Wednesday, December 20, 2006

ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் ஆன்மிகம் சார்ந்த இந்து உணர்வு

ஸ்ரீஸ்ரீயின் அரசியல் என்ற தலைப்பில் கூத்துப்பட்டறை பதிவில், அதன் ஆசிரியர் ஸ்ரீஸ்ரீயின் சில கருத்துக்களைக் குறிப்பிட்டு அவரது இந்து உணர்வு அவரது ஆன்மிக உணர்வோடு இயைந்ததல்ல என்ற தொனியில் எழுதியிருந்தார்.

இதற்கான சில விளக்கங்கள் இந்தப் பதிவில்:

// .அது தான் எனக்கு ஆச்சிரியமாக இருக்கிறது மேற்கில் ஒரு முகமும் இந்தியாவில் இந்து முகமுகவா இருக்கிறார் ? //

ஸ்ரீஸ்ரீயிலிருந்து ஒரு 100 வருடம் முன்னே சுவாமி விவேகானந்தருக்குப் போவோம். உலகளாவிய ஆன்ம நேய ஒற்றுமை அவரது செய்தியாக இருந்தது. ஆயினும் தான் இந்து என்பதை அவர் மிக்க பெருமையோடு சொல்லிக் கொண்டார், இந்தியாவிலும் சரி, மேற்கிலும் சரி. மத மாற்றத்தையும் கிறிஸ்தவ மிஷநரிகளையும் மிகவும் காட்டமாக எதிர்த்திருக்கிறார் என்பது அவரை ஓரளவு படித்தவர்கள் எல்லாருக்கும் தெரியும்.

ஸ்ரீஸ்ரீயின் "ஆர்ட் ஆஃப் லிவிங்" இயக்கத்தின் சமய, தத்துவ, ஆன்மீக அடித்தளம் சுவாமி விவேகானந்தர் பின்பற்றிய அதே இந்து வேதாந்தம், பதஞ்சலி யோகம் தான். ஆனால், இன்றைக்கு உலக அரங்கில் இந்திய அரசியல்வாதிகள் பலர் கடைப்பிடிக்கும் போலி மதச்சார்பினமை வாதமும், இந்து விரோத சக்திகளும் "இந்து" என்ற சொல்லுக்குக் கட்டமைத்திருக்கும் பிம்பம் கொஞ்சம் எதிர்மறையான பொருளையே அளிப்பதாக உள்ளது. இந்த துரதிர்ஷ்டமே "இந்து துறவி" என்ற சொல்லை அவரது இயக்கத்தினர் அடிக்கடி உலக அளவில் பயன்படுத்தாததற்குக் காரணம். அவரைப் பொறுத்த வரையில் தனது இந்து அடையாளத்தை சந்தேகமின்றி முன் நிறுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

// யோகா இன்று உலகம் முழுவதும் இந்து மதச் சாயலின்றி எல்லா மக்களாலும் பயிலப்படுகிறது .ஓரு நல்ல விசயம் எப்படியாவது பலர் பின்பற்றினால் நல்லது தானே //

அது என்ன "இந்து மதச்சாயல் இன்றி"? ஆசனங்களில் ஓரளவு தேர்ந்து யோகத்தின் மற்ற அங்கங்களான தியானம், தத்துவம் போன்றவற்றை அமெரிக்காவிலும், மற்றும் மேற்கத்திய எல்லா நாடுகளிலும் கற்றுக் கொடுப்பவர்கள் இந்து மதத்தின் அடிப்படை வாழ்வியலை அப்படியே பின்பற்றுபவர்கள் தாம். ஓம் மந்திரம், கீதை, ஆத்மா-ஜீவன்-பிரபஞ்சம் இவற்றுக்கிடையேயான உறவு பற்றிய கோட்பாடு இவை எல்லாம் இந்துமதச் சாயல் கூட அல்ல, இந்து மதமே தான்! அமெரிக்காவில் ஓரளவு பெயர் பெற்ற எந்த யோக ஆசிரியரையும், பள்ளியையும் எடுத்துப் பாருங்கள் - எல்லாரும் இந்து குருக்களிடமே, குரு சிஷ்ய முறையில் யோகம் கற்றுக் கொண்டுள்ளனர். அந்த ஆசிரியர்களிடம் கேட்டுப் பாருங்கள் - 200% இந்து வாழ்வியல் தான் யோகம் என்று தெளிவாகச் சொல்லுவார்கள்!

