70,000 சேவை மையங்கள்: அன்னை நாட்டின் பணியில் ஆர்.எஸ்.எஸ்
புஜ் (குஜராத்) பூகம்பத்தில் அழிந்த கிராமங்களின் புனரமைப்பு, தீன்சுகியா (அஸ்ஸாம்) வனவாசி மாணவர்களுக்காக அடர்ந்த காடுகளில் 'ஏகல் வித்யாலயா' எனப்படும் ஓராசிரியர் பள்ளிகள், தீண்டாமை மற்றும் சாதீய ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை வளர்த்தல், பெங்களூர் சேரி மக்களுக்காக மருத்துவமனைகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம சுகாதாரத் திட்டங்கள், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தால் உயிரிழந்தோரின் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் காப்பகங்கள் - இப்படி எத்தனை எத்தனையோ.. செய்தி ஊடகங்களின் காமராக்களின் வெளிச்சத்திலோ, செய்தித் தாள்களின் பக்கங்களிலோ பெரிதாக இடம் பெறாமால், அமைதியாக இது போன்ற ஏறக்குறைய 70,000 சேவை மையங்களை நாட்டின் மூலை முடுக்குகளெங்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அது சார்ந்த சங்க பரிவார, இந்து இயக்கங்கள் நடத்தி வருகின்றன.
என்னுடைய போன பதிவைப் பார்த்த சிலர் இது பற்றிக் கேள்விகள் கேட்க, சில ஆர்.எஸ்.எஸ். நண்பர்களை அணுகினேன். இந்த வீடியோவைப் பார்க்குமாறு ஒருவர் பணித்தார் -
http://video.google.com/videoplay?docid=-1013666219441914390
(சுமார் 40 நிமிட வீடியோ, டாகுமென்டரி போல இருக்கிறது. கூகிள் வீடியோ ப்ளேயர் மற்றும் இந்த வீடியோ இரண்டையும் manually டவுன்லோட் செய்து, பிறகு பார்த்தால் தடங்கல் இல்லாமல் பார்க்கலாம்)
இந்த வீடியோவில் இடம்பெறும் சமூகத்தொண்டுகள் சங்க மற்றும் இந்து அமைப்புகள் வீசி வரும் சேவை என்னும் பேரொளியின் சிறு கீற்றுகளே. இந்திய மத்திய அரசு விரோதம் தேசவிரோதமாக மாறித் தலைவிரித்தாடும் வடகிழக்கு மாநிலங்களில், அங்கு வாழும் மக்களும் பாரதப் பண்பாட்டின் பங்குதாரர்களே என்ற விழிப்புணர்வை ஊட்டி, அவர்களை தேசியக் கலாசாரத்தில் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை சங்க, இந்து இயக்கங்கள் செய்து வருகின்றன (இதற்கு நேர்மாறான விஷயத்தை அங்குள்ள மிஷநரிகள் செய்து வருகின்றன என்பது வெட்கமும், வேதனையும் தரும் விஷயம்).
வீடியோவில் இடம்பெறும் பெங்களூரில் உள்ள "நெலே" (கன்னடத்தில் "இருப்பிடம்") எனப்படும் அனாதைச் சிறார் காப்பகங்கள், ராஷ்ட்ரோத்தான பரிஷத் சேரிகளில் நடத்தும் இரவுப் பள்ளிகள், ஏழை மக்களுக்கு உதவும் பரிஷத்தின் ரத்த வங்கி - இவற்றுடன் ஒன்றிரண்டு வருடங்களாக எனக்கு நேரடித் தொடர்பு உள்ளது. ஆத்மார்த்தமாக சேவை செய்யும் இவர்களுக்கு சில சிறு சிறு உதவிகள் செய்யும் வாய்ப்புக் கிடைத்து வருவது நான் செய்த பாக்கியம். கோவிலுக்குப் போவதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு விடுமுறை நாட்களில் இந்த சேவை மையங்களுக்குச் சென்று வருகிறேன். இதுவும் தெய்வ ஆராதனைக்கு ஒப்பானதே என்ற சிந்தனையை என்னுள் விதைத்ததே இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கங்கள் தாம். ஆர்.எஸ்,எஸ். ஸ்வயம்சேவகர்கள் எல்லார் மனதிலும் இதே சிந்தனை இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
சொல்லப்போனால், நாட்டின் பல பகுதிகளில் பல பெயர்களில் இயங்கும் இந்து கல்வி, சுகாதார, சேவை நிறுவனங்களில் முக்கால்வாசி சங்கம் மற்றும் சங்கத்தின் உந்துசக்தியால் உருவான இயக்கங்கள் நடத்துபவை என்ற விஷயம் கூட பல பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் சேவை என்பதை ஒரு சமூகக் கடமையாகக் கருதும் இந்த இயக்கங்கள் விளம்பரம் பற்றித் துளியும் கவலைப் படுவதில்லை, அக்கறை கொள்வதில்லை என்பதே இதற்குக் காரணம்.
