சமீபத்திய விகடனில் ஹாய் மதன் பகுதியில் ஒரு கேள்வி - பதில்..
கேள்வி: காஷ்மீரில் நடக்கும் கலவரங்களை நம்மால் அடக்கமுடியவில்லை; பிரிவினைத் தீயை அணைக்க முடியவில்லை. முஸ்லிம்கள் தான் அங்கே பெரும்பான்மை. போனால் போகட்டும் என்று காஷ்மீரை விட்டுத் தொலைத்துவிட்டு நாம் ஏன் நிம்மதியாக வாழக் கூடாது?
இதற்கு அளித்த பதிலில்,
.. வேத காலத்தில் அங்கு வசித்த காஷ்யப முனிவரின் பெயரில் இருந்து தான் காஷ்மீர் என்ற பெயர் வந்தது என்று கருதப் படுகிறது...
என்று தொடங்கி காஷ்மீர சைவம், அபினவ குப்தர், யோக வாசிஷ்டம் ஆகிய இந்துப் பண்பாட்டுக் கூறுகளின் தாயகமான காஷ்மீர் இந்தியாவின் பகுதியே என்று பதில் சொல்லியிருக்கிறார் ஹாய் மதன். கருத்துக்கள் தவறாகவும், மேம்போக்காகவும், தகவல் பிழைகளுடனும் உள்ளன - காஷ்மீரி சைவம் தமிழக சைவத்திலிருந்து தான் உருவானது என்பது தவறு; இரண்டுமே வேதநெறியை விலக்கவில்லை, மாறாக வேதநெறியையே அடிப்படையாகக் கொண்டவை. பக்தி, தாந்தீரிகம் குறித்து மதன் கூறியதும் தவறு. இந்து தத்துவ நூல்களை பாரசீக மொழியாக்கம் செய்தவர் தாரா ஷீகோ, அக்பர் அல்ல. நாகார்ஜுனர் தமிழர் அல்ல, ஆந்திரர் - அவர் பெயரில் நாகார்ஜுனகொண்டா என்று ஊர் இன்றும் இருக்கிறது.
இந்த சின்ன பதிலிலேயே இவ்வளவு தவறுகள் இருந்தாலும், வெறும் செய்தித் தாள் துணுக்குகளின் அடிப்படையில் இல்லாமல், ஓரளவு வரலாற்று, கலாசார, சமூகப் பின்னணி பற்றிய புரிதலுடன் இக்கேள்விக்கு விடையளித்த ஹாய் மதனுக்குப் பாராட்டுக்கள்!
இந்த இண்டர்நெட் யுகத்தில் சரியான தகவல்களைத் திரட்டுவது கடினமே அல்ல; ஹாய் மதன் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்து தகவல்களைத் திரட்டி பதிலளிக்க வேண்டும்.
கேள்வி-பதில் இதோ -