மேலே சொன்ன "இந்து" என்ற சொல்லுக்கு ஏற்பட்ட எதிர்மறை விளம்பரம் தான் நேரடியாக இதைச் சொல்வதைத் தடுத்துள்ளது. அதனால் ஒரு சின்ன “disclaimer” போன்று அது இந்து மதம் அல்ல என்று சொல்லுகிறார்கள். அவ்வளவு தான். இது மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஸ்ரீஸ்ரீ எந்தப் போலித் தனமும், பாசாங்கும் இல்லாத ஆன்மிக, ஞான குரு. சிவபிரானின் யோக ஒளியும், கண்ணனின் குறும்புத் தனமும் கலந்த தெய்வீகத் திருவுருவம் அவர். எத்தனையோ இடங்களில் தன் "இந்து" அடையளாத்தை மிகவும் உறுதியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது சமீபத்திய ஆனந்த விகடன் பேட்டியைப் படிக்கும் சிலருக்கு இது ஏதோ புதிதாகத் தோன்றலாம். பெங்களூரில் பல முறை இந்து இயக்கங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டுள்ளார். இந்து இயக்கங்களை மதவாத சக்திகள் என்று அழைப்பதையும் கண்டித்துள்ளார்.





ஆன்மீகமும், இந்து உணர்வும் முரண்பட்டவை அல்ல என்று அவரே விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்து அடையாளம் என்பது நமது சமுதாயத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதையும் கூறியுள்ளார். "இந்தியன் எக்ஸ்பிரஸ்" இதழில் வந்த அவரது ஒரு அருமையான கட்டுரையை அப்படியே கீழே தருகிறேன். (நேரமின்மையால் மொழிபெயர்க்க இயலவில்லை).

We are in denial

Negating identity causes inaction, sloth and lethargy


If you come across a Communist, with a Hindu name, and ask him about his identity, he will deny being a Hindu. Yet, a Muslim Communist often claims his identity without hesitation. One wonders what causes this difference in attitude.

It is interesting to probe into the psyche of identity, which often is a source of security, insecurity, conflict and comfort. Perhaps the following reasons would answer the identity crises of the Hindus. The broadmindedness of Hinduism, its inherent inclusiveness and secularism, makes Hindus feel guilty about claiming their identity, as it is embedded in their philosophy that it is wrong to exclude others. Claiming a religious identity makes them feel they are excluding others and so they shy away from doing so.

Hindus have been traditionally groomed by the Vedanta to drop all identities. This has deeply influenced the Hindu psyche. Hindu philosophy is woven around egolessness. Let alone their religion, some sadhus don’t even say their name; they would say, “What’s in a name?” Sanyasis are even shy to talk about their parentage. A renowned ascetic in Rishikesh would meet with everybody, but not his own mother and family. When asked, he would say, “I am Vedanti; once I have taken sanyasa, I have dropped all my identities.”

This is an erroneous understanding of Vedanta. Why do we fear the identity so much? Seeing identity as stumbling blocks for one’s growth is ignorance. Sanyasa is transcending identity; it is being in that centredness from where you have equal love and compassion for all. It is the unshakable light and richness that one has found in one’s Being which is universal. Transcending identity is different from denying identity. When religious leaders themselves denounce their identity, the community follows suit. This is akin to the thought that secularism is anti-religion.

Caste identity is in some places much stronger than religious identity. The normal tendency is to go for one single identity than for a dual one. So, between caste and religion, many Hindus seem to go for caste. Hindus feel ashamed of the ills of Hinduism — its superstition, untouchability, and practices like sati are usually highlighted in the media, rather than its unparalleled philosophy and scientific temperament. Thus, for several centuries Hindu bashing has been a fashion.

The media seems to have given the prerogative of Hindu identity to the RSS and VHP and secular-minded Hindus would not like to associate with these two organisations. As a result they shy away from their own identity.

Within India itself, we witness a great deal of ignorance about the Hindu religion and its scriptures. Although Hindus form 80 per cent population of India, there is still only one university which teaches Hinduism — whereas there are five which teach Islam, five which teach Christianity, two which teach Sikhism and one that teaches Jainism. You would find every Muslim would know a couple of verses from the Quran; you can hardly find a Christian who has not read the Bible.

But Hindus who know Sanskrit or a few shlokas are rare. Most educated Hindus know the Bible; they know Christmas carols. When they know nothing about their religion, how can they take pride in it? There are 1.25 billion Hindus in the world, a little over one-sixth of the world’s population, but you hardly find a single Hindu lobby at international forums. You will find a Christian lobby, a Muslim lobby or a Jewish lobby, but you can’t find a Hindu lobby. Just 12 million Jews in the world are such a powerful voice. Buddhists also have a voice and make their presence felt at world forums.

