மலேசியாவில் இந்துக் கோயில் இடிப்புகள்: பெரும் அபாயம்
இந்த வருட ஆரம்பத்திலிருந்து 69 கோவில்கள் இடிக்கப்பட்டு விட்டன. மூன்று வாரத்திற்கு ஒரு கோயில் என்ற கணக்கில் இந்த இடிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதில் பெரும்பாலானவை 100 வருடத்திற்கும் மேல் பழமையான கோயில்கள். இந்துக்களின் உரிமைக்காகப் போராடி வரும் Hindraf என்ற அமைப்பு அரசுக்கும், பிரதமருக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஏகப்பட்ட கோரிக்கைகளைக் கொடுத்தும், எத்தனையோ மறியல்கள் செய்தும் இடிப்புகள் நின்றபாடில்லை.
அரசின் கட்டுமானப் பணிகளுக்காக மற்றும் நகர் விரிவாக்கம் என்றெல்லாம் முதலில் ஒன்றிரண்டு கோயில்கள் இடிக்கப் படுகையில் சொல்லப் பட்ட போது அப்பாவியாக நம்பிய தமிழ் மக்கள் விரைவிலேயே இது மலேசிய இந்து சமயத்தின் மீதும், இந்து மக்கள் மீதும் நடத்தப்படும் குறிவைத்த தாக்குதல் என்பதை உணர்ந்து கொண்டார்கள். பொது நிலங்கள் மட்டுமல்ல, தனியார் நிலங்களில் கட்டப் பட்டிருந்த சிறு சிறு குலதெய்வக் கோவில்களெல்லாம் கூட எந்த சரியான காரணமும் தரப் படாமல் இடிக்கப் படுகின்றன.
இந்த 10 நிமிட தமிழ் வீடியோவைப் பாருங்கள். தங்கள் கோயில்கள் குறிவைத்து இடிக்கப் படுவது அறிந்த கோபம், வலி, ஆற்றாமை, இஸ்லாமிய அரசால் வஞ்சிக்கப் படுவது பற்றிய புரிதல் எல்லாம் அதில் வெளிப்படுகிறது. இவர்கள் அனைவரும் காலம் காலமாக சட்டத்தை மதிக்கும், அமைதியோடு வாழ்ந்து வரும் தமிழ் மக்கள். இஸ்லாமிய அரசையும் அதிகாரத்தையும் 'சேலஞ்ச்' செய்யக்கூடியவர்கள் அல்ல, அதை ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருபவர்கள். ஒரு இஸ்லாமிய அரசு தன் உண்மையான முகத்தை இப்போது காட்டத் துவங்கியதும் கலங்கிப் போயிருக்கிறார்கள்.
மென்-இஸ்லாமிய அரசு என்று நம்பப்படும் மலேசிய நாட்டு அரசு நிர்வாகமும், அதிகாரமும் ஜிகாதிகளால் வெகு வேகமாகக் கடத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தக் கோவில் இடிப்புகள் வரப்போகும் மிகப் பெரிய இந்து வெறுப்பு பரப்பல் மற்றும் இனப் படுகொலைக்கான முன் தயாரிப்பு - இதில் துளியும் சந்தேகமில்லை. தாங்கள் வணங்கும் தெய்வங்கள் தங்கள் கண்முன்னால் இடியுண்டு விழுவதைத் தடுக்க முடியாமல் தவிக்கும் மக்கள் கூட்டத்தின் மனநிலை எப்படியாகும் என்று எண்ணிப் பாருங்கள் - ஜிகாதிகளின் கூர்மையான திட்டத்தின் முதல் பகுதி இது. கோவில்கள் இடிப்பைப் பார்த்துக் கலங்கி அழும் குழந்தைகள், தாய்மார்களின் கண்களில் அந்த பயம் தெரிகிறது.. "நாம வணங்கற தெய்வத்த ஆம்பர் வெச்சு அடிச்சு உடைக்கறான் சார்".. "என்ன தமிளன்னா இளிச்சவாயனா.. இந்து மதம்னா அவ்வளவு மட்டமா போச்சா.".."ஏன்யா, இடிக்கறதுக்கு முந்தி அந்தக் கோயில வேற எங்கயாவது மாத்துன்னு சொன்னா நாங்க செய்யாமலா இருக்கப் போறோம்".. முனியாண்டி, குணாளன், பழனிச்சாமி, சுப்பிரமணியன் போன்ற எண்ணற்ற மலேசியத் தமிழர்களின் உள்ளக் குமுறல்களை அந்தப் படம் காட்டுகிறது.