சென்னை மற்றும் தமிழகத்தின் பல நகரங்களில் இயங்கும் விவேகானந்த வித்யாலயா பள்ளிகள், கர்நாடகத்தின் புகழ்பெற்ற மலைவாழ் மக்கள் புனரமைப்பு இயக்கமான "விவேகானந்த கிரிஜன கல்யாண கேந்திரா", ஜார்கண்ட் வனவாசிகளின் நல்வாழ்வில் இணைந்துவிட்ட "விவேகானந்தா மெடிகல் மிஷன்", பல நகரங்கள், கிராமங்களில் பிற்பட்ட மக்கள் வாழும் சேரி மற்றும் பஸ்திகள் தோறும் தன் பெயரைப் பதித்துள்ள "சேவா பாரதி".. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆர்.எஸ்.எஸ். சேவை என்று என்ன பெரிதாகக் கிழித்துவருகிறது என்று கேட்பவர்களுக்காக இந்தப் பதிவைப் போடுகிறேன்.
15 comments:
jataayu,
Thanks for the video link. It is important that more awareness is created about so much social service acitivites that RSS and its sister organizations are doing.
நன்றி ராஜ் அவர்களே.
அரவிந்தன் மின் அஞ்சலில் இந்த மறுமொழியை அனுப்பியிருந்தார். அதை இங்கு தருகிறேன்.
From: Aravindan Neelakandan - view profile
Date: Wed, Oct 4 2006 9:28 am
அன்புள்ள ஜடாயு,
சங்கத்தின் சேவா காரியங்களை பிரபலப்படுத்தும் தங்கள் முயற்சிகளுக்கு
நன்றி. குஜராத் பூகம்பங்களின் போது சங்கம் தன்னலமற்ற சேவை செய்தது.
அப்போது அவுட்லுக் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது போல சங்கம்
ஒரு வேளை இந்துக்களுக்கு மட்டும் உதவி செய்வதாக கூறியிருந்தது. தொடர்ந்து
இண்டியன் எக்ஸ்பிரஸ் பிஜேஎஸ் ஜார்ஜ் ஜெய் ஸ்ரீ ராம் என்று
சொல்பவர்களுக்கு மட்டும் சங்கம் சேவை செய்வதாக ஒரு பச்சை பொய்யை
எழுதினார். சங்கம் (அப்போது மானனீய ஸ்ரீ ஹொ.வே.சேஷாத்ரிஜி) மசூதியில்
சங்கம் சேவை செய்யும் ஒரு புகைப்படத்தினை இந்த ஊடகங்களுக்கு அனுப்பினார்.
ஆனால் அவை பிரசுரிக்கவில்லை. Being antiSangh, anti-Hindu is actually a
lucrative thing. The casuality is of course poor truth. Then who
bothers about truth!
அநீ
ஜடாயு, வீடியோ லிங்குக்கு நன்றி. அரவிந்தன் எழுதியது சரிதான். சங்கம் செய்யும் சேவைகளை மீடியா இருட்டடிப்பு செய்கிறது வேண்டும் என்றே. இதைப் பார்த்தால் இந்துத்துவா பற்றிய நல்ல அபிபிராயம் மக்களுக்கு ஏற்பட்டுவிடும் என்று தான். இதை முறியடிக்க வேண்டும்.
குஜராத்தில் கொன்று குவித்தும் தேசப்பணிதானே செய்தது. அதன் வீடியோ கிளிப் அனுப்பட்டுமா.
Anonymous said...
// குஜராத்தில் கொன்று குவித்தும் தேசப்பணிதானே செய்தது. அதன் வீடியோ கிளிப் அனுப்பட்டுமா //
அனானியே, தைரியம் இருந்தால் நிஜப் பெயரில் வந்து இதைச் சொல்ல வேண்டும். ஏற்கனவே மீடியா இந்த மாவைத் திரும்பத் திரும்ப அரைத்து விட்டது.