In countries of south and central America and in Europe, although they are secular democracies, they are not shy to proclaim their allegiance to Christianity. You will find the religious symbol of the Cross placed in their parliaments; chaplains offer prayer before every official dinner. While associations like YMCA (Young Men’s Christian Association) have gained wide acceptance. Why then is it that Hindu associations are viewed with scepticism?

A strong community is an asset to any nation. A weak community will always be in fear and because of insecurity will become aggressive. It is the pride in one’s identity which strengthens the community. Identity is in no way contradictory to universality.

People often ask, “Will not the concept of global family, Vasudhaiva Kutambakam, contradict patriotism? Similarly, will your religious identity not conflict with your universality?’’ The answer is “No”. Your duty as a family man is not a hindrance for your realisation that you are Brahman. You don’t need to run away to the forest to realise “All this is Brahman”. Your being spiritual in no way contradicts your being a socially responsible citizen. In fact, it enhances your ability to care and share.

The conflict in the world is because people are either stuck in their identity, and die for it, or shy away from their identity and lose their roots. One has to opt for a middle path. The ideal situation will be when every religion transcends its identity. Until that time, it is unwise for the Hindus to let go of their identity. We cannot, and should not, eliminate differences on this planet. We need to celebrate the differences. And this is the uniqueness of Bharat — from the atheism of Charvaka to Bhakthi Panth and Sufism, it’s one beautiful bouquet.

An identity is related to an action. Denial of identity will dump you in inaction, sloth and lethargy and hence Krishna reminds Arjuna of his Kshatriya identity even while giving “Brahma gyan” to remind him of his duties and responsibilities. Otherwise while giving this High knowledge of the Self, why would Krishna remind him again and again of his limited identity. The limited identity in no way contradicts the universal one. A policeman cannot perform his duties — steer the traffic — if he fails to acknowledge his identity. Similarly, if a businessman shies away from his identity, he cannot function. The same is the story of Hindu identity. India cannot make a distinct mark on the world if it ignores its religious and spiritual heritage.

12 comments:

Anonymous said...

// The ideal situation will be when every religion transcends its identity. Until that time, it is unwise for the Hindus to let go of their identity. //

மிகவும் தெளிவான கருத்து. இந்துமதத்தின் பரந்த மனப்பான்மையை அதன் இளிச்ச்வாய்த்தனம் என்று மற்ற மதங்கள் நினைக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும். ரவிசங்கர் போன்ற ஆன்மீக குரு ஒருவர் இதைப் பற்றி இவ்வளவு உறுதியுடன் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

Anonymous said...

Jadayu,

That was a wonderful article by Sri Sri.

// Thus, for several centuries Hindu bashing has been a fashion //

I think he wanted to say "several decades" here.

Anonymous said...

// இந்த துரதிர்ஷ்டமே "இந்து துறவி" என்ற சொல்லை அவரது இயக்கத்தினர் அடிக்கடி உலக அளவில் பயன்படுத்தாததற்குக் காரணம். அவரைப் பொறுத்த வரையில் தனது இந்து அடையாளத்தை சந்தேகமின்றி முன் நிறுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். //

ஆம். இது போன்றே, மாதா அம்ருதானந்தமயி உலகம் முழுவதும் இந்து மதத்தின் தெய்வீக அன்பையும் ஞானத்தையும் போதித்து வருகிறார். அம்மா "இந்து இந்து" என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளாவிட்டாலும் அந்த அடையாளம் எப்படி இல்லாமல் போகும்? சூரியனிலிருந்து ஒளியை எப்படிப் பிரிக்க முடியும்?

அரவிந்தன் நீலகண்டன் said...

சமுதாயம் எக்கேடோ கெட்டு போகட்டும். தலித் மதமாற்றப்பட்டால் எனக்கென்ன வனவாசி துப்பாக்கி முனையில் மதம் மாறினால் எனக்கென்ன. என் வீடு என் குடும்பம் என் பூசையறை என் தியானம் என்று இருக்கும் போலி ஆன்மிக-செக்யூலர் வாதிகளுக்கு சரியான சூடு. விழித்துக்கொண்டால் சரி.

கால்கரி சிவா said...