இவ்வளவு பெரிய அளவில் நடக்கும் கோயில் இடிப்பு பற்றிய செய்திகள் தமிழ் நாட்டு ஊடகங்களில், மற்ற இந்திய ஊடகங்களில் மொத்தமாக இருட்டடிப்பு செய்யப் படுகின்றனவா? இல்லை திம்மித்தனத்தில் ஊறிய பயத்தால் இந்தச் செய்திகளை வெளியிட பயமா?
இந்து மதத்தின் மீதான மலேசிய முஸ்லீம் வெறியர்களின் தாக்குதல் இது. இந்திய ஊடகங்கள் இந்தச் செய்திகளையும் இதன் பின்னணியையும் இந்திய மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த அநியாயத்தை எதிர்த்து இந்திய மக்கள் குரல் கொடுக்காவிட்டால் வேறு யார் குரல் கொடுப்பார்கள்?
செய்தி உதவி :
http://www.malaysiakini.tv/?cat=8
Language : Tamil
In this special Tamil video feature malaysiakini.tv looks into the controversies surrounding the demolition of Hindu temples in the country.
According to Hindu Rights Action Force (Hindraf) an average of one Hindu temple is demolished in every three weeks. The organisation says that since February this year, a total of 69 temples have been demolished or threatened to be demolished by the authorities. Many of these temples are more than one hundred years old.
In addition, at least six temples in Shah Alam, Selangor have been forced to relocate.
Hindraf says that the demolition are unconstitutional and causes disharmony and dissent amongst the Hindus in the country.
Hindraf has given various notes of appeals and memorandums to state leaders, political leaders and even to the Prime Minister. They hope the prime minister can take an active step in halting demolition of the Hindu temples. In this 10-minute video feature, malaysiakini.tv looks into the issue and talks to the affected people.
Watch the 10-minute clip.
Indrani Kopal
25 comments:
ஜடாயு,
டெம்ப்ளேட் எல்லாம் மாற்றிவிட்டீர்கள்!
இது ரொம்ப சிம்பிளான டெம்ப்டிங் டெம்ப்ளேட்.
தமிழ்மணத்தில் காண்ட்ராவர்ஸியான / புகழ் பெற்றவர்களது தைரியமான நபர்களது டெம்ப்ளேட்டும் கூட (டோண்டுசார், கால்கரி சிவா)
அட என்னோட டெம்ப்ளேட் கூட இதுதான்! :-))
Horrible! The tamils there should retaliate immediately.
பதிவைப் பத்தி ஒண்ணும் சொல்லாமப் போனா எப்படி?
இனி நான் எப்போதும் விடுமுறைக்கு மலேஷியா போகப் போவதில்லை என முடிவெடுக்க வைத்துவிட்டது.
இம்மாதிரி செயல்களால் மலேஷியா இஸ் நாட் ட்ரூலி ஏஷியா என்று தெளிவாக நிரூபித்திருக்கிறது.
9/11 அப்புறம் மத்திய கிழக்கு நாட்டவர்கள் மேற்குப்பக்கம் போக பெரும் கெடுபிடி பாதுகாப்பு காரணமாக இருப்பதால் மலேஷியா, தாய்லாந்து என்று படையெடுத்ததில் ஐந்தே ஆண்டுகளில் மலேஷியா பன்முகத்தன்மையை இழந்துவிட்டது வெட்ட வெளிச்சம்!
