சங்கரர்-காட்டிய-வழியில் ஜாதி-ஒழிப்பு: Dalit panthers தலைவர்
தலித்துக்களும், சாதி இந்துக்களும் ஒன்றிணைந்து சாதியை ஒழிக்கப் போராட வேண்டும். ஆதிசங்கரர் காட்டிய இந்த வழி இடைக் காலத்தில் தொடர்பிழந்து விட்டது.. " என்று மகாராஷ்டிரத்தின் தலித் சிறுத்தைகள் (Dalit Panthers) கட்சித் தலைவர், புகழ் பெற்ற தலித் மக்கள் தலைவர் நாம்தேவ் தஷால் கூறியிருக்கிறார் - டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஸுதர்ஷனுடன் ஒரே மேடையில் பேசி, ஒரு நூலையும் அவர் வெளியிட்டுள்ளார். “நான் கட்சி மாற்றிவிட்டேன் என்று இடது சாரி நண்பர்கள் அலறுவார்கள், எனக்குக் கவலையில்லை. என் நோக்கம் தேச ஒற்றுமையையும், சமூக ஒற்றுமையையும் வளர்ப்பது தானே அன்றிக் குலைப்பது அல்ல. ஒவ்வொரு சாதியும் இன்னொரு சாதியைத் தூற்றிக் கொண்டிருந்தால் அது எப்படி சாத்தியம்?” என்றும் கேட்டுள்ளார்.
சாதீய கொடுமைகளால் தன் இளமைப் பருவத்தைத் தொலைத்த தஷால், தன் வாழ்க்கை முழுவதையும் தலித் மக்களின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்தவர். ஆர். எஸ்.எஸ் இயக்கம் சமுதாய ஒருமைக்காக ஆற்றிய பங்களிப்பையும் இந்த விழாவில் அவர் பாராட்டினார். கம்யூனிஸ சித்தாந்தத்தையும் சாடிய அவர், பெரும்பாலான கம்யூனிஸ தலைவர்கள் இன்றும் உயர்சாதி மனப்பான்மையுடன் தான் இயங்குகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். தீண்டாமை மற்றும் சாதிக் கொடுமைகளுக்கு எதிரான போரில் ஆர்.எஸ்.எஸ் இய்க்கத்தின் பேரில் தான் பெரும் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் சொல்லுகிறார். "ஸர்வஸ்மின்னபி பஷ்யாத்மானம், ஸர்வத்ர உத்ஸ்ருஜ பேதக்ஞானம்" - எல்லா உயிர்களிலும் ஒன்றாய் உறையும் ஆத்மாமைப் பார். வேற்றுமைகளைக் காணும் மனப்போக்கை (பேதக்ஞானம்) உதறித் தள்ளு என்பது தான் சங்கரரின் உபதேசம். அதை எல்லாருக்கும் நினைவூட்டிய நாம்தேவுக்கு நன்றி. இந்து சமுதாயம் உருப்படுவதற்கான சரியான பாதை இது.
13 comments:
நல்லவே சொன்னீங்க...ஜடாயு...
//
என் நோக்கம் தேச ஒற்றுமையையும், சமூக ஒற்றுமையையும் வளர்ப்பது தானே அன்றிக் குலைப்பது அல்ல. ஒவ்வொரு சாதியும் இன்னொரு சாதியைத் தூற்றிக் கொண்டிருந்தால் அது எப்படி சாத்தியம்?” என்றும் கேட்டுள்ளார்.
//
இது தான் பிரச்சனை...! (இதைச் செய்யக் காரணம், மத்திய கிழக்கு predatory மதங்கள்..)
//
கம்யூனிஸ சித்தாந்தத்தையும் சாடிய அவர், பெரும்பாலான கம்யூனிஸ தலைவர்கள் இன்றும் உயர்சாதி மனப்பான்மையுடன் தான் இயங்குகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
//
ஹி ஹி ஹி...சமூக நீதிக்காவலர்களின் சமூக நீதி இவ்வளவு தான்...!!
// இந்து சமுதாயம் உருப்படுவதற்கான சரியான பாதை இது //
சரியாகச் சொன்னீர்கள். தமிழ்நாட்டு பத்திரிகைகளும் இந்தச் செய்தியை வெளியிட வேண்டும்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி, வஜ்ரா அவர்களே.
