Friday, September 05, 2008

இந்தியாவைக் குறிவைக்கும் கிறிஸ்தவ மிஷநரி அமைப்புகளும், அமெரிக்கஅரசு சதித்திட்டங்களும்: தெஹல்கா அதிரடி ரிப்போர்ட்

சில மாதங்கள் முன்பு எனது கிறிஸ்தவம் என்கிற கோகோ கோலா பதிவில் ஜோஷுவா ப்ராஜெக்ட் என்ற பயங்கர கிறிஸ்தவ மதமாற்றத் திட்டம் பற்றிய தகவல்களையும் மற்றும் அதன் சீரியஸான தாக்கத்தைப் பற்றியும் எழுதியிருந்தேன்.. அப்போது நான் சும்மா பூச்சாண்டி காட்டுகிறேன் என்று கூட தமிழ் வலையுலகில் சிலர் கேலி செய்தனர்..

வெல், இப்போது இந்தியாவின் முன்னணி புலன்விசாரணை பத்திரிகையான தெஹல்கா.காம் இதே விஷயத்தைப் பற்றிய விரிவான ரிப்போர்ட் ஒன்றை disturbing exposé என்ற குறிப்புடன் வெளியிட்டிருக்கிறது...

Preparing for the harvest ... The Tehelka Report

A new mood of aggressive evangelism has been emanating from America. Well-funded, superbly networked,backed by the highest of the land, seized of its moral supremacy, it has India as one of its key targets, reveals VK Shashikumar in a disturbing exposé...

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு சமூகக் குழுக்கள், சாதிகள் பற்றிய விவரங்களையும் இந்த ஜோஷுவா ப்ராஜெக்ட் தங்கள் வலைத் தளத்திலேயே போட்டுவைத்திருப்பதைப் பற்றியும் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.. தெஹல்காவின் துப்பறிதலில் இந்த விவரங்கள் அனைத்தும் அமெரிக்க உளவுத்துறை நிறுவனம் (CIA) மற்றும் அமெரிக்க வெளிநாட்டு அமைச்சகம் இவற்றின் கைகளுக்குப் போவதாகவும் தெரிய வந்துள்ளது..

ஏறக்குறைய இயற்கையையும், ஜீவராசிகளையும் போன்றே பல சிக்கலான உறவுகளையும், வலைப்பின்னல்களையும் கொண்டது இந்திய சமூக அமைப்பு. இந்து, பௌத்த, சமண, சீக்கிய மதங்கள் உபதேசிக்கும் மானுட அறம், தர்மம், அனைத்து உயிர்களையும் நேசித்தல், இயற்கையைப் போற்றுதல் ஆகிய பல கோட்பாடுகளால் உரமூட்டப்பட்ட இந்த அமைப்பு, வானவில்லின் வர்ணஜாலம் போல ஏராளமான வேற்றுமைகளைக் கொண்டிருந்தும், பெரிய சமூக மோதல்களையும், பழங்குடிப் போர்கள் மாதிரியான சண்டைகளும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து வருகிறது..

இந்த சமூக அமைப்பை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து இதில் சில கண்ணிகளை வேண்டுவென்றே தூண்டிவிட்டு எரிமலையாக வெடிக்கச் செய்து நாட்டில் பல சமூகக் குழப்பங்களை உருவாக்கும் உள்நோக்கத்துடனேயே இந்த அமெரிக்க நிறுவனங்கள் இந்த விவரங்களை மெனக்கெட்டு, துல்லியமாக சேகரித்துத் தொகுக்கின்றன என்பது கண்கூடு.

நம் நாட்டிற்கெதிரான இந்த மிகப்பெரிய தேசத்துரோக சதியில் ஏராளமான இந்திய கிறிஸ்தவ அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன என்பது வெட்கக் கேடான விஷயம்.. இந்தக் குற்றங்களால் தண்டிக்கப் பட்டு, ஒழிக்கப் படவேண்டிய இந்த அமைப்புகள் ஏதோ இந்திய மக்களுக்கு சேவை செய்கிறோம் என்ற பெயரில் இங்கே உலவிக் கொண்டிருக்கின்றன..

வேர்ல்டுவிஷன்(World Vision) அமைப்புக்கு நன்கொடை அளிக்காதீர்கள்! என்ற எனது இன்னொரு பதிவில் மதமாற்றிகள் என்பதாலேயே இவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்... ஆனால் தெஹல்கா கட்டுரைப் படி பார்த்தால், இந்த அமைப்பை தேசத்துரோக சதிக்குத் துணைபோகும் நிறுவனம் என்று கூறுவதே சரியாக இருக்கும்!