இதில் ஆர்.எஸ்.எஸ். involve ஆகியிருந்தால் அதைப்பற்றி வழக்குத் தொடுப்பது தானே? குஜராத் கலவரம் பற்றித் தொடுக்கப் பட்ட எந்த வழக்கிலும் சங்கத்தின் பெயர் இல்லை. சில வி.ஹெச்.பி. ஆட்கள் பெயர் இருக்கிறது. அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபுக்கப் பட்டால் கண்டிப்பாக அவர்களுக்கு தண்டனை வழங்கப் பட வேண்டும். அதை இந்து அமைப்புகள் எதிர்க்காது என்றே நினைக்கிறேன்.
Dear Jataayu
Good job. Thanks for the video. When truth is hibernating, mischevous propaganda works over time. That is how RSS is maligned by our sickular media, leftists and mullahs cobine. Thanks for the video link.
Regards
Sa.Thirumalai
சேவை பற்றி இவ்வளவு விஸ்தாரமாக எழுதியதற்கு இப்படி ஒரு Anonymous பின்னூட்டமா?
ஆர்.எஸ்.எஸ். பற்றி என்ன சொன்னாலும் உடனே பாசிசம், குஜராத் அது இது என்று பெனாத்துகிறார்கள். வாதங்களை முன்வைக்கக் காணோம்!
ஏனுங்க, முழு பூசனிக்காயை சோத்துல மறைக்க முடியுமா ?
Doondu என்ற பெயரில் உலவும் திரு. போலி டோண்டு, அசிங்கமான வார்த்தைகள அடங்கிய மூன்று பின்னூட்டங்களை அனுப்பினார். அவற்றை reject செய்கிறேன் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.
// செந்தழல் ரவி said...
ஏனுங்க, முழு பூசனிக்காயை சோத்துல மறைக்க முடியுமா //
என்ன சொல்ல வரீங்க, அதைச் சொல்லுங்க.
*//சங்கத்தின் சேவா காரியங்களை பிரபலப்படுத்தும் தங்கள் முயற்சிகளுக்கு
நன்றி.//*
பின்ன வாங்கின காசுக்கு ஜல்லி அடிக்கவேண்டாமா?
*//இதில் ஆர்.எஸ்.எஸ். involve ஆகியிருந்தால் அதைப்பற்றி வழக்குத் தொடுப்பது தானே? குஜராத் கலவரம் பற்றித் தொடுக்கப் பட்ட எந்த வழக்கிலும் சங்கத்தின் பெயர் இல்லை. சில வி.ஹெச்.பி. ஆட்கள் பெயர் இருக்கிறது. அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபுக்கப் பட்டால் கண்டிப்பாக அவர்களுக்கு தண்டனை வழங்கப் பட வேண்டும். அதை இந்து அமைப்புகள் எதிர்க்காது என்றே நினைக்கிறேன்.//*
ஆமா லேபில் வேறா மாத்திட்டுதானே போவோம். 3000 பேர்களை கொன்றாவர்களை நிரபராதிகள்?! என்று குஜராத் கோர்ட்டு விடுதலை செய்தபிறகும் கோர்ட்டில் நீதி வழங்கப்படும்
என்று நம்ப சொல்கிறீரா?
*//ஏனுங்க, முழு பூசனிக்காயை சோத்துல மறைக்க முடியுமா //*
அதான் மறைத்து (காந்தி கொலை உட்பட) தேசபக்தர் ஆகிவிட்டார்களே
நடத்துங்க நடத்துங்க
70,000/=சேவை மையங்களா? நாடு தாங்குமா?
'சேவை' என்பதை புரியவைத்த பயத்தில் கேட்கிறேன்.
// 'சேவை' என்பதை புரியவைத்த பயத்தில் கேட்கிறேன். //
சேவை பற்றிய இத்தனை உதாரணங்களை மேலே கொடுத்திருக்கிறேன். வீடியோவிலும் இருக்கிறது. இந்த சேவைகளையெல்லாம் சங்கம் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் செய்யவில்லை என்று மறுக்க முடியுமா?
உங்களிடத்தில் ஏதாவது உருப்படியான வாதம் இருந்தால் வையுங்கள். சும்மா வந்து இப்படி ஏதாவது rhetroical ஆக பொருமினால் என்ன பிரயோஜனம்?
// பின்ன வாங்கின காசுக்கு ஜல்லி அடிக்கவேண்டாமா? //
கொடுத்த காசுன்னு சரியா சொல்லுங்க. சேவை நிறுவனங்களுக்கு இது நாள் வரை காசு கொடுத்து தான் வந்திருக்கிறேன்.
70,000 service centers!!! My God!!!
Planning for another 70,000 gujrat incidents???
well done, keep it up.
Post a Comment