மலேஷியா இந்த வன்செயல்களால் இன்னொரு இலங்கை மாதிரி ஆகாமல் இருக்க கோலாலம்பூரில் உறையும் பத்துமலை முருகன் தான் அருள்புரியவேண்டும்!
சாமிதான் தூணிலயும் இருக்கு துரும்பிலயும் இருக்கில்ல.. அப்புறமென்ன வேற இடத்துல போய் கோயில கட்டிக்கிற வேண்டியதுதானே... எல்லாச் சாமியும் இராமர் சாமியா... பாபர் மசூதி இருந்த இடத்திலே மட்டும்தான் நான் இருப்பேன் மத்த இடத்தில இருக்கமாட்டேன்கிறதுக்கு... இந்து முஸ்லிம் சண்டைய ஏற்றுமதி செய்யுறதுக்கு முயற்சி பண்றியபோல... அப்பத்தானே அங்கே ஒரு விஷ்வ ஹிந்து பரிஷத் கிளை ஆரம்பிக்கலாம்... நடத்துங்க சாமியோவ்....
இதைப் பார்த்தவுடன் நமது பகுத்தறிவில்லாவாதிகளுக்கு
ஒரே கொண்டாட்டம் தான்.
தமிழனுக்கு எங்கு போனாலும் உச்சந் தலையில்
ஒரு பெரிய அடியாகத்தான் இருக்கிறது.
எங்கு போவது எப்படி வாழ்வது என்று
ஒன்றும் தெரியாமல் கிடக்குது.
அதர்மம் ஒங்கும் போது வருவேன் என்று
சொன்ன கண்ணனை எல்லொரும் சேர்ந்து
ஒருமித்த குரலில் ஒன்றாக அழைப்போம்.
நிச்சயம் வருவான்.
எண்ணங்கள் ஒன்றாகட்டும். அரனை இழுக்கும்
சக்தி பலமாகட்டும்.
// தமிழ்மணத்தில் காண்ட்ராவர்ஸியான / புகழ் பெற்றவர்களது தைரியமான நபர்களது டெம்ப்ளேட்டும் கூட (டோண்டுசார், கால்கரி சிவா)
அட என்னோட டெம்ப்ளேட் கூட இதுதான்! :-)) //
ஹரிஹரன், பழைய டெம்ப்ளேட் படிப்பதற்கு உறுத்துகிறது என்று நிறையப் பேர் சொல்லியதால் மாற்றினேன். வேறொன்றுமில்லை.
நீங்கள் குறிப்பிடும் ஆட்கள் போன்று நான் பெரிய தாதா எல்லாம் அல்ல :))
// சாமிதான் தூணிலயும் இருக்கு துரும்பிலயும் இருக்கில்ல.. அப்புறமென்ன வேற இடத்துல போய் கோயில கட்டிக்கிற வேண்டியதுதானே... //
அந்த வேறு இடங்களை அரசு தந்தால் தானே? வீடியோவைப் பார்த்தீர்களா கேள்வி கேட்கும் அனானி அவர்களே?
இது தத்துவக் கேள்வி அல்ல. சமயம் மற்றும் வாழ்வு உரிமை பற்றியது.
// இந்து முஸ்லிம் சண்டைய ஏற்றுமதி செய்யுறதுக்கு முயற்சி பண்றியபோல... //
என்ன கொடுமை சாமி இது! மலேசிய அரசாங்கம் தானாகப் போய்க் கோவிலை இடிக்க அங்குள்ள மக்கள் பொங்கி எழுகிறார்கள்.. இதில் ஏற்றுமதி எங்கே வந்தது..
// Horrible! The tamils there should retaliate immediately. //
They are already retaliating. The news about their struggle is not covered by TN and Indian media, unfortunately. All Hindus of Malaysia have already said this is a (life and death) election issue for them.