ஜடாயு,

இங்கே (கனடாவில்) இந்து என்பது ஒரு பெருமைக்குறிய விஷயம் தான். மக்கள் மனம் மாறி வருகிறார்கள். கடந்த வருடம் நடந்த அலுவலக கிறிஸ்துமஸ் டின்னரில் கடவுள் வாழ்த்து பாட நம் இந்தியருக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டது. என் நண்பர் அருமையாக "ப்ரம்மார்ப்பணம்,ப்ரம்மஹவிர்.." என கணீறென்று பாடி அதன் அர்த்ததையும் ஆங்கிலத்தில் கூறினார். கூடியிருந்த அனைவரும் ஆச்சரியமாய் அருமையான இறைவணக்கம் என்றனர். பின்னர் அருகில் அமர்ந்திருந்த வெள்ளையர் ஒருவர் என்னிடம் இவ்வளவு அருமையான பாடலை நான் கேட்டதில்லை. இந்து மதம் தான் உண்மையான செக்யூலர் மதம் என்று சொன்னார். இதைப் பற்றி மேலும் அறிய என்ன செய்யவேண்டும் என்றார். அவருக்கு வாழும் கலையை அறிமுகபடுத்தினேன். மனிதர் அதற்காக தினமும் காலையிலும் மாலையிலும் எனக்கு நன்றி செலுத்துகிறார்.

நாம் இந்து என்று சொல்வதில் பெருமை கொள்வோம்

கூத்தாடி said...

ஜடாயு
//ஆனால், இன்றைக்கு உலக அரங்கில் இந்திய அரசியல்வாதிகள் பலர் கடைப்பிடிக்கும் போலி மதச்சார்பினமை வாதமும், இந்து விரோத சக்திகளும் "இந்து" என்ற சொல்லுக்குக் கட்டமைத்திருக்கும் பிம்பம் கொஞ்சம் எதிர்மறையான பொருளையே அளிப்பதாக உள்ளது. இந்த துரதிர்ஷ்டமே "இந்து துறவி" என்ற சொல்லை அவரது இயக்கத்தினர் அடிக்கடி உலக அளவில் பயன்படுத்தாததற்குக் காரணம்.//

அதனால் தான் எனக்குத் தெரியல்லை போலும் .அது என் பிழையே ..அவரை இந்து சமயத் துறவியாக பார்க்க முடியாதற்கு அவரைப் பற்றிய என் புரிதலின் குறைபாடுதான் .

உங்கள் பதிவுக்கு நன்றி .

அது எனக்கு அவரைப் பற்றிய சந்தேகங்களை சரி செய்ய உதவியது ..
எனினும் என் கருத்தில் மாற்றம் ஒன்றுமில்லை .

இந்து மத உணர்வு ஆன்மீகமா என்பது விவாததுக்கு உரியது ..அவர் சொன்ன identity பற்றி எனக்குள் பலக் கேள்விகள் உண்டு .அது பற்றிய கேள்விகளை ஒரு தனி விவாதமாக வைக்க முயற்சிக்கிறேன்

கூத்தாடி said...

//சமுதாயம் எக்கேடோ கெட்டு போகட்டும். தலித் மதமாற்றப்பட்டால் எனக்கென்ன வனவாசி துப்பாக்கி முனையில் மதம் மாறினால் எனக்கென்ன. என் வீடு என் குடும்பம் என் பூசையறை என் தியானம் என்று இருக்கும் போலி ஆன்மிக-செக்யூலர் வாதிகளுக்கு சரியான சூடு. விழித்துக்கொண்டால் சரி//

தலித் மத மாற்றம் என்பதை வெறும் மாற்று மதக் காரர்களின் பிரச்சினையாக மட்டுமே பார்க்கும் பார்வை இது ..நம்மில் உள்ளப் பிரச்சினைக்கு என்ன செய்திருக்கிறிர்கள் ?

தலித்துக்கள் இன்று யார் ப்க்கம் நீங்கள் சொல்லும் போலிகள் ப்க்கமல்லவா இருக்கிறார்கள் ?

போலி ஆன்மீக செக்யூலரிஸ்டுகள் ..ம்ம் பெயர் நல்லாத் தான் இருக்கிறது ..இது மாதிரி திம்மிகள் ,அடிவருடிகள் என்று பெயர் வைப்பது மட்டும் தான் எழுதிக் கொண்டு இருக்கிறோம் ..

விவாதம் நான் சொன்னக் கருத்தை விட்டு எங்கோ போய் கொண்டு இருக்கிறது ?

இன்னொருப் பதிவில் சந்திப்போம்..

ஜடாயு said...

மோகன், கங்காதரன், அனானி, கருத்துக்களுக்கு நன்றி.