RSS காரர்கள் எங்கள் இயக்கத்தில் நாங்கள் சாதி வேற்றுமை பார்ப்பதே கிடையாது என்று சொன்னதாகவும் செய்தி கூறுகிறது - மீடியா உருவாக்கி வத்திருக்கும் பிம்பத்திற்கு நேர்மாறானது இது..
பெரும்பாலான கம்யூனிஸ தலைவர்கள் இன்றும் உயர்சாதி மனப்பான்மையுடன் தான் இயங்குகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
SFIன் மிக முக்கிய பொறுப்பு வகிக்கும் N ராம் ஒரு உதாரணம்.
அதுமட்டுமல்லாது, அவர்களது புரட்சிவாதங்களும் வெறும் மேடை முழக்கங்களே.
ஜோதிபாஸு ஒரு முறை மரணப்படுக்கையில் இருந்தபோது அவரது மனைவி ராமக்ருஷ்ண மடத்தில் இருந்து பகவானின் சரணாம்ருதத்தை வரவழைத்து அவரது வாயில் விட்டாராம். போய் சேரும்போது புண்யத்தோடு போய் சேரட்டும் என்று.
ஆனால், இந்திய டாக்டர்களின் திறமையால் ஜோதிபாஸு அந்த முறை உயிர்பிழைத்துவிட்டார்.
தலித்துக்களும், சாதி இந்துக்களும் ஒன்றிணைந்து சாதியை ஒழிக்கப் போராட வேண்டும். ஆதிசங்கரர் காட்டிய இந்த வழி இடைக் காலத்தில் தொடர்பிழந்து விட்டது.. "
எந்த கோயிலிலும் வந்து ஸ்த்யம் செய்வேன். ஷங்கரரின் வழியை பின்பற்றியிருந்தால் ஜாதி வெறி அழிந்திருக்கும்.
தமிழகத்தில் ஹிந்து மதங்களின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு இருப்பதற்கான காரணமே, வேதாந்த நெறிகள் ஜாதி வெறியை அழித்து, ஜாதி அரஸியலை ஆவியாக்கிவிடும் என்கிற பயம்தான்.
அப்படியெல்லாம் ஆகிவிடக்கூடாது என்பதற்குத்தான் ஜாதி வெறியை வேறு வகையில் ஈவேரா வளர்த்துவிட்டுப் போய்சேர்ந்தார்.
நம்மூரிலிருக்கும் தலித்துக்களின் தலைமை கிருத்துவ மிஷனரிகள் கையிலல்லவா இருக்கிறது?
எனக்கு சில பத்தாண்டுகட்கு முந்தைய தமிழக அரசியல் சூழல் நினைவுக்கு வருகிறது. கம்யூனிஸ்டு தலைவர்களை திமுகவினர் முன்பெல்லாம் "பூணூல் போட்ட கம்யூனிஸ்டுகள்" எனக் கிண்டல் செய்வார்கள். இதற்குக்காரணம் ஒரு காலத்தில் தமிழக கம்யூனிஸத்தலைவர்கள் கண்மூடித்தனமான பார்ப்பன எதிர்ப்புக்கும்கூட (வர்க்கக் கண்ணோட்டமே முக்கியம்; சாதிக்கண்ணோட்டம் அல்ல என்ற அடிப்படையில்) எதிர்ப்புத்தெரிவித்து வந்தனர். புத்தகங்கள் மூலமும் சிறு பத்திரிகைகளிலும் எதிர்ப்பை எழுதினர்; அடித்தள மக்களின் நாயகன் என்ற பதவி திராவிடக்கட்சிகளிடம் போய் விடாமல் இருக்க திராவிடக்கட்சிகளின் சாதிக்காழ்ப்பு அரசியலை விமர்சித்து சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் ஓட்டு வங்கியை ஒன்று திரட்ட வேண்டிய அவசியமும் அரசியல் ரீதியாக அவர்களுக்கு இருந்தது. நேரில் கண்ட அனுபவத்தில் சொல்கிறேன். சிறுநகரங்களில் திராவிடப் பொறுக்கித்தனத்துக்கு கம்யூனிஸ அடாவடி மட்டுமே தாக்குப்பிடிக்கக் கூடியதாக இருந்தது. இன்றோ (அதாவது பனிப்போர் தாண்டிய "பொது எதிரி" காலத்தில்) முஸ்லீம் ஓட்டுக்காக இந்துக்களை செலக்டிவாக எதிர்க்கும் வகுப்புவாத அரசியலில் கம்யூனிஸ்டுகளும் குளிர்காயத் தொடங்கிவிட்டனர்- இஸ்லாமிய மேலாண்மையின் முதல் பலி இடதுசாரிகள்தான் என்ற வரலாற்று உண்மையை மறந்து விட்டு. சிறுபான்மை மத வெறி தடவிக்கொடுக்கப்படுவதே பெரும்பான்மை மக்களின் அதிருப்திக்கும் நாட்டில் மத நல்லிணக்கம் முறிந்து போகவும் முதற்காரணம்.