// 9/11 அப்புறம் மத்திய கிழக்கு நாட்டவர்கள் மேற்குப்பக்கம் போக பெரும் கெடுபிடி பாதுகாப்பு காரணமாக இருப்பதால் மலேஷியா, தாய்லாந்து என்று படையெடுத்ததில் ஐந்தே ஆண்டுகளில் மலேஷியா பன்முகத்தன்மையை இழந்துவிட்டது வெட்ட வெளிச்சம்! //
மத்தியக் கிழக்கு ஆட்கள் போய்த் தான் மலேசியாவை வன் -இஸ்லாம் நோக்கித் திருப்புகிறார்கள் என்று சொல்ல வருகிறீர்களா? அங்குள்ள லோக்கல் முஸ்லீம்கள் இப்படித் தான் நினைக்கிறார்களா?
//நீங்கள் குறிப்பிடும் ஆட்கள் போன்று நான் பெரிய தாதா எல்லாம் அல்ல :))//
//தமிழ்மணத்தில் காண்ட்ராவர்ஸியான / புகழ் பெற்றவர்களது தைரியமான நபர்களது டெம்ப்ளேட்டும் கூட (டோண்டுசார், கால்கரி சிவா)
அட என்னோட டெம்ப்ளேட் கூட இதுதான்! :-)) //
ஒரு முடிவோடதான் இருக்கீங்க :))))
சார், இந்த ஜிஹாதி என்பது ஒரு பரிணாம வளர்ச்சி. மெதுவாக வளரும். அப்புறம் கொலை வெறி கொள்ளும்.
ஹரிஹரன் சொல்வதில் உண்மை இருக்கிறது. இந்த மத்திய கிழக்கு ஆட்கள் போக ஆரம்பித்த பிறகுதான் அங்கே மக்களின் மனநிலை மாறி வருகிறது. மேலும் மஹாதீர் என்ற முன்னாள் பிரதமரின் அயோக்கியதனங்களும் ஒரு காரணம்.
ஆனால் இதைப்பற்றி நம்தமிழ் ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் விட்டது மஹா திம்மிதனம்
// அதர்மம் ஒங்கும் போது வருவேன் என்று
சொன்ன கண்ணனை எல்லொரும் சேர்ந்து
ஒருமித்த குரலில் ஒன்றாக அழைப்போம்.
நிச்சயம் வருவான்.//
அனானி அவர்களே, கண்டிப்பாக வருவான். வானத்திலிருந்தோ வேறெங்கிருந்தோ அல்ல. நம் மக்கள் திரளிலிருந்தே தான் அவன் ஒவ்வொரு முறையும் வருகிறான் தர்மம் காக்க.
"கண்ணன் வந்தான் இங்கே கண்ணன் வந்தான்" என்ற பழைய திரைப்படப் பாடல் தான் நினைவு வருகிறது.
// சார், இந்த ஜிஹாதி என்பது ஒரு பரிணாம வளர்ச்சி. மெதுவாக வளரும். அப்புறம் கொலை வெறி கொள்ளும். //
சிவா, இதே அச்சம் தான் எனக்கும் இருக்கிறது. இந்த கோவில் இடிப்பு என்பது ஒரு ஜிகாதிகளுக்கே உரித்தான வெறுப்பு விஷத்தின் அடையாளம். இது கண்டிப்பாக அடுத்த கட்டத்தில் இந்து மக்களைத் தான் தாக்கப் போகிறது. அதற்குள் மலேசியத் தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். தங்களுக்கான அரசியல் வலிமையையும் எதிர்ப்பு சக்தியையும் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
அண்ணாச்சி,
வழிபாட்டுத் தலத்த இன்னொருத்தர் எப்படி இடிக்கலாம் நாம மட்டும் தானெ இடிக்கணும்கற உங்க நல்ல எண்ணம் தெரியுது. உங்க ஜால்ராக்களும் அதியே தான் சொல்றாங்க.