// அம்மா "இந்து இந்து" என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளாவிட்டாலும் அந்த அடையாளம் எப்படி இல்லாமல் போகும்? சூரியனிலிருந்து ஒளியை எப்படிப் பிரிக்க முடியும்? //

மோகன், நன்றாகச் சொன்னீர்கள். மாதா அம்ருதானந்தமயி மடம் கட்டியிருக்கும் நான்கு வாசல்கள் கொண்ட அற்புதான கோயில் ஒன்றை ஹைதராபாத்தில் பார்த்தேன். ஒரே சிவலிங்கத்தில் நான்கு புறமும் நான்கு தெய்வ வடிவங்கள்- சிவன், சக்தி, விநாயகர், ராகு (நாக ரூபமான முருகர்). இது இந்து ஆன்மீகம் இல்லாமல் வேறு என்ன?

ஜடாயு said...

// என் வீடு என் குடும்பம் என் பூசையறை என் தியானம் என்று இருக்கும் போலி ஆன்மிக-செக்யூலர் வாதிகளுக்கு சரியான சூடு. விழித்துக்கொண்டால் சரி. //

விவேகானந்தர் "kitchen relgion" என்று இதைத் தான் தன் உரைகளில் குறிப்பிடுவார்.

ஜடாயு said...

// அது எனக்கு அவரைப் பற்றிய சந்தேகங்களை சரி செய்ய உதவியது ..
எனினும் என் கருத்தில் மாற்றம் ஒன்றுமில்லை . //

கூத்தாடி, "சந்தேகம்" என்ற வார்த்தை தவறு என்று நினைக்கிறேன். இந்து ஆன்மீக குரு என்றால் அவர் இப்படியெல்லாம் பேசக் கூடாது என்று வரையறையை வைத்துக் கொண்டு stereotype செய்வது போல் தெரிகிறது. திறந்த மனத்துடன் குருஜியின் கருத்துக்களையும், அவரது இயக்கத்தின் செயல்பாடுகளையும் அணுகுங்கள்.

// இந்து மத உணர்வு ஆன்மீகமா என்பது விவாததுக்கு உரியது ..அவர் சொன்ன identity பற்றி எனக்குள் பலக் கேள்விகள் உண்டு .அது பற்றிய கேள்விகளை ஒரு தனி விவாதமாக வைக்க முயற்சிக்கிறேன் //

கண்டிப்பாக வையுங்கள். நன்றி.

ஜடாயு said...

// தலித் மத மாற்றம் என்பதை வெறும் மாற்று மதக் காரர்களின் பிரச்சினையாக மட்டுமே பார்க்கும் பார்வை இது ..நம்மில் உள்ளப் பிரச்சினைக்கு என்ன செய்திருக்கிறிர்கள் ? //

இந்து இயக்கங்களும் சரி, ஸ்ரீஸ்ரீயின் இயக்கமும் சரி, இதை மாற்று மத எதிர்ப்பாக மட்டுமே பார்க்கவில்லை. அதனால் தான் பல சமூக சேவைப் பணிகள், சமூக ஒருங்கிணைப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளையும் செய்து வருகின்றன.

ஆர்ட் ஆஃப் லிவிங் பதிப்பகத்தில் "Heritage of the Dalits" என்று ஒரு நல்ல புத்தகம் போட்டிருக்கிறார்கள். தலித்களுக்கு இந்தியாவில் சரித்திரமே கிடையாது என்று ம.பி. முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் சொன்னதைக் கண்டு வருந்திய ஸ்ரீஸ்ரீ இந்த நூலைப் பதிப்பித்தார்.

// தலித்துக்கள் இன்று யார் ப்க்கம் நீங்கள் சொல்லும் போலிகள் ப்க்கமல்லவா இருக்கிறார்கள் ? //

தமிழ்நாட்டை மட்டும் வைத்து இதை எடை போடக் கூடாது. மகாராஷ்டிரத்தில் தலித் ஒருங்கிணைப்பு ஆன்மீகம் சார்ந்து உள்ளது. ம.பி., ஜார்கண்ட், குஜராத், சத்தீஸ்கட் இங்கெல்லாம் தலித்கள் இந்து உணர்வோடு தங்களை அடையாளப் படுத்திக் கொள்கின்றனர்.

ஜடாயு said...

// அவருக்கு வாழும் கலையை அறிமுகபடுத்தினேன். மனிதர் அதற்காக தினமும் காலையிலும் மாலையிலும் எனக்கு நன்றி செலுத்துகிறார்.

நாம் இந்து என்று சொல்வதில் பெருமை கொள்வோம் //

சிவா, உங்கள் "இந்து மதத்தின் இறைதூதர் யார்?" என்ற பழைய பதிவில் "நான்" என்று கடைசியில் சொல்லியிருந்தீர்கள். அது தத்துவ அலவில் மட்டும் அல்ல செயல்முறை அளவிலும் உண்மை என்றூ காட்டியிருக்கிறீர்கள். உங்கள் நற்பணி வாழ்க!