ஒரிஸ்ஸாவில் தற்போது நடந்து வரும் கலவரங்களைப் பற்றி ஏதோ காரணமில்லாமல் இந்து கும்பல்கள் கிறிஸ்தவர்களைத் தாக்கி வருவதாக இந்த அமைப்புகள் ஒப்பாரி வைக்கின்றன.. சூடான் நாட்டில் அங்கிருக்கும் அரசுக்கு எதிராக உலக-பெட்ரோல்-அரசியல் பின்னணியில் இதே மாதிரியான கூச்சலை அங்குள்ள கிறிஸ்தவ மிஷநரி அமைப்புகள் போட்டு வருவதையும் இந்த ரிப்போர்ட் குறிப்பிடுகிறது.

இத்தகைய மிஷநரி சதிகாரர்களின் தலைமைக் கூடாரமாக சென்னை நகரமும், தமிழகமும் விளங்கி வருகிறது என்பதையும் இத்தகைய ரிப்போர்ட்கள் அனைத்தும் கூறுகின்றன. தமிழ் கூறும் நல்லுலகத்தை நாசமாக்கும், தருமமிகு சென்னையில் அதர்ம மதத்தைப்
பரப்பும் இந்த சதிகாரர்களின் சதித்திட்டங்களை உண்மையான தமிழர்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.

5 comments:

ஜயராமன் said...

தெகல்கா அமைப்பு காங்கிரஸின் கைக்கூலி.

ஆயின், அந்த அமைப்பின் இந்த ரிப்போர்ட்டே இந்த அவல நிலையையும் நம் தேசத்துக்கு ஏற்பட்டிருக்கும் அபாயத்தையும், அதற்கு இந்திய மைனாரிடி கிருத்துவ அமைப்புகள் சேவை என்ற பெயரில் துணை போவதையும் இது சுட்டிக்காட்டுகிறது என்றால் இந்த விஷம் எத்தனை புரையோடிப்போயிருக்கிறது என்று ஊகித்துக்கொள்ளலாம்.

மேலும், இதனால் ஒரிஸ்ஸாவில் நடக்கும் பதட்டமான வன்முறைகளுக்கான அடிப்படை காரணமும் புரிகிறது. எரிகிறதைப்பிடுங்கினால் கொதிப்பது தானாகவே அடங்கும். இந்த கிருத்துவ மிஷனரிகளின் மதமாற்ற "அறுவடை"களை நிறுத்தினால் இந்தியா ஒரு அமைதிப்பூங்காவாக்கும்.

நன்றி

ஜயராமன்

Anonymous said...

இது மட்டும் அல்ல. மெத்தப் படித்த மேதாவிகள் சிலர் மதச் சார்பின்மை என்ற கோஷம் போட்டுக்கொண்டு, உள்ளுக்குள்ளே, சிறுபான்மை அமைப்புகளுக்கு சொம்பு பிடிக்கின்றன. இந்த அவலம் நீடித்தால் இன்னும் சில நாட்களில் இந்தியாவிலேயே இந்துக்கள் சிறுபான்மையினராக மாரிவிடும் அவலம் இருக்கிறது.நம்மவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புத்தி வராது. குஜராத் போல சிறிது செயல்பட்டாலும் ஏன் அப்படி என்று கேட்பார்கள். சிறிது நாட்களாக எந்த பரபரப்புச் செய்தியும் இல்லை. அதனால் வியாபார சுயநல நோக்கோடு, மங்களூர் குடிகாரச் செய்தியை, போதை வரும் அளவுக்கு எழுதி காசு பார்க்கின்றனர்.அதில் ஜட்டி அனுப்பும் அவலம் வேறு.

நம்மவர்களில் பலருக்கு நான் ஒரு ஆழ்ந்த இந்து மத வாதி என்று பொது இடங்களில் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது.போலி மத சார்பின்மை, சமயப்பொறையுடமை எல்லாம் நீங்கினால் தான் நமது நாடு உருப்படும்

கிறுக்கன் said...

முயற்சிக்கு வாழ்த்துகள் ...கட்டுரை முழுவதும் படித்து பின் சந்திக்கிறேன்?

Anonymous said...

இந்த அவலம் நீடித்தால் இன்னும் சில நாட்களில் இந்தியாவிலேயே இந்துக்கள் சிறுபான்மையினராக மாரிவிடும் அவலம் இருக்கிறது.நம்மவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புத்தி வராது. குஜராத் போல சிறிது செயல்பட்டாலும் ஏன் அப்படி என்று கேட்பார்கள். சிறிது நாட்களாக எந்த பரபரப்புச் செய்தியும் இல்லை. அதனால் வியாபார சுயநல நோக்கோடு, மங்களூர் குடிகாரச் செய்தியை, போதை வரும் அளவுக்கு எழுதி காசு பார்க்கின்றனர்.அதில் ஜட்டி அனுப்பும் அவலம் வேறு.

Anonymous said...

matha matrathai padri news paperil padithen.srirangathil swami vivekanadhar americavil pesiya sila varthaigalai vaithu vivekandhar kurukirar endra peyaril matham madruvatharkana peracharngal matrum thundu seatgalil vivekanandhar kuriya sila varthaigalai matum kuri matha matra muyarchikirathu sila krishthuva amaipugal