தகவலுக்கு நன்றி. மலேஷியாவின் சகிப்புத்தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருவது யாவரும் அறிந்ததே. மலேசியாவில் மூர்த்தி என்ற மலை ஏறும் வீரரின் பிணத்தைக் கூட அவரது இந்து மனைவியிடம் ஒப்படைக்காமல் அவர் சாவதற்கு முன் மதம் மாறிவிட்டார் என்று கப்சா விட்டு பிணத்தைக் குடும்பத்திடம் இருந்து பிரித்த கொடுமையும் மலேசியாவில் நடந்தது. மலேசியாவின் தமிழர்கள் இந்த இந்துக் கோவில் இடிப்புக்காக ஒன்று படுவார்களா என்பது சந்தேகமே, அவர்களையும் நம் தீரா விடம் இது வரை பீடிக்காமலா இருந்திருக்கும். ஒற்றுமை இல்லையெனில் அனைவரும் மதம் மாற வேண்டும் இல்லையென்றால் சாக வேண்டும் என்ற நிலமைதான் கூடிய விரைவில் மலேசியத் தமிழர்களுக்கு ஏற்படும்.
அன்புடன்
ச.திருமலை
//
வழிபாட்டுத் தலத்த இன்னொருத்தர் எப்படி இடிக்கலாம் நாம மட்டும் தானெ இடிக்கணும்கற உங்க நல்ல எண்ணம் தெரியுது. உங்க ஜால்ராக்களும் அதியே தான் சொல்றாங்க.
//
புலம்பல்கள்!
தொன்றுதொட்டு செய்யும் தொழிலை பதிலுக்கு ஒரு முறை செய்தது தவறு என்று சொல்லும் இந்த இஸ்லாமியர். இன்னும் செய்கிறார்களே இந்த அனியாதத்தை என்று சுட்டிக்காட்டியதற்கு செய்யும் புலம்பலைப் பார்த்தீர்களா ?
தமிழ்மணத்தில் இருக்கும் ஒரு இஸ்லாமியருக்கும் இதனைக் கண்டிக்க மனம் வரவில்லை.
பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து எத்தனை இந்துக்கள் பத்திரிக்கையில் எழுதினார்கள் என்றால், ஏராளம்.
ஆனால், ஒரு இந்து கோவில் உடைப்பதை அதுவும் அரசே செய்வதை கண்டிக்க எந்த அறிவாளியும் முன் வராதது காலக் கொடுமை.
I am sick and tired of this politically correct empty heads.
போலி எழுதுவது போல், ஒரு கெட்ட வார்த்தைப் பதிவு போடலாம் என்று கூட தோன்றுகிறது இந்த புத்தி சாலிகளைப் பற்றி.
இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. இவர்கள் power எங்கே இருக்கிறதோ அங்கே ஒண்டும் பிறவிகள்.
This should teach moronic hindus a lesson.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு.
In Malaysia the Muslims are destroying the temples. In Sri Lanka Buddhist Singhalese are destroying temples. Hinduism is under attack by those who can not stand to see it's success.
See pictures of destroyed temple:
http://www.sibernews.com/news/sri-lanka/-200609275805/
Vanakkam,
Naresh
// மலேசியாவின் தமிழர்கள் இந்த இந்துக் கோவில் இடிப்புக்காக ஒன்று படுவார்களா என்பது சந்தேகமே, அவர்களையும் நம் தீரா விடம் இது வரை பீடிக்காமலா இருந்திருக்கும். //
திருமலை, ரொம்ப சினிக்கலாக பேசுகிறீர்கள். அந்த வீடியோவைப் பார்த்தால் கனன்று கொண்டிருக்கும் இந்து உணர்வு தெளிவாகத் தெரிகிறது.
எந்த வித provocation-ம் இல்லாமல் வேண்டுமென்றே இப்படி அரசு ஆதரவுடன் கோயில்கள் இடிக்கப் படும் கொடுமையைக் கண்டும் குமுறாமல் இருக்கும் அளவுக்கு மலேசியத் தமிழர்கள் சொரணை கெட்டவர்கள் என்று தோன்றவில்லை.
