸார் விடாமல் வேவு பார்த்த போதுதான் இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலனுக்கு குறி வைக்கப்பட்டிருக்கும் தகவல் தெரிய வந்திருக்கிறது. உடனே, அவனையும் அவன் கூட்டாளிகளையும் சேர்த்து வளைக்க போலீஸ் திட்டம் போட்டது.

இந்த நிலையில், ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பை அடுத்து சென்னையில் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, தவ்பீக்கும் அவனுடைய கூட்டாளிகளும் சென்னை மண்ணடி யில் உள்ள அட்வகேட் மேன்ஷனில் தங்கியிருப்பதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது. அடுத்தகணமே இணை கமிஷனர் ரவி தலைமையிலான போலீஸ் படை அங்கு விரைந்திருக்கிறது.

அதற்குள் தவ்பீக்கும், 'இறைவன் ஒருவனே' அமைப்பின் சென்னை தலைவன் அபுதாகிரும் எஸ்கேப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 'பழனி' உமர், நெல்லையைச் சேர்ந்த சையத்காசிம் என்கிற ஹீரா, சென்னை மண்ணடி ஏரியா காதர் ஆகிய மூவரையும் வளைத்தது போலீஸ்.

தவ்பீக்கின் தீவிரவாத வளர்ச்சி பற்றிய பல விஷயங்களை, போலீஸ் மற்றும் விவரமறிந்த புள்ளிகள் விரிவாக நம்மிடம் சொன்னார்கள்.''அவனிடம் ஐந்து நிமிஷம் பேசினாலே எதிராளி மயங்கிவிடுவார். பிரமாதமாகப் பாடவும் செய்வான். இமாம் அலியுடன் நெருங்கிய பழக்கம் கொண்டிருந்தவன். இமாம் அலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட பிறகு, ஒட்டுமொத்த போலீஸ§ம் கண்காணித்துக் கொண்டிருப்பது தெரிந்தும், உடலை எந்த தயக்கமும் இன்றி முதல் ஆளாக நின்று சுமந்து சென்றவன். இமாம் அலியின் பல திட்டங்கள் தவ்பீக்குக்குக் கைமாற்றப்பட்டதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது. 'இமாம் அலியின் நண்பர்' என்கிற அடையாளத்தை வைத்து சர்வதேச தீவிரவாத அமைப்புகளோடும் தவ்பீக் தொடர்புகொண்டிருக்கிறான்.

ஆரம்பத்தில் 'முஸ்லிம் டிஃபென்ஸ் ஃபோர்ஸ்' என்ற அமைப்பில் இருந்த தவ்பீக், சர்வதேச தீவிரவாதியான 'மல்லிப்பட்டினம்' இம்ரான் (சமீபத்தில் தமிழகத்தில் கைது செய்யப்பட்டான் இவன்) உதவியுடன் சவூதி அரேபியா சென்று பயிற்சி பெற்றான். இதற்கிடையில், தமிழகத்தில் சில முக்கியமான அசைன்மென்ட்களை நிறை வேற்றுவதற்காக தவ்பீக் சென்னைக்குத் திரும்பி வர, தமிழக போலீஸ் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அவனைக் கைது செய்தது. இருந்தாலும், அவன் சம்பந்தப்பட்ட எந்த வழக்கையும் போலீஸால் முறையாகப் பதிவு செய்ய முடியவில்லை. அதனால், நான்கு வருடங்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டான்.

அண்டை மாநிலங்களில் பிடிபட்ட தீவிரவாதிகளின் வாக்குமூலங்களில் தவ்பீக்கின் பெயர் தவறாமல் இடம் பிடித்தது. கடந்த மார்ச் 25-ம் தேதி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ராம.கோபாலன் கூட்டத்தில் அவரை தீர்த்துக் கட்டுவதற்கான ப்ளானை நிறைவேற்ற தவ்பீக் திட்டமிட்டிருந்தான். ஆனால், அன்று எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாக இருந்ததால் திட்டம் நிறைவேறாமல் போயிருக்கிறது.இது மட்டுமல்ல... ஜெய்ப்பூரைப் போல் சென்னையிலும் அசம்பாவிதங்களை அரங்கேற்ற தவ்பீக்கின் கும்பல் திட்டம் போட்டிருக்கிறது. நல்ல வேளை, அதற்குள் அந்த கும்பல் பிடிபட்டுவிட்டது. தப்பியோடிவிட்ட தவ்பீக்குக்கு அடைக்கலம் கொடுக்க பல அமைப்புகள் தயாராக இருக்கின்றன. அதனால், அவன் போட்டு வைத்திருக்கும் திட்டங்களை விடாப்பிடியாக நிறைவேற்ற முயலுவான் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது'' என்று கவலையூட்டினார்கள்.

தவ்பீக்கின் கூட்டாளிகளிடம் விசாரித்துவரும் டீமில் இருப்பவர்கள், ''ஜெய்ப்பூரிலும், சென்னையிலும் ஒரே சமயத்தில் குண்டுவெடிப்பு களை அரங்கேற்ற திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. உளவுத்துறை போலீஸாரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் சென்னை தப்பியிருக்கிறது. ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றிருக்கும் 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்புக்கும் தவ்பீக்குக்கும் தொடர்பு இருப்பதற்கான முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்பினரின் மெயில் மிரட்டலில் 'டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களையும் தகர்ப்போம்' எனச் சொல்லி இருக்கிறார்கள். போலீஸ் தன் மீது கண் பதித்திருந்ததால்தான் தவ்பீக்கால் சென்னையைத் தகர்க்கும் அசைன்மென்ட்டை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கிறது. இப்போது அவன் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. விரைவில் அவனைப் பிடிப்போம்'' என்கிறார்கள்.