அருணகிரி ஐயா, ஆழ்ந்த கருத்துக்கள். சரியாகச் சொன்னீர்கள்.
இஸ்லாம் மற்றும் இந்து மதம் பற்றிய கம்யூனிசப் பார்வை அவர்களது வெற்றி சித்தாந்தத்தைத் தோலுரிக்கிறது.
உங்கள் blogger profile-ல் போய்ப் பார்த்தபோது, பதிவுகள் எதுவும் இல்லை என்று சொல்லுகிறது. வெகு விரைவில் சிந்தனையைத் தூண்டும் உங்கள் பதிவுகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
// நம்மூரிலிருக்கும் தலித்துக்களின் தலைமை கிருத்துவ மிஷனரிகள் கையிலல்லவா இருக்கிறது //
ம்யூஸ், மிஷநரிகள் என்று சொல்லிருந்தால் தங்கள் "எழுத்துச் சித்தர்" (சித்தர் = சித்து வேலை செய்பவர்) இமேஜுக்கு சரியாக இருந்திருக்கும் :))
//சரியாகச் சொன்னீர்கள். தமிழ்நாட்டு பத்திரிகைகளும் இந்தச் செய்தியை வெளியிட வேண்டும்//
நமது கொளதம் செய்வாரா?....மாட்டார், ஏனெனில் அவரது பத்திரிக்கை ஒரு திராவிடர் கழக துணை பத்திரிக்கை
அடித்தள மக்களின் நாயகன் என்ற பதவி திராவிடக்கட்சிகளிடம் போய் விடாமல் இருக்க திராவிடக்கட்சிகளின் சாதிக்காழ்ப்பு அரசியலை விமர்சித்து சிறுநகரங்களிலும் கிராமங்களிலும் ஓட்டு வங்கியை ஒன்று திரட்ட வேண்டிய அவசியமும் அரசியல் ரீதியாக அவர்களுக்கு இருந்தது.
கம்யூனிஸ்ட்டுக்களின் அரஸியல் போக்குக்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறியுள்ளன. என் பார்வையில் அவை பின்வருமாறு:
1. இரண்டாம் உலகப்போருக்கு முன்பு: அதுவரை பாரத தேஸத்திற்கும், தேஸியத்திற்கும் ஆதரவாக போராட்டங்கள். இந்தக்காலத்தில் ஹிந்துத்துவவாதிகளாக அடையாளம் காணப்படும் அந்தக்காலத் தலைவர்கள் பலரும் இந்த குழுவில் அடக்கம். பகத் சிங் இந்த குழுவிலிருந்து வந்தவர்.
2. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னால்: வெள்ளையர்களையும், யூரோப்பியர்களையும் அடிபணிந்து வாழக் கற்றுக்கொள்வது பெருமையாக உணரப்பட்டது. ஏனெனில், ரஷ்யாவானது நேஸ நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டது ஒரு காரணம்.