இது ஏற்கனவே பெரிய அரசியல் பிரசினையாக ஆகி விட்டது. பிரதமர் தலையிட்டு இடிப்புகளை நிறுத்தாவிட்டால், மக்கள் கண்டிப்பாகப் பொங்கி எழுவார்கள்.
// தொன்றுதொட்டு செய்யும் தொழிலை பதிலுக்கு ஒரு முறை செய்தது தவறு என்று சொல்லும் இந்த இஸ்லாமியர். இன்னும் செய்கிறார்களே இந்த அனியாதத்தை என்று சுட்டிக்காட்டியதற்கு செய்யும் புலம்பலைப் பார்த்தீர்களா ? //
ஆம் வஜ்ரா.
வன்முறை, பிற மதங்களை, அந்த மதத்து மக்களை ஒழித்துக்கட்டுவது இதெல்லாம் இஸ்லாமின் பிறவிக் குணம், அதனால் அதைச் செய்வதற்கு அவர்களுக்கு தார்மீக உரிமை உண்டு என்றே இந்த "நடு நிலையாளர்கள்" நினைக்கிறார்கள்.
ஆனால், இந்துக்கள் தாங்கள் இழந்த சொத்தை மீட்பதற்காக மாபெரும் மக்கள் இயக்கத்தைச் சேர்த்து, பேச்சுவார்த்தைகள் பலவும் நடத்தி, ஜன நாயக முறையில் கருத்தைத் திரட்டி, ஒரு கட்டத்தில் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மக்கள் கூட்டம் தொழுகை நின்று போன அந்தப் பழைய கட்டிடத்தை இடித்துத் தள்ளியது. இந்தச் சம்பவத்தின் போது, அயோத்தில் பக்கத்தில் இருந்த வேறெந்த working மசூதிக்கும் கூட எதுவும் ஆகவில்லை - இதிலிருந்தே அயோத்திப் போராட்டம் மதத்தின் மீதான தாக்குதல் அல்ல என்பது விளங்குகிறது.
இரண்டையும் ஒரு தட்டில் வைத்துப் பேசும் மரமண்டைகளை என்ன செய்வது?
// This should teach moronic hindus a lesson.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு. //
ஆம். இப்போதாவது உறைக்கிறதா என்று பார்ப்போம்.
ethavathu vagayil nam kandanaththai malasia arasukku serivikka valli uallatha?
// ethavathu vagayil nam kandanaththai malasia arasukku
serivikka valli uallatha? //
மயூரேசன், மலேசிய இந்து சங்கத்தின் தளத்திலிருந்து ஒரு மின் அஞ்சல் அனுப்பி அவர்களிடம் கேட்டிருக்கிறேன் - ஏதாவது online campaign இருக்கிறதா என்று? பதில் இன்னும் வரவில்லை.
சங்கத்தின் இணைய தளம்: http://www.hindusangam.org.my/
minorities க்கு எல்லா இடத்திலும் பிரச்சனைதான்.
சொர்கமே ஆனாலும், சொந்த ஊரை போலாகுமா என்று எண்ண வைக்கும் பதிவு.
நகர மேம்பாட்டுக்காக இடித்தால் பெரிய தவறில்லை. ஆனால், செய்தியை பார்க்கும்போது மேம்பாடு மற்றுமே காரணம் என்பது போல் தெரியவில்ல.
நாம் கூட்டாக எதிர்ப்பை காட்ட வழி தெரிந்தவுடன், அதன் மூலம் அனைவரும் எதிர்ப்பை தெரிவிப்போம்.
(ஒரு அழகான முருகன் கோயில் ஒன்று K.L அருகில் ஒரு மலையில் இருக்கிறது. அத ஒண்ணும் பண்னலயே? அத இடிச்சா மலேஷிய பிரதமர் கொமட்ல தான் குத்தணும்).