அதிராம்பட்டினம் - மல்லிப்பட்டினம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தவ்பீக்குக்கும் மல்லிப்பட்டினத்தில் இம்ரானுக்கும் ஆதரவாளர்கள் அதிகம். சில வருடங் களுக்கு முன்பு மல்லிப்பட்டினம் பள்ளிவாசல் அருகே வெடிமருந்து மூட்டைகள் கைப்பற்றபட்டபோது, பிடிபட்டவர்கள் 'தஞ்சை பெரிய கோயிலை தகர்க்கத்தான் திட்டம் போட்டோம்' எனச் சொல்லி அதிர வைத்தார்கள்.

ஐயாயிரம் வாக்குகளை அள்ளிய தவ்பீக்!

இரண்டு வருடங்களுக்கு முன்பு சிறையிலிருந்தபடியே சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டி யிட்டவன்தான் இந்த தவ்பீக். அவன் பேசிய கேசட்களை தொகுதி முழுக்க ஒலிபரப்பியும், உரைகளை பிட் நோட்டீஸ்களாக அச்சடித்தும் அவன் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்தார்கள். தேர்தல் முடிவில் அவனுக்கு ஐயாயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் விழுந்திருந்தன.

ரகசிய கூட்டம்?

தவ்பீக் பதற்றம் தமிழகம் முழுவதும் தொற்றிக்கொண்டிருக்கும் நேரத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்னும் அதிகமாகி இருக்கிறது. மேலப்பாளையத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களைத் திரட்டி, சீருடையும் கொடுத்து, 'அணிவகுப்பு ஒத்திகை மற்றும் மனதிடப்பயிற்சி' அளிக்க இருக்கிறார்கள் என்றொரு பரபரப்பு கடந்த வாரம் கிளம்பியது. போலீஸ் கண்காணிப்பு தீவிரமானதால், அந்தக் கூட்டம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதேபோல், இரண்டு நாட்களுக்கு முன்பு தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் குண்டு வெடிக்கப்போகிறது என்று தென்காசி போலீஸ் நிலையத் துக்கும், '100'-க்கும் ஒரு தகவல் வந்தது. தென்காசி கோயில் பக்கத்திலிருந்த ஆளில்லா ஒரு ரூபாய் டெலிபோன் பூத்திலிருந்துதான் அந்த போன் வந்திருக்கிறது.

-- இரா.சரவணன்
Copyright © 2007 Junior Vikatan

3 comments:

ஜயராமன் said...

ஐயா,

தங்களின் தகவல்கள் அதிர்ச்சியாய் இருந்தால், சிறிது யோசிக்கையில், எதிர்பார்த்ததுதான்.

தமிழக முஸ்லிமகள் - பெரும்பான்மை இல்லாவிட்டாலும் கணிசமானவர்கள் - தீவிரவாதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என்பது இந்த "இறைவன் ஒருவனே" தீவிரவாதியின் பொதுமக்கள் ஆதரவிலிருந்து வெளியாகிறது.

தமிழகத்தில் முஸ்லிம்கள் தங்களின் பெட்ரோல் பணத்தால் விஷத்தை விதைத்துக்கொண்ண்டிருக்கிறார்கள்.

இவர்களின் சதித்திட்டங்களை படிக்கும்போது தமிழகத்தின் நல்லகாலம் இந்த மூளை கெட்ட கயவர்களை போலீஸ் சரியான தருணத்தில் இனம் கண்டு கொண்டதுதான்.

இதோடு விட்டு விடாமல், தமிழக காவல்துறையினர் பாரபட்சம் இல்லாமல் நன்கு துப்பறிந்து இவர்களுக்கு மறைமுக ஆதரவு அளித்து பொதுவில் அகிம்சை வேடம் போடும் பல முஸ்லிம் தலைவர்களையும் கைது செய்து வெளிக்கொணர வேணும். இந்த 'இறைவன் ஒருவனே' "ஏகத்துவம்' "முன்னேற்ற கழகம்" எல்லாவற்றிலும் இந்த விஷப்பூண்டுகள் இருக்கலாம்.

நன்றி

ஜயராமன்

Anonymous said...

India is one of the Highest Musiliem population contry.

take care.

Anonymous said...

//தமிழக முஸ்லிமகள் - பெரும்பான்மை இல்லாவிட்டாலும் கணிசமானவர்கள் - தீவிரவாதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என்பது இந்த "இறைவன் ஒருவனே" தீவிரவாதியின் பொதுமக்கள் ஆதரவிலிருந்து வெளியாகிறது.//

அப்படியெல்லாம் சொல்லிவிடவும் முடியாது. பலர் பயந்துகொண்டு அமைதியாக இருக்கலாம். 'இந்தியன் முஜாஹித்தீன்' என்ற முஸ்லீம் பயங்கரவாத அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் 'ஷைத்தானின் உலமாக்கள்', துரோகிகள் என்றெல்லாம் அமைதியாக இருக்கும் முஸ்லீம்களையும், மதத்தலைவர்களையும் சாடியிருப்பதைப் பாருங்கள். உள்ளே நிறைய சண்டைகள் இருக்கிறது. வெளியே ஒன்றாக இருக்கிறார்போன்றதொரு தோற்றம் இருக்கிறது.

நமது நோக்கமெல்லாம் கூடுமானவரையில் நல்ல, செக்யூலர், அமைதியை விரும்பும் முஸ்லீம்களை அரவணைத்து செல்வதும், இது போன்ற பயங்கரவாதிகளை அவர்களிடமிருந்து அந்நியப்படுத்துவதாகவே இருக்கவேண்டும். அதுவே நமது நாட்டிற்கும், சமூகத்திற்கும் நல்லது.