Monday, October 30, 2006

மைசூர் பாக் : தெற்கில் வளரும் ஜிகாதி தீவிரவாதம்

வாயில் கரையும் இனிப்பு சமாசாரமல்ல இது, நெஞ்சை எரிக்கும் விஷயம்... மைசூரில் பாக். தீவிரவாதிகள் கையும் களவுமாகப் பிடி பட்டது பற்றிய தினமலர் செய்தியைத் தான் குறிப்பிடுகிறேன். பொருளாதாரத்தில் முன்னேறிய பகுதிகளான தென் கர்நாடகம் (South Canara) மற்றும் கேரளாவின் கோழிக்கோடு போன்ற பகுதிகளில் ஜிகாதி தீவிரவாதம் வளர்ந்து வருவதைப் பற்றி அரசு பெரிதும் கவலை தெரிவித்துள்ளது.

சரியான சமயத்தில் இந்தக் கருங்காலிகளை மடக்கிப் பிடித்து செயலிழக்கச் செய்த காவல்துறை அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள்.

பிடிக்கப் பட்ட தீவிரவாதிகளில் ஒருவனின் அப்பா, பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கே குடிபெயர்ந்து அங்கே ஒரு பெண்ணை மணந்தவன். தான் பிறந்த மண்ணின் மைந்தர்களான காஃபிர்களை ஜிகாதில் கொல்லத் துடிக்கும் இத்தகைய ஆட்களுக்கெல்லாம் ஒளிந்துகொள்ள வட கேரள்ம் சொர்க்கம். இடது சாரிகள் மதச் சார்பின்மை காப்பதற்காக "முஸ்லீம் மாவட்டம்" என்று ஏறக் குறைய அதிகாரபூர்வமாகவே அறிவித்த மலப்புரம், பொன்னாணி ஊர்களை ஒரு எட்டு போய்ப் பார்த்து வந்தால் இது புரியும்.

இந்தியாவில் இருக்கிறோமா, ஈரானில் இருக்கிறோமா என்று தெரியாதமாதிரி எங்கு பார்த்தாலும் புர்காக்கள், தொளதொள வெள்ளை ஆடைகள், மாதாமாதம் முளைக்கும் புதுப்புது மதரஸாக்கள், மசூதிகள்... மலையாளத்தை விட அதிகம் புழங்கும் உருது, அரபி... இத்தகைய ஒரு இடத்தில், பாகிஸ்தான் என்ன உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் ஜிகாதிகள் வந்து உட்கார்ந்து நிம்மதியாகத் தீவிரவாதத்தை வளர்க்கலாம், உள்ளூர் ஆதரவும் உண்டு.. ஏறக்குறைய இதே விஷயத்தைத் தான் இன்னும் கொஞ்சம் மென்மையாக காவல், உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்..

மும்பை குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு எழுதிய உள்நாட்டு ஜிகாதி தீவிரவாதத்தின் கோர முகம் என்ற கட்டுரையில் இது பற்றிய விவரங்களை இன்னும் விரிவாக எழுதியிருந்தேன். அதில் சொன்னதையே மறுபடியும் இங்கு வலியுறுத்த வேண்டியிருக்கிறது.

"... ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அனில் அதாலே மும்பை குண்டு வெடிப்பு நிகழ்ந்த உடனே எழுதிய கட்டுரையில் [2] கூறுகிறார் - "இந்தியாவின் 90% முஸ்லீம்கள் தேச பக்தர்கள். அமைதியை விரும்பும், சட்டத்தை மதிக்கும் குடிமக்கள். ஆனால் மீதம் இருக்கும் 10% பேர் ஜிகாதி தீவிரவாதத்திற்கு ஏதாவது ஒரு விதத்தில் ஆதரவளிப்பவர்கள் என்று வைத்துக் கொண்டாலும், அந்த 10% என்பது ஒன்றரைக் கோடி மக்கள்.. இவ்வளவு பெரிய தீவிரவாத ஆதரவுக் கும்பலை அடக்குவது என்பது எந்த அரசுக்கும் மிகக் கடினமான, சொல்லப் போனால் முடியாத காரியம்.. அந்த 90% முஸ்லீம் மக்கள் தான் முனைந்து இந்தத் தேச துரோகிகளையும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் இனம் காண வேண்டும்...தண்ணீரில்லாமல் தவிக்கும் மீன் போல, தங்கள் சமுதாயத்தின் ஆதரவு நிறுத்தப் பட்டால், ஜிகாதிகள் தானாக செயலிழந்து போவார்கள்.. இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாத்தை ஒடுக்க, நடைமுறையில் சாத்தியமான வழி இது தான்"

7 comments:

Hariharan # 03985177737685368452 said...

இது பெரிய தவறுதலான நடைமுறை நிஜம். ஒரு இடத்தில் சமூக அளவில் மெஜாரிட்டியாக 90% முஸ்லிம் சமூகத்தவர் மக்கள் தொகையில் இருந்தால் ஜிகாத் நடவடிக்கைகளை ஆதரிப்போம் என்ற சமூக எண்ணம் இன்னும் அன்னியப்படுத்தவே செய்யும்.

பெரிய மத ரகளை வந்தே தீரும் இம்மாதிரி ஜிகாதிய சிந்தனைகள் கேரளா, கோவை,கர்நாடகா, என்று பரவி ஊன்றிடும் போது!

ஜிகாதிய ஐடியாலஜியை எதிர்கொள்ள வழிமுறைகள் செய்யப்பட வேண்டும்.

Anonymous said...

How can you are sure that it is pakistanis? another advani statement?

Anonymous said...

i mean another isi conspiracy theory floated by your parivar?

Anonymous said...

அவிங்களுக்கு வீசா, பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்ததே நானு, எனக்கே ஹல்வா வா ? என்ன நான் சொல்றது ஹசன் ?

உங்களுக்கெல்லா வெளக்கு புடிக்கு கம்மினாட்டிஸ்ட் அச்சூத்தானந்தரே ஒத்துக்குறார்...

CNN-IBN

ஜடாயு said...

நன்றி ஹரிஹரன் அவர்களே.

// ஒரு இடத்தில் சமூக அளவில் மெஜாரிட்டியாக 90% முஸ்லிம் சமூகத்தவர் மக்கள் தொகையில் இருந்தால் ஜிகாத் நடவடிக்கைகளை ஆதரிப்போம் என்ற சமூக எண்ணம் இன்னும் அன்னியப்படுத்தவே செய்யும். //

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுதும் இது தான் நடந்து வருகிறது. ஒருவிதமான ghetto மனப்பான்மை.

ஜடாயு said...

உண்மையௌ விளக்கிய பரவேஸ் முஷரஃப் அவர்களுக்கு நன்றி.

மாசிலா said...

ஆட்ட கடிச்சி
மாட்ட கடிச்சி
கடசியா மனுஷனங்களையே கடிக்க ஆரம்பிச்சிட்டானுங்க பேனிங்க.

சாவத்தான தேடுறானுங்க,
கூடிய சீக்கிரம் அத கண்டு புடிச்சிடுவானுங்க.

கவலைய உடுங்க.