// ஒரு அழகான முருகன் கோயில் ஒன்று K.L அருகில் ஒரு மலையில் இருக்கிறது. அத ஒண்ணும் பண்னலயே? //
Batu caves சுப்பிரமணியர் கோவில் பற்றிச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அந்தக் கோவிலுக்கு இதுவரை ஒன்றும் ஆகவில்லை, இந்த வீடியோவில் அந்தக் கோவிலும் வருகிறது.
இதுவரை இந்து சங்கத்திடமிருந்து பதில் எதுவும் இல்லை.
முஸ்லிம் மதத்தில் தான் மதவெறி இருக்கிறதென்று நினைக்கிறேன்.
________
CAPitalZ
வணக்கம்........
நீங்கள் குறிப்பிட்ட இந்த கோயில் இடிப்புகள் பல ஆண்டுகளாக இங்கு நடத்தப்படும் ஒரு தொடர்கதை........
//
மயூரேசன், மலேசிய இந்து சங்கத்தின் தளத்திலிருந்து ஒரு மின் அஞ்சல் அனுப்பி அவர்களிடம் கேட்டிருக்கிறேன் - ஏதாவது online campaign இருக்கிறதா என்று? பதில் இன்னும் வரவில்லை.
சங்கத்தின் இணைய தளம்: http://www.hindusangam.org.my/
//
இந்த சங்கம் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல். சங்கத்தில் ஆக்கமூற்வமான செயல்கள் குறைவு.
//
(ஒரு அழகான முருகன் கோயில் ஒன்று K.L அருகில் ஒரு மலையில் இருக்கிறது. அத ஒண்ணும் பண்னலயே? அத இடிச்சா மலேஷிய பிரதமர் கொமட்ல தான் குத்தணும்).
//
இந்த சமயா இடத்தை சுற்றுலாதளமாக மாற்ற முயற்ச்சி நடந்து வருகிறது.(கோவில் நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன்.)
//
இப்படி அரசு ஆதரவுடன் கோயில்கள் இடிக்கப் படும் கொடுமையைக் கண்டும் குமுறாமல் இருக்கும் அளவுக்கு மலேசியத் தமிழர்கள் சொரணை கெட்டவர்கள் என்று தோன்றவில்லை.
//
இது என்ன இந்தியா என்று நினைத்திங்களா? அரசை எதிர்த்தா ISA சட்டம் பாயும். இந்த சட்டத்தின் மூலம் 2 ஆண்டுகள் சிறை தண்டணை கிடைக்க வாய்ப்பு உண்டு.(நீதிமன்ற ஆனை இல்லாமல்.)
DR.sintok,
மலேசியா
Dr. Sintok,
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நிலைமை நினைத்ததை விட மோசமாக இருக்கும் போல தெரிகிறதே? அந்த வீடியோ க்ளிப் கூட எந்த அமைப்பின் பெயரும் இல்லாமல் ஒரு தனிமனிதர் செய்தது போல இருந்தது.
மலேசிய இந்து சங்கம் தூங்குகிறது என்றூ சொல்கிகிறீர்கள். பின்னர் இதை எதிர்த்து யார் தான் கேள்வி கேட்பார்கள்?
// இது என்ன இந்தியா என்று நினைத்திங்களா? அரசை எதிர்த்தா ISA சட்டம் பாயும். இந்த சட்டத்தின் மூலம் 2 ஆண்டுகள் சிறை தண்டணை கிடைக்க வாய்ப்பு உண்டு.(நீதிமன்ற ஆனை இல்லாமல்.) //
புரிகிறது. இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்க அங்குள்ள தமிழர்களில் எத்தனை பேர் முன் வருவார்கள்? அதனால் ஒன்றூபட்ட போராட்டம் தான் சரிப்படும்.
இது பற்றி மேலதிக தகவல் இருந்தால் இந்தப் பதிவில் தெரிவிக்கவும்.
Post a Comment