3. நக்ஸல்கள் பலம் பெற்றபோது: நக்ஸல்கள் ஆதிக்கம் பெற ஆரம்பித்தபோது, கம்யூனிஸ அரஸியல் கட்ஷிகள் தங்களுடைய ஜனநாயக வழிமுறைகளின் பக்கம் திரும்பிக்கொண்டதாக சொல்லத்தொடங்கியது. நக்ஸலைட்டுக்களுக்கு மறைமுகமாக உதவிகள் செய்ய ஆரம்பித்தது.
4. விபி ஸிங்கின் ஆட்ஷிக்காலத்திலிருந்து: கம்யூனிஸ்ட்டுக்கள் ஜாதி ஓட்டிற்காக தங்கள் கொள்கைகளை தளர்த்தத்தொடங்கிய காலம். அருணகிரி சொல்லுவதெல்லாம் இதற்கு முன்புவரை நடந்தவை.
5. காங்கிரஸுக்கு கிடைத்த கிருத்துவ, இஸ்லாமிய ஓட்டு வங்கிகள்: காங்கிரஸுக்கு, பிஜேபி பூச்சாண்டியின் புண்யத்தால் கிருத்துவ, இஸ்லாமிய ஓட்டு வங்கிகளின் ஆதரவு கிடைத்து அக்கட்ஷியின் மிக மிக முக்கிய ஓட்டு வங்கிகளாகவும், முதலீட்டார்களாகவும் ஆனது. இந்த ஓட்டு வங்கிக்களுக்காகவும், முதலீட்டிற்காகவும் கம்யூனிஸ அரஸியல் கட்ஷிகள் தங்களிடமிருந்த கொஞ்ச நஞ்ச நியாய உணர்வையும் தொலைத்தார்கள்.
இப்படி பல்வேறு பாதைகளை எடுத்துக்கொண்ட அந்த இயக்கங்களின் தற்காலக் கொள்கைகள் எல்லாமே மேலே சொல்லப்பட்ட விஷயங்களின் கலவையே.
மார்க்ஸாவது, லெனினாவது... நாங்கள் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கள்.
சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம்! அவ்வளவு சீக்கிரம் இதை மாற்றமுடியுமோ!எல்லாம் பெரியாரும் அம்பேத்காரும் போராடியதால் இவர்கள் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள்! மற்றபடி இந்து மதம் is a barbaric Religion.. which created its own outcasts and untouchable!
அன்புடன்
ஓசை செல்லா
செல்லா அவர்களே, இந்து மஹா சமுத்திரத்தைப் பற்றி இவ்வளவு சாதாரணமாக ஒற்றை வரியில் சொல்வது அது பற்றி தாங்கள் இன்னும் நிறைய கற்க வேண்டி உள்லது என்பதையே காட்டுகிறது..
"நால் வருணம் நான் படைத்தேன்
குணங்கள் மற்றும் செயல்களின் அடிப்படையில்
இருப்பினும் நான் பொறுப்பாளி அல்ல
என்னை செயலற்ற அகர்த்தா என்றே அறிவாய்!"
இது தான் முழு சுலோகம். செயலில் செயலின்மை என்னும் கர்ம யோகத்தை விளக்கும் சுலோகமே அன்றி, நான்வருணத்தை நிலைநிறுத்தச் சொன்னதல்ல.
அம்பேத்கார் உண்மையான தலித் மக்கள் தலைவர், ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ஈ.வே.ரா தலித் துரோகி என்றும் பொய்யர் என்றும் இணையம் முழுக்க கிழி கிழி என்று கிழிக்கிறார்களே, படிக்கவில்லையா எதுவும்?
//
இந்து மதம் is a barbaric Religion.. which created its own outcasts and untouchable!
//
பிறப்புறுப்பை வெட்டிவிடும் மதங்கள், நம்பாதவர்களை போட்டுத் தள்ள வேதத்தில் ஞாயம் சொல்லும் மதங்கள், பெண்களை அடிமையாக நடத்தும் மதங்கள், 7 நாளில் படைக்கப் பட்டவை எல்லாமே என்று சொல்லும் மதங்கள்...இவைகளுக்கு இடையே இந்து மதம் காட்டுமிராண்டி மதம் தான்...!! காட்டு மிராண்டிகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை...!
Hinduism is not perfect. So, what...Hindus will rectify it...can you question the same thing in any other religion?
